12.11.25

தகவல்களை கூகுளில் பதிவிறக்கம் செய்பவர்கள். யார்?

 

கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன் : 

1. யூடியூபில், இந்த மாதிரி சாம்பார் பொடி பண்ணுங்க, பக்கத்து வீடு வரை வாசம் வரும், தெருவே மணக்கும் என்றெல்லாம் சொல்றாங்களே. சாம்பார் பொடியின் பங்கு, சாம்பாரை நல்லா ருசியா வரவைப்பதா இல்லை தெருவையே மணக்க வைப்பதா?   

# கொஞ்சம் மிகைப் படுத்திச் சொல்வது பெரிய தவறு இல்லையே.  கேட்டார் பிணைக்கச் சொல்லும் முயற்சி.

2.  கிரிக்கெட்டில், T20, ODIல், கடைசி 40-50 ரன்களை,18 பந்துகளில் அடித்து வெற்றிபெறச் செய்கிறவருக்கோ, இல்லை, கடைசி 2-3 விக்கெட்டுகளை சட்னு எடுத்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்பவருக்கோ மேன் ஆஃப் தி மேட்ச் கொடுப்பதில்லை. அந்த இன்னிங்க்ஸில் யார் அதிக ரன் அடித்தார்களோ அவருக்குக் கொடுத்துவிடுகிறார்கள். இது அநீதி இல்லையா? ஒருத்தன் 90-100 ரன்கள் எடுத்தால்தான் என்ன? கடைசி 40 ரன்களை மிகக் குறைந்த பந்தில் விளாசி வெற்றிபெறச் செய்பவர்தானே ஆட்ட நாயகன்/நாயகியாக வேண்டும்?  

# ஆட்டத்தின் போக்கை திசை திருப்பிய நபரைத் தான் கொண்டாட வேண்டும்.  அல்லது புதிதாக வந்து ஜொலித்தவரை  வெளிச்சம் போட்டு க் காட்ட வேண்டும்.‌

 3.  இப்போதெல்லாம் வீட்டில் பட்சணங்கள் செய்வது குறைந்துபோய், தீபாவளிக்கு ஒவ்வொரு வீட்டிலும் கடையிலிருந்து பட்சணங்கள் வாங்கி, அதை வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்குக் கொடுக்கிறார்களே. எப்படி இப்படி நாம் சோம்பேறிகளானோம்?  

# சோம்பல் சுகம் எல்லாருக்கும் புரியாது ! மேலும் தர நிர்ணயம் தூக்கலாக இருப்பதுவும் இதை ஊக்குவிக்கக் கூடும்.

4.  மாட்டுப்பாலில் கலப்படம் செய்து (அதாவது ஏதோ கெமிக்கல்கள் அல்லது ப்ராஸஸ்கள் செய்து) நமக்கு பாக்கெட் பால் விற்கறாங்க. இப்போ அதுவும் உடம்புக்கு நல்லதல்ல, ஏ2 வகை பால்களையே வாங்குங்க என்று சொல்றாங்க. இந்திய அரசோ.. வெளிநாட்டுப் பால் பொருட்கள் நமக்கு வேண்டாம். மாடுகளுக்கு அசைவ வகையறா கொடுத்து செயற்கையாக பால் உற்பத்தி பண்ணி நம்ம தலைல கட்டப்பார்க்கிறாங்க என்கிறது. அப்போ நாம சாப்பிடும் பால், உண்மையான பாலா இல்லையா?  

# அவர்களே " செறிவூட்டப்பட்ட" என்று சொல்கிறார்கள்.‌ எதைச் சேர்த்துச் செறிவூட்டுகிறார்களோ யார் கண்டது ? தனிமாட்டுப் பாலாக இல்லாதவரை,  அது வெகு தூரம் தாண்டி வந்து விற்கும் போது அதன் கற்பு கேள்விக்குரியதாகிவிடுகிறது.‌

5. எபில, வாரத்தின் ஏதாவது கிழமையில், இந்தவார வாசகரின் ஓடிடி தேர்வு என்று ஒரு பகுதியை ஆரம்பித்தால் என்ன? எந்த சீரீஸ் அல்லது படம் பார்ப்பது என்று தேர்ந்தெடுப்பதே பெரிய தலைவலியாக இருக்கிறதே.

# நல்ல யோசனை.  முயன்று பார்ப்போம். எந்தக் கிழமை என்பதை நி.ஆ சொல்லட்டும்.

& வாசகர்கள் அவர்களின் பரிந்துரைகளை அனுப்பினால், புதன் அல்லது வியாழன் பதிவில் நாங்கள் வெளியிடத் தயார்! 

- - - - - - - - -

கே. சக்ரபாணி , சென்னை 28: 

1. காரில். சீட் பெல்ட். அணிவது. கட்டாயம்  என்று. இருப்பது  போல.   கனரக வாகனங்கள்  லாரி ஓட்டுனர்களுக்கு  சீட் பெல்ட் அணியும்   அமைப்பே  இல்லையே  ஏன்? 

& சாலையில் ஓட்டப்படும் எல்லா வாகனங்களிலும் ஓட்டுனர் சீட் பெல்ட் அணிய வேண்டியது கட்டாயம் என்றுதான் மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது. சில வண்டிகளில் சீட் பெல்ட் அணியும் அமைப்பு இல்லை என்றால், அதற்கு என்ன தண்டனை, யாருக்கு தண்டனை என்ற விவரங்கள் சரியாகத் தெரியவில்லை! 

2. நமக்கு  ஏதேனும்   தெரிந்து  கொள்ளநினைத்தால்  கூகுளை. பார்த்து. தெரிந்து  கொள்கிறோம்.   இதையெல்லாம்  கூகுளில்   பதிவிறக்கம்   செய்பவர்கள். யார்?,  அவர்களுக்கு  எப்படி. அந்த விபரங்கள்  கிடைக்கின்றன. 

# என் புரிதலின் படி, இவர் பதிவிட்டது என்றில்லாமல் யார் பதிவிட்டடதானாலும் அதைத் தேடிப் பயன்படுத்தும் திறன்தான் தேடிகளின் பெருமை.  இணையத்தில் இருக்கும் எதையும் விரைவில் தருகிற ஆற்றல்.

# உங்களுக்கு ஒரு சிறிய பரிசோதனை வாய்ப்பு. பள்ளி மற்றும் கல்லூரி சோதனைச் சாலை சோதனை போன்று. 

உங்கள் கணினி அல்லது மொபைல் கூகிள் ஜன்னல் சென்று, அங்கே " சக்ரபாணி சென்னை 28" என்று டைப் அடித்து, search செய்யுங்கள். நீங்கள் எங்கள் blog வலைப்பூவில் கேட்ட சில கேள்விகள் உங்கள் தேடுதலில் கிடைக்கும். 

இதுதான் கூகிளின் சாதனை. எப்பொழுதோ நீங்க கேட்ட கேள்விகளை உடனுக்குடன் சேகரித்து வைத்துவிடும். 

ஆக, கூகிளில் சில விவரங்களை நீங்களே பதிவிறக்கம் செய்கிறீர்கள்! 

= = = = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 

நம்ம ஊர்ல வரலாற்றுக் காலங்களில் அரசர்கள் போருக்கும் பயணத்திற்கும் குதிரைகளைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியும்.  படங்களில் காண்பிக்கும்போதும் குதிரை மீது அரசர் அமர்ந்து போர் புரிவதுபோலக் காண்பிப்பதைப் பார்த்திருப்போம். அது சரி.. எதிரி நாட்டு வீரன் ஈட்டியை குதிரையின் மேல் எறிந்தால் என்ன ஆகும் என்று யோசித்திருக்கிறோமா? லண்டன் ட்வர் மியூசியத்தில், குதிரைகளுக்கான கவசம் மற்றும் அதன் மீது அமர்ந்து போர் புரிபவருக்கான கவசத்தை வைத்திருந்தார்கள் (இரும்புக் கவசம்). அதனால் அரசரின் மீது ஈட்டியை எறிந்தாலும் குதிரையின் மீது ஈட்டியை எறிந்தாலும் (அதாவது அதன் இதயப் பகுதியை நோக்கி அல்லது முகத்தை நோக்கி), பெரிய பாதிப்பு ஏற்படாது.  ஆனால் எனக்கு வந்த சந்தேகம், இந்தக் குதிரை, தன்னுடைய கவசத்தையும், தன் மீது ஏறி இரும்புக் கவசத்துடன் அமர்ந்திருக்கும் வீரனையும் சேர்த்து எப்படித் தூக்கிக்கொண்டு பாய்ந்து ஓடியிருக்கும் என்பது. உங்களுக்கு ஏதேனும் தோன்றுகிறதா?



ஒரு லிட்டர் மினரல் பாட்டிலைத் தூக்கிக்கொண்டு நடந்தாலே ஏதோ பெரிய சுமையைக் கையில் வைத்துக்கொண்டு நடப்பது போல இருக்கிறது. குதிரையின் பாதுகாப்புக் கவசத்தைப் பாருங்கள். அருகில் இருக்கும் வீரனின் பாதுகாப்புக் கவசமும். எவ்வளவு கனம் கனக்குமோ.  அது சரி, இவ்வளவு கவசத்தையும் போட்டுக்கொண்டு சட் என்று திரும்ப முடியுமா இல்லை ஓடத்தான் முடியுமா?

எல்லா வீரர்களுக்கும் இந்த மாதிரி கவசம் கொடுத்திருப்பாங்களா என்ற உங்கள் சந்தேகம் புரிகிறது. உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை.. இதெல்லாம் அரசர்களுக்கும் மிக முக்கியத் தளபதிகளுக்கும்தான். குறிப்பாக இவை அரசருக்கானது.

- - - - - - - - -

(மூக்கைப் பொத்திக்கொண்டு படிக்கவும்) 


இது என்னவாக இருக்கும் என்று தெரிகிறதா?  இதுதான் லண்டன் டவரில் (கோட்டையில்) இருந்த டாய்லெட். (14ம் நூற்றாண்டு). இதுபோல ஆறு டாய்லெட்டுகள் இருந்தனவாம். படத்தைப் போட்டாச்சு. விளக்கமும் கொடுத்துவிடவேண்டியதுதான். அரசர் உட்கார்ந்துகொள்ளும்படியான அமைப்பு. வேஸ்டுகள் கோட்டைச் சுவரிலிருந்து வெளியே விழும்படியாக அமைத்திருந்திருக்கிறார்கள் (சமயத்தில் கோட்டைச் சுவரிலும் விழும்). இது கோட்டையின் அழகைக் குலைக்ககூடாது என்பதற்காக, கோட்டையின் பின்புறம் இதனை அமைத்திருக்கின்றனர். பிற்பாடு தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்று இதனை மறைக்கும்படியாக கொஞ்சம் தள்ளி சுவர் ஒன்றையும் கட்டியிருக்கின்றனர்.


இதைத்தான் அங்கு விளக்கியிருக்கின்றனர். 

உங்களுக்குத் தெரியுமா?  இங்கிலாந்தின் அரசன் ஒருவன் கிபி 1016ல் டாய்லெட்டில் வைத்து அம்பால் கோரமாகக் கொல்லப்பட்டான்.  அதற்கு அப்புறம்தான் அரசன் டாய்லெட் போகும்போதும் கூடவே காவலர்களை வைத்துக்கொள்ளும் பழக்கம் வந்தது. இதை நினைத்து அசூயை படாதீர்கள். நம் தேசத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது,  இரு காவலர்கள் டாய்லெட்டைத் தூக்கிச் செல்வார்கள். அதன் படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 

= = = = = = = = = = = = =

KGG பக்கம். 

சென்னையில் தேர்தல் காலத்தில் இருந்தால், தவறாமல் ஓட்டுப் போட்டுவிட்டு வரும் வழக்கம் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் உண்டு. 

எங்கள் தெருவில் வோட்டுப் போடாத சில நபர்களை நான் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் ஏன் வோட்டுப் போடவில்லை என்று கேட்டுத் தெரிந்துகொள்வேன். 

ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையான பதில்கள் சொல்வார்கள். 

1) என்னுடைய ஒரு வோட்டு என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிடப் போகிறது? 

2) நிக்கிறவன் எல்லோரும் அயோக்கியப் பசங்க எவனுக்கு வோட்டுப் போட்டாலும் தண்டம். 

3) எப்படி இருந்தாலும் -----*** கட்சிக்காரன்தான் ஜெயிப்பான். இதுல நம்ம ஏன் போய் வோட்டுப்போட்டு ஒடம்பை கெடுத்துக்கணும்? 

4) என் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது. அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை. 

5) யார் சார் இந்த வெய்யிலில் போய் வரிசையில் நின்று வோட்டுப் போடுவது? " அப்போ சாயந்திரம் போடலாமே?" .. " அதுக்குள்ள என்னுடைய வோட்டை எவனாவது போட்டிருப்பான். "

6) "வோட்டுப் போடலாம் - ஆனால் எதுக்கு சார் என் கை விரலில் மை வைக்கிறார்கள்? என்னைப் பார்த்தால் கள்ள வோட்டுப் போடுகிறவனைப் போலவா இருக்கு? நான் என்ன திரும்பத் திரும்ப வோட்டுப் போடப் போகிறேனா ? என் மேல் நம்பிக்கை இல்லையா!" 

நான் இவர்களுக்குச் சொல்வது எல்லாம் ஒன்றுதான். 

வாக்குப் பதிவு முடிந்து, முடிவு அறிவிக்கும் நாளுக்குப் பின் வாக்கு எண்ணிக்கை  விவரங்கள் செய்தித் தாள்களில் வரும்போது உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் என்ன என்று படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். 

உதாரணமாக நான் வாக்களித்த லேடஸ்ட் தேர்தலில் (2024), வேட்பாளர்கள் பெற்ற வோட்டுகள் விவரம் : 


இவர்களில் top 2 வேட்பாளர்கள் தவிர மீதி எல்லோருமே nota வுக்குக் கீழே வோட்டுகள் வாங்கியுள்ளனர்! நான் மேலே சொல்லியுள்ள காரணங்களால் வோட்டுப் போடாதவர்களைவிட கழுதையோ குதிரையோ ஏதோ ஒன்றுக்கு வோட்டுப் போட்டவர்கள் எவ்வளவோ மேல்! 

= = = = = = = = = = = = = = = 

40 கருத்துகள்:

  1. வாக்களிக்காதவர்கள், மரணப்படுக்கை, எழுந்து நடக்கவே முடியாதவர்கள் தவிர மற்றவர்கள், எந்த ஒரு நாட்டின் குடிமகனாக (டாஸ்மாக் அல்ல) இருக்க லாயக்கில்லை. செய்திகளைப் படித்து விமர்சிக்கவோ கருத்து கூறவோ கொஞ்சம்கூடத் தகுதியில்லாத மனிதர்கள் இவர்கள்.அரசின் எந்த உதவியும் இவர்களுக்குப் போகக்கூடாது

    பதிலளிநீக்கு
  2. பலருக்கு தாங்கள் என்ன சீரீஸ் பார்க்கிறோம் எனச் சொல்லத் தயங்குவார்கள். தன்னைப் பற்றிய பிம்பம் கலையுமோ என்று. நான் 2018ல் ஓரிரு மேற்கத்தைய தொடர்களைக் காண ஆரம்பித்ததும் என் பெண், நேரத்தை வீணாக்காதீங்க உருப்படியா எதையாச்சும் பண்ணுங்கன்னு சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்

    பதிலளிநீக்கு
  3. /சாம்பார் பொடியின் பங்கு, சாம்பாரை நல்லா ருசியா வரவைப்பதா இல்லை தெருவையே மணக்க வைப்பதா? /
    சாம்பர் பொடியின் வேலை ருசியைக் கொண்டு வருவதுதான். ஆனாலும், நல்ல மணமுள்ள உணவு அதிகப்படியான ருசியைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான பூர்வ உண்மை. ஜலதோஷம் இருக்கும்போது எந்த உணவுமே ருசிப்பதில்லையே! நல்ல மணமுள்ள சாம்பாரே ருசிக்கும் / ருசியுள்ள சாம்பாரே நன்கு மணக்கும் என்ற நம்பிக்கையே இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்டுகளுக்குக் காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூர்யா சார்.. உணவு பிரசன்டேஷன், கொடுப்பவர், உணவின் தன்மை, மணம், நம் பசி என பல காரணிகள் உண்டு. என்னுடைய எண்ணம், ஆறிப்போனாலும் ருசியாக இருக்கும் உணவே சிறந்தது

      நீக்கு
  4. புதன் கேள்வி பதில் பகுதிக்குக் கேள்விகளை எப்படி யாருக்கு அனுப்ப வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் பதியலாம். அல்லது 9902281582 என்ற கேஜிஜி வாட்ஸ் அப் எண்ணுக்கு தம் அனுப்பலாம். குரல் அழைப்பு தவிர்க்கவும்.

      நீக்கு
  5. ஒரு ஹோட்டல், விற்பனை நிலையம், தங்குமிடம், வாங்கிய பொருள், போன்ற பலவற்றையும் நாம் நேர்மையா ரிவ்யூ செய்யணும். அதை நம்பித்தான் பலரும் அவற்றை உபயோகிக்கறாங்க.அதனால்தான் கூகுள் ரிவ்யூ பார்க்கிறோம் கூகுள் சர்வீஸ் உபயோகிக்கிறோம். தகவல் களஞ்சியம் கூகுள் ஆனால் நம் பிரைவசிக்குக் கேடுதான்

    பதிலளிநீக்கு
  6. /எபில, வாரத்தின் ஏதாவது கிழமையில், இந்தவார வாசகரின் ஓடிடி தேர்வு என்று ஒரு பகுதியை ஆரம்பித்தால் என்ன?/
    நல்ல ஐடியாவாகத்தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  7. //இது தான் கூகுளின் சாதனை..//

    உஷ்! கொஞ்சம் அடக்கமாய். ZOHO ஆர்வலர்கள் பெருமூச்சு விடப் போகிறார்கள்!

    பதிலளிநீக்கு
  8. இன்று நாம் உபயோகிக்கும் டாய்லெட்டின் வடிவமைப்பு, இன்ன பிற சமாச்சாரங்களை அன்றே வழக்கத்தில் கொண்டிருந்த பிரிட்டிஷாரைப் பாராட்டுவோம். அந்த காலகட்டத்தில் நாம் இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று நினைத்துப் பார்த்தால் வெட்கமாக இருக்கிறது. ஹாயாக.. காற்றோட்டமாக!..

    ஸ்டோர் என்று அழைக்கப்பட்ட வரிசையாக ஏழெட்டு வீடுகள் கொண்ட இடத்தில் ஒரு பொது கழிப்பிடம் இருக்கும். 'ப' வடிவில் வரிசையாய் குந்த மேடை போன்ற அமைப்பு. ஒரே நேரத்தில் ஒருத்தர் மட்டும்.. உள்ளே யாரோ இருக்கிறார் என்பதைத் தெரியப்படுத்த வெளிச்சுவர் மேல் நீர் நிரப்பிய சொம்பு ஒன்று அடையாளமாய்த் திகழும். ஒரே நேரத்தில் ஒருவர் மட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி!

      நீக்கு
    2. இங்கிலாந்தில் கூட அரச குடும்பத்தினர்களுக்கு மட்டுமே கழிவறை இருந்திருக்கும். அதே அரண்மனையில் வசிக்கும் வேலைக்காரர்களுக்கு அத்தகைய வசதிகள் கட்டாயம் இருந்திருக்காது.

      மத்திய கால ஐரோப்பாவில் (பிரான்ஸ் நாட்டில் என்று படித்த ஞாபகம்) சுகாதார நிலை பற்றி படித்துப்பார்த்தால் அருவருப்பாக இருக்கும். மக்கள் மனித கழிவுகளை வீட்டிலிருந்தும் சில சமயம் மாடியிலிருந்தும் தெருவில் வீசுவர்களாம். தெருவில் செல்பவர்கள் அது தங்கள் மீது படாமல் இருக்க குடைபிடித்து செல்வார்களாம். தெருவில் கிடக்கும் கழிவுகள் காலிலோ உடைகளிலோ படாமல் இருக்க ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து நடப்பார்களாம்.

      அதையெல்லாம் பார்க்கும்போது நம் முன்னோர்கள் மிக சுகாதாரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து பெருமை படலாம்.

      நீக்கு
  9. /// தெருவே மணக்கும் என்றெல்லாம் சொல்றாங்களே... ///

    ரெண்டுக்குமே சாம்பார் வைக்கத் தெரியாது

    பதிலளிநீக்கு
  10. சாம்பார் உருவான தஞ்சையிலேயே ஒழுங்கான சாம்பார் கிடைப்பதில்லை..

    சித்திரமும் கைப் பழக்கம் என்பது மாதிரி தான் சாம்பார் வைப்பதும்...

    பதிலளிநீக்கு
  11. நான் புடிச்ச முயல் கதை தான் இன்றைய சாம்பார்...

    பதிலளிநீக்கு
  12. திரு. கே. ஜி. ஜி. அவர்களுக்கு என் கேள்விகளுக்கு
    பதில் அளிப்பதற்கு நன்றி.. நீங்கள். சொன்னபடி
    கூகுளில் சென்று என்றவிபரத்தை கொடுத்தேன்.
    சக்ரபாணி என்ற பெயருள்ள. பிரபலங்கள். மற்றும்
    கோயில் விபரங்கள் வந்தது. என்னைப்பற்றி ஒன்றும்
    வரவில்லை. நான் இன்னும் பிரபலம். ஆகவில்லை
    என்பதை அறிந்து கொண்டேன். நன்றி.
    கே. சக்கரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்ரபாணி சென்னை 28 என்று கொடுத்து, தேடவும்.

      நீக்கு
  13. /// ரெண்டுக்குமே
    சாம்பார் வைக்கத் தெரியாது.. ///

    ரெண்டுக்குமே.... என்ன இது.. ?
    ரெண்டுக்குமே - ரெண்டு பேருக்குமே... எழுத்துப் பிழை

    அதாவது கேட்பவருக்கும் சொல்பவர்க்கும்...

    பதிலளிநீக்கு
  14. இப்போதெல்லாம் வெளியில் பட்சணங்களை ஆர்டர்கொடுப்பதற்க்கு காரணம் பெண்களின் அலுவலக நேரம் ஒரு முக்கிய காரணம். வீடுகளில் ஆட்கள் குறைந்து போனதும் ஒரு காரணம். நிறைய செய்து விட்டு யார் சாப்பிடுவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடிடி வாசகர் தேர்வு சரியான யோசனையாகப் படவில்லை. ஒவ்வொருவர் ரசனை ஒவ்வொரு மாதிரி. சரியாக வருமா

      நீக்கு
  15. பங்களா தேஷிகள் மீனை வெட்டிப் போட்டு சாம்பார் என்று காய்களுடன் வைக்கின்றதை பார்த்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  16. அதனை மச்சி டால் கறி என்பார்கள்

    பதிலளிநீக்கு
  17. //2. நமக்கு ஏதேனும் தெரிந்து கொள்ளநினைத்தால் கூகுளை. பார்த்து. தெரிந்து கொள்கிறோம். இதையெல்லாம் கூகுளில் பதிவிறக்கம் செய்பவர்கள். யார்?, அவர்களுக்கு எப்படி. அந்த விபரங்கள் கிடைக்கின்றன. //
    //ஆக, கூகிளில் சில விவரங்களை நீங்களே பதிவிறக்கம் செய்கிறீர்கள்! //

    அது பதிவிறக்கம் அல்ல. பதிவிறக்கம் = Download
    அது பதிவேற்றம் (Upload) என்று இருக்கவேண்டும்.

    OTT தொடர் சிபாரிசு யோசனையை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி ஐயா. மனதில் பதிவேற்றம் செய்துகொண்டேன்.
    கே. சக்கரபாணி

    பதிலளிநீக்கு
  19. நெல்லை - முதல் கேள்வி - நெல்லை அதெல்லாம் பார்வையாளர்களை கவர்வதற்காக வைக்கும் தலைப்பு என்று உங்களுக்குத் தெரியாதா என்ன!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. ஓடிடி பற்றி, ஸ்ரீராம் அவ்வப்போது வியாழனில் சொல்வதுண்டு. ரெகுலராக இல்லைனாலும்

    ஓடிடி இல்லாத எனக்கு அட்லீஸ்ட் கதைச் சுருக்கம் விமர்சனம் கிடைக்கும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!