18.7.25

வானமதன் பேரெழிலே கானமென வருகுவதோ?

 

மருதாணி   ;  யாரிசைக்க வருகுவதோ 

பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடித்த படம்.  கலைப்புலி தாணு தயாரிப்பில் அவர் மகன் இயக்கிய முதல் படம்.  ஏ ஆர் ரெஹ்மான் இசை.  அந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகிக்கு சின்மயி  கொடுத்திருந்தாராம்.

அந்தப் படத்திலிருந்து மருதாணி என்னும் பாடல் இன்று பகிர்வாக..  நா முத்துக்குமார் பாடல்.  மதுஸ்ரீ குரலில்.  உடன் கத்தியிருப்பவர்கள் ஏ ஆர் ரெஹ்மான் ஹென்றி குருவில்லா.

இனிமையான பாடல்.  இனிமையான குரல்.  வெண்ணெயாக வழுக்கும் டியூனில் அதே போல வெண்ணெயாக உருகும் குரல்.  முதலில் ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசை அமைக்க நேரமில்லை என்று சொல்லி விட்டாராம்.  ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் அவர் தெலுங்கில், ஹிந்தியில் போட்ட டியூன்களையே எடுத்து தமிழில் போட்டுக் கொடுக்கும்படி சொல்ல, அதன்படியே போட்டுக்கொடுத்தாராம்.  இதில் I Love You என்கிற சின்மயி பாடல் ஒன்றும் இருக்கிறது.  2008 ல் வந்த படம்.

மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும் காதல்
கானல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
மருதாணி மருதாணி விழியில் ஏன்
அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான்
சுடு நீரும் சுடு சோறும்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி ஓ
உணரவில்லை இன்னொரு பாதி
மருதாணி விழியில் ஏன்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்பால் போலே
என்னாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஆக மொத்தம் அவசரக் கோலம் ஓ
அவளுக்கிதை காட்டிடும் காலம்
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும் காதல்
கானல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
மருதாணி மருதாணி விழியில் ஏன்
மருதாணி மருதாணி
மருதாணி மருதாணி விழியில் ஏன்
=========================================================================================

சிவாஜி கட் பனியனும் டிராயரும் போட்டு அமர்ந்திருப்பார். முன்னால் ஒரு இல்லை நிறைய சோறு.  அதை பெரிய கவளமாக எடுத்து சிவாஜி சாப்பிடுவது போல போஸ்டர் போட்டு 'சாப்பாட்டு ராமன்' என்று தலைப்பிட்டு செய்தித்தாளில் விளம்பரம் செய்து விட்டார்கள்.

இந்தத்தலைப்பு கண்ணதாசனுக்கு உறுத்தியிருக்க வேண்டும்.  நடிகர்திலகத்தை சாப்பாட்டு ராமன் என்று சொன்னால் அவர் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தோன்றியிருக்கிறது.

படபூஜை அன்று மாதவன் உட்பட எல்லோரும் அமர்ந்திருக்க, கண்ணதாசன் கேட்டிருக்கிறார், "என்ன மாதவன்..  நடிகர் திலகத்தை வைத்து படம் எடுக்கிறீர்கள்...  சாப்பிட்டு ராமன் என்று தலைப்பு வைத்திருக்கிறீர்கள்" என்று.

"படத்தில் அவர் கேரக்டர் அது.  அதனால்தான் அப்படி பொருத்தமாக வைத்திருக்கிறோம்" என்றிருக்கிறார் மாதவன்.

"என்ன கதை சொல்லுங்கள்" என்று கேட்டிருக்கிறார் கண்ணதாசன்.

அவர்களும் கதை சொல்ல,   கண்ணதாசன், "சாப்பாட்டு ராமன் கடைசிவரை சாப்பாட்டு ராமனாகவே இல்லையே..  படிப்படியாக முன்னேறுகிறாரே" என்று கேட்டிருக்கிறார்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் பூஜை என்ற நிலையில் டென்ஷனான மாதவன் "நீங்களே ஒரு தலைப்பு சொல்லுங்கள்" என்று கண்ணதாசனைக் கேட்க, கண்ணதாசன் கொஞ்சம் யோசித்து விட்டு சொன்ன தலைப்புதான் 'ராமன் எத்தனை ராமனடி' 


- கண்ணதாசன் மகன் மற்றும் இலாயக்குனர், பாடலாசிரியர் கண்மணி சுப்பு சாய் வித் சித்ரா பேட்டியில் 

=====================================================================================================

'ஹே சினாமிகா' என்று ஒரு படம் பார்த்திருக்கிறீர்களா?  துல்கர் சல்மான் நடித்த ஜாலியான மற்றும் ரசிக்க வைக்கும்   .விரும்பி காதலித்து மணம் புரிந்தவளே எதற்காக அவனை விரும்பினாளோ அதே காரணத்துக்காக பிரிய விரும்பும் கதை.  பிரிக்க அவள் நியமிக்கும் பெண் மருத்துவர் அவனை விரும்ப இவள் மனம் மாறுகிறது.  சுவாரஸ்யமான படம்.

அந்தப் படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ஒரு மகா இனிமையான பாடல் ஒன்று.  முந்தைய பாடல் காதலில் உருக வைத்தது என்றால், இந்தப் பாடல் இதயத்துக்குள் கைவிட்டு அங்கிருக்கும் ஏதோ ஒரு துன்ப நினைவை பிசைந்து வெளியே எடுக்க முஅயற்சிக்கும் பாடல்.

பாரதியார் பாடல் பாணியில் மதன் கார்க்கி எழுதி இருக்கும் பாடல்.  கோவிந்த் வசந்தா இசை.  2022 ல் வந்த படம்.

யாரிசைக்க வருகுவதோ? - ஒலி யாழினின்று வருகுவதோ? 
மாமலையின் மீதிருந்தோ? - வெள்ளி மாகமதன் மீதிருந்தோ?  

தேரிலேறி வருகுவதோ? - இசை தேனிலூறி வருகுவதோ? 
காற்றிலேறி வருகுவதோ? - இளங் காதலூறி வருகுவதோ?  

கோபுரத்துத் தலையுரசி - கடல் வீசுகின்ற அலையுரசி 
மாமரத்து இலையுரசி - என் மார்புரச வருகுவதோ?  
வானமதன் பேரெழிலே கானமென வருகுவதோ? 
நாணறுந்த இன்பமெலாம் நானருந்த வருகுவதோ?

தீவினின்று வருகுவதோ? - சுடுந் தீயணிந்து வருகுவதோ? 
காலவழி மாற்றிடுதோ? - மனக் காயங்களை ஆற்றிடுதோ 
கூட்டில் பாடும் குயிலுரசி -மழைக் காட்டில் ஆடும் 
மயிலுரசி ஏட்டில் வாடும் தமிழுரசி - என் பாட்டில் கூட வருகுவதோ?  
சேய் விழுந்து அழும் நொடியில் பாய்ந்து வரும் தாயினைப் போல் 
மண் விழுந்து நான் துடிக்க என்னை ஏந்த வருகுவதோ?  

வானமதன் பேரெழிலே கானமென வருகுவதோ? 
நாணறுந்த இன்பமெலாம் நானருந்த வருகுவதோ?  

17 கருத்துகள்:

  1. இரண்டு பாடல் வரிகளையும் பார்த்துவிட்டேன். பாடல்கள் நினைவுக்கு வரவில்லை. கேட்டுப் பார்க்கவேண்டும்.

    சிவாஜி பற்றிய நினைவுகள் நன்று. இந்தப் படப் போஸ்டரை எந்த வயதில் பார்த்தேன் என யோசிக்கிறேன்.இமேஜ் பார்க்காத, இயக்குநரின் நடிகர் சிவாஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  பாடல்களை ஓய்வாக இருக்கும்போதும், தனியாக இருக்கும்போதும் அவசியம் கேளுங்கள். 
      நன்றாக இருக்கும்.


      சிவாஜியைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ!

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரு பாடல்களுமே கேட்டதில்லை என நினைக்கிறேன். இப்போது சற்று நேரத்தில் கேட்டு விட்டு வருகிறேன். 2000, அதற்கு மேல் வந்த பாடல்களை அவ்வளவாக கேட்டதில்லை. ஒரு வேளை கேட்டால், நினைவுக்குள் வரலாம்.

    சிவாஜி பற்றிய தகவல் அறிந்து கொண்டேன். அந்த தலைப்பிற்கு சிவாஜி அவர்கள் எப்படி ஒத்துக் கொண்டார் என ஆச்சரியமாக இருந்தது. அவரின் பெருந்தன்மையை போற்ற வேண்டும். கவிஞர் கண்ணதாசனின் மகன் தன் தந்தையைப் பற்றிச் சொல்லும் சில தகவல்களை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், இது புதிது. படத்திற்கேற்ற பாடல்களையே விரல் சொடுக்கும் நேரத்தில், வடிவமைக்கும் அவருக்கு படத்தின் தலைப்பு ஒரு பொருட்டல்லவே..! படம் கேள்விபட்டுள்ளேன். பார்த்ததில்லை. அதில் என்னென்ன பாடல்கள் என்றும் நினைவில் இல்லை. பிறகு கூகுளில் பார்க்க வேண்டும். படமும், பாடல்களுமான தகவல்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு பாடல்களுமே கேட்டதில்லையா?  அட...

      படம் பார்த்ததில்லை என்றால் நான் பகிர்ந்துள்ள பாடல்களின் படமா?  அல்லது ராமன் எத்தனை ராமனடியா?  என் சிபாரிசு இரண்டாவது பாடலின் படமும், ரா எ ரா படமும் பார்க்கலாம்.

      நீக்கு
    2. நீங்கள் பாடலுடன் பகிர்ந்த படங்களை பார்த்ததில்லை. படங்களின் பெயர்களை கேட்டதுமில்லை ஆனால், சிவாஜி அவர்களின் படத்தைப்பற்றிய கேள்விப் பட்டுள்ளேன். பார்த்திருக்கிறேன் என்பதை மறுபடி படத்தைப்பற்றி கூகுள் செய்து பார்த்தால்தான் தெரியும்.

      அதுபோல் மம்முட்டி அவர்களின் மகன் நடித்த படத்தை (லக்கி பாஸ்கர்) திரையரங்கிற்கே சென்று பார்த்து வந்தோம். இந்த இருப் படங்களையும் நீங்கள் சிபாரிசு செய்திருப்பதால் கண்டிப்பாக ஒரு நாள் பார்க்கிறேன். நன்றி.

      நீக்கு
    3. இரண்டாவது பாடலின் படம் பார்க்கலாம் என்பதே என் சிபாரிசு.

      நீக்கு
  4. வருகுவதோ...

    இந்த வார்த்தை என்ன மாதிரியான இலக்கணம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கிருந்து வருகுவதோ?- ஒலியாவர் செய்குவ தோ?-அடி தோழி!

      குன்றி னின்றும் வருகுவதோ?-மரக்
      கொம்பி னின்றும் வருகுவதோ?-வெளி
      மன்றி னின்று வருகுவதோ?-என்தன்
      மதி மருண்டிடச் செய்குதடி-இஃது, (எங்கிருந்து)

      இது பாரதியார் பாடல்.  இதிலிருந்து இன்ஸபிரேஷன்தான் மதன் கார்க்கி பாடல்!

      https://tinyurl.com/3y96vusm

      நீக்கு
  5. வருகுவதோ...
    விளக்கத்திற்கு நன்றி ஸ்ரீராம்...

    புதிய தகவல்...
    மதன் கார்க்கி பற்றி எல்லாம் தெரியாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் உங்கள் அபிமான டயமண்டுவின் புதல்வர்!

      நீக்கு
    2. ஓ... டயமண்டுவின் புதல்வரா.? ஆனால், நல்ல புத்திசாலி குடும்பம்தான். ஆங்கிலதமிழ்தான் எத்தனை மாறுபட்ட அர்த்தத்தைத் தருகிறது. :))

      நீக்கு
    3. மதன் கார்க்கியின் வ்சசனங்கள் நன்றாக இருக்கின்றன.  சில சமயம் பாடல்களும். 

      புத்திசாலிதான்.

      நீக்கு
    4. நீங்கள் சொன்னதும் இவரைப் பற்றிய (மதன் கார்க்கி) சிறப்பான செய்திகளை கூகுள் மூலம் பார்த்து வந்தேன். பன்முக திறமைகள் பெற்றவர் என அறிந்தேன். எனக்கும் இதுவரை இவரைப்பற்றி தெரியாது. நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!