21.11.25

கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென நீலவிழியும் பிறை நுதலும்...

முற்றிலும் குழுவினரே முழுப் பாடலும் பாடும் பாடல் முன்னர் வேறு இசைமயமைப்பாளர் இசையில்  இருந்திருக்கிறதா என்று கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தேன்.  சட்டென்று என் நினைவுக்கு எதுவும் வரவில்லை.  நினைவில் பழுது?

எனக்கு நினைவில் வந்த இரண்டு பாடல்கள் இளையராஜா பாடல்கள்.  இளையராஜா ஒரு கோரஸ் ஸ்பெஷலிஸ்ட்.  என் எண்ணத்தில், அவர் அளவு கோரஸ் குரல்களை பாடல்களில் உபயோகித்தவர் முன்னும் பின்னும் எவருமில்லை.  ஓரளவுக்கு எல்லோரும் உபயோகிப்பார்கள்.  ஆனால் இளையராஜா அதை சாதனை அளவாக வைத்திருக்கிறார் என்பது என் எண்ணம்.

இன்று பகிரப்போகும் பாடலுக்கு முன்னோடியாய் இரண்டு பாடல்கள்.  இன்று பகிரப்போகும் பாடல் இந்த இரண்டு பாடல்களிலும் கொஞ்சம் வேறுபட்டது. 

எனவே முதல் இரண்டு பாடல்களும் முதலில்...   இரண்டு பாடல்களும் ஒரே படம்.  தேவர் மகன்.  தேவர் மகன் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் எதுவும் இருக்காது என்று நம்புகிறேன்.  கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஆறு வயதுக்கு குழந்தையாக இந்தப் படத்தில் பாடி இருப்பார்.

முதல் பாடல் மாசறு பொன்னே வருக...  ஸ்வர்ணலதாவும் மின்மினியும் பாடியது.  முழுப்பாடலும் இணைந்தே பாடி இருப்பார்கள்.  வாலியின் பாடல். மாயாமாளவகௌளா ராக அடிப்படையில்  பாடல்.

மாசறு பொன்னே வருக
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக

கோல முகமும்
குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும்
விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத்
தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக

நீர் வானம் நிலம் காற்று
நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப்
பணியாற்றுதே

பார் போற்றும் தேவாரம்
ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே
உன் பதம் போற்றுதே

திரிசூலம் கரம் ஏந்தும்
மாகாளி உமையே
கருமாரி மகமாயி
காப்பாற்று எனையே

பாவம் விலகும் வினையகலும்
உனைத் துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும்
சூலியென ஆதியென
அடியவர் தொழும்  -     மாசறு பொன்னே வருக



===============================================================================================

சமீபத்தில் வந்த கமல் பிறந்த நாளையொட்டி கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் விஷ்ணுவர்தன்  மற்றும் சினேகன் அவர்களிடம் கமல் பற்றி பேசும் காணொளி ஒன்றுபார்த்தேன்.  அதிலிருந்து கொஞ்சம்...

தசாவதாரம் வந்த நேரத்தில் யாரைப்பார்த்தாலும் கமல் மாதிரியே இருக்கும்.  டீ  கொண்டு வருபவர் முதல் யாரைப் பார்த்தாலும் கமல் மாதிரியே இருக்கற மாதிரி இருந்தது.  ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு நடையும், பேசும் ஸ்டைலும் யோசித்து வைத்திருந்தார்.

மனோரமா ஆச்சியை பொம்பளை சிவாஜி என்று சொல்வார்கள்.  தசாவதாரம் ப்ரீவியூவில் படம் பார்த்துக் கொண்டிருந்த மனோரமா இண்டர்வெல்ல "அப்பா..  இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தா மட்டும் பயம்மா இருக்கு..  எங்கே பிடிச்சீங்க?" என்று கேட்க, அதுவும் கமல்தான் என்று சொன்னேன்.  அழுது விட்டார் மனோரமா...  அப்படியே கமல் கிட்ட போய் அவர் கையைப் பிடிச்சுக்கிட்டு "ஐயா...   எப்படிப்பா..." என்று அழுது பாராட்டினார் என்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

கமல் ஒருமணி நேரத்தில் ஏழு கதை சொல்வார்.  இளையராஜா G K வெங்கடேஷிடம் பணிபுரிந்த நேரத்தில் நோட்ஸ் எழுதத் தெரியாது என்று GKV சொன்ன  பனிரெண்டு டியூனை மனப்பாடமா திருப்பி வாசித்துக் காட்டியதாகச் சொல்வாரே, அது போல  கதை டிஸ்கஷனில் கமல் மூன்றாவது கதையிலிருந்து அந்த போர்ஷன், ஏழாவது கதையிலிருந்து இந்த போர்ஷன் என்றெல்லாம் scene எடுத்து கோர்த்து படம் பண்ணி இருக்கோம்.  

அன்பே சிவம் கிளைமேக்ஸ் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை ரவிக்குமார் கமலிடமே சொன்னாராம்.  ஹீரோ தோற்று ஓடுவதாகவே வருவது நன்றாயில்லை என்று கமலிடம் சொன்னாராம்.  உண்மையில் அதில்தான் கமல் இலங்கை பாஷை பேசுவது போல இருந்ததாம்.  அதை தெனாலியில் இவர் உபயோகித்துக் கொண்டார்.  

அவ்வை ஷண்முகியில் மாமி கெட்டப் என்கிற ஒரு பவர்புல் கேரக்டரைசேஷன் இருந்தது,  இந்தப்;படத்துக்கு இலங்கை பாஷையை வைத்துக் கொள்வோம் என்றாராம் ரவிக்குமார்.  ஹே ராம் படத்தை முடித்து விட்டு நேராக தெனாலிக்கு வந்தவர், தெனாலி முடியும் நேரம் ஆரம்ஸோட வந்தார்.  அதை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிளைமேக்சில் அவர் ஆர்ம்ஸ் காட்டுவது போல ஒரு காட்சி வைத்தேன்.  

'இப்போது ஒரு தனுஷ் படத்துக்கு எனக்கு நெற்றியிலும், கன்னத்திலும் மட்டும் பிராஸ்தெடிக்  மேக்கப் போடவே சிரமமாக இருக்கிறது.  அது முடியும்போது உள்ளுக்குள் எறும்பு கடிப்பது போல நமநமக்கும்.  கமல் அந்த பாட்டி வேஷத்தில் நகம் முதல் பாதம் வரை அது மாதிரி மேக்கப்பில் நடித்தார்.  இது மாதிரி சமயங்களில் ரொம்ப கோபப்படுவார்.  அவர் எப்போது கோபப்படுவார் என்பது எனக்கு அனுபவத்தில் தெரியும் என்பதால் அட்ஜஸ்ட் செய்து வேலை வாங்கி விடுவேன்.  சமயங்களில் அவரை முந்திக் கொண்டு நான் ஆட்களிடம் கத்தினால் அவர் அமைதியாகி விடுவார்' என்கிறார் கே எஸ் ஆர்.  

கமல் படத்தயாரிப்பில் தலையிடுவார் எனபதை நான் நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன்.  அப்போதுதான் அந்த ஜீனியஸ் மைண்ட்லேருந்து வர்ற ஐடியாக்களை நாம பிடிச்சு போட்டு படத்துல சேர்க்கலாம்.  அது இல்லாம மற்ற வேளையில் சும்மா உட்கார்ந்து  இருந்துட்டு டைரக்டர் கூப்பிட்ட உடன் வந்து அவர் சொல்படி நடிச்சுட்டு போனால் கமல் மாதிரி இடத்தை அடைய முடியாது.  ரஜினி டிஸ்கஷனிலேயே நிறைய கேள்விகள் கேட்பார் என்கிறார்.  

===============================================================================================

தேவர் மகன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் "மணமகளே மணமகளே...

ஸ்வர்ணலதா, மின்மினியுடன் சிந்துஜாவும் சேர்ந்து பாடியிருக்கும் இந்தப் பாடல் சுத்த சாவேரி ராகத்தில் அமைந்த பாடல் என்கிறது விக்கி.

முதல் பாடலும் சரி, இந்தப் பாடலும் சரி படத்தின் கனமான காட்சிகளில் இடம்பெறும் பாடல்கள்.  மட்டுமல்லாமல், தேவர் சமூகத்தின் பாரம்பர்ய வழக்கங்களையும் காட்சியில் காட்டும் பாடல்.

மண மகளே மண மகளே
வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே
பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே

குற்றம் குறை இல்லா
ஒரு கொங்கு மணிச்சரமே
மஞ்சள் வளமுடனே என்றும்
வாழணும் வாழணுமே

மண மகளே மண மகளே
வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே
பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே

வலது அடி எடுத்து வைத்து
வாசல் தாண்டி வா வா
பொன் மயிலே பொன் மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய்
உன்னால் தானே மாறும்
மாங்குயிலே மாங்குயிலே

இல்லம் கோயிலடி
அதில் பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம்
என்றும் செல்வம் பொங்குமடி

மண மகளே மண மகளே
வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே
பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே 

================================================================================

சரி, எங்கே அந்த வித்தியாசமான மூன்றாவது பாடல் என்று கேட்கிறீர்களா?  தேடுகிறீர்களா?  

மன்னிக்கவும் நண்பர்களே...  ஒரு திடீர் யோசனையின்படி அந்தப் பாடலை வேறு ஒரு குழுவில் சேர்த்து அடுத்த வாரம் மூன்றாவது பாடலாகப் பகிர்கிறேன்...  ஏனெனில் இன்னொரு வகையிலும் வித்தியாசமான பாடல் அது!  

அதுவரை  Bye...  

19 கருத்துகள்:

  1. இன்றைய இரண்டு பாடல்களும் நல்ல தேர்வு. இளையராஜா, இசையமைப்பதில் என்றும் ராஜாதான்.

    திறமையாளர்கள் ஒன்று சேர்ந்தால் படத்தின் லெவல் எங்கோ போய்விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  உண்மை.  படத்தில் இடம்பெறும் காட்சியும் அதே தரம்.

      நீக்கு
  2. பாடலாசிரியர் குறித்து ஒன்ளும் எழுதாமல் விட்ட முதல் வெள்ளி இதுதானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. முதல் பாடல் விளக்கத்தின் கடைசி பாராவில் வாலி என்று சொல்லி இருக்கிறேனே....

      நீக்கு
  3. மீபத்தில் வந்த கமல் பிறந்த நாளையொட்டி கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் சினேகன் அவர்களிடம் கமல் பற்றி பேசும் காணொளி ஒன்றுபார்த்தேன்.//

    நானும் பார்த்தேன் ஸ்ரீராம். சுவாரசியமாக இருந்தது.

    கே எஸ் ரவிகுமார் Open minded இயக்குநர். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வார். அவரே சொல்கிறாரே நான் எடுக்கும் படங்களில் கதை என்னுடையது அல்ல நான் கதை எழுதுவதில்லை எங்கிருந்தாவது யாரிடமாவது ஒன் லைன் எடுத்துக் கொண்டு தான் மற்றதை அமைத்துக் கொண்டு விடுவதாகவும் கதையை யாரிடம் இருந்து அது ஒன் லைனாக இருந்தாலும் அவர் பெயரைப் போட்டுவிடுவதாகவும் சொல்லியிருக்கிறார்.

    அதனால்தான் அவர் வெற்றிகரமான இயக்குநராக இருக்கிறார் போல என்றும் நினைத்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... ஆம். ஜனரஞ்சகமான இயக்குனர். அவர் படங்கள் என்றால் நம்பிப் பார்க்கலாம்.

      நீக்கு
  4. மங்கலகரமான பாடல்கள்
    சிறப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
  5. திரிசூலம் கரமேந்தும்
    மாகாளி உமையே
    கருமாரி மகமாயி
    காப்பாற்று எனையே...

    ஓம் சக்தி ஓம்

    பதிலளிநீக்கு
  6. எனக்குப் பிடித்த இயக்குநர் ரவிக்குமார்...

    பதிலளிநீக்கு
  7. முற்றிலும் குழுவினரே முழுப் பாடலும் பாடும் இரண்டு பாடல்களும் மிக அருமை, கேட்டேன். நன்றி.

    கே எஸ் ரவிக்குமார் பேட்டி பகிர்வு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...  நன்றி.  லேபிளிலும் சேர்த்து விட்டேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!