சோழர்கள் காலத்தில், குறிப்பாக தஞ்சை பெரியகோயிலுக்காக செய்துகொடுத்த உற்சவ விக்கிரகங்கள் பற்றி ஒரு புத்தகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, தற்போதுள்ள பெரியகோயிலின் கல்வெட்டுகள் பிரகாரம் சுமார் 70 உற்சவ விக்ரஹங்கள் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றில் ஒரு சில விக்ரஹங்கள் பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டவை. சில வெண்கல வார்ப்பாலும், பித்தளையினாலும் செய்யப்பட்டவை. பெரும்பாலும் செம்பை உபயோகித்துச் செய்த விக்ரஹங்களே அதிகம். அதனால் பொதுவாக அவற்றை செப்புத் திருமேனிகள் என்பர். (பெரியவர்களை, வைணவர்கள், தங்கள் திருமேனி பாங்காக இருக்கிறதா? என்று விசாரிப்பார்கள். உடம்பு சௌக்கியமா என்று அர்த்தம். கேரளத்தில், திருமேனி என்பது அரசகுலத்திற்கான சொல்). மனிதர்களுக்காக எடுக்கப்பட்ட செப்புச் சிலைகளை பிரதிமங்கள் என்பர்.
இவற்றைப் பற்றி (எந்த எந்த விக்ரஹங்கள் செய்யப்பட்டன, எதனால் செய்யப்பட்டன என்பதை) கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதுமட்டுமன்றி, விக்கிரஹத்தின் மொத்த உயரம், பீடம் எப்படி அமைந்திருந்தது, பாதத்திலிருந்து தலைப்பகுதி வரை உள்ள உயரம், உட்கூடாக விக்ரஹம் வடிவமைக்கப்பட்டதா இல்லை கனமாகச் செய்யப்பட்டதா என்றெல்லாம் விவரமாகச் சொல்கின்றன. அவற்றிற்கான ஆபரணங்கள், அதில் பதிக்கப்பட்ட நவமணிகளின் எண்ணிக்கை போன்றவற்றையும் குறிப்பிடுகின்றன. (இப்படியெல்லாம் அவற்றில் குறிப்பிட்டுள்ளன என்று முன்பே தெரிந்திருந்தால், படிக்கத் தெரிந்தவர்கள் லவட்டியிருக்கமாட்டார்களா?)
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடும் பதிகத்தில்,
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ்
சாழலோ!
என்று பாடுகிறார். இந்தப் பாடலின் பொருளைப் பிறகு பார்ப்போம். திருச்சாழல் என்ற இந்தப் பதிகம் எப்படி வந்தது என்பதற்கு ஒரு கர்ண பரம்பரைக் கதை ஒன்று சொல்கின்றனர். சாழல் என்பது மகளிர் விளையாடும் ஒரு விளையாட்டு (தாயத்து பல்லாங்குழியல்ல). ஒரு பொருளை ஒட்டியும் வெட்டியும் இரண்டு மகளிர் வேறு வேறு விதமாகப் பாடுவதாக அமையும் ஒரு விளையாட்டு.
இலங்கை மன்னன், தன்னுடைய வாய்பேச முடியாத பெண்ணுடனும், பௌத்தத் துறவிகளுடனும் சிதம்பரம் வந்தான் என்றும், தில்லைச் சிதம்பரம் கோயிலின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்த பௌத்தத் துறவிகள், இங்கு நடராஜருக்குப் பதிலாக புத்தரின் விக்கிரஹம் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியதாகவும், அதற்காக தில்லைவாழ் அந்தணர்களை அழைத்து வாதத்திற்கு அழைத்ததாகவும், வாதத்தில் அந்தணர்கள் தோற்றுவிட்டால் தில்லை நடராஜரை எடுத்துவிட்டு அங்கு புத்தரின் விக்ரஹத்தை வைக்கவேண்டும் என்று சவால் விட்டதாகவும் சொல்கின்றனர். இதனால் மனம் கலங்கிய தில்லைவாழ் அந்தணர்கள் சிவனிடம் முறையிட, அவரும் மணிவாசகர் கனவில் தோன்றி, உடனே தில்லைக்குச் சென்று வாதத்தில் கலந்துகொள்ளுமாறு கட்டளையிட, மணிவாசகர் (இவருக்குத்தான் மாணிக்கவாசகர் என்று இறைவனே பெயரிட்டதாகச் சொல்லுவர்) தில்லையில் பௌத்த துறவிகள் முன்பு வாதத்திற்கு உட்கார்ந்தாராம். பதிகத்தின் முதல் இரண்டு அடிகளை மணிவாசகர் பாட, வாய் பேச முடியாத இளவரசி, அடுத்த இரண்டு வரிகளைப் பாடினாராம். இதுபோன்று முழுப் பதிகத்தையும் பாடி முடித்தாராம். முடிந்தவுடன் பௌத்த துறவிகள் பேசமுடியாமல் ஆகிவிட்டதாம். தன் மகள் பேசியதைக் கேட்ட இலங்கை மன்னன் சைவ சமயத்தைத் தழுவினான். மணிவாசகர் இறைவனிடம் வேண்டியதைத் தொடர்ந்து பௌத்தர்களும் தங்கள் இழந்த பேசும் திறனைப் பெற்றார்களாம். பிறகு அவர்களும் சைவ சமயத்துக்கு மாறினார்கள் என்பது கர்ண பரம்பரைக் கதை. அதனால் இந்தப் பதிகத்தை பக்தியோடு பாடினால், வாய்பேச முடியாதவர்கள் பேசும் திறமையைப் பெறுவர், மற்றவர்களுக்கு நல்ல பேச்சுத் திறமை வாய்க்கும் என்பது தொன்மையான நம்பிக்கை.
சோழர் காலச் சிலைகளைப் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டு சம்பந்தமே இல்லாமல், மாணிக்கவாசகரின் திருச்சாழல் பதிகத்தை எழுத ஆரம்பித்துவிட்டானே என்று யோசிக்கிறீர்கள் அல்லவா? (இப்படிப்பட்ட பசுமாடு இரயில் நிலையத்தின் வாசலில் கட்டப்பட்டிருந்தது, என்று பசுமாட்டைப் பற்றி கட்டுரை எழுதச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து வந்த ஒரு மாணவன், இரயில் நிலையத்தைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னதும் எழுதினாற்போல)
பாடலின் பொருள்: மலைமகளாகிய பார்வதி தேவியைத் தன் உடலில் ஒரு பாகமாக வைத்திருக்கும் அவன் (சிவபெருமான்), வஞ்சகமாக மற்றொரு பெண்ணான கங்காதேவியை, தன் சடையில் மறைத்துவைத்திருப்பது எதற்காக என்பது கேள்வி. மிகுந்த வேகத்துடன் தேவலோகத்திலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியை அவன் தன் சடையில் விழச் செய்ததன் மூலம் அதன் வேகத்தை மட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால், கங்கை நதி, பூமியையே புரட்டி பாதாளத்தில் சேர்த்து பேரழிவினை ஏற்படுத்தியிருக்கும். பூமிக்கு வரவிருந்த பெரும் கேடை த் தவிர்ப்பதற்காக இப்படிச் செய்தான் என்பது விடை.
விளக்கம்: கபில முனிவரின் சாபத்தால் சாம்பலான அறுபதினாயிரம் சகரர்களின் ஆன்மாக்கள் நற்பேறு பெறும்பொருட்டு, பகீரதன் கடும்தவம் புரிந்து வானுலகிலிருந்து கங்கைநதியை பூமிக்கு வர அழைத்தான். அப்படி வேகமாகப் பாய்ந்தால் பூமி தாளாதே என்று கங்கை கேட்டதற்கு, சிவனிடம் தவம் செய்து கங்கையை தன் சடையில் தாங்கி பூமியில் விழவைத்த புராணக் கதை இங்கு சொல்லப்படுகிறது. சலம் என்பதற்கு உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் வஞ்சனையான செயல் என்று அர்த்தம். இது சஞ்சலம் என்பதன் தமிழாக இருக்கலாம். பகீரதன் அழைத்ததால் கோபம் கொண்ட கங்கை மிகுந்த வேகத்துடன் ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து வேகமாகப் பாய்ந்தது.
உங்களுக்கு
நேரம் கிடைக்கும்போது திருச்சாழலில் ஒவ்வொரு பதிகத்தையும் படித்துப் பொருள்
தெரிந்துகொள்ளுங்கள். திருச்சாழலின்
முதல் பதிகம் கீழே.
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு
என்னை?
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ!
கோயில் கோபுரத்தில் என்ன என்ன சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன என்பதை அடுத்த முறையிலிருந்து உன்னிப்பாக கவனியுங்கள். மேலே உள்ள சிற்பம் போன்று அனேகமாக எல்லா கோயில் கோபுரங்களிலும் இருப்பதைக் காணலாம். இது கிருஷ்ணர், யமுனையில் குளித்துக்கொண்டிருந்த கோபியரின் ஆடைகளை எடுத்துக்கொண்டு மரத்தின் மீது அமர்ந்த காட்சி. கோபியர்கள் ஆடையைத் தரும்படி வேண்டுகிறார்கள். இதுபோலவே கோபுரத்தில் இது ஒரு முனையில் இருந்தால் அதன் நேர் எதிர் முனையில் நரசிம்மருடைய உருவம் செதுக்கப்பட்டிருக்கும்.
தஞ்சை பெருவுடையார் கோயிலுக்காகச் செய்யப்பட்ட சடையுடன் கூடிய ஆடவல்லானின் திருவுருவில் கங்கை, பெண் வடிவத்தில், இடுப்புக்குக் கீழ் நீரலைகளுடன் இருக்கும் சிற்பம் செதுக்கப்பட்டிருந்ததாம். அடுத்த முறை நீங்கள் ஆடவல்லானின் சிற்பங்களை, சிலைகளைக் கண்டால், அதில், கங்கையோ இல்லை மற்ற உருவங்களோ இருக்கிறதா என்று கூர்ந்து கவனியுங்கள்.
இப்போது பதிகத்தை விட்டுவிட்டு வரலாற்றிற்கு வருவோம். இராஜராஜ சோழன் தன் சித்தப்பாவிற்கு அரச பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு இளவரசனாகப் பவனி வந்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இராஜராஜன் பட்டம் ஏற்றபோது ஏறத்தாழ 45 வயதுடையவனாக இருந்திருக்கவேண்டும். அவனுடைய மகன் ராஜேந்திரன், 20-25 வயதுடையவனாக இருந்திருத்தல் வேண்டும். சில வருடங்களிலேயே இளவரசனாக இராஜேந்திரன் நியமிக்கப்பட்டு, சோழர் படைத் தளபதி என்ற நிலையில், பல போர்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தான். ராஜராஜ சோழன் சுமார் 27 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தான். சுமார் 1012ல், தன் மகனை அரசனாக ஆக்கிவிட்டு தான் ஆட்சிக்கட்டிலிலிருந்து இறங்கியிருக்கவேண்டும். காரணம் ராஜராஜன் தன் மகனான இராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டில் ஒரு தேவதானம் கொடுத்தான் என்று முக்கூடல் கல்வெட்டு கூறுகிறது. இராஜேந்திரன் பட்டத்திற்கு வரும்போது அவனுக்கு சுமார் 50 வயதாகியிருக்கவேண்டும்.
அதனால் தான் சோழப்பேரரசின் அரசனானதும், சில ஆண்டுகளிலேயே (6 ஆண்டுகள்) தன்னுடைய மகன் இராஜாதிராஜ சோழனை அரசனாக்கி, இருவரும் சேர்ந்தே சோழப்பேரரசை ஆண்டனர். ராஜராஜ சோழ தேவர் 1014ல் மறைந்தார். இராஜாதிராஜ சோழன் அரசனானது 1018ல்.
இராஜேந்திர சோழனுக்கு மூன்று மனைவியர். அவனுக்கு மூன்று குமாரர்கள். ராஜாதிராஜன், ராஜேந்திரன், வீரராஜேந்திரன்.
ராஜேந்திர சோழன் தன் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலும் போரில் கழித்தான். அவற்றை நாம் மூன்று வகையாகக் கொள்ளவேண்டும். தன் தந்தை ராஜராஜ சோழன் பேரரசனாக இருந்தபோது, படைத்தலைவனாக நடத்திய போர்கள். இந்த வெற்றிகள் ராஜராஜ சோழனின் வெற்றிகளாக அவனது மெய்கீர்த்தியில் வரும். இரண்டாவது, தான் தலைவனாக ஆனபிறகு, நட த்திய போர்கள்.
ராஜேந்திர சோழன் பேரரசனாக இருந்து வெற்றி பெற்ற போர்கள், இடைதுறை நாடு (தற்போதைய ரெய்ச்சூர் பகுதி, கிருஷ்ணா நதிக்கும் துங்கபத்திரைக்கும் இடைப்பட்ட சமவெளி நாடு), கொள்ளிப்பாக்கை (ஐதராபாத்திற்கு வடகிழக்கே, கிபி 13ம் நூற்றாண்டுவரை சிறப்புற்றிருந்த இடம். தற்போது கூல்பாக் என்று அழைக்கப்படுகிறது), மண்ணைக்கடக்கம் (தற்போது மான்யகேடம் என்று அழைக்கப்படுகிறது. இது இராட்டிரகூடர்களின் தலைநகராக இருந்த நகரம். மேலைச் சாளுக்கியர்களுக்கும் இதுதான் தலைநகரமாக இருந்தது. வடக்கிலிருந்தும் பகைவர்கள் தாக்க, தெற்கிலிருந்தும் சோழர்கள் தாக்க, மேலைச் சாளுக்கியர்கள் இங்கிருந்து தங்கள் தலைநகரத்தை கலியாணபுரத்திற்கு மாற்றிக்கொண்டனர். இந்த மண்ணைக்கடக்கம் மதிள் சூழ்ந்த பகைவர்களால் தாக்கமுடியாத இருந்ததாம்). இவற்றையெல்லாம் தன்னுடைய மூன்றாவது ஆட்சிக் காலத்திற்குள் வென்றிருக்கிறான்.
இனி கங்கைகொண்ட சோழீச்வரம் படங்கள்.
இரண்டு அடுக்குகளாக உள்ள மாளிகை போன்ற அமைப்பு.
மஹிஷாசுர மர்தனி கோயில். இது 13ம்
நூற்றாண்டைச் சேர்ந்தது. ராஜேந்திர சோழன் காலத்தில் இதுவும் விநாயகர் சன்னிதியும் கிடையாது.
மஹிஷாசுர மர்தனி…. தஞ்சைப் பகுதி
மஹிஷாசுர மர்தனியை நினைவுபடுத்தியது.
ஆதியில் கங்கை நீர் ஊற்றப்பட்டிருந்த கிணறு.
நந்திக்கும் சிங்கமுகத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. சிங்க முகச் சிற்பம், காலத்தால் பிற்பட்டதோ என்று எனக்குத் தோன்றியது.
கொடிமரத்தின் கவசத்தை எதற்காக அன்று மீண்டும் மாட்டினார்கள், திரும்பவும் சுத்தம் செய்தார்களா இல்லை சாதாரண தினங்களில் கழற்றிவிடுவார்களா என்பது தெரியவில்லை.
இனி அடுத்த வாரம் தொடர்வோம்.
(தொடரும்)
நெல்லை, கேரளத்தில் திருமேனி என்பது அரசகுலத்தில் சொல்லப்பட்டாலும், அது ஆன்மீகத்தில் இருப்பவர்களையும், அறிவிலும் ஆன்மீகத்திலும் சிறந்தவர்களையும் சொல்வதுண்டு.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன் திருமேனி என்பது தூய தமிழ். அதை வைணவர்களும் கேரள உயர்குடியினரும் இன்னும் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் பொது மக்களுக்கு (என்னைப் போன்ற) அது அந்நிய வார்த்தை.
நீக்குஅத்தனை உற்சவ விக்ரகங்களும் இப்பவும் இருக்கின்றனவஆ?
பதிலளிநீக்குநெல்லை, விவரங்களை எல்லாம் மிகவும் ரகசிய பாஷையில்தானே சொல்லியிருப்பாங்க! இல்லைனா படிச்சவங்களா இருந்தாலும் அதைச் சரியாகப் புரிந்து கொண்டால்தானே லவட்ட முடியும் இல்லையா?
கீதா
அனேகமாக எல்லாமே கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. உங்களுக்குத் தெரியுமா? திருவரங்கத்தில் துவாரகாலகர்களுக்கு முன் உள்ள மண்டபத்தில் (சந்தன மண்டபம்) ஒரு சிறு அறையில் பொன்னால் செய்யப்பட்ட மேனி இருந்தது. பாண்டிய அரசன் வழங்கியது. அது முஸ்லீம்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
நீக்குஇக்கதையை எங்கோ வாசித்த நினைவு நிழலாக...
பதிலளிநீக்குபதிகம் வாசிக்கும் போதே பொருள் புரிந்தது. என் சிறிய மூளைக்கும் புரியும் படி அழகாக எழுதியிருக்காரே மாணிக்க வாசகர்!!! என்று ஒரு சின்ன மகிழ்ச்சி!
புராணக் கதையும் நினைவுக்கு வருகிறது உங்கள் விளக்கம் படித்ததும்.
கீதா
அடுத்த திருச்சாழலின் முதல் பதிகமும் பொருள் விளங்கியது.
பதிலளிநீக்குசிவப்பெழுத்து - சிற்பம் சூப்பர். நேரெதிர் முனையில் நரசிம்மர் உருவம் செதுக்கப்பட்டிருக்கும் என்பது தகவல். இனி பார்க்க நேர்ந்தால் இதைக் கவனிக்க வேண்டும்.
கீதா
அடுத்ததும் நோட்டட்.
பதிலளிநீக்குவரலாறு அப்ப கர்நாடகா வடக்கு, ஆந்திரா பக்கம் எல்லாம் இருந்திருக்காங்க சோழர்கள். வட இந்தியா வரைக்கும் போய் வென்றார்களே (முதலாம்) ராஜேந்திரன் காலம் இந்த ராஜேந்திரன் தானே இல்லையா?
இந்தக் குழப்பம் எனக்கு அப்பப்ப வரும்!! ஹிஹிஹி
கீதா
படங்கள் எல்லாம் சூப்பர் சில சிதைந்து இருக்கின்றன போலும்.
பதிலளிநீக்குஅரசர்களின் உருவச் சிலைகள் இருக்கும் படம் செம. சிதைந்திருந்தாலும் கூட.
ஓ அந்த சிதைந்த கட்டிடம் மாளிகையா? இரண்டடுக்கு மாளிகை போன்ற அமைப்பு இவ்வளவு சின்னதுதனாஅ? இல்லை சிதைந்து போனதா?
13 ஆம் நூற்றாண்டு அதற்கு முன்னர் அப்ப விநாயகர் இல்லையா கோயில்களில்?
மஹிஷாசுரமர்தனி அழகு. சேலை கட்டியிருக்காங்க அது நடன போஸ் போல இருக்கு!
பெரிய சிங்கம் !! கவர்கிறது
பெரிய நந்தியும் கவர்கிறது
கொடிமரத்தைச் சுத்தி என்னது அது? முதல்ல ஏதாச்சும் டவர் வைச்சுட்டாங்களோன்னு நினைத்தேன்
கடைசி மூன்று படங்களும் ரொம்ப அழகா இருக்கு
கீதா
கீதா
அந்த மாளிகை போன்ற அமைப்பின் கீழ்ப் பகுதி மண்ணில் புதையுண்டிருக்கலாம். அல்லது இது கோவில் மண்டபம் சம்பந்தப்பட்டதாய் இருக்கலாம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி.
நீக்குஜென்மசாபல்யம் தீர்ந்தது. தவிர்த்த சில படங்களை பதிவிடும் வாய்ப்பு கிட்டியது. அந்தகால தமிழ் சினிமாக்களில் ஒரு காபரே அல்லது குளி சீன் கவர்ச்சிக்காக இருக்கும். அதே போன்று இன்றைய பதிவில் கவர்ச்சிப்படமாக கிருஷ்ண லீலை இடம் பெற்றுள்ளது.
பதிலளிநீக்குஇன்றைய பதிவு ஒரு நிறைவான பதிவு, படங்கள் நல்ல வெயிலில் எடுக்கப்பட்டவை யாதலால் நல்ல ஷார்ப்நெஸ்.
Jayakumar
திருமேனி என்று பெயர் படித்ததும் எனக்கு தமிழ்வாணன் நினைவுக்கு வந்தார். அவர் எழுதிய கதை ஒன்றில் ஒரு கேரக்டர் பெயர் திருமேனி. இப்போதைய ஒரு இயக்குனர் பெயர் மகிழ் திருமேனி!
பதிலளிநீக்கு// சாழல் என்பது மகளிர் விளையாடும் ஒரு விளையாட்டு //
பதிலளிநீக்குஅம்மாடி.. அந்தக் காலப் பெண்கள் தமிழறிவு அதிகம் பெற்று, கவிபாடும் திறனுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர்.
"அம்மாடி.. அந்தக் காலப் பெண்கள் தமிழறிவு அதிகம் பெற்று, கவிபாடும் திறனுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர்.
நீக்குஉண்மை. ஆனால், " சாழல்" விளையாட்டினை தொடர்ந்து, காலம் மாற, மாற ஒருவருக்கொருவர் " சாடுதல்" விளையாட்டினையும் கற்றுக் கொண்டு விட்டார்கள் போலும்.! :))
ஹா.. ஹா... ஹா... டிபிகல் கமலா அக்கா கமெண்ட்!
நீக்கு// / நடராஜருக்குப் பதிலாக புத்தரின் விக்கிரஹம் இருந்தால் எப்படி இருக்கும் //
பதிலளிநீக்குஉங்க சாமி உசத்தி எங்க சாமி உசத்தி பிரச்னை ஆதி காலத்திலிருந்தே உண்டு என தெரிகிறது!
பசுமாடு ரயில்நிலையம் உவமை எதற்காக என்று விளங்கவில்லை! பசுமாடு எது? ரயில் நிலையம் எது?
பதிலளிநீக்கு//சலம் என்பதற்கு உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் வஞ்சனையான செயல் என்று அர்த்தம். //
பதிலளிநீக்குஅப்போ வெங்கடாசலம் என்றால் என்ன அர்த்தம்?!!! ஹிஹிஹி..
//பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம்பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ //
பதிலளிநீக்குஇந்த வரியைப் படித்ததும் ஏனோ "மேனி ஒரு செம்பவள மேல்முழுதும் வெண்ணீறு" பாடல் நினைவுக்கு வந்தது.
https://www.youtube.com/watch?v=L5xIcfStEPM
வார்த்தைகளிலிருந்து கோபித்துக் கொண்டு தள்ளி நின்ற சில எழுத்துகளை சமாதானப்படுத்தி வார்த்தைகளுடன் சேர்த்து விட்டேன். ஒன்றிரண்டு பிழைகளையும் சரி செய்து விட்டேன் - கண்ணில் பட்ட வரை!
பதிலளிநீக்குமுருகா சரணம்..
பதிலளிநீக்குகம்பீரமான படங்களுடன்
பதிலளிநீக்குபதிவு வழக்கம் போல..
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கே
பதிலளிநீக்குகொடிமரம் இல்லை...
எஞ்சியிருக்கின்ற இரண்டு அடுக்கு தளத்தைப் போல
பதிலளிநீக்குதஞ்சை கோயிலிலும் இருந்திருக்கின்றது...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு மிக அருமையான பதிவு. ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் தந்ததுடன், கங்கை கொண்ட சோழீச்வரம் கோவில் படங்களும் கண்களை கவர்கின்றன. கங்கை நதியின் கதையும், இலங்கை மன்னன் கதையும் படித்தறிந்து கொண்டேன்.
சலம், சஞ்சலம் விளக்கம் அருமை. மாணிக்கவாசகர் பாடல்கள் எளிதில் பொருள் உணர்த்தின. "சாழல்" என்ற மகளிர் விளையாட்டினை பற்றி தெரிந்து கொண்டேன். பதிவை சிறப்பான தொகுத்திருக்கிறீர்கள்.தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.