13.7.25

ஞாயிறு பட உலா – நெல்லைத் தமிழன் நான் சென்ற இடங்கள் – மெக்சிகோ - படங்களுடன் - 06

 

நீச்சல் கொஞ்சம் பழகிக்கொண்டதும், தண்ணீரில் இறங்குவதற்கு பயம் போய்விட்டது. இருந்தாலும் சில முறை ஆபத்துகளைச் சந்தித்திருக்கிறேன். 1990ல் மகாபலிபுர கடற்கரையில் குளித்தபோது அலை என்னை இழுக்க ஆரம்பித்தது, தப்பித்துவிட்டேன்இப்போதும் வர்கலா பீச்சில் குளிக்க எனக்கு ரொம்பவே பயம். மூன்று நான்கு முறை குளித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அலை திரும்பும்போது வேகமாக இழுப்பதையும் நான் தடுமாறுவதையும் உணர்ந்திருக்கிறேன். அதனால் (நீங்க ஏதோ, நான் நூறடி தூரத்திற்கு கடலில் இறங்குவதுபோல நினைத்துக்கொள்ளவேண்டாம். பத்தடி தூரத்திற்கே இந்த பயம்) வர்கலாவில் ஸ்நானம் என்று சொன்னாலே நான் ரொம்பவே அலர்ட் ஆகிவிடுவேன்.

துபாயில் கடலில் நல்ல மார்க் பண்ணியிருப்பார்கள். அந்த அளவைத் தாண்டி நாம் செல்லக் கூடாது. அதுவும் தவிர அங்கே வாட்ச் டவரிலிருண்டு பாதுகாலவர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதனால் ரொம்பவே பயம் கிடையாதுஇதை எழுதும்போது அங்கு பெண்களுக்கு எவ்வளவு பயமின்மையை அந்த அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்று வியந்து பார்க்கிறேன். கடற்கரையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் குளித்துக்கொண்டிருப்பார்கள், பல வகைகளிலும் Enjoy செய்வார்கள். ஆனால் யாரும் பெண்களைத் தேவையில்லாமல் படம் எடுக்க முடியாது.

மற்ற இடங்களின் அனுபவம் பற்றி இங்கே எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன். அந்தப் படங்களையும் ஒரு நாள் இங்கு பகிர்வேன்.

நான் எந்த வெளிநாடு சென்றாலும் கிடைக்கும் நேரத்தில் சுற்றிப்பார்க்கத் தயங்க மாட்டேன். நுழைவுக் கட்டணம், செல்லுவதற்கான செலவு என்பதையெல்லாம் கருத்தில் கொள்ள மாட்டேன்வேறு வாய்ப்பு எப்போ கிடைக்குமோ என்பதே என் எண்ணமாக இருக்கும்.

நான் சென்றிருந்த கான்கன், தென்கிழக்கு மெக்சிகோவின் தீபகற்ப்ப பகுதியில் கரீபியன் கடலுக்கு அருகில் இருக்கிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட நகரம். சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, பல ரிசார்டுகளுடன் கூடிய நகரமாக இதனைத் திட்டமிட்டு 1970ல் உருவாக்கினார்கள்அதற்கு முன்பு மிகக் குறைவான மக்களே இந்த இடத்தில் இருந்தனர் (ஆயிரத்துக்கும் குறைவு, அதுவும் இதன் அருகாமைப் பகுதிகளில் மீன்பிடி கிராமங்களில்).  நான் சென்றிருந்த சமயத்தில் அங்கு சுமார் 6 லட்சம் மக்கள் இருந்திருப்பார்கள்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும், மெக்சிகோ என்பதே மாயன் கலாச்சாரம் (நம்ம மயன்தான். வேறு யார்!பிறகு ஸ்பெயினில் இருந்து வந்தவர்கள் நாடுகளைப் பிடித்து கலாச்சாரத்தை மாற்றி, மாயன் கலாச்சாரத்தைச் சிதைத்துவிட்டனர். கான்கன் (அல்லது கான்கூன்) என்பதற்கு மாயன் மொழியில் பாம்புகளின் கூடு என்று அர்த்தம் (நான் ஒரு பாம்பையும் பார்க்கவில்லை).

நாங்கள் இருந்த பகுதியில் முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்கள் இரண்டு உண்டு. ஒன்று சிச்சன் இட்ஸா என்ற வரலாற்று இடம். மற்றொன்று கூபா டைவிங் மற்றும் ஸ்னார்க்லிங்ஸ்னார்க்லிங் செல்ல முடியாததால், நான் சிச்சன் இட்ஸா டூருக்குச் சென்றேன். அடுத்த பதிவில் அதைப்பற்றி (அல்லது அதற்கு முன்பு பார்த்த கலைப்பொருட்கள் விற்கும் இடம்) எழுத ஆரம்பிக்கிறேன். எழுதுவதை விட படங்கள்தாம் அதிகம் இருக்கும்.

இன்று ரிசார்டின் பல்வேறு படங்கள் இடம் பெறுகின்றன.



ரிசார்டிலேயே இந்த நிறாத் துண்டு தருகிறார்கள். கடலில் குளித்துவிட்டு அங்கேயே துவட்டிக்கொண்டு, சேரில் போட்டுவிட்டு வந்துவிட வேண்டியதுதான். அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

கடற்கரையில் ஒரு மெக்சிகன், வித்தியாசமான குரங்கைக் தோளில் வைத்துக்கொண்டு வந்தான். அந்தக் குரங்குடன் புகைப்படம் எடுக்க 1 டாலரோ என்னவோ கேட்டான். குரங்கு நம்மைப் பிராண்டிவிட்டுவிட்டால்? நான் அந்த ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. துபாயில் பருந்தை கையில் உட்காரவைத்துப் படமெடுத்துக்கொண்டது இன்னொரு பதிவில் வரும்இதுபோல ஒரு தடவை துபாய் (தேரா) மார்க்கெட்டில் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு பஞ்சாபி (?) வெகு நீளமான மீசை வைத்திருந்தவன், தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பத்து திர்ஹாம் என்றான். (மீசை ரொம்பவே நீளம்). நான் தூரத்தில் இருந்துகொண்டு அவனைப் படம் எடுத்தேன்.





டிரிங்க்ஸ் கவுண்டருக்கு ஒரு படம் எடுத்துவைத்திருக்கிறேன் போலிருக்கு. 

நான் எடை குறைத்ததைப் பற்றி இங்கு முன்னமேயே எழுதியிருந்தேன். அதில் எனக்கு ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டது. எல்லா டிரெஸ்களும் ரொம்பவே லூஸாகிவிட்டன. அதனால் புதிய உடைகள் மற்றும் பேண்ட் வாங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதுநானோ எப்போதும் உடைகளை தேவைக்கு மிக அதிகமாக வாங்குபவன் (இதுக்கும் ஒரு காரணம் இருக்கு. சின்ன வயதில் அதாவது பதின்ம வயதில் வித வித உடைகள் அணிய வாய்ப்பில்லாமலிருந்ததால்-வேற என்ன.. வாங்கித் தரலை, பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் நிறைய வாங்க ஆரம்பித்தேன். சொன்னா டமாரம் அடிக்கற மாதிரி இருக்கும், ஒவ்வொன்றிலும் நூறுக்கும் குறையாமல் வைத்திருப்பேன். – இதுவே ரொம்ப குறைவுதாம்பா. ஒவ்வொரு லேடீஸ் ஆயிரத்துக்குக் குறையாமல் உடைகள் வைத்திருப்பாங்கப்பா என்று சிலர் நினைப்பது எனக்குக் கேட்கிறது) இத்தனை உடைகளையும் என்ன செய்வது? அனேகமா எல்லாமே புதியதாகத் தோன்றும் (அப்படி பத்திரமாக நான் வைத்திருப்பேன்).  நான் எதைச் செய்ய ஆரம்பித்தாலும் தீவிரமாக இறங்குவேன் என்று சொல்லியிருக்கிறேன் இல்லையா? 96லிருந்து சில வருடங்களில் 72 வரை குறைத்துவிட்டேன். ஆனால் என்னால் 72ல் stableஆக இருக்க முடியவில்லை. பிறகு 80ல் நிறைய வருடங்கள் இருந்தேன். 83ஐத் தாண்டிவிட்டால் மனதில் அலார்ம் அடிக்கும்.

இப்போகூட (5 மாதங்களுக்குள்), XXL sizeல இருந்து M sizeக்கு வந்துவிட்டேன். இப்போ XL-6, L-5, M-2 டிஷர்ட் வாங்கிவைத்திருக்கிறேன். மனைவியோ, இனிமேல் வாங்காதீங்க, நீங்க என்ன சைஸ்ல தொடர்ந்து இருக்கப்போகிறீங்க என்பதை வைத்து புதிய உடைகள் வாங்கிக்கொள்ளலாம் என்கிறாள். XXL T Shirts ரொம்பவே லூஸாக இருப்பதால் நடைப்பயிற்சிக்குக்கூட அவற்றை உபயோகிக்க முடியலை.


ஏதோ ரெஸ்டாரண்டுக்குப் போய், அங்கு உணவு வகைகளை வாங்கிக்கொண்டு, கடற்கரை அருகில் இருக்கும் இடத்தில் போய் (இந்த மாதிரி டேபிள் சேர்கள் போடப்பட்டிருக்கும்) கடலைப் பார்த்துக்கொண்டே உண்ணலாம். நான் சிங்கிள் ஆள். குடும்பத்தோடு வந்தால் பேசிச் சிரித்துக்கொண்டே உணவை முடிக்க முடியும்.

அங்கு காக்காயைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. குளிர், மழை.. அதுவும் உணவுக்கு என்ன செய்யும்? நான் பார்த்ததிலேயே லண்டன் டவரில் இருந்த அண்டங்காக்கைகள்தாம் ரொம்பவே குண்டா பெரிதாக இருந்தன. பெரிய கழுகு சைஸுக்கு.


கடற்கரை ஓரமாக எவ்வளவு குடில்களை அமைத்துவைத்திருக்கிறார்கள் பாருங்கள். வெயிலோ மழையோ தாக்காதுபாட்டில் ப்ரியர்களுக்கும் சொர்க்கம்தான்.



சிவப்புக் கொடி ஏற்றியுள்ளார்கள். கடலுக்குள் நீச்சலடிக்கவோ இல்லை குளிக்கவோ போக க்கூடாது என்பதற்காக. அலையின் வேகம் மிக அதிகமாக இருந்தது.

சிவப்புக் கொடி என்பது அந்த அந்த ஏரியாக்களுக்கு மட்டும்தான் என்று தோன்றுகிறது. தூரத்தில் கடலின் அலைகள் அருகில் நிறையபேர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

மஞ்சள் கொடி ஏற்றிவிட்டார்கள். இனிக் கவலையில்லை. 



தினமும் ஜிம் போவதை விட்டுவிடலாமா?

எல்லா இடத்திலும் நினைவுக்கு ஒரு படம் எடுத்து வைத்துக்கொள்வேன். இதை எழுதும்போது 1993ல் துபாயில் நான் வேலைபார்த்த இடம் நினைவுக்கு வருது. அது ஒரு கம்ப்யூட்டர் கன்சல்டன்சி கம்பெனி. அங்கு மேனேஜராக நான் பணி புரிந்தேன். (தேரா டவர். இப்போது கூட கூகிளிட்டு அந்த பில்டிங்கை நீங்கள் பார்க்கலாம் Deira Tower). அந்த ஊர் சென்ற புதிதில் எனக்கு எல்லாமே ஆச்சர்யம்தான்நாங்கள் இருந்த ஃப்ளோரில் ரெஸ்ட் ரூம் என்று பெரிய அறை உண்டு (Toilet) அவ்வளவு அழகாக அந்த மாதிரி இடத்தை அதுவரை நான் பார்த்தில்லை. அங்கு ஒரு புகைப்படம் எடுத்தேன் (பிறகு எல்லா இடங்களிலும் ஏன் இந்தியாவிலும் மால்களில் அப்படி வர ஆரம்பித்துவிட்டது)

கௌதமன் சார் யோசித்திருப்பார்அடடா, நாமும் பாண்டிச்சேரி ரிசார்ட்டில் நிறைய படங்களை எடுக்க விட்டுவிட்டோமே என்றுகேஜிஎஸ் எப்போதும் பேரன் எடுக்கும் படங்களைத்தான் இங்கு பகிர்வார் என்று நினைக்கிறேன்.

அடுத்த பகுதியில் தொடரலாம்.

(தொடரும்) 

10 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.

      நீக்கு
  2. படங்கள் சிறப்பாக உள்ளன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    மெக்சிகோ பயணப் பதிவு இன்றைய தினமும் வெகு அருமையாக உள்ளது. அழகான படங்களுடன் நீங்கள் விவரணையான சொல்லும் அழகிலும், நாங்களும் உடன் இருப்பதை நாங்கள் ஒவ்வொரு பதிவிலும் உணர்கிறோம். (நீங்கள் என்னவென்றால் நான் தனிஆள். கூட எவருமே இல்லை எனச் சொல்கிறீர்கள்.:)) )

    பொதுவாக கடலில் குளிப்பதற்கு நல்ல முறையான நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். சாதாரணமாகவே தண்ணீர் நிறைந்த பகுதிகளில் ஆபத்துக்கள் நிறைய உண்டு. எங்கள் பிறந்த வீட்டில் அருகிலிருக்கும் வாய்க்கால் படித்துறையில், துணிகளை துவைத்து குளிக்கும் போதே நீரின் அளவு தீடிரென ஏறுவதை பலமுறை கண்டிருக்கிறேன். ஆற்றங்கரையிலும் தண்ணீரின் வேகம் அதிகமாகி நம்மை இழுப்பதை உணர்ந்திருக்கிறேன். இது கடல் அல்லவா? சீற்றம் சில சமயங்களில் அதிகமாகி விடும் அபாயம் வந்து விடும்.

    மெக்சிகோ நகரத்தைப் பற்றிய விபரம் அருமை.பாம்பு கூடு என சொல்வதை கேட்க வியப்பாக இருந்தது. நீங்கள் ஒரு பாம்பைக்கூட காணவில்லை என சொல்லி இருக்கிறீர்கள்.ஆனால், ஆங்காங்கே பாம்பாக வளைந்து செல்லும் பாதைகள் உள்ளனவே..! அதைத்தான் பாம்பாக நான் காண்கிறேன்.

    ஒவ்வொருவரிடம் இருக்கும் உடைகளைப்பற்றி என்ன சொல்ல..! இப்போது இங்கு நாங்கள் வரும் போது இருந்ததை விட துணிக்கடைகள் நிறைய வந்துள்ளன. ஒவ்வொன்றிலும் எப்போதும் மக்கள் கூட்டம்தான். ஒருநாளைக்கே பல விதமான துணிகளை மாற்றிக் கொள்வார்கள் போலே என நினைத்துக் கொள்வேன்.

    நீங்கள் நினைவாக ஒவ்வொரு இடத்திலும் படங்கள் எடுத்துக் கொண்டிருப்பதை சிறப்பு. நாம் சென்று வந்த இடங்கள் நினைவுக்குள் என்றும் தங்கி நிற்கும். இப்போதே பாருங்கள். எப்போதோ எடுத்த படங்கள் ஒரு அழகான நினைவலைகளாக, அருமையான கட்டுரைகளை பகிர எவ்வளவு வசதியாக உள்ளது. எல்லா படங்களையும் பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.

      நான் அலுவலக விஷயமாகச் செல்லும் பயணங்களில் மனைவியை அழைத்துச் செல்வதில்லை என்று வைத்திருந்தேன். (இவன் ஆபீஸ் விஷயமாகச் செல்கிறானா இல்லை குடும்பச் சுற்றுலாவாக வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறானா என்ற பேச்சு வந்துவிடக் கூடாது என்பதற்காக. எதிலும் பர்ஃபக்டாக இருக்கணும் என்ற எண்ணம்தான் காரணம்.-அப்படி இருக்க முடிந்ததா, அதனால் வந்த பிரச்சனைகள் என்ன என்பதைப் பிறகு சொல்கிறேன்)

      தண்ணீருக்கு மரியாதை கொடுப்பது நல்லது. அதன் சீற்றம் தாங்க இயலாது.

      மெக்சிகோவில் பல இடங்களில் பாம்பு (அனகோண்டா) சிலைகள் பார்த்திருக்கிறேன்.

      இப்போது மக்களிடையே நுகர்வு மிக அதிகமாக ஆகியிருக்கிறது. நான் பதின்ம வயது நினைவுகளால் தூண்டப்பட்டு நிறைய உடைகள் -அதிக விலை கொடுத்தல்ல, வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

      எனக்குமே புகைப்படத் தொகுப்புகளைப் பார்க்கும்போது, நடந்தவைகள், சென்ற இடங்கள் என வரிசையாக நினைவுக்கு வரும்.

      கடந்த ஐந்து நாட்களாக, மூத்த சகோதரனின் குடும்பத்துடன் கூர்க் பகுதிக்குச் சென்றிருந்தோம். அதனால் தளங்களைப் படிப்பது மிக்க் குறைந்துவிட்டது.

      நீக்கு
  4. படங்கள் நன்றாக இருக்கின்றன. சொல்ல வேண்டிய விஷயங்களை சுருக்கமாக சொன்னாலும் தெரிவிக்க வேண்டியதை தெரிவித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். நான் பொதுவா வளவளவென எழுதுவேன். மெக்சிகோவுக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கவில்லை.

      நீக்கு
  5. //நானோ எப்போதும் உடைகளை தேவைக்கு மிக அதிகமாக வாங்குபவன் (இதுக்கும் ஒரு காரணம் இருக்கு. சின்ன வயதில் அதாவது பதின்ம வயதில் வித வித உடைகள் அணிய வாய்ப்பில்லாமலிருந்ததால்-வேற என்ன.. வாங்கித் தரலை, பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் நிறைய வாங்க ஆரம்பித்தேன்.// என் கணவரும் இப்படித்தான். சிறு வயதில் நிறைய உடைகள் வாங்கிக் கொள்ள முடியாததால் வேலைக்குச் சென்றதும் நிறைய உடைகள் வாங்கிக் கொண்டார். ரிஸ்ட் வாட்சும் அப்படித்தான். ஒவ்வொரு முறை விடுமுறைக்கு இண்டியா வரும்பொழுதும் தன் கையில் கட்டியிருக்கும் வாட்சை உறவினர்கள் யாருக்காவது கொடுத்து விடுவார், ஊருக்குச் சென்றதும் வேறு வாட்ச் வாங்கிக் கொள்வார். அதைப் போல செல் ஃபோனையும் மாற்றிக் கொண்டே இருப்பார். இப்போதுகூட எங்கள் வீட்டில் ஓடாத ரிஸ்ட் வாட்சுகள் நிறைய இருக்கின்றன. ஒரு பையில் போட்டு வைத்திருக்கிறேன். பி.பி. மிஷின், சுகர் டெஸ்ட் கிட் என்று எல்லாமே இரண்டுக்கு மேல். நான் அவரிடம் உங்களுக்கு பொண்டாட்டி மட்டும்தான் ஒன்று என்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதைத் தொட்ட காரணம் பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். ஆனால் நான் நிறைய பணம் ஆகும் உடைகளை வாங்குவதில்லை. (அதாவது பிராண்டுகளில் பணத்தைச் செலவழிப்பதில்லை. உதாரணமா லெகோஸ்தே ஒரிஜினல் டி.ஷர்ட் 4000 ரூபாய்க்கு மேல் ஆகும். ஆனால் நான் ஃபர்ஸ்ட் காப்பி 400-500 ரூபாய்க்கு வாங்குவேன். 150 ரூ பெறுமானமுள்ள காப்பிகளும் உண்டு. எல்லா நிறங்களையும் வாங்கிவிடுவேன்). நானும் எல்லா கிட், மொபைல், என்று எதை எடுத்தாலும் இரண்டிரண்டாக வாங்குவேன். சார்ஜர் முதற்கொண்டு. எதுவும் தேடாமலேயே கிடைத்துவிடவேண்டும், வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது எங்கேயுமோ.

      ஆமாம்.. இரண்டு பெண்டாட்டி இருந்தால், நாங்கள் நினைத்ததெல்லாம் வாங்குவதற்கு பணம் இருக்காதில்லையா?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!