20.11.25

மரத்தின் மீதுதான் பக்தி என்றபின் இலைகள் பாசமே ஏனடா.

 *செங்கல்பட்டில் திருப்பதி*

"செங்கல்பட்டில் திருப்பதி. ஆம், ஆச்சரியம்... ஆனால் உண்மை
இனிமேல் யாரும் திருப்பதி பெருமாளை 5நிமிடம், 10 நிமிடம் என தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம் அடையாமல் இருங்கள்.
நேராக செங்கல்பட்டிற்கு செல்லுங்கள், 50ம் எண் கொண்ட திருப்போரூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி திருவடிசூலம் என்னும் மிக அழகிய குக்கிராமத்தில்இறங்குங்கள்.

2 கிலோமீட்டர் நடக்க வேண்டும். வழியில் மிகப் பழமையான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலமான இடைச்சுரநாதர் (சிவன்) ஆலயம் வரும்.

இவரையும் அம்பாளையும் தரிசித்து விட்டு இடது புறமாக மறுபடியும் நடங்கள். மலை ஒன்று ஆரம்பமாகும். அப்படியே வலது புறம் திரும்பி நடங்கள்.

நீங்கள் 7 அழகிய மலைகளைக் காண்பீர்கள். உங்கள் கண்களுக்கு இரு சிறிய கோயில்கள் தென்படும். இடது புறமாக ஒரு சாலை பிரியும், அதைப் பின்பற்றி சென்றீர்கள் என்றால்...  உலகிலேயே மிக உயரமான 51 அடிஅற்புதமான தரிசனம் தரும் கருமாரி அம்மனை சேவிக்கலாம்.

அப்படி ஒரு அழகு, தெய்வாம்சம், காண கண்கள் கோடி வேண்டும். மிகவும் விஸ்தாரமான இடத்தில், கோழியும், கெளதாரியும், வான்கோழியும் சுற்றி திரியும் இயற்கை எழில் கொஞ்சும் அழகுள்ள இடத்தில் இந்த கருமாரி வீற்றிருக்கிறாள். நீங்கள் உங்களையே மறந்துவிடுவீர்கள்.

கருமாரி அன்னையின் பின்புறமே அவர் அண்ணன் பெருமாள் ஸ்ரீநிவாசனாக மிகப் பெரிய அளவில் வீற்றிருக்கிறார்.

திருப்பதி சென்று சரியாக கடவுளை காண முடியாத ஏக்கத்தில் இருப்பவர்கள் இங்கே நம்மூரிலேயே, சென்னைக்கு அருகிலேயே, செங்கல்பட்டிலிருந்து ஒரு 10 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த அதி அற்புத தரிசனம் செய்யலாம். அண்ணனையும், தங்கையையும் ஒரு சேர காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இவர்கள் இருவரையும் தரிசித்து விட்டு, இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் அஷ்டபைரவர் கோயிலைப் பார்க்கலாம். இங்கே உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத மிகப்பெரும் கோயிலினுள் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம்.

கோயில் நுழைவு வாயிலில் பௌர்ணமி குகை கோயில் உள்ளது. ஆனால் இந்த குகை கோயிலில் இருக்கும் சிவனைக் காண நீங்கள் பௌர்ணமிக்கு 3 நாட்கள் அல்லது பூரட்டாதிக்கு 3 நாட்கள் முன்பே பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல முடியும். சிவனை இங்கு பாதாளத்தில் காணலாம்.

முக்கிய குறிப்பு - சிவனைப் பார்க்க வேண்டுமெனில் நீல நிற ஆடைஅணிந்து தான் செல்ல வேண்டும்

சிவனடியார்களே, சிவபக்தர்களே, தயவு செய்து இந்தக் கோயிலைப் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் சொல்லவும்.  வசதியுள்ளவர்கள் கார், பைக், வேன் போன்ற வாகனங்களில் வருகிறார்கள்.

வசதியில்லாதவர்கள் நடந்துதான் வரவேண்டும். இது ஒரு குக்கிராமம் என்பதால் ஆட்டோவோ, ஷேர் ஆட்டோவோ இல்லை.  ஆள் அரவவமற்ற பகுதி என்பதால் காலையில் சென்று மதியமோ அல்லது மாலை இருட்டுவதற்குள் திரும்பி வந்து விடுவது போல் உங்கள் பிரயாணம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.  சைவமும், வைணவமும் ஒன்றாக கலந்து ஒரு சுற்றுலா சென்ற மகிழ்ச்சியும் கிடைக்கும்.."

கடந்த வியாழக்கிழமை பேஸ்புக்கில் JKC ஸார் இந்த பக்கத்தை சுட்டி இருந்தார்.  சென்று படித்து கட்டை விரல் உயர்த்தி வந்தேன்.  மாலை ஆறு மணிக்குமேல் ஒரு யோசனை...  அங்கு சென்று வந்தால் என்ன?  பாஸை கேட்டேன்.  சம்மதம் என்றார்.  உடன் சகோதரரையும் அழைத்துக் கொண்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை ஆறரை மணிக்கு புறப்பட்டோம்.

நாங்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணம்தான் என்றாலும் இடம் புதிது,.   டிரைவர் நான் ஏதோ வாரா வாரம் அங்கு சென்று வருவது போல சந்தேகம் கேட்டுக் கொண்டே வர, காரை சாலையோரமாக நிறுத்தி மேற்கண்ட மெஸேஜைப் படிக்க வைத்து, "அங்கதான்போறோம்...  நானும் இதுவரை பார்த்ததில்லை...  புரியுதா?  வண்டியை எடுங்க" என்று பயணம் தொடர்ந்தோம்.

பாஸ் பசி தாங்க மாட்டார் என்று ஏழரை மணி போலவே கூடுவாஞ்சேரி, பொத்தேரி போகும்போதே ஏதாவது சிறிய அளவில் சாப்பிட்டு விடலாம் என்று ஹோட்டல் பார்க்கச் சொல்ல, அவ்வளவு சீக்கிரம் டிஃபன் முடிக்க முடியாது என்று பாஸ் மறுக்க, டிரைவரும் 'இப்போது வேண்டாம், வேண்டுமானால் நீங்கள் சாப்பிடுங்கள் நான் பார்சல் கட்டிக்கொள்கிறேன்' என்றார்.  உபரியாய் 'நானும் பசி தாங்க மாட்டேன்.  பசியோடு வண்டி ஓட்ட என்னால் முடியாது' என்றும் பகர்ந்தார்.

போகின்ற இடம் ஆளரவமற்ற இடம், கடைகள் இருக்காது என்று நான் எச்சரித்தும் பயனில்லை.  'மணி ஏழரை ஆகப்போகுது.  ஏழே முக்காலுக்குள் கோவில் சென்றோமானால் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ பார்த்து விட்டு திரும்பும்போதே சாப்பிட்டுக் கொள்ளலாம்' என்றார் டிரைவர்.  பாஸும் அதை ஆமோதித்து 'அவசரத்துக்கு பிஸ்கட் பாக்கெட் வைத்திருக்கிறேன்.  கொஞ்சம் மாதுளை முத்துக்களும் வைத்திருக்கிறேன்.  ஒன்றும் ஆகாது.  பார்த்துக் கொள்ளலாம்' என்றார்.  பசி நேரம் தாண்டினால் அவருக்கு என்னென்ன ஆகும் என்று பார்த்தவன் நான்.  நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் வேறு வழியின்றி பயணத்தைத் தொடர்ந்தோம்.

அவ்வளவு சொல்லியும் டிரைவர் மறுபடியும் எங்கு செல்வது, எப்படி திரும்புவது என்று கேட்டபடி வந்தார்.  நான் மேப் போட்டுக் கொண்டேன்.  டிரைவருக்கு அனுப்பலாம் என்றால் அவர் ஃபோன் சரி இல்லையாம்.  'ஹேங் ஆகும், நீங்களே மேப் போட்டுக் கொண்டு எனக்கு சொல்லுங்கள்' என்றார்.  அவர் ஃபோனை அவர் உபயோகப்படுத்திய விதத்தைப் பார்த்தால் அவர் சொன்னதில் நம்பிக்கை ஏற்படவில்லை.  மறுபடி வேறு வழியுமில்லை.  விளையாட்டுப்பிள்ளை கூகுளை நம்பி பயணத்தைக் தொடர்ந்தோம்.  கோவில்கள் பார்த்து முடித்து காலை பதினோரு மணிக்குள் வீடு திரும்பி விடலாம் என்று மனப்பால் குடித்திருந்தேன்.

சாலை வழிக் காட்சி 

பாலமே கூரையாய் சாலையே தரையாய் 
ஜன்னல் இல்லை கதவுகள் இல்லை 
ஆனால் பாதிப்பாக 
மழையுமில்லை வெயிலுமில்லை 
திருடிச்செல்ல பெரிய பொருளும் 
எதுவுமில்லை 
எங்களுக்கும் இருக்கிறது வீடு 
இயற்கை உபாதைகள் தீர்க்க 
இருக்கிறது 
பல மறைவிடங்கள், பொதுக் 
கழிவறைகள்...
எதற்கும் குறைவில்லை 
ஒன்றைத்தவிர...


மறைமலை நகர் தாண்டி சிங்கபெருமாள் கோவில் இடம் வந்தததும், மேப் சிங்கப்பெருமாள் கோவில் செல்லும் வழியிலேயே திரும்ப சொன்னது.  திரும்பினோம்.

"செங்கல்பட்டு டு திருப்போரூர் வ்ழின்னீங்களே..  அப்போ செங்கல்பட்டு போகவேண்டாமா?' என்று கேட்டார் டிரைவர்.  எரிச்சல் வந்தாலும் அடக்கிக் கொண்டு 'வழி இப்படிதான் காட்டுது திரும்புங்க' என்றேன்.

சிங்கப்பெருமாள் கோவில் செல்லும் வழி என்று வலது புறம் அம்புக்குறி போட்டு ஒரு தெரு திரும்ப, நாங்கள் அதைத் தாண்டிச் சென்றோம்.

நாங்கள் செல்லவேண்டிய திரு இடைச்சுரம் அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் காட்டியது. 

அதென்ன திருஇடைச்சுரம்?

தொண்டை நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது 27வது தலமாகும். மக்கள் வழக்கில் தற்போது "திருவடிசூலம்" என்று வழங்குகிறது.

கொஞ்ச தூரத்திலேயே "நீங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைகிறீர்கள்" என்ற அறிவிப்பு இருந்ததது.  அந்த இடத்தின் பெயராய் இருந்த அறிவிப்புப் பலகையை படம் எடுக்க முடியவில்லை.  பாஸ் இடதுபுறம் அமர்ந்திருந்தார்.  ஏதோ தேனம்பாக்கம் என்பதுபோல பார்த்த நினைவு.  ஏதோ அடர்நத காடு போல இருக்கும் என்று பார்த்தால் சின்னச்சின்னதாக நிறைய ஊர்கள் உளளடங்கிய பகுதிகளில் இருக்க, அதற்கான பெயர்ப்பலகைகள் அந்தச் சிறிய ஒற்றையடிப் பாதை போன்ற சாலையில் காணப்பட்டன.

பாஸ் அதற்குள்ளாகவே முன்னெச்சரிக்கையாக 'மேரி பிஸ்கட்'  பாக்கெட் ஒன்றை காலி செய்தார்.  எங்களுக்கும் இரண்டு கிடைத்தது.   எதிரில் வாகனங்கள் வந்தால் வழி விடுவது சிரமமாக இருந்தது.  முன்னாள் அவ்வப்போது கார்களும், இருசக்கர வாகனங்களும் தாண்டிச் செல்ல, அல்லது எதிரில் வர, அப்படி ஒன்றும் பயப்பபடும்படியான ஆளரவமற்ற இடமாக இருக்காது என்று தோன்றியது.

============================================================================================

கூரைக்கூச்சல் – 06 
"சேட்டை" வேணுஜி 


ஓசூர் வாழ்க்கை என் வரையில் ஒரு முன்னோட்டம். தமிழக எல்லையில் எட்டிப்பார்க்கிற தொலைவில் பெங்களூரு இருக்க, தெலுங்கு அதிகம் புழங்கும் ஒரு ஊர் இருக்கும் என்று டிவிஎஸ்-ல் பணிபுரியப்போகும்வரை நான் அறிந்திலேன். தெலுங்கு மட்டுமல்ல, உருது, கன்னடம், மலையாளம் பேசுகிறவர்களும் கணிசமாக வாழ்ந்த ஒரு ஊரில் நான்கு ஆண்டுகளுக்கு சற்றுக்குறைவாக வசித்த அனுபவம்,  பின்னாளில் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பணிபுரிவதற்கோ அல்லது பணி நிமித்தமாகவோ செல்ல நேரிட்டபோது அபரிமிதமாகக் கைகொடுத்தது. 

 முதலில், பெற்றோரின் நிழலிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக வாழ்கின்ற வாய்ப்பு கிடைத்தபோதும், தூண்டுதல்களின் கண்சிமிட்டலுக்கு இணங்கி, தொலைந்து போகாமல் பெருமளவு கட்டுப்பாடான வாழ்க்கையை நடத்த முடிந்தது, இப்போது நினைத்தாலும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளச் செய்வதாக இருக்கிறது. ஆர்வத்தில் ஓரிரு முறை பெங்களூருவுக்குச் சென்று லால்பாக், கப்பன்பார்க், விதான் சௌதா, மெஜஸ்டிக், ஊர்வசியில் ‘உம்ரோ ஜான்’ சினிமா, MTR-ல் முழுச்சாப்பாடு, பிரிகேட் ரோடில் பெண்கள் பரிமாறும் பாரில் கல்யாணி பீர் என்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, ‘இதற்கா இம்புட்டு?’ என்று சடுதியில் சலிப்பேற்பட்டு, நானுண்டு என் ஓசூர் உண்டு, வேலையுண்டு என்று எனது குட்டி அறைக்குள், பத்தமடை பாயில் படுத்துறங்குவதுபோல வேறில்லை என்ற ஞானம் ஏற்பட்டிருந்தது. 

இது, பிற்காலத்தில் வேலை, வீடு என்ற இரண்டு உலகங்களுக்கு இடையிலேயே பெரும்பாலும் கால்களைச் செலுத்தி கண்களை மூடிக்கொள்கிற பக்குவத்தை அளித்திருந்தது; குறிப்பாக, மும்பையில் 15 ஆண்டுகள் வாழ்ந்தபோது. காலையில் சீக்கிரம் கண்விழித்து, குளிர் நீரில் குளித்து, பஸ்ஸைப்பிடிப்பது, இரண்டு நாட்களுக்கொரு முறை துணி துவைப்பது, தினசரி அறையைச் சுத்தம் செய்வது, வாரம் தவறாமல் அம்மா, அப்பாவுக்கும் நண்பர்களுக்கும் இன்லெண்ட் லெட்டர் போடுவது, ஓவர்டைம் பணத்தை மிச்சம்பிடித்து, இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவையாவது நாகர்கோவில் சென்றுவர பணம் சேர்ப்பது, தாவணிப்பெண்களைக் கண்டால் ஏற்படுகிற சலம்பலைத் தவிர்ப்பது, அரசியல், சினிமா குறித்து அலட்டாமல் இருப்பது என்று ஏதோ ராணுவத்தில் பணிபுரிந்தாற்போல, சுயகட்டுப்பாடு எனக்குள் மெல்ல மெல்ல ஏற்பட்டது ஓசூர் வாழ்க்கையின்போதுதான். 

இது டிவிஎஸ் தவிர்த்து பிற நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தாலும் எனக்குள் ஏற்பட்டிருக்குமா என்றால், இல்லை என்பதே நிஜம். சந்திரசூடேஸ்வரர் ஏதோ ஒரு விதத்தில் என்னை ஆட்கொண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் ஜெயபிரதா, ஸ்ரீதேவி போஸ்டரைப் பார்த்தால், தெலுங்காயிருந்தாலும் பிசகில்லை என்று சினிமா பார்க்கப் போனதெல்லாம் நாளாவட்டத்தில் குறைந்துபோய், ஜெனரல் ஷிஃப்டில் பணிபுரியும் ஆறு நாட்களில் குறைந்தபட்சம் மூன்று தடவையாவது சந்திரசூடேஸ்வரரைச் சந்திக்காவிட்டால் மனம் சங்கடப்பட்டது. சொல்லப்போனால், இந்த வாலிபத் துடிப்பில் பெண்களை நோட்டமிடும் புத்தியை மெல்ல மெல்லக் கரைத்து காணாமல் போகச்செய்தவர் சந்திரசூடேஸ்வரரும், ராஜகணபதியும்தான். நோட்டமிட்ட பெண்களை அவர்தம் குடும்பத்தோடு கோவிலில் பார்க்க நேர்ந்தபோதெல்லாம், பார்வையிலிருந்த விடலைத்தனம் எவ்வளவு அபத்தமானது என்பதும், பக்தியும் பக்கித்தனமும் ஒரே மனதில் இருக்கும் முரண்பாடு, அப்பட்டமான மூடத்தனம் என்பதும் புரிய நேர்ந்தது. 

இது பின்னாளில் எந்த ஊருக்குப்போனாலும், அந்த ஊர் கோவிலுக்கு அடிக்கடி செல்வது ஆன்மீகப்பற்றை வளர்க்குமோ இல்லையோ அலைபாய்கிற மனதைக் கட்டுப்படுத்தி, ‘கபர்தார்’ என்று காதை முறுக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வைத்தது என்றும் சொல்லலாம். இரவு ஷிஃப்ட் நாட்களில் ஒரு கொயர் நோட்டு வாங்கி, மனதுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதி வைக்க ஆரம்பித்ததும் ஓசூரில்தான். தினசரி முகச்சவரம், ஷூ பாலிஷ், யூனிஃபார்மை இஸ்திரி போட்டு அணிதல் என்று என்னையறியாமலேயே ஒரு மினி பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் நடந்தேறிக் கொண்டிருந்தது. 

இது பின்னாளில், டிவிஎஸ்ஸை விட பன்மடங்கு பெரிய நிறுவனங்களில் நான் பணிபுரிந்தபோது எனக்கு எவ்வளவு உதவிகரமாக இருந்தது என்பதை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. ஸ்டோர்ஸ் நிர்வாகம் என்பது, நான் பி.காம் படித்தபோது, Cost Accountancy-யின் ஒரு பகுதியாக, மூன்றாவது மற்றும் நான்காவது செமஸ்டரில் 25 பக்கங்களுக்கு மிகாத பாடமாக இருந்தது. ஆனால், Rough and Raw Stores அனுபவம் என்னை ஒரு Refined Storekeeper-ஆக மாற்றியது. 

மரிகோ இண்டஸ்ட்ரீஸ் (பாரசூட், சஃபோலா) பணிபுரிந்தபோது Stores Manual எழுதுமளவுக்கு நானும் ஏதோ ஒரு விஷயத்தில் விற்பன்னம் அடைந்திருந்தேன். Ispat Industries Ltd-ல் பணியாற்றியபோது, SAP Implementation நடைபெற்றபோது நான் அக்கவுண்ட்ஸ், ஸ்டோர்ஸ் இரண்டு துறைகளுக்குமான Departmental Representative ஆக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உதவியது. Quality Council of India-வின் ஆயுள்கால உறுப்பினரானதற்கும், ISO 9001, Total Quality Management மற்றும் Kaizen போன்ற தரக்கோட்பாடுகள் மற்றும் பணிசெய்யும் வழிமுறைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தியமைக்கும் அஸ்திவாரம் ஓசூரில் தான் போடப்பட்டது. 

இது தவிர, தனிமனிதனாக எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் மிக மிக அதிகம். 

ஒரு விபத்தைப் பார்த்து மயங்கி விழுமளவுக்கு பலவீனமுடையவனாக இருந்த நான், பின்னாளில் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியான போது, அன்றாடம் பற்பலரை ரத்தவெள்ளத்தில் பார்த்தபோதும் மனம் சஞ்சலமடையாமல் இருக்க முடிந்தது. இவையெல்லாம் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களில் கற்றுக்கொண்டதல்ல. ஆனால், அரிச்சுவடி என்பது டிவிஎஸ் அனுபவம்தான். பல தடவை, சில அபூர்வமான அறுவை சிகிச்சைகள் நடைபெற்றபோது, ஆளின்மை காரணமாக, ஆபரேஷன் தியேட்டருக்குள் அங்கியணிந்துபோய், நானே வீடியோ எடுத்திருக்கிறேன். 

நானா? ஆமாம்; நானேதான். 

நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்ற எச்சரிக்கை மணி என் மண்டைக்குள் மாட்டப்பட்டதும் ஓசூரில்தான். சொந்த வாழ்க்கையின் அழுத்தம், கவலைகள் எல்லாவற்றையும் அறையிலிருந்த கொடியில் உலர்த்திவிட்டு, தொழிற்சாலைக்குள் அப்பட்டமான ஊழியனாகப் போய், கவனம் சிதறாமல் வேலை செய்ய வேண்டுமென்ற கர்மயோகத்தின் முதல் அட்சரப்பியாசம் ஓசூரில்தான் வரமாய்க் கிடைத்தது. பணி விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள விரும்பாதவன் என்ற பெயர் எனக்கு ஏற்பட்டிருந்தாலும், சில விஷயங்களில் இறுக்கத்தைச் சற்றே தளர்த்தி, கொஞ்சம் மனிதாபிமானத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கலாம் என்ற பாடங்களையும் பின்னாளில் பயின்றேன். 

உதாரணத்துக்கு… ஓசூரில் என் அறையில் வசிக்க வந்து என்னையே கவிழ்க்க நினைத்த அந்த நண்பனை அழைத்து மனம்விட்டுப் பேசியிருக்கலாம். அவனை என் வழிக்குக் கொண்டுவர முயற்சித்திருக்கலாம். குறைந்தபட்சம், கொட்டும் மழையில் அவனது பொருட்களை அறையிலிருந்து அப்புறப்படுத்தி சாலையில் வைத்த கொடூரபுத்தியைத் தவிர்த்திருக்கலாம் என்ற ஞானோதயங்கள் பின்பு வந்தன. ‘ஏன் நைட் ஷோ சினிமாவுக்கு வந்தாய்?’ என்று கேட்ட அந்த பர்சனல் மேனேஜரிடம், ‘இனி வரமாட்டேன் சார்,’ என்று கொஞ்சம் பணிவாய் சொல்லியிருக்கலாம். இவ்வாறு, எவற்றையெல்லாம் பீற்றிக்கொள்வதற்கான சாகசங்கள் என்று எண்ணி வந்தேனோ, அவை எல்லாவற்றையுமே சற்று நிதானத்துடன், சமயோஜிதத்துடன் கையாண்டிருந்தால், எனக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்ட சங்கடங்களைப் பெருமளவு தவிர்த்திருக்கலாம் என்பன போன்ற எண்ணங்கள் எனது எதிர்காலத்தை கணிசமாக செதுக்கின. 

முழுமையாக, ஒரு மெச்சத்தக்க மனிதனாக இன்று இருக்கிறேனா என்பது தெரியாவிட்டாலும், குறைந்தபட்சம் என்னை சபிப்பதற்கோ, வெறுப்பதற்கோ அதிகம் பேரில்லை என்ற அளவுக்கு இருப்பதற்குக் காரணம் சந்திரசூடேஸ்வரரும் ராஜகணபதியும், ஓசூர் தந்த அனுபவங்களும்தான். சென்ற ஆண்டு போயிருந்தேன். இப்போது கோவில் ராஜகோபுரம் வரைக்கும் காரில் போகலாம். வெளிப்பிரகாரத்திலிருந்து பார்த்தால் டிவிஎஸ் தெரிகிறது. பெங்களூரு சேலம் நெடுஞ்சாலை தெரிகிறது. பச்சைப்பசேலென்று இருந்த ஓசூரின் மீது நிறைய கான்க்ரீட் கட்டிடங்கள் நடப்பட்டிருப்பதும் தெரிகிறது. ஒரு பிரம்மாண்டமான புள்ளிக்கோலம் போலிருந்த ஓசூரை உயரத்திலிருந்து பார்த்தபோது, ஒரு காலத்தில் நானும் ஏதோ ஒரு புள்ளிக்குள், ஒரு துகளாக இருந்திருக்கிறேன் என்பதை எண்ணியபோது, என் சொந்த ஊர் நாகர்கோவிலுக்குக் கடைசியாகச் சென்றபோது ஏற்பட்ட அதே கழிவிரக்கம் எனக்குள் ஏற்படத்தான் செய்தது. 

[ இப்போதைக்கு முடிக்கிறேன்]

==============================================================================================

குறிப்பிடத்தக்க செய்திகள் -


மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார்.  இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரும், புகார் அளித்த இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நீண்ட கால பாலியல் உறவின் போது புகார்தாரர் எதிர்ப்பு தெரிவிக்கமால் இருந்ததை பார்க்கும் போது இருவர் இடையே இருந்து வந்த பாலியல் உறவு இருவரின் சம்மதத்தின் அடிப்படையில் நடைபெற்ற உறவு என்பதை குறிக்கிறது.  அப்போது தன்னை திருமணம் செய்வதாக கூறி மனுதாரர் ஏமாற்றினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் தற்போது சமூகத்தில் நிலவும் உண்மை நிலவரங்களை அறியாமல் இல்லை. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இருவர் தாமாக முன்வந்து ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டு நீண்ட காலம் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த உறவில் முறிவு ஏற்படும் போது குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு.  சம்பந்தப்பட்ட இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் வருகிறது. அந்த உறவு பாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதா, திருமண எதிர்பார்ப்பா, வெறும் பரஸ்பர இன்பம் என்பதா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் உறுதியாக தீர்மானிப்பது சாத்தியமில்லை.

தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் நீதிமன்றங்கள் தனிமனித ஒழுக்கத்தை பார்த்து தீர்ப்பு வழங்க முடியாது, வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் சம்மதம் என பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது.

தனிப்பட்ட முரண்பாடுகளை தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்ப்பதற்கு சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது. மனுதாரர் மீதான வழக்கு தொடர்வது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுஉள்ளன. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள பொத்தப்பி என்ற ஊரை தலைநகராகக் கொண்டு, 6 - 7ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள், ரே நாட்டு சோழர்கள் எனும் பொத்தப்பி சோழர்கள்.  இவர்கள் பெல்லாரி, கோனிடேனா, நன்னுாரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்துள்ளனர்; தெலுங்கு சோழர்கள் எனவும் அழைக்கப்பட்டனர் .  அவர்கள், தங்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு கோவில்களை கட்டியும், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களை சீரமைத்தும், அவற்றை பராமரிக்க நில தானங்களை வழங்கியும் உள்ளனர்.  அதற்கு ஆதாரமாக, தற்போது புஷ்பகிரி நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.  ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பென்னா நதிக்கரையில் உள்ள பழமையான கோவில்களில், மிகவும் புகழ்பெற்றது நாத நாகேஸ்வரர் கோவில்.  இந்த கோவிலில், தற்போது மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கோவிலில், 16 தமிழ் கல்வெட்டுகள் இருந்ததை கண்டறிந்தனர்.

இதுகுறித்து, முனிரத்தினம் கூறியதாவது:

தற்போது நாங்கள் கல்வெட்டுகளை படியெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவை, 12 - 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டு என்பதை அறிந்துள்ளோம். மற்ற தகவல்கள், அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுத்து படித்த பின்தான் அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

3) 

மாணவர்களுக்கு என்று 'பீக் அவர்'களில் தனி பஸ் விடலாம்.  அரசாங்கம் அக்கறை காட்டாது.  பொதுநலனா முக்கியம்?  வோட்டுதான் முக்கியம்.  மாணவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாதே....
===================================================================================================

ஒரு சுய விளம்பரம்...!  இந்த மாதத்தில் 10 வருடங்கள் முன்பு..




இது வரை இப்படி ஒரு வரவேற்பை எனது ஃ பேஸ்புக் சரித்திரத்தில் (!) பார்த்ததில்லை. ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் லைக்குகள்..ஆயிரத்து எழுநூறை நெருங்கிக் கொண்டிருக்கும் shares..

=========================================================================================



உதிர்வதும் பின் அரும்புவதும் இயற்கையின் படிமங்கள், எப்பொழுதும் மாற்றத்திற்குத் தயாராக இருப்பது, தேவையற்றவற்றை விடுவிப்பது, ‘அழகு’ என்பது தற்காலிகமான ஒன்று போன்ற வாழ்க்கை தத்துவங்களைச் சொல்லாமல் சொல்கின்றன. என்று குவிகம் இதழில் திரு இந்திரநீலன் சுரேஷ் வெளிநாட்டின் மரங்கள் இலைகளின் நிறம் மாற்றி உதிர்த்து புதிய இலைகளை உண்டாக்குவது குறித்து எழுதி இருந்தார்மேலும், ஏன் இந்த நிறமாற்றம்?  இலைகள் பசுமை நிறத்துடன் இருப்பதற்குக் காரணம் அதில் உள்ள பச்சையம் (குளோரோஃபில்) ஆகும். சூரிய வெளிச்சமும், வெப்பமும் குறையும் பொழுது மரங்கள், இலைகளை உதிர்க்க ஆரம்பிக்கின்றன.  கடும் குளிர்காலத்தை சமாளிக்கவும், மரத்தினுள் இருக்கும் நீர்ச்சத்தைச் சேமித்து வைக்கவும், இலைகளை உதிர்த்து விடுகின்றன. ஆதவன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலங்களில், சூரிய வெளிச்சம் குறைவாக இருப்பதால் பச்சையம் தயாரிப்பதும், பனி காரணமாக நீரை உறிஞ்சுவதும் மரங்களுக்குக் கடினமாக இருக்கும். அதனால் தங்கள் இலைகளை உதிர்த்து விடுகின்றன. இதில், பைன் மரங்கள் போல சில விதிவிலக்குகளும் உண்டு.  அழகான பசுமை நிறத்திலிருந்து இலைகள், அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி, நிறைவாக இலைகளை முழுவதும் உதிர்க்கும் வரையிலான இந்த காலகட்டங்களில் உலகின் பல்வேறு நகரங்கள்  இயற்கை அழகில் மிளிர்கின்றன.

அங்கு நான் எழுதிய பின்னூட்டம் இங்கும் கவிதையாய்....கவிதை மாதிரி..!!

நீர்சக்தி போதாமல் 
தான் வாழ 
தன் இலைகளையே உதிர்த்து 
தனிமரமாக தான் மட்டும் 
நின்று வாழப்போராடும் 
மரம் 
மனிதனுக்கு உதாரணமா 
எச்சரிக்கையா?


மரத்தின் மீதுதான் பக்தி என்றபின் 
இலைகள் பாசமே ஏனடா..  
துளிர்க்கும் இலையினை 
அடுத்த பருவத்தில் 
காத்திருந்துதான் பாரடா 
காத்திருந்துதான் பாரடா

இலைகள் என்னடா 
கிளைகள் என்னடா 
இலையுதிர்கால பனியினிலே  
பாசம் ஏதடா பந்தம் ஏதடா 
பரிணாமத்தின் சுழலினிலே 

என்று மாற்றி பாடலாமோ!

===============================================================================

சமீபத்தில் வெளிவந்த Dude என்கிற (மட்டமான) படம் பற்றி எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் பேஸ்புக்கில் எழுதி இருப்பது...  இந்தப் படத்தின் கருவுக்கு அந்த 7 நாட்கள் படம் இயக்கிய பாக்யராஜ் கூட கடுப்படித்து எதிர்வினை ஆற்றி இருந்தார் - கலாச்சார சீரழிவு என்று!






=======================================================================================

சென்ற ஞாயிறுக்கு முதல் ஞாயிறு "சோழர்கால ஓவியங்கள்" புத்தகம் டவுன்லோடினேன் என்று சொல்லி இருந்தேன்.  அதன் இரண்டு பக்கங்கள்...



============================================================================================

தமன்னா பாட்டியா?

கிழவியாகி விட்டார், குண்டாகி விட்டார் என்றெல்லாம் பேசினால் பின்னே கோபம் வராதா?  என்ன நெல்லை?


====================================================================================




'மகாபாரதம் - கதையல்ல நிஜம்': ஆதாரபூர்வமாக நம்பிக்கையூட்டுகிறார் நந்திதா கிருஷ்ணா

சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என கூறப்படும் நிலையில், சி.பி.ஆர்., இந்தியவியல் ஆய்வு நிறுவன இயக்குநர் நந்திதா கிருஷ்ணா, கடந்த ஆறாண்டுகளுக்கு முன், ஒரு சுடுமண் சிற்பம் குறித்து எழுதிய கட்டுரை, தற்போது இணையதளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.  இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:

உங்களின் கட்டுரை பற்றி சொல்லுங்கள்?

கடந்த ஆறாண்டுகளுக்கு முன், ஹாங்காங்கில் உள்ள ஒரு கலைப்பொருள் விற்பனையாளர் ஜெர்மி பைன், சுவரில் மாட்டும் சுடுமண்ணாலான அலங்கார புடைப்பு சிற்பத்தின் புகைப்படத்தை, மின்னஞ்சலில் அனுப்பி, அதன் முக்கியத்துவம் பற்றி கேட்டிருந்தார். அதுகுறித்த கட்டுரைதான் அப்போது பிரபலமானது.

அந்த சிற்பத்தின் சிறப்பம்சம் என்ன?

ஜெர்மி பைன் அந்த சிற்பத்தை பல ஆண்டுகளுக்கு முன், நேபாளத்தில் வாங்கியதாக தெரிவித்தார். 7.5 செ.மீ., உயரம், 9 செ.மீ., அகலம் உள்ள அதில், நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் ஒருவரும், அருகில் ஒருவர் கையை நீட்டி ஏதோ சொல்வது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. தேரின் சக்கரம், ஆரங்களுடன் உள்ளது. தேரோட்டியின் அருகில் இருப்பவர், இரண்டு அம்பராத்துாணிகள் எனும் அம்புக்கூடைகளுடன் மகாபாரதக் காட்சியை முன்னிறுத்துகிறது.

இது போன்ற சித்திரங்களும், சிற்பங்களும் நிறைய கோவில்களில் உள்ளன; காலண்டர்களில் கூட உள்ளனவே. அதில் என்ன சுவாரஸ்யம்?

அந்த சிற்பத்தின் பின்புறத்தில், ஒரு ஓட்டையிட்டு, அதிலிருந்து கனிமத்தை எடுத்து, ஆக்ஸ்போர்ட் ஆய்வகத்துக்கு அனுப்பி, 'தெர்மோ லுாமினென்சென்ஸ்' எனும் ஒளி வெப்பவியல் ஆய்வு செய்துள்ளனர். அதன் காலம், பொ.ஆ.மு., 1,600 முதல் 300 வரை என அந்த ஆய்வகம் வரையறுத்துள்ளது. அதாவது, தற்போதிலிருந்து 2,300 முதல் 3,600 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம்.

அதில் ஆச்சர்யப்பட என்ன உள்ளது?

அந்த சிற்பம் கிடைத்த இடம் நேபாளம். அதில் உள்ள உருவங்கள் வரையறுப்பது பாரதப் போரை; அதன் காலம், 3,600 ஆண்டுகள். அது, சிந்துவெளி நாகரிகத்தின் இறுதி காலம்.

அதாவது, மகாபாரத கதை, ஒரு சிற்பமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றால், அது குறித்த தகவல்கள் படிப்படியாக பல செவி வழியாக காலம் கடத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் சிந்துவெளி மக்கள், மகாபாரதத்தை அறிந்திருக்க வேண்டும்.

எப்படி சொல்கிறீர்கள்?

சிற்பம் கிடைத்த இடத்தின் அருகில் தான், மகாபாரதம் குறிப்பிடும் இந்திரபிரஸ்தா எனும் டில்லி, பன்பிரஸ்தா எனும் பானிபட், சோன்பிரஸ்தா எனும் சோனிபட், தில்பிரஸ்தா எனும் தில்பட், வியாக்பிரஸ்தா எனும் பாக்பட் ஆகியவை உள்ளன.

அதனால், மகாபாரத சிற்பம் என்பதை உறுதி செய்ய முடியுமா?

இல்லை. மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக கிருஷ்ணர் வருவார். அவர், நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் பயணிப்பார். அர்ஜுனன் இரண்டு அம்பராத்துாணிகளை வைத்திருப்பார். மேலும், அர்ஜுனனின் தேரில் பூட்டிய குதிரைகளுக்கு சைப்யன், சுக்ரீவன், மேகபுஷ்பன், பலஹகன் என்ற பெயர்கள் உண்டு.

மேலும், யுத்தத்தின் போது தன் உறவினர்களை நோக்கி, அம்பு எய்த மாட்டேன் என கூறுவதும், அதைத் தொடர்ந்து பகவத் கீதை துவங்குவதும் அறிவோம். அதற்கு ஆதாரமாக, இந்த சிற்பத்தில் இரண்டு அம்பராத்துாணிகள் இருந்தாலும், அதை வைத்திருக்கும் நபர் வில்லேந்தவில்லை; அவர் கையை நீட்டி உள்ளார்.

குதிரைகள் இழுக்கப்படுவதால், பின் முழங்கால்கள் மடிந்து, நிலை நிறுத்துகின்றன. இதனால், இந்த சிற்பம் மகாபாரத காட்சி தான் என்பதை உறுதியாக சொல்லலாம்.

சரி... அவர்கள் அர்ஜுனனும், கிருஷ்ணரும் என்பதை உறுதி செய்ய, வேறு என்ன ஆதாரம் உள்ளது?

பொதுவாக, தாடியுடன் கூடிய ஹரப்பா மனிதனின் சிற்பத்தில், நெற்றியில் ஒரு பட்டம் கட்டப்பட்டிருக்கும். அதாவது, மன்னருக்கான அடையாளமாக அது கருதப்படுகிறது. இந்த சிற்பத்திலும், ஒரு நெற்றிப் பட்டம் உள்ளது. அதனால், அவர்கள் அதிகாரம் மிக்கவர்கள் என அறியலாம்.  இது போன்ற சிற்பமோ, தேரோ சிந்துவெளியில் கிடைக்கவில்லையே?அது பழைய கதை. மத்திய தொல்லியல் துறையின் அகழாய்வு இயக்குநர் சஞ்சய்குமார் மஞ்சுள், உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் செய்த அகழாய்வில், இதே போன்ற ஆரமுள்ள சக்கரத்துடன் சிறிய தேரை கண்டெடுத்தார். இதன் காலம், 3,800 முதல் 4,000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என கூறப்பட்டது. இது போன்ற தேரைப் பற்றிய குறிப்பு, ரிக் வேதத்திலும் உள்ளது.  அதனால் ஆச்சர்யப்பட்ட நான், அந்த கட்டுரையை எழுதினேன். அதை, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் கடந்த 2019, நவம்பர் 15ல் நடந்த இந்திய கலை மற்றும் வரலாற்று மாநாட்டிலும் வாசித்து, ஆய்வாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன். அந்த கட்டுரை தான், தற்போது இணையத்தில் வலம் வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

======================================================================================


மிஸ்டர் எக்ஸுக்கு நீச்சலடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. பச்சை கலர் ஜட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு நீச்சல் குளத்துக்குப் போனார்.
அவர் நீச்சல் குளத்தில் இருக்கும்போது வெளியே ஒரு குரல் கேட்டது: "பச்சை கலர் ஜட்டியோடு நீச்சல் குளத்துக்கு வந்தவர் உடனே நீச்சல் குள ஆபீஸ் அறைக்கு வரவும். அவர் அதை ஞாபகமறதியாக அங்கேயே வைத்து விட்டு நீச்சலடித்துக் கொண்டிருக்கிறார்..!"

***************************#

ஒரு சமயம் விவசாய இலாகாவில் மிஸ்டர் எக்ஸுக்கு வேலை கிடைத்தது. கிராமத்துப் பக்கம் போனார். ஒரு விவசாயியைக் கூப்பிட்டுப் பேசினார்:
"இதோ பாருப்பா.. இந்த மரத்துக்குப் பத்து கிலோ சூப்பர் பாஸ்பேட்டோட ரெண்டு கிலோ யூரியா ஒவ்வொரு மரத்திலேயும் ஒரு லாரி மாங்காய் காய்க்கும்!'' என்று அறிவுரை சொன்னார்.
அதற்கு விவசாயி, "காய்க்காதுங்க என்றார். "ஏன்..?" என்று எக்ஸ் திகைப்போடு கேட்க, இதெல்லாம் கொய்யா மரம்!" என்றார் விவசாயி.

******************###

டில்லியில் ஒரு சமயம் கடும் பனி. அங்கிருந்த மிஸ்டர் எக்ஸிடம் அவர் நண்பர். "இந்த மாதிரி பனியை நான் எந்த ஊர்லேயும் பார்த்தது இல்லை என்றார்.
உடனே எக்ஸ், "நான் பார்த்திருக்கேன்!" என்றார்.
"எந்த ஊர்லே...?"
''எந்த ஊர்னு தெரியலை ..அந்த அளவுக்குப் பனி!''

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மிஸ்டர் எக்ஸ், டாக்டர் பில் கட்டி பல மாதங்களாயிற்று. டாக்டர், பில்லை அனுப்பி, கூடவே, "இதற்கு ஒரு வயதாகிறது!" என்று கிண்டலாக எழுதி அனுப்பினார்.
அதை படித்த உடனே எக்ஸ் அனுப்பி விட்டார் - ஒரு பிறந்தநாள் வாழ்த்து!

126 கருத்துகள்:

  1. 'செங்கல்பட்டில் திருப்பதி'- இதில் என்ன சார் ஆச்சரியம்? செங்கல்பட்டில் திருப்பதி, பழனி, திருமலை, கைலாசம், வைகுண்டம், காளகஸ்தி, எல்லாமே சாத்தியம்; ஆனால், செங்கல்பட்டை தவிர வேறு எங்கும் செங்கல்பட்டு காண முடியாது!! ஹி ஹி -ஆளுங்க பெயரை சொன்னேன் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க TVM...   குட் ஜோக்.  திருப்பதில லட்டு கிடைக்கும், லட்டுல திருப்பதி கிடைக்குமா மாதிரி!

      நீக்கு
    2. லட்டுல திருப்தி கிடைக்குமா? அதைப்பாருங்க மொதல்ல; அவ்வளவு கலப்படம். :-)

      நீக்கு
    3. கலக்கறீங்க வசிஷ்டரே....  சரி சரி வாத்யாரே.....அதுவும் வேணாம்னா TVM.. நான் லட்டு சாப்பிடுவது அபூர்வம். சொன்னா நம்ப மாட்டீங்க.. எனக்கு ஸ்வீட் அவ்வளவா பிடிக்காது!

      நீக்கு
  2. ஸ்ரீராம், புதிய இடம். நீங்க இருக்கும் இடத்திலிருந்து 1 மணி நேரம் தானா?

    திருப்போரூர் பழைய மகாபலிபுரம் ரோடில் இருக்கு செல்லப்பா சார் அங்குதான் கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கிறார். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர் இருக்கும் இடத்தின் அருகில் வரும் போல இருக்கிறது. இந்த ரூட்டில் செல்வதை விட நீங்க போன ரூட் பெட்டர் என்றே தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..  நீளமான பதிவுன்னு சொன்னதால சீக்கிரமே வந்துட்டீங்கங்களா?  ஹா ஹா ஹா 

      கூகுள் சொன்ன நேரம் ஒரு மணிநேரம்தான்.  ஆனால் அது காட்டிய வழி...   

      "கூகுள் காட்டிய வழியம்மா..." என்று டி எம் எஸ் குரலில் பாடாததுதான் பாக்கி!

      நீக்கு
  3. இன்று நவரசங்களில் ஒன்றைக் கூட விட்டு வைக்கவில்லை; பீபத்சம் உட்பட! சபாஷ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ஆஹா...  நன்றி வசிஷ்டரே...  பீபத்சம் என்றால் வெறுப்பா?  

      நீக்கு
    2. பீபத்சம் என்றால் அருவருப்பு. அதிருக்கட்டும். நான் எப்போ வசிஷ்டன் ஆனேன்? அட ராமா! அதிகப்பரசங்கித்தனம் பண்ணி விட்டேனோ? எனக்கு self awareness அவ்வளவா பத்தாது; my bad.

      நீக்கு
    3. ஓ..  சரி..  சரி...   ஓகே,அதற்கு பொருத்தமான செய்தி இன்றைய பதிவில் எது என்று சொல்லி விட்டால் தனியனாவேன்..  சே.. தன்யனாவேன்!

      நீக்கு
    4. Literally: மலக்கழிவை தெருவில் விடுதல் . Figuratively: ஒன்பது வருடம் பாலியல் உறவுக்குப்பின் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டான் என்று வழக்காடுதல் (என்னைப்பொறுத்தவரை இரு தரப்பினரும் அருவறுக்கத்தக்கவர்களே). என் மதிப்பீடுகளும் அளவைகளும் காலாவதி ஆகியிருக்கக்கூடும் ( பழைய பஞ்சாங்கம்)

      நீக்கு
  4. கவிதை சூப்பர் ஸ்ரீராம். பதிவோடு கவிதையும்!!!!

    பயண ஆரம்பம் நல்லாருக்கு.

    பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருகிறீர்கள் என்று போட்டிருந்தாலும் உள்ளே காடு இருக்காது. வனம் னா காடு மட்டும்தானா!!!!ஹிஹிஹி ஒரு வேளை முன்ன அது காடாக இருந்திருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ அந்த போர்டும் முன்ன வச்சதாதான் இருக்கும் இல்லையா?!!  கவிதை பாராட்டுக்கு நன்றி கீதா..   இருங்க..  என்ன கவிதை போட்டேன்னு பார்த்துக்கறேன்!

      நீக்கு
  5. சேட்டைஜி, உங்கள் அநுபவங்கள் உங்களைப் புடம் போட்டதை எழுதிய விதத்தை ரொம்ப ரசித்து வாசித்தேன்.

    எல்லோருக்குமே அனுபவங்கள் ஏற்படுகின்றன புடம் போடும் வகையில் ஆனால் அதிலிருந்து நாம் கற்பதுதான் நம் அறிவைக் காட்டும்.

    பச்சைப்பசேலென்று இருந்த ஓசூரின் மீது நிறைய கான்க்ரீட் கட்டிடங்கள் நடப்பட்டிருப்பதும் தெரிகிறது.//

    ஓசூர் ரொம்பவே மாறிவிட்டது. முன்பு எப்ப டி இருந்த் அஓசூர் இன்று இப்படி என்று தோன்றும். சந்திரசூடேஸ்வரர் கோவில் இப்ப நிறைய மாற்றங்கள்.

    பகுதியை ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் என்னடான்னா இந்த வாரத்தோடஒரு சிறு இடைவெளிங்கறார் கீதா...  கேளுங்க நியாயத்தை 

      நீக்கு
    2. இல்லை தொடரவேண்டும் என்று விருப்பக்காரர்களில் நான் உண்டு!

      கீதா

      நீக்கு
    3. மிக்க நன்றி! இந்த ஆறு வாரங்களும் அயராமல் என் பதிவுக்கு கருத்துத் தெரிவிக்கிறவர்களில் நீங்களும் ஒருவர் என்பதால் கூடுதல் நன்றிகள். சந்திரசூடேஸ்வரர் கோவில் நல்லகாலமாக, கூடுதல் அழகாக, கூடுதல் சுத்தமாக மாறியிருக்கிறது. கூட்டம் அள்ளுகிறது; வரிசையில் நின்று தரிசிக்குமளவுக்கு! அவருக்கு மவுஸ் கூடியிருப்பது மகிழ்ச்சி! :-)

      நீக்கு
    4. நன்றி சேட்டைஜி.

      ஆமாம் சந்திரசூடேஸ்வரரின் மௌசு கூடி ஜெகஜோதியாய் இருக்கிறார் இப்ப இன்னும் ஜொலிப்புடன். ஆமாம் சுத்தமாக....என்றாலும் எனக்கு அந்தப் பழையது எங்கோ மிஸ் ஆகியிருப்பது போலத் தோன்றியது. எல்லாம் நம் மனம் தான்!!

      கீதா

      நீக்கு
    5. // கூட்டம் அள்ளுகிறது; வரிசையில் நின்று தரிசிக்குமளவுக்கு! அவருக்கு மவுஸ் கூடியிருப்பது //

      அறநிலையத்துறை நுழைந்து விட்டதோ காசு பார்க்க?

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம், பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. நீதிமன்ற தீர்ப்பை கைதட்டி வரவேற்கிறேன். பெண்ணின் கேஸ் பற்றி வாசித்ததும் தீர்ப்பு என்ன சொல்லப் போகிறாங்க என்று வாசித்தேன் ஏனென்றால், பெண்ணின் மீதும்தானே தவறு இருக்கு. பெண்கள் தங்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது மிகவும் தவறு. இருவர் மீதும் தவறு இருக்கு. இருவருக்கும் தெரியாதா என்ன? அப்ப பெற்றோருக்குத் தெரியாதா இப்ப பெற்றோருக்கு எப்படி இருக்கும் இப்படியான வழக்குகள் பொதுவெளியில் வரப்ப....

    நல்ல தீர்ப்பு.

    பெற்றோரின் வளர்ப்பு முக்கியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணென்ன பெண்ணென்ன சந்தர்ப்பவாதம், சுயநலம் எல்லாம் பெருகிவிட்ட காலம்... என்ன செய்ய!

      நீக்கு
  8. கல்வெட்டுகள் பலவும் நம் பழமையைப் பறைசாற்றுபவை. அவற்றை எல்லாம் பாதுகாக்கவும் வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. மோதிக்கிறேன். ஐ மீன் ஆமோதிக்கிறேன்.

      நீக்கு
  9. பேருந்தில் இப்படி மாணவர்கள் தொங்கிச் செல்வது ஆபத்து என்பதற்கு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.....எனக்கென்னவோ இதெல்லாம் வீட்டில் வளர்ப்பில் தொடங்குவது என்பதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களுக்கு தனி பஸ் விடுகிறார்கள்.  அட, ஆணுக்கு தனி பஸ் விடவேண்டாம்.. மாணவ மாணவியருக்கு அந்த நேரத்தில் தனி பஸ் விடலாம்ல...

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. (கொஞ்சம் பெரிதாக இருக்கிறதோ ..! ஆனால் சுவாரஸ்யமாக இருக்கும்.) செங்கல்பட்டில் திருப்பதி பயணக்கட்டுரை நன்றாகப் போகிறது. தெளிவான விபரங்கள் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

    கவிதை நன்றாக உள்ளது. இப்படி வானமே கூரையாக உள்ளவர்களுக்கு நோய்களின் பாதிப்பும் அவ்வளவாக இல்லை. ஆனாலும் குறையில்லா வாழ்வை பெற முடியாது போலும். பயணத்தோடு இறைவனை காண தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. குப்பை போடுவது நாம்....சில கடமைகள் அரசிடம் சில நம்மிடம் இருக்கிறது. மக்கள் நமக்கும் பொறுப்பு இருக்கு...இப்பவும் பார்க்கிறேன். மக்கள் குப்பைகளை அப்படியே போட்டு விட்டுப் போவதை.

    நம்மூரைப் பொருத்தவரை பொதுவெளியில் சுய ஒழுங்கு இல்லை எல்லாத்துக்கும் நம் சட்டம் வலுவாக இருக்க வேண்டும் ஆனால் அது செயல்படுத்தப்படுவதில்லையே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே மாக்கள்..  சே..  இன்னிக்கி என்ன அடிக்கடி டங் ஸ்லிப்பாவுது...  இதே மக்கள் வெளிநாடுகள் போனா ஒழுங்கா சுத்தமா இருப்பாங்க...

      நீக்கு
  12. தினமலரில் வந்திருந்தது பற்றி முன்பும் சொல்லியிருந்திருக்கீங்க என்று நினைவு!!

    பாருங்க வருஷம் 2015 இதே மாசம் - இப்ப 2025 - இதே மாசம் மாற்றம் இருக்கா? குப்பை போடாமல் சாக்கடைகள் அடைபடாமல்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை..  இல்லவே இல்லை.  நம் வீட்டு குப்பையை அதிகாலையில் யாருமறியாமல் பொதுவெளியில் போடுவதுதான் குப்பையை ஒழிப்பது.  மாநகராட்சியும் அதை கண்டு கொள்ளாமல் புகார் கொடுக்கபட்டவர்களிடம் வந்து மிரட்டி, காசு வசூலிப்பபதுதான் நடைமுறை!

      ஒரு குதூகலம்தான் மறுபடி மறுபடி பகிர்கிறேன்!  'பார்றா..  நம்ம பேரு பேப்பர்ல' என்று! நாமளும் ரௌடிதான்ங்கற மாதிரி ..  நாமளும் பெரிய எழுத்தாளன் தான் என்கிற நெனப்பு, மிதப்பு!

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    சேட்டை வேணுஜி அவர்களின் கட்டுரை நன்றாக உள்ளது. ஒருவரின் அனுபவங்கள் அவரின் மனதை மாற்றியமைத்து நல்ல பக்குவமடையச் செய்யும். அந்த வகையில் அதன் அனுபவங்களை புரிந்து கொண்டு, அதன் மூலம் அவரின் வாழ்வை இறை பக்தியோடு செதுக்கி அழகுற வைத்திருக்கிறார்.அவரின் நல்ல எண்ணங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து அவரின் அனுபவ கல்வியை படிக்கவும் ஆசைப்படுகிறேன். நன்றி நன்றாக எழுதிய அவருக்கும், இங்கே பகிர்ந்த உங்களுக்கும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் தொடர்ந்து எழுதினால்தானே படிக்கலாம்.  சிறு இடைவெளி என்று கவலைப்பட வைக்கிறார்.   

      நம் அனுபவங்கள் நமக்கு பாடமானால்தான் லாபம், கற்றுக்கொள்கிறோம் இல்லையா?  அழகாக சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
    2. மிக்க நன்றி! உங்களின் தொடர்ந்த உற்சாகமூட்டும் கருத்துக்கள் என்னை விரைவில் மீண்டும் எழுத ஊக்குவிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

      நீக்கு
    3. சேட்டைக்காரரே, உறுதியாக நம்பினா மட்டும் போதாது அது எழுத்தாக இங்க வந்து விழணுமாக்கும்!!!

      கீதா

      நீக்கு
  14. இன்றைக்கு நிறைய பகுதிகள், அனைத்தும் செய்திகளோடு.மெதுவாக கருத்திடறேன். படித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... ஆமாம் கொஞ்சம் பெரிதாகி விட்டது... ஸாரியாக்கும் கேட்டேளா?

      நீக்கு
  15. நானும் வாசித்தேன் ஸ்ரீராம் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் கட்டுரையை ஆனால் எனக்கு ஏனோ மீண்டும் குவிகத்தில் கருத்து போட முடியவில்லை.
    உண்மையிலேயே பல நகரங்கள் இந்த நேரத்தில் அழகா இருக்கும் இலைகளின் நிறம் மாறி பூக்கள் போன்று...இயற்கையின் அற்புதம்.

    //மனிதனுக்கு உதாரணமா
    எச்சரிக்கையா?//

    எச்சரிக்கை விடுத்து உதாரணமாக இருக்கின்றன எனலாம் இல்லையா? இதுதாண்டா வாழ்க்கை இதைப் புரிஞ்சு உன்னைத் தயார்படுத்திக்க என்று.

    இயற்கை நமக்கு ஒவ்வொன்றையும் போதிக்கிறது நாம் தான் கற்கத் தவறவிடுகிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குவிகத்தில் நான் வேறு முறையில் பின்னூட்டமிடுகிறேன்.

      இயற்கை சீறினால் நாம் அல்பமாகி விடுவோம்.  யமுனை சீறிய போது கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது நான் எழுதியது...

      எப்போதும்
      உன்னை நாங்கள்
      எடுத்துப் போவோம்.. 
      இந்த முறை
      நீ எங்களை...

      நீக்கு
    2. சூப்பர்!!!

      அப்பப்ப அது நம்மை எடுத்துக் கொண்டுதான் போகிறது நாம் அதனிடம் எடுப்பதற்கு வட்டியும் சேர்த்து.

      கீதா

      நீக்கு
  16. இரண்டாவது கவிதை - அண்ணன் என்னடா தம்பி என்னடா....பாட்டு மெட்டோ!!?

    சூப்பர் ஸ்ரீராம் நல்லா பொருந்தி வந்திருக்கிறது.

    என்று மாற்றிப் பாடலாமோ // இதைப் பார்க்கும் முன்னரே பாடல் தெரிந்துவிட்டது எனக்கு

    எனக்கு ஒரு ஷொட்டு கொடுங்க!!!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு ஒரு ஷொட்டு..  என்னாச்சு...   ஸாரி..  பலமாக அடித்து விட்டேனா?  சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள் என்று உற்சாகம்..  ஸாரி கேட்டேளா..

      நீக்கு
    2. ஹாஹாஹஹா..... இல்லை இல்லை...நன்னி நன்னி!! ஆமாம் எனக்கே ஆச்சரியம்.

      கீதா

      நீக்கு
  17. தாலி ஒருபக்கம் இருக்கட்டும். ஏன்னா இந்த கான்செப்ட் பழைய காலத்தில் கிடையாது அப்புறம் வந்ததுதான். அது இருக்கட்டும்...

    ஒரு பெண்ணும், ஓர் ஆணும் வாழ்க்கையில் சேர்ந்திருக்க முடிவெடுத்துவிட்டால் இருவருமே பொறுப்போடு இருக்கணும். ஒருவருக்கொருவர் பொறுப்புடன். இது சுய ஒழுக்கம்.

    ட்யூட் படம் கதை என்னன்னு தெரியலை. ஆனால் இணைய நினைத்த பிறகு பழசை மறந்துட்டு ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடும் பொறுப்போடும் இருக்கணும். இது சுய ஒழுக்கம் சுயகட்டுப்பாடு வாழ்வியல். இல்லைனா திருமணம் செய்து கொள்ளாமல் இருபப்தே நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது ஆண், பெண் இருவருக்குமே வாழ்க்கை முழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்கிற எண்ணமோ பொறுப்போ இருப்பதாக்கத் தெரியவில்லை.  தாற்காலிகத்தீர்வுகள், உணர்ச்சிகளுக்கு வடிக்கால், அப்புறம் பிஸினஸாக்குவது... 

      ட்யூட் படம் கதை  சொல்லவே கடுப்பேற்றும் கதை,  எவனையோ காதலித்த பெண்ணை இவன் - கதாநாயகன் - மணந்துகொண்டு, சும்மா தூர இருந்துவிட்டு, காதலித்தவனுடன் அனுப்பும் கதை.

      நீக்கு
    2. ஐயே அப்புறம் ஏன் அந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டதாம்? ...

      நீங்க சொல்றாப்ல இப்ப எல்லாமே தற்காலிகம் தான் போல...use and throw!!

      பசங்க ஒரு நல்ல தத்துவத்தை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல. ஹாஹாஹா இன்று வாழ் எதிர்காலம் பற்றிச் சிந்திக்காதன்னு
      சொல்றதை!

      அசிங்கமான வாழ்வியல். இன்னொன்றும் தெரிகிறது. இளைஞர்களுக்கு வாழ்க்கையில் தங்கள் குறிக்கோள் என்ன என்று தீர்மானிக்க முடியலை. தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனம் திட மனம் இல்லை. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை இப்படித்தான் போகும்.

      கீதா

      நீக்கு
    3. ஆண்கள் கெட்டால் சம்பவம்தான் பொண்ணு கெட்டா வரலாறுன்னோ ஏதோ ஊர்வசி மை ,ம கா ரா ல சொல்வாங்களே அது மாதிரி கலாசார சீர்கேடு.

      நீக்கு
  18. ஓ அந்தப் படத்தில் நடித்திருப்பது இந்த நடிகையா....எல்லாம் புச்சா கீதுப்பா! உண்மையிலேயே தெரியலை இவங்கதான் அவங்கன்னு. அய்யனாரின் ஆதங்கம் என்னான்னு இப்பதான் புரிந்தது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   ஆனால் எனக்கு இந்த அக்காவைத் தெரியாது.

      நீக்கு
  19. சென்ற ஞாயிறுக்கு முதல் ஞாயிறு "சோழர்கால ஓவியங்கள்" புத்தகம் டவுன்லோடினேன் என்று சொல்லி இருந்தேன். அதன் இரண்டு பக்கங்கள்...//

    யெஸ்ஸு சுட்டியும் இருந்துச்சே. நான் இன்னும் டவுன்லோட் செய்யலை. கணினியில் கொஞ்சம் இடம் ஒதுக்கணும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம்போல டவுன்லோடினதோடசேரி... பத்திரமா கூட்டத்தோட சேர்த்து வச்சிருக்கேன்!

      நீக்கு
  20. கிழவியாகி விட்டார், குண்டாகி விட்டார் என்றெல்லாம் பேசினால் பின்னே கோபம் வராதா? என்ன நெல்லை?//

    ஹாஹாஹாஹா அதானே. ஆனா பாருங்க ஸ்ரீராம், நெல்லை ரொம்பக் குறையாகச் சொன்னதாலோ என்னவோ தமனா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா...செம ஸ்டைலிஷ் ஒல்லியாக...நெல்லை அடிக்கடி சொல்லும் ஒல்லி இடுப்புடன்...லேட்டஸ்ட் அவருடைய புகைப்படங்கள் பார்க்கலையா!!!

    ஊசி போட்டுக்கிட்டாங்களா என்ன?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று பையா படத்தின் சில காட்சிகள் ரீல்ஸில் வந்தன...  அவங்க உதடுகள் எவ்வளவு முயன்றாலும் சேரவே மாட்டேங்குது கீதா..  செவ்வக வடிவமா இருக்கு...

      நீக்கு
    2. ஸ்ரீராம் கவலையை எண்ணிச் சிரிக்கிறேன். அதுதானே அவருக்கு ஒரு அழகு... ம்ம்ம்ம் அதுக்கும் கலையை ரசிக்கும் மனம் வேண்டுமே.

      நீக்கு
    3. ஸ்ரீராம் சிரித்துவிட்டேன்.

      நினைச்சேன் ஓடி வந்துட்டார் பாருங்க நெல்லை!!

      கீதா

      நீக்கு
  21. இன்றைய சேட்டைக்காரன் பகுதி ரசிக்கும்படி இல்லை, கடைசி வரி தவிர. இந்தப் படம் இன்றே கடைசி என்பது போல அவசரப்பட்டு, சுருக்கி முடித்திருக்கிறார்.

    எங்கோ இருந்த ஒருவனுக்கு இறை சக்தியால் எங்கெங்கோ பயணிக்கும், அனுபவம் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. பிறகு ஓய்வில் நிதானமாக உட்கார்ந்து யோசிக்கும்போது, நமக்கா? நாமா இவ்வளவு பெரிய நிலைக்கு உயர்ந்தோம், நமக்கு என்ன திறமை இருந்தது என இந்த நிலைமைக்கு நம்மை இறைவன் உயர்த்தினார் என்ற ஆச்சர்யம் ஏற்பனும். நம்மைவிடத் திறமையானவர்கள், மிகுந்த படிப்பாளிகள், அந்த அளவுக்கு வாழ்க்கையில் ஜொலிக்கவில்லையே... அப்போ பூர்வ ஜென்ம புண்ணியம் என்று ஏதேனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, இறைவன்பால் நமக்கு உறுதியான பிடிப்பு ஏற்படும்.

    இன்னும் யோசித்தால், நம் கர்ம வினைகளால் நாம் செய்த தவறுகள், அநீதிகள் நம் கண்முன் சிற்சில தோன்றி இன்னும் நன்றாக நடந்துகொண்டிருக்கலாமே என்று தோன்றும். சரி செய்ய முடியாத தவறுகள் அவை.

    சிற்சில இடங்களைப் பார்க்கும்போது, நம் வாழ்வு இப்படி உயரும் என ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், கொஞ்சம் இடமோ இல்லை வீடுகளோ வாங்கிப் போட்டிருக்கலாமே என்ற எண்ணம் தவிர்க்கமுடியாது வரும்.

    நமக்கு வாழ்க்கையில் நடந்த அத்தகைய தவறுகள், எதிர்பாராமல் விட்ட வார்த்தை, கோபம் போன்றவையும், நம் வாழ்க்கைப் பாதை மாறுவதற்கான ஒரு மடை மாற்றும் ஊக்கியாகச் செயல்பட்டிருப்பது தெரியும்.

    நம் வாழ்வோ, இல்லை நம் குழந்தைகளின் வாழ்வோ... எல்லாமே இறைவனால் வகுக்கப்பட்ட ஒரு பாதையில் செல்கிறது, நம் வசம் சிற்சில முடிவுகள், எதிர்வினைகள் மாத்திரமே இருந்திருக்கிறது, அதனை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்ற எண்ணம் வரும்.

    இப்படி நம் கடந்த காலத்தை சிற்சில சம்பவங்களோடு எழுதும்போது நம்மை ரொம்ப உயர்த்தி எழுதுகிறோமோ? நம்மைப் பற்றி பெருமை பேசுகிறோமோ? படிப்பவர்கள், ரொம்பவே இவன் அலட்டுகிறானே என எண்ணுவார்களோ என்றெல்லாம் எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலாது. எழுதுவது, எழுத்து, எழுதுபவருக்கு உண்மையாக இருக்கணும். அவ்வளவுதான்.

    சேட்டைக்காரன் முழுமையாக எழுதியிருக்கலாம். விரைவில் தொடர்வாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான மனப்பாடுகள் இல்லையா நெல்லை...   தொடரவேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். 

      நீக்கு
    2. ரசிக்கும்படி இல்லை என்பதை மதிக்கிறேன். முடிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தால் சென்ற வாரமே முடித்து ஒரு பெருமூச்சு விட்டிருக்கலாம். முத்தாய்ப்பாக, எனது ஆரம்பகால அனுபவம் எதிர்காலத்தில் எனக்கு எத்தகைய பேருதவியாக இருந்தது என்பதைச் சொல்ல விரும்பியதால்தான் இந்தப் பதிவு அவசியப்பட்டது. ஆன்மீகத்தில் நான் பெரிய அப்பாடக்கர் அல்லன். ஆகவே, இறைசக்தி, கர்மவினை போன்ற பெரிய தத்துவங்கள் குறித்து கருத்துச் சொல்லுமளவுக்கு பழுத்த பழம் அல்லேன். உங்களது கருத்துப்படியே இறைவன் வகுத்த வழியில், அவ்வப்போது கண்மூடித்தனமாகப்போய், தடுக்கி விழுந்து, எழுந்து, நிதானித்தோ அல்லது மேலும் கவனமாகச் செல்லுகிற முயற்சி என்பது இன்றளவிலும் தொடர்வது. போய்ச்சேர்ந்துவிட்டேன் என்று காலரை உயர்த்திச் சொல்கிற பக்குவம் இன்னும் வரவில்லை. மற்றபடி, உங்களது கருத்துக்களைப் படிக்கும்போது, ‘இவர் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறாரோ, அதைத்தானே நான் எனக்குத் தெரிந்தவரையில் சொல்லியிருக்கிறேன்?’ என்ற ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது உண்மை. மற்றபடி, என்னைப் பற்றி நானே எதையும் கட்டமைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் எழுத்து உங்களது விமர்சனத்தைப் போலவே உண்மையானது என அறிக! நன்றி!

      நீக்கு
    3. நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இன்றைய பகுதி அவசர அவசரமாக எழுதி முடித்தது ரசிக்கும்படி இல்லை. இத்தனை வாரங்கள் ரொம்பவும் ரசித்தேன். ஒவ்வொரு தடவையும் என் அனுபவத்தை ரிலேட் செய்ய முடியுதுன்னு பின்னூட்டம் போட்டிருக்கிறேன். வாசகர்கள் விரும்பிப் படிக்கும்போது சட் என நிறுத்தலாமா? சேட்டைக்காரன் சிந்திக்கணும்

      நீக்கு
    4. எனது பயணத்தையும் எழுதினால் சேட்டைக்காரன் பயணம் போலவே இருக்கும். படிப்பு ரேங்க் என்பதைவிட தலையெழுத்து நம் வாழ்வைத் தீர்மானிக்கிறது. அன்று அப்படி ரியாக்ட் செய்யலைனா, அன்று அதைப் பொறுத்துக்கொண்டிருந்தால், அன்று அதைச் செய்திருந்தால் என பல முடிவில்லாத கேள்விகள் எழுகின்றன

      இன்னொருவர் பயணத்தைப் படிக்கும்போது நாம் தனி அல்ல, நம்மைப் போல்தான் பலரும் எனத் தோன்றுகிறது.

      போதும் இது என கடவுள் நினைத்தால் உடனே சம்பந்தமில்லாத கதை போல வாழ்க்கைப்பயணம் மாறிவிடுகிறது.

      பல எண்ணங்களை சேட்டையின் பயணம் எனக்குள் எழுப்புகிறது

      நீக்கு
    5. பாஹுபலி பார்ட் 1 நன்றாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு கதை முழுமையடையாமல் , போய் அடுத்த வேலையைப் பாருங்க, பார்ட் 2 ல சந்திப்போம்னு சொன்னதும் என்னடா பாதிப்படம்தானே வந்திருக்கு என எண்ணியதுபோல இன்றைய பகுதி அமைந்துவிட்டது. விரைவில் தொடருங்கள்

      நீக்கு
    6. வேணு ஜி..  விளக்கங்களை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  22. மகாபாரதம் பற்றிய பேட்டியில் நிறைய தகவல்கள். எப்படிஎ ல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்து காலகட்டம் யார் யார் எதைக் குறிக்க்கிறது என்று எல்லாம் ஆராய்கிறார்கள் ...உழைப்பு. வியக்கும் விஷயங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. நான் இன்னும் ட்யூட் படம் பார்க்கவில்லை. பார்க்கணும் என்ற எண்ணம் உண்டு.

    பாக்கியராஜ் சொல்லியிருப்பது சிரிப்பை உண்டுபண்ணுகிறது. திரையுலகில் எல்லோருமே ஒவ்வொரு வித்த்தில் சமூக, கலாச்சாரச் சீர்கேட்டுக்கு பாதை போட்டே வந்திருக்கிறார்கள். மலின ரசனைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாகச் சீரழித்தது இன்று இந்த நிலைக்கு (எந்த நிலை என்று படத்தைப் பார்த்தால்தான் தெரியும்) வந்திருக்கிறது. வாழ்க்கையில் எல்லாம் பார்த்துவிட்டு, செய்துவிட்டு, இறுதிப் பகுதியில் எல்லாம் வெற்று என்ற எண்ணமும் ஞானொதயமும் தோன்றுவது இயற்கை.

    பா இயக்குநர்கள் யாருமே தன் முன்னோடிகளின் கருத்து, சிந்தனை, ஆலோசனையைச் சட்டை செய்யாத்து போலவே பாக்கியராஜின் புலம்பலையும் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். படத்துக்குக் கூடுதல் விளம்பரம். ஒருவேளை அதற்காகத்தான் சொல்கிறாரோ என்னவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நான் இன்னும் ட்யூட் படம் பார்க்கவில்லை. பார்க்கணும் என்ற எண்ணம் உண்டு.//

      ப்ளீஸ் வேண்டாம்...   உங்களுக்கு BP இருக்கா?  நோ ப்ளீஸ்....

      யாருமே செய்யவில்லை என்பது ஓகே..  ஆனால் வரவர மாமி கழுதை போலானாளாம்  கழுதை தேய்ந்து கட்டெறும்பாச்சாம் கதையா இல்ல இருக்கு!

      நீக்கு
    2. DUDE மட்டமான படம். வரவர கணவானாக கதாநாயகனை பார்க்கவே மாட்டோமா என்றிருக்கிறது. BTW ட்யூட் என்று சொல்லக்காடாதாமே? டூட் தான் சரியாம்.

      நீக்கு
    3. அதானே..  எல்லோரையும் கனமில்லாதவர்களாக ஆக்கும் வாலறுந்த நரியின் முயற்சி போல...

      / BTW ட்யூட் என்று சொல்லக்காடாதாமே? டூட் தான் சரியாம். //

      பூவ பூன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம், நீங்க சொல்றா மாதிரியும் சொல்லலாம்... மாதிரி!

      நீக்கு
    4. திருஷா இல்லைனா நயனதாரா, அப்புறம் அமலா நடித்த ஒரு படம்... இவையெல்லாம் செய்யாத்தையா டூட் செய்துவிட்டது? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் பார்க்கிறேன்.

      நீக்கு
    5. அதையும் மீறி என்றுதான் சொல்லணும்.  மேலும் அவங்க செஞ்சதனால இவங்க செய்யறது நியாயம்னு சொல்ல முடியுமா என்ன...

      நீக்கு
  24. திருவடிசூலம் திருப்பதி கோவில்... இதைப்போலத்தான் சென்னை முகப்பேரில் இருக்கும் திருப்பதி கோவிலும் இருந்தது. பெருமாளை கும்பல் இல்லாமல் விஸ்ராந்தியாக தரிசனம் செய்ய முடிந்தது ஒரு காலத்தில், இப்போது அதுவும் திருப்பதிக்கு இணையாக ஆகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...  பெரிய உருவமா பெருமாளை நிறுத்தினாலே இதுவும் திருப்பதி என்று சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள்...

      நீக்கு
  25. இன்றைய பதிவில் சரித்திர தகவல்கள்(தமன்னா உள்பட) அதிகமாக இருக்கிறதே :))
    சேட்டைக்காரன் பதிவு எப்போது மீண்டும் துவங்கும்?
    மிஸ்டர் எக்ஸ் பகுதிக்கு துணுக்குகள் எழுதச் சொன்னபொழுது பலரும் சர்தார்ஜி ஜோக்குகளை எழுதி அனுப்பினார்கள். ஆ.வி.அதை சொல்லி, நிராகரித்த பின்னர்தான் ஒரிஜனல் மிஸ்டர் எக்ஸ் ஜோக்குகள் வரத்துவங்கின.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1) ஓ...  தமன்னா ஒரு சரித்திரம் என்று புகழ்கிறீர்களா?  மறைமுகமாக வயதாகி விட்டது என்று சொல்கிறீர்கள்!

      2) சேட்டைக்காரரைதான் கேட்கணும்!

      3) மிஸ்டர் எக்ஸ்...   ஆமாம், நினைவிருக்கிறது.

      நீக்கு
  26. //இது வரை இப்படி ஒரு வரவேற்பை எனது ஃ பேஸ்புக் சரித்திரத்தில் (!) பார்த்ததில்லை. ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் லைக்குகள்..ஆயிரத்து எழுநூறை நெருங்கிக் கொண்டிருக்கும் shares..
    http://tinyurl.com/ntwpll2// WOW! Great! Kudos!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  தினமலரிலும் வந்தது...   ஹிஹிஹி...

      நீக்கு
  27. //இருவர் தாமாக முன்வந்து ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டு நீண்ட காலம் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த உறவில் முறிவு ஏற்படும் போது குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு. // 100% ஒப்புக் கொள்கிறேன். ஒருவேளை அந்த ஆண் திருமணம் செய்து கொடுத்திருந்தால் இந்தப் பெண் இந்த ஒழுக்கக்கேட்டை வெளியே சொல்லியிருப்பாளா? கொன்னால் பாவம் தின்னால் போச்சு என்றாகி விட்டது. அனுபவித்து ஏமாற்றினால் பாவம், தாலி கட்டினால் போச்சு.ஹூம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாலி கட்டி இருந்தால் உரிமையுடன் விவாகரத்து கோரியிருக்கலாம். 

      ஆனால் பிரிவை மனதில் வைத்து நம்பிக்கை இல்லாமலேயேவா இணைகிறார்கள்?  என்ன கொடுமை..  சகித்துக் கொள்ளும் திறனற்றவர்கள்.  

      நீக்கு
  28. மதனின் மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ் ரொம்ப பிரபலம்.

    வாசித்தால் கண்டிப்பாகச் சிரிக்காமல் இருக்க முடியாதுசர்தார்ஜி ஜோக்ஸ் போலத்தான்.

    ஜோக்ஸை ரசித்தேன்...சிரித்தும் விட்டேன் அதுவும் கடைசிக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிஸ்டர் எக்ஸுக்கு மதன் படம் போட்டாரே தவிர, ஜோக்ஸ் அவருடையது அல்ல.  வாசகர்களே நிறைய எழுதினார்கள்.

      நீக்கு
  29. ஸ்ரீராம், இங்கு ஓசூரிலும் ஒரு தென் திருப்பதி என்று சைடில் ஆறு ஓட அழகான சூழலில் ஒரு சின்ன குன்றின் மீது இருக்கு பதிவும் போட்டிருந்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஆங்காங்கே இருக்கிறது. சென்னை டி நகரில் கூட ஒன்று!

      நீக்கு
  30. திருவனந்தபுரத்தில் கரண்ட் இல்லையோ...  இல்லை, பதிவு நீளம்னு கோபம் வந்துடுச்சோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எலி படுத்திய பாடு. computer mouse problem.

      நீக்கு
    2. ஓ...  இஸ்ரோக்காரர் வீட்டிலேயே எலிப் பிரச்னையா?  கேரளத்திலும் எலி உண்டோ...

      நீக்கு
  31. கடந்த ஆறு வாரங்களாக, அனுபவத் தொடர் என்ற ஒப்பனையில் நான் எழுதிய சுயதம்பட்டங்களை வாசித்து, கருத்துக்களைத் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள்! அவ்வப்போது பதிலளிக்க முடியாவிட்டாலும், பாராட்டு, விமர்சனம் இவ்விரண்டையுமே ஏற்றுக் கொள்கிறேன். அனுபவத்தொடர்கள் அலுப்பூட்டுவது இயல்பு என்பதால், அதிகப்படியான டோஸ்களை அடுத்தடுத்து போடுவது என்பது வாசிப்பவர்களுக்குச் செய்கிற வதையாகி விடும் என்பதாலும், ஒரு இடைவெளி தேவைப்படுகிறது என்பதாலும் இந்தப் பகுதியுடன் ஒரு காற்புள்ளி வைத்துவிட்டு, விரைவில் வருவேன் என்ற அறிவிப்பு (அ) எச்சரிக்கையுடன் வணங்கி விடைபெறுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலுப்பூட்டவில்லை என்பதுதான் நிஜம்.  அனைவருமே ரசித்தோம்.  வேறு வேலைகளும் இருக்கும் என்பது உண்மைதான்.  இடையில் எழுத நேரம் கிடைக்காமலா போகும் என்கிற சுயநல எண்ணம் தலை தூக்குகிறது! 

      எனிவே, நன்றி வேணுஜி..  சொன்னபடி விரைவில் மீண்டும் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  32. ​//எதற்கும் குறைவில்லை
    ஒன்றைத்தவிர...​//
    அந்த ஒன்று/இன்னொன்று என்னாங்கோ?

    சேட்டைக்காரன் சேட்டையெல்லாம் மறந்து ஒப்புதல் வாக்குமூலத்தில் இறங்கிவிட்டார். கட்டுரையின் நடை அபாரம்.

    9 வருடம் ஒரு பெண் ஏமாந்தாள் என்பது பெண்ணின் பின் புத்தியைத்தான் காட்டுகிறது. ஆனாலும் ஆண் நம்பிக்கை துரோகம் செய்த குற்றத்துக்கு தண்டிக்கலாம் என்பது எனது கருத்து.

    ​நான் எனது பள்ளி படிப்பு, மற்றும் கல்லூரி படிப்பு இவற்றை நடந்து சென்று தான் படித்தேன். 3 கி மி. மேல்நாடுகளில் உள்ளது போல் வசிக்கும் இடத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள பள்ளிகளிலேயே மாணவர்கள் சேரவேண்டும் என்ற ஒரு நடைமுறையை கொண்டு வரலாம்.

    இந்த தாலி சென்டிமென்டை நம்முடைய தொலைத்தொடர்களில் அதிகம் காணலாம். தாலியை கட்டிவிட்டால் கணவன் என்று பல கதைகள். நடுவே தாலியை கழற்றிக்கொடுக்கும் புரட்சிகள். ஆக ஒரே கோணபியூஷன் தான்.

    மிஸ்டர் எக்ஸ் மிஸ்டர் பீன் நினைவூட்டியது. அதன் தழுவலோ?

    மஹா பாரதம் நடந்த ஒன்றோ இல்லையோ, ஒரு epic என்ற முறையில் போற்றலாம். மில்டன் paradise lost , ஹோமர் iliad போன்று.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்..  என்ன லேட்?

      இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத ஒன்றை தேடி எங்கெங்கோ அலைவது நியாயமா?!!!

      சேட்டைக்காரர் இதைப் படிப்பார் என்றே நம்புகிறேன்.

      ஆண் எப்பவுமே பழி சுமக்கிறவன்தானா?

      தமிழகத்தில் முன்பு ஒரு அரசு ஆணை உண்டு.  இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.  வேலை செய்யும் இடத்திலிருந்து குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரத்துக்குள் வாசிக்கவே வேண்டும்.  ஏட்டளவில்தான் இருந்ததது / இருக்கிறது.  அவரவர் சௌகர்யப்படி செங்கல்பட்டிலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள் உண்டு.  

      தாலி செண்டிமெண்ட் புதிய பாதையில் தேசிய விருதே பெற்றது.

      மிஸ்டர் பீன் லேட்டர் வெர்ஷனோ..  காலத்தால் எக்ஸ்தான் மூத்தவரோ...

      மகாபாரதம் - உழைக்க கதைகளில் மொத்த அக்கருவும் அதனுள் இருக்கிறது என்று சொல்லலாம்.

      நீக்கு
    2. சேட்டைக்காரனின் சேட்டைகளில் இதுவும் ஒன்று என்று கருதிக் கொள்ளுங்களேன். :-) உங்களது கருத்துக்களுக்கு நன்றி!

      நீக்கு
  33. மகாபாரம் கதையல்ல நிஜம் என்று எதற்காக ஒருவர் நிரூபிக்கணும்? நடந்த இடங்கள் இன்னும் இருக்கின்றன. கதை மாந்தர்களின் குண இயல்பைகள் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்டுள்ளன. கிருஷ்ணனின் தவறோ, யுதிஷ்டிர்ரின் தவறோ, துரியோதன்னின் நல்ல குணமோ, திருதராஷ்டிர்ரின் வில்லத்தனமோ, எதுவுமே மறைக்கப்படலை. பாரத்த்தின் வரலாற்றின் பகுதிதான் மகாபாரதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிரூபிக்கிறார் என்று ஏன் சொல்ல வேண்டும்?  நடந்ததற்கு சாட்சியாக இருக்கும் விஷயங்களை எடுத்துக் காட்டுகிறார்.  வலு சேர்க்கிறார் என்று சொல்லலாமே...  மகாபாரதத்தின் மேன்மைகள் பற்றி யாருமே சந்தேகபபடவில்லை.

      நீக்கு
  34. அந்த அந்த வயதில் பெண்கள் அழகாக இருப்பர். விதிவிலக்காக சிலர் மாத்திரமே வயது ஆக ஆக அழகு குறையாது. தமன்னா அந்த லிஸ்டில் இல்லை. இது இயற்கை. மைதா மாவு பூசி இதைச் சரி செய்ய இயலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விஷயம் தமன்னாவுக்கு தெரியவில்லை என்கிறீர்களா?

      நீக்கு
  35. திருமணத்துக்கு முந்தைய உறவு.... திருமணம் ஆனவனிடமே வெட்கம் கெட்டு பிள்ளையை வயிற்றில் உண்டாக்கிக்கொண்டு தனக்கு அநீதி நடந்துவிட்டதாகப் புகாரளிக்கும் காலம் இது. இவர்களுக்கு எதற்கு சட்டத்தின் உதவி? பேசாமல் அரசியல்வாதியாகிவிட்டால் என்ன வேணுமானாலும் செய்யலாம் எப்படி வேணுமானாலும் வாழலாம், எல்லோருக்கும் தன் அரசியல் தொழிலில்இடமளிக்கலாம், மக்களின் ஆதரவும் உண்டு என்பதால் இவர்களைப் போன்றவர்கள் அரசியலில் குதிப்பதுதான் சரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயங்களில் அரசியல்வாதிகளையும் நீதிமன்றம் குட்டும் என்று இன்று தெரிந்து கொண்டோம்!

      நீக்கு
  36. திருவடிசூலம் எப்போது போய்ச் சேர்ந்தீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்த்த நேரத்துக்கு மேல் சுமார் முக்கால் மணி நேரத்திற்கும் தாமதமாக..
      .

      நீக்கு
  37. உடல் சோர்வு... மனம் சரியில்லை

    பதிலளிநீக்கு
  38. இந்த நீளம் போதுமா..
    இன்னும் கொஞ்சம் வேணுமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பாராமல் கொஞ்சம் நீளமாகி விட்டது.  மன்னிக்கவும்.  பாதி படங்களில் போய்விடுமே...  இல்லையா?

      நீக்கு
  39. பிரம்மாண்டமான கருமாரி அம்மன் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்..
    பெருமாள் விவரம் புதிது...

    ஓம் நமோ வெங்கடேசாய..

    பதிலளிநீக்கு
  40. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  41. ஐந்து, ஆறு பதிவு போட வேண்டிய அவ்வளவு விஷயங்கள் ஒரே பதிவாக.
    எல்லாம் நன்றாக இருந்தது, உங்கள் பயண அனுபவம். உங்களை பாசைப்பற்றி சொன்னது எல்லாம் சரித்தான். அதுதான் அந்தக்காலத்தில் பயணத்திற்கு உணவு தண்ணிர் என்று வீட்டிலிருந்தே எடுத்து போய் விடுவார்கள், ஓட்டல் தேட வேண்டாம், பசித்தபோது சாப்பிட்டு கொள்ளலாம். வயிறும் பயண சமயம் கெடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஐந்து, ஆறு பதிவு போட வேண்டிய அவ்வளவு விஷயங்கள் ஒரே பதிவாக. //

      ஹிஹிஹி...   மன்னிச்சுக்குங்க..  அப்புறம் மறந்து போயிடும், இல்லன்னா விட்டுப் போயிடும்!

      நீக்கு
  42. சாலை வழி காட்சி கவிதையை கொடுத்து ஒன்றை தவிற என்று முடித்து வாசகர் யூகத்திற்கு விட்டுவிட்டீர்களா? சாலையோர மனிதர்கள் நிலை மாறாதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அதுவும் கவனத்தில் வந்ததால்...

      நீக்கு
  43. சேட்டை வேணுஜி அவர்களின் பதிவை இப்போது புதிதாக வீட்டை விட்டு வேலைக்கு என்று வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு உதவும்.

    நிறைய இடங்களில் சுய அலசல் இருக்கிறது அவர் பதிவு இன்று பெரிதாக இருக்கே! என்று படித்துக் கொண்டே வந்தேன். பின்னர் வருவதாக சொல்லி விட்டார் எழுதி வைத்த அனைத்தையும் இந்த வாரத்திற்கு அனுப்பி விட்டார் , அனுபவ தொடர் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் என் அனுபவங்களை அசைபோடுவதுண்டு..   சேட்டை இபப்டி சட்டென முடித்திருக்க வேண்டாம்..  ஒரு 25 வாரமாவது வந்த பிறகுதான் இடைவெளி விடுவார் என்று நினைத்தேன்!

      நீக்கு
  44. குறிப்பிடத்தக்க செய்திகளில்
    நீதிமன்ற தீர்ப்பு சரியே

    பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டுகளை படியெடுத்து படித்து சொல்லட்டும் விவரமாய்.

    மாணவர்களுக்கு என்று 'பீக் அவர்'களில் தனி பஸ் விடலாம் மாணவர்கள் தொற்றிக் கொண்டு போவதை பெற்றவயிறு பார்த்தால் கலங்கும், நமக்கே கலங்குகிறது.

    சுயவிளம்பரம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​கருத்துகளுக்கும், வாழ்த்துக்கும் நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  45. பின்னூட்டம் இங்கும் கவிதையாய்

    பின்னூட்டத்தை நல்லாத்தான் மாற்றி இருக்கிறீர்கள் கவிதையாக
    நகைச்சுவை சிரிக்க வைத்தது

    பதிலளிநீக்கு
  46. மாலை 4:15 ஆகியும் பக்கத்தில் யாரொருவரும் கருத்திட வில்லை..
    இன்னும் கொஞ்சம் கனிய வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கிறேன்.  காலை பார்த்தபோது ஒன்றும் இல்லை.  இப்போதெல்லாம் நேரம் மாற்றி வெளியிடுகிறீர்களோ...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!