31.7.25

வெங்காயத்தை வேரறுப்போம்

ஸ்பெஷல் OPS என்று ஒரு சீரிஸ் ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்த்தேன்.

பார்க்க சுவாரஸ்யமாக படங்கள் எதுவும் இல்லாததாலும், நிறைய த்ரில், சஸ்பென்ஸ், நீதிமன்ற வழக்காடல்கள் பார்த்து விட்டதாலும், OTT யில் குபேரா வந்து விட்டதையும் மறந்து இதைத் திறந்தேன்.

சில தொடர்களை நன்றாயில்லா விட்டால் உடனே கைகழுவி விடுவேன். அப்படி கைகழுவிய ஒரு தொடர் 'ராவணா நாயுடு'.  இரண்டு மூன்று எபிசோடுகள் அதைப் பார்த்த பாவத்துக்கு டிவியையும், ஹாலையும் டெட்டால் போட்டு கழுவ வேண்டி இருந்தது.
வெங்கடேஷ் டகுபதி, ராணா டகுபதி என்று அப்பா மகன் இருவரும் அப்பா மகனாகவே நடிக்கிறார்கள். தமிழில்தான் அப்படி மொழிபெயர்ப்பா, தெலுங்கிலேயே அவ்வளவு ஆபாசமா தெரியவில்லை. கர்மம்.
இந்த ஸ்பெஷல் OPS சீரிஸ் திறந்ததும் பார்த்தால் 2020 லேயே முதல் சீஸன் வந்திருந்தது. 2001 பார்லிமென்ட் அட்டாக், மும்பை குண்டுவெடிப்பு ஆகியன சம்பந்தப் பட்ட ரகசிய புலன் விசாரணை.
இந்த ஆபரேஷன்களில் முக்கியமானவரான ஹிம்மத்சிங் இடம் ஆடிட் செய்ய இருவர் வருகிறார்கள். அவர் மிசலனியஸ் என்றே தலைப்பிட்டு லட்சங்களிலும், கோடிகளிலும் கணக்கு காட்டி இருப்பதற்கு விளக்கங்கள் கேட்பதில் தொடங்குகிறது.

முதலில் பல கேள்விகளுக்கு "அதை நான் சொல்லக்கூடாது..  இதை நான் சொல்ல உரிமையில்லை, அதை சொன்னால் பாதுகாப்பு இருக்காது" என்றெல்லாம் சொல்லி வருகிறார்.  கேள்வி கேட்பவர்கள் பொறுமை இழக்கிறார்கள்.  மறுநாள் முதல் ஒவ்வொன்றாக பேசத் தொடங்குகிறார்.  சுவாரஸ்யமான காட்சிகள் விரிகின்றன.  இது போன்ற தொடர்களில் இப்போது நாம் பார்க்கும் பல க்ளீஷே காட்சிகள் இதிலும் உண்டு.  நினைத்த நேரத்தில் உளவாளிகள் ஏதன்ஸ், ஜியார்ஜியா, அபுதாபி, துபாய் என்று பறக்கிறார்கள். டுமீல் டுமீல் என்று சுட்டுக் தள்ளுகிறார்கள். கோடிகளில் பணம் செலவழிக்கிறார்கள். பிரதமர் ஹிம்மத்தை நேரில் அழைத்து விசாரிக்கிறார். அவர் சார்ந்து நிறைய கேள்விகள் வருகின்றன. நடுவில் குடும்பப் பிரச்னை வேறு..

வழக்கம்போல கொஞ்ச நேரம் பார்த்து பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று தொடங்கினேன்.  நிறுத்த முடியாமல் பார்த்து முடித்தேன்.
ஹிம்மத்தாக நடித்திருக்கும் கே கே மேனன் அருமையாக செய்திருக்கிறார்.   உயர் அதிகாரியாக இருந்தாலும், ஏன், பிரதமராகவே இருந்தாலும், காதலியாக இருந்தாலும் அவருக்கு உறவு, நட்பைவிட நாட்டுப்பற்றுதான் முக்கியம்.  இவர் கேள்விகளில் நடவடிக்கைகளில் பிரதமர் முதலில் முகம் சுருங்கினாலும் ரிசல்ட் பார்த்து பின்னர் பாராட்டுகிறார்.  நம்மூர் பாடகர் மனோ போல இருக்கும் வினய் பதக் SI அப்பாஸாக வந்து ரசிக்க வைக்கிறார்.  ஹிம்மத்துடன் அவர் கொண்டிருக்கும் பக்தி கலந்த, பணிவு கலந்த நட்பு பார்க்க நன்றாக இருக்கிறது.

இப்போதுதான் கண்ணில் பட்டதால், முதல் சீசனை முதலில் பார்த்து ரசித்தேன். அதில் 8 எபிசோடுகள். கடைசியில் ஒரு எதிர்பாராத திருப்பம்.  ஒரு அமர்வில் 8 எபிசோடுகளையும் பார்த்தேன்.  அந்த அளவு சுவாரஸ்யம்.
இரண்டாவது சீசனையும் பார்த்து முடித்து விட்டேன். 7 எபிசோடுகள். பவர்ஃபுல் வில்லன், கொஞ்சம் நம்மூர் சதீஷ் போல இருக்கிறார்.  சொந்த வாழ்க்கையில் ஹிம்மத்தின் அவஸ்தைகள் ஒரு பக்கம் நன்றாக கொண்டு போயிருக்கிறார்கள்.  சிறு வயது ஹிம்மத் வித்தியாசமாக தெரிகிறார்.  அவரும் கே கே மேனன்தானா என்று தெரியவில்லை.  இரண்டு மூன்று  சீசன்களும் தமிழில் கிடைக்கிறது.  

முதல் சீசனுக்கு இரண்டாவது சீசனுக்கு நடுவில் 1.5 என்று ஒன்று நான்கு எபிசோடுகளுடன் இருக்கிறது.  அதில் ஹிம்மத்தின் நேர்மைப் போராட்டங்கள் காண்பிக்கப்படுகின்றன.  நடுவில் ஓரிரண்டு வரியில் கடந்த முக்கிய காட்சிகளுக்கு விளக்கமாக சில முன்கதைகள்.  காதலி கதையும், மனைவி கதையும் சுவாரஸ்யம். 

ஹிம்மத் எப்போதும் செல்போனை கையிலேயே வைத்திருப்பார் என்பது ஒரு மேனரிஸம்.  அதை சட்டைப்பையிலோ, பேண்ட் பையிலோ வைக்க மாட்டார்.  எப்போதும் கையில் பிடித்திருப்பார்.
சமயங்களில் நம்ப முடியாத காட்சிகள் என்று சொல்ல வைக்கும். ஆனால் காட்சிகளின் அமைப்பு, ரிச்னஸ் ரசிக்க வைக்கிறது. வெளிப்புற படப்பிடிப்புகளில் கலக்கி இருக்கிறார்கள். ஒரு உயர்வகை ஆங்கிலத் திரைப்படம் பார்ப்பது போல உணர்வு.

==============================================================================

R. கந்தசாமி ஸார் பதிவிலிருந்து..  

மனுஷன் இணையமெங்கும் சுழன்று தேடித்தேடி எடுத்துப் பகிர்கிறார்...

எஸ்.ராமகிருஷ்ணன் காவல் கோட்டம் குறித்து எழுதியதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லையா?
ஒன்றுமே இல்லை என்று புறந்தள்ள நான் ராமகிருஷ்ணன் அல்ல. விவாதிப்பதற்கு அல்லது பொருட்படுத்துவதற்கு ஏதாவது உள்ளதா என்ற அக்கறையுடன்தான் நான் வாசித்தேன். இரண்டு விஷயங்கள் விவாதிப்பதற்கானதாக எனக்குப்பட்டது.
ஒன்று, ஒரு வரலாற்றுநாவல் எப்படி இருக்க வேண்டும் என்பதைப்பற்றி அவர் ஒரு மாதிரியை முன்வைக்கிறார். இது போல காவல்கோட்டம் இல்லையே என்று கேள்வியெழுப்புகிறார். அதுபோல காவல்கோட்டம் ஏன் இருக்கவேண்டும். ஒரு வரலாற்று நாவலை நூறுவிதத்திலும் எழுதலாம். அதற்கு என்ன அளவுகோல்? யார் அதை தீர்மானிப்பது. போரும் வாழ்வும் போலவும், அக்கினி நதியைப் போலவும்தான் வரலாற்று நாவல் இருக்கவேண்டுமென்பது எந்த மகாசபையில் முடிவுசெய்யப்பட்டது. நெப்போலியனை டால்ஸ்டாய் பார்த்தவிதமும், விக்டர் ஹியூகோ பார்த்தவிதமும் ஒன்றா? போரும் வாழ்வும் நாவலில் வரலாறு கையாளப்பட்ட விதமும், சக்கரவர்த்தி பீட்டர் நாவலில் வரலாறு கையாளப்பட்டவிதமும் ஒன்றா? வரலாற்றை புனைவு தனது உள்ளங்கையில் வைத்து உருட்டி விளையாடும் ஆற்றல் கொண்டது. விளையாட்டின் வகைகள், உத்திகள், நுட்பங்கள், சாகசங்கள் எல்லாம் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒரே களம், ஒரே அணுகுமுறை, ஒரே உத்தி ஆகியவற்றின் அடிப்படையிலான விளையாட்டுகளும் உண்டு. ஆனால் அது களத்தில் விளையாடுவதல்ல, கணினியில் விளையாடுவது. ராமகிருஷ்ணன் இரண்டாம் வகையை வைத்து முதல் வகையின் மீது கேள்வியெழுப்பியுள்ளார்.
விவாதிப்பதற்கான இரண்டாவது விஷயம் மிக நுட்பமானது ஒரு நாவலாசிரியனின் நண்பன் நாவல் எழுதிவிட்டால் நாவலாசிரியனாக கருதப்பட்டவனின் மனநிலை என்னவாகிறது என்பதைப்பற்றியது. இந்த ஆய்வுக்கு ஒரு பரிசோதனை எலியாகத்தான் அவர் எழுதியுள்ள கட்டுரை உள்ளது. அது பட்டிருக்கிற பாடு, அடைந்திருக்கிற அவஸ்தை, தாங்கிக்கொள்ள முடியாமல் மேலும் கீழும் குதித்து பல்லில் சிக்கியதை எல்லாம் கடித்து துப்பியிருப்பது என இவை எல்லாவற்றையும் வைத்து அந்த மனநிலையை ஆய்வு செய்ய முடியும். ஜாடிக்குள் கூழாங்கல்லைப் போட்டவுடன் உள்ளே இருக்கும் திரவம் மேலேறி வருவதைப்போல எழுத்தாளனின் மனதுக்குள் இருக்கும் வக்கிரமும், காழ்ப்பும், குரோதமும் மேலேறி வர அருகில் இருப்பவன் ஒரு படைப்பை போடவேண்டியுள்ளது. இவ்விடத்தில் படைப்பு படைப்பாளியாக அறியப்பட்டவரிடம் என்னவாக வினையாற்றுகிறது என்பது முக்கியம். அத்தகையதொரு ஆய்வும், அதன் மீதான விவாதமும், தமிழ் இலக்கிய உலகுக்கு மிகவும் பயன்படும்.
-அ.வெண்ணிலா கேள்விக்கு சு.வெங்கடேசன் பதில்
நன்றி: கீற்று.காம்

இதற்கு அங்கு நான் இட்ட கமெண்ட்.


.========================================================================================

ரசித்த கருத்து 


================================================================================

ஒரு புலம்பல் 


வெங்காயத்தை வேரறுப்போம் 
வெறுங் காயாய் சமைத்து வைப்போம் 
வெங்காயமே வேண்டாமென்றால் 
பூண்டு மட்டும் உண்போமா என்ன 
வாழைத்தண்டை வைது விடுவோம் 
வாயினாலே வடை சுடுவோம் 
வாழைப்பூவை தூக்கி எறிவோம் 
காலிஃபிளவரை கண்ணாலும் காணோம் 
கத்தரிக்காயை சுத்தமாக மறப்போம் 
முருங்கையை முடிந்தவரை தவிர்ப்போம் 
படையெடுத்து வந்தாலும் 
குடைமிளகாய் வேண்டாம் 
மாதத்துக்கு மூன்றுமுறை கீரை 
மூன்றுமுறை முட்டைகோஸ் 
முள்ளங்கி எப்போதும் சள்ளையப்பா.. 
நாத்தம் ஊரைத் தூக்குதப்பா 
பாகற்காய் பக்கமே போகவேண்டாம் 
தானாய் கிடைத்தாலும் சமைக்க வேண்டாம் 
அப்போ
என்னதான் சமைப்பீங்கப்பா 
சொல்வதென்னவோ 
எது வேணும்னாலும் சமைப்போமப்பா 
பீன்சும் கோவைக்காயும் 
கேரட்டும் அவரையும்தான் 
சாஸ்வதமப்பா 
===============================================================================================



==================================================================================================


பொக்கிஷம் / ஜோக்ஸ் 







அந்தக் கால "நான் படிச்ச கதை"


எனக்குப் பிடித்த புத்தகம்
பண்ணையாள் முருகன்
Murugan The Tiller

படிக்க வேண்டிய புத்தகங்களில் முதலில் படிக்க வேண்டிய புத்தகம் இது' என்ற புகழ் மாலையைச் சூட்டியவாறு புத்தக மொன்றைக் கொடுத்த என் நண்பா தன் கூற்றுக்குச் சான்றாக, பல ஆங்கில எழுத்தாளர்களும் ஒருங்கே சூட்டிய புகழ்மாலை பிரசுரிக்கப்பட்டிருந்த பத்திரிகைகளும் இந்த கடைசிப் பக்கத்தை காட்டினர். புத்தசுத்தின் பெயர் 'பண்ணையாள் முருகன்' ஆசிரியர் கே. எஸ். வெங்கடரமணி.


காவிரிக் கரையின் அமைதியான சூழ்நிலை​இயில் உள்ள ஆழவந்தி கிராமத்தில், ஐந்து தலை முறையில் எழு​நூறு ஏகர் நிலம், ஏழு ஏகர் நிலமா​க  மாறிய நிலையில், 'மிராஸ்தார'ராய் வாசகர்​களுக்கு அறிமுகமாகிய ராமச்சந்திரன், இரு முறை பி. ஏ. பரீட்சையில் தவறி, கேம்ப் கிளார்க் (கலெக்டரின்), டெபுடி தாசில்தார் டெபுடி லக்டர் ஆகிய பதவி வகித்து, நாகலாபுரம் மலைப் பகுதிக் கொள்ளைக் கூட்டங்களை அடக்கி, மீனாட்சிபுரம் என்ற புதிய மாதிரி கிராமத்தை திரிமாணித்து கொள்ளைக் கூட்டத்தினருக்கு நல் வாழ்வு நல்கி, கலெக்டர் பதவியையும் உதறி அங்கேயே தங்குகிறன்​ அவர்கள்
சேவைக்காக,

எஜமான் ராமுவிடம் (வாசகர்களின் அனுமதியுடன் பெயர் மாற்றம் கொடுக்கிறார் ஆசிரியர்.) தோப்பைப் பெற்ற முருகன், தொப்பையின் நட்பா​ல் கள் கடை திறந்து, ஊரார் பணமும் ​பகையும் பெற்று, ஜெயில் புகுந்து, சகஜெயில் வாசியி உதவியால் தப்பி, நாகலாபுரம் மலைப் பகுதிக் கொள்ளைக் கூட்டத்தாருடன் சேர்ந்து, எஜமானன் ​ராகுவால் மீட்கப்பட்டு மீளுட்சிபுரத்தில் அமைதி வாழ்வு காண்கிறன்.
​ராமுவின்  உயிர் நண்பன் கேதாரி, சென்னையில் வக்கீல் படிப்பு முடித்து, பணம், புகழ் பெற்று, தேர்தலில் நின்று வெற்றி பெற்று, ​சீனியர் மா​ர்க்கண்டத்தின் சதிக்கு ஆளாகி, ஓட்டாண்டியாகிய ​நிலையில் ராமுவின் இழந்த நட்பைப் ​பெற்று, மீனாட்சிபுரத்தில் அமைதி வாழ்வை அடைகிறான்.
இவ்வளவுதான் கதை. எனினும் எத்தனை
​திருப்பங்கள்! உணர்ச்சிக் குவியல்கள்! மனித வாழ்க்கையையே படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர் கதாபாத்திரங்களின் ​வாயிலாக சாதாரணப் படம் அல்ல. வண்ணப் படம்.

கிராமத்து முருகன் வாழ்க்கைக்கும். பட்ட ணத்து கேதாரி வாழ்ககைக்கும் எவ்வளவு விததியாசம்! பசிபிக் கட​லுக்கும் எவெரெஸ்ட் சிகரத்திற்கும் உள்ள வித்தியாசம். இருவரும் புகழ்:ஏணியின் உச்சிப் படியிலி​ருந்து, சூழ்ச்சிக்கு ஆ​ளாகி இடறி விழுகின்றனர். ராமு அவர்களுக்குக் கை கொடுத்து உதவுகிறான்.

ஆழவந்தி ஆ​ற்றங் கரைக் காட்சி கண்ணை விட்டு அலாத காட்சி

வீட்டின் ஆட்​சி செலுத்திக் கொண்டிருக்கும் ஆண்கள் வாய் மூடி மௌனியாக ஒரு மூலையில் மந்திரம் ஜெபித்துக் கொண்டிருக்க, பெண்கள் ஆற்றங் கரையில்​........

45 கருத்துகள்:

  1. உங்கள் நேரம் நன்றாக இருந்ததால் குபேரா பார்ப்பதை விட்டுவிட்டு ஒரு சுவாரசியமான தொடர் பார்த்திருக்கிறீர்கள் (இதனை நானும் பார்க்கப்போகிறேன்). குப்பையாக கதை பண்ணி படம் எடுப்பது எப்படி என்பதை முக்கால் குபேரா பார்த்துத் தெரிந்துகொண்டேன். முழுவதும் பார்க்கலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   அப்படிக் சொல்லலாம்தான்.  ஆனால் குபேரா படம் அப்புறம் பார்த்து(த்தொலைத்து) விட்டேன்!  ஏற்கனவே பேஸ்புக்கில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்தும் விட்டேன்!!

      நீக்கு
  2. வெங்காயம் கவிதையை மாத்திரம் படித்தேன். உங்களை வீட்டில் மட்டுமா இல்லை ஹோட்டலிலும் வெறுப்பேற்றியதால் விளைந்த கவிதையா (புலம்பலா) எனத் தெரியவில்லை.

    பல சுவாரசிய பகுதிகளை பத்து மணிக்கு மேல்தான் படிக்க இயலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில்தான்! 

      திங்கக்கிழமையில் கூட ஒரு வரி வந்திருந்ததே...  பார்(படி)க்கவில்லையா?

      நீக்கு
  3. ​ott பற்றி ஒன்னும் சொல்வதிற்கில்லை ott கிடையாது. .

    கருத்து கண்டசாமியின் (pun intended) மீள்வரவு!. கருத்து யானையும் பன்றியும் கதையை நினைவு ஊட்டியது.

    revolt of the toys கார்ட்டூன் போல காய்களெல்லாம் அணிவகுத்து தாக்குவது போல் கனவு காண்பீர்கள். வெங்காயம் சொல்கிறது.
    வெங்காயத்தை வேரறுக்காமல் ஆனியன் ரவா சாப்பிட முடியுமா?

    வெங்காயம் போனால் என் வாசமிகு
    பெருங்காயம் உண்டே துணை.

    நூற்றுக்கு இரண்டு மார்க் ஜோக் உண்மையில் எங்கள் வீட்டில் இளைய மகன் இளைய வயதில் செய்தது தான்.
    தேர்வில் தெரிந்த கேள்விகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு தெரியாத கேள்விகளுக்கு அவனுக்கு தோன்றிய பதிலை எழுதியிருப்பான். ஏன் தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுதவில்லை என்றார் கேட்டால் அதுதான் எனக்கு தெரியுமே என்பது பதிலாக இருக்கும். அமெரிக்கா முறை?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களிடம் OTT இலையா JKC Sir...   பார்க்கலாம்.  சுவாரஸ்யமாய் பொழுது போகும்.

      நாம் தேடித்தேடி படிக்காமல் எட்டு திக்கும் சென்று இலக்கியங்களைத் தேடி பகிர்கிறார் கந்தசாமி சார்.  அவரைகப் பாராட்ட வேண்டும்.  நான் இங்கு சிலவற்றைதான் பகிர்கிறேன்.  ஒரு நாளைக்கு முப்பதுக்கு மேல் பகிர்கிறார்.

      வேரறுத்துதான் வெங்காயமே பருகுவோம்..  அதுவும் சரிதா.  இலைல விட்டால் கசக்குமே..!

      பெருங்காயத்துக்கும்  அளவாய்ப்போட வேண்டும் என்று கட்டுப்பாடு உண்டு!

      உங்கள் பையனின் பதில் ஆச்சர்யப்பட வைக்கிறது.  நல்ல கருத்துதான். 

      நீக்கு
    2. // வேரறுத்துதான் வெங்காயமே பருகுவோம்..  அதுவும் சரிதா.  இலைல விட்டால் கசக்குமே..! //

      வேரறுத்துதான் வெங்காயமே நறுக்குவோம்..  அதுவும் சரிதான்.  இல்லா விட்டால் கசக்குமே..!

      நீக்கு
    3. வெங்காயத்துக்கும் பெருங்காயத்துக்கும் என்ன சம்பந்தம்? முன்பு சில சமூகத்தினர் பெருங்காயம் உபயோகிப்பதும் மற்றவர்கள் பூண்டு உபயோகிப்பதும் வழக்கம். உரண்டின் பணி, பருப்பினால் ஏற்படும் வாயுத் தொந்தரவைத் தவிர்க்க.

      நீக்கு
    4. மாற்று வாசனை.. வேறென்ன..

      ஆனால் நான் எங்கும் எதிலும் பெருங்காயம் சேர்த்து விடுவேன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. முருகா சரணம்,  வாங்க செல்வாண்ணா.. வணக்கம்.

      நீக்கு
  5. Special OPS நானும் பார்த்தேன், மற்றவர்களுக்கும் பரிந்துரைத்தேன்(ஹார்லிக்ஸ் விளம்பரம் போல இல்லை?). நேற்று கலியுகம் என்று மகா மட்டமாக ஒரு படம் பார்த்தேன். 2015ல் நடப்பதாக கதை. சயின்ஸ் ஃபிக்ஷன் போலவும் இல்லை. 2065ல் கடுமையான உணவு பஞ்சமாம், மனிதர்களை வஞ்சகமாக வரவழைத்து கொலை செய்து சாப்பிடுகிறார்கள்(உவ்வே!). படம் முழுவதும் அருவெறுப்பூட்டும் வன்முறை, எதிர்மறை சிந்தனை... கடவுளே! தயவு செய்து பார்த்து விடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்துட்டேனே...  பி;பார்த்துட்டேனே....  அல்ரெடி பார்த்து வாந்தி எடுத்துட்டேனே...   கண்ராவி.

      அப்புறம் நேற்று இரண்டு சீரிஸ் பார்த்தேன்.  டச் மீ நாட் மற்றும் மிஸ்டரி ஆஃப் மோக்ஷா ஐலண்ட்.  அப்புறம் ஒரு மாதவன் படம் ஆப் ஜெய்ஸா  கோயி...

      நீக்கு
    2. கிரிமினல் ஜஸ்டிஸ் பார்க்கலாம் என்று போனேன்.  பேசிப்பேசி கதைக்கே வராமல் உயிரை எடுத்தார்கள்.  மேலும் ஏற்கனவே ஆறு எபிசோட்.  ஓடி வந்து விட்டேன்!

      நீக்கு
  6. எஸ்.ரா.வின் கருத்தை பகிர்ந்து விட்டு ஆர்.கந்தசாமியின் கருத்தை பகிர்ந்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஆர் கந்தசாமியின் கருத்தல்ல. தன்னுடைய நாவலையே ஆஹா ஓஹோ என்று மெச்சிக்கொள்ளும் வெங்கடேசன் கருத்து. அந்த நாவல் எத்தனை பிரதிகள் தானாக விற்றிருக்கிறது என்று பார்த்தால் நாவலின் தகுதி தெரிந்துவிடும்.

      நீக்கு
    2. அந்தக்கணக்கெல்லாம் கூட உண்மையாக இருக்காது!  முதற்பதிப்புக்கு அப்புறம் எத்தனை பாதிப்பு வந்திருக்கிறது என்று பார்க்கலாம்.  கொஞ்ச நாள் கழித்து சாகித்ய அகாடமி அரங்கில் தள்ளுபடி என்று நூறு ரூபாய்க்கு விற்க முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்தக் கதையிலிருந்து ஒரு பகுதி எடுத்து ஒரு படம் எடுத்தார்கள்.[ஆடம் பெயர் வழக்கம் போல நினைவுக்கு வரவில்லை. அரவான்.

      நீக்கு
    3. அந்தக்கணக்கெல்லாம் கூட உண்மையாக இருக்காது! முதற் பதிப்புக்கு அப்புறம் எத்தனை பதிப்பு வந்திருக்கிறது என்று பார்க்கலாம். கொஞ்ச நாள் கழித்து சாகித்ய அகாடமி அரங்கில் தள்ளுபடி என்று நூறு ரூபாய்க்கு விற்க முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்.

      ஆனால் அந்தக் கதையிலிருந்து ஒரு பகுதி எடுத்து ஒரு படம் எடுத்தார்கள்.[அரவான்.

      நீக்கு
  7. வியாழன் பதிவில் போடும்படி ஒரு அழகிய நடிகை விரைவில் தோன்றட்டும். அனுஷ்கா இல்லாத வியாழன் பதிவுகள் அமாவாசை வாகனமாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே நான் சீரியஸாக பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன்.  சில மாதங்களுக்கு முன் நிமிஷாவை கணக்கில் வைத்திருந்தேன்.  இப்போது தோன்றவில்லை.

      நீக்கு
  8. முன்பெல்லாம் ரேடிங் பார்த்துத் திரைப்படங்கள் டவுன்லோட் செய்துகொண்டிருந்தேன். பல படங்கள் மொக்கையாக இருக்கவும், பையனிடம் கேட்டேன். பல ரேடிங் பொய்யானது, பொதுவா ஹிட் படங்கள் பார்க்க நல்லாருக்கும் என்றான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் தவறுதான்.  நம் ரசனை வேறு.  அவர்கள் ரசனை வேறு.  நான் கொஞ்சம் ஓட்டிப் பார்ப்பேன் - OTT , டி டியூபோ -  எனக்கு பிடித்திருந்தால் மட்டும் தொடர்வேன்.  புல்லட் ட்ரெயின் கிராஷ் என்று ஒரு படம் ஸ்பீட் போல இருக்கும் என்று பார்க்கத்தொடங்கினால்,  கிட்டத்தட்ட இடைவேளை வரைக்கும் பரபரப்பே இல்லை.  கைவிட்டு விட்டேன்.

      'கில்' (சுப்மான் கில் அல்ல.  Kill)  என்றொரு இந்திப்படம் பார்த்தேன்.  விறுவிறுப்பாக இருந்ததது.  ஓடும் ரயிலில் கொள்ளை, கொலை அதை முறியடிப்பது.  அதில் நடித்த ராகவ் ஜுயல் பிடித்துப்போய் அவருக்காகவே கியாரா கியாரா சீரிஸ் பார்த்தேன்.  அதன் இரண்​டாவது சீசன் இந்த வா ரம் வெளியாகிறது. 

      காத்திருக்கிறேன்.

      நீக்கு
  9. பெரிய மனிதர்கள் என்பதன் அர்த்தம் வேறு வேறு அல்லவா? நாட்டின் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் வளவயவந்த, வருபவர்கள் அனைவரும் சொந்த வாழ்க்கையில் பிறரிடம் அரசியல் செய்தொ இல்லை வேறு வகைகளைக் கைக்கொண்டோதானே பெரியவர்களாகியிருக்க முடியும்?

    ஆனானப்பட்ட இராஜாஜியே தன் காமராஜர் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்வால் சர்க்காரியா நாயகனை வளர்த்துவிட்டவர்தாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனதிருக்கு பாடல் நினைவுக்கு வருகிறது. 

      100% நல்லவராகவே இருந்து விட முடியுமா என்ன!  கிருஷ்ணனாலேயே முடியவில்லை!

      நீக்கு
    2. முழுதும் நல்லவனாக இருக்க யாராலும் முடியாது. குறைந்தபட்சம் அல்பத்தனம் காழ்ப்புணர்ச்சி ஏதிலிகளைத் துன்புறுத்துவது/சிறுமைப்படுத்துவது மட்டுமாவது இல்லாமலிருக்கலாம்.

      நீக்கு
    3. அல்லது முக்கியமான இடத்தில் முக்கியமான நேரத்தில் சரியான முடிவு எடுக்கலாம்!

      நீக்கு
  10. பெண்டாட்டி சமையல் நகைச்சுவை நல்லா இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ் கிட்ட சொன்னேன், "என் நண்பர் ஒருத்தர் வீட்டுல அவருக்கு பிடிக்காத சமையல் செய்தா சாப்பிடவே மாட்டாராம்" 

      பாஸ் சொன்னார் "அப்படிப் பார்த்தா நீங்க தினமுமே சாப்பிடக்கூடாதே..." 

      சுய எள்ளல் எப்போதுமே பாதுகாப்பானது... 

      இன்றே செய்வீர் சுய எள்ளல்... 

      சுய எள்ளல்...

      நீக்கு
    2. என் பசங்களும் சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார்கள் ஶ்ரீராம். எனக்கென்னவோ மாற முடியாது என்றே தோன்றுகிறது. பாஸ்தா, நூடுல்ஸ், பேக்கரி ஐட்டங்கள், போன்ற பலதும் எனக்குப் பிடிப்பதில்லை (சாப்பிடாமல் எப்படிப் பிடிக்காதுன்னு சொல்றீங்கன்னு கேட்டால் என்னிடம் பதிலில்லை.பொரிச்ச குழம்புன்னா அது வாழைக்காய் பொரிச்ச குழம்பு என்று ஒவ்வொன்றிலும் விருப்பம் வைத்திருக்கிறேன்)

      நீக்கு
    3. வாழைக்காய் பொரிச்ச குழம்பா...   நான் இதுவரை முயற்சித்ததே இல்லை.  செய்து விடுகிறேன்!

      பாஸ்தா பேக்கரி ஐட்டங்கள் எனக்கும் பிடிக்காது.  நூடுல்ஸ் எப்போதாவது சாப்பிடுவேன்.

      நீக்கு
  11. ஸ்ரீராம் ஓடிடி பத்தி சொல்லி சொல்லி என்னைப் பெருமூச்சு விடச் செய்றீங்களே!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே கீதா.. உங்களிடம் எல்லாம் OTT இல்லையே என்று வருத்தமாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
  12. வெங்கடேசனின் நாவல் 'காவல் கோட்டம்' புத்தகத்தை என் நெருங்கிய உறவினர் வாங்கி வாசித்ததால் அவர் முடித்ததும் எனக்கும் வந்தது.

    ஹா........வ்! கொட்டாவி வந்து அதுவே தலையணையாக மாறிட....அதுக்கப்புறம் என்ன? சுகமான தூக்கம்!

    புத்தகம் இன்னும் இங்கிருந்து நகரவில்லை. சமீபத்தில் அவங்க வந்த போது கூட அவங்ககிட்டகொடுக்க எடுத்து வைத்து விட்டுப் போச்சு அவங்களும் மறந்துட்டாங்க.

    சரி எங்கப்பாக்கு ஒரு விஷப் பரீட்சை செய்யலாமேன்னு வாசிக்கக் கொடுத்தால், கொஞ்சம் வாசித்ததும் வைத்துவிட்டார். 'ஏம்பா"? வாசிக்க நல்லாயில்லைன்னு சொல்லிவிட்டார். எழுத்தும் பொடி எழுத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பதினைந்து மூன்றுதான் வந்தது.  முடித்து விட்டுதான் கொடுத்தேன்!

      நீக்கு
  13. ரசித்த கருத்துக்கு +1 .

    நான் இதை அடிக்கடி நினைப்பது.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. புலம்பல் கவிதையை வாசித்துச் சிரித்துவிட்டேன், ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்கு இல்லை?!!!

      :))

      நீக்கு
  15. ஸ்ரீராம், பெரிய மனுஷங்கன்னா யாரு? (விரல் விட்டு எண்ணிவிடலாம் ஒரு சிலர் இருப்பாங்கதான்...) பார்த்தீங்கனா இந்த பெரிய மனுஷங்கதான் இப்படி எல்லாம் இருப்பாங்க பெரும்பாலும். அல்பமாக. நாமதான் கொண்டாடுகிறோம்னு தோணும்.

    இதற்கு அந்த முந்தைய கதையைத் தொடர்புபடுத்தலாம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் எல்லா நேரமும் எல்லோரிடத்தும் பெரிய மனிதர் பெயர் வாங்க முடியாது...

      என்ன சொல்கிறீர்கள்?

      தத்துவம் நம்பர்...842198752136

      நீக்கு
  16. பொக்கிஷ்ம ஜோக்ஸ் எல்லாமே நல்லாருக்கு.

    அந்தக் காலத்து நான் படிச்ச கதை விமர்சனம் யார் ஸ்ரீராம்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை கவனிக்கலையே...   அந்தப் பக்கத்துல பெயர் இல்லையா?

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. அனைத்தும் அருமை.
    ஸ்பெஷல் OPS என்று ஒரு சீரிஸ் விமர்சனம் , மற்றும் அடுத்த பட விமர்சனமும் பார்க்க நினைத்த்வர்கள் வேண்டாம் என முடிவு செய்வார்கள்.

    R. கந்தசாமி ஸார் பதிவில் உங்கள் பின்னூட்டம் படித்தேன்.
    படித்ததில் பிடித்தது பகிர்வு, உங்கள் கவிதை, மற்றும் நகைச்சுவைகள்
    அருமை.
    உங்கள் அப்பாவின் கையெழுத்து இருக்கும் அப்பாவிற்கு பிடித்த அந்த தொகுப்பில் இருந்து ஏதாவது இன்று வந்து இருக்கா?




    பதிலளிநீக்கு
  19. பண்ணையாள் முருகன் கதை போல பழைய சினிமாவில் வரும்.
    எந்த சினிமா என்று நினைவு இல்லை. தொலைகாட்சியில் பார்த்தேன், மிக பழைய படம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!