கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன் :
நம் பாரம்பரியத்தில் விருந்தில், சமைத்த உணவோடு ராய்தா மாதிரியான பச்சடி, ஸ்வீட் பச்சடி என்று பழங்களில் செய்த பச்சடி, சாலட் போன்ற கோசுமல்லி, சாப்பாட்டிற்கு பிறகு பழம் என்று சாப்பிட்டோம். இப்போது சமைத்த உணவோடு சமைக்காத உணவுகளையும், பழங்களையும் சாப்பிடக் கூடாது என்கிறார்களே?
# நம் முன்னோர்களின் சிறப்புகள் பல இருந்தாலும் இந்தியர்களின் சராசரி வயது மிகக் குறைவாகவே இருந்தது. இது உணவுப் பழக்க வழக்கம் காரணமாகவும் இருந்திருக்கும். நிறைய ஆராயாமல் எளிதில் நிர்ணயிப்பது சரியில்லாமலும் இருக்கலாம். நிபுணர்கள் பதில் சொல்ல வேண்டிய கேள்வி. உறவுக்குள் திருமணம் குறித்துக்கூட பலவாறு சொல்லப் படுகிறது. பொது உடல்நலம் நன்றாகவும் சிக்கலின்றியும் இருப்பின் என்ன எப்படிச் செய்தாலும் சரி என்பதே சரி.
திரையில் நீங்கள் ரசித்த ரீல் ஜோடி எது?
# பெரிய ஈடுபாடு இல்லையெனினும் திரேதாயுகத்தில் சிவாஜி பத்மினி சில படங்களில் ரசித்ததுண்டு.
& திரையில் நான் ரசித்த ஜோடி என்று யோசித்தால் கமல் ஸ்ரீதேவி ஜோடி மட்டும் ஞாபகம் வருகிறது.
உங்கள் குழந்தைகள் உங்களோடு எதற்கு வாக்குவாதம் செய்வார்கள்?
# எல்லாத்துக்கும்தான். எனினும் அண்மையில் மோடியை எதிர்த்தாலும் ஜால்ரா போட்டாலும் சூடான விவாதம் தவிர்க்க முடியவில்லை.
இப்போது வரும் சீரியல்கள், மற்றும் திரைப்படங்களில் பெண்கள் குடிப்பதாகவும், புகைப்பதாகவும் சித்தரிப்பது சரியா? அல்லது நம் கலாசாரத்தை உடைக்க திட்டமிட்ட சதியா?
# நம் பெண் மக்கள் (சிலரேனும்) இத்தகைய பழக்கங்கள் வைத்திருப்பதாகத் தெரிகிறது. கலாச்சாரம் பற்றி அவர்களே அக்கரை காட்டாத போது என்ன சொல்ல இருக்கிறது ?
பெண்கள் குடிப்பது மட்டுமே கெட்ட பழக்கம், அதுவே ஆண்கள் ஆனால் பரவாயில்லை என்ற மனோபாவம் சரியென்று நினைக்கிறீர்களா ?
& பல வருடங்களுக்கு முன்பிருந்தே (2005+) சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் புகை பிடிக்கும் இளம் பெண்களைப் பார்த்து வருகிறேன். காலத்தின் கோலம்!
ஜெயக்குமார் சந்திரசேகரன் :
ஸ்மிரிதி, புராணம், வேதம் போன்றவை தொகுக்கப்பட்டு நூல்களாக உள்ளன. சனாதன தர்மம் என்றால் என்ன? கீதை போன்ற தொகுப்பா? அப்படியானால் தொகுத்தவர் யார்? அது ஏன் தற்போது பெரிதாக பேசப்படுகிறது? ஒன்றுமே புரியலை. விளக்கம் கூற முடியுமா?
# சனாதனம் என்ற சொல்லுக்கு அழிவில்லாதது ஆதியந்தம் இல்லாதது என்று பொருள் சொல்லப்படுகிறது. எனவே நமது இந்து மதக் கோட்பாடுகளில் அடிப்படையான சில காலத்தால் அழிக்க முடியாதவை - என்றென்றும் இருந்து வருபவை, என்பதைக் குறிக்கிறது சனாதனம் என்கிற சொல். அதைத் தனியாகத் தொகுத்து வைத்த புத்தகம் எதுவும் கிடையாது. மிகவும் அடிப்படையான இந்து மத நம்பிக்கைகள் தான் சனாதனம் என்று சொல்லலாம்.
வாழ்வின் சிறந்த இயல்பு என்பதை தர்ம அர்த்த காம மோக்ஷம் என்று பிரித்திருக்கிறார்கள். அர்த்தம் காமம் என்றால் விரும்பியதை அடைவது, சௌகரியங்களுக்கான பொருளை சேர்த்துக் கொள்வது. இதில் நீதி பிறழாமல் நியாயமான வகைகளில் சம்பாதிப்பதும், சுக சௌக்கியங்களை அனுபவிப்பதும் இருக்க வேண்டும். வாழ்வின் பிற்பகுதியில் இயல்பாக, பற்றற்ற நிலையும் இறைவன் - இறைமை பற்றிய தேடுதலும் புரிதலும் நம் உள்ளங்களுக்குச் சரியான பக்குவத்தை வழங்கி, நம்மைப் பிறப்பு - இறப்பு என்னும் சுழற்சியினின்று விடுபடச் செய்யும் என்று தெரிந்து கொள்வதே சனாதனம்.
நெல்லைத்தமிழன் :
1. ஆபாசம் என்பதை வரையறை செய்ய இயலுமா? ஒரு புகைப்படமோ இல்லை கட்டுரையோ இல்லை திரைப்படமோ 'ஆபாசம்' என்ற வரையறைக்குள் எப்போது வருகிறது?
# நிச்சயமாக ஆபாசம் என்ன என்பதை வரையறை செய்ய இயலும். " செய்யுங்கள் பார்க்கலாம் " என்று சொல்லக் கூடாது. நிர்வாணம், மூன்றாவது நபர் பார்க்கத் தகாதது பிறர் பார்வைக்கு வைக்கப் படுவது ஆபாசம்.
2. நாடார் கடைகள் என்று சொல்லப்படும் சிறு மளிகைக்கடைகளுக்கு டி.மார்ட், லூலூ போன்ற மிகப் பெரிய ஹைப்பர் மார்க்கெட் போட்டியா? சிறு மளிகைக்கடை வியாபாரங்களை இவை அழித்துவிடுமா?
# மெல்ல மெல்ல, சிறு வியாபாரிகளைப் பெருமளவு அழித்து விடும் சாத்தியக்கூறுகள் உண்டு. சிறிய தொகை கைமாறும் சில்லறை வியாபாரம் மட்டுமே பிழைத்திருக்கும் என்று தோன்றுகிறது.
3. நீங்கள் பட்டாசு வாங்கும்போது அவற்றின் MRPஐக் கவனித்திருக்கிறீர்களா? அதீத விலையில் இருக்கும். உதாரணமாக 10 கம்பி மத்தாப்புகள் கொண்ட பெட்டி 200 ரூபாய் என்று MRP போட்டிருக்கும். ஆனால் நமக்கு 60 ரூபாய்க்குக் கிடைக்கும். இந்த மாதிரி MRPயை யார் தீர்மானிக்கிறார்கள்?
# பட்டாசு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் எடுத்துச் செல்வது அபாயகரமானது அதனால் செலவு மிக அதிகம் ஆகும். பட்டாசுகளும் வாணங்களும் வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வாங்குபவர் மனம் உவந்து லாபகரமான விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் அதில் குறிக்கப்படும் விலை மிகவும் அதிகமாக இருக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுகிறது.
4. உங்களுக்கு நீங்கள் வேலை பார்த்த அலுவலகத்திற்கு, படித்த பள்ளிக்கு, வாழ்ந்த ஊருக்கு மீண்டும் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதா?
# ஆசை வந்திருக்கிறது. இரண்டொரு சமயம் அது பூர்த்தியும் ஆகியிருக்கிறது. அவ்வாறான சில சந்தர்ப்பங்களில் ஒரு சிறிய ஏமாற்ற உணர்ச்சியும் கூட ஏற்பட்டிருக்கிறது.
5. அம்மா அப்பா மீதான அன்பு, அவர்கள் மறைந்த பிறகு அதிகமாகியிருக்கிறதா இல்லை அவர்கள் இருந்தபோது இருந்த அதே அன்புதான் இப்போதும் இருக்கிறதா?
# அப்பா அம்மா மீதான அன்பு அவர்கள் போனபின்பு சற்றே மிகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவர்கள் நம்முடன் இருக்கும்போது நமக்கு எரிச்சல், சலிப்பூட்டும் வகையில் சில நிகழ்ச்சிகள் வரும். காலமான பின் அல்லது நீக்கி நல்லது நினைக்கிறோம்.
= = = = = = = = =
படமும் பதமும் :
எங்கள் வளாகத்தில் ஆங்காங்கே பலவித செடிகள் பூங்காக்கள்-நடைபாதையுடன் கூடியது, உண்டு. முழுப் பாதையில் ஒரு முறை நடந்தாலே 3000-4000 ஸ்டெப்ஸ்க்கு மேலேயே இருக்கும். அதில் ஒரு பகுதியில் இத்தகைய மிகச் சிறிய புல் வகைச் செடிகள் உண்டு. அதில் இந்த வெண்ணிறப் பூக்கள் பூக்கும். அனைத்தும் பூத்துவிட்டால் பளிச் என்று கண்ணைப் பறிக்கும். இரண்டு மூன்று நாட்களில் வாடிவிடும், செடியைவிட்டு அகன்றுவிடும். பிறகு வெறும் பச்சைப் புல் போன்ற செடிதான் கண்ணுக்குத் தெரியும். இதன் பெயர் உங்களில் யாருக்கேனும் தெரியுமா?
பூக்களின் க்ளோசப் இது. மிக அருகில் பார்த்தால் அவ்வளவு கவர்ச்சியாக இல்லை இல்லையா? இதற்கு அப்புறம் மறுநாள் வாட ஆரம்பித்துவிடும்.
= = = =
KGG பக்கம்
= = = = = = = =
Bitcoin போன்ற Crypto currency பற்றி விளக்கும் ஒரு கதை !
ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம். ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகளை வாங்க வந்தானாம்..!
ஒரு குரங்கை நூறு ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சானாம். அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவனை பைத்தியம்னு நினைச்சாங்களாம். யாராச்சும் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்கை காசு கொடுத்து வாங்குவாங்களான்னு யோசிச்சாங்களாம். இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, குரங்களை புடிச்சு வியாபாரி கிட்ட கொடுத்து, அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம். இந்த சேதி காட்டுத் தீ மாதிரி பரவ, நிறைய மக்கள் குரங்கு புடிக்கிற வேலையில இறங்குனாங்களாம்.
கொஞ்ச நாள் கழிச்சு, அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய் தருவதாக சொன்னானாம். அது வரை சோம்பேறித்தனமா வீட்டுலயே இருந்தவங்களும் உடனே குரங்கு புடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். பாக்கி இருக்கிற குரங்குகளை எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமே வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி.
ஜனங்களுக்கு தூக்கம் எல்லாம் போச்சு.. ஊருல மிஞ்சி இருக்குற அஞ்சாறு குரங்குகளையும் புடிச்சி வித்து, ஒன்னுக்கு 500 ரூபாய் வாங்கினாங்களாம். வியாபாரி அடுத்து என்ன அறிவிப்பு விடப்போறான்னு மக்கள் ஆர்வமா காத்திருந்தாங்க.
ஒரு வாரம் தான் ஊருக்கு போறதாவும், திரும்பி வந்ததும் ஒரு குரங்க 1000 ரூபாய்க்கு வாங்கிக்கிறதாகவும் சொன்னான் வியாபாரி.
தன் வேலைக்காரன கூண்டில இருக்கிற குரங்குகள எல்லாம் பாத்து பராமரிக்க சொல்லிட்டு, தன்னுடைய ஊருக்கு போனானாம் வியாபாரி.
பிடிச்சு வித்து 1000 ரூபாய் வாங்குறத்துக்கு ஒரு குரங்குக்கூட எஞ்சி இல்லையேன்னு மக்களுக்கு கவலை.
அத பார்த்த வியாபாரியோட வேலைக்காரன், ஜனங்களுக்கு ஒரு குரங்க 700 ரூபாய்க்கு விக்கிறதா சொன்னானாம்.
காட்டு தீ மாதிரி செய்தி பரவிச்சு. வியாபாரி 1000 ரூபாய்க்கு குரங்கு வாங்கினா, எப்படியும் தங்களுக்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கும்னு யோசிச்சாங்க ஊர் ஜனங்க.
அடுத்த நாள் கூண்டில அடைஞ்சு இருக்கிற குரங்குகளை வாங்க பெரிய வரிசை காத்திருந்துச்சு.
ஒவ்வொரு குரங்கையும் 700 ரூபாய்க்கு வியாபாரியோட வேலைக்காரன் வித்தான். பணக்காரங்க நிறைய குரங்குகள வாங்க, ஏழைங்க கடனவுடன வாங்கி, கொஞ்சம் குரங்குகளை வாங்குனாங்களாம்.
குரங்குகளை எல்லாம் பத்திரமா பாத்துக்கிட்ட ஜனங்க, அந்த வியாபாரி மறுபடியும் எப்போ ஊருக்கு வருவான்னு காத்திருந்தாங்களாம்.
யாருமே வரல..! எல்லாரும் அந்த வியாபாரியுடைய வேலைக்காரனைப் பாத்து விஷயத்தை கேக்க ஓடினாங்க.
ஆனா அவன் எப்பவோ ஊரை விட்டு ஓடிட்டான்..! அப்பதான் ஊர் ஜனங்க, ஒன்னுக்கும் பிரயோஜனப்படாத குரங்குகளை 700 ரூபாய் கொடுத்து வாங்கி, விக்க முடியாத நிலைமையில இருக்கோம்னு உணந்தாங்க.
இந்த வியாபாரத்துக்கு பேருதான் crypto currency!
இந்த குரங்கு வியாபாரத்தில சொற்ப ஆட்கள்தான் பணக்காரங்க ஆக முடியும். பெரும்பாலான ஆட்களுக்கு குடிதான் மூழ்கிப்போகும்...
படித்த பகிர்வு
காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்! வருக வருக!
நீக்கு/ மிக அருகில் பார்த்தால் அவ்வளவு கவர்ச்சியாக இல்லை அல்லவா?//
பதிலளிநீக்குஎந்தப் பூக்களும் மலர்ந்தால் கவர்ச்சி தான். எந்த நினைப்பில் இப்படிச் சொல்கிறீர்களோ, தெரியவில்லை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎதுவுமே மிக நெருங்கிப் பார்க்கப்பட்டால் அதன் கவர்ச்சி போய்விடும் என்பது என் அபிப்ராயம். ரோஜாவை மைக்ராஸ்கோப் கொண்டு ஆராய்ந்தால் அதன் கவர்ச்சி அழகு போய்விடும்.
நீக்குஆம்.
நீக்குசனாதனம் பற்றிய விளக்கத்திற்கு நன்றி. ஆனாலும் பதிலில் சரி/தவறு என்பதில் திருப்தி ஏற்படவில்லை. AI யை கேட்டுப்பார்க்கலாம்.
பதிலளிநீக்குதற்போதைக்கு இந்த சொல் சனாதனம் என்பது அரசியல் ஆயுதங்களாக பயன் படுத்தப்படுகிறது என்று நம்புகிறேன்.
Jayakumar
ஆம். தற்காலத்தில் அரசியல் வியாதிகள் மட்டுமே சனாதனம் பற்றி நிறைய பேசுகிறார்கள். விண்ணவர் கண்டிலர்; கண்டவர் விண்டிலர்!
நீக்கு//எதிர்த்தாலும் ஜால்ரா போட்டாலும்..//
பதிலளிநீக்குஎன்னங்க, எபி குழ்ந்தைகளிடம் போய் இதெல்லாம்?..
.
:)))
நீக்குகுரங்கு கதையைப் படித்ததும் எனக்கு ஈமு கோழி ஏமாற்று வேலையும், தேக்கு மரம் திட்டமும் தான் பிளாஷ் ஆகின. இலவசம், மிகவும் லாபம், என்று சொன்னால் மக்கள் அவற்றின் பின் ஓடுவதை நிறுத்த மாட்டார்கள். இது அரசியலுக்கும் பொருந்தும்.
பதிலளிநீக்குஆம், உண்மைதான்!
நீக்கு./சனாதன தர்மம் என்றால் அழிவில்லாதது என்று சொல்கிறார்கள்..//
பதிலளிநீக்குஅப்போ மாற்றம் ஒன்றே மாறாதது என்றும் சொல்கிறீர்களே!
ஒரு பக்கம் இதுவும் ஓடிகிட்டிருக்கு. அதுவும் ஓடிகிட்டிருக்கு என்றால்
இரண்டும் முரணாகத் தெரியவில்லையா?..
மாற்றங்கள் என்பதற்கு அழிவடைவது என்ற பொருள் அல்ல.
நீக்குஜீவி சார்... உங்க குழந்தைகளை பொய் சொல்லக் கூடாது திருடக்கூடாது என்று சொல்லித்தானே வளர்த்தீர்கள்? அப்போ பொய்மையும் வாய்மையிடத்து, பசிக்கொடுமையால் திருடியது குற்றமல்ல என்று சொல்வது உங்களுக்கு முரணாகத் தெரியவில்லையா?
நீக்குஅதானே!
நீக்குமாற்றம் அடையும் எதுவும் அழியக்கூடியதும் காலத்தால் கட்டுப்பட்டதுமாகும் என்பது அத்வைத அடிப்படை .
நீக்குஇந்த மாதிரி வெட்டு ஒன்று துண்டு இரண்டான பதிலைத் தான் எதிர்பார்த்தேன். நன்றி.
நீக்கு/ நிர்வாணம் மூன்றாவது நபர் பார்க்கத் தகாதது..//
பதிலளிநீக்குஇது என்ன வரையறை?...
ஒருத்தருக்குள்ளே இருப்பது தான் ரகசியம். அந்த ஒருத்தரைத் தாண்டி இன்னொருவருக்குத் தெரிந்தாலே ரகசியம் என்பது போய் விடுகிறது
என்கிறார்களே, அந்த வரையறை இந்த நிர்வாணத்திற்கு கிடையாதா என்ன?. நல்ல கதை.
அது சரி, பெளத்த மதத் தத்துவம் நிர்வாணத்திற்கு ஏன் அந்த அர்த்தபூர்வமான பெயர் வந்தது தெரியுமா?
புதன் கேள்வியா?
நீக்குஇது பற்றி மேலும் விளக்குவது விரும்பத் தக்கதல்ல.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் முருகா
நீக்கு/// பெற்றோர் காலமான பின்
பதிலளிநீக்குஅல்லது நீக்கி நல்லது நினைக்கிறோம். ///
எல்லாம் விதி வழியே....
ஆம்.
நீக்குகுரங்கு கதை முன்னரே படித்தது தான்..
பதிலளிநீக்குஎங்கள் ப்ளாக் பதிவிலா?
நீக்கு/// நீங்கள் படித்த பள்ளிக்கு, வாழ்ந்த ஊருக்கு மீண்டும் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதா?///
பதிலளிநீக்குஆசைப்பட்டும் நேரம் கூடி வரவில்லை...
நேரம் வாய்க்கட்டும்; வாழ்த்துகள்
நீக்குபெண்கள் குடிப்பதாகவும், புகைப்பதாகவும் சித்தரிப்பது
பதிலளிநீக்குநம் கலாசாரத்தை உடைக்க திட்டமிட்ட சதியா?
அதே.. அதே...
ஆனால் கலாச்சார காவலர்களுக்கும் காசு தேவைப்படுகின்றதே...
அப்படிச் சொல்வது தவறு. பெண்களை அடிமைப்படுத்தியது சமூகம். அவளுடைய விருப்பங்களை யாரும் கேட்கவில்லை. தளைகள் அறுபடும் காலம் வந்தபோது, ஆணுக்கு நான் இளைத்தவள் அல்ல, நான் புதுயுகப் பெண் எனக் காட்டிக்கொள்ள சிகரெட், கஞ்சா, மது இவற்றிலும் தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்டுகின்றனர். ஆண்களில் பலர் குடிகார்ர்கள். இன்றும் சில தசாப்தங்களில் பெண்களும் அந்த நிலையை எய்துவார்கள். இதனை வியாபாரிகள் exploit செய்து வளர்த்துவிடுவார்கள்.
நீக்குகசப்பான உண்மை!
நீக்குஆபாசம் என்பதை வரையறை செய்வது கடினம். ஏனெனில் பார்ப்பவர் மனதில் கண்களில்தான் ஆபாசத்தின் வேர் இருக்கிறது. முட்டியில் கிழிந்த ஜீன்ஸ், இடுப்பு தெரியும் உடை, ஷார்ட்ஸ் எனப் பலவும் ஆபாசம்தான். ஏன் பொது இடத்தில் பொடி போட்டு மூக்குறிஞ்சுவது, கொட்டாவி போன்ற பலவும் ஆபாசம்தான்.
பதிலளிநீக்குன் 4/2/26 9:01 AM
நீக்குபின்னர் கூறியுள்ளவை ஆபாசம் அல்ல - அருவெறுப்பான செயல்கள்.
பாரதீய மதங்களின் தர்மங்கள் யுகயுகமாக வளர்ந்து மெச்சூராகி வருகின்றன. அவையே சனாதன தர்மம். அவற்றைப் பின்பற்றுபவர்கள் சனாதனிகள். இவற்றின் தொகுப்பு இந்து மதம். அவற்றைத் தொடர்பவர்கள் இந்துக்கள்.
பதிலளிநீக்குஜெயகுமார் சாரிடம் கேட்டால் கிறித்துவர்களுக்கான, முஸ்லீம்களுக்கான வரையறை சொல்வாரா? அதில் வராத குழப்பம் அவருக்கு இந்து மத்த்தில் மாத்திரம் வருவது ஏன்?
நல்ல விளக்கம். நன்றி.
நீக்குகிறிஸ்துவர்களுக்கு பைபிளில் பத்து கட்டளைகள் உண்டு. முஸ்லிம்களுக்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சட்டங்கள் குரானிலும் ஹதீதிலும் உண்டு.
நீக்குஆனால் நாத்திகனும் இந்து மதத்தில் உண்டு. இந்து எப்படி வாழவேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை.
Jayakumar
மக்கள் சிறையில் வாழக்கூடாது, எது நல்லது எது கெட்டது என தன் சுய புத்தியை உபயோகித்து வாழ வேண்டும். வாழ்க்கை முறை மாறும்போது அதற்கேற்றபடி மாறி வாழவேண்டும். அதன் நோக்கம் இப்போதிருக்கும் வாழ்க்கையைவிட மேம்பட்டதாக வழிமுறை நெறி பிறழாமல் வாழணும் என்ற த்த்துவம்தான் சனாதன மத்த்தின் சிறப்பு.
நீக்குநீங்கள் எழுதியிள்ளபடி பத்து கட்டளைகள்தாம் சட்டங்கள் என்றிருந்தால் கிறித்துவ மத்த்தில் ரோமன், ப்லாடஸ்டன்ட், சிரியன், பெந்தகொஸ்தே, 7th Adventist, .... என ஏகப்பட்ட பிரிவுகள் தேவையில்லையே.
குரானிலும் ஹதீசில் முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் உண்டு என்றால் முஸ்லீம்களிடையே ஷியா, சுன்னி, சூஃபி, அஹமதியா என நீண்டுகொண்டே போகும் பிரிவுகள் தேவையில்லையே.
மனிதனால் ஒருமுகப்படுத்தப்பட்ட சிறை வாழ்க்கை கூடாது என்பதால்தான் அவரவர்கள் சிந்தித்து எதையும் கடைபிடிக்கவேண்டும் என்பது சனாதனத்தின் அடிப்படை. இதனையொட்டிய பாசுரம் சனிக்கிழமையில் தருகிறேன்.
ஹதீஸ் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் எழுதுகிறேன். ஹதீசுகளையும், தங்கள் வழிமுறைக்கு ஏற்றவாறும், நெருடலான சங்கதிகள்/வழக்கங்கள் பிறர் கேலி செய்யும் நிலையை அடையக்கூடாது என்பதற்காக, இந்த இந்த ஹதீசுகள் authentic, approved இவை இவை சரியானவை அல்ல என்று பிரித்து வைத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?
நீக்குநான் சனாதனத்தைப் பற்றி அறிய கேள்வி கேட்டேனே ஒழிய மற்ற மதங்களை பற்றி விவாதிக்கவோ விமர்சிக்கவோ செய்யவில்லை. என்னுடைய கேள்வி. சனாதனம் என்றால் என்ன? அதன் பதில் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். நன்று நன்றி.
நீக்குஇது சனாதனம் இது சனாதனமல்ல என்று வரைமுறை உண்டா? உண்டெனில் அதை அருளியவர் யார்? இந்து என்றால் சனாதனம் என்ற அறியாத/அறியமுடியாத ஒன்றை பின்பற்ற வேண்டுமா? இவைகள் தான் எனது கேள்விகள். இந்த கேள்விகளுக்குள்ள பதில் எனக்கு புரியும்படி யாரும் தரவில்லை.
///பாரதீய மதங்களின் தர்மங்கள் யுகயுகமாக வளர்ந்து மெச்சூராகி வருகின்றன. அவையே சனாதன தர்மம். அவற்றைப் பின்பற்றுபவர்கள் சனாதனிகள்.///
பதிலளிநீக்குஅருமை..
ஆம்.
நீக்குசநாதன தர்மத்தின் விளக்கம் கிட்டத்தட்ட திரு யக்ஞராமன் சொல்லும் பொருளில் தான் உள்ளதுனு நினைக்கிறேன். எளிமையாகச் சொல்லி இருப்பதற்கு நன்றி. கிட்டத்தட்ட சநாதனம் என்பது ஓர் வாழ்க்கை முறை. திரு ஜேகே சொல்லி இருப்பது போல் மற்ற மதங்களின் பத்துக்கட்டளைகளோ இஸ்லாமியத்தில் உள்ள கட்டுப்பாடுகளோ கிடையாது என்றே சொல்லலாம். ஆனால் வாழ்க்கை முறையை வாழும் விதத்தை நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறது. அதற்காகவே நான்கு வர்ணங்களை ஏற்படுத்தி ஒவ்வொரு வர்ணத்தைச் சேர்ந்தவர்களும் வாழும் முறையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கூடவே அறம் சார்ந்தே வாழ்க்கை அமைய வேண்டும் எனவும் அதற்குத் திருமண பந்தம் அவசியம் எனவும் கணவன், மனைவி இருவருக்கான சேர்ந்தே செய்யும் நியதிகள், தனித்தனியாகச் செய்ய வேண்டியவை என வரையறுத்து உள்ளது. திருமண பந்தம் கூடப் பல கட்டுப்பாடுகளைக் கொண்டு தான் அமைந்திருந்தது. ஆனால் நாளாவட்டத்தில் புதுமை, வெளீநாட்டு மோகம், நாகரிகம் என்னும் பெயரில் மாற்றங்கள் வந்தாலும் அடிப்படையை இன்று வரை எவராலும் தகர்க்க முடியலை. அறம் சார்ந்த வாழ்க்கையை வாழுவதே முக்கியக் கோட்பாடு. இன்று போற்றுதலுக்கு உள்ளாகும் "அறம்" இல்லை. அதுவே வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
பதிலளிநீக்குநல்ல விளக்கமான கருத்துரை. நன்றி.
நீக்குநிலையானது, சாஸ்வதமானது, அழிவற்றது என்று ஏதுமில்லை.
பதிலளிநீக்குஅப்படியேதும் இருப்பின் அது டெட் வுட்டுக்கு சமம்.
இந்த வாழ்க்கை முறை இன்றளவும் அழியாமல் ஓரளவு அதே காரணங்களால் வாழப்பட்டு வருகிறது அல்லவா? அதிலிருந்தே தெரியவில்லையா இது உலகம் போற்றும் ஒரு தர்மம் எனவும் இது அழியாது எனவும் எங்கேனும் யாரேனும் ஒரு தம்பதியராலாவது கடைப்பிடிக்கப்பட்டுக் காப்பாற்றிக் கொண்டு செல்வார்கள் என்பதும் தெரிகிறதல்லவா? இந்தக்குடும்ப முறையை அழிக்க எவ்வளவோ பிரயத்தனங்கள் செய்யப்பட்டாலும் இன்றளவும் சில ஆயிரம் குடும்பங்களாவது குடும்பமாக வாழ்ந்து கொண்டு தானே வருகிறது? கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறநெறிகள் வேண்டுமானால் இல்லாது போகலாம். ஆனால் அடிப்படை அழியாமல் இருக்கிறதல்லவா?
நீக்குகீ சா மேடம் சொல்வது சரி.
நீக்குஇந்து எப்படி வாழவேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை...
பதிலளிநீக்குஅப்படி எனில்,
வள்ளுவம் முதலான நீதிநெறிகள் தேவையில்லாத
ஆணிகளா?...
இப்படி வாழவேண்டும் என்று குறள் கூறுவது அறிவுரை தான். கட்டாயம் அல்ல. அப்படி வாழவில்லை எனில் தண்டனை தர வள்ளுவர் கூறவில்லை.
நீக்குதிருமண பந்தம் அதன் உண்மையான பொருளை இழந்து ஓர் ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது. யாருக்கும் திருமணத்தின் உள்ளார்ந்த தாத்பரியம் புரியவில்லை. பிடித்தால் சேர்ந்து இருப்போம், இல்லையா பிரிந்து வேறு துணையைத் தேடிக்கலாம் என்பதே இன்றைய திருமணங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒரு கோட்பாடு. கணவன் மனைவிக்கோ மனைவி கணவனுக்கோ அநுசரித்துச் செல்லாமல் அவரவர் விருப்பு, வெறுப்புகளைச் சார்ந்தே வாழ்க்கை நடத்துவது இன்றைய காலத்தின் கோலம். அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் கூட இன்றைய நாட்களில் கணவனுக்கும் சேர்த்துச் சமைப்பதைச் சுமையாகக் கருதுகின்றனர். தினம் தினம் வடிச்சுக் கொட்ட நான் என்ன சமையல்காரியா எனக் கணவனைக் கேட்கும் பெண்களைப் பார்த்து வருகிறேன். இதெல்லாம் தான் இன்றைய நவநாகரிகப் பெண்களின் மனோபாவம். சில வீடுகளில் பெண்கள் தனக்கும் குழந்தைக்கும் மட்டும் சமைத்துக்கொள்ளும் செயலும் நடக்கிறது. கணவன் வந்தால் தானே சமைத்தோ, உணவகங்களில் ஆர்டர் செய்தோ தான் சாப்பிடணும். காஃபி, தேநீர் போன்றவை கணவன் போட்டால் மனைவிக்குக் கொடுக்கணும். ஆனால் மனைவி தனக்குத் தானே போட்டுக் கொள்வாள். கணவனுக்கு அதில் பங்கு கிடையாது. போனால் போகிறது எனக் குழந்தைக்குப் பாலோ, வேறு உணவுகளோ செய்து தருவாள். இது இன்றைய பெண்களின் சுதந்திரம்.
பதிலளிநீக்குவேதனையான உண்மை.
நீக்கு@பானுமதி, இப்போதைய சாலட் உணவுகள் ஓர் முழுமையான மதிய உணவாக மாறி வருகிறது இல்லையா? ஆகவே அதனுடன் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது சரியாகத் தான் இருக்காது. ஆனால் நம் பாரம்பரிய உணவு முறையில் இவை ஒரு தொடு உணவாகத் தான் இருந்து வருகிறது. எங்க பெண் வைச்சிருக்கும் ஓர் உணவு முறைகள் பற்றிய புத்தகத்தில் தென்னிந்திய உணவு முறைதான் சிறந்தது என ஒரு ஆஸ்திரேலிய உணவு நிபுணர் சொல்லி இருக்கும் கருத்தைப் படிச்சிருக்கேன். அதிலும் அவர் காலை வேளையில் சில பிராமணர்கள் வீட்டில் (அநேகமாக அந்தக்காலத்தில் எனலாம்) பருப்பு சாதம் நெய்விட்டுச் சாப்பிடுவார்கள். நானெல்லாம் பள்ளி போகையில் அநேகமாக அப்படித்தான் சாப்பிட்டுப் போயிருக்கேன். அந்தப் பருப்புச் சாதத்தை மிகச் சிறந்த சத்துணவு எனச் சொல்லப்பட்டிருந்தது.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்குஒரு பொருளின் கூறுகளில் ஏற்படும் அழிவே அதன் தேவைக்கான மாற்றம்.
பதிலளிநீக்குதத்துவங்கள் கூட காலத்திற்கேற்ப மாற்றங்கள் கொள்கின்றன. அந்த நுண்ணிய மாற்றங்கள் அந்தந்த சப்ஜெட்களில் புலமை கொள்ளாதவர்களுக்கு வெளிப்படத் தெரிவதில்லை. கால, தேச, வர்த்தமானங்களுக்கு ஈடுகொடுக்க ஏற்படும் மாற்றம் இது. யுகதர்மம் என்று பகவான் கிருஷ்ணர் அருளிய ஞான மேன்மை இது தான்.
இந்த யுகதர்மத்திற்கு வளைந்து கொடுக்காத எதுவம் நாளாவட்டத்தில் காணாமல் போகும். இதுவே இயற்கை நியதி.
நீக்குஇந்து எப்படி வாழவேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை...
பதிலளிநீக்குநியாயம் தான்.. நியதிப்படி
வாழ்ந்தால் வாழ்க்கை பிறரால்
பழிக்கப்படாது இருக்கும்...
கரெக்ட்.
நீக்கு@துரை செல்வராஜ் சார்: உண்மை!
நீக்குதிரையில் நான் ரசித்த ஜோடினு யாரும் இல்லை.
பதிலளிநீக்குஎங்க குழந்தைகள் முக்கியமாய்ப் பையர் அயன் ரான்டின் தீவிர ரசிகர். ஆகவே எனக்கும் அவருக்கும் சாஸ்திர, சம்பிரதாயங்களில் கருத்து வேறுபாடுகள் நிறையவே உண்டு. அதே பெண்ணிற்கு rituals, மடி, ஆசாரம் என்பதில் இருந்து எச்சல், பத்து, தீட்டு வரை பார்ப்பாள். அவள் கணவரையே இந்த விஷயத்தில் முற்றிலும் மாற்றி விட்டாள் எனலாம். ஆகவே பையருடன் இந்த விஷயத்தில் அதுவும் rituals விஷயத்தில் அடிக்கடி வாக்குவாதம் வரும்.
இந்து எப்படி வாழவேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை...
பதிலளிநீக்குயாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்...
சம்சாரிக்கும் சந்நியாசிக்குமான குறள்...
இது சனாதனத்தின் குரல்..
ஆசையே துன்பங்களுக்கு காரணம். புத்தர்.
நீக்குமற்றபடி அரசியல் விஷயங்களை நாங்கள் பேசிக்கொள்வதே இல்லை. பையருக்கு எனக்கு எதுவும் தெரியாது என்னும் எண்ணம் உண்டு. ஆகவே நான் ஏதேனும் சொன்னால் கூடச் சிரிப்பார். பெண் என்னோடு பேசும்போதே எந்தவிதமான அரசியலும் (வீட்டு அரசியல் உள்பட) பேசாதே என்று சொல்லிடுவாள். :))))
பதிலளிநீக்குநம் கலாசாரம் தான் ஏற்கெனவே சீர்கெட்டுக்கிடக்கிறதே! பெண்கள் முன்னேற்றம் என இந்தக் குணங்களெல்லாம் கொண்டாடப்படும்போது நாம் எது சொன்னாலும் எடுபடாது. முன்னெல்லாம் வட மாநிலங்களில் குடிக்கும் புகை பிடிக்கும் மேல் வர்க்கப் பெண்களைப் பார்த்திருக்கேன். இப்போப் பார்த்தால் தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளில் எல்லாம் சர்வ சககமாகக் காணப்படுகிறது.
பதிலளிநீக்குசகஜமாகக்
பதிலளிநீக்கு//இப்போப் பார்த்தால் தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளில் எல்லாம் சர்வ சககமாகக் காணப்படுகிறது.// இது கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்டது என்று நினைக்கிறேன். உதாரணமாக 3000 மாணவிகள் படிக்கும் ஒரு கல்லூரியில் ஒரு வகுப்பில் இருக்கும் 100 மாணவிகளில் 4 பேர்களுக்கு வேண்டுமானால் இந்த பழக்கங்கள் இருக்கலாம். 100 க்கு நாலு என்றால் ஆயிரத்துக்கு 40, மூவாயிரத்திற்கு 120. அந்த 120 பேர்கள் பளிச்சென்று தெரிவார்கள். சினிமாக்களில் அந்த 120 பேர்களை ஹை லைட் செய்யும் பொழுது ஓ! இதிலென்ன இருக்கிறது? என்று ஒரு எண்ணம் உருவாக்கப் படுகிறது.
நீக்குகமலா ஹரிஹரன் உடல் நலமாக இருக்காரா? காணோமே? &Sriram? Thi/Geetha already told that she will be busy for a week or so.
பதிலளிநீக்குஹிஹிஹி... காய்கறி நறுக்குவதில் கவனமாக இருந்து விட்டேன். ஏதும் விஷயம் உண்டா?
நீக்கு@ஸ்ரீராம் உண்மையான ஜென் தத்துவம். ஹி ஹி ஹி
நீக்குமறுபடியும் ஹிஹிஹி... அப்போ சித்தராகி விடவா?
நீக்குசித்தர் கூட பித்தராகி புத்தி மாறி செல்லலாம்
பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்
புத்தி கெட்ட மானிடர்க்கு தத்துவங்கள் தேவை என்னடா..
என்று பாடவா?!!
:)))
நீக்குநாடார் கடைகளில் ஒரு சௌகரியம் என்னவெனில் நமக்கு இந்த ப்ரான்ட் தான் வேண்டும் என்பதைத் தொடர்ந்து நாம் இரு முறை வாங்கினால் புரிந்து கொண்டு நமக்கு அந்த ப்ரான்டையே கொடுக்க முயல்வார்கள். இந்த வாடிக்கையாளரா? அப்போ இவங்களுக்கு இதான் பிடிக்கும், சரியா வரும் என்பது தெரிந்து வைத்திருப்பார்கள். கிட்டத்தட்டத் தனிப்பட்ட கவனம் இருக்கும். ஆனால் பெரிய பெரிய நீங்கள் சொல்லி இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் சந்தை நிலவரத்துக்கு ஏற்றாற்போலவும் கொள்முதல் செய்யும் கம்பெனி ஆட்களையும் பொறுத்து அவ்வப்போது மாறுபடும். நமக்குத் தொடர்ந்து ஒரே ப்ரான்ட் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். என்னோட ஓட்டெல்லாம் இந்த மாதிரி நாடார் கடைகள், சிறு வியாபாரிகளுக்குத் தான். இப்போவும் ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை கூடையைத் தூக்கிக் கொண்டு வந்து வியாபாரம் செய்யும் பெண்ணிடம் பேரமே பேசியதில்லை.
பதிலளிநீக்குநல்ல பழக்கம்.
நீக்குபெரிய சூப்பர் மார்கெட்டுகள் குட்டி குட்டி கடைகளை கபளீகரம் செய்து விடும் என்றுதான் நானும் நினைத்தேன், ஆனால் பெரிய மால்கள், zepto போன்றவற்றையும் தாண்டி, சிறு கடைகளும் இயங்குவதுதான் இந்தியாவின் சிறப்பு. மஸ்கட்டில் லூலூ வந்து பல குட்டி மலபாரி கடைகளை சாப்பிட்டு விட்டது.
நீக்குஇந்தப் புற்களின் பூக்கள் மேல் குளிர்காலத்தில் காலை வைத்து நடந்தால் வரும் புத்துணர்ச்சி அனுபவித்தால் தான் தெரியும். நசிராபாதில் எங்கள் குடியிருப்பில் தோட்டத்தில் பெரிய லான் எனப்படும் புல் தரையில் தினம் தினம் பார்த்து அனுபவித்த காட்சி இது.
பதிலளிநீக்குகுரங்குக் கதை ஏற்கெனவே படிச்சது தான். எங்கேனு தான் தெரியலை.
திருக்குறள் நீதி தான்... கட்டளை அல்ல...
பதிலளிநீக்குதிருவள்ளுவரே மெய்ப் பொருளைக் காணச் செல்கின்றார்...
தண்ணீரை பௌதிகமாகப் பார்ப்பதற்கும் புனிதமாகக் காண்பதற்கும் மனோபாவம் வேண்டும்...
கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடமும் பதமும் நெல்லைத்தமிழன் பகிர்ந்த புல்லில் பூத்து இருக்கும் வெண்ணிறமான பூக்கள் அழகு, மொட்டாக இருக்கும் போதும் அழகாய் இருக்கிறது.
கெளதமன் சாரின் குரங்கு கதை மக்களின் அதிக ஆசையை (பேராசை)அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சொல்கிறது.
முன் பணம் கட்டினால் 30 நாட்களுக்குள் பொருட்களை எடுத்து செல்லலாம் என்று சொல்லி கடை போடுவார்கள், ஊர் மக்கள் பணம் கட்டுவார்கள் . சார் சொன்னது போல முன்னால் பணம் கட்டியவர்களுக்கு பொருட்கள் கிடைக்கும் . விஷயம் பரவி அனைவரும் கட்டியவுடன் ஒரு நாள் இரவோடு இரவாக ஓடி விடுவார்கள்.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம். வாழ்க வளமுடன்.
நீக்குகேள்வி பதில்கள் அவற்றிற்கான கருத்துக்கள் பலவும் கண்டோம்.
பதிலளிநீக்குகலிகாலம் என்று சொல்லிவிட்டார்களே ஆணவமும் தீயபழக்கங்களும்தான் மேல் ஓங்கி நிற்கிறது.
ஆம்.
நீக்குநாடார் கடைகள் என்று சொல்லப்படும் சிறு மளிகைக்கடைகளுக்கு டி.மார்ட், லூலூ போன்ற மிகப் பெரிய ஹைப்பர் மார்க்கெட் போட்டியா? சிறு மளிகைக்கடை வியாபாரங்களை இவை அழித்துவிடுமா? //
பதிலளிநீக்குஎன் ஓட்டு, அண்ணாச்சி கடைகளுக்குத்தான். அவர்களிடம் நமக்குத் தேவையானதை சொல்லி வைத்துக் கூட வாங்க முடியும். சூப்பர் மார்க்கெட்டுகளில், லுலூ, டிமார்ட், டாட்டா ஸ்டார் போன்ற செயின் சூப்பர் மார்க்கெட்டுகளில், சில நல்லது கிடைத்தாலும் கூட., நமக்குத் தேவையான் ப்ராண்டுகள் கிடைப்பது சிரமம்.
கண்டிப்பாக உலகமயமாக்கல் சூப்பர் மார்க்கெட்டுகள், அண்ணாச்சி கடைகளை காவு வாங்கிவிட்டது எனலாம். அண்ணாச்சிகளுமே கூட இப்ப சூப்பர்மார்க்கெட்டுகளாக்கிட்டாங்க. உதாரணம், சென்னையில் அடையாரில் இருந்த கடை இப்ப சூப்பர் மார்க்கெட்.
டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்களில் ஒரே கூரையின் கீழ் எல்லாம் கிடைப்பது போல இருப்பது சில சமயங்களில் சௌகரியம் அவ்வளவுதான். என்றாலும் என் ஓட்டு எப்போதும் அண்ணாச்சி கடைகளுக்குத்தான்.
அண்ணாச்சி கடைகளில் கிடைத்த நயம் துவரம் பருப்பு. கடலைப்பருப்பு பாசிப்பருப்பு இவை சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைப்பது அரிது.
டாட்டா ஸ்டார் கடையில் கிடைக்கின்றன.
கீதா
நல்ல கருத்து.
நீக்குநெல்லை, இந்தப் பூக்கள் ரெயின் லில்லி என்று சொல்லப்படும்.
பதிலளிநீக்குகீதா
குரங்குக்கதை புதியது. ஆனால் அதை மிகவும் சரியா பொருத்திருக்காங்க எழுதினவங்க...கிரிப்டோ கரன்சி பத்தி எனக்கு குரங்குக்கதையின் உட்கருத்து தான் எனக்கும் உண்டு.
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்கு/// இந்து எப்படி வாழவேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை...
பதிலளிநீக்குஎன்பது நியாயம் தான்.. நியதிப்படி
வாழ்ந்தால் வாழ்க்கை பிறரால்
பழிக்கப்படாது இருக்கும்... ///
மனம் போல வாழ்வதென்றால் நூலோர் தொகுத்தவற்றை அவமதிப்பு செய்வதாக அர்த்தம்...
ஆம், சரி.
நீக்குஇந்து சமயத்தில் எதுவும் கட்டளை
பதிலளிநீக்குஇல்லை தான்...
அதனாலேயே இந்து சமய எதிர்ப்பில் பலரது வயிறுகள்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றன..
உண்மைதான்
நீக்குஇன்றைய கனமான விவாதத்தில் ரீல் ஜோடி அமுங்கி விட்டது. திரையில் ஜோடியாக நடிப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் competitory ஆக இல்லாமல் complimentory ஆக இருக்க வேண்டும். அந்த வகையில் எனக்கு
பதிலளிநீக்குஎனக்குப் பிடித்த ரீல் ஜோடிகள்
எம்.ஜி.ஆர். - சரோஜா தேவி(ஆந்த சக்கரகட்டி ராஜாத்திக்கு ஈடு ஊண்டா?)
சிவாஜி - வாணிஸ்ரீ
முத்துராமன் - லட்சுமி, ஜெய்சங்கர் - லட்சுமி
கமல்ஹாசன் - ஸ்ரீதேவி, கமல்ஹாசன் -கௌதமி ஜோடியும் பிடிக்கும்
கார்த்திக் - குஷ்பு
மம்முட்டி - கீதா
விஜய் தேவரகொண்டா - சமந்தா
ரேவதி யாரோடு ஜோடியாக நடித்தாலும் அந்த ஜோடிதான் பெஸ்ட் என்று தோன்றும்படி கச்சிதமாக பொருந்துவார்.
சுஹாசினி யாரோடு ஜோடியாக நடித்தாலும் ஒட்டாமல் தனியாக நிற்பார். தனுஷும் அப்படித்தான்.
மிகவும் நல்ல கருத்துரை. கார்த்திக் குஷ்பு மட்டும் நெருடுகிறது! பிரபு குஷ்பு ஓ கே!
நீக்கு