23.7.25

யாருடைய இறப்பை உங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை?

 

நெல்லைத்தமிழன்: 

1. ஒரு மாட்டுப் பால் இல்லாமல் பல்வேறு இடங்களில் வளர்ந்த மாட்டுப்பாலைத்தானே ஆவின், நந்தினி போன்றவை கொடுக்கின்றன. அந்தப் பால் நல்லதா?   

# நோய்க் கிருமிகள் இல்லாதவரை எல்லா மாட்டுப் பாலும் நல்ல பால்தான். 

& ஆண்பால், பெண்பால் & பலவின் பால் ?? 

2.  பிளாக்குகள் படிக்கும் வாசகர்கள் குறைகிறார்களா?  முன்பெல்லாம் நான் ஒரு நாளைக்கு பதினைந்து பிளாக்குகள் படிப்பேன். இப்போ அப்படி எழுதுவதற்கு ஆட்கள் இல்லையா இல்லை படிப்பவர்களுக்கு ஆர்வம் இல்லையா?   

# குறைவாகத்தான் நினைக்கிறேன்.  படிக்க கேட்க நிறைய என்று ஆனபின் அகலம் அதிகமாகி ஆழம் குறைவது இயல்பு.

3.  புதிய போட்டிகளெல்லாம் கேஜிஜி சார் இப்போது பிளாக்கில் அறிமுகப்படுத்துவதில்லையே. என்ன காரணம்?  

& சில போட்டிகள் .. விரைவில் எதிர்பாருங்கள் !! 

4.  இவருடைய இறப்பு என்னால் மறக்கவே முடியவில்லை, அதை ஏற்றுக்கொள்ள மனம் பல நாட்களுக்கு ஒப்பவே இல்லை என்று சொல்லச் சொன்னால் அது யாருடைய மறைவு?    

# ரொம்பப் பெரிய அளவில் ஏதுமில்லை என்றாலும் ஜான் கென்னடி, ஜவஹர்லால் நேரு இருவர் மரணமும் ஓரளவு அதிகத் துயரம் தந்தது.  கல்கி, சுஜாதா ரங்கராஜன் கூட.‌

& மதுரை மணி ஐயர்; மகாராஜபுரம் சந்தானம்.  

5.  அரசியல் தொழிலில் வாரிசை அறிமுகப்படுத்தி அந்த வாரிசினாலேயே நொந்துபோன தலைவர்கள் என்றால் உங்களுக்கு யார் யார் நினைவுக்கு வருகிறார்கள்?

# அரசியலை அகில இந்திய அளவில் அவ்வளவு உன்னிப்பாக கவனிக்காததால் இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் குறித்து சரியான பதில் அளிக்க முடியவில்லை. அருகிலான தமிழக உதாரணங்கள் நாம் அறிந்தவையே.

& இப்போதைக்கு மாம்பழ கட்சி. 

6. முன்பெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அனுஷ்கா, பாவனா செய்திகள் படங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது வந்துவிடும். இப்போதெல்லாம் வருவதில்லையே.. வெளியிடுபவர்களுக்கு வயதாகிறதா இல்லை அனுஷ்கா பாவனாவிற்கா?

# இரண்டும்தான்.‌

& நைசாக தமன்னா பெயரை விட்டு விட்டீர்களே! 

( த : " ச்சே .. நெல்லையே என்னை மறந்துவிட்டார் .. இனி நான் வாழ்ந்து என்ன பயன் ?" )  

7. திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு உகந்த திருபாகம், பிள்ளையாருக்கு மோதகம் அனுமனுக்கு வடை என்றெல்லாம் எப்படி அனுமானிக்கிறார்கள்?  (அப்படியே எந்தத் தெய்வத்துக்கேனும் ஜாங்கிரி பிரசாதம் உண்டான்னும் கேட்டுச் சொல்லுங்க).

# பிரசாதம் ஆரம்ப காலத்தில் எது பக்தியுடன் படைக்கப் பட்டதோ, அது  வழிவழியாகத் தொடர்கிறது என்பது என் ஊகம்.

ஜாங்கிரி வெகு சிலர் மட்டுமே நன்றாகச் செய்ய முடியும் என்பதால் அது அங்கீகரிக்கப்பட்ட பிரசாதமாவது சாத்தியமில்லை.

8. "ஆடதி பொங்கிதே கோட பெட்டிநட்டு , மொகவாடு பொங்கிதே தடிகா கட்டிநட்டு"  என்ற தெலுங்கு பழமொழி பெண்களைச் சிறப்பிக்கிறதா இல்லை அவர்கள் மீதான அவநம்பிக்கையின் வெளிப்பாடா?

# பெண்கள் கோபம் சுவர் எழுப்பியது போல் பிளவு உண்டாக்கும் - ஆண்கள் கோபம் ஈரத்துணி உடுத்துவது போல விரைவில் சரியாகிவிடும் என்று இருக்கும் போலத் தெரிகிறது.

இதை சிறப்பாகவும் எடுத்துக் கொள்ளலாம் குறையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

“அதிகமா ஆசைப்படற ஆம்பிளையும் அதிகமா ஆத்திரப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா  சரித்திரமே கிடையாது” என்று தலைவர் முன்பே சொல்லிட்டார் !

= = = = = = = =

படமும் பதமும் 

நெல்லைத்தமிழன் அனுப்பியவை :


தாமரை இலைத் தண்ணீர் மாதிரி எதிலும் ஒட்டிக்கொள்ளாமல் (அதாவது பற்று வைக்காமல்) நம்மால் வாழ இயலுமா? (கேள்வி மாதிரி இருந்தாலே, புதனுக்கா? என்ற கேள்வி வந்துவிடும். இது படப்பகுதிக்கு)

ஆனாலும் நான் பதில் சொல்லிவிடுகிறேன்! தாமரை இலை & தண்ணீர் மட்டும் அல்ல - நம்ம ஊர்ல 'தாமரையும் - இலை'யும் கூட ஒட்டிக் கொள்வது கடினம் என்று தோன்றுகிறது! 

= = = = = 

என்னால் மறக்க இயலாத படங்களுள் ஒன்று இது. என் அப்பாவிற்குச் செய்யாததை, என் அம்மாவுக்குச் செய்யும் வாய்ப்பை எனக்குக் காலம் கொடுத்தது. 

= = = = =


உங்களுக்கு மிக நெருக்கமாக பைசன்/எருது பார்க்கணும் என்றால் கொடைக்கானலுக்குத்தான் போகணும். அங்கு என் கூடவே நடந்தது ஒரு பைசன். பயமில்லாமல் இருந்தது. என்னா பெருசு அது! 

= = = = = =




மரங்களைப் பாதுகாக்கணும் என்பது உண்மைதான். அதுக்காக, கட்டிடத்தைப் பாதுகாக்கவேண்டாம்னு சொன்னாங்களா?  என்ன அநியாயம் இது? முழுக் கட்டிடத்திலும் (கோயில்) மரத்தின் வேர் பின்னிப் பிணைந்திருக்கிறது  (இடம். ஸ்ரீரங்கபட்டினம் காவிரிப் படித்துறை எதிரே)
= = = = = = = = = = =

KGG பக்கம். 

மழை நாட்களில் நடைப் பயிற்சி செய்வது ஒரு சுகமான அனுபவம். அப்போது கண்ணில் படும் சில காட்சிகள் இங்கே : 










= == = = = = = = =






25 கருத்துகள்:

  1. மழை நாட்களில் நடந்து போவது சுகம்தான், வளாகத்துக்குள் அல்லது தண்ணீர் மண்ணில் பட்டு சகதியாக ஆகாத இடங்களில்.

    நீங்கள் பகிர்ந்திருக்கும் படங்கள் அழகு, ஆனால் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எப்படி நடப்பது? எனக்கு நல்ல தூரலிலும் நடந்துபோவது பிடிக்கும். பையன் ஒரு நாள் ஆசைப்பட்டான் என்று, மழையில் இருவரும் எங்கள் வளாகத்தில் பேசிக்கொண்டே நடந்தோம் (ஒரு வருடம் முன்பு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழைத் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில்
      ஃபோட்டோ எடுத்த பின் வெற்றிகரமாக வாபஸ் !

      நீக்கு
  2. Single origin milk, மிகச் சுத்தமான ஏ2 நெய் (கிலோ 1200 ரூ) என்றெல்லாம் விதவித மார்கெடிங் செய்திகளை, காணொளிகளைக் காணும்போது, நாம் இப்போது சாப்பிடும் பால் நெய்யில் பெரிய பிரச்சனைகள் உண்டோ எனத் தோன்றுவதுண்டு. இதுபோல அமோனியா இல்லாத அழகுசாதனப் பொருட்கள் போன்ற பல விளம்பரங்களைக் காணும்போதும். நேற்று ஒரு காணொளியில், ஒரு நிம்பூஸ் குளிர்பானத்தில் இரண்டு நாளைக்குத் தேவையான சீனியும் (300 மிலி பாட்டிலில் ஆறு டேபிள்ஸ்பூன் ஜீனி, அனேகமாக இல்லை என்று சொல்லும் அளவில் எலுமிச்சைச் சாறு). சிலபல கெமிக்கல்களும் கலந்திருக்கிறார்களாம். அதுபோல பலப்பல வருடங்கள் முன்பு, ஃபான்டா போன்ற பானங்களில் ஐநூறு சதம் இனிப்பு என்பதைப் படித்ததும் அதைக் குடிப்பதை விட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. அடுத்த தலைமுறை, பிளாக்குகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதே பெரிய காரணம் என நினைக்கிறேன். ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள், வயதாவதன் காரணமாக மற்ற பிளாகில் எழதப்படுகிறவற்றைப் படிப்பதும் இல்லை. அதனால் பல எழுத்துகள் பாலைவன ரோஜாக்களாக கவனிப்பாரற்று இருக்கின்றனவோ எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. வாசிக்க, எழுத தினவெடுத்தவர்களுக்கு வயது மூப்பு ஒரு பொருட்டல்ல என்றே என்னளவில் கருதுகிறேன். இந்த 82 வயதில் பிளாக், முக நூல் சகட்டு மேனில்கு என்று வாசிப்பது மட்டுமில்லை, கருத்து சொல்ல என்னைத் தூண்டும் பதிவுகளுக்கு கருத்தளித்துக் கொண்டு தான் இருக்கிறேன் நெல்லை. உங்கள் தகவலுக்காக.

    வழக்கம் போல எபியை தினமும் தவறாமல் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். பின்னூட்டங்களத் தவறாது கவனிப்பேன். இவர்கள் இப்படித் தான் பின்னூட்டமிடுவார்கள் என்று கணிப்பதும் அது தவறாது நடப்பதும் ஒரு பொழுது பொக்காகவே ஆகி விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார். கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. வணக்கம். நன்றி ஜி.

      நீக்கு
    3. வாங்க ஜீவி சார். நலமா? நீங்கள் தொடர்ந்து நிறைய பதிவுகள் படிப்பது மகிழ்ச்சி. ஆனால் விதிவிலக்கோ எனத் தோன்றுகிறது.

      நாம நல்ல காய்கறியா கொண்டுவரட்டும் பிறகு வாங்கலாம், இன்னும் நிறைய வெரைட்டி வரட்டும் பிறகு இந்தக் கடையில் வாங்க ஆரம்பிக்கலாம் எனப் பலரும் நினைத்தால் கடையை விரைவில் மூடிவிடுவார்கள் இல்லையா? ஆர்வம் குறைந்துவிடும்.

      நீக்கு
  5. ​பதிவுகள் பிதற்றல்கள் ஆகாதவரை ஒரு தலைமுறையேனும் பதிவுகளை ஆதரித்து ஊக்கப்படுத்தினர். இதற்கு தமிழ்மணம் போன்ற திரட்டிகள் வழிகாட்டின. தற்போது திரட்டிகளும் இல்லை, அல்லது அரசியல் சார்பு உள்ளவை ஆகி விட்டன. மேலும் முகநூலில் பதிப்பு என்பது மிகவும் வசதியாக, சுலபமாக இருப்பதால் பலரும் முகநூல் பக்கம் சென்று விட்டனர். இது என்னுடைய அவதானிப்பு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. கேள்விகள் கேட்க ஆளில்லை. படங்கள் பரவாயில்லை. கோணங்களை சற்றே மாற்றினால் நிழல் நிஜமாக காணலாம்.

    பல நாட்டுப் பாலையும் குடித்தவர் கேட்கும் கேள்வி கேள்வியா?

    காருக்குள் இருப்பவர் யாருடைய அம்மா? நெல்லை அல்லது kgg. ஓட்டுநர் இருக்கையில் இருக்கிறாரே, ஓட்டத்தெரியுமா?

    பைசன் படம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  7. ஹாஹாஹா கௌ அண்ணா, ஆமாம், நெல்லை தமனாவைச் சொல்லாம நைசா விட்டுட்டார் பாருங்க....அவர் கேள்விய வாசிச்சதுமே நானும் நினைச்சேன்...நீங்களும் பதிலில் சொல்லிட்டீங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நெல்லை உங்க படங்கள் நல்லாருக்கு. அம்மாவையும் வைத்துப் படம் எடுத்தது சூப்பர். நீங்கள் அப்படியே உங்கள் அம்மா ஜாடை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வெளிநாட்டில் இருந்தபோது அப்பாவை அங்கு வரவழைக்க முடியவில்லை. (இதைப்பற்றி ஒரு நாள் எழுதுகிறேன்). அப்பாவின் மறைவுக்குப் பிறகு அம்மாவை 4-5 தடவைகள் அங்கு கூட்டிச்சென்றேன். அம்மாவை பஹ்ரைனில் அழைத்துச்செல்லாத இடமே இல்லை என்னும்படி எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றேன். அப்போ அம்மாவுடன் காரில் புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்துக்கொண்டேன். இது எனக்கு மிகவும் திருப்தி தந்த விஷயம்.

      நீக்கு
  9. கௌ அண்ணா, உங்க படங்களும் சூப்பர். இலைகளை என்னவோ கொடியில் தொங்கவிட்டது போல அழகா இருக்கு. மழைத்துளிகளுடன்...

    ஆமாம் எனக்கும் மழைக்காலத்தில் நடைப்பயிற்சி ரொம்பப் பிடிக்கும். அதுவும் இங்கு நம்ம லே அவுட்டில், குறிப்பாக எங்கள் பகுதியில். மரங்களும் பூங்காக்களும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அகலம் கூடும் போது ஆழம் குறையும் எனும் கருத்து மிகவும் சரியாகப்பட்டது.

    தெலுங்குப் பழமொழியைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. எல்லா மொழி சமூகங்களிலும் இப்படியான பழமொழிகள் ஒன்றுதான் போலும் என்று நினைக்க வைத்தது.

    வலைப்பக்கங்களின் வாசிப்பிற்கு முகநூல் பக்கம் செல்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    நெல்லைத்தமிழனின் படங்கள், கேஜிஜி சாரின் படங்கள் எல்லாம் அருமை.

    நெல்லைத்தமிழன் அவர் அம்மாவை வைத்து எடுப்பதற்கு இறைவன் அந்த வாய்ப்பை நல்கியது சிறப்புதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  11. கேள்விபதில்கள் கண்டோம்.

    வலை பதிவுகளைவிட முக நூல் படிப்பதற்கு இலகு என பலரும் அங்கு தாவி விட்டார்கள்.

    படங்கள், மழைநாட்கள் என அனைத்தும் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  12. //"ஆடதி பொங்கிதே கோட பெட்டிநட்டு , மொகவாடு பொங்கிதே தடிகா கட்டிநட்டு"// - ஆண்கள் பொய் சொன்னால் அது பாயைத் தூக்கிப்பிடித்த மாதிரி. அந்தப் பக்கம் இருப்பது தெரிந்துவிடும். பெண்கள் பொய் சொன்னால் அது சுவர் எழுப்பின மாதிரி. இந்தப் பழமொழியையும் அதன் அர்த்தத்தையும் 'நான் கிருஷ்ண தேவராயன்' என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் ரா.கி குறிப்பிட்டுள்ளார்.

    பெண்கள்தான் இந்தப் பழமொழி சரியா என்று சொல்லணும் (காரணம் பெண்களிடம் ரகசியம் தங்காது என்றும் ஒரு பழமொழி உண்டே)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!