நெல்லைத்தமிழன் :
1. இறப்பு என்பது என்ன? ஆன்மாவை நாம் காண முடிவதில்லை, உடலைத்தான் காண்கிறோம். அப்படியென்றால் ஆன்மா எங்கு சென்றிருக்கும்?
# இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல எனக்குத் தகுதியில்லை. நானும் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விதான்.
& கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.
2. இப்படி கஷ்டப்படுவதைக் காட்டிலும் செத்துப்போகலாம் என்று சொல்பவர்கள் எல்லோரும், இறப்பதற்குத் தயாராக இருப்பார்களா?
# சலித்துக்கொள்பவர்களுக்கு அந்தத் துணிவு இராது என்பது என் கருத்து.
3. சிலருக்கு மாத்திரம் அளவாக உண்ணத் தெரியும், அந்த ஒழுங்கு இருப்பதன் ரகசியம் என்ன? எனக்குத் தெரிந்த சிலர், ஒரு இனிப்பு அல்லது பாதி அளவு மாத்திரம் எடுத்துக்கொள்வார்கள். இரவு உணவாக இரண்டு பூரி அல்லது தோசை மாத்திரம் எடுத்துக்கொண்டு இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார்கள். (எனக்கு அந்த மாதிரி ஒழுங்கு வருவதில்லை)
# எனக்கும் தீனிகள் கட்டுப்பாடு இல்லைதான்.
& எனக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு எப்போதும் உண்டு.
4. உணவு உடை இருப்பிடம் இந்த மூன்றும் மனிதனுக்கு மிக மிக அவசியம் என்பார்கள். இதில் எது மிக முக்கியம்?
# அதே வரிசை சரியாகவே இருக்கிறது.
& உணவு முக்கியம். அடுத்தது ஆரோக்கியம். அது இருந்தால் சந்தோஷம். சந்தோஷம் இருந்தால் உடை & இருப்பிடம்
5. நடிகைகளின் படத்தைத் தேர்ந்தெடுத்துப் போடும்படியாக ஒருவரும் கேள்வி கேட்பதில்லையே என்று நொந்துகொண்டிருக்கிறீர்களா?
# எனக்கு அந்த ஆர்வம் இல்லை.
& ஆமாம் தலைவரே! ஹூம் நம்ம ரெண்டு பேரையும் புரிஞ்சிக்க ஆள் இல்லாம போச்சு!! ( 'னா' ரசிகர் மன்றம் - 'கா' ரசிகர் நிலை என்ன ?? )
6. எல்லை மாநிலங்களில், அதிலும் குறிப்பாக கிராமங்களில் வாழும் மக்கள் எப்போதும் பயத்தில்தானே இருப்பார்கள்? எந்த போரோ இல்லை பிரச்சனைகளோ வந்தால் அவர்கள் வாழ்வாதாரம்தானே முதலில் பாதிக்கப்படும். அதற்காக அவர்களுக்கு அரசு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
# இந்த ஆபத்து அவர்களுக்குப் பழகிப் போயிருக்கும். அரசுகள் முறையான முன்னெச்சரிக்கைகளை இயன்றவரை செய்து கொண்டுதான் இருக்கின்றன.
7. ஊரில் ஒரு பெண்ணுக்கு அல்லது ஒரு பையனுக்குத் திருமணம் நடக்கணும் என்று பாடுபட்ட நலம் விரும்பிகளுக்கு (நான் சொல்வது 50 வருடங்களுக்கு முன்பு), ஒரு கைகுலுக்கலும் தேங்காய் பழம் வெற்றிலை கொடுத்து அவங்க முக்கியத்துவம் புரியாமல் நம் முன்னோர்கள் நடந்த விதத்துக்கான பழிவாங்கலா தற்கால திருமண தகவல் மையங்கள், இணையங்கள்? ரெஜிஸ்டர் செய்வதற்கே இத்தனை ஆயிரம், அதுவும் ஆறு மாதங்களுக்குள், நீங்களே தேர்ந்தெடுத்து அடுத்த வேலையைப் பார்த்துக்கொள்ளுங்கள், நாங்கள் பொறுப்பல்ல என்று கம்பெனி போல நடத்தும் திருமண தகவல் இணைய தளங்கள் மிகவும் பெருகிவிட்டிருக்கின்றனவே, அதனால் எழும் கேள்வி இது.
# இன்றைய திருமண மையங்கள் காலத்தின் கட்டாயம். அந்த காலத்தில் ஒரு சிறு வட்டத்துக்குள் பெண் கொடுக்கல் வாங்கல் நடைபெற்று வந்தது. உலகளாவிய பொருளாதாரம் வந்தபின் மாப்பிள்ளை பையன்களும் மணமகள்களும் உலகின் பல மூலைகளுக்கும் பணியாற்றப் போய்விட்டார்கள். டிமாண்ட் - சப்ளை பொருத்தம் பார்த்து இந்த தொழில் பல்கிப் பெருகிப் போய் இருக்கிறது.
8. ஒரு ஸ்லோகம் சொல்வது, அதன் அர்த்தத்தைச் சொல்வது இரண்டில் எது சிறந்தது? அதாவது பலனைக் கொடுக்கக்கூடியது எது?
# அர்த்தம் தெரிந்து ரசனையாகச் சொல்வது அளவற்ற மன அமைதி தரும். " பலன் " என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. " நம்பினவர்க்கு நடராஜா " என்பார்கள்.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
நம் ஊரில் ஒரு காலத்தில் ஆங்கிலோ இந்தியர்கள் என்று ஒரு இனம் இருந்ததே? அவர்கள் என்ன ஆனார்கள்?
# பாலில் இட்ட சர்க்கரையாக ஒன்றிப் போனார்கள்.
சென்னையில் இன்றும் மெட்ராஸ் பாஷை பேசுகிறவர்கள் இருக்கிறார்களா?
# இருக்கிறார்கள். ஆனால் டிக்காஷன் கம்மி.
உங்கள் அபிமான எழுத்தாளர் எழுதிய, நீங்கள் படிக்க விரும்பிய நாவல் அச்சு புத்தகமாகவும், ஒலிப் புத்தகமாகவும் உங்கள் முன் இருக்கிறது, நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
# அச்சுதான்.
நம் அபிமான கதாபாத்திரங்களின் குரல்கள் நம் மனதில் ஏற்றி வைத்திருப்பதை ஒத்திருந்தால்தான் திருப்தி.
சினிமாவில் வஸந்த் ஆக நடித்தவரை திரையில் பார்த்த போது உண்டான ஏமாற்றம் மறந்துவிட்டதா ?
எங்கள் ப்ளாகில் சனிக்கிழமை பதிவுக்கு பின்னூட்டங்கள் குறைவாக இருக்க காரணம் என்ன? E.B followers are not positive or what?
# இதற்கு வழக்கமாக இதர பதிவுகளுக்குப் பின்னூட்டம் தருபவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
= = = = = = = = =
படமும் பதமும் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
ஸ்ரீராம் :
நடைப் பயிற்சியின்போது தரையில் காணப்பட்ட ஏதோ ஒரு நீர் கழுவல். அதில் தெரிந்தது விநாயகர் உருவம். அதன் மீது உதிர்ந்திருந்த சில பூ இதழ்கள். அரிய காட்சி!
என்னதான் அவர்கள் ஸ்வீட் வாட்டர், ஸ்பிரிங் வாட்டர் என்று போட்டுக் கொண்டாலும் - ( எங்கள் அடுக்ககத்திற்கு தண்ணீர் சப்ளை செய்பவர்கள்) ..
வருகின்ற தண்ணீரில் பெரும்பாலும் பாசி நாற்றம் & மீன் நாற்றம் வருகிறது.
தேவுடா தேவுடா !
இல்லையேல் பயங்கர குளோரின் வாடை வரும்.
= = = = = = = = = =
முருகா சரணம்
பதிலளிநீக்குஇனிய சஷ்டி விரத வாழ்த்துகள்.
நீக்குஅடுக்ககத்து நீர்
பதிலளிநீக்குஅடாதபடிக்கு இருந்ததோ...
கொடுமை..
ஆம். :((
நீக்குஇங்கே ஜி அவர்களை ஊருக்கு ஒருவிதமாக நாடகம் ஆடுகின்ற வேடதாரி என்கின்றனர் அந்நிய அடிவருடிகள்...
பதிலளிநீக்குஎன்ன செய்வது! நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்
நீக்குவெயிலில் பத்து வருடங்கள் காஞ்ச பின்பும் அருமை தெரியாதமாதிரி எழுதப் பேசக் காரணம் அவரவர் மத்த்தின் மீது கொண்ட பற்று அல்லது தீவிரம் காரணமாகத்தான் என நான் நினைக்கிறேன்.
நீக்குCorrect.
நீக்குஸ்ரீராம் படங்கள் அட்டகாசம் அதோடு கூடவே உங்கள் கவிதை வரிகள் மற்றும் வரிகளில் சொற்களும் தலைப்பாக.
பதிலளிநீக்குநானும் இப்படி ஒன்றிரண்டு பூச்சிகளை எடுத்து வைத்திருக்கிறேன். பகிர வேண்டும் என்று. ஆனால் பகிராமல்!!!!
கீதா
நன்றி கீதா. புதிதாக இன்ஸ்டாக்ராமில் இணைத்திருக்கிறேன். முதலில் அங்கு வெளியிட்டேன். பார்ப்பாரில்லை!!!!
நீக்குபானுக்காவின் படமும் சூப்பர்...
பதிலளிநீக்குகீதா
நெல்லை உங்கள் படங்கள் சூப்பர் கோபுரம் படம் வாவ்!
பதிலளிநீக்குகீதா
கௌ அண்ணா - வழிந்த நீர் ஏற்படுத்தியிருக்கும் உருவம் - வான் கரு மேகம் தரையில் வந்ததோ!!
பதிலளிநீக்குகீதா
ஆஹா! நன்றி.
நீக்குகௌ அண்ணா இப்படியான தண்ணீர் சப்ளை எல்லாம் ஏதோ குளத்தாண்டை எடுத்துட்டு வரதா கட்டுரை வாசித்த நினைவு!!!
பதிலளிநீக்குஎனவே நாமதான் சுத்தமாக்கிக் குடிக்கணும்.
அது சரி, உங்கள் குடியிருப்பிற்குக் காவேரி வெள்ளம் கிடையாதோ?!
கீதா
உண்டு என்று சொல்கிறார்கள். 100 குடித்தனங்களுக்கு
நீக்குஅது போதாது.
ஆமாம் போதாதுதான்.
நீக்குபல்கிப் பெருகும் குடியிருப்புகளைப் பார்க்கறப்ப எனக்கு முதல்ல மனசுல தோணுவது இதுதான்....இத்தனை குடும்பங்களுக்கும் எங்கிருந்து தண்ணீர் வரும்?
கீதா
@நெ.த.: Life after death குறித்து நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. நிதிலன் தண்டபாணி/ND talks என்பவரின் யூ டியூபில் இந்த விஷயங்களைப் பற்றிய வீடியோக்களை பார்க்கலாம்.Journey of souls என்னும் நூலில் இது குறித்து கூறப்பட்டிருக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அல்லது ஜர்னி ஆஃப் சோல்ஸ் என்னும் புத்தகத்தை வாங்கி படித்து விடுங்கள். Brian weiss என்பவர் எழுதியிருக்கும் Many life many masters என்னும் நால் ஆறு தொகுதிகளைக் கொண்டது. Very intersting books.
பதிலளிநீக்கு//அவைகள்
நீக்குஎருக்கையிலே, வசிக்கையிலே, இருக்கையிலே, நடக்கையிலே...எடுத்த படம்.// எருக்கையிலே... என்றால் என்ன?
எருக்கை இலை??
நீக்குஎருக்கை : குப்பை மேடு
நீக்குவசிக்கை : வீடு
இருக்கை : உட்காரும் இடம் (நாற்காலி)
நடக்கையிலே வழி, சாலை, ராஸ்தா
விளக்கம் சரியா?
Jayakumar
எருக்கை என்றால் குப்பைமேடு என்றும் அர்த்தம் வருமா? நான் சொல்ல வந்ததது எருக்கஞ்செடி! வாசிப்பதும் இருப்பதும் ஒரே அர்த்தம், லேசான மாறுதல்களோடு.... மற்றபடி ஓகே...
நீக்குகிராமங்களில் குப்பையை எருக்குழி (எருக்கை) யில் போடு என்று சொல்வார்கள்.
நீக்குபெங்களூரில் எங்கள் காலனிக்கு தண்ணீர் சப்ளை செய்யும் லாரியில் 'பூஜா வாட்டர் சர்வீஸ்' ஆஹா! பூஜைக்கு தனியாக தண்ணீர் சப்ளை எய்கிறார்களா? என்று கொஞ்சம் சந்தோஷப்பட்டு விட்டென். பிறகுதான் அந்த கம்பெனியின் பெய்ர் அது என்று புரிந்து கொண்டேன்:))
பதிலளிநீக்கு:))))
நீக்குஸ்ரீராம் எ பி யின் முழு நேர ஆசிரியர் ஆகிவிட்டார். ஞாயிறு தவிர மற்ற நாட்களில் அவருடைய பங்கு நிறைந்து நிற்கிறது.
பதிலளிநீக்குJayakumar
அட! ஆமாம்!!
நீக்குஅட.. கேஜிஜி.. ப்ரமோட் பண்ணிட்டீங்களா?!
நீக்குஇந்த promotion க்கான இன்க்ரிமென்ட் வீட்டில் கிடைக்கும் அதிக திட்டுகள்
நீக்குஅதைச் சொல்லுங்க!
நீக்குபா. வெங்கடேஸ்வரன் மேடம் கேள்வி, அச்சா ல்லை ஒலியா? அச்சுப் புத்தகத்தின் பக்கம் எதுவுமே (பிடிஎஃப் முதற்கொண்டு) வரமுடியாது. நம் கற்பனையைத் தூண்டும் (வானதி எப்படிப் பேசினாள், ஆழ்வார்கடியானின் முக பாவங்கள், அருண்டொழியின் பேச்சு என ஒவ்வொன்றையும் வாசகர்களுக்கு ஏற்ற மாதிரி கற்பனை செய்துகொள்ள முடியும். அச்சுப் புத்தகத்தில் நம் கைகள் படுவதால் பிடிஎப்பை விட நமக்கு நெருக்கம்.
பதிலளிநீக்குஎன் வோட் பி டி எஃப்.
நீக்குஇதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். அச்சுப் புத்தகங்களை பராமரிப்பது கஷ்டம், வீட்டுக்கு வருகிறவர்களிடமிருந்து பாதுகாப்பதும் கஷ்டம்
நீக்கு:))))
நீக்குஸ்வீட் வாட்டர்... பஹ்ரைனில் குடிப்பதற்காக இரண்டு வகையான தண்ணீர் கிடைக்கும். ஒன்று கேன் வாட்டர். இன்னொன்று ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ள கேனை வாங்கிக்கொண்டு 150 filsக்கு நிரப்பித் தரப்படும் ஸ்வீட் வாட்டர். பெரும்பாலும் பாகிஸ்தானியர்கள் மினி லாரிகளில் கொண்டுவந்து வளாகத்தின் வீடுகளுக்குக் கொடுப்பார்கள். இதற்காகவே ஒவ்வொருவரும் நாலைந்து கேன்கள் வைத்திருப்பார்கள்.
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குஇரண்டு மரங்களைப் பார்த்ததும் சமீபத்தில் ரிஷிகேசில் எடுத்த கற்பக விருட்சம் படம் நினைவுக்கு வருகிறது. விரைவில் பதிகிறேன்.
பதிலளிநீக்குபகிரவும்.
நீக்கு. இறப்பு என்பது என்ன? ஆன்மாவை நாம் காண முடிவதில்லை, உடலைத்தான் காண்கிறோம். அப்படியென்றால் ஆன்மா எங்கு சென்றிருக்கும்?
பதிலளிநீக்குஉறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
அத்வைத கோட்பாடு பிரகாரம் ஆன்மா பரமாத்மாவின் ஒரு பகுதியே. உடல் என்னும் கூட்டை நீங்கும் ஆன்மா பரமாத்மாவை சென்றடையும் அடுத்த பிறவி நேரும் வரை. இது என்னுடைய புரிதல்.
ஆன்மாவிற்கு அழிவில்லை. கீதை
நீக்கு"மரணம்" -சுஜாதாவின் கட்டுரை
நீக்குசெத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்?
நான் செத்த பின் நானாக இருந்தால் தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும்.
செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.
நான் நானாகவே தொடர வேண்டும்.
அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும். கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும். அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன, முடிந்தால் என்ன?
எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்.
ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்,” Nobody dies; they live in memories and in the genes of their children”.
How True?
மனைவி, மக்கள்,
பழைய பள்ளி,
தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்து போய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்து விடுவோமாம்.
உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்”.
‘யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்த போது அப்பா சொன்னது. *அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக் கொள்ள வேண்டும்? அவள் குரல் என் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது. குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’' என்று சொல்வார்.
மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச் சொல்ல வேண்டும்।
"இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன்। இறந்தவர் என்னை விட இளையவர் என்றால் பரவாயில்லை, நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டு கொள்கிறேன்। என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது.”
அவர் ஒரு விஞ்ஞான எழுத்தாளர் என்பதால் அவரிடம் திரும்ப திரும்ப மரணத்தை வெல்வது பற்றி பல்வேறு கேள்வி பதில்களில் பல்வேறு விதங்களில் கேட்கப்பட்டதுண்டு.
அதற்கு அவரின் பதில், “மரணிக்காமல் வாழ்ந்து கொண்டே இருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய் விடும். மிக நெருக்கமானவர்கள் மரணத்தில் தான், நமக்கு உண்மையான தரிசனம் கிடைக்கிறது. தினம் தினம் பல பேர் இறக்கிறார்கள். அந்தச் சாவெல்லாம் நம்மைப் பாதிப்பதில்லை.”
‘மரணம் ௭ன்பது கடவுளுக்கு வாசல்’ என்று ரஜனீஷ் சொல்லியிருக்கிறார்.
மனிதனால் இது வரை களங்கப்படாத ஒரே ஒரு சங்கதி மரணம். அதை அவன் இன்னமும் கொச்சைப் படுத்தவில்லை. கொச்சைப் படுத்தவும் முடியாது. அது துல்லியமானது. அதை அவனால் அறியவே முடியாது.
அதை அவனால் ஒரு விஞ்ஞானமாகவோ, வேதாந்தமாகவோ மாற்ற முடியாது. அது அவன் கைப்பிடியிலிருந்து எப்போதும் வழுக்கிச் செல்கிறது.
உங்கள் வாழ்வில் எதிர்பாராமல் மரணம் குறுக்கிடும் போது உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிறது. ஆம், வாழ்வு அர்த்தமற்றது தான். ஒவ்வொருவரும் கொஞ்சம் இறக்கிறோம்.”
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது:
"உங்களுக்கு மறு பிறவியில் நம்பிக்கை உண்டா? இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா? அது உடலில் எங்கு இருக்கிறது? சாவை வெல்ல முடியுமா?
நாம் சாசுவதமாக வாழ முடியுமா என்பவை."
அந்தக் கேள்வியின் பல வடிவங்கள். நாற்பது வயசுக்குப்புறம் பலர் மனத்தை இது குடைகிறது.
நீங்கள் சாசுவதமாக வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்?
நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா?
உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா? இதில் என்ன அதிசயம் !”
"சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை. ஒரு தொடர்ச்சிதானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி செல் உயிரணுக்கள் இருக்கு. ஒவ்வொரு இருபத்து நாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு.
முப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம். கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம். அதனால நாம எப்போ சாகறோம். எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாது."
" பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கிறோம்."
சுஜாதா.
மறுபிறவி பற்றி சுஜாதா (கற்றதும் பெற்றதும்)
நீக்குஉடி ஆலன் “எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. ஆனால், எதற்கும் ஒரு செட் பனியன், அண்டர்வேர் எடுத்துச் செல்லப்போகிறேன்” என்றார்.
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது — உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டா ? இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா ?அது உடலில் எங்கு இருக்கிறது ? சாவை வெல்ல முடியுமா ? நாம் சாசுவதமாக வாழ முடியுமா என்பவை அந்தக் கேள்வியின் பல வடிவங்கள். நாற்பது வயசுக்குப்புறம் பலர் மனத்தை இது குடைகிறது. இதற்கெல்லாம் பதில் தரும் விதத்தில், Immortality பற்றி ஒரு விஸ்தாரமான கட்டுரை சமயம் கிடைக்குபோது நிச்சயம் எழுதுகிறேன். அதைப்பற்றி எனக்கு தெளிவான கருத்துக்கள் உள்ளன. இப்போதைக்கு Edward Young என்பவரின் ‘Night Thoughts on Life , Death and Immortality ‘ என்னும் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள் கொடுக்கிறேன் —
“நீங்கள் சாசுவதமாக வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்? நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா ? உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா ? இதில் என்ன அதிசயம் !”
யோசித்து வையுங்கள் விவாதிப்போம்.
நிறமற்ற வானவில் – சுஜாதா நாவலில் இருந்து சில பகுதிகள்…..
நீக்குமிக நெருக்கமானவர்கள் மரணத்தில் தான், நமக்கு உண்மையான தரிசனம் கிடைக்கிறது. தினம் தினம் பல பேர் இறக்கிறார்கள். அந்தச் சாவெல்லாம் நம்மைப் பாதிப்பதில்லை.
‘மரணம் – கடவுளுக்கு வாசல்’ என்று ரஜனீஷ் சொல்லியிருக்கிறார். மனிதனால் இதுவரை களங்கப்படாத ஒரே ஒரு சங்கதி மரணம். அதை அவன் இன்னமும் கொச்சைப்படுத்தவில்லை. கொச்சைப்படுத்தவும் முடியாது. அது துல்லியமானது. அதை அவனால் அறியவே முடியாது. அதை அவனால் ஒரு விஞ்ஞானமாகவோ, வேதாந்தமாகவோ மாற்றமுடியாது. அது அவன் கைப்பிடியிலிருந்து எப்போதும் வழுக்கிச் செல்கிறது. உங்கள் வாழ்வில் எதிர்பாராமல் மரணம் குறுக்கிடும்போது உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிறது. ஆம், வாழ்வு அர்த்தமற்றதுதான். ஒவ்வொருவரும் கொஞ்சம் இறக்கிறோம்.”
சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை. ஒரு தொடர்ச்சிதானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி செல் உயிரணுக்கள் இருக்கு. ஒவ்வொரு இருபத்துநாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு. முப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம். கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம். அதனால நாம எப்போ சாகறோம். எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாது. பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கோம்…”
“அதனால…?”
“இறந்து போயிட்டாங்கன்னு சொல்றதில அர்த்தமேயில்லை..”
“எப்படி ?”
“நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை !”
மஹாபலி – சுஜாதா சிறுகதையில் இருந்து…..
‘How did you die?’
‘Death comes with a crawl,
or comes with a pounce
And whether he is slow or spry
It is not the fact that
you are dead that counts
But only, how did you die?’
சுஜாதா (பாஸ்) தூண்டிவிட்டார் போலும். பதிவைக்காட்டிலும் சுஜாதாவின்
நீக்குகட்டுரை, கதைகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி பொரிந்து விட்டார் ஸ்ரீராம்.
கேள்வி மரணத்தைப் பற்றியதல்ல. ஆத்மாவைப்பற்றியது. ஆத்மா உண்டோ, அதன் குணங்கள் யாவை ,எப்படி செயல்படுகிறது போன்ற பல துணைக்கேள்விகள் எழுகின்றன. ஆகவே அவர் திட்டவட்டமாக ஒன்றும் சொல்ல முடியாமல் எழுதி இருக்கிறார். பதிவுக்கு வெயிட் கூடிவிட்டது.
Jayakumar
நெல்லை அந்தப் படங்கள் நீங்க எடுத்ததா? அட! எப்ப? இல்லை நெட்டிலா?
பதிலளிநீக்குநெட்டில் எடுத்த படங்கள் பகிரலாமா? கௌ அண்ணா பஞ்சாயத்து ப்ளீஸ்!!! நெல்லைய வம்புக்கிழுக்காம எனக்கு நாள் ஓடாது!!!!!
கீதா
ஈஸ்வரா!
நீக்குதெறித்த தண்ணீரில் விநாயகர் நன்றாக தெரிகிறார் படம் சூப்பர்.
பதிலளிநீக்குஇலையும், பூச்சியும், கவிதையும் ரசித்தேன்.
கேள்வி பதில், சுஜாத்தா கட்டுரை கண்டோம்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு// பல்கிப் பெருகும் குடியிருப்புகளைப் பார்க்கறப்ப எனக்கு முதல்ல மனசுல தோணுவது இதுதான்....இத்தனை குடும்பங்களுக்கும் எங்கிருந்து தண்ணீர் வரும்?.. //
பதிலளிநீக்குஇங்கே தஞ்சைக்கு மேற்குப் பகுதியின் மதுரை சாலை வட்டாரத்தில் நீர் வசதி கொண்ட மனைகள் என்று விற்பனை செய்யப் படுகின்றன..