வெள்ளி, 7 ஜூன், 2019

வெள்ளி வீடியோ : கண்ணுக்குள் பாரம்மா... நீயின்றி யாரம்மா... கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா?

இந்தமுறை புதுசாக ஒரு படம்.  ஜஸ்ட் இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த  படம்!

இதோ......!


அவள் வருவாளா? அஜித்-சிம்ரன் ஜோடியாக நடித்த படம்.  படம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான குறிப்பு இந்தப்படம் 1997 இல் வெளியான தெலுங்குப்படமான பெல்லி படத்தின் தமிழ். பெல்லி படம் 1980 இல் வெளியான மலையாளப் படமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தின் தழுவல்.  மஞ்சில் விரிஞ்ச பூக்கள் ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த 'ஸ்லீப்பிங் வித் தி எனிமி' படத்தின் தழுவல்!!  முன்பெல்லாம் DD நேஷனல் அலைவரிசையில் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநில மொழித் திரைப்படம் போடும் சமயம் இந்த 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்!  மற்ற படங்கள் பார்த்ததில்லை - அவள் வருவாளா உட்பட!ராஜ்கபூர் (ஹிந்தி ராஜ்கபூர் அல்ல!) எழுதி இயக்கிய படத்திற்கு S A ராஜ்குமார் இசை.  எல்லாப்பாடல்களும் பழனிபாரதி எழுதி இருக்கிறார்.எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் இனிமையான ஒரு பாடல்.  அழகிய அஜித்,  அழகிய சிம்ரன்...  இதில் இன்னொரு பாடலும் நன்றாய் இருக்கும்.  "ஓ...   வந்தது பெண்ணா...  வானவில்தானா..." என்கிற ஹரிஹரன் பாடிய பாடல்.நாம் இன்று பார்க்கப்போவது SPB பாடிய "காதலென்ன கண்ணாமூச்சி ஆட்டமா?" பாடல்.  இது தெலுங்கிலும் இருக்கிறது என்று நினைவு.  (தெலுங்குப் பாடலை க்ளிக் செய்து கேட்கலாம்.  அங்கும் SPB குரலை ரசிக்கலாம்)

SPB யின் புகழ்பெற்ற பாட்டுக்கிடையேயான சிரிப்பு இரண்டாம் சரணத்தில் வருகிறது.   வழக்கம்போல ஆரம்ப இசை...  அழகு இல்லை?  ராகம் என்ன என்று கீதா சொல்வார்!  போன வார பாடல் ஹரிகாம்போஜி.  அவர் கணினி கோளாறால் அங்கே அப்போதே அவர் நினைத்த நேரத்தில் கமெண்ட் போடமுடியவில்லை.

பாடலின் வரிகள் ரசிக்க வைக்கின்றன.  இளையராஜா பழனி பாரதியிடம் சொன்னாராம்...இங்கு SA ராஜ்குமாருக்கு எழுதி இருக்கிறார்.  ரசிக்கக் கூடிய வரிகள்.


காதலென்ன கண்ணாமூச்சி ஆட்டமா?
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சிக் கூட்டமா?
கண்ணுக்குள் பாரம்மா... நீயின்றி யாரம்மா...
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா?

கூந்தல் வருடும் காற்று - அது 
நானாய் இருந்தேன் தெரியாதா?
கொலுசு கொஞ்சும் பாட்டு-அதன் 
பல்லவி ஆனேன் புரியாதா?
சின்னச்சின்ன மூக்குத்தியில் வைரமாய் 
மின்னுவதும் காதல் தரும் மொழிதான்
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய் - உன்னைச் 
சுற்றி மூடுவதும் அதுதான் 
பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா 

நிலவை உரசும் மேகம் - அந்த  
நினைவை நினைத்தே உருகாதா?
உயிரைப் பருகும் காதல் - அது 
ஒருநாள் உனையும் பருகாதா?
நீ முடிந்த பூவில் ஒரு இதழாய் 
வாழ்ந்துவிட்டு போவதற்கு நினைத்தேன் 
நீ நடந்த மண்ணெடுத்துச் சிலநாள் 
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன் 
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன் 

124 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை வணக்கம், துரை செல்வராஜு சார், கீதா சாம்பசிவம் மேடம், கீதா ரங்கன் உள்பட.

  பாடலுக்கு பிறகு வருகிறேன்

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் நெல்லை... மெதுவா வாங்க...

  பதிலளிநீக்கு
 3. பாடல் ஓகே ரகம்தான். அடுத்தவாரம் இன்னும் நல்லாருக்கும் என நினைக்கிறேன். நேரடி காணொளி வேலை செய்யலை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது மாற்றியிருக்கிறேன் பாருங்கள் நெல்லை...

   நீக்கு
 4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்....

  பதிலளிநீக்கு
 5. நல்ல இனிமையான பாடல்...
  இப்போதுதான் கேட்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு வீடியோ வேலை செய்ததா? இப்போது மாற்றி இருக்கிறேன். இது வேலை செய்கிறதா என்று சொல்லுங்கள்.

   நீக்கு
  2. இணைப்பு வேலை செய்கின்றதே...
   பாடலைக் கேட்டேன்...

   ஆனாலும், இந்த வாரம் நான் எதிர்பார்த்தது வேறொரு பாடல்!...

   நீக்கு
  3. //ஆனாலும், இந்த வாரம் நான் எதிர்பார்த்தது வேறொரு பாடல்!...//

   அது என்ன பாடல்?

   நீக்கு
 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  அவள் வருவாளா என்ற பாடல் தனியாக வந்ததோ.

  இந்தப் படப்பாடல்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.
  அஜீத் ஸ்மார்ட் ஹீரோ.சிம்ரன் மிக அழகு.
  இந்தப் பாடல் வரிகள் அருமையாக இருக்கின்றன.
  பழனி பாரதி பாடல்கள் ரசிக்கும் படியாக இருக்கும்.
  வந்திருப்பவர்களுக்கும் வரப்போகிறவர்களுக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம். அவள் வருவாளா என்கிற பாடல் இடம்பெற்ற படம் வேறு. பாடலும் வேறு.

   ஆம், வரிகள் நன்றாயிருக்கின்றன. அஜித், சிம்ரன் அழகு.. நீங்கள் செய்த பால் பாயசம் போல!!!

   நன்றி வல்லிம்மா.

   நீக்கு
  2. அன்பு ஸ்ரீராம்,
   அங்கு வந்து உங்களுக்கு எல்லாம் செய்து கொடுக்க
   ஆசைதான். மனமெல்லாம் அந்தக் கண்ணன்
   எண்ணம். நீங்கள் எல்லாம் தானே என்
   அன்பு உறவுகள்.

   நீக்கு
 7. பாடலையும் கேட்டேன் ஸ்ரீராம். மிக நன்றாக இருக்கிறது.
  மிக இனிமை. தாளமும் இசையும்.நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வல்லிம்மா... லிங்க் வேலை செய்கிறது என்று அறிவதில் மகிழ்ச்சி.

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 10. ஏஞ்சல் கருத்து, என் கருத்து எல்லாம் ஏற்றுக் கொள்ளபட்டது மகிழ்ச்சி.
  பாடல் இனிமை நன்றாக இருக்கிறது .
  பாலசுப்பிரமணியன் சிரிப்பு (மெல்லிய) ரசனைதான்.

  அஜித் நடித்த முதல் படத்தில் வரும் பாடல் நன்றாக இருக்கும். (சட் என்று நினைவுக்கு வரவில்லை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் வந்து விடை சொல்வதற்குள் வல்லிம்மா (அடடே....) உங்களுக்கு பதில் சொல்லி விட்டார்கள்.

   நீக்கு
 11. இந்தப்பாடல் ரசிக்கும்படி இருக்கும்.

  இன்று வரும் அஜித் நடித்த படங்களின் பாடல்கள் ஒன்றுகூட உருப்படி இல்லை ஆனால் பாடல்கள் பிரபலமாகின்றன

  காரணம் "அஜித்" என்ற நடிகன்.

  இன்றைய தலைமுறையினருக்கு ரசனை என்பது இருக்கிறதா ? என்று ஐயமாக இருக்கிறது.

  பொதுவாக இன்றைய பெரிய கூத்தாடிகளின் தொடக்ககால படங்களின் பாடல்கள் 90% ரசிக்கும்படியான பாடல்களே ஆனால் இன்றைய பாடல்கள் 5% கூட ரசிக்கும்படி இல்லை.  கீழே இந்தவார கேள்வி

  தமிழகத்தில் கவிஞர்களுக்கு பஞ்சமா ?
  அல்லது இன்றைய தலைமுறையினரின் ரசனையில் மாற்றமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்.. தமிழ்..ன்னு ஒரே கூச்சல்...

   கொளையாழியை போளீசார் வழை வீசி ... - ந்னு செய்தி வாசிக்கிறாங்க...

   இன்னும் சரியாக ஒருமை பன்மை உபயோகிக்கத் தெரியாத நாளிதழ்கள்....

   அந்த யூட்யூப் பக்கம் போனால் ஆயிரக்கணக்கான அறிவாளிகள்...

   எப்படி சமைக்கணும்.. எதைச் சமைக்கணும்.. எப்படிச் சாப்பிடணும்..
   எப்படி சாமி கும்பிடணும்.. எப்படி சந்தனம் பூசணும்.. ந்னு, கூறு கெட்ட குருசாமிகள்..

   யார் வாயிலாவது நல்ல தமிழ் வருகிறதா...

   சமையல் குறிப்பு..ங்கற பேர்ல

   செலக்ட் பண்ணி, கிளீன் பண்ணி, கட் பண்ணி, பாயில் பண்ணி,
   பிரை பண்ணி, டேஸ்ட் பண்ணி...

   தமிழுக்கு இந்த கதி நேர்ந்ததே!...

   இந்த லட்சணத்துல இப்போதெல்லாம் குப்பையைக் கிளறின மாதிரி சினிமா பாடல்கள்...

   நல்ல தமிழை ஒழித்துக் கட்டித்தான் நாளாயிற்றே..

   நீக்கு
  2. துரைசாரை துரிதமாக வழிமொழிகிறேன்.

   நீக்கு
  3. கில்லர்ஜி - இது ரசனைனாலதான். எங்க காலத்துல, என் அண்ணன், 'மூன்றாம் பிறை' படம் அட்டஹாசமா இருக்குன்னு எங்க அப்பா/அம்மாவைப் பார்க்கச் சொன்னான். அவங்களும் பார்த்துட்டு, 'என்ன மாதிரியான மோசமான படங்களை நமக்கு ரெக்கமெண்ட் பண்றாங்க... சில்க் போர்ஷன்லாம் அசிங்கம்' என்று திட்டினார்கள். நாங்க கேட்ட பாடல்கள் (இளையராஜா...) அவ்வளவு நல்லாவே இல்லை, 'கப்பக் கிழங்கு, சப்பக் கிழங்கு' என்று அசிங்க அசிங்கமான பாடல்கள், எங்க காலத்துல 'பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது'ன்னு ரொம்ப நல்லா இனிமையான பாடல்கள் இருந்ததுன்னாங்க. நான், என் பசங்ககிட்ட என்ன எப்பப்பார்த்தாலும் ஆங்கிலப் பாடல், இல்லைனா தமிழ்ல 'டமுக்கு டப்பான்'னு நல்லாவே வரிகள் இல்லாத பாடல்லு திட்டறேன். அதுனால, இது ஜெனெரேஷன் வித்தியாசம்தான்.

   துரைசெல்வராஜு சார் - தொலைக்காட்சில, ஒழுங்கா தமிழ் பேசத் தெரிந்தவங்க 95% கிடையாது. ஆனால் அவங்கள்லாம் 'தமிழினம், தமிழை மதிப்போம், தமிழுக்கு உயிரைக் கொடுப்போம்' என்று "டமிளியன்ஸ், டமிள் மடிப்போம், டமிள்னா உயிர் கொட்போம்" என்று பேசுவாங்க. தொலைக்காட்சி சேனல் ஓனர்ஸ் என்ன இருந்தாலும் 'தமிழைக் காப்பாற்ற வந்த' பரம்பரை அல்லவா? இதில் மக்கள் தொலைக்காட்சி மட்டும் விதிவிலக்கு.

   நீக்கு
  4. துரை அண்ணா சமையல் பத்தி சொன்னதும் ஆஹா நானும் இங்கு சமையல் குறிப்புல ஆங்கிலம் கலக்காம சொல்லுவதில்லையே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   சரி சரி அண்ணா இனி நான் குறிப்புகள் கொடுத்தால் கூடியவரை (!!!!!!) ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சி செய்கிறேன்...

   கீதா

   நீக்கு
  5. கில்லர்ஜி.. கருத்துக்கு நன்றி. ஆனால் நம்காலத்துப் பாடல்கள்தான் நல்லாயிருக்கு என்று நம் அப்பா நினைத்தது போலவே நம் பிலாலிகளைப் பொறுத்தவரை நாமும் நினைக்கிறோம். ரசனைகள் மாறுகின்றன.

   நீக்கு
  6. நெல்லைத்தமிழன்.. இதே போலதான் எங்கள் அப்பா அம்மா திருமண நாளுக்கு சங்கராபரணம் பார்க்கக் கிளம்பியவர்களை ஊர் முழுவதும் கொண்டாடுகிறது என்று ஒருதலை ராகம் பார்க்க வைத்துத் திட்டு வாங்கினேன்!

   நீக்கு
  7. துரை ஸார்... கீதா... தேவைப்படும் இடங்களில் ஆங்கிலம் கலந்து எழுதுவதை நான் தவிர்க்கப்போவதில்லை!

   நீக்கு
  8. // நம் பிலாலிகளைப் //

   திருத்தம் : நம் பிள்ளைகளை பொறுத்தவரை

   நீக்கு
 12. கோமதி மா, தாஜ்மகால் தேவை இல்லை பாடலா மா. very sweet song.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த பாடல் இல்லை அக்கா
   தன்னை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்ற மாதிரி அந்த பாடலில் வேண்டுகோள் இருக்கும்.

   நீக்கு
  2. புத்தம்புது மலரே என் ஆசை சொல்லவா.

   நீக்கு
  3. அது தான், அந்த பாடல்தான் அக்கா

   நீக்கு
  4. வல்லிம்மா சட்டென பாடலை இரண்டு முயற்சியில் பிடித்துவிட்டார் கோமதி அக்கா.

   நீக்கு
 13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  கேட்ட பாடல். மீண்டும் கேட்டு ரசிக்க முடிந்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வெங்கட். பாடலை ரசித்ததற்கு நன்றி.

   நீங்கள் பதிவு போட்டு கனநாட்களாச்சு... சீக்கிரம் போட ஆரம்பிங்க...

   நீக்கு
 14. இந்தப் பாடலில் பழனியின் கடைசி வரிகள் :’நீ நடந்த மண்ணெடுத்துச் சிலநாள்
  சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்’ :

  எனக்குத் தோன்றியது:
  நீ நடந்த மண்ணெடுத்து ஏன் முகர்ந்தேன்? உன்னை, உன் வாசத்தை அதில் அனுபவிக்க அல்லவா?
  சந்தனமோ, சாம்பலோ, எதுவோ - இதுகளின் வாசனை யாருக்கு வேண்டும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன சாரே இப்படிச் சொல்லிட்டீங்க. காதலிக்கும் பெண்ணின் 'வாடிய பூ', 'உதிர்ந்த தலைமுடி, கிளிப், ரப்பர் band" என்று குப்ப்பைகளையெல்லாம் அப்போ பொக்கிஷமாச் சேர்த்துவைப்பதில்லையா? பிறகு விதி வசத்தால் அவளைக் கைப்பிடித்து மணம் செய்த பிறகு, 'சனியன்.. ஒம் மூஞ்சில முழிச்சாலே இன்னைக்கு ஆபீஸ் விளங்கினமாதிரிதான்" என்று எரிந்து விழுவதில்லையா?

   நீக்கு
  2. இதுக்குத் தான் பெரியவங்க பேச்சைக் கேக்கணும்..ந்னு சொல்றது....

   நீக்கு
  3. நீங்கள் சொல்கிற தலைமயிர், கிளிப், ரப்பர் பேண்ட் இத்தியாதிகள் மனதைக் கவர்ந்ததை இல்லை எனச் சொல்லவில்லை.
   நான் சொல்லவந்தது என்னவென உங்களுக்குப் புரியவில்லை. சரி, விட்டுவிடுங்கள். மேலே பயணியுங்கள்..

   நீக்கு
  4. நெல்லை ஏகாந்தன் அண்ணா கரெக்ட்டாகத்தான் சொல்லிருக்கார். நீங்க ச்ல்லிருக்கற ரப்பர் பான்ட் சாக்கலேட் கவர் அதைத்தான் அண்ணாவும் இந்த வரிகளை வைச்சு சொல்லிருக்கிறார்....

   கீதா

   நீக்கு
  5. //உன் வாசத்தை அதில் அனுபவிக்க அல்லவா?
   சந்தனமோ, சாம்பலோ, எதுவோ - இதுகளின் வாசனை யாருக்கு வேண்டும்?//

   கரெக்ட் ஏகாந்தன் ஸார். ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்தியேக வாசனை உண்டு. உணர்ந்தவர்களுக்குத் தெரியும்!

   நீக்கு
  6. நெல்லை அண்ட் துரை ஸார்... அஞ்சு ரூபாய் பஞ்சு மிட்டாய் லட்ச ரூபாய் ஆனதன் காரணம் தெரியுமா?

   நீக்கு
  7. ஸ்ரீராம் - "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு... கண்டதுண்டா", காதலன் படங்களை நினைவுபடுத்திவிட்டீர்கள். ஆனா, இது எல்லாம் 'காதலி'யாக இருக்கும்போதுதான். மனைவி என்ற பொசிஷனுக்கு வந்தால், அப்புறம் 'வாசனையாவது, 'பஞ்சுமிட்டாய் கடித்ததால் ஐந்து லட்சமாவதாவது'..........

   நீக்கு
  8. காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
   எச்சில் கூட புனிதம் ஆகுமே

   குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
   உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்

   பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
   நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்

   காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
   சின்ன தகரம் கூட தங்கம் தானே

   இது பாட்டின் வரிகள் ஸ்ரீராம்! ஆனால் நெல்லைத்தமிழன் தன பின்னூட்டத்தில் பாடல் எதையும் சொல்லவில்லை //இது எல்லாம் 'காதலி'யாக இருக்கும்போதுதான். மனைவி என்ற பொசிஷனுக்கு வந்தால், அப்புறம் 'வாசனையாவது, 'பஞ்சுமிட்டாய் கடித்ததால் ஐந்து லட்சமாவதாவது'// என்று யதார்த்தகி சலிப்பாகத்தானே சொன்னார்? ..........

   நீக்கு
  9. வாங்க கிருஷ் ஸார்.. நெல்லை அந்தப் பாடல் என்று நினைத்துக்கொண்டு சொல்லி இருக்கிறார் என்று நினைத்தேன்.

   நீக்கு
 15. இப்போதான் பாடல் கேட்டேன். உண்மையிலேயே எனக்கு சுத்தமாப் பிடிக்கலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. https://gallery.yopriceville.com/var/resizes/Free-Clipart-Pictures/Cartoons-PNG/Angry_Jerry_Free_PNG_Clip_Art_Image.png?m=1507172104

   grrrrrrrr

   நீக்கு
  2. ஏன்சலின் - நீங்க சொன்னதுக்கப்புறம் இன்னுமொரு முறை கேட்டேன். இது என் விருப்பப் பாடல் இல்லை மேடம். நான் என்ன செய்ய? (Beans பார்த்திருப்பீர்கள். ஒரு ஹோட்டல்ல பிடிக்காத உணவை, யாரும் கவனிக்காதபோது கொஞ்சம் இங்க தூரப்போடுவது, கொஞ்சம் பாக்கெட்ல போட்டுக்குவது என்று ஒரு வழியா தட்டுல இருந்து உணவை காலி பண்ணுவார். சாப்பிடமாட்டார்.. ஆனால் நாகரீகத்துக்காக காலி பண்ணுவார். கடைசில செஃப், உணவு எப்படி இருந்தது என்று கேட்க, 'ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்' என்பதுபோலச் சொல்வார். உடனே செஃப் இன்னும் ஒரு ப்ளேட் அதே உணவை அவருக்கு வைப்பார். அதுபோல, பிடிக்காத பாடலை 'ஆஹா ஓஹோ' என்றால், வரும் வாரங்களிலும் அதேபோன்ற பாடல்கள்தாம் ஸ்ரீராம் வெளியிட ஆரம்பித்துவிடுவார்...ஹாஹா)

   நீக்கு
  3. ஹாஹா :) நேர்மையான வெளிப்படையான கண்ணோட்டம்

   //வரும் வாரங்களிலும் அதேபோன்ற பாடல்கள்தாம் ஸ்ரீராம் வெளியிட ஆரம்பித்துவிடுவார்...ஹாஹா)//

   ஆனா சிம்ரன் கூட ஈர்க்கவில்லையா :))))))

   எனக்கு உண்மையில் தமிழ் பாடல்களை விட மலையாள பாடல்களே ரொம்ப பிடிக்கும் இசையும் காணொளியும் சேர்ந்து ரசிக்கலாம்

   நீக்கு
  4. ஏஞ்சல் ஜெர்ரியை ரசித்தேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  5. எனக்கு உண்மையில் தமிழ் பாடல்களை விட மலையாள பாடல்களே ரொம்ப பிடிக்கும் இசையும் காணொளியும் சேர்ந்து ரசிக்கலாம்//

   ஹைஃபைவ் ஏஞ்சல்! எனக்கும்...

   யெஸ் சிம்ரன்....

   கீதா

   நீக்கு
  6. ஏஞ்சல் கூடவே ஒன்று விட்டுப் போச்சு மேல சொன்ன கருத்துல...அதாவது சமீபத்திய தமிழ்ப்பாடல்களில் நு அடிச்சது காப்பி பண்ண்ம் போது விட்டுப் போயிடுச்சு இப்பத்தான் கவனிச்சேன்! தமிழ்பாடல்கள் எத்தனை செமையா இருக்கு.. நான் ரசிக்கும் பாடல்கள் நிறைய இருக்கு...என்னன்னா மலையாளமானாலும் சரி, தமிழானாலும் சரி டக்குனு படம் பேரோ, வரிகளோ வராது...நினைவுக்கு.

   கீதா

   நீக்கு
 16. எல்லோருக்கும் மதிய வணக்கம்...

  நேற்று இரவு மழை தொடங்கிய போது போன கரன்ட் இப்பத்தான் வந்தது.

  ஸ்ரீராம் ஆமாம் போன வாரம் சொல்ல முடியாம போச்சு ...கரன்ட் போய் போய் வருது அதனால கணினியும் அப்பப்ப வேலை செய்ய மறுக்குது.
  போன வாரம் நான் சொன்ன ராகத்தை இங்கு மென்ஷன் செய்ததுக்கு நன்றியோ நன்றி..

  இன்றைய பாடலைக் கேட்கிறேன். இப்பாடல் கேட்டதில்லை. எஸ் ஏ ராஜ் குமாரின் பாடல்கள் கேட்ட ஓரிரு பாடல்கள் வரை கொஞ்சம் ஒரே போலத்தான் இருக்கும். மெட்டு எல்லாமே கேட்டது போலவே இருக்கும்...மெலொடி....சிம்பிள் இசைதான். ரொம்ப வேரியேஷன்ஸ் இருக்காது என்பது என் கணிப்பு.

  இந்தப்ப் பாட்டைக் கேட்டுட்டு வரேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மழை என்கிற வார்த்தையை மட்டும்தான் சென்னை மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.. ஆமாம் கீதா.. அது எப்படி இருக்கும்? மாடியிலிருந்து யாரோ தண்ணீர் ஊற்றுவது போல இல்லை?

   நீக்கு
  2. எஸ் ஏ ராஜ்குமார் மட்டுமில்லை, ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களும் இந்தப் பாடலைக் கேட்டாலும் கேட்டது போலவே இருக்கும் கீதா!

   நீக்கு
  3. >>> மழை என்கிற வார்த்தையை மட்டும்தான் சென்னை மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்..<<<

   சென்னை மக்களுக்குத் தான் மழை வந்தா இயல்பு வாழ்க்கை பாதிச்சிடுமே!...

   நீக்கு
  4. இயல்பு வாழ்க்கை பாதிக்க ரொம்ப விரும்பறோம் நாங்கள் சென்னை மக்கள் துரை ஸார்...

   நீக்கு
  5. யெஸ் யெஸ் ஸ்ரீராம் போன வாரம்தான் நானும் என் கசினும் சொல்லிக் கொண்டிருந்தோன் ஹேரிஸ் பாடல்களும் அப்படியே ஒரே போலத்தான் இருக்கும்னு...நீங்க சொல்லிருக்கீங்க!!!

   ஹைஃபைவ்!

   கீதா

   நீக்கு
 17. ////இந்தமுறை புதுசாக ஒரு படம். ஜஸ்ட் இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த படம்!/////

  ஆஆஆஆ ஶ்ரீராம் கொஞ்சம் காலை எடுத்து வச்சு நடக்கத் தொடங்கிட்டார்ர்ர்ர்ர்:)
  அப்போ இதுவரை போட்டதெல்லாம்... 21 வருசத்துக்கும் முந்தியதா அவ்வ்வ்வ்வ்வ்:)...
  அழகிய பாடல்... சிம்ரன் அஜித் ஜோடி கலக்கல். ஆனாலும் இது தெலுங்கின் தழுவலோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோவ் மியாவ் அது நேயர் விருப்பமாக்கும் :) நீங்களும் உங்க முத்து அங்கிள் மகன் நடிச்ச பாட்டுகளை கேட்டிருந்தா இங்கே போட்டிருப்பார் ஸ்ரீராம்

   நீக்கு
  2. வாங்க நேயர் ஏஞ்சல் அவர்களே பிருத்வி, நிவின்பாலி எல்லாம் சொல்லி பாடல் கேட்டதுக்கு நன்றி. நானும் ஸ்ரீராமிடம் மலையாளப் பாடல்களும் போடலாமேனு சொல்ல நினைச்சு விட்டுப் போன ஒன்று.

   நிறைய நல்ல பாடல்கள் உண்டு அங்கு. செமையா இருக்கும்.

   கீதா

   நீக்கு
  3. ஹா ஹா ஹா அதிரா அதே அதே...ஸ்ரீராம் கறுப்பு வெள்ளைலருந்து, ஈஸ்ட்மென் கலர்லருந்து இப்ப கலருக்கு வந்துவிட்டார்!! இனி ஹைடெக்கும் வரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  4. //ஸ்ரீராம் கொஞ்சம் காலை எடுத்து வச்சு நடக்கத் தொடங்கிட்டார்ர்ர்ர்ர்:)//

   அதிரா... ஏற்கெனவே சிலபல புதிய பாடல்கள் பகிர்ந்திருக்கிறேன். நீங்கள் பார்க்கவில்லை போல!

   நீக்கு
  5. வாங்க ஏஞ்சல்... மலையாளப் பாடல்களா? நன்றாயிருக்கும்தான். ஆனால்...

   நீக்கு
 18. ஸ்ரீராம் இவரின் இசையமைப்பில் ஆனந்தம் ஆனந்தம், ஏதோ ஒரு பாட்டு, என்னை தலட்டும் சங்கீதம் எல்லாம் ஒரே ட்யூன்...ஒரே போன்று இருக்கும்...

  பாட்டைக் கேட்க க்ளிக் செய்ததும் கம்ப்யூட்டர் சுணங்கிவிட்டது அதான் ஆஃப் செஞ்சு மீண்டும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.. 'ஒரு பாடலில் பல ராகங்கள்' என்று ஒரு பழைய SPB பாடல் உண்டு... அது நினைவுக்கு வருகிறது. ஒரு பாடலில் எத்தனை பாடல்களை நினைவு படுத்துகிறார் பாருங்கள்!

   நீக்கு
 19. >>> நீ நடந்த மண்ணெடுத்துச் சிலநாள்
  சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்...<<<

  இதாவது கொஞ்சம் பரவாயில்லை...

  அன்பே.. அன்பே.. என்னைக் கொல்லாதே..ன்னு வைரமுத்து எழுதுன பாட்டு...

  தேவதை குளித்த துளிகளை அள்ளித்
  தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்.. ந்னு வரும்...

  அடக் கொடுமையே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜேஷ் பாதம் பட்ட காலடி மண்ணை எடுத்து சரிதா பல்லு விளக்க ஆசைப்பட்டது மட்டும் சரியா?!!!!

   நீக்கு
  2. அப்புறம் 'காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வச்சவங்களை" மறந்துட்டீங்களே..

   நீக்கு
  3. அது காதல் இல்லை, விசுவாசம் நெல்லை!

   நீக்கு
  4. நம்ம ஊர்ல... ஆற்று நீர் ஓட்டம் குறைந்து ஒரு ஓரமா சலசலத்துக்கிட்டு இருக்கும்... அப்போ அந்த ஓரத்தில அலையடிச்சி அலையடிச்சு பூ மணல் படிந்திருக்கும்....

   மென்மையிலும் மென்மையாக மிருதுவாக இருக்கும்....

   அந்தப் பூமணல் எடுத்து பல் துலக்கிய காலமும் உண்டு...

   அது காதலியின் கால் பட்டதா என்றெல்லாம் யோசித்ததில்லை..

   இருந்தாலும் இருக்கலாம்....

   நீக்கு
  5. என் இனிய எங்கள் பிளாக் உறவுகளே ..அடுத்து கிராமத்து மண் மணம் வீசும் ஒரு காதல் கதையுடன் துரை அண்ணா களம் இறங்கப்போகிறார் என்று தோன்றுகிறது !!!

   நீக்கு
  6. அப்புறம் -
   தன்னைத் தேடி (நடந்து) வர்ற பக்தர்களோட பாததூளி பகவானுக்கு மிகவும் இஷ்டமானது.. ந்னு படிச்சிருக்கேன்...

   தன் அடியார்களின் பாததூளியைத் தரித்துக் கொண்டான் ஆண்டவன்..

   அது வாத்ஸல்யம்...

   அப்படி அன்பினால் ஆண்டவனின் பாதத்தூளியை அன்பினுக்குக் கட்டுப்பட்டவன் பிரியத்துடன் அணிந்து கொண்டான்.....

   தஞ்சாவூர் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்வாமிகளின் பாதம்பட்ட ம்ருத்திகை தான் பிரசாதம்....

   நீக்கு
  7. ஹையோ ஸ்ரீராம் ஆஹா ஆஹா...சூப்பர் அப்படிப் போடுங்கப்பா!! ஹா ஹா ஹா ஹா...

   கீதா

   நீக்கு
  8. //என் இனிய எங்கள் பிளாக் உறவுகளே ..அடுத்து கிராமத்து மண் மணம் வீசும் ஒரு காதல் கதையுடன் துரை அண்ணா களம் இறங்கப்போகிறார் என்று தோன்றுகிறது !!!//

   ஆஹா... காத்திருக்கலாமே...

   நீக்கு
  9. காதலை ஆன்மீகமா பார்க்கறீங்க துரை ஸார்...!

   நீக்கு
  10. ஆஹா ஏஞ்சல் கரீக்ட்டா சொல்லிட்டீங்க துரை அண்ணா கதைக்குள்ளேயே போயிட்டார் போல!!!!!!!!!!!!!!! விரைவில்!! தண்டோரா போட்டுருவமா!!!!

   கீதா

   நீக்கு
  11. போட்டுருங்க... தண்டோரா போட்டுருங்க!...

   நீக்கு
 20. ஹாஹ்ஹா :) அது ஒரு flow வில் எழுதினது :) இந்த படம் சிடியில் ஜெர்மனியில் பார்த்த நினைவிருக்கு .ஒரு என்டெர்டெய்ன்மெண்டம் இல்லாத நாட்கள் /தமிழ் கடைகளில் வாராவாரம் மூவீஸ் சிடி விகடன் வந்ததும் வாங்கிட்டு வருவார் .
  பாடல் நல்லா இருக்கு spb குரலில் ஆனால் அஜித்தும் சிம்ரனும் டல்லா இருக்கிறபோலிருக்கு .
  பழனிபாரதி இப்பவும் பாடல்கள் எழுதுகிறாரா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல் அது ஏதோ ஊடல் ரெண்டு பேருக்குள்ளயும் அதான் !!ஹா ஹா ஹா

   பாடல் வரிகள் ஏதோ சொல்லுதே...

   கீதா

   நீக்கு
  2. பழனிபாரதி இப்பவும் எழுதுகிறாரா என்று தெரியவில்லை ஏஞ்சல். நான் இந்தப் படத்தை அவ்வப்போது சில காட்சிகள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.

   நீக்கு
 21. பாட்டு நல்லாருக்கு ஸ்ரீராம்...எஸ்பிபி தான் இதில் முன்னிலையில்..இசையை விட அவரால்தான் இந்தப் பாட்டு என்று சொல்லலாம்..

  தொடக்க இசை எங்கேயோ கேட்டாப்ல இருக்கு...அவருடைய பல பாடல்களையே மெட்லி ஈசியா செஞ்சுடலாம்...!!!!!!!!!!!!!!!!!!!!..

  கொஞ்சம் கலர்ஃபுல்லா போடத் தொடங்கிட்டீங்க ஸ்ரீராம் பாட்டு வரி பட்டாம்பூச்சிக் கூடாம் போல...இப்படியே கொஞ்சம் ஷேர் பண்ணுங்க ஸ்ரீராம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாட்டை ரசித்ததற்கு நன்றி கீதா.. இன்னும் ராகம் சொல்லவில்லை நீங்கள்! கலர்புல்லா... ஹா.. ஹா.. ஹா...

   நீக்கு
  2. ஸ்ரீராம் ராகம் கண்டுபிடிக்கத்தான் முயற்சி செஞ்சேன்..பாடிப் பாடிப் பார்க்கிறேன்...என்னவோ கொஞ்சம் ஆபேரி, கொஞ்சம் சுத்ததன்யாசியின் சாயல் எல்லாம் எட்டிப் பார்க்குது..கரீக்டா சொல்ல முடியலையே ஸ்ரீராம்...மிக்ஸில போட்டு நல்லா குலுக்கியிருக்காரு. அப்புறம் பெரும்பாலும் குறிப்பிட்ட ரேஞ்சுக்குள்ளதான் சஞ்சாரம்..ஹை நோட்ஸ் ஒரே ஒரு லைன் தான் ..

   அதுக்குள்ள கணினி, கரண்டு, நெட்டு என்று எல்லாம் படுத்த...

   கீதா

   நீக்கு
 22. ஓ ஏஞ்சல் தான் சொல்லிருந்தாங்களா...கோமதிக்கா சொல்லிருப்பது போல். இந்தக் கமென்ட்ஸ் எல்லாம் மிஸ் பண்ணிருக்கேன் பார்க்காம...

  நானும் அவங்க சொன்னதை ஹைஃபைவ் சொல்லுவேன். ஏற்கனவே சொல்ல நினைத்திருந்தேன் ஸ்ரீராம் மலையாளப் படப் பாடல்கள் கூட நீங்க இங்க போடலாமெனு நிறைய நல்ல பாடல்கள் இருக்கு. பிருத்வி நிவின்பாலி பாடல்கள் அப்புறம் முந்தைய மோஹன்லால் நடித்த படங்களில்..

  ஜான்ஸன் மாஸ்டர், ரவீந்திரன் மாஸ்டர், எம் ஜி ராதாகிருஷ்ணன், ஷரத், தற்போதைய ஜெயசந்திரன் என்று பல மாஸ்டர்கள் போடும் இசை செமையா இருக்கும் ஸ்ரீராம். நான் எங்கள் தளத்தில் மலையாளப் பாடல்கள் ஷேர் செய்ய எழுதி வைச்சுருக்கேன். ஆனால் ஏனோ போடாமல் ஒரு சுணக்கம்...லேட்டஸ்ட் பாடல்களிலும் நல்ல பாடல்கள் இருக்கு..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே அதே கீதா :) மலையாளத்தில் எத்தனை அழகான பாடல்கள் சாஹிபா பாட்டு காத்திருனு பாட்டு .சார்லீ மூவீ பாட்டு எத்தனையோயோ இசைக்கென்றே அமைந்த பாட்டுக்கள் நானும் அடிக்கடி கேட்பதுண்டு

   நீக்கு
  2. ஓ ஏஞ்சல் சார்லி பாத்தீங்களா...நானும் சென்னையில் இருந்தப்ப என் மைத்துனரின் உபயத்தில் இந்தப் படம் பார்த்தேன்....என் மைத்துனர் நிறைய கலெக்ஷன் வைச்சிருக்காரு. நான் அங்கிருந்தால் மாமியார் வீட்டிற்குப் போகும் போது இல்ல அங்கேயெ இருந்தப்ப பெரும்பாலும் ராத்திரி அவர் ஃபீரீயனதும் போடுவார். எனக்குப் படம் பார்க்கப் பிடிக்கும் என்று. அப்படி பார்த்தவைதான் மலையாளம், ஆங்கிலப் படங்கள் சில. சார்லி..பெரிய கதை என்று சொல்ல முடியாது..நல்ல மெசேஜ் இண்டைரக்ட்டா இருக்கும். நல்லாருக்கும் தொய்வு இல்லாம போகும்.
   சாஹிபா ப்ரித்வி...படம் பார்க்கலை. ப்ரித்வி நடிப்பும் நிவின் பாலி நடிப்பும் பிடிக்கும்...நிறைய நல்ல கதைகள் படங்கள் அங்க வருது..

   கீதா

   நீக்கு
  3. மலையாளத்தில் நடிகைகளும் நடிப்பார்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  4. யெஸ் ஏஞ்சல் சாஹிபா பாடல்னு அடிச்சதுல பாடல் விட்டுப் போச்சு...ஹிஹிஹி...அனார்க்கலினு தெரியும். என் உறவினர் மலையாள நாட்டில்தானே....அப்புறம் சென்னை கஸினும் மலையாள வாசனைதான்..இருந்தாலும் அவ செம பாடகி. கர்நாட்டிக் கச்சேரி செய்யும் அளவு அறிவு உண்டு ஆனால் பாவம் மகன் ஸ்பெஷல் கிட். சிவியர் ஆட்டிஸம் அதனால அவளால எதுவும் செய்ய முடியலை. அவளுக்குத் தமிழ் சினிமா பாடல், மலையாள சினிமா பாடல்கள் அத்தனையும் தெரியும். அத்தனை இசை அறிவு உள்ளவள் பல சமயங்களில் என்னைக் கூப்பிட்டு ராகம் கேட்பாள். சொல்லுவாள் நீ நல்லா பாட்டு ராகம் ஸ்வரம் பார்த்து கண்டு பிடிக்கற எனக்கு அதெல்லாம் தெரியலை கீதா என்பாள்.... எனக்கு ரொம்பவே மனசு கஷ்டமாகிடும் பாவம்...அவளுக்கு அத்தனை இசை அறிவு உண்டு...என்னைப் போய் இப்படிப் பாராட்டிச் சொல்கிறாளே என்று இருக்கும்..ஸோ இப்ப சமீபத்திய எங்க ப்ளான் எங்களையே எங்களை உற்சாகப் படுத்திக்க வாரத்துல ரெண்டு நாள் ஏதாவது ஒரு ராகம் எடுத்துப் பாடிப் பாக்கிறதுனு....அவளை உற்சாகப் படுத்திப் பழையபடி பாட வைக்கணும் என்று...

   கீதா

   நீக்கு
  5. ஹரிஹரன் குரலில் சாஹிபா பாடலைக் கேட்டு ரசித்தேன்.

   நீக்கு
 23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 24. இளையராஜா பழனிபாரதிக்குச் சொன்னதை ரசித்தேன் ஸ்ரீராம்..ரொம்பவே...

  கீதா

  பதிலளிநீக்கு
 25. பாடல் பெரிதாக கவரவில்லை. கேட்ட நினைவும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சரியா கேட்கலைன்னு நினைக்கறேன் பானு அக்கா. நன்றி!

   நீக்கு
 26. என்னாச்சு கீதாக்காவைக் காண்ம். உறவினர் வருகைல பிசியா இருக்காங்களா....இல்லை மதியம் ஆகிடுச்சுனா இங்க கூட்டத்துல தான் சின்ன குழந்தை காணாமப் போயிடுவோமேனு வரலையோ ஹா ஹா ஹா..

  எந்தக் கூட்டதுலயும் பெரிய கூட்டத்துல கூடச் சின்னக் குழந்தை கவர்ந்துவிடுமே!! அதனால கீதாக்கா வந்து ஒரு ஆஜர் வைச்சுட்டுப் போங்க.!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா அக்கா காலையில் வந்து நேற்றைய பதிவில் பின்னூட்டங்கள் இட்டுவிட்டு ஓடிட்டார்! இங்கே வரவே இல்லை!

   நீக்கு
 27. ஸ்ரீராம் வித்யாசாகர் இசை கூட ரொம்ப நல்லாருக்கும்....நல்ல ராகங்களில் தமிழிலிம், மலையாளத்திலும் போட்டிருக்கிறார்...

  கீதா

  பதிலளிநீக்கு
 28. >>> ஆனா சிம்ரன் கூட ஈர்க்கவில்லையா :))))))<<<

  சில நடிகர்களுக்கு அக்கா போல இருக்கும்!...

  அது ஏன் சிம்ரனைக் கொண்டாடுனாங்க?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கு எங்கே புதன் கிழமையில் கேஜிஜி சார் பதிலளிக்கப்போகிறார். பொது அறிவுக் கேள்வின்னு வந்துட்டீங்க. பதில் தெரிஞ்சு சொல்லலைனா தெய்வக்குத்தம் ஆகிடாது?

   நீக்கு
  2. சிம்ரனைக் கொண்டாடினாங்களா?

   நீக்கு
 29. >>> பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
  நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்..<<<

  அவள் தின்று விட்டு அவனிடம் தானே தருகிறாள்..

  அதை இவன் (காதலன்) லட்ச ரூபாய் என்று மதிப்பு வைத்தது எப்படி?..
  ஏலம் போடுகிறானா?.. இல்லை - அவளுக்கு இவன் கொடுக்கிறானா?...

  அப்படியானால் அர்த்தம் அனர்த்தம் ஆகாதா?..

  ஒன்னுமே புரியலை போங்க!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தநாளைய சினிமாப பாடல்களில் அர்த்தத்தைத் தேடுகிற மாதிரி பெரிய அனர்த்தம் வேறொன்றுமில்லை துரை செல்வராஜூ சார்! பிடிச்சதோ இல்லியோ அதுக்கு மேலயும் கடிக்காம உட்டாங்களேன்னுட்டு போய்க்கிட்டே இருக்கணும்! :-)))

   நீக்கு
  2. சிலுக்கு சாப்பிட்ட ஆப்பிள் நினைவுக்கு வருகிறது! சாப்பிட்ட என்றா சொன்னேன்? கடித்துப் போட்ட என்று சொல்லலாம்!

   நீக்கு
 30. பதில்கள்
  1. ஹா ஹா ஹா கௌ அண்ணா நீங்க செஞ்சுரி போட்டாலும் பாருங்க இப்ப 116 ஆகிடுச்ஹ்கு!!

   கீதா

   நீக்கு
 31. வணக்கம் சகோதரரே

  நலமா? நல்ல பாடல்,. கேட்டேன். படம் பார்த்ததில்லை. எஸ்.பியின் குரல் இனிமையாக இருந்தது. அஜீத்தும் எல்லா பாடலுக்கும், பொருத்தமாக வாயசைப்பதோடு, ஒரு(Ba)பாவத்தையும் முகத்தில் கொண்டு வருவார்.இந்த படத்தில் அஜீத்தும், சிம்ரனும் ரொம்ப அழகாக இருக்கின்றனர். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  இங்கு நேற்று இரவு நல்ல காற்றுடன் மழை. அப்போது போன நெட் இணைப்பு இப்போதுதான் வந்தது. அதனால் தாமதம்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!