19.4.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - கங்கைகொண்ட சோழபுரம் - நெல்லைத்தமிழன்

 

வரலாற்றுக் காலங்களையும் அரசர்களையும், அப்போது நடந்த நிகழ்வுகளையும் எப்படி அறிந்துகொள்கிறார்கள்? உதாரணமாக, சோழப் பேரரசு அல்லது பல்லவப் பேரரசு பற்றி எப்படி அனுமானம் அல்லது முடிவு செய்கிறார்கள்இதற்குப் பெரும்பாலும் துணையிருப்பவை கல்வெட்டுகள். கல்வெட்டுகளில், ஆட்சியின் இத்தனாம் ஆண்டில் வெட்டப்பட்டது என்று போட்டிருப்பதாலும், சில கல்வெட்டுகளில் அரசனின் மெய்கீர்த்தி இருப்பதாலும் இதற்குப் பிறகு இது நட ந்தது என்ற முடிவுக்கு வருகிறார்கள். உதாரணமாக ராஜராஜன் மெய்கீர்த்தியில் ஆட்சி ஆரம்பத்தில் சிறியதாக இருக்கும் மெய்கீர்த்தி போகப் போக பெரியதாகிவிடும். அதனால் பிற்பாடு சொல்லப்பட்டவை அதற்குப் பிறகு நடந்தது என்று அனுமானிப்பார்கள். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் கல்வெட்டுகள், மற்ற அரசர்கள் வாழ்ந்த பகுதிகளில் கிடைக்கும் கல்வெட்டுகள் இவையும் அனுமானத்திற்கு அல்லது முடிவுக்கு வர உதவுகின்றன.

நெஞ்சுக்கு நீதி போல, அந்த அந்தப் பிரதேச அரசர்களும் தங்கள் ஒரு போரில் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு அதற்குப் பட்டம் கொடுத்துக்கொண்டு கல்வெட்டில் எழுதி வைப்பார்கள். தாங்கள் கடுமையாகத் தோற்றதை கல்வெட்டுகளில் எழுதுவதில்லை. வெற்றி பெற்ற அரசர் அதனை விஸ்தாரமாகவோ இல்லை குறிப்பாகவோ எழுதிவைப்பார்கள். அதனால்தான் புலிகேசி பல்லவர்களை காஞ்சீபுரத்தில் வென்றான் என்று ஒரு கல்வெட்டு கர்நாடகாவில் கிடைத்தால், வாதாபி கொண்டான் என்று இன்னொரு கல்வெட்டு நம் நாட்டில் கிடைக்கும்.

உதாரணமாக சங்க காலச் சோழர்கள் பற்றி அறிய, சங்க நூல்கள் என்று சொல்லப்படுபவைகளும், சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காப்பியங்களும் உதவுகின்றன. புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு , நற்றிணை போன்றவையும் இதற்கு உதவுகின்றன. தாலமி போன்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எழுதியவைகளும் காலங்களை ஒப்பீடு செய்ய உதவுகின்றன.

சங்க காலம் கிபி ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு ம் நூற்றாண்டில் (அதாவது 850) ஆதித்த சோழன் பல்லவரை வென்று சோழப் பேரரசை ஸ்தாபிக்க அடிகோலிய காலம் வரை உள்ள வரலாற்றை அறிய (அதாவது சுமார் 500 ஆண்டுகள்), பல்லவர் பட்டயங்கள், பாண்டியர் பட்டயங்கள், இராட்டிரகூடர் சாளுக்கியர் கங்கர் போன்றோரின் பட்டயங்கள், இவை தவிர, சேக்கிழாரின் பெரிய புராணம் (நிச்சயம் அப்போதிருந்த நூல்களோ, இல்லை கல்வெட்டுகளோ கொண்டுதான் சரித்திர நிகழ்வுகளை அவர் எழுதியிருக்கவேண்டும்), திவ்யப்பிரபந்தம், குருபரம்பரை,  தேவாரத் திருமுறைகள் போன்றவையும் இடைக்காலச் சோழர் வரலாற்றை அறியத் துணை புரிகின்றன.

விஜயாலயச் சோழன் காலம் முதல் சாளுக்கிய சோழர்கள் ஆட்சிவரை, அதாவது 13 ம் நூற்றாண்டுவரை இருக்கும் காலம், ஓரளவு ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும், பல செப்புப் பட்டயங்களும்கொண்டும் நம்மால் வரையறை செய்ய இயலும். அந்தக் கல்வெட்டுகள் கொண்டு, அரசனின் போர் வெற்றிகள், கோயில் செய்திகள், அறக்கொடைகள், நாட்டை விரிவுபடுத்தியது, குடும்பம் பற்றிய செய்திகள், சமயத்துக்குச் செய்த தொண்டுகள், பதவி வகித்தவர்கள் பெயர்கள் போன்ற பலவற்றையும் அறிய இயலும்.  ஒரு அரசனின் பெயரே பல்வேறு காலகட்டங்களில் வரும்போது, அவற்றிற்கு எண்களைக் குறித்து (முதலாம் ராஜராஜன், இரண்டாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன் என்பது போல) அதன்படி புரிந்துகொள்ள இயலும்.

கல்வெட்டுகளில், பட்டம் பெற்ற இத்தனையாம் ஆண்டு வெட்டப்படும் கல்வெட்டு, இவர்களை இந்த இடங்களில் வென்றான் என்றெல்லாம் இருப்பதால், இந்தக் கல்வெட்டு இப்போது வெட்டப்பட்டது, இந்தப் போர் நடந்தது இந்த வருடம், இந்த ஆண்டுக்கு மேல் அந்த அரசனின் கல்வெட்டு இல்லை, இன்னொரு அரசனுடைய கல்வெட்டு இத்தனையாம் ஆண்டு என்று போட்டிருப்பதால், முந்தைய அரசன் இந்த வருடத்திலிருந்து ஆட்சியில் இல்லை என்றெல்லாம் அறுதியிட முடியும்.

திருமுறை கண்ட சோழன் என்று இராஜராஜனைக் குறிப்பிடுவதை முன்பே பார்த்தோம். அந்தச் சமயத்தில், திருமுறைகள் தில்லையில் கரையான் அரிக்கக் கிடந்தது என்பதையும் பார்த்தோம். அதன்படி, திருமுறைகளில் இல்லாத பாக்களையும் கல்வெட்டுகளில் காண முடிகிறது.

அது சரிகோயில்கள் வரலாற்றுக்கு எந்த வகையில் துணை செய்கின்றன? ஆதிகாலத்தில் செங்கற்களால் கட்டப்பெற்ற கோயில்கள், பல்லவர் காலத்தில் குடவரைக் கோயில்கள், சோழர் காலத்தில் கற்றளி என்று கோயில் கட்டும் விதமும் மாறியிருக்கிறது. பாடல் பெற்ற தலங்கள் முன்பு செங்கற்களினால் கட்டப்பெற்று இருந்தாலும், பிற்பாடு சோழர்களால் கற்றளியாக மாற்றப்பட்டிருக்கின்றன. அப்போதிருந்த முந்தைய கல்வெட்டுகளைப் படியெடுத்து பிறகு கல்லில் வெட்டியிருக்கின்றனர். இதனால் வரலாற்றின் தொடர்ச்சி மாறாமல் இருந்திருக்கிறதுஇதுபோல கோயில்களில் ஓவியம் வரைந்து வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. பல்வேறு வகைச் சிற்பங்கள், ஓவியங்கள், அவைகளில் காணப்படும் செய்திகள் ஆகியவற்றால் ஓரளவு கலை எவ்வாறு வளர்ந்தது என்றும் அந்தக் காலகட்டம் எவ்வாறு இருந்தது என்றும் அறிய முடியும்.

கல்வெட்டுகளின் எழுத்துரு மூலம் மொழி எப்படி இருந்தது, எவ்வாறு வளர்ச்சியுற்றது என்றும் அறிய இயலும். வட்டெழுத்து, பிறகு பல்லவ கிரந்தம், பிறகு சோழர் காலத் தமிழ் எழுத்துகள் என்று மொழியின் வளர்ச்சியையும், ஆட்சிகாலத்தில் உபயோகப்பட்ட மொழி போன்றவற்றையும், ஏன், தமிழ் மொழி வளர்ச்சியையும் பற்றியும் தெரிந்துகொள்ள இயலும்.

Untitled Documenta051414

 

Kotravai news

தமிழ் எழுத்துக்கள் - அன்று முதல் இன்று வரை - சா. கணேசன்

இப்படி இணையத்தில் மற்றும் கல்வெட்டைப் படிக்க உதவும் புத்தகங்களில் போட்டுவைத்திருக்கிறார்கள். முதலில் இதனைக் கண்டுபிடிக்கவே எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் பாருங்கள்இதுதவிர கிரந்தம் மற்றும் வடமொழி. இந்த எழுத்துக்களும் கல்வெட்டில் கலந்து வந்திருக்கின்றன. இவற்றைக் கற்றுக்கொண்டால், கல்வெட்டினைப் படிப்பது சுலபம்.

தமிழகத் தொல்லியல் வரலாறு #34 ...

தமிழகத்தின் பழைமையான கல்வெட்டு, மாங்குளம் கல்வெட்டு. இது பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. கிமு ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்கின்றனர்இந்தக் கல்வெட்டு, சங்ககால மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிச் சொல்கிறதுதமிழ் பிராமியக் கல்வெட்டுகள், இதுவரை தெரிந்தவரை கிமு 4 அல்லது ம் நூற்றாண்டிலிருந்து கிபி ம் நூற்றாண்டுவரை இருக்கின்றன. அதிலிருந்து அந்தக் கால கட்டங்களில் பிராமியக் கல்வெட்டுகள் வழக்கத்தில் இருந்தன என்று அறியமுடியும்.  மீனாட்சியம்மன் கோயிலிலும் பிராமியக் கல்வெட்டுகள் உள்ளன. பிறகு இது மாற்றமடைந்து வட்டெழுத்தாகவும், அதன் பிறகு தமிழ் எழுத்துகளாகவும் மாறியதை இங்கு படங்களில் குறிப்பிட்டுள்ளேன்வெகு சமீபத்தில் எகிப்தில் இருக்கும் சில கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகள்-பிராமிய எழுத்துகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். இந்தச் செய்தியைக் காசாக்க எண்ணி, யூடியூபர்கள், ஏதோ தமிழ் மன்னர்களே அந்தக் கல்லறைக்குள் மம்மியாக படுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற ரேஞ்சுக்குப் படுத்துகிறார்கள்ஒன்று கவனித்தீர்களா? சமீபத்தில் ஏஐ உபயோகப்படுத்தி பல காணொளிகள் தயாரிக்கப்படுவதால் யூடியூபின் நம்பகத் தன்மையே பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது என்று?

மதுரை ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்கு வெகு அருகிலேயே தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் இருக்கின்றன என்ற அறிவிப்பு பலகையைப் பார்த்திருக்கிறேன். இன்னும் அங்கு சென்று பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை.

பல்லவர்களைப் போலவே சோழர்களும் பொன் வெள்ளி மற்றும் செம்பினாலான காசுகளை வெளியிட்டனர். அதில் உள்ள குறிகள் மற்றும் எழுத்துக்களைக் கொண்டு எந்த அரசன் காலத்தில் வெளியிடப்பட்ட து என்பதை அறிந்துகொள்கின்றனர்.

உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். இப்போதும் அரசர்களை நாட்டின் தலைவராகக் கொண்ட நாடுகளில், அரசன் அல்லது அரசியின் படம்தான் நாணயம்/காகிதத்தில் இருக்கும். ஒரு அரசன் அல்லது அரசி மறைந்ததும் புது நாணயம் வெளியிடுவார்கள், புது அரசனின் முகத்துடன்

பஹ்ரைனில் நான் அப்படிப் பார்த்திருக்கிறேன். இங்கிலாந்திலும் அந்த வழக்கமே உண்டு. நல்லவேளை ஜனநாயகத்தில் அந்தக் குழப்பம் இல்லை. தற்காலங்களில் தங்கள் பேராசைக்காக, மத்திய அரசிடம் பணம் கட்டி ஒரு சிலர் தங்கள் தலைவரின் நாணயத்தை வெளியிட்டு, அல்லது தபால் தலை வெளியிட்டு ஏதோ இந்திய நாடே அவற்றை வெளியிட்டமாதிரி திருப்தி பட்டுக்கொள்கின்றனர்.

இங்கிலாந்து நாணயங்கள்.

பஹ்ரைன் ரூபாய் நோட்டுகள்

கங்கைகொண்ட சோழபுரம் படங்களிலிருந்து விலகிச் செல்கிறோமோ? ஒரு சப்ஜெக்ட் ஆரம்பித்தால் அது இன்னொன்றுக்கு அங்கிருந்து இன்னொன்று என்று இழுத்துக்கொண்டே போய்விடுகிறது. இத்துடன் நிறுத்திக்கொண்டுஇனி கங்கைகொண்ட சோழபுரம் படங்களைப் பார்ப்போம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கணபதி ஆலயம் பிற்காலச் சேர்க்கை (13ம் நூற்றாண்டு). கங்கைகொண்ட சோழபுரம் உருப்பெற்ற ஆண்டு 1020, அதாவது 11ம் நூற்றாண்டு.

பொதுவாக சோழர்காலக் கோயில்களில் (அல்லது பல கோயில்களிலும்) இடது மூலையில் விநாயகர் சன்னிதி அல்லது சிறு கோயில் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இதன் காரணம் என்ன? கங்கைகொண்ட சோழீச்வரம் கோயிலில் இருந்து அருள்பாலிக்கும் விநாயகனை வணங்குவோம்.

 

 

 


 

 

பிரஹன் நாயகி அம்பாள் சன்னிதி. 

 

 

நிறைய படங்களும் தகவல்களுமாக இன்றைய பகுதி அமைந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஒரு தடவை கௌதமன் சார், ஒரு பதிவுக்கு அதிகபட்சம் 2 பக்கச் செய்திகளும் பதினைந்து படங்களும் போதுமானது என்று அபிப்ராயப்பட்டிருந்தார். எடுத்த படங்களில் சிறப்பானவற்றை எல்லாம் பகிரணும் என்று நினைப்பதால், குறைந்த படங்களோடு அதிக பகுதிகளாக இழுக்கவும் விருப்பம் இல்லை. இனி அடுத்த வாரம் தொடர்வோம்.

 (தொடரும்) 

34 கருத்துகள்:

  1. தாங்கள் கடுமையாகத் தோற்றதை கல்வெட்டுகளில் எழுதுவதில்லை.//

    ஹாஹாஹா எப்படிங்க, நெல்லை எழுதுவாங்க!!!! நல்லதைத்தானே எழுதுவாங்க இல்லையா. இப்பவும் பொருந்துமே! ஒன்னுமே செய்யாததைக் கூட செய்ததாகப் பதிவு செய்யறாங்க. ஸோ வரலாற்றுத் தகவல்கள் என்பவை அப்படியும் இப்படியுமாகத்தான் இருக்கும் இல்லையா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். முதல் கருத்தே அரசியல் கருத்தாக எழுத வைத்துவிட்டீர்கள். கெடுதல்களுக்கெல்லாம் (டாஸ்மாக் போன்று) பொதுப் பெயரும், சாதாரண விஷயங்களுக்கெல்லாம் தங்கள் தலைவரின் பெயரை வைப்பதையே வாடிக்கையாக்க் கொண்டுள்ளனர்.

      சமீபத்தில். Muththamizhir Arignar Kalaignar Karunanithi University என்ற ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பைப் பார்த்தேன். எந்த யூனிவர்சிட்டில படித்தாய் என்றால் சரியாக MAKKU மக்கு பல்கலைக்கழகம் என மாணவர்கள் சொல்லவேண்டயிருக்கும்.

      நீக்கு
  2. காலங்களை ஒப்பீடு செய்பவாய் என்று நீங்க சொல்லியிருப்பவற்றிலிருந்து அப்படியே துல்லியமாக இல்லைனாலும் ஓரளவு சில குறிப்புகள் பிற சமூகங்கள் மதங்கள் பற்றியும் கூடக் கிடைக்கும் தானே மறைமுகமாகவேனும்... இதை வைச்சுத்தானே பின்னர் எழுதப்படுகின்றன அவரவர் பார்வையில் இல்லையா..ஆனால் அதை அறுதியிட்டு இப்படித்தான்னு அடிச்சுப் பேசுவது சரியா, அதை வைத்துக் கொண்டு சண்டைகள் .....என்பது தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை அறுதியிட்டுச் சொல்வது கடினம். வரஙாற்றாசிரியர்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடுகள் உண்டு. இரண்டாம் குலோத்துங்கன், சைவ சமயப் பற்றினால் (அதீத) வைணவ சமயப் பெரியவரான இராமானுஜரை அரசவைக்கு அழைத்து கண்களை எடுக்க முயன்றான். அவனை, சில வரலாற்றாசிரியர்கள், வைணவக் கோயில்களைச் சீரமைத்திருக்கிறான், அதனால் சமய வெறுப்பு கொண்டவனல்ல என்றும் விவாதம் செய்கின்றனர்.

      நீக்கு
  3. திவ்யப்பிரபந்தம், குருபரம்பரை, , தேவாரத் திருமுறைகள் போன்றவையும் இடைக்காலச் சோழர் வரலாற்றை அறியத் துணை புரிகின்றன.//

    காலம் போன்றவை கணக்கிடபடலாம்...ஆனால் ஆட்சி முறை எல்லாம் வராது இல்லையா?

    கல்வெட்டு எழுத்துகளின் வளர்ச்சி - ஆமாம் இணையத்தில் பார்த்ததுண்டு.

    இந்தச் செய்தியைக் காசாக்க எண்ணி, யூடியூபர்கள், ஏதோ தமிழ் மன்னர்களே அந்தக் கல்லறைக்குள் மம்மியாக படுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற ரேஞ்சுக்குப் படுத்துகிறார்கள். //

    ஹாஹாஹாஹா டிட்டோ!!!

    // ஒன்று கவனித்தீர்களா? சமீபத்தில் ஏஐ உபயோகப்படுத்தி பல காணொளிகள் தயாரிக்கப்படுவதால் யூடியூபின் நம்பகத் தன்மையே பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது என்று?//

    ஹைஃபைவ் நெல்லை. நிச்சயமாக....யுட்யூப் என்றில்லை தகவல்களுமே....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசோகர் சாலை அமைத்தார், மரம் நட்டார் எனப் படித்திருக்கிறோமே தவிர அவரது கொடூர முகத்தைப் பற்றி, பல குற்றச் செயல்களைப் பற்றி புத்தகங்களில் வருவதில்லை. இதுபோன்று ஔரங்கசீப் மற்றும் பலர்.

      நீக்கு
    2. பட்டத்து இளவரசன் ஆன சொந்த அண்ணனைக் கொன்று விட்டு அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணையும் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டான் சாம்ராட் அசோகன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஔரங்கசீப் பற்றி ஓரளவுக்கானும் வந்திருக்கு. அசோகன் பற்றி அது கூட இல்லை. :(

      நீக்கு
  4. ப்போதும் அரசர்களை நாட்டின் தலைவராகக் கொண்ட நாடுகளில், அரசன் அல்லது அரசியின் படம்தான் நாணயம்/காகித த்தில் இருக்கும்.//

    அதே...கலஃப் வரலையே என்று யோசித்த்துக் கொண்டே வந்தப்ப அதுவும் வந்துவிட்டது..பஹ்ரைன் நோட்டுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முஸ்லீம்கள் ஆண்டபோது பாரத்த்தில் இப்படி இருந்ததா என்று பார்க்கணும். ஆனால் அரசன் உருவம் இருந்து, நாணயத்தைக் கீழே போட்டாலே பிரச்சனையாயிடுமே

      நீக்கு
  5. தக்ஷிணாமூர்த்தி தெளிவாகத் தெரிகிறார்!

    மற்ற சிற்பப் படங்களும் வழக்கம் போல் அருமை,

    தகவல்கள் எல்லாம் ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க நெல்லை. கோர்வையாக, இப்போதைய உதாரணங்களையும் இணைத்து.

    இப்படியான நாணயங்கள், நோட்டுகள்தானே எதிர்காலத்தில் அறிய உதவும்! சொல்ல வந்த பாயின்ட் குதான் சொல்லியிருக்கீங்க விலகல் என்று தோன்றவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. விளக்குக் கம்பம் இருக்கும் படத்தின் மேல் படத்தில் இடப்பக்கம் உள்ள சிற்பம்? பார்வதி? நந்தியா அது? வலப்புறம் சிவன்...

    கங்கைகொண்ட சோழபுரம் உருப்பெற்ற ஆண்டு 1020, அதாவது 11ம் நூற்றாண்டு.//

    இக்காலகட்டத்தில்தான் இங்கும், ராஜேந்திர சோழன் பெயரும் இருக்கிறது சில கோயில்களின் மேம்படுத்தல்களில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்த்தநாரீசுவர்ர் மாதிரித் தோன்றவில்லை? கோமதி அரசு மேடம் வந்து சொல்வார் என நினைக்கிறேன்.

      நீக்கு
    2. Yes. Arthanareeswarar. It is easy to recognise. :D

      நீக்கு
    3. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். நேற்று மருத்துவரிடம் கன்சல்ட் செய்யச் சென்றிருந்ததால் உங்களுக்கு பதில் கொடுக்கவில்லை. இன்று கொடுக்கிறேன்.

      நீக்கு
  7. விநாயகர் - ஆகமவிதிப்படி இருக்குமோ? விக்னங்களைப் போக்குபவர் என்பதால் அதாவது நமக்கு இடப்புறம் இல்லையா? கருவறையின் வலப்புறம்...இல்லையா?

    அவரைத்தானே முதலில் வணங்குவோம் என்பதால் அரசர்களும் அவரை முதலில் வநதும் அவரை வணங்கியிருப்பாங்க...அதான் அப்படி அமைக்கிறாங்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கன்னி மூல கணபதி பகவான் சரணம் என ஒரு பாடலில் வருவதால், ஆகம விதிப்படியான மூலையோ அவருக்கு?

      நீக்கு
  8. இனி நான் அப்பீட்டு....

    படங்களும் தகவல்களும் சூப்பர் நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சனி ஞாயிறு இந்த அக்காவுக்கு என்ன பெரிய வேலை வந்துவிட்டது? அடிக்கிற வெயிலில் அடுத்த தெரு வரை கூட நடக்க முடியாது. என்னவாயிருக்கும்?

      நீக்கு
  9. விரிவான தகவல்கள்..
    படங்களும் தகவல்களும்
    சிறப்பு
    நெல்லை அவர்களுக்கு
    நன்றி...

    பதிலளிநீக்கு
  10. நல்ல தகவல்கள். கல்வெட்டுகளை விட இலக்கியங்கள் காலத்தை சிறப்பாக எடுத்துக் காட்டும் என்று நினைக்கிறேன்.
    /தற்காலங்களில் தங்கள் பேராசைக்காக, மத்திய அரசிடம் பணம் கட்டி ஒரு சிலர் தங்கள் தலைவரின் நாணயத்தை வெளியிட்டு, அல்லது தபால் தலை வெளியிட்டு ஏதோ இந்திய நாடே அவற்றை வெளியிட்டமாதிரி திருப்தி பட்டுக்கொள்கின்றனர்.// தலைவரின் நாணயம் என்ன? நம்முடைய தபால் தலையை நாமே வெளியிட்டுக் கொள்ளலாம். அதை பயன்படுத்தவும் முடியும். ஆனால் இப்போதெல்லாம் யார் கடிதம் எழுதுகிறார்கள் அந்த ஸ்டாம்பை ஒட்டி அனுப்ப?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலக்கியங்களில் பூடகமாகவும், எந்த அரசவையில் இருக்கும் புலவர் எழுதுகிறார் என்பதைப் பொறுத்து உண்மையைக் குற்றமில்லாமல் கவிதை நடையில் அதீதமாக எழுதுவது உண்டு.

      சோழ அரசன் தில்லை நடராஜப் பெருமான் கோயிலில் இருந்த கோவிந்தராஜரை கடலில் வீசி எறிந்ததை, பாற்கடலில் துயில்பவனை அவனுடைய இடத்துக்கே நகர்த்திய என்று குறிப்பிடுகிறார் புலவர். இது பின்னர் வரும்..

      நீக்கு
  11. புகைப்படங்களில் சிலவற்றை ஏற்கனவே பார்த்த நினைவு. புகைப்படங்களை குறைத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். முதலில் எடுத்த படங்களில் உருப்படியானவற்றைச் சேர்த்து விடுவேன். பிறகு 18-22 வரையுள்ள பகுதியாகப் பிரித்து பிறகு பதிவு எழுத ஆரம்பிப்பேன். அதே கோணத்தில் படங்கள் ரிபீட் ஆகாது. ஆனால் நிறைய படங்கள் என்பதால் திரும்பவும் அதே பகுதியைப் பார்ப்பது அமைந்துவிடுகிறது.

      நீக்கு
  12. // இடங்களில் வென்றான் என்றெல்லாம் இருப்பதால், இந்தக் கல்வெட்டு இப்போது வெட்டப்பட்டது, இந்தப் போர் நடந்தது இந்த வருடம், இந்த ஆண்டுக்கு மேல் அந்த அரசனின் கல்வெட்டு இல்லை, இன்னொரு அரசனுடைய கல்வெட்டு இத்தனையாம் ஆண்டு என்று போட்டிருப்பதால், முந்தைய அரசன் இந்த வருடத்திலிருந்து ஆட்சியில் இல்லை என்றெல்லாம் அறுதியிட முடியும்.  //

    // ஒரு அரசனின் பெயரே பல்வேறு காலகட்டங்களில் வரும்போது, அவற்றிற்கு எண்களைக் குறித்து //

    // இவை தவிர, சேக்கிழாரின் பெரிய புராணம் //



     கல்வெட்டுகளிலிருந்து காலம் அறிய அந்த அரசன், அப்புறம் வந்த அரசன் எதிரி அரசன் என்றெல்லாம் ஒப்பிட்டு மேலும் புலவர்கள் பாடலை ஒப்பிட்டு...   

    ஆராய்ச்சியாளர்களுக்கு சற்று கடுமையான பணிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். சரித்திர ஆராய்ச்சியாளர்கள் பக்தி இலக்கியங்கள் குரு பரம்பரை, புராணங்களையும் அறிந்துகொண்டிருக்கவேண்டும். புதிதாக செப்பேடுகளோ இல்லை கல்வெட்டுகளோ கண்டுபிடிக்கும்போது முந்தைய கருத்து மாறுபடும்.

      வரஙாற்று அறிஞர்கள் கஷ்டப்படக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் புதிய கல்வெட்டுகளை அழித்துவிடுகிறார்கள்.

      நீக்கு
  13. // ஒன்று கவனித்தீர்களா? சமீபத்தில் ஏஐ உபயோகப்படுத்தி பல காணொளிகள் தயாரிக்கப்படுவதால் யூடியூபின் நம்பகத் தன்மையே பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது என்று? //

    நான் இது போன்றவை பக்கமே போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பத்தில் உண்மையோ என நினைத்து சிலவற்றைப் பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறேன். பிறகு எல்லாமே போலி எனத் தெரிந்துகொண்டேன்.

      சிலர், பார்வையாளரைக் கவர்கிறோம் என நினைத்துக்கொண்டு, ராஜராஜ சோழனைப் பற்றி ஆயிரம் ஆண்டுகள் மறைக்கப்பட்டிருந்த உண்மை என்று தலைப்பிட்டு சாதாரண காணொளி போட்டு அறுப்பாங்க. இன்னும் சிலர் சிலைகளை ஏஐ கொண்டு மாற்றிஉயிர் பெற வைத்துக் கதை அடிப்பார்கள்.

      நீக்கு
  14. உங்கள் பதிவிலு உள்ள கடைசி படத்தை நான் 2014 ல் புகைப்படம் எடுத்த போது அதன் வாசலில் சில சிலைகள் அரைகுறையாக நிற்க வைக்கப்பட்டிருந்தன.  இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பது போல கமெண்ட் இட்டு நான் படம் வெளியிட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி அந்தச் சிலைகள் அனைத்தும் பாதி புதையுண்டு போயிருக்கின்றன? யார் செய்த வேலை என நான் யோசிப்பேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!