1982 ல் வந்த சின்னஞ்சிறிசுகள் படத்திலிருந்து ஒரு பாடல். "எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல". S P பாலசுப்ரமணியம் குரலில், திரையில் பிரபு நடித்திருக்கும் பாடல். காமகோடீயன் பாடலுக்கு இசை கே வி மகாதேவன்.
S P B ஏதோ அவரே துன்பப்படுவது போல பாடலைப் பாடி இருப்பார்.
எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல - இதில்
எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் புரியல
எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல - இதில்
எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் புரியல
கணவன் வேஷம் போட்டுக்கிட்டேன் கூத்து நடக்கல - உடன்
நடிக்க வந்த மனைவியவள் கதைய மதிக்கல
எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல - இதில்
எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் எந்த புரியல
நூத்துல பத்துதான் காதலில் ஜெயிக்குது
தொண்ணூறு ஜோடிகள் கண்ணீரில் மிதக்குது
நூத்துல.... பத்துதான்.... காதலில்.... ஜெயிக்குது
தொண்ணூறு ஜோடிகள் கண்ணீரில் மிதக்குது
ஏட்டுல இனிச்சுது வீட்டுல கசக்குது
ஏட்டுல இனிச்சுது வீட்டுல கசக்குது
எல்லாமே இறைவனால் சொல்லாம நடக்குது
சொர்க்கத்தில் திருமணம் சொன்னவன் யாருடா
நரகத்தில் வாழ்ந்திடும் நாயகன் நானடா
சொர்க்கத்தில் திருமணம் சொன்னவன் யாருடா அவன்
நரகத்தில்.வாழ்ந்திடும் நாயகன் நானடா
வாழ்ந்தால் இல்லறம் வீழ்ந்தால் போர்க்களம்
வாழ்ந்தால் இல்லறம் வீழ்ந்தால் போர்க்களம்
வாழ்வதும் வீழ்வதும் வந்தவள் கைவசம்
Your Honor. I come to the conclusion Wife is a Knife to cut your Life.
எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல - இதில்
எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் எந்த புரியல
கணவன் வேஷம் போட்டுக்கிட்டேன் கூத்து நடக்கல - உடன்
நடிக்க வந்த மனைவியவள் கதைய மதிக்கல
எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல - இதில்
எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் புரியல
==============================================================================================
இணையத்தில் படித்தது...
பத்மினியின் முத்தம்
"நடிகை பத்மினியின் முதல் படம் ‘மணமகள்’ என்று நினைக்கிறேன். அது யாழ்ப்பாணத்து தியேட்டரில் ஓடத் தொடங்கியபோது நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை மாற்ற முன்னர் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ஆர்வம். நானும் இன்னொரு நண்பனும் இரவு களவாக விடுதி கேட் ஏறிப் பாய்ந்து சென்று இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்தோம். மணமகள் படத்தில் வந்த யௌவன பத்மினியின் அழகும் ஆட்டமும் என்னைப் படுத்தியபாட்டை விவரிக்க முடியாது. என்னுடன் படம் பார்த்த நண்பன்கூட அறியமாட்டான்.
ஓர் இடத்தில் பத்மினி சற்று தலை குனிந்து கூந்தல் வழியாக என்னை மட்டும் பார்த்து நெருங்கிய பற்களை பாதி காட்டி சிரித்தார். தமிழ் பாடத்தில் ’செறி எயிற்று அரிவை’ என்று படித்தது சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. அன்றிலிருந்து நான் அவருக்கு அடிமையாகிவிட்டேன்.
பத்மினி நடித்த படங்கள் எல்லாவற்றையும் ஒன்று தவறாமல் பார்த்தேன். ஒரு காலத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வருவார் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. 2003ம் ஆண்டு பத்மினி ஒரு விழாவுக்காக ரொறொன்ரோ வந்தபோது எங்கள் வீட்டில் 3 நாட்கள் தங்கினார்.
மணமகள் திரைப்படத்தில் நான் பார்த்து மயங்கிய பத்மினிதான். தங்கத்தை கரைத்துப் பூசியதுபோல அதே மேனி. கால்மேல் கால் போட்டு, ஒரு பூனைக்குட்டியை அணைப்பதுபோல மடியிலே கைப்பையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார். உடனேயே ஒரு சங்கதி புலப்பட்டது. அவர் வாழ்நாள் முழுக்க அதிகாரம் செய்து பழக்கப்பட்டவர். புகழ் வெளிச்சத்தில் இருந்து விலக விருப்பம் கொள்ளாதவர். சாதாரண பேச்சும் கட்டளை போலவே இருக்கும். கேள்விகள் எல்லாம் துப்பாக்கி ரவைகள்போல சட்சட்டென்று வந்தன. ’ரொறொன்ரோவில் நண்டு இருக்கிறதா? என்ன நண்டு, ஆற்று நண்டா கடல் நண்டா? றால் இருக்கிறதா? உங்களுக்கு றால் பொரிக்கத் தெரியுமா? என்ன என்ன மீன் இருக்கிறது? கரி மீன் இருக்கிறதா? பால் மீன் இருக்கிறதா? சுறா மீன் இருக்கிறதா?’ என்று எல்லாம் கேட்கத் தொடங்கினார். ’இங்கே புட்டு எப்படியிருக்கும்? வீட்டிலே இடியப்பம் செய்வீர்களா? ஓ, மறந்துவிட்டேன். ரொறொன்ரோவில் நல்ல அப்பம் கிடைக்கும் என்று சொன்னார்களே.’ ஒவ்வொரு கேள்வியும் எங்களை கலங்கடித்தது.
அடுத்து வந்த கேள்வி என் மனைவியை திடுக்கிட வைத்தது.
‘ஆறு மணி மருந்தை எடுத்தேனா?’ என்றார். மனைவி என்னைப் பார்த்தார். நான் அவரைப் பார்த்தேன். இப்பொழுதுதானே வந்து இறங்கியிருக்கிறார். எங்களுக்கு எப்படித் தெரியும்? மடியிலே படுத்துக் கிடந்த கைப்பையை திறந்து இரண்டு கை நிறைய மருந்துகளையும், வைட்டமின் மாத்திரைகளையும் அள்ளி எடுத்தார். எல்லா நிறங்களிலும் எல்லா அளவுகளிலும் அவை இருந்தன. அது தவிர நாளுக்கு ஒருதரம் போடவேண்டிய ஊசியும் இருந்தது. மனைவி ஒரு சொல் பேசாமல், வாழ்நாள் முழுக்க இந்த தொழிலைச் செய்த தாதிபோல, அத்தனை பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
பத்மினியின் ஞாபக சக்தி புகழ் பெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். கண்ணாடியைப் பார்த்து நடிகை மேக்கப் போடும்போது அந்தக் கால வழக்கப்படி வசனகர்த்தா நீண்ட நீண்ட வசனங்களை நின்றபடி சொல்லிக் கொடுப்பார். சிவாஜிக்கு போட்டியாகப் பேச வேண்டிய வசனங்கள் அவை. அத்தனையையும் பத்மினி இயக்குநர் வியக்கும்படி ஒரே டேக்கிலேயே பேசி அசத்திவிடுவார்.
பழைய கதைகள் பேசும்போது பத்மினி இப்படித்தான் ஆரம்பிப்பார். ‘1958ல் எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலவுடன் நான் நடித்து வெளியான வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில்’ அல்லது ‘1967ல் சிவாஜி, கே.ஆர்.விஜயாவுடன் நான் நடித்து திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இருமலர்கள் படத்தில்’ என்று ஒரு படத்தைப் பற்றி சொல்லும்போது அதில் நடித்தவர்கள், அதை இயக்கியவர், அது வெளிவந்த வருடம் போன்ற சகல விவரங்களையும் மறக்காமல் சேர்த்துக்கொள்வது அவர் இயல்பு. அத்தனை வியக்கவைக்கும் ஞாபகசக்தி அவருக்கு.
அப்படிப்பட்ட பத்மினிக்கும் என் மனைவிக்கும் இடையில் தினம் சண்டை மூளும். ’இதைப் போடுங்கள்’ என்று என் மனைவி ஒரு மருந்தை நீட்டுவார். ‘இதை ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேனே’ என்பார் பத்மினி. ’அது வைட்டமின். இதுதான் ரத்த அழுத்த மாத்திரை.’ அப்படியா என்று அதை வாங்கிப் போடுவார். ஒரு பதினைந்து நிமிடம் போயிருக்கும். ‘பாருங்கள், இந்த மாத்திரையை தர மறந்துவிட்டீர்கள்’ என்று குற்றம் சாட்டிவிட்டு ஒன்றை எடுத்து வாயை திறப்பார். என் மனைவி எங்கேயோவிருந்து பாய்ந்து வந்து அதைப் பறித்து ‘இதைத்தான் 15 நிமிடம் முன்பு நீங்கள் சாப்பிட்டீர்கள்’ என்று சொல்வார். பத்மினி வங்கி மெசின் பணம் இல்லையென்று சொன்னதுபோல திடுக்கிட்டுப் பார்ப்பார். ஒரு மாற்றமில்லாமல் தினம் தினம் இது நடந்தது.
ரொறொன்ரோவில் ஓர் இரவு விருந்துக்கு அழைக்கப்பட்டு நாங்கள் புறப்பட்டபோதுதான் பிரச்சினை ஆரம்பமானது. அலங்கார சம்பிரமங்களை பத்மினி ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தார். பொற்சரிகை வைத்த இரண்டு நிறமான பட்டுச் சேலைகளில் எதை உடுப்பது என்று தடுமாறினார். கழுத்து மணியாரத்தை எடுத்து அணிந்தார். நீலக்கல் பதித்த அட்டிகையை கட்டுவதா விடுவதா என்று முடிவெடுக்க முடியவில்லை. அதற்கு இரண்டில் மூன்று பெரும்பான்மை தேவைப்பட்டது. வளையல்கள் மாட்ட வேண்டுமென்று நினைத்ததுதான் விபரீத முடிவு. முன்கையிலிருந்து முழங்கைவரை அவை நிரப்பப்பட்டன. எண்ணிப் பார்த்தபோது ஒரு கையில் 16ம் மறு கையில் 17ம் ஏறிவிட்டது. எத்தனை தரம் எண்ணினாலும் அதே தானம்தான் வந்தது. விருந்திலே யாராவது எண்ணிப் பார்த்து விடக்கூடும் என்ற அச்சத்தில் பத்மினி அமைதி இழந்தார்.
விருந்துக்கு புறப்பட்டபோது இரவு 10 மணிக்கு திரும்பிவிடவேண்டும். ரசிகர்களின் அனாவசிய தொந்திரவு அவருக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டார். ஆனால் அங்கே நடந்தது வேறு. விருந்துக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் பத்மினியுடன் படம் எடுக்க ஆசைப் பட்டார்கள். எல்லோருக்கும் கையெழுத்து வேண்டும். எல்லோரிடமும் கேள்விகள் இருந்தன. முக்கியமான கேள்வி ’நீங்கள் ஏன் சிவாஜியை மணமுடிக்கவில்லை?’ ஆயிரம் கி.மீட்டர் பயணம்செய்து வந்தது இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கவா? எனினும் பத்மினி மலர்ந்துபோய், சௌந்தர்யம் அதிகமாகி காட்சியளித்தார். ஒரு சின்னப் பெண் சலுங் சலுங் என்று நடந்துவந்து அவர் காலைத் தொட்டபோது அப்படியே அவரை கட்டிப் பிடித்துக்கொண்டார். அவர் புகழின் உச்சியில் இருந்த ஒரு தருணத்தை அவர் மறுபடியும் வாழ்ந்து கொண்டிருந்தார். வீடு திரும்ப இரவு ஒரு மணியாகிவிட்டது. ஆனால் அடுத்தநாள் நடந்த சம்பவம்தான் அத்தனையையும் கெடுத்துவிட்டது.
பத்மினி கேட்ட சகல உணவு வகையும் அகப்படும் ஒரு உணவகம் ரொறொன்ரோவில் இருந்தது. ஓர் ஈழத்துக்காரர்தான் அதை நடத்தினார். பெயர் Hopper Hut. பத்மினியை அங்கே அழைத்துப் போனோம். பத்மினி மெனு அட்டையைப் பார்த்து தனக்கு வேண்டிய அத்தனை உணவு வகைகளுக்கும் ஆணை கொடுத்தார். அப்பம், நண்டு, மீன், றால், கோழிப் பிரியாணி. அப்பத்தின் நடுவில் மீனை வைத்து மடித்து, பின்னர் றாலை வைத்து இன்னொருதரம் மடித்து ருசித்து ருசித்து சாப்பிட்டார். பரிசாரகன் 20 வயதுப் பையன். அவன் பத்மினியை கவனித்ததாகவே தெரியவில்லை. பத்மினி அவன் முகத்தை பார்த்தார், பின்னர் அப்பத்தை பார்த்தார். மறுபடியும் பையனின் முகத்தை பார்த்தார். அவன் கவனத்தை என்ன செய்தும் திருப்ப முடியவில்லை.
இறுதியில் ஆற்றாமல் ’நான் யாரென்று தெரிகிறதா?’ என்றார். மேசை துடைத்த பையன் அரைக் கணம் அந்த வேலையை நிறுத்திவிட்டு ’தெரியாது’ என்றான். அந்த மேசையை சுற்றிய இலையானின் மேல் அவனுக்கிருந்த கவனம்கூட பத்மினியின் மேல் இல்லை. பில் கொடுத்தபோது மறுபடியும் ’நான் யார் தெரியுமா?’ என்றார். வாயை திறக்காமல் தலையை கிழக்கு மேற்காக ஆட்டினான். இந்த வேதனையை நீடிக்கவிடாமல் நான் ‘இவர்தான் நடிகை பத்மினி’ என்றேன். அவன் ‘எந்த பத்மினி?’ என்றான். பத்மினியின் அத்தனை நடிப்பும், அத்தனை அழகும், அத்தனை புகழும் அந்த ஒரு வார்த்தையில் அடிபட்டுப் போயின.
பத்மினியை விமான நிலையத்தில் ஏற்றிவிடப் போனபோது அவரை மறுபடியும் பார்க்கக்கூடும் என நான் எண்ணவில்லை. அதுவே கடைசி என்று நினைத்தேன். சில மாதங்கள் கழித்து நியூயோர்க்கில் நடைபெற்ற ஒரு விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. அங்கே அதிசயமாக பத்மினியை கண்டு அவருடன் பேசவேண்டும் என நினைத்து அணுகிய போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டது. விழா ஆரம்பமாகி பேச்சுக்கள் எல்லாம் ஒருவழியாக முடிந்த பின்னர் சுதா ரகுநாதன் மேடையில் அமர்ந்து பாடினார். ஜி.ராமநாதன் இசையமைத்த ‘பாற்கடல் அலைமேலே, பாம்பணையின் மீதே’ என்று தொடங்கும் ராகமாலிகை.
திடீரென்று சபையில் ஒரு சலசலப்பு. பார்த்தால் தான் உட்கார்ந்திருந்த இடத்தில் எழுந்து நின்று அந்தப் பாடலுக்கு பத்மினி அபிநயம் பிடிக்கத் தொடங்கிவிட்டார். எல்லோரும் கைதட்டி உற்சாகம் கொடுக்க அவர் மேடைக்குச் சென்று அங்கே நடனத்தை தொடர்ந்தார். உலகம் காணவேண்டிய அந்த அருமையான காட்சியை விழாவுக்கு வருகை தந்திருந்த 200 பேர் மட்டுமே அன்று கண்டு களித்தனர். இசை அரசியின் பாடலுக்கு நாட்டிய அரசியின் நடனம். பத்மினிக்கு அப்போது வயது 72. அதுவே பத்மினி மேடையில் ஆடிய கடைசி நடனம் என்று நினைக்கிறேன்.
விழா முடிந்த பின்னர் பத்மினியை அமைதியாக சந்தித்தேன். நலம்தானா? என்றார். நேரில் பார்க்கும்போதும் டெலிபோனில் அழைக்கும்போதும் அப்படித்தான் பேச ஆரம்பிப்பார். மீதி உரையாடல் முழுக்க ஆங்கிலத்திலேதான். என் மனைவி, பிள்ளைகளைப் பற்றி உண்மையான கரிசனத்துடன் விசாரித்தார். அவருடைய பேரன் பேஸ்போல் விளையாடுவது பற்றிக் கேட்டபோது உற்சாகமாகி அவர் முகத்தில் புது ரத்தம் பாய்ந்து அழகாகத் தெரிந்தார். ’என்ன இன்று இவ்வளவு மகிழ்ச்சி?’ என்றேன்.
’பலநாட்களுக்கு பிறகு பழைய நண்பர்களை முகம் முகமாகப் பார்க்கிறேன்’ என்றுவிட்டு தலையை சற்று குனிந்தார். தாயின் கையை பறித்துக்கொண்டு ஓடும் குழந்தைபோல ஒரு முடிக்கற்றை நெற்றியிலே விழுந்தது. அதை அகற்றாமல் என்னைப் பார்த்து சிரித்தார். சட்டென்று மாணவப் பருவத்தில் எனை மயக்கிய மணமகள் படத்து சிரிப்பு ஞாபகத்துக்கு வந்தது. அவர் திரும்பவும் இந்தியாவுக்கு போய்விடப் போவதாகச் சொன்னார். நான் அதை ஒன்றும் பெரிதாக எடுக்கவில்லை. விடை பெறும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எங்கேயிருந்தாலும் தொடர்பில் இருங்கள் என்று சொன்னேன். சரியென்றார்.
2006ம் ஆண்டு, 25ம் தேதி செப்டம்பர் மாதம் திங்கள் கிழமை இரவு நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது செய்தி வந்தது. சென்னையில் ஒரு விழாவுக்கு பத்மினி சக்கர நாற்காலியில் போயிருக்கிறார். இரண்டு வருடத்துக்கு முன்னர் மேடையில் அவர் நடனம் ஆடியது நினைவுக்கு வந்தது. இந்த இடைக்காலத்தில் அவர் சக்கர நாற்காலி ஏறிவிட்டார். விழாவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த, பின்னர் உயிர் பிரிந்துபோனது என்று சொன்னார்கள். நான் உண்பதை நிறுத்திவிட்டு கடைசியாக நியூயோர்க் விழாவில் அவரிடம் விடைபெற்றதை நினைத்துக் கொண்டேன். சற்று குனிந்து நெற்றியில் வழிந்த கூந்தல் வழியாக சிரித்தபடி மேல் கண்ணால் என்னை பார்க்கிறார். நாட்டியப் பேரொளி.
- இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் -
=================================================================================
1993 வருடம் வெளியான படம் 'மாமியார் வீடு'. விஜயகாந்தின் டூப் போல இருந்த சரவணன் ஹீரோ. சித்தாரா கதாநாயகி.
வாலியின் பாடல்களுக்கு இசை இளையராஜா.
இப்போது படங்களில் சிறு சிறு வேதங்கள், குணசித்ர வேடங்களில் நடிக்கும் சரவணன் ஒரு சீரிஸிலும் நடித்திருக்கிறார் என்பது நீங்கள் அறிந்ததே! அவர் இரண்டு நாட்களுக்குமுன் வேறொரு செய்தியும் சொல்லியிருந்தார். அவருக்குதான் இளைய தளபதி பட்டம் கொடுத்திருந்தார்களாம். விஜய்க்கு அந்த பட்டம் கொடுக்கப்பட்ட பிறகு அவர் தந்தைக்கு தொலைபேசி இருக்கிறார். அதனால் என்ன. நீ நடிக்கும் படங்கள் வெளிவந்து வெற்றியும் பெறட்டும்.. அப்புறம் பார்க்கலாம்" என்றாராம். இவர் காணாமல் போய்விட்டார்!
சென்ற பாடலுக்கு எதிர் இந்தப் பாடல்! S P பாலசுப்ரமணியமும், S. ஜானகியும் இணைந்து இசைத்திருக்கும் பாடல். இளசு இசையில் ஒரு அருமையான மெலடி.
SPB : நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதம்மா உறவு
இது தேயாத வெண்ணிலவு
அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை
SPB : நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
SPB : வான் பார்த்ததே நீ பார்த்திட
சிப்பி ஒன்று வண்ணச் சிப்பி ஒன்று
S. ஜானகி : நீர் வார்த்ததும் உண்டானதே
முத்து ஒன்று சின்ன முத்து ஒன்று
SPB : ஆறேழு மாதங்கள் போனால்
ஆராரோ பாட்டிங்கு கேட்கும்
S. ஜானகி : ஆவாரம் பூப் போன்ற கண்ணால்
அப்பாவை என் பிள்ளை பார்க்கும்
SPB : நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்
S. ஜானகி : பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம்
SPB : ஒன்றிரண்டு வேண்டும் என்று
உன்னை நான் கேட்டேன்
S. ஜானகி : சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு
ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….
SPB : பொன் மானையும் செம்மீனையும்
கண்ணில் கண்டேன்
உந்தன் கண்ணில் கண்டேன்
S. ஜானகி : பாலாற்றையும் தேனாற்றையும்
உன்னில் கண்டேன்
கண்ணே உன்னில் கண்டேன்
SPB : உன்னோடு நான் வாழும் வீடு
ஆனந்தப் பூப் பூக்கும் காடு
S. ஜானகி : அன்றில்கள் ஒன்றான கூடு
ஆகாது வேறேதும் ஈடு
SPB : தாரம் வந்தாள்
கொஞ்சும் தென்றல் என்று
S. ஜானகி : பிள்ளை வந்தான்
வண்ண முல்லை என்று
SPB : பெண்ணரசி பொன்னரசி
உன்னைப் போல் ஏது
S. ஜானகி : சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
SPB : உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
S. ஜானகி : விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு
SPB : அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை
S. ஜானகி : உந்தன் சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
இரண்டு பாடல்களையும் கேட்ட நினைவு இல்லை. பிறகு காணொளியில் கேட்கணும்.
பதிலளிநீக்குபத்மினி பற்றிய பகுதியைப் படிக்க ஆரம்பித்தபோதே முத்துலிங்கம் அவர்கள் எழுதியிருக்கிறார் என்று புரிந்துவிட்டது. நல்ல பகிர்வு.
வாங்க நெல்லை... இரண்டு பாடல்களையும் கேட்டு சொல்லுங்க...
நீக்குஇந்த பத்மினி சரிதம் என் டிராஃப்ட்டில் நீண்ட நாட்களாய் இருந்தது.
இரண்டு பாடலுமே பரவாயில்லை ரகம். முதல் பாடல் நெகடிவ் எண்ணங்கள். இரண்டாவது பாடல் நேர்மறை சிந்தனை. அந்தவகையில் இரண்டாவது பாடல் பிடித்திருந்தது.
நீக்குநன்றி நெல்லை.
நீக்குபாடல்களில் நான் நெகட்டிவ் பாசிட்டிவ் பார்க்கவில்லை. பாடலின் இனிமை, Bhaaவம் மட்டுமே ரசித்தேன்.
முதல் பாடல் இப்படி ஒரு மனைவி ஏன் வாய்த்தாள், என்றும் இரண்டாவது பாடல் இப்படி ஒரு மனைவி வாய்த்திருக்கிறாளே என்ற பூரிப்பும்..
இரண்டு எதிரெதிர் நிலைகள்.
பதிலளிநீக்குஅ முத்துலிங்கம் சிறந்த எழுத்தாளர் அல்லவா? பத்மினி சரிதத்தை அவருடைய மறுபக்கத்தையும் இணைத்து சுவாரசியமாக எழுதியுள்ளார். நன்றாக உள்ளது.
Jayakumar
வாங்க JKC ஸார்... ஆமாம். புகழ் வெளிச்சத்தில் இருந்தவர்கள் நிழலுக்கு போகும்போது ஏற்படும் தடுமாற்றம்... இவருக்கு இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குஎளிமையாய் இருந்த வெள்ளிப் பதிவுகளுக்கு என்ன ஆயிற்று?...
பதிலளிநீக்குபத்தி பிரிக்கப்படாத பெருங்கட்டுரைகளை என்னால் படிக்க இயலவில்லை...
நலம் வாழ்க..
சுவையான கட்டுரை அது. வெள்ளிகளுக்கு எக்ஸ்டரா ஆர்வம் ஊட்ட முயல்கிறேன். பத்தி பிரிக்கிறேன். அங்கு எப்படி இருந்ததோ அபப்டியே வெளியிட்டேன்.
நீக்குமுதல் பாடல் மெட்டு வழக்கமான மெட்டுதான். இசையும். ஆனால் தலைவர் என்னவோ அவருக்கே அந்த சம்பவம் நடந்தது போன்று ஃபீல் பண்ணிப் பாடியிருப்பதுதான் அசத்தல். அதுவும் என்னவோ அவரே அங்கிருந்து சீனில் பாடியது போன்று இருக்கிறது. பிரபு நடித்தாலும். பாடலை நிலாவின் குரலில் அந்த கிமிக்ஸில் ரசித்தேன், ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
ஆமாம். சில்லி மேட்டருக்கு பாட்டு என்றாலும் அதையும் உயிருள்ளதாக்கி இருக்கிறார் SPB.
நீக்குபத்மினி பற்றி வாசித்த போது, அட அழகான எழுத்து நடை, ஒரு வேளை ஈழ எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களாக இருக்குமோன்னு ரசித்து வாசிச்சப்ப கடைசில அவரேதான். சிறுகதை போல அவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்.
பதிலளிநீக்குஅவர் விவரித்திருக்கும் சம்பவங்களிலிருந்து தெரிந்தது, பத்மினிக்குச் சில உளவியல் பிரச்சனைகள் அல்லது ஒரு சில விஷயங்களில் மறதி இருந்திருக்கிறது என்று. பிடித்த விஷயங்களில், மகிழ்ச்சி தரும் விஷயங்களில் நல்ல நினைவுத்திறன். ஆனால் உடல் நலக்குறைவு நிறைய மருந்துகள் மாத்திரைகள்...அதில் மறதி.....உடல்நலக்குறைவுக்கிடையிலும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடில்லாமல் இதெல்லாமே காட்டிவிடும். ஒரு காலத்தில் புகழின் உச்சியில், ரசிகர்களின் மனதில் குடியிருந்துவிட்டு, அதன் பின் தன் நிலை, அந்த உணவகத்தில் வேலை செய்யும் பையனின் பதில்...
கீதா
அல்சைமர் போல இருந்திருக்கலாம். நம் பத்திரிகைகள் சொல்லாத விஷயம்.
நீக்குவிஜயகாந்தின் டூப் போல இருந்த சரவணன் ஹீரோ.//
பதிலளிநீக்குஹையோ இதை நேற்றே சொல்ல நினைத்து விட்டுப் போயிடுச்சு ஸ்ரீராம். நீங்க பகிர்ந்திருந்த நேற்றைய படத்தில் கூட டக்குனு பார்க்க விஜயகாந்து போலவே இருந்தார்.
//நீ நடிக்கும் படங்கள் வெளிவந்து வெற்றியும் பெறட்டும்.. அப்புறம் பார்க்கலாம்" என்றாராம்//
என்ன ஒரு பக்குவப்பட்ட பதில்!!!!!!!!!!!! விஜய் அப்பாவின் பதில். இதின் பின்னால் எப்படியான ஒரு அசிங்கம் மறைந்து நிற்கிறது!
கீதா
//..இதின் பின்னால் எப்படியான ஒரு அசிங்கம் மறைந்து நிற்கிறது! //
நீக்கு..
ஆம் அடுத்தவர் பெருமையைத் திருடும் பழக்கம்.
இரண்டாவது பாடல், நீங்க சொன்னாப்ல முதல் பாடலுக்கு எதிரான அழகான வரிகள் பாடல்.
பதிலளிநீக்குநல்ல மெலடி. மெட்டு வேறு ஏதோ ஒரு பாடலை நினைவுபடுத்துகிறது. தொடக்கம் கேட்ட மெட்டு போல் இருந்தாலும் அப்புறம் வேறாகிவிடுகிறது.
இரு பாடல்களுமே இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம்.
கீதா
நல்லது. இது மாதிரி இசையை ரசிக்கும் மனம்தான் வரம். இந்தப் பாடலில் பல்லவி அழகாய் இருக்கிறது என்றால் சரணங்கள் அதைவிட!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் பகிர்வு அருமை. இரண்டுமே கேட்டதாக நினைவில்லை. பிறகு கேட்கிறேன். நடிகை பத்மினி பற்றிய தகவல்களும் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
இங்கு எங்கள் பேத்தி (மகள் வயிற்று பேத்திக்கு) உடல்நல குறைவு அதனால் இரு தினங்களாக பதிவுலகிற்கு வர இயலவில்லை. செவ்வாயன்று மாலை எப்போதும் போல் கீழே சென்று குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடிய போது, எப்படியோ கீழே விழுந்து விட்டாள். அவ்வப்போது இப்படித்தான் கை, கால்களில் காயத்தோடு எங்கள் பேரன், பேத்திகள் வீட்டுக்கு அழுது கொண்டே வருவார்கள். ஆனால், இந்த தடவை விழுந்ததில், இடது மணிக்கட்டில் எலும்பு முறிவு வந்து விட்டது. மூன்று நாட்களாக ஆஸ்பத்திரி வாசம். கைக்கட்டுடன் இன்றுதான் வீட்டிற்கு வந்துள்ளோம். இரண்டு நாட்களாக இரவு உறக்கமும் இல்லை. மனதே சரியில்லை. ஏன் இந்த வேதனை என இறைவனிடம் பிரார்த்தித்தபடி உள்ளேன். இன்னும் ஒரு மாதத்தில் சரியாகி விடுமென மருத்துவர் கூறியுள்ளார். பாவம்..! அது வரை அவளுக்கு வலிகளை தாங்கும் சக்தியை இறைவன் அருள வேண்டும். அதனால்தான் என்னாலும் இயல்பாக பதிவுகளுக்கு வர இயலவில்லை. உங்களிடமெல்லாம் கூறினால் மனதுக்கு கொஞ்சம் நன்றாக இருக்குமென தோன்றியது. அவளுக்கு நல்லபடியாக சீக்கிரம் குணமாக வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பேத்தியை கவனியுங்கள் அக்கா.. அவள் வலி குறைய, சரியாக நானும் பிரார்த்திக்கிறேன். தலைக்கு விபண்டஹ்து தலைப்பாகையோடு போயிற்று என்பார்கள். அதுபோல கடவுள் ஏதோ பெரிய ஆபத்தைத் தவிர்த்து சிறிய ஆபத்தாய் கொடுத்திருக்கிறார் என்று தேற்றிக்கொள்ளுங்கள்.
நீக்குவிரைவில் பேத்திக்கு எலும்பு முறிவு சரியாகப் ப்ரார்த்தனைகள். இந்தச் சின்னப் பசங்களே இப்படித்தான். கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் பெரியவங்களுக்கு மனக்கஷ்டத்தை உண்டாக்கிவிடுவோமே எனத் தெரிவதில்லை. நாமும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
நீக்குகமலாக்கா, சின்னக் குழந்தை வளரும் குழந்தை. சரியாகிவிடும் விரைவில். கவலைப்படாதீங்க. விளையாடும் வயது. விரைவில் சரியாகிவிடும், கமலாக்கா. குழந்தையை கவனிச்சுக்கோங்க.
நீக்குஇந்தச் சமயங்களில் வருத்தம் வந்தாலும், வருத்தத்தை விட, ஏன் வந்தது இப்படி என்று நினைப்பதைவிட, குழந்தையின் மணிக்கட்டு விரைவில் குணமாகி விடுவாள், என்று அவளிடம் சொல்லிக் கொண்டே இருங்கள், அவள் வலிக்கு மனோபலத்தைக் கொடுங்கள். அதுதான் மிக முக்கியம்.
ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டே இருங்கள். அவளது மனோபலம் அவளை சந்தோஷமான மனநிலையில் வைத்து குணமாக்கிவிடும். மனோபலம் சக்திதான் மிக முக்கியம். நீங்களும் அந்த தைரியத்தைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். பெண் குழந்தைகள் மிகவும் தைரியத்துடன் இருக்க வேண்டும்.
கீதா
ஏன் இந்த வேதனை என இறைவனிடம் பிரார்த்தித்தபடி உள்ளேன்//
நீக்குஅக்கா, இதை உங்கள் முகத்திலோ, செய்கைகளிலோ காட்டிக்காதீங்க. குழந்தையின் முன். நீங்கள் காட்டிக்க மாட்டீங்க. இருந்தாலும் குழந்தை மனநல கோணத்தில் இதைச் சொல்கிறேன்.
கீதா
கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் பெரியவங்களுக்கு மனக்கஷ்டத்தை உண்டாக்கிவிடுவோமே எனத் தெரிவதில்லை.//
நீக்குநெல்லை, அது குழந்தை. வளர்ந்து வரும் குழந்தை. அந்த வயதில் ஆர்வத்தில் விளையாடத்தான் செய்யும்.
வளர்ந்த பெரியவர்களான நமக்கே இப்பக்குவம் இல்லாத போது!!!!!!! நமக்கு இருக்கும் உடல் பிரச்சனைகளில், நம் உடம்பை எங்க கவனிச்சுக்கறோம்!!!!!!! உணவிலிருந்து எல்லாத்திலுமே.
கீதா
குழந்தைகள் அடிபடுவது மனதுக்கு கஷ்டமே.கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் நலமாகட்டும்.
நீக்குஅண்மையில் எனது பேரனும் வேறு பிள்ளைகளுடன் விளையாடியபோது தள்ளுப்பட்டு விழுந்து பின் தலையில் அடிபட்டு தலையில் தையல்கள் போடப்பட்டது பத்து நாட்களுக்கு மேல்தான் அதை கழட்டினோம்.
வணக்கம் எனதன்பான சகோதர சகோதரிகளே
நீக்குஉங்கள் அனைவரது ஆறுதலான பதில்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி. உங்களது அன்பான பிரார்த்தனைகள் கண்டிப்பாக பலிக்கும் என்ற நம்பிக்கையிலும், என் மனதின் வேதனைகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொண்டால் கொஞ்சம் எனக்கும் மன ஆறுதலாக இருக்குமென்பதாலும் உங்கள் மனதிற்கும் வேதனைகளை தந்து விட்டேன்.
இந்தப் பேத்திக்கு 9 வயதுதான் ஆகிறது. ஆனால் அதற்கேற்ற வளர்ச்சி இல்லாமல் ஒல்லியாக இருப்பாள். வேளைக்கு சரியாக சாப்பிட மாட்டாள். அதனால் வேறு அவளுக்கு இப்படி என ஆகி விட்டதில் மிகவும் கவலையாகிவிட்டது. சகோதரி கீதா ரெங்கன் சொல்வது போல், விளையாடும் பருவத்தில் இதெல்லாம் சகஜமாக வருவதுதான். இருப்பினும் மனது கேட்கவில்லை. சகோதரி மாதேவி அவர்கள் கூறியது போல எங்கள் மகன் வயிற்றுப் பேரனும் நான்கு வயதில் முன்நெற்றியில் அடி வாங்கி தையல்கள் போட்டு உடல் நிலை தேறி குணமானவன்தான். இந்தப் பேத்தியும், நான் வருடங்களுக்கு முன் வீட்டிலேயே கட்டிலில் இருந்து கீழே விழுந்து அடி வாங்கி கீழ் உதட்டில் உட்பக்கம் தையல் போட்டு சிரமப்பட்டு குணமானாள். இப்போது இப்படி..!அனைவரும் சொல்வது போல குழந்தைகளுக்கு ஏதாவது வந்தால் மனது சட்டென விசாரப்பட்டுப் போகிறது.
உங்கள் அனைவரது அன்பான வார்த்தைகளை படித்த பின் எனக்கும் சற்று ஆறுதலாக உள்ளது. சகோதரி கீதாரெங்கனின் ஆலோசனைகளை ஏற்கிறேன். அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பேத்திக்கு அடிபட்டது அறிந்து வருத்தம் ஏற்பட்டது.
நீக்குபேத்தி விரைவில் நலபெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
சின்ன வயது என்பதால் விரைவில் எலும்பு சரியாகி விடும்.
என் பேரனுக்கும் சிறு வயதில் சைக்கிள் ஓட்டி கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஆகி இருக்கிறது.
சின்ன குழந்தைகளுக்கு அடிபடுவது நமக்கு மனதுக்கு கஷ்டமாக இருக்கும். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கை எங்கும் இடித்து கொள்ளாமல்.
அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நடிகையான பதிமினியுடனான் தன் அனுபவங்களை, முத்துலிங்கம் அவர்கள் மிகச் சுவைபட சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்.
பதிலளிநீக்குபகிர்ந்திருக்கும் இரண்டு பாடல்களுமே கேட்ட நினைவில்லை. படங்களும் தெரியவில்லை. பாடல்கள் நன்றாக இருக்கின்றன. முதலாவது பாடலில் வருத்தத்தில் தூற்றியும் இரண்டாவது பாடலில் போற்றிப் பாடிய வரிகளுடன் பாடல்கள்.
வித்தியாசமாகத் தெரிந்த விஷயம் சரவணன் இளையதளபதியின் பட்டத்திற்காக விஜயின் அப்பாவிடம் பேசியதுதான்.
விஜயின் அப்பா வெல் ப்ளான்ட் ஆக விஜயை முன்னுக்குக் கொண்டு வந்தவர். விஜயை சினிமா உலகிற்குக் கொண்டுவந்தவர். அப்படி சட்டென்று பட்டத்தை விட்டுக் கொடுத்துவிடுவாரா என்ன?
அதற்கு விஜயின் அப்பா சொன்ன பதில்தான் அவர் இயக்குநரும் கூட அல்லவா, அது சிரிப்பு வந்துவிட்டது.
துளசிதரன்
ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு
பதிலளிநீக்கு///இந்த தடவை விழுந்ததில், இடது மணிக்கட்டில் எலும்பு முறிவு வந்து விட்டது///
தைரியமாக இருக்கவும்...
வராஹி துணை இருப்பாள்
வணக்கம் சகோதரரே
நீக்குஉங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் அன்பான நன்றி சகோதரரே.
வாராஹி துணையிருப்பாள் என நீங்கள் சொன்னது மனதிற்கு தெம்பாக உள்ளது. குழந்தை ஆயுள், ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். அம்மன் அவளை நல்லபடியாக சீக்கிரம் குணப்படுத்த ட்டும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பெரியயவர்களாலேயே வலி வேதனைகளைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை...
பதிலளிநீக்குதெய்வம் தான் உற்ற துணை
வணக்கம் சகோதரரே
நீக்குஆம்.. தெய்வந்தான் நமக்கு எப்போதுமே உற்ற துணை. நம்மாலேயே வலிகளை சில சமயம் தாங்க முடிவதில்லை. ஆனால், "பிள்ளை நோய் கள்ளமறியாது" என்பது போல அவளுக்கு இறைவன் தாங்கும் சக்தியை தருகிறார். நன்றி இறைவனுக்கும், இறைவனைப் போல ஆறுதலாக நல் வார்த்தைகள் சொன்ன உங்கள் அனைவருக்கும்..🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முதல்பாடல் இப்பொழுதுதான் கேட்டேன். மற்றைய பாடல் ஏற்கனவே கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குபத்மினியின் தகவலும் இப்பொழூதுதான் கண்டேன். நீங்கள் கூறியதுபோல சில பிரபலங்களின் பிற்காலம் இப்படி ஆகி விடுகிறது.
முதல் பாடல் கேட்ட நினைவே இல்லை, அடுத்த பாடல் கேட்டு இருக்கிறேன். போன பதிவில் சரவணன் நடிப்பு பற்றி வந்தது. இந்த பதிவில் அவர் பாடல். பாடல் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபத்மினி பகிர்வு இப்போது தான் படிக்கிறேன்.
அவர் சர்க்கரை நோயாளி என்று ஒரு பத்திரிக்கையில் படித்து இருக்கிறேன். விழாவில் கலந்து கொண்டபோது மயக்கம் வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர்துறந்தார் என்று படித்து இருக்கிறேன்.