இரண்டாவது மகனின் திருமணப்பத்திரிகை விநியோகத்தில் நேர்ந்த ஒரு சிறு சம்பவம்! அல்லது இரு சம்பவம்!
வழியில் சாப்பிட, ப்ளஸ் குடிக்க எடுத்துக் கொண்ட (!!) தயிர் சாதம், மோர் காலியாக, இரவு டிஃபனுக்கு ஒரு ஹோட்டல் செல்ல தீர்மானித்து சிறிய உடுப்பி ஒன்றுக்கு செல்ல எண்ணியபோது பக்கத்து கடை மெடிக்கல் ஷாப் என்று தெரிந்தது. இடம் மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் ஏரியா. சில மருந்துகள் வாங்கவேண்டும் என்பதால் முதலில் அதற்குள் நுழைந்து அவற்றை வாங்கி கொண்டு பின்னர் ஹோட்டல் சென்றோம்.
சிறிய ஹோட்டல். ரோடைப் பார்த்தபடி இருந்தது. அந்தக் கால ஹோட்டல் போலும். AC ஹால் இல்லாதது ஒரு மைனஸ் என்றால், அடுப்புக்கு அருகே எங்களுக்கு இடம் கிடைத்தது இன்னொரு மைனஸ்!
அங்கு அமர்ந்து மருந்துகளை எடுத்துப் பிரித்து ஓட்டுனருக்கு அவர் அவசரத்துக்கு வாங்கியிருந்த மாத்திரைகளை கொடுக்கலாம் என்று பிரித்தால் ஒரு மாத்திரை - ஒற்றை மாத்திரை - Albendazole 400 - மிஸ்ஸிங். அப்படியே அடுத்த கட்டிடம்தானே.. ஆனியன் ரவா ஆர்டர் செய்திருந்தேன். எப்படியும் தாமதமாகும் என்று பாஸ், அண்ணா, ஓட்டுனரிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு பக்கத்து கடைக்குள் நுழைந்து கேட்டேன்.
நான் மாத்திரை பெயரைச் சொன்னதுமே அதைக் கொடுக்கவில்லை என்பதை அந்த நடுத்தர வயதுப் பெண்மணி நெற்றியைத் தட்டிக்கொண்டு ஆமோதித்து விட்டு எடுத்துக் கொடுத்தார். "அதற்குள் இன்னொரு லேடி வந்தாரா.. டப்பாவை எடுத்தவள், அப்படியே வைத்து விட்டேன்' 'பில்லில் இதற்கும் சேர்த்துதானே பணம் வாங்கினீர்கள்?' என்று கேட்டேன். 'இல்லை' என்றார். "ஒவ்வொரு ஐட்டமாக பார்த்துதானே விலை போட்டேன்?!" 'மாத்திரை எவ்வளவு?' என்றதும் 'எட்டு ரூபாய்' என்று சொல்லி வாங்கி கொண்டார்.
மறுபடி உடுப்பிக்குள் நுழைந்து சாப்பிட்டோம். பில்லைக் கொடுத்த சர்வர், சட்டென பில்லை வாங்கி 'ஸாரி ஸார்.. சப்பாத்தி காஸ்ட் சேர்க்க விட்டுட்டேன்' என்று சொல்லி அதை தனி பில்லாக்கி கொண்டு வந்து கொடுத்தார்.ஒரு 270 பில், அப்புறம் ஒரு 145 பில். 500 ரூபாய் கொடுத்தனுப்பினேன். அவர் மிச்சம் கொடுத்ததை வாங்கி சர்வரிடம் 20 ரூபாய் டிப்ஸ் கொடுத்து விட்டு, மிச்ச பணத்தை பில்லின் நடுவில் பொதிந்து சட்டை பாக்கெட்டில் சொருகிக் கொண்டு, எழுந்து சென்று கை கழுவி, ரெஸ்ட் ரூம் சென்று வந்து, திடீரென ஒரு சந்தேகம் வந்து பில்லை எடுத்துப் பிரித்தால்.. ஆமாம்... மிச்ச ரூபாய் 185 ரூபாய் கொடுத்திருந்தார். என்னையே பார்த்துக் கொண்டிருந்த சர்வரிடம் வந்து 'மிச்சம் தப்பா கொடுத்திருக்காரே' என்றதும் அவர் முகத்தில் பதட்டம் ஏற்பட்டது.. 'இல்லையே.. நான் சரியாகத்தான் கொடுத்தேன்' 'நீங்க இல்லை' என்று சொல்லி கல்லாவை நெருங்கி, 'இப்பதான் இவர் மூலம் பில் செட்டில் செய்தேன். இரண்டு பில் கூட்டி மிச்சம் தரவேண்டும்....' என்று நான் ஆரம்பிக்கும்போதே கல்லாவில் இருந்தவர் 'ஆமாம்.. 100 ரூபாய் கூட கொடுத்துட்டேன்' என்று சொல்லி வாங்கி கொண்டார்! அவ்வளவு உஷாரானவர் எப்படி தவறு செய்தாரோ..
என் நேர்மையை நானே மெச்சிக்கொண்டு காரில் ஏறி உட்கார்ந்து, மருந்து பில்லை தேடினேன். அவர் பில் எல்லாம் தரவில்லை. மருந்துகளை போட்டுக் கொடுத்த கவரிலேயே விலை எழுதி இருந்தார். அதில் Albendazole என்று எழுதி 10 ரூபாய் என்று போட்டு வாங்கி இருந்தார்!
=======================================================================================
என் ஒன்று விட்ட இளைய சகோதரர் மற்றும் அவர் மனைவி இருவரும் அரசு பள்ளி ஒன்றில் உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியராக வேலை செய்கிறார்கள். சேவை செய்கிறார்கள் என்றே சொல்லலாம். அவர்கள் சொல்லும் அனுபவங்கள் நம்மை திகைப்படையச் செய்கின்றன. சில உண்மைகள் சுடுகின்றன. இந்தக் காலத்தில் ஆசிரிய பணி என்பது சிரமமானது. 'முன்னரே உன் அனுபவங்களை சொல்லி இருக்கலாமே' என்று சொன்னபோது அவர் சொன்னது.
தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி, நன்றி, நன்றி.
வாக்கு உற்றவன் வாத்தியார் என்பது பழமொழி. அத வக்கத்தவன் வாத்தியாரு என்று கேவலப்படுத்தி விட்டார்கள். அது வாக்கு உற்றவன் என்று கூறலாமா அல்லது வாக்கு கற்றவன் என்று கூறலாமா என தெரியவில்லை.
எது எப்படியோ வாய் ஜாலம் இருந்தால் தான் எங்கள் தொழிலில் பிழைக்க முடியும்
வாசு ஸார் என்று அவருடைய மாணவர்களால் அன்போடு அழைக்கபப்டும் அவர் உருவாக்கியுள்ள பல மாணவச் செல்வங்கள் இன்றும் அவரை நன்றியோடு நினைவுகூர்கிறார்கள். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் அவரின் பழைய மாணவர் ஓரிருவராவது அவரை சந்தித்து ஆசி பெற்று நன்றியைச் சொல்கிறார்கள். அவர் வேலை செய்யுமிடங்களாக இருந்தால் அந்த பில் தொகையை தாங்கள் செலுத்தி விடுவதாகக் கூறுகிறார்கள். வாசு அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
வாசு சார் அவர்கள் இருக்கும் கடைகளுக்கு, நிறுவனங்களுக்கு சென்றால் அவர்களே பார்த்து விட்டு இவர் இருக்கும் இடம் ஓடி வந்து விடுவார்கள்.
சென்னை - பெங்களூரு சாலையில் உள்ள 'டிவைன் கேப்' ஹோட்டல் கொஞ்சம் பிரபலம். அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் உள்ளே நுழைந்து போட்டோ எடுத்து போடுவது வழக்கம். அந்த உணவகத்தின் தலைமை செஃப் வாசுவின் மாணவர்.
தற்சமயம் 40 ஆண்டு கால சர்வீஸ் முடித்திருக்கும் அவரைப் பாராட்டி அவர் ஊரில் போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடி இருக்கிறார்கள் மாணவர்கள். அவர் எங்கள் குடும்ப குழுமத்தில் எழுதியத்திலிருந்து சில பகுதிகளை அவர் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். முதலில் அவர் தந்த முன்னுரை...
என்னுடைய 40 ஆண்டுகால பணி நிறைவு குறித்து வாழ்த்துக்களையும் ஆசிரியர் பணியை பற்றிய நல்ல கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.
26 4 1986 அன்று, ஒரு மாதமாக நான் பணிபுரிந்து கொண்டிருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டு உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பதவி ஏற்று கொண்ட தினம்.
அன்றைய வட ஆற்காடு மாவட்டம் மிக மிகப் பெரியது.
அதாவது ஐந்து கல்வி மாவட்டங்கள் அடங்கியது.
அனைத்து கல்வி மாவட்டங்களில் இருந்தும் எனக்கு பணி கிடைத்தது அதில் முதன்மையாக நான் பெற்ற திருவண்ணாமலை கல்வி மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் 27/ 3/ 86 அதாவது தற்போது நான் செய்து கொண்டிருக்கும் பணிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அரசு பணியில் சேர்ந்து விட்டேன்.
அதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் தென்பெண்ணை ஆற்றை பாலம் எதுவும் இல்லாத அந்தப் பகுதியில் ஆற்றின் வழியாகவே கடந்து சென்று தொண்டமானூர் என்கிற அந்த ஊரில் ஒரு மாத காலம் பணிபுரிந்தேன்..
இந்த சமையத்தில்அப்பணி சற்று தாமதமாக வந்தாலும் reliefஆக அமைந்தது. அதாவது சாத்தனூர் டேமிற்கு அந்தப் பக்கத்தில் இருந்து சாத்தனூர் டேம் இருந்து இந்த பக்கம் இருக்கின்ற சொர்பணந்தல் என்கிற உயர்நிலைப் பள்ளியில் பணி கிடைத்தது.
1986 -87 கல்வி ஆண்டில் என்னிடம் 10வகுப்பில் கணிதம் படித்த நிறைய மாணவ மாணவியர் என்னை விட வயதில் மூத்தவர்கள் என்பதனை நான் attendance ரிஜிஸ்டர் மூலம் தெரிந்து கொண்டேன் அதிர்ந்தேன்.
ஆனாலும் அந்த காலத்து மாணவர்கள் மிகவும் obedientஆக இருந்தார்கள். இன்னமும் இருக்கிறார்கள்..... என்னுடன் அவர்கள் இன்னும் whatsapp குழு மூலம் தொடர்பில் இருக்கிறார்கள்.
இது எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது.
அடுத்து சில பல ஆண்டுகள் கழித்து அணைக்கட்டு என்கிற மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்தேன். பெண்கள் என்பதால் சற்று சத்தம் அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலை அதைத்தவிர மாணவிகளின் எண்ணிக்கையும் அங்கு அதிகம்.
சத்தமாக பேசாமல் மெதுவாக பேச பழகிக் கொள்ளுங்கள் என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டே இருந்தேன்.
ஒரு நாள் வகுப்பறையில் ஒரு சிறிய பாம்பு ஒன்று நுழைந்தது. அதனை ஒரு மாணவி என்னிடம் வந்து மிக மிக மிக மெல்லிய குரலில் சார் பாம்பு வந்திருக்கு சார் என்று என்னுடைய காதில் விழாதவாறு கூறிக் கொண்டே இருந்தாள்...
சற்று உரக்க கூறுமாறு நான் கேட்டுக் கொண்டதன் பெயரில் என் காதில் மட்டும் விழுகின்ற அளவுக்கு சார் பாம்பு வந்திருக்கு என்று கூறினாள்.
அய்யய்யோ பாம்பா வந்திருச்சு ஏம்மா கொஞ்சம் சத்தமா சொல்ல கூடாதா என்று ஓடிப்போய் நான் அந்த பாம்பை வகுப்பை விட்டு வெளியேற்றினேன்.
இப்படியாக நிறைய அனுபவங்கள் என்னுடைய இந்த 40 ஆண்டு பணி காலத்தில்....
Latestஆக தொரப்பாடி பள்ளியில் கஞ்சா விற்பனை செய்பவனை பிடிக்கச் சென்று சுவர் ஏறி குதித்தது ..
காதல் விவகாரத்தில் என்னுடைய மாணவனை வெளியில் இருந்து ஒருவன் பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்த சென்ற பொழுது அதை தடுத்தது ....
இதுபோல .....
நிறைய நினைவில் வராத விஷயங்கள் அதிகம்.
ஒரு நாள் திடீரென்று அருகிலுள்ள சிறைச்சாலைக்கு வருமாறு எனக்கு தகவல்.
என்ன ஏது என்று கேட்கும் பொழுது
சார் நீங்க senior most teacher என்பதால் Central prison க்கு teachersஐ recruit பண்ணனும்... Chief Education Officer உங்கள தான் ரெகமெண்ட் பண்ணாங்க. தயவு செய்து வாங்க என்று superintendent of prison னிடமிருந்து Phone.
இப்படியாக என்னுடைய பணி teaching என்பதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
2027 டிசம்பர் மாதம் முடிய சர்வீஸ் இருக்கிறது. இன்னும் மீதமுள்ள காலங்களில் என்னென்ன அனுபவங்கள் கிடைக்கப் போகிறதோ...
எது எப்படியானாலும் மாணவர்களுடைய psychology தெரிந்துகொண்டு அவர்களிடம் அன்புடன் பேசி பழகினால் நாம் அவனை நல்வழிக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது மட்டுமே உண்மை. கறார் கண்டிப்பு இவையெல்லாம் இரண்டாம் பட்சம் மட்டுமே...
========================================================================================
கல்கியின் முன்னுரை ஒன்றிலிருந்து சில பகுதிகள் - பானுமதி வெங்கடேஸ்வரன்
பாங்கர் விநாயக்ராவ் என்னும் தன்னுடைய நூலுக்கு கல்கி எழுதியிருந்த நீ..ண்..ட முன்னுரையிளிருந்து(9அத்தியாயங்
ராஜாஜி “சென்னையில் வேலையில்லாமல் இருந்தால் கெட்டுப் போவாய்!” என்று சொன்னது எனக்கு அளவுக்கடங்காத வியப்பையும் திகைப்பையும் அளித்தது. நம்முடைய சமாசாரம் ராஜாஜிக்கு எப்படித் தெரிந்தது என்றுதான் வியப்பு.
சென்னை ராயப்பேட்டையில் நான் இருந்தபோது ஒரு நாள் இரவு சந்திரக் கிரகணம் பிடித்தது. கிரகணம் பார்ப்பதற்கும் ஸ்நானம் செய்வதற்கும் திருவல்லிக்கேணி கடற்கரைக்குப் போயிருந்தேன். இரவு ஒரு மணிக்கு கிரகணம் விட்டதும் ஸ்நானமும் முடிந்தது. ராயப்பேட்டைக்குக் குறுக்கு வழியாகப் போக எண்ணித் திருவல்லிக்கேணி சந்து ஒன்றில் புகுந்தேன். போகப் போகப் புதிய புதிய சந்தும் பொருந்தும் வந்து கொண்டிருந்தனவே தவிர, ராயப்பேட்டையைக் காணவேயில்லை. “ராயப்பேட்டை கெட்டுப் போய் விட்டதா? அல்லது நான்தான் காணாமற் போய்விட்டேனா?” என்ற யோசனை உண்டாகிவிட்டது. கடைசியில் நான் வந்திருந்தது மயிலாப்பூர் மந்தைவெளி என்று தெரிந்தது. அங்கிருந்து டிராம் ரோட்டைப் பிடித்துக் கொண்டு காலை நாலு மணிக்கு ராயப்பேட்டை சேர்ந்தேன்!
எனவே, சென்னையில் இருந்தால், அதுவும் சும்மா வேலையின்றி இருந்தால், நான் கெட்டுப் போகக் கூடியவன்தான் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தது! ராஜாஜியும் இதையே சொல்லவே ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்கக் கூடாது என்று மறுநாளே வீட்டைக் காலி செய்து விட்டுப் புறப்பட்டேன். (அடாடா! அந்தக் காலி வீடு மட்டும் இப்போது காலியாகவே இருந்தால்...!)
காந்தி ஆசிரமத்துக்கு நான் போய்ச் சேர்ந்தது முதல் சில மாத காலம் வரை கணக்கு எழுதுவதில் ஈடுபட்டிருந்தேன். ஆசிரம வாழ்க்கை ஆனந்தமாகத்தான் இருந்தது. அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து பிரார்த்தனைக்குப் போய் உட்காருவது மட்டும் ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தது. சில நாள் காலைப் பிரார்த்தனை செய்த பிறகு மறுபடியும் போய்ப் படுத்துக் கொண்டு விடுவேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு காலையில் எழுந்திருப்பது பழக்கமாகிவிட்டது.
காலைப் பிரார்த்தனையைக் காட்டிலும் மாலை ஏழு மணிப் பிரார்த்தனை எப்போதும் சுவாரஸ்யமாயிருக்கும். மகாத்மாவின் சத்தியாகிரஹ ஆசிரமத்தில் நடப்பதை ஒட்டி, பகவத் கீதை பாராயணம், நாமாவளி பஜனை முதலியவை நடைபெறும். அவற்றோடு “முக்திநெறி அறியாத” என்னும் திருவாசகமும், “மாற்றறியாத செழும் பசும் பொன்னே!” என்னும் அருட்பாவும் பாடப் பெறும். பாடப்பெறும் என்று சம்பிரதாயமாக தான் சொல்கிறேன். அந்தப் பாட்டுகள் இன்னும் உயிரோடு இருப்பது மாணிக்கவாசகர், ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் ஆகியவர்களின் தபோ வலிமையினால் தான். மகாத்மா நடத்தும் மாலை பஜனைகளில் ஸ்ரீமதி மீராபென் என்னும் பெயர் பூண்ட மிஸ் ஸ்லேட் அம்மையார் மீராபாயின் கீதங்களைப் பாடுவதுண்டு. அவ்வளவு துரதிர்ஷ்டத்தை மாணிக்கவாசகர் செய்யவில்லையென்று சொல்லலாம். ஆனால் அடுத்தபடி துரதிர்ஷ்டக்காரர் என்றே சொல்ல வேண்டும். ஆசிரமத் தொண்டர்களின் சாரீரம் அவ்வளவு சுகமாயிருக்கும்! ஆசிரமத்தில் எனக்கு ஏதாவது கஷ்டம் இருந்ததென்றால், அது மேற்படி தமிழ்ப்பாடல்களைத் தொண்டர்கள் பாடக் கேட்பதொன்றுதான்.
==============================================================================================
ஒரு நேர்மறைச் செய்தி - பானுமதி வெங்கடேஸ்வரன்
மதுரையைச் சேர்ந்த பத்மாவதி என்ற அந்தபெண்ணிற்கு பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை, ஆனால் 17 வயதிலேயே திருமணம் ஆகி விட்டதால் இல்லறக் கடமைகளில் மூ
====================================================================================
சுதந்திரபோராட்ட காலத்தில் அந்தமான் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தாமோதரன் கதையை படமாக்கிக் காட்டி இருந்தார் இயக்குனர் ப்ரியதர்ஷன். மோகன்லால், பிரபு, தபு ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்தின் பெயர் ஷிர்க்கைச்சாலை. வெளிவந்த ஆண்டு 1996. தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. அறிவுமதியின் பாடல்களுக்கு இளையராஜா இசை.
அந்தப் படத்திலிருந்து இரண்டு அற்புதமான பாடல்கள்.
இந்தப் பாடலில் இளையராஜாவையும் பாலசுப்ரமணியத்தையும் சித்ராவையும் ரசிக்கலாம். காட்சியையும் ரசிக்கலாம். அற்புதமான உணர்வுகளுடன் கூடிய பாடல்.
சிகரெட்டும் சுருட்டும் பொடியும் புகையிலையின் குழந்தைகள்தான். ஆனால் பொடிக்கு உலகில் ஒரு அந்தஸ்து கிடைத்துள்ளது. பொடி நுழையாத இடம் கிடையாது. 'பத்மபூஷன்' விருது அளிக்கும் நிகழ்ச்சியில் ஜனதிபதி சாட்சியாகப் பொடி போடலாம். ஈ வே ராவின் போராட்டத்தை நம்பி நிற்காமல் எப்போதோ கர்ப்பகிரகத்தில் பொடி நுழைந்து விட்டது. பொடிக்கு அடிமையானவர்கள் ஏராளமானவர்கள்.
கொடுமை, கொடுமை
ஆபிரகாம் லிங்கன் தன் மனைவியுடன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டது தெரித்த சேதி,
நாமும் (நகைச்கவையுடன்) சில கொடுமை வாக்க்கியங்களைத் தயாரிக்க முயற்சிக்கலாமே! வாசகர்கள் எழுதி அனுப்பலாம்.
அப்பாடி' எத்தனை எத்தனை ஜோக்குகள்!
எப்படித்தான் இத்தனை நினைவில் வைத்திருக்கிறார்!
ஆச்சரியமான ஞாபக சக்தி!
ஆனால் அவற்றை
எத்தனை எத்தனை தரம் என்னிடம் சொன்னார்
ஆச்சரியமான மறதி!
கடுகு

















இன்றைய வியாழன் பகுதியில் நிறைவான பல பகுதிகள் இருக்கின்றன. ஆசிரியர் வரைதான் படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநேர்மறைச் செய்தி தலைப்பைப் பார்த்ததும் ஒரு காலத்தில் சனிக்கிழமையின் பாதிப் பகுதியை அத்தகைய செய்திகள் எடுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது
பில்லையும் பொருட்களையும் சரி பார்ப்பது நல்ல வழக்கம். இல்லையெனில் ஏமாற நேரிடும்.
பதிலளிநீக்குஇரண்டு நாட்கள் முன்புதான் நேரில் பத்திரிகை கொடுப்பது எவ்வளவு சிரம்ம் மற்றும் என் அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
நல்லவேளை... உள்ளூர்.. காலாகாலத்துக்கு சட்னு ஹோட்டலில் நுழைந்து சாப்பிட்டுவிடலாம்.
நல்ல ஆசிரியர் மாணவன் நினைவிலிருந்து என்றும் மறைய மாட்டார், நம்மை அந்தச் சமயத்தில் நம் தவறுகளுக்காக வெளுத்திருந்தாலும்.
பதிலளிநீக்குஆசிரியப் பணி அறப் பணி. அவரது அனுபவங்கள் ரசனை. இதைப் பற்றி பிறகு வந்து எழுதுகிறேன்.
கூறாமல் சன்னியாசம் கொள் என்பதை அந்த எகிப்திய கணவன் அறிந்திருக்கவில்லை போலிருக்கிறது.
பதிலளிநீக்குஅழகிய பெண். நாகத்தின் நச்சு எண்ணம்.
நம்மூரிலும் கணவன் செய்யும் அறமற்ற செயல்களை, நல்லவேளை பெண்கள் பொறுத்துக்கொண்டு செல்கிறார்கள். இல்லைனா நம் எல்லோருக்கும் என்னென்ன அனுபவங்கள் கிடைத்திருக்குமோ..