30.4.26

வாசு சார்

 

இரண்டாவது மகனின் திருமணப்பத்திரிகை விநியோகத்தில் நேர்ந்த ஒரு சிறு சம்பவம்!  அல்லது இரு சம்பவம்!

வழியில் சாப்பிட, ப்ளஸ் குடிக்க எடுத்துக் கொண்ட (!!) தயிர் சாதம், மோர் காலியாக, இரவு டிஃபனுக்கு ஒரு ஹோட்டல் செல்ல தீர்மானித்து சிறிய உடுப்பி ஒன்றுக்கு செல்ல எண்ணியபோது பக்கத்து கடை மெடிக்கல் ஷாப்  என்று தெரிந்தது.  இடம் மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் ஏரியா.  சில மருந்துகள் வாங்கவேண்டும் என்பதால் முதலில் அதற்குள் நுழைந்து அவற்றை வாங்கி கொண்டு பின்னர் ஹோட்டல் சென்றோம்.

சிறிய ஹோட்டல்.  ரோடைப் பார்த்தபடி இருந்தது.  அந்தக் கால ஹோட்டல் போலும்.  AC ஹால் இல்லாதது ஒரு மைனஸ் என்றால், அடுப்புக்கு அருகே எங்களுக்கு இடம் கிடைத்தது இன்னொரு மைனஸ்!

அங்கு அமர்ந்து மருந்துகளை எடுத்துப் பிரித்து ஓட்டுனருக்கு அவர் அவசரத்துக்கு வாங்கியிருந்த மாத்திரைகளை கொடுக்கலாம் என்று பிரித்தால் ஒரு மாத்திரை - ஒற்றை மாத்திரை - Albendazole 400 - மிஸ்ஸிங்.  அப்படியே அடுத்த கட்டிடம்தானே..   ஆனியன் ரவா ஆர்டர் செய்திருந்தேன்.  எப்படியும் தாமதமாகும் என்று பாஸ், அண்ணா, ஓட்டுனரிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு பக்கத்து கடைக்குள் நுழைந்து கேட்டேன்.  

நான் மாத்திரை பெயரைச் சொன்னதுமே அதைக் கொடுக்கவில்லை என்பதை அந்த நடுத்தர வயதுப் பெண்மணி நெற்றியைத் தட்டிக்கொண்டு ஆமோதித்து விட்டு எடுத்துக் கொடுத்தார்.  

"அதற்குள் இன்னொரு லேடி வந்தாரா..  டப்பாவை எடுத்தவள், அப்படியே வைத்து விட்டேன்'  

'பில்லில் இதற்கும் சேர்த்துதானே பணம் வாங்கினீர்கள்?' என்று கேட்டேன். 

 'இல்லை' என்றார்.  

தொடர்ந்து "ஒவ்வொரு ஐட்டமாக பார்த்துதானே விலை போட்டேன்?!"  

'மாத்திரை எவ்வளவு?' என்றதும் 'எட்டு ரூபாய்' என்று சொல்லி வாங்கி கொண்டார்.

மறுபடி  உடுப்பிக்குள் நுழைந்து சாப்பிட்டோம்.  பில்லைக் கொடுத்த சர்வர், சட்டென பில்லை வாங்கி 'ஸாரி ஸார்..   சப்பாத்தி காஸ்ட் சேர்க்க விட்டுட்டேன்' என்று சொல்லி அதை தனி பில்லாக்கி கொண்டு வந்து கொடுத்தார்.ஒரு 270 பில், அப்புறம் ஒரு 145 பில். 500 ரூபாய் கொடுத்தனுப்பினேன்.  அவர் மிச்சம் கொடுத்ததை வாங்கி சர்வரிடம் 20 ரூபாய் டிப்ஸ் கொடுத்து விட்டு, மிச்ச பணத்தை பில்லின் நடுவில் பொதிந்து சட்டை பாக்கெட்டில் சொருகிக் கொண்டு, எழுந்து சென்று கை கழுவி, ரெஸ்ட் ரூம் சென்று வந்து, திடீரென ஒரு சந்தேகம் வந்து பில்லை எடுத்துப் பிரித்தால்..  

ஆமாம்...   மிச்ச ரூபாய் 185 ரூபாய் கொடுத்திருந்தார்.  என்னையே பார்த்துக் கொண்டிருந்த சர்வரிடம் வந்து 'மிச்சம் தப்பா கொடுத்திருக்காரே' என்றதும் அவர் முகத்தில் பதட்டம் ஏற்பட்டது..  

'இல்லையே..  நான் சரியாகத்தான் கொடுத்தேன்' என்றார் சர்வர்.

 'நீங்க இல்லை' என்று அவரிடம் சொல்லிவிட்டு, கல்லாவை நெருங்கி,  

'இப்பதான் இவர் மூலம் பில் செட்டில் செய்தேன்.  இரண்டு பில் கூட்டி நீங்க மிச்சம் தரவேண்டும்....'  என்று நான் ஆரம்பிக்கும்போதே கல்லாவில் இருந்தவர் 'ஆமாம்..   100 ரூபாய் கூட கொடுத்துட்டேன்' என்று சொல்லி வாங்கி கொண்டார்!  ரொம்ப அலட்டிக்கொள்ளவில்லை!

அவ்வளவு உஷாரானவர் எப்படி தவறு செய்தாரோ..

என் நேர்மையை நானே மெச்சிக்கொண்டு காரில் ஏறி உட்கார்ந்து, மருந்து பில்லை தேடினேன்.  அவர் பில் எல்லாம் தரவில்லை.  மருந்துகளை போட்டுக் கொடுத்த கவரிலேயே விலை எழுதி இருந்தார்.  

அதில் Albendazole என்று எழுதி 10 ரூபாய் என்று போட்டு வாங்கி இருந்தார்!

=======================================================================================


என் ஒன்று விட்ட இளைய சகோதரர் மற்றும் அவர் மனைவி இருவரும் அரசு பள்ளி ஒன்றில் உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியராக வேலை செய்கிறார்கள்.  சேவை செய்கிறார்கள் என்றே சொல்லலாம்.  அவர்கள் சொல்லும் அனுபவங்கள் நம்மை திகைப்படையச் செய்கின்றன.  சில உண்மைகள் சுடுகின்றன.  இந்தக் காலத்தில் ஆசிரிய பணி என்பது சிரமமானது.  'முன்னரே உன் அனுபவங்களை சொல்லி இருக்கலாமே' என்று சொன்னபோது அவர் சொன்னது.

தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி, நன்றி, நன்றி. 

வாக்கு உற்றவன் வாத்தியார் என்பது பழமொழி. அத வக்கத்தவன் வாத்தியாரு என்று கேவலப்படுத்தி விட்டார்கள். அது வாக்கு உற்றவன் என்று கூறலாமா அல்லது வாக்கு கற்றவன் என்று கூறலாமா என தெரியவில்லை. 

எது எப்படியோ வாய் ஜாலம் இருந்தால் தான் எங்கள் தொழிலில் பிழைக்க முடியும்

வாசு ஸார் என்று அவருடைய மாணவர்களால் அன்போடு அழைக்கப்படும் அவர் உருவாக்கியுள்ள பல மாணவச் செல்வங்கள் இன்றும் அவரை நன்றியோடு நினைவுகூர்கிறார்கள்.  அவர் செல்லுமிடங்களில் எல்லாம் அவரின் பழைய மாணவர் ஓரிருவராவது அவரை சந்தித்து ஆசி பெற்று நன்றியைச் சொல்கிறார்கள்.  அவர்கள் வேலை செய்யுமிடங்களாக இருந்தால் அந்த பில் தொகையை தாங்கள் செலுத்தி விடுவதாகக் கூறுகிறார்கள்.  வாசு அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

வாசு சார் அவர்கள் இருக்கும் கடைகளுக்கு, நிறுவனங்களுக்கு சென்றால் அவர்களே பார்த்து விட்டு இவர் இருக்கும் இடம் ஓடி வந்து விடுவார்கள்.

சென்னை - பெங்களூரு சாலையில் உள்ள 'டிவைன் கேப்' ஹோட்டல் கொஞ்சம் பிரபலம்.  அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் உள்ளே நுழைந்து போட்டோ எடுத்து போடுவது வழக்கம்.  அந்த உணவகத்தின் தலைமை செஃப் வாசுவின் மாணவர். 

தற்சமயம் 40  ஆண்டு கால சர்வீஸ் முடித்திருக்கும் அவரைப் பாராட்டி அவர் ஊரில் போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடி இருக்கிறார்கள் மாணவர்கள்.  அவர் எங்கள் குடும்ப குழுமத்தில் எழுதியதிலிருந்து சில பகுதிகளை அவர் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன்.  முதலில் அவர் தந்த முன்னுரை...

என்னுடைய 40 ஆண்டுகால பணி நிறைவு குறித்து வாழ்த்துக்களையும் ஆசிரியர் பணியை பற்றிய நல்ல கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். 

26 4 1986 அன்று, ஒரு மாதமாக நான் பணிபுரிந்து கொண்டிருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டு உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பதவி ஏற்று கொண்ட தினம். 

அன்றைய வட ஆற்காடு மாவட்டம் மிக மிகப் பெரியது. 

அதாவது ஐந்து கல்வி மாவட்டங்கள் அடங்கியது.

அனைத்து கல்வி மாவட்டங்களில் இருந்தும் எனக்கு பணி கிடைத்தது அதில் முதன்மையாக நான் பெற்ற திருவண்ணாமலை  கல்வி மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் 27/ 3/ 86 அதாவது தற்போது நான் செய்து கொண்டிருக்கும் பணிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே  அரசு பணியில் சேர்ந்து விட்டேன்.

அதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் தென்பெண்ணை ஆற்றை பாலம் எதுவும் இல்லாத அந்தப் பகுதியில் ஆற்றின் வழியாகவே கடந்து சென்று தொண்டமானூர் என்கிற அந்த ஊரில் ஒரு மாத காலம் பணிபுரிந்தேன்..

இந்த சமையத்தில்அப்பணி சற்று தாமதமாக வந்தாலும் reliefஆக அமைந்தது. அதாவது சாத்தனூர் டேமிற்கு அந்தப் பக்கத்தில் இருந்து சாத்தனூர் டேம் இருந்து இந்த பக்கம் இருக்கின்ற சொர்பணந்தல் என்கிற உயர்நிலைப் பள்ளியில் பணி கிடைத்தது. 

1986 -87 கல்வி ஆண்டில் என்னிடம் 10வகுப்பில் கணிதம் படித்த  நிறைய மாணவ மாணவியர் என்னை விட வயதில் மூத்தவர்கள் என்பதனை நான் attendance ரிஜிஸ்டர் மூலம் தெரிந்து கொண்டேன் அதிர்ந்தேன். 

ஆனாலும் அந்த காலத்து மாணவர்கள் மிகவும் obedientஆக இருந்தார்கள். இன்னமும் இருக்கிறார்கள்..... என்னுடன் அவர்கள் இன்னும் whatsapp குழு மூலம் தொடர்பில் இருக்கிறார்கள். 

இது எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது. 

அடுத்து சில பல ஆண்டுகள் கழித்து அணைக்கட்டு என்கிற மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்தேன். பெண்கள் என்பதால் சற்று சத்தம் அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலை அதைத்தவிர மாணவிகளின் எண்ணிக்கையும் அங்கு அதிகம். 

சத்தமாக பேசாமல் மெதுவாக பேச பழகிக் கொள்ளுங்கள் என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டே இருந்தேன். 

ஒரு நாள் வகுப்பறையில் ஒரு சிறிய பாம்பு ஒன்று நுழைந்தது. அதனை ஒரு மாணவி என்னிடம் வந்து மிக மிக மிக மெல்லிய குரலில் சார் பாம்பு வந்திருக்கு சார் என்று என்னுடைய காதில் விழாதவாறு கூறிக் கொண்டே இருந்தாள்...

சற்று உரக்க கூறுமாறு நான் கேட்டுக் கொண்டதன் பெயரில் என் காதில் மட்டும் விழுகின்ற அளவுக்கு சார் பாம்பு வந்திருக்கு என்று கூறினாள்.

அய்யய்யோ பாம்பா வந்திருச்சு ஏம்மா கொஞ்சம் சத்தமா சொல்ல கூடாதா என்று ஓடிப்போய் நான் அந்த பாம்பை வகுப்பை விட்டு வெளியேற்றினேன். 

இப்படியாக நிறைய அனுபவங்கள் என்னுடைய இந்த 40 ஆண்டு பணி காலத்தில்....

Latestஆக தொரப்பாடி பள்ளியில் கஞ்சா விற்பனை செய்பவனை பிடிக்கச் சென்று சுவர் ஏறி குதித்தது ..

காதல் விவகாரத்தில் என்னுடைய மாணவனை வெளியில் இருந்து ஒருவன் பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்த சென்ற பொழுது அதை தடுத்தது ....

இதுபோல .....

நிறைய நினைவில் வராத விஷயங்கள் அதிகம். 

ஒரு நாள் திடீரென்று அருகிலுள்ள சிறைச்சாலைக்கு வருமாறு எனக்கு தகவல். 

என்ன ஏது என்று கேட்கும் பொழுது 

சார் நீங்க senior most teacher என்பதால் Central prison க்கு teachersஐ recruit பண்ணனும்... Chief Education Officer உங்கள தான் ரெகமெண்ட் பண்ணாங்க. தயவு செய்து வாங்க என்று superintendent of prison னிடமிருந்து Phone.

இப்படியாக என்னுடைய பணி teaching என்பதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 

2027 டிசம்பர் மாதம் முடிய சர்வீஸ் இருக்கிறது. இன்னும் மீதமுள்ள காலங்களில் என்னென்ன அனுபவங்கள் கிடைக்கப் போகிறதோ...

எது எப்படியானாலும் மாணவர்களுடைய psychology தெரிந்துகொண்டு அவர்களிடம் அன்புடன் பேசி பழகினால் நாம் அவனை நல்வழிக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது மட்டுமே உண்மை. கறார் கண்டிப்பு இவையெல்லாம் இரண்டாம் பட்சம் மட்டுமே... 

========================================================================================


கல்கியின் முன்னுரை ஒன்றிலிருந்து சில பகுதிகள்  - பானுமதி வெங்கடேஸ்வரன் 


பாங்கர் விநாயக்ராவ் என்னும் தன்னுடைய நூலுக்கு கல்கி எழுதியிருந்த நீ..ண்..ட முன்னுரையிளிருந்து(9அத்தியாயங்கள்) சில பகுதிகள்:

ராஜாஜி “சென்னையில் வேலையில்லாமல் இருந்தால் கெட்டுப் போவாய்!” என்று சொன்னது எனக்கு அளவுக்கடங்காத வியப்பையும் திகைப்பையும் அளித்தது. நம்முடைய சமாசாரம் ராஜாஜிக்கு எப்படித் தெரிந்தது என்றுதான் வியப்பு.

சென்னை ராயப்பேட்டையில் நான் இருந்தபோது ஒரு நாள் இரவு சந்திரக் கிரகணம் பிடித்தது. கிரகணம் பார்ப்பதற்கும் ஸ்நானம் செய்வதற்கும் திருவல்லிக்கேணி கடற்கரைக்குப் போயிருந்தேன். இரவு ஒரு மணிக்கு கிரகணம் விட்டதும் ஸ்நானமும் முடிந்தது. ராயப்பேட்டைக்குக் குறுக்கு வழியாகப் போக எண்ணித் திருவல்லிக்கேணி சந்து ஒன்றில் புகுந்தேன். போகப் போகப் புதிய புதிய சந்தும் பொருந்தும் வந்து கொண்டிருந்தனவே தவிர, ராயப்பேட்டையைக் காணவேயில்லை. “ராயப்பேட்டை கெட்டுப் போய் விட்டதா? அல்லது நான்தான் காணாமற் போய்விட்டேனா?” என்ற யோசனை உண்டாகிவிட்டது. கடைசியில் நான் வந்திருந்தது மயிலாப்பூர் மந்தைவெளி என்று தெரிந்தது. அங்கிருந்து டிராம் ரோட்டைப் பிடித்துக் கொண்டு காலை நாலு மணிக்கு ராயப்பேட்டை சேர்ந்தேன்!

எனவே, சென்னையில் இருந்தால், அதுவும் சும்மா வேலையின்றி இருந்தால், நான் கெட்டுப் போகக் கூடியவன்தான் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தது! ராஜாஜியும் இதையே சொல்லவே ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்கக் கூடாது என்று மறுநாளே வீட்டைக் காலி செய்து விட்டுப் புறப்பட்டேன். (அடாடா! அந்தக் காலி வீடு மட்டும் இப்போது காலியாகவே இருந்தால்...!)

காந்தி ஆசிரமத்துக்கு நான் போய்ச் சேர்ந்தது முதல் சில மாத காலம் வரை கணக்கு எழுதுவதில் ஈடுபட்டிருந்தேன். ஆசிரம வாழ்க்கை ஆனந்தமாகத்தான் இருந்தது. அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து பிரார்த்தனைக்குப் போய் உட்காருவது மட்டும் ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தது. சில நாள் காலைப் பிரார்த்தனை செய்த பிறகு மறுபடியும் போய்ப் படுத்துக் கொண்டு விடுவேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு காலையில் எழுந்திருப்பது பழக்கமாகிவிட்டது.

காலைப் பிரார்த்தனையைக் காட்டிலும் மாலை ஏழு மணிப் பிரார்த்தனை எப்போதும் சுவாரஸ்யமாயிருக்கும். மகாத்மாவின் சத்தியாகிரஹ ஆசிரமத்தில் நடப்பதை ஒட்டி, பகவத் கீதை பாராயணம், நாமாவளி பஜனை முதலியவை நடைபெறும். அவற்றோடு “முக்திநெறி அறியாத” என்னும் திருவாசகமும், “மாற்றறியாத செழும் பசும் பொன்னே!” என்னும் அருட்பாவும் பாடப் பெறும். பாடப்பெறும் என்று சம்பிரதாயமாக தான் சொல்கிறேன். அந்தப் பாட்டுகள் இன்னும் உயிரோடு இருப்பது மாணிக்கவாசகர், ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் ஆகியவர்களின் தபோ வலிமையினால் தான். மகாத்மா நடத்தும் மாலை பஜனைகளில் ஸ்ரீமதி மீராபென் என்னும் பெயர் பூண்ட மிஸ் ஸ்லேட் அம்மையார் மீராபாயின் கீதங்களைப் பாடுவதுண்டு. அவ்வளவு துரதிர்ஷ்டத்தை மாணிக்கவாசகர் செய்யவில்லையென்று சொல்லலாம். ஆனால் அடுத்தபடி துரதிர்ஷ்டக்காரர் என்றே சொல்ல வேண்டும். ஆசிரமத் தொண்டர்களின் சாரீரம் அவ்வளவு சுகமாயிருக்கும்! ஆசிரமத்தில் எனக்கு ஏதாவது கஷ்டம் இருந்ததென்றால், அது மேற்படி தமிழ்ப்பாடல்களைத் தொண்டர்கள் பாடக் கேட்பதொன்றுதான்.

==============================================================================================

ஒரு நேர்மறைச் செய்தி -  பானுமதி வெங்கடேஸ்வரன் 


மதுரையைச் சேர்ந்த பத்மாவதி என்ற அந்தபெண்ணிற்கு பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை, ஆனால் 17 வயதிலேயே திருமணம் ஆகி விட்டதால் இல்லறக் கடமைகளில் மூழ்கியிருந்த அவரால் தன்னுடைய 45வது வயதில்தான் அந்த பட்டதாரி கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் பி.காம். பட்டப்படிப்பை முடித்தார். அவருடைய ஈடுபாட்டையும், உழைப்பையும் பார்த்த ஆடிட்டர் C.V.S. மணி என்பவர் இவரை சி.ஏ. படிக்கச் சொல்லியிருக்கிறார். இவர் எம்.காம்., சி.ஏ. இரண்டையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். எது சுலபமாக இருக்கிறதோ அதைத் தொடரலாம் என்று நினைத்தாராம். இரண்டையுமே தொடர்ந்திருக்கிறார். 45 வயதில் சி.ஏ.வில் சேர்ந்த அவர் 50வது வயதில் அதை முடித்தாராம். தற்போது 86 வயதாகும் இவர் இப்போதும் பட்டய கணக்காளராக(chartered Accountant) பணியாற்றி வருகிறார்.  

====================================================================================

சுதந்திரப் போராட்ட காலத்தில் அந்தமான் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தாமோதரன் கதையை படமாக்கிக் காட்டி இருந்தார் இயக்குனர் ப்ரியதர்ஷன்.  மோகன்லால், பிரபு, தபு ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்தின் பெயர் சிறைச்சாலை.  வெளிவந்த ஆண்டு 1996.  தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது.  அறிவுமதியின் பாடல்களுக்கு இளையராஜா இசை.

அந்தப் படத்திலிருந்து இரண்டு அற்புதமான பாடல்கள்.

இந்தப் பாடலில் இளையராஜாவையும் பாலசுப்ரமணியத்தையும் சித்ராவையும் ரசிக்கலாம்.  காட்சியையும் ரசிக்கலாம்.  அற்புதமான உணர்வுகளுடன் கூடிய பாடல்.


அடுத்த பாடலும் இதே படம்.  அழகான படப்பிடிப்பில் மறுபடியும் தலைவர் குரலில்..


====================================================================================





தாளிப்பு

பொடி

சிகரெட்டும் சுருட்டும் பொடியும் புகையிலையின் குழந்தைகள்தான்.  ஆனால் பொடிக்கு உலகில் ஒரு அந்தஸ்து கிடைத்துள்ளது.  பொடி நுழையாத இடம் கிடையாது.  'பத்மபூஷன்' விருது அளிக்கும் நிகழ்ச்சியில் ஜனதிபதி சாட்சியாகப் பொடி போடலாம். ஈ வே ராவின் போராட்டத்தை நம்பி நிற்காமல் எப்போதோ  கர்ப்பகிரகத்தில் பொடி நுழைந்து விட்டது.    பொடிக்கு அடிமையானவர்கள் ஏராளமானவர்கள்.  

நெப்போலியன் நெல்சன் முதல் அண்ணா வரை எத்தனையோ வி ஐ பி க்கள் பொடிப்பித்தார்களாக இருந்திருக்கிறார்கள்.

லண்டன் பாராளுமன்றத்தில் ஒரு அழகிய பொடிடப்பி உள்ளது.  சர்க்கார் செலவில் தலைமை காப்பாளர் அதை நிரப்பி வைக்கிறார்.  சபைக்குள் போகும்போது ஒரு சிட்டிகை எடுத்துக் கொள்கிறார்கள் பல எம் பி க்கள்.

பிரதம மந்திரியாய் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் பொடிப் பிரியராம். 1941 ஆம் ஆண்டு அந்த பொடி டப்பி காணாமல் போய்விட்டது.  சர்ச்சில் தன் சொந்தக் செலவில் ஒரு பொடிடப்பியை வாங்கி கொடுத்தாராம்.  இன்றும் அதே டப்பிதான் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது.

பொடிப்பழக்கத்தை எதிர்த்தும் பல இயக்கங்கள் தோன்றியுள்ளன.  ஒரு பாப் கூட அறிக்கை விட்டாராம். 

நம் ஊர்களில் எல்லாப் பொடிகளுக்கும் 'பட்டணம் பொடி' என்று பெயர் வைத்து விடுகிறார்கள்.  லண்டனில் உள்ள பிரபல பொடிக்கடையான ஜி ஸ்மித் அண்ட் சன்ஸ் 41 வித பொடிகள் தயாரிக்கிறார்கள்.  காபி வாசனை, அத்தர் வாசனை ஆகியவை மிகப் பிரபலமாம்.பொடிகளுக்கு விதவிதமான பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.  டவுன் கிளார்க், நான்காம் ஜார்ஜ் ஆகியவற்றிற்கு நல்ல கிராக்கி என்கிறார்கள். 

பொடி டப்பிகள் தயாரிப்பதையும் கலையாக்கி விட்டிருக்கிறார்கள்.  பொடிதாஸர்கள் செல்வத்தின் செழிப்பைக் காட்ட வெள்ளி, பொன் வைரம் ஆகியவற்றைக் கொண்டு செய்தனர் பலர்.

1962 ஆம் ஆண்டு லண்டனில் ஒரு ஏலத்தில் ஒரு பொடி டப்பி இரண்டாயிரம் பவுனுக்கு விலை போயிற்று.  
பொடியை வைத்துப் பல் தேய்க்கிறார்கள் பலர்.  ரத்தத்தை உறிஞ்சும் அட்டையிலிருந்து விடுபட ஒரு துளி பொடி போட்டால் போதும்.

பொடி டப்பியைப் பற்றிய ஒரு ஜோக் (ஆசிரியர், இன்ஸ்பெக்டர், உலகத்தின் அமைப்பு, மாணவன் பதில்) பொடியை விடப் பிரபலமானது ஆகவே அதை இங்கு எழுதவில்லை!

கொடுமை, கொடுமை
அப்பாவித்தனமானகேள்வி மாதிரி இருக்கும்.  ஆனால் கேட்கப்பட்ட சமயம், விதம், நபர் காரணமாக கொடுரமாக அமையும்.  அமெரிக்காவில் ஒரு காலத்தில் இத்தகைய கொடுமை வாக்யங்களைக் கண்டு பிடிப்பது பெரிய பொழுது போக்காக இருந்ததாம். உதாரணத்திற்கு:

ஆபிரகாம் லிங்கன் தன் மனைவியுடன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டது தெரித்த சேதி,
இரண்டு நாள் கழித்து லிங்கனின் மனைவியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டால் எப்படி இருக்கும்... "ஏதோ நடந்து விட்டது. போகட் டும். நாடகம் எப்படி? பிடித் திருந்ததா?

நாமும் (நகைச்கவையுடன்) சில  கொடுமை வாக்க்கியங்களைத் தயாரிக்க  முயற்சிக்கலாமே! வாசகர்கள் எழுதி அனுப்பலாம்.


வியப்பு

அப்பாடி' எத்தனை எத்தனை ஜோக்குகள்!

எப்படித்தான் இத்தனை நினைவில் வைத்திருக்கிறார்!

ஆச்சரியமான ஞாபக சக்தி!

ஆனால் அவற்றை

எத்தனை எத்தனை தரம் என்னிடம் சொன்னார்

என்பதை மறந்து விடுகிறாரே!

ஆச்சரியமான மறதி!

கடுகு

தினமணி கதிர் - 1971 -  கடுகு தாளிப்பு பகுதி 

=======================================================================================

அதிர்ச்சி சம்பவம்
கணவர் மீது சிமென்ட் ஊற்றி மூடிய மனைவி - வலிக்காமல் இருக்க மயக்க மருந்து கொடுத்துக் கொடூரச் செயல்
எகிப்தின் பாரம்பரியப் பண்டிகையான 'ஷாம் நசீம்' கொண்டாட்டத்திற்குத் தன்னை அழைத்துச் செல்லாததால், யாஸ்மின் என்ற பெண் தனது கணவர் இசாம் மீது அதீத கோபமடைந்துள்ளார்.
இந்தக் கோபத்தின் உச்சத்தில், அவர் செய்த செயல் உலகையே உலுக்கியுள்ளது.
முதலில் கணவருக்குத் தேநீரில் மயக்க மருந்து கொடுத்து அவரை ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்ல வைத்துள்ளார் யாஸ்மின்.
பின்னர், இரண்டு மூட்டை சிமென்ட்டைத் தயார் செய்து, மயக்கத்தில் இருந்த கணவரின் உடல் முழுவதும் ஊற்றிப் பூசியுள்ளார்.
சிமென்ட் கலவை உடல் முழுவதும் இறுகும் வரை காத்திருந்து கணவரைச் சித்திரவதை செய்துள்ளார் அந்தப் பெண்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், பாறை போல இறுகிய சிமென்ட் கலவைக்குள் இருந்து இசாம் என்பவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாஸ்மினை கைது செய்துள்ள எகிப்து போலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.!
- தகவல் உமாசெல்லமுத்து
நன்றி: முருகேசன் பொன்னையா R. கந்தசாமி



=======================================================================================

விஜயகாந்த் 

அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ‘நாராயணசாமி’. அது அவருடைய தாத்தாவின் பெயர். தனக்குத் தானே ‘விஜய் ராஜ்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார். அதுவே மதுரையில் அவரது நண்பர்கள் மத்தியில் ‘விஜி’ என்று பிரபலமானது. அவரை இப்போதும் ‘நாராயணா..’ என்றழைப்பது அவருடைய அக்கா டாக்டர் விஜயலட்சுமி மட்டும்தான்.
மதுரை மாகாளிபட்டியில் அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்டார். பகலில் ரைஸ் மில், மாலையில் நண்பர்களுடன் அரட்டை, இரவில் சினிமா என்று ஜாலியாக வலம் வந்த இளைஞர். அவரது நண்பர்கள் குழுவுக்கு ‘இரவு ராஜாக்கள்’ என்கிற தனிப் பட்டம் உண்டு.
படத்திலிருந்து நீக்கம்: அப்பாவுக்குப் பிடித்த தலைவர் காமராஜர். மகனுக்கு எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். மன்ற உறுப்பினரும்கூட. ‘விஜயராஜ் & கோஷ்டி’ மாலை ஆகிவிட்டால், மதுரை சேனாஸ் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் ஒன்றுகூடி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள்.
அது மதுரையின் பெரிய விநியோகஸ்தர் முகம்மது மஸூரின் அலுவலகம். இவர்தான் விஜய்ராஜுக்கு சினிமா வாய்ப்பினைப் பெற்று தந்தவர். விஜயகாந்தின் முதல் படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்பார்கள். அது அவரது 6வது படம். முதல் படம் ‘இனிக்கும் இளமை.’
ஆனால் அதற்கும் முன்பு அவர், ரஜினிக்கு தம்பியாக ’என் கேள்விக்கு என்ன பதில்’ என்கிற படத்தில் தான் முதலில் 101 ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு நடித்தார். ‘அட யாருப்பா இந்த ஆள்! நல்லா நடிக்கிறானே..!’ என்று செட்டில் பேச்சுக் கிளம்பியது. மூன்று நாள் மட்டுமே நடித்திருந்த நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
கொதித்த விஜய்ராஜ், நேரே அந்தப் பட நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்று தயாரிப்பாளரிடம் நியாயம் கேட்டு சண்டை போட்டார். “உங்கள் முன்னாலேயே சினிமாவில் ஜெயித்துக் காட்டுகிறேன்” என சவால் விட்டுத் திரும்பினார்.
‘அகல் விளக்கு’ அனுபவம்: அதன் பின்னர், தனது புகைப்பட ஆல்பத்துடன் கோடம்பாக்கம் முதல் விருகம்பாக்கம் வரை சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கினார். சென்ற இடமெல்லாம் கிண்டலும் கேலியும்தான். ஒரு வாய்ப்பு கூடக் கிடைக்கவில்லை. மீண்டும் கை கொடுக்க முன் வந்தார் விநியோகஸ்தர் மஸூர்.
அப்போது எம்.ஏ.காஜா இயக்கிக் கொண்டிருந்த ‘இனிக்கும் இளமை’ படத்தில் விஜய்ராஜுக்கு வாய்ப்புத் தந்தால் மதுரை ஏரியாவை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி, அந்தப் படத்தில் வில்லன் வேடம் பெற்றுத் தந்தார். திருப்பூர் பனியன் கம்பெனி நண்பர்கள் கொடுத்த ஆடைகளை அணிந்து நடித்தார். விஜயராஜை ‘விஜய்காந்த்’ என்று பெயர் மாறினார் இயக்குநர் எம்.ஏ.காஜா.
கதாநாயகனாக இரண்டாவது படம் ‘அகல் விளக்கு’. அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு அதிகாலையே அழைத்துச் சென்று, விஜய்காந்துக்கு மேக்கப் போட்டு உட்கார வைத்திருந்தார்கள். படத்தின் நாயகி ஷோபா அன்றைக்கு முன்னணிக் கதாநாயகி. “அவர் எப்போ உள்ளே நுழையுறாரோ, அடுத்த நிமிஷமே ஷாட் ரெடியா இருக்கும். அப்போது ‘காம்பினேஷன்’ ஷாட்களை ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் எடுத்துவிட வேண்டும்.
அவர் நமக்கு 2 மணி நேரம் நடித்துவிட்டு, வேறொரு படத்தின் ஷூட்டிங் போகிறார். நீங்க மேக்கப்போடு ரெடியா இருங்க” என்று விஜயகாந்துக்கு உத்தரவு போட்டு உட்கார வைத்து விட்டார்கள். காலை நீண்டு மதியம் ஆகியும் ஷோபா வந்தபாடில்லை. விஜயகாந்துக்கோ வயிற்றைக் குடைகிற மாதிரி பசி. எழுந்து சாப்பிடப் போனார்.
“இப்பச் சாப்பிட போகாதீங்க. ஹீரோயின் அந்த ஷூட்டிங்லேர்ந்து கிளம்பி விட்டார். இப்போது வந்து விடுவார் எனத் தடுத்து விட்டார்கள். பிற்பகல் மூன்று மணி ஆகிவிட்டது. பசி தாங்க முடியாத விஜயகாந்த், கோபமாக எழுந்து போய் உணவைத் தட்டில் வைத்து ஒரு வாய் அள்ளிச் சாப்பிடும்போது வேகமாக ஓடி வந்த புரொடக்சன் மேனேஜர் விஜயகாந்தின் கையைப் பிடித்து எழுப்பினார். “சார் சாப்பாடு எங்கயும் ஓடிராது.. போய் சட்டுன்னு கைகழுவிட்டு ஷாட்டுக்கு வாங்க.. ம்ம்.. சீக்கிரம். ஹீரோயின் வந்தாச்சு.. அவங்க சீனை நடிச்சு முடிச்சுட்டு உடனே கிளம்பிடுவாங்க.. ரீடேக் வாங்க மாட்டாங்க” என்றார்.
“இன்னும் ரெண்டு வாய் சாப்பிட்டுவிட்டு வந்துடுறேன். ரொம்பப் பசிக்குது” என்கிறார். அதெல்லாம் ஆகிற கதையில்ல” என்று கையைப் பிடித்து இழுத்து சென்றார். “ஏங்க மனுஷன் கஷ்டப்படுறது.. சம்பாதிக்கிறது எல்லாமே வயிறாரச் சாப்பிடத் தானேங்க?” என்று அழாத குறையாகக் கேட்டார். எதுவும் காதில் விழாத மாதிரி விஜயகாந்தை இழுத்துப்போய் ஷாட்டில் நிறுத்தினார் அந்த மேனேஜர். பசியை மறைத்துக்கொண்டு நடித்தார்.
“சினிமால எதுக்கு இந்தத் தேவையில்லாத அடாவடித்தனம்.. அதுவும் பசி விஷயத்துல” என்று யோசித்த விஜயகாந்த், அப்போது மனதில் ஒரு சபதம் எடுத்துக்கொண்டார். ‘நான் சினிமா கம்பெனி தொடங்கினால் யாரையும் பட்டினியாக வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன்’. இன்றைக்கும் ‘விஜயகாந்த் கம்பெனியில் நல்ல சாப்பாடு போடுவார்கள்’ என்று சக நடிகர்களும் சினிமா தொழிலாளர்களும் சொல்லும்படி சாதித்துக் காட்டினார் விஜயகாந்த்.
மனித நேய மனிதர்: அவர் நடித்த முதல் 5 படங்கள் கைகொடுக்கவில்லை. ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரும்பிப் பார்க்க வைத்தது. ஓவர் நைட்டில் 10 படங்களில் ஒப்பந்தமானார். அவற்றில் சில வென்றன. சில தோல்வியின் விரல் பிடித்து நின்றன. அன்றாடச் செலவுகளுக்கே திண்டாட்டம். அந்தக் காலகட்டத்தில் விஜயகாந்துடன் 10 பேர் இருந்தார்கள். அவர்களுக்குச் சாப்பாடு போட வேண்டிய பொறுப்பும் அவருடையது தான்.
இந்தச் சூழ்நிலையில்தான் ‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்தது. அப்போது உடன் இருந்த உயிர் நண்பரான இப்ராஹிம் “விஜி.. என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்லே.. நீ வில்லனா நடிக்காதே. நமக்குன்னு ஒரு காலம் வரும்” என்று நம்பிக்கை கொடுத்தார். நண்பனின் பேச்சை விஜயகாந்த் மீறவில்லை. ‘சட்டம் ஒரு இருட்டறை’ மூலம் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். அவரே அதன் பின்னர் விஜயகாந்துக்குத் தாறுமாறான ஏறு முகம்தான்.
‘பெரிய ரஜினின்னு நினைப்பா?’ என்று முகத்தில் புகைப்படங்களை வீசிய இயக்குநர் விஜயகாந்தை வைத்து வெற்றிப் படம் கொடுத்தார். அவருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்கள் தேடி வந்து வாய்ப்பினைக் கேட்டுப் பெற்று நடித்தார்கள். அதிரடி ஆக் ஷன் நாயகனாக ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜயகாந்தை தூக்கி வைத்தனர் ரசிகர்கள். திரையில் மாபெரும் மாஸ் கதாநாயகனாகத் திகழ்ந்த அளவுக்கு அரசியலில் அமைந்த வாய்ப்பு, அடுத்த கட்டத்தை எட்ட முடியாமல் போனதற்குக் காரணம், அவருக்குச் சரியான ஆலோசகர்கள் இல்லாததே.
சினிமாவில் அவருக்காகச் சிந்தித்தவர், கதை கேட்டவர், மேனேஜராக இருந்தவர் எல்லாம் அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். எம்.ஜி.ஆர். பாணியில் விஜயகாந்துக்கு கதைகள் அமைக்கச் சொல்வார். ரசிகர் மன்றங்களையும் அவ்வாறே உருவாக்கினார்.
தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்குவதுடன் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கக் கூறும் ஓர் அறிக்கையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜயகாந்த். அவரால் கல்வி உதவி பெற்று பலர் டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, வழக்கறிஞர்களாக, ஏன் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகக்கூட ஆகியிருக்கிறார்கள்.
90களில் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குக் கதவு திறந்து விட்டு அவர்களின் திறமையைப் பயன்படுத்திக்கொண்டார். அவர் நடித்த படங்களில் ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உழவர் மகன்’, ‘புலன் விசாரணை’ ஆகியவை வெள்ளி விழா கண்டன. 100 நாள் படங்களின் பட்டியல் பெரியது. வருமான வரி செலுத்துவதில் அத்துறையிடமிருந்து பாராட்டுப் பெற்றவர் விஜயகாந்த்.
நன்றி: இந்து தமிழ் திசை - R. கந்தசாமி

========================================================================

புலியைப் பார்த்து பூனை போட்டுக்கொண்ட சூடு

கடந்த டிஸம்பரில் செல்வாண்ணா தளத்தில் அவர் பகிர்ந்திருந்த திருவெம்பாவை பாடலுக்கு அதுபோலவே இன்றைய வார்த்தைகளில் எழுத முயற்சித்தபோது..!

பாதந்தொழுதால் பாவம் தீர்ப்பார் புலியினுரிதோலார் 
அமுதே அவன் கனியே அவன் என எங்களையும் 
உணர வை திரு உத்தரகோசமங்கையுறை 
திருப்பெருந்துறை சிவபெருமானே - உனைப் 
பணியும் பண்பு கொடு, அன்பு காட்டு உன்னருள் வேண்டி 
அடிதொழுகிறோம் அருள்கொடு ஆண்டவனே...


=============================================================================

OTT  பக்கம் 


ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஜீத்து சதீசன் மங்கலத்து இயக்கத்தில் இந்த மலையாளப் படம் பார்த்தேன்.  நல்லதொரு த்ரில்லர்.  டைம் லாப்ஸ் படம்.  காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் செல்பவர்களுக்கு அங்கு அவர்கள் கழிக்கும் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் வெளியில் இருப்பவர்களுக்கு இருபது முப்பது வருடங்கள்.

விருப்பமில்லாமல் நாயகனின் வற்புறுத்தலுக்காகவும் மேலதிகாரியின் கட்டளைக்காகவும் காட்டுக்குள் செல்லும் கடுகடு ரெஜி ஒரு பிணத்தைப் பார்த்து, தன்  குழுவினருக்கு அதை ஆராய கட்டளை இட்டு விட்டு உள்ளே செல்ல, சில காட்சிகளுக்குப் பின் அந்த உடல் ரெஜியின் பிணம்தான் என்று ஆராய்பவர்களுக்கு தெரிய வருகிறது.  

உள்ளே வாக்கி டாக்கியில் உதவி கேட்கும் குரலுக்கு சொந்தக்காரன் பற்றி வெளியில் உள்ள போலீசிடம் விவரம் விசாரித்தால் அவர் முப்பது வருடங்களுக்கு முன் இந்த கானகத்தில் காணாமல் போனவர் என்று தெரிய வருகிறது.  நாயகனின் அப்பா இறந்த உடன்தான் நாயகன் பிறக்கிறான்.  ஆனால் நாயகன் அந்த கானகத்துக்குள்ளிருந்து தன் அப்பாவை மீட்கிறான்.  ஒருவழியாய் சிக்கல்களை முடிச்சவிழ்த்து நாயகன் மீளும்போது..  ஆம்,  புதிய எதிர்பாரா திடுக்கிடும் சிக்கல் வருகிறது..  அது என்ன என்று இரண்டாம் பாகம் வந்தால் தெரியும் என்று காத்திருக்க வேண்டும்.

சிக்கலான கதை.

பார்த்து குழம்புங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்!

=============================================================================












167 கருத்துகள்:

  1. இன்றைய வியாழன் பகுதியில் நிறைவான பல பகுதிகள் இருக்கின்றன. ஆசிரியர் வரைதான் படித்திருக்கிறேன்.

    நேர்மறைச் செய்தி தலைப்பைப் பார்த்ததும் ஒரு காலத்தில் சனிக்கிழமையின் பாதிப் பகுதியை அத்தகைய செய்திகள் எடுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   நன்றி.  ஆமாம்.   போதிய வரவேற்பில்லாததால் அது நிறுத்தப் பட்டது!  தினம் தினம் பாசிட்டிவ் தேடிச் சேர்க்கும் வேலை எனக்கும் மிச்சம்!  தானாக இபப்டி எதுவும் கண்ணில் பட்டால், யாராவது அனுப்பினால் பகிரலாம்!

      நீக்கு
  2. பில்லையும் பொருட்களையும் சரி பார்ப்பது நல்ல வழக்கம். இல்லையெனில் ஏமாற நேரிடும்.

    இரண்டு நாட்கள் முன்புதான் நேரில் பத்திரிகை கொடுப்பது எவ்வளவு சிரம்ம் மற்றும் என் அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

    நல்லவேளை... உள்ளூர்.. காலாகாலத்துக்கு சட்னு ஹோட்டலில் நுழைந்து சாப்பிட்டுவிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்திரிகை கொடுப்பது, அதுவும் இந்த வெயிலில் சிரமம்தான்.  சுகமான சிரமம் என்று எடுத்துக் கொள்கிறோம்!  அவ்வ்வ்வ்வ்....

      பில் எப்போதும் நாங்களும் சரிபார்ப்பதுதான்.  கம்பியூட்டர் பில் என்று நம்பி இருந்துவிட முடியாது!  அதிலும் ஒன்றையே இரண்டு முறை ஸ்கேன் செய்து நம் கண்களை ஏமாற்றுவோரும் உண்டு.  கண்டுபிடித்து சரி செய்திருக்கிறேன்.

      நீக்கு
  3. நல்ல ஆசிரியர் மாணவன் நினைவிலிருந்து என்றும் மறைய மாட்டார், நம்மை அந்தச் சமயத்தில் நம் தவறுகளுக்காக வெளுத்திருந்தாலும்.

    ஆசிரியப் பணி அறப் பணி. அவரது அனுபவங்கள் ரசனை. இதைப் பற்றி பிறகு வந்து எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது எங்கே கண்டிக்க முடிகிறது?  வாசுவிடமிருந்து இன்னும் சில பகுதிகள் வாங்கி வைத்திருக்கிறேன்.  அடுத்த வாரம் வரும்!

      இங்கு வாசு மாணவர்கள் மனதில் ஒரு அன்புக்குரிய, மரியாதைக்குரிய ஆசிரியர் என்பது எனக்கும் பெருமையாக இருக்கிறது.  மனம் நெகிழ்கிறது.

      நீக்கு
  4. கூறாமல் சன்னியாசம் கொள் என்பதை அந்த எகிப்திய கணவன் அறிந்திருக்கவில்லை போலிருக்கிறது.

    அழகிய பெண். நாகத்தின் நச்சு எண்ணம்.

    நம்மூரிலும் கணவன் செய்யும் அறமற்ற செயல்களை, நல்லவேளை பெண்கள் பொறுத்துக்கொண்டு செல்கிறார்கள். இல்லைனா நம் எல்லோருக்கும் என்னென்ன அனுபவங்கள் கிடைத்திருக்குமோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூர் மனைவிகள் இப்படி கொடுமை செய்வதில்லை.  வாழைத்தண்டை நறுக்குவது போல துண்டு துண்டாக நறுக்கி பிரிஜ்ஜில் வைத்த மனைவிகள் இருக்கிறார்கள்!

      நீக்கு
    2. ஊநம்மூர் மனைவிகளிடம், கணவன் எப்படி எனக் கேட்டால் என்னென்ன பூதங்கள், குற்றச்சாட்டுகள் வருமோ... நம்முடையது ஆணாதிக்கச் சமூகம் வேறு.

      நீக்கு
    3. அதெல்லாம் 50;50 நெல்லை! அல்லது பழங்கதை!

      நீக்கு
  5. முதல் பகுதி - பில்லை நானும் எப்பவும் சரி பார்த்துக் கொண்டுவிடுவது வழக்கம். அது மளிகை சாமான் வாங்கும் பில்லாக இருந்தாலும் இம்மாம் பெரிய பில்லாக (இப்பலாம் கம்ப்யூட்டர் பில் தானே அதுல என்னென்னவோ எழுதி அனுமார் வால் போல நீட்டமா இருக்கும்) இருந்தாலும் ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டுத்தான் கடையை விட்டு வெளியே வருவது. காரணம் அனுபவம் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பார்ப்பேன்தான்.  சமயங்களில் இப்படி ஆகி விடுகிறது.  வாங்க கீதா..

      நீக்கு
  6. மருந்து பில்லை தேடினேன். அவர் பில் எல்லாம் தரவில்லை. மருந்துகளை போட்டுக் கொடுத்த கவரிலேயே விலை எழுதி இருந்தார். அதில் Albendazole என்று எழுதி 10 ரூபாய் என்று போட்டு வாங்கி இருந்தார்!//

    பில் இல்லைனா கணக்கில் வராது இல்லையா? பெரும்பாலும் பில் நான் கேட்டு வாங்கிவிடுவேன் அவங்க தரலைனா. சின்ன தொகை என்றால் இப்படித்தான் எழுதித் தருகிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பெரிய தொகைதான்.  அவரும் பில் கொடுக்கவில்லை.  நானும் கேட்கவில்லை!

      நீக்கு
  7. ரெண்டு இடங்களிலும் வெயில் படுத்துது போல எல்லாரையும்!!!! அதான் இப்படிக் குழப்பங்கள்!!! தப்பாக...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பத்து ரூபாய்க்கு ஏமாற்றினார்.  செய்த தவறை சமாளிக்க முற்பட்டார்.   நான் 100 ரூபாயை திருப்பிக் கொடுத்தேன்!  இரண்டும் அடுத்தடுத்த சம்பவங்கள்.  நேரம் இரவு ஒன்பது மணி!  என்ன வியர்வை தெரியுமா?

      அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தததும் ஏ ஸி ஹால் இருக்கா என்று கேட்க சர்வர் முறைத்தபடி இல்லை என்றார்!

      நீக்கு
    2. பெங்களூரில் நேற்று பலத்த காற்றுடன் செம மழை. பால்கனி கதவுகளைத் திறந்தாலே ஊழிக்காற்று, ஆறடி அகல பால்கனியைத் தாண்டி அறைக்குள் நுழைந்த சிலுசிலு பலத்த தூறல்.. ஆஹா.

      நீக்கு
    3. ஆமாம்.  எங்கள் க்ரூப்பிலும் சொன்னார்கள்.  இங்கில்லை!

      நீக்கு
    4. பெங்களூரில் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து இருக்கிறது என்று செய்திகள் பார்த்தேன்.

      நீக்கு
  8. வாசு ஸார் - சற்று குடும்ப ஜாடை இருக்கிறதே!!!!.

    மனமார்ந்த பாராட்டுகள் அவருக்கு, ஸ்ரீராம். நிஜமாகவே இப்போதெல்லாம் ஆசிரியப் பணி என்பது மிகவும் சிரமமான ஒன்று. ஒரு பக்கம் அரசோ/தனியார் நிர்வாகமோ , மறுபுறம் குழந்தைகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  வாசு ரிஸ்க் எடுக்க தயங்கவில்லை என்பது எங்களுக்கே இப்போதுதான் தெரிந்தது.

      நீக்கு
  9. Latestஆக தொரப்பாடி பள்ளியில் கஞ்சா விற்பனை செய்பவனை பிடிக்கச் சென்று சுவர் ஏறி குதித்தது ..

    காதல் விவகாரத்தில் என்னுடைய மாணவனை வெளியில் இருந்து ஒருவன் பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்த சென்ற பொழுது அதை தடுத்தது ....//

    கடவுளே! சவால்கள் நிறைந்த பணி.

    சார் நீங்க senior most teacher என்பதால் Central prison க்கு teachersஐ recruit பண்ணனும்... Chief Education Officer உங்கள தான் ரெகமெண்ட் பண்ணாங்க. தயவு செய்து வாங்க என்று superintendent of prison னிடமிருந்து Phone.//

    சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் இரண்டும் தனியாக எழுதி கேட்டிருக்கிறேன். அதுவும் வரும்!

      நீக்கு
  10. எது எப்படியானாலும் மாணவர்களுடைய psychology தெரிந்துகொண்டு அவர்களிடம் அன்புடன் பேசி பழகினால் நாம் அவனை நல்வழிக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது மட்டுமே உண்மை. கறார் கண்டிப்பு இவையெல்லாம் இரண்டாம் பட்சம் மட்டுமே... //

    இதைக் கன்னாபின்னான்னு ஆதரிப்பேன். இது பள்ளிக்கு மட்டுமில்லை வீட்டிற்கும் பொருந்தும். subtle ஆக கையாள வேண்டிய தருணங்கள் ரொம்பவே சவாலாக இருக்கும்.

    மீண்டும் இந்த சூப்பர் ஆசிரியரை உங்கள் கஸினை மனமார்ந்து வாழ்த்துகிறேன், ஸ்ரீராம். மிக மிக நல்ல ஆசிரியர். இவரே மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சி கொடுக்கலாம் ஸ்ரீராம். பள்ளியில் எப்படி இருக்க வேண்டும் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசு போன்ற நல்ல மனிதனால் எனக்கும் பாராட்டு! பொசிந்தது புல்லுக்கும்! நன்றி கீதா.

      நீக்கு
  11. பல விஷயங்கள் ஒரே பதிவாக....... சிறப்பு.

    ஒவ்வொன்றும் படித்து முடித்தேன். நிறைவு.

    பதிலளிநீக்கு
  12. இன்றைய வியாழன் கதம்பம் மெட்ராஸ் மிக்ஸர் போல சுவையாக இருக்கிறது.
    நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவை துணுக்குகள் சிரிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  13. ஒரு முறை குமரன் சில்க்ஸில் புடவைகள் வாங்கிய பிறகு வீட்டிற்கு வந்து பார்த்தால் ஒரு புடவை குறைகிறது. உடனே கடைக்கு ஃபோன் செய்து, மறுநாள் பில்லோடு கடைக்குச் சென்று கேட்டதில், நல்ல வேளையாக டெலிவரி கொடுக்காத ஐட்டம்களோடு இருந்தது, எடுத்து தந்தார்கள்.
    என் மகன் சாமான்கள் வாங்கியதும் சரி பார்த்து விடுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவங்கள்தான் நமக்கு பாடம் கற்றுத்தருகின்றன!  ஹோட்டலில் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.  அவர்கள் தவறையும் நான் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.  அவர்கள் சேர்க்க மறந்ததையும் நான் நினைவுபடுத்தி சேர்க்கச் செய்திருக்கிறேன்.  

      என் அனுபவத்தில் எப்படி  ஏமாற்றி வரும் பணம் நம்மிடமிருந்து மூன்று மடங்காய் நஷ்டம் ஆகும்.

      நீக்கு
  14. கொலையும் செய்வாள் பத்தினி என்பதை மெய்யாக்கி விட்டாரே எகிப்திய அழகி! அந்த அளவிற்கு அவரைத் தள்ளியது எது என்னும் கேள்வியும் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுவாக இருந்தாலும் நீதிமன்றங்கள் கூட இப்படி கொடூர தண்டனை வழங்காது!

      நீக்கு
    2. வேறு என்ன... அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகள். நல்லவேளை நம்மூரில் மனைவிகள் நல்லவங்களா பொறுமையா மன்னிக்கும் தன்மையோடு இருக்காங்க. இல்லாவிட்டால்...

      நீக்கு
    3. // நல்லவேளை நம்மூரில் மனைவிகள் நல்லவங்களா பொறுமையா மன்னிக்கும் தன்மையோடு இருக்காங்க. //

      அப்படியா சொல்றீங்க?!! நீங்க தினத்தந்தி படிப்பதில்லையா?!!

      நீக்கு
    4. ஒரு மனைவி தன் கணவனை சூப்பர் என்று சொல்லணூம் என்றால், இன்னொரு பெண் தன் கணவரை ஆஹா ஓஹோ என்றால், ஏன் எங்க வீட்டுக்காரரும் என்னை எப்படிப் பாத்துக்கிறார் தெரியுமா? அவர் நல்லவரு, வல்லவரு என்று சொல்லிப் பீத்திக்கத்தான். மத்தபடி கணவனை ரொம்ப புகழும் மனைவிகள் குறைவுதான். என்ன ஒண்ணு, பழி வாங்க மாட்டாங்க (னு நம்பிக்கைதான்)

      நீக்கு
  15. வாசு சார் நிச்சயம் நல்லாசிரியர் விருது வாங்கியிருப்பார். வாங்காவிட்டாலும் நல்லாசிரியர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையான நல்லாசிரியருக்கு விருதுகள் தேவையில்லை.  அவர்கள் பணியே அவர்களுக்கான விருதை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கொடுக்கும்.

      நீக்கு
    2. நல்லாசிரியர் விருது எல்லாசிரியர்களுக்கும் (எல்லா நல்லாசிரியர்களுக்கும்) கொடுப்பதில்லை. அதற்கும் இட ஒதுக்கீடு, எந்தக் கட்சி சார்பு, யார் வேண்டப்பட்டவர்கள் என்று எல்லாம் உண்டு. நல்ல ஆசிரியர்களுக்கு இதிலெல்லாம் கவனம் இருக்காது என்பதால் அவங்களுக்கு ஒருவேளை நல்லாசிரியர் விருது கிடைத்தால், மிக மிக அவுட்ஸ்டேண்டிங் என்று அர்த்தம்.

      ஆசிரியர்களுக்கு பழத் தட்டு, கட்சி ரெக்கமெண்டேஷனுடன் ஒவ்வொருவரைப் பார்க்க நேரம் இருக்குமா? அது என்ன ஞானபீட விருதுக் குழுவா, சும்மா நாலு பேருக்கு பழத்தட்டு கொடுத்து காசு வெட்டினால் வாங்கிவிடலாம் என்பதற்கு.

      நீக்கு
  16. திருவெம்பாவை பாடல் ஏஐ மொழிபெயர்ப்பு போல் இருந்தது.

    உங்களுக்குத் தெரியுமா? ஏஐ உபயோகித்து ரெஸ்யூம், வேலைக்கு அப்ளை செய்வது, பல்வேறு விஷயங்களைச் செய்வது என உலகம் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் இது சொந்தச் சரக்கால்லை ஏஐ சரக்கா எனக் கண்டுபிடிக்க சாப்ட்வேர்கள் வைத்திருக்கிறார்களாம்.

    பையன் அவற்றைப் பற்றிச் சொன்னபோது புது உலகம் கண்ணில் விரிந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நானும் பலப்பல செய்திகள், பார்வேர்டுகள் பார்த்திருக்கிறேன்.  ஆனால் இது சொந்தக் சரக்கு.

      நீக்கு
  17. சினிமா சம்பந்தப்பட்ட காணொளிகளில் எல்லோரும் இரண்டு நடிகர்களை புகழ்வார்கள் ஒருவர் ஜெய்சங்கர் இன்னொருவர் விஜய்காந்த். அரசியலில் வெற்றி பெற வேறு சில குணாதிசியங்களும் தேவையோ?

    பதிலளிநீக்கு
  18. 'சம்பவம் அத்யாயம் ஒண்ணு' பட விமர்சனம் நயன்தாரா நடித்த 'மாயா' படம் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  19. சிறைச்சாலை படத்தில் 'செம்பூவே பூவே..' பாடல் ரொம்ப பிடிக்கும். அந்த படத்தின் கேசட்டுகள் வெளியான அன்றே விற்றுப் போயின என்று படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இரண்டு பாடல்களில் எனக்கு ஆலோலம் கிளி பாடல்தான் முதலில் பிடிக்கும்!

      நீக்கு
  20. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  21. திரு உத்தரகோசமங்கையுறை
    சிவபெருமானே - உனைப்
    பணியும் பண்பு கொடு,

    வாழ்க சைவ நெறி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க..  நெல்லை என்னை சந்தேகப்பட்டிருக்கார்!

      நீக்கு
    2. எனக்கு மனசுல கூகிள் டிரான்ஸ்லேஷன் மாதிரி தெரிந்தது. தெரிந்ததை எழுதினேன்.

      சும்மா, அட்டஹாசம் எக்ஸலண்ட் என்றெல்லாம் எழுதத் தோன்றவில்லை. (என் மகள் சொல்வாள், உங்க ஒரிஜினல் ஒபினியனை யார் கேட்டா? நான்கூட இந்த டிரெஸ் எப்படி இருக்கு ? என்று கேட்டால் நீங்கள் சொல்லவேண்டியது வாவ். மற்றபடி உங்க விமர்சனம் எனக்கு எதற்கு என்றாள் ஹா ஹா)

      நீக்கு
    3. அப்பாடி...   காலையில் வம்பிழுத்தால் மாலையில்தான் பதில் வரும் போல..

      நீக்கு
  22. பெரிய கணினியில் வாசிக்க
    வேண்டிய பதிவுகள்...

    ஏதோ உருட்டினேன்...
    திருவாசகம் கிடைத்தது...

    சிவ சிவ..

    பதிலளிநீக்கு
  23. பள்ளி ஆசிரிய அனுபவங்கள் செல்லப்பா சார் அவருடைய ஆசிரிய அனுபவங்களை எழுதியிருந்தது நினைவில் நிழலாடியது. ஹெட் மாஸ்டரின் சின்ன வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்கி தந்து பணம் கேட்கமுடியாமல் தவித்த கதையை சுவைபட எழுதியிருந்தார். அவரும் வட ஆற்க்காடு மாவட்டத்தில் ஒரு கிராம பள்ளியில் பணி புரிந்தவர்.
    நானும் தற்காலிக ஆசிரியராக தென் ஆற்க்காடு மாவட்டத்தில் பாண்டி பக்கம் கண்டமங்கலம் என்ற ஊரில் பணி புரிந்தவன். சம்பளம் bp 140, da 90, ir 10. மூன்று மாதங்கள் தான்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்..  நீங்கள் இருவரும் ஆத்திரத்துக்கு, அவசரத்துக்கு ஆசிரியர் வேலை பார்த்தவர்கள்.  இவர் கடைசிவரை வாத்யார்!

      நீக்கு
    2. My appa also was Sethupathi High School teacher.

      நீக்கு
  24. சுவையான வியாழன். மருந்துக்கடைகளில் ஒரு மாதத்துக்கான மருந்துகள் வாங்கினாலே குழப்பங்கள். இங்கே நான் ஆறு மாதத்துக்கு என வாங்கியது போன மாதம் தீர்ந்து போய் சர்க்கரைக்கான மாத்திரைகள் வாங்க வேண்டி மறுபடி மருத்துவமனை, சோதனைகள். ஒருவழியா மாத்திரைகள் இங்கே உள்ளது கொடுத்திருக்காங்க கடுமையான எச்சரிக்கையுடன். இந்தியாவில் கொடுப்பதை விட இங்கே உள்ளவை அதிகம் திறன் வாய்ந்தவை என்பதால் அரை மாத்திரை தான் போட்டுக்கச் சொல்லி இருக்காங்க. அதை இரண்டாக்குவது போலக் கஷ்டம் வேறே இல்லை. :( இந்திய மாத்திரைகளுக்கே 73-௧20 என இருந்த சர்க்கரை இப்போக் கொஞ்சம் பரவாயில்லை ரகம். 93௧40க்கு வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   
      ஒவ்வொரு முறையும் மருந்து வாங்க அங்கே புதிய மருந்து சீட்டு வேண்டுமா?  இந்த 5 மி கி மாத்திரைகளை 2.5 மி கி என்று பாதியாக உடைப்பதில் எனக்கு சில சந்தேகங்கள் உண்டு!

      நீக்கு
    2. அதாவது இங்கேயே உள்ள மருத்துவமனை மருத்துவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தால் ஆஸ்பத்திரி மருந்துக்கடையிலேயோ அல்லது வெளியே உள்ள கடைகளிலேயோ வாங்கிக்கலாம். ஆனால் இந்தியாவிலிருந்து கொண்டு வந்த மருந்துகள் தீர்ந்து விட்டதெனில் உடனே எந்த மருந்துக்கடைக்கும் போக முடியாது. ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் மூலம் மறுபடி எல்லாப் பரிசோதனையும் முடிச்ச பின்னரே மருத்துவர் மருந்து கொடுப்பது பற்றி யோசிப்பார். பின்னரும் மருந்து எழுதினாலும் ஒரு நாள், இரண்டு நாட்கள் சாப்பிட்டுவிட்டு பரிசோதனை ர்ப்போர்ட்டையும் எடுத்துப் போன பின்னரே எழுதிக் கொடுத்திருக்கும் மருந்துகளை வாங்கிக்க அங்கீகாரம் தருவார்.

      நீக்கு
    3. நல்ல விஷயம்தான். சரியான முறையும் கூட.

      நீக்கு
  25. ஜோக்குகள் எல்லாம் முன்னரே படிச்சாலும் கோவிச்சுண்டு பிறந்தகம் வருவதும் எலி போட்டிருக்கும் டிசைனும் ரசிக்க வைத்தன. அப்புறமா மறந்துடப் போறேனேனு முதல்லேயே சொல்லிட்டேன். அதே போல் அந்த அம்மாள் பட்டயக் கணக்காளர் ஆனதும் படிச்சது.கணவனுக்கு உ;யிரோடு சமாதி கட்டிய மனைவியும் படிச்சது. என்ன போங்க. பெண்கள் இப்படி எல்லாம் நினைப்பாங்க என்பதே நம்ப முடியலை. அப்புசாமி ஜோக்கும் கூடப் படிச்சது தான். கடுகு சாரோட இந்தக் கட்டுரையும் படிச்சிருக்கேன். அப்போதெல்லாம் நிறையப் படிக்கும்படியான நாட்கள். எப்போவும் புத்தகமும் கையுமாக இருப்பதோடு புத்தகங்களுக்காகத் தேடித் தேடி அலைஞ்சிருக்கேன். கெஞ்சி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் ஏற்கனவே வந்ததைதானே சுவாரஸ்யம் என்று எடுத்துக் பகிர்கிறேன் கீதா அக்கா?  இதுவரை படிக்காதவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்!

      நீக்கு
  26. விஜய்காந்த் பற்றிய செய்திகள் சில அறியாதவை என்றாலும் மதுரையில் எங்கள் ஓசிபிஎம் பள்ளிக்குப் பின்னால் இருந்த நரிமேட்டில் தான் அவங்க வீடு. அக்கா பிரபலமான பெண் மருத்துவர்னு நினைவு. பையன் அடாவடிக்காரனாகச் சுத்துகிறான் என வீட்டில் உள்ளவர்கள் கவலைப்படுவாங்கனு அவங்க சொந்தக்காரப் பெண் ஒருவர் எங்க பள்ளியில் படிச்சவர் சொல்லிக் கேட்டிருக்கேன். பின்னார் பிரலபம் ஆவார்னு எல்லாம் நினைச்சுப் பார்த்தது இல்லை.

    சிறைச்சாலை படம் பத்தித் தெரியும். பாடல்கள் கேட்டதில்லை. இன்னிக்குத் தான் கேட்கணும். பா.வெ. பகிர்ந்திருக்கும் கல்கியின் கட்டுரை படிச்ச நினைவு இருந்தாலும் எங்கேனு நினைவில் இல்லை. கல்கியில் வந்ததாகத் தெரியலை. உங்கள் ஒன்றுவிட்ட தம்பி உங்கள் ஜாடையில் தான் இருக்கார். நல்லாசிரியர் விருது கிடைக்காட்டியும் அதை விட உயர்வாக மாணவர்களின் பாசமும் மறக்காத நட்பும் கிடைச்சிருக்கேன். ஆனாலும் தைரியமான மனிதர் தான். அவர் எதிர்கொண்டிருந்த சம்பவங்களை நினைச்சாலே பயமாக இருக்கு. நல்லபடியாக பணி ஓய்வு பெற்று அமைதியான வாழ்க்கை வாழட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏரியா தெரியாது.  சிலபேர் டவுன்ஹால் ரோட் பக்கம் இருந்தார் என்றும் சொல்வார்கள்.ஆனால் மதுரைக்காரர் என்று தெரியும்.

      நீக்கு
    2. தம்பி என் ஜாடை என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. நான் அப்படி நினைக்கவில்லை. பாடல்கள் கேட்டீர்களா?

      நீக்கு
    3. இங்கே மத்தியானம் இன்னும் ஆகலை. முற்பகல் பதினொன்றரை மணி தான். சமைத்துச் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கேன். இனிமேல் தான் பாடல்கள் கேட்கணும்.

      அப்புறமா விஜய்காந்த் பற்றி நிச்சயமாக நரிமேடுதான் நல்லாவே தெரியும். அழகர் திருநாள் சமயம் நிறையப் பேருக்கு நீர் மோர், பானகம், சுண்டல் எல்லாம் அவங்க க்ரூப் கொடுப்பாங்கனு மதுரையிலே பேசிப்பாங்க. இதெல்லாம் அவர் நடிக்க வந்த பின்னரே எனக்குத் தெரியும். ஆனால் அவர் நடிக்க வந்ததுமே யார்னு தெரிஞ்சதும் அப்பா ஜாதகத்தையே அலசிட்டார். அண்ணாவுக்கும் தெரியும் எனச் சொல்லி இருக்கார். டவுன் ஹால் ரோடு பக்கம் அதிகம் கடைகளே. வீடுனா கீழே கடைக்கு வாடகைக்கு விட்டுட்டு மாடியில் குடி இருந்த சிலர் மட்டுமே உண்டு. அவர்களில் பெருமாள் தெப்பக்குளத்துக்கு எதிரே இருந்த ரேடியோ பட்டாபி மாமா எங்கள் சொந்தம். நவராத்திரிக்கு நவராத்திரி அவங்களைக் கூப்பிடுவதற்காக அண்ணா/தம்பி துணையுடன் போவேன். மாடியில் இருந்தார் பட்டாபி மாமா.

      நீக்கு
    4. Your brother truly resembles you according to me.

      நீக்கு
    5. Of Course not like Saminatha Barathy. :) you two are very much alike.

      நீக்கு
    6. எனக்கு சட்னு ஈவிகேஎஸ் இளங்கோவன் நினைவு வந்தது

      நீக்கு
    7. // Your brother truly resembles you according to me. //

      நீங்ககளே என் முகம் நினைவில் இருக்காது, பாஸின் முகம்தான் நினைவிருக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்!

      நீக்கு
    8. இப்போத் தான் தினம் தினம் உங்க படத்தை ஸ்டிக்கராக அனுப்பிச்சுட்டு இருக்கிறதை மறந்துட்டீங்க போல! அதோட உங்க அண்ணா தினமும் அவர் படத்தைப் போடுகிறார். அதையும்மறந்துட்டீங்க. இஃகி,இஃகி,இஃகி

      நீக்கு
  27. ஓடிடி படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. முடிஞ்சால் பார்க்கணும். நீங்க சூடு போட்டுக் கொண்டாலும் நன்றாகவே போட்டுக் கொண்டிருக்கீங்க. என்னோட தளத்தில் கூட திருப்பாவைக்குச் சூடு போட்டுக் கொண்டிருந்தீங்க. ஆனால் இதை விடவும் அது நன்றாக இருந்தது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  28. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  29. இரு சம்பவங்களும் மனித மனங்களை படிக்க முடிகிறது.

    //அதில் Albendazole என்று எழுதி 10 ரூபாய் என்று போட்டு வாங்கி இருந்தார்!//

    மறந்து வாங்கினாரா தெரிந்தே வாங்கி கொண்டாரா தெரியவில்லை.

    //ஆமாம்.. 100 ரூபாய் கூட கொடுத்துட்டேன்' என்று சொல்லி வாங்கி கொண்டார்! ரொம்ப அலட்டிக்கொள்ளவில்லை!//

    உங்கள் நேர்மையை பாராட்டி பெற்றுக் கொண்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டை எதிர்பார்க்கவில்லை.  சிறு அதிர்ச்சியை (ஆ..  தப்பா கணக்கு போட்டுட்டேனா?!) சிறு ஆச்சர்யத்தை (அட, கொடுக்கறாரே) எதிர்பார்த்தேன்!

      நீக்கு
  30. கல்கியின் முன்னுரைப்பகுதில் - திருவல்லிக்கேணி அப்பவே இப்படித்தான் இருந்ததா!!! முடுக்கு முடுக்காக...இப்பவும். சென்னையில் இருந்தப்ப அங்கு நிறைய உள்ளார புகுந்து அங்கிட்டும் இங்கிட்டும் புகுந்து சிக்கி.... வெளிய வருவேன்!!..

    //அவற்றோடு “முக்திநெறி அறியாத” என்னும் திருவாசகமும், “மாற்றறியாத செழும் பசும் பொன்னே!” என்னும் அருட்பாவும் பாடப் பெறும்.//

    அட!!! நம்மூரும்! காந்தி ஆசிரமம் திருச்செங்கோடா இல்லை அகமதாபத்ல இருப்பதுக்குப் போனாரா அப்ப அகமதாபாத்ல மட்டும்தானே இருந்திருக்கும்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்செங்கோடு ஆசிரமம் தான் கல்கி போனது.

      நீக்கு
    2. ராஜாஜி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஈ.வே.ரா. கூட அங்கே கொஞ்ச நாட்கள் இருந்தாரோ அல்லது ஏதேனும் விழாவுக்குப் போனாரோ, தெரியலை. சொல்லுவார்கள். ராஜாஜி தன் மகன் மற்றும் மகள் (காந்தியின் மருமகள் லக்ஷ்மி தேவதாஸ் காந்தி) ஆகியோருடன் இங்கேயே தங்கி இருந்ததாக என் அப்பா சொல்லி இருக்கார். காந்தி, நேரு ஆகியோரும் அடிக்கடி வந்திருப்பதாகச் சொல்லுவார்கள். கல்கி இங்கேயே பல மாதங்கள் தங்கி இருந்திருக்கிறார்.

      நீக்கு
    3. கஷ்டம், கஷ்டம், தமிழர்களின் செந்தமிழ் உச்சரிப்பைத் தான் கல்கி அப்படிச் சொல்லி இருக்கார் க்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    4. திருச்செங்கோடு ஆசிரமம் தான் கல்கி போனது.//

      ஓ! அப்ப அவர் சொன்னதின் அர்த்தம் புரிகிறது!

      கீதா

      நீக்கு
  31. ஆசிரமத் தொண்டர்களின் சாரீரம் அவ்வளவு சுகமாயிருக்கும்! ஆசிரமத்தில் எனக்கு ஏதாவது கஷ்டம் இருந்ததென்றால், அது மேற்படி தமிழ்ப்பாடல்களைத் தொண்டர்கள் பாடக் கேட்பதொன்றுதான்.//

    ஹாஹாஹா....ஹிந்திக்காரர்களின் தமிழ் அப்படி இருந்தது என்று சொல்கிறாரோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டம், கஷ்டம், தமிழர்களின் செந்தமிழ் உச்சரிப்பைத் தான் கல்கி அப்படிச் சொல்லி இருக்கார் க்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. சபர்மதி ஆசிரமம் நாங்க ஜாம்நகரில் இருக்கையில் போயிருக்கோம். சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது திருச்செங்கோட்டுக்கும் முன்னாலேயே வந்தாச்சுனு நினைக்கிறேன். ஏனெனில் காந்தி இங்கே சுமார் பதினைந்து ஆண்டுகளாவது இருந்திருப்பார் என்பதோடு தண்டி யாத்திரை தொடங்கிய இடம் எனவும் சொல்லுவார்கள். முன்னாடி ஏதோ ஒரு குஜராத்தித் தொழிலதிபருக்கோ அல்லது வேறே பிரபலத்துக்கோ சொந்தமான வீட்டில் அல்லது மாளிகையில் ஆரம்பிச்ச இந்த ஆசிரமம் பின்னர் சபர்மதி ஆற்றங்கரைக்கு மாற்றப்பட்டதாக ஒரு கூற்று.

      பின்னர் நானும் மாமாவும் மட்டும் மாத்ரு கயா போனப்போ ஒரு தரம் சபர்மதி ஆசிரமம் போனோம். அப்போ மோதி சர்க்கார் அங்கே. ஆசிரமம் பல வகைகளிலும் மேம்படுத்தப்பட்டிருந்ததோடு அல்லாமல் சபர்மதி நதிக்கரையோரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆசிரமத்துக்கு வரி விலக்கு உண்டுனு நினைக்கிறேன். முன்னால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே வரி விலக்கு என்பதாக நினைவு.

      நீக்கு
    3. கஷ்டம், கஷ்டம், தமிழர்களின் செந்தமிழ் உச்சரிப்பைத் தான் கல்கி அப்படிச் சொல்லி இருக்கார் க்ர்ர்ர்ர்ர்ர்ர்//

      ஓ அப்படியா!!!!! கீதாக்கா பாருங்க எனக்கு அது புரியவில்லை!

      கீதா

      நீக்கு
    4. @கீதா அக்கா: இல்லை தமிழர்களின் உச்சரிப்பை அவர் சொல்லவில்லை, அவர்கள் பாடிய விதத்தைதான் சொல்லியிருக்குறார். உச்சரிப்பும் அதில் ஒன்றாக இருக்கலாம்.

      நீக்கு
  32. உங்கள் தம்பி வாசு ஸார் அவர்களுக்கு 40 ஆண்டு பணிக்கும், மாணவ , மாணவிகளால் விரும்ப படும் ஆசிரியராக இருப்பதற்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    //1986 -87 கல்வி ஆண்டில் என்னிடம் 10வகுப்பில் கணிதம் படித்த நிறைய மாணவ மாணவியர் என்னை விட வயதில் மூத்தவர்கள் என்பதனை நான் attendance ரிஜிஸ்டர் மூலம் தெரிந்து கொண்டேன் அதிர்ந்தேன். //

    என் கணவரும் படிப்பு முடித்தவுடன் வேலைக்கு வந்து விட்டதால் அவர்களிடம் படித்த மாணவர்கள் என் கணவரை விட வயதில் மூத்த மாணவர்கள் படித்தார்கள் என்பார்கள். எங்கு போனாலும் அவர்களிடம் படித்த மாணவர்கள் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் அவர்களை பார்த்து உரையாடும் போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே..  எனக்கு சுந்தரகாண்டம் பாக்யராஜும் நினைவுக்கு வருகிறார்.

      நீக்கு
  33. 45 வயதில் சி.ஏ.வில் சேர்ந்த அவர் 50வது வயதில் அதை முடித்தாராம். தற்போது 86 வயதாகும் இவர் இப்போதும் பட்டய கணக்காளராக(chartered Accountant) பணியாற்றி வருகிறார். //

    வாவ்!!!! இந்த வயதில் சி ஏ என்பது கைதட்டி வியக்க வைத்தது! சின்னவங்களே சி ஏ முடிக்க முழி பிதுங்குவாங்க!

    அதுவும் என்னைப் போன்றோர் தலைகீழ நின்னாலும் ம்ஹூம் கிட்ட கூடப் போக முடியாது! அதுக்குத் தனி மூளை வேண்டும். பாட்டி செம ப்ரில்லியன்ட்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சாதனைகள் வேறு தளம் கீதா.

      நீக்கு
    2. இல்லையே பா.வெ. மேடம்.. அவங்க தில்லையகத்து தளத்தைத் தவிர எங்கள் பிளாக் தளத்திலும் நிறைய சாதனைகள் (பதிவுகள், தொடர்கதைகள், சமையல் செய்முறை, கதைகள்) பண்ணியிருக்காங்களே... ஹிஹி

      நீக்கு
  34. ஆலோலம்கிளி தோப்பிலே - அழகான இசையில் ரொம்பப் பிடித்த பாடல். இசையும் சீனும் குரலும்....ரொம்ப பொருத்தமாக அமைஞ்சிருக்கும்...தலைவர் லாலேட்டனுக்காகக் குரலை மாத்தி பாடியிருப்பதைக் கவனிச்சிருப்பீங்க ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் மோகனம் பேஸ்

      கீதா

      நீக்கு
    2. மோகனமாய்த்தான் இருக்கிறது பாடல்.  இந்த ஐந்து நாட்களில் ஐந்து முறை கேட்டு விட்டேன்!

      நீக்கு
  35. கல்கியின் முன்னுரை ஒன்றிலிருந்து சில பகுதிகள் - பானுமதி வெங்கடேஸ்வரன் பகிர்வு, மற்றும் நேர்மறை செய்திபகிர்வு அருமை.
    சிறைச்சாலை பாடல்கள் இனிமை.

    தினமணி கதிர் - 1971 - கடுகு தாளிப்பு பகுதி பகிர்வு நன்றாக இருக்கிறது.



    பதிலளிநீக்கு
  36. செம்பூவே என்ன ஒருஹை பிச்சில் தொடக்கம்.....தலைவர் லாலேட்டனுக்கு ஏற்ப லாலேட்டன் பாடுவட்து போலவே இருக்கும்.....சூப்பர் பாடல் ரொம்ப ரசித்த பாடல் இப்பவும்..ரசித்தேன்

    ரெண்டும் இப்பவும் ரசித்தேன் ஸ்ரீராம்.

    செம்பூவே சுத்த தன்யாசி பேஸ்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  சுத்த தன்யாசியா...  நம்ம அந்த சு த லிஸ்ட்டுல சேர்த்துடலாம்!

      நீக்கு
  37. ஈ வே ராவின் போராட்டத்தை நம்பி நிற்காமல் எப்போதோ கர்ப்பகிரகத்தில் பொடி நுழைந்து விட்டது.//

    அர்ச்சகர்களும் விதிவிலக்கல்ல என்று அர்த்தமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்திருக்கிறேன், ஸ்ரீராம். எனவே நான் அங்கு தீர்த்தம் வாங்கிக் கொள்ள மாட்டேன்!!!!

      கீதா

      நீக்கு
    2. இருக்கலாம். நான் பார்த்ததில்லை.

      நீக்கு
  38. ஆசிரியப் பணியின் இக் கால சிக்கல்கள் புரிந்தது.

    பொருட்கள் வாங்கிய பில் மகள் எப்பொழுதும் செக் பண்ணிவிடுவாள்.

    ஜோக்ஸ் ரசனை. அப்புசாமி பல காலத்தின் பின் கண்டோம்.

    பார்த்து குழம்பிப் போகும் படம் . நன்றி. நாங்கள் பார்க்க தயாரில்லை.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி..  நீங்கள் தாராளமாக ஒருமுறை அந்தப் படத்தைப் பார்க்கலாம்.

      நீக்கு
  39. சிகரெட்டும் சுருட்டும் பொடியும் புகையிலையின் குழந்தைகள்தான்//

    அதே இதுவும் போதைதான். இதற்கு அடுத்து பஃப் உண்டே. கஞ்சா அடுத்த ஸ்டெப்...இப்படி.

    பொடி போடுபவர்களைக் கண்டால் தள்ளி நிற்பேன். அந்த மணம் ஒரு மாதிரி இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.... எங்கள் தாத்தா - கௌ அண்ணாவோட அப்பா பொடிப் பிரியர்தான்.

      நீக்கு
    2. கௌ அண்ணா சொல்லியிருந்த நினைவு.

      கீதா

      நீக்கு
    3. கெளரவ அண்ணா..??? உங்களுக்கு அவர் மாமா இல்லையா?

      நீக்கு
    4. கீதா அவரை அப்படிதான் அழைப்பார்!

      நீக்கு
  40. விஐ பிக்கள் கூட இதிலிருந்து ட்தப்பவில்லை போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாமி சின்மயானந்தா கூட பொடி பாடுவார்.

      நீக்கு
    2. சிலபேர் பொடிவைத்து பேசுவாங்க..  அது கணக்குல வருமான்னு தெரில...

      நீக்கு
  41. கொடுமை வாக்கியங்கள் - சரிதான். சமீபத்தில் நேரில் நடந்த ஒன்று. உறவினர் ஒருவரின் அம்மா முதியோர் இல்லத்தில் இருந்தவர் இறந்துவிட்டார், துக்கம் விசாரிக்க வந்தவர் கேட்டது அப்பாவித்தனமாக. "அம்மா வீட்டில் வைத்து போனாரா? ஹோம்லயே போய்ட்டாரா"

    நார்மலாக துக்கம் விசாரிப்பவர்கள், எதிராளியின் மூட் தெரியாமல் ஏதாவது பேச கேட்க வேண்டுமே என்று கேட்பது. இப்படிக் கேள்விகள் கேட்பது...

    உறவினருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் கோபம் குற்ற உணர்வில் வந்த கோபம்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  42. வியப்பு - பற்றி கொடுமையான வாசகங்களா!!!

    கடுகு பகுதியை ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  43. கணவர் மீது சிமென்ட் போட்டு பூசிமெழுகி!!!!!

    அடப்பாவி!!

    கீதா

    பதிலளிநீக்கு
  44. “இன்னும் ரெண்டு வாய் சாப்பிட்டுவிட்டு வந்துடுறேன். ரொம்பப் பசிக்குது” என்கிறார். அதெல்லாம் ஆகிற கதையில்ல” என்று கையைப் பிடித்து இழுத்து சென்றார். “ஏங்க மனுஷன் கஷ்டப்படுறது.. சம்பாதிக்கிறது எல்லாமே வயிறாரச் சாப்பிடத் தானேங்க?” என்று அழாத குறையாகக் கேட்டார். எதுவும் காதில் விழாத மாதிரி .....///\

    இதுதான் அவரை பின்னாளில் யார் வந்தாலும் பசியாறிட வேண்டும் என்று செய்ய உந்துசக்தியாக இருந்திருக்கிறது. அடுத்த வரியில் அதுவும் தெரிந்துவிட்டது,

    அவர் அலுவலகம் சென்றாலே சாப்பிடாம யாரையும் அனுப்பமாட்டாராம்.

    அன்று அப்படி அதன் பின் அவருக்கு என்ன ஒரு மரியாதை கிடைக்கும்படியான இடத்திற்கு உயர்ந்தார்!!!

    90களில் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குக் கதவு திறந்து விட்டு அவர்களின் திறமையைப் பயன்படுத்திக்கொண்டார்//

    இந்தப்படம் தானே ஊமைவிழிகள் ஆபாவாணன் திரைப்படக் கல்லூரி மாணவர் அப்ப.

    //வருமான வரி செலுத்துவதில் அத்துறையிடமிருந்து பாராட்டுப் பெற்றவர் விஜயகாந்த்.//

    இதுவும் வாசித்த நினைவு. இப்ப தூக்கி வைச்சுக் கொண்டாடுகிறார்கள் அரசியலில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் முதன் முதலில் அரசியலுக்கு வந்தபோது நான் அவருக்குதான் வாக்களித்தேன்.

      நீக்கு
    2. . சூப்பர் ஸ்ரீராம். உண்மையிலேயே நல்ல மனசுள்ள மனிதர். அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருக்கலாம் மக்கள் இப்ப புலம்பி நோ யூஸ். அவர் பந்தாடியிருப்பார் இப்ப உள்ளவங்களை!

      கீதா

      நீக்கு
    3. அவருடைய சாலிகிராமம் வீட்டில் அவர் இருந்தவரை தினசரி அன்னதானம் உண்டாம். திரையுலகில் வாய்ப்பு தேடி அலைந்த பலருக்கு அது உதவியிருக்கிறதாம்.

      நீக்கு
    4. இப்போது அவர் மனைவி ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் இவர்கள் சொத்தை மீட்கத்தான் என்றொரு பேச்சு நிலவுகிறது.

      நீக்கு
  45. ஸ்ரீராம், திருவெம்பாவை பாடலுக்கான இன்றைய வார்த்தைகளில் எழுதியது சூப்பர். நான் அங்கும் வாசித்தேனோ என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ நன்றி கீதா.  நெல்லை சந்தேகப்பட்டிருந்தார் அது AI யோ என்று.  இதை செல்வாண்ணா தளத்தில் எழுதிய நினைவு,.

      நீக்கு
    2. ஆமாம் நினைவிருக்கு ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  46. சிக்கலான கதை - ஹாஹாஹா நான் பார்த்துக் குழம்பமாட்டேனே!!!! வாய்ப்பு வருவது அ பூ ர் வ ம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்றும் ஒரு படம் பார்க்க மார்க் செய்து வைத்திருக்கிறேன். பார்ப்போம்.

      நீக்கு
  47. அம்மாவும் மகளும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    அப்புசாமிக்குப் பாட்டியின் டைப் தட்டும் சத்தம் செய்ய வைத்தோ?

    எழுத்தாளரின் பீரோ - புன்சிரிப்பு!

    பத்திரிகை ஆசிரியர் சர்வே சிரிப்பு வந்துவிட்டது, ஏனென்றால் நானும் பழைய புத்தகக்கடை என்று நினைத்து வரும்போது அடுத்த ட்விஸ்ட்!!!

    மாணவன் பதில் - ஜோக் என்று இல்லாமல் அதை பையனின் தன்னம்பிக்கை என்றுதானே எடுத்துக் கொள்ள முடியும் அட என்று. சிரிப்பில்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
  48. இரு பாடல்களும் கேட்டேன். ஆலோலம் கிளி என்னைக் கவர்ந்தது. தபுவும் மேக்கப்பும் தான் பொருந்தவே இல்லை. தபு உடல் மட்டுமில்லாமல் மனதளவிலும் முதிர்ச்சி அடைந்தவர். இத்தகைய காதல் காட்சிகளில் கொஞ்சம் சிரமப்பட்டுத் தான் பொருத்திப் பார்க்க முடிகிறது. இதே போல் இன்னொரு தமிழ்ப்படமும் அவர், ஐஸ்வர்யா ராய், அக்கா, தங்கை?யாக நடித்து வந்திருந்தது. அதிலும் தபுவின் காரக்டர் என்னைக் கவரவில்லை. ரொம்பப் பழைய படம்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படம் என்று நினைக்கிறேன். தபு பற்றி நீங்கள் நினைப்பதுதான் நான் நினைப்பதுவும்!

      நீக்கு
  49. அதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சி அடைய செய்தது.

    Prime video vil ஒரு படம் பார்த்தேன் கொடுமைக்கார கணவனிடமிருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் அவர் செய்யும் காரியம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது வங்காள படம் தமிழில் டப் செய்யப்பட்டது.
    மோனா ஆக்டிங் போல அவர் ஒருத்தரே நடித்தார்.

    அப்புசாமி, சீதாபாட்டி படங்கள், மற்றும் நகைச்சுவைகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பெயர் சொல்லி இருந்தால் பார்க்கலாமா என்று பார்த்திருப்பேன்! நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  50. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. கூறப்போனால் எப்போதும் விட அருமையாக உள்ளது.

    நாங்களும் எப்போதும் ஒரு பொருள் வாங்கினாலும். உணவகத்திற்குச் சென்றாலும் புல் செக் செய்வது வழக்கம். நீங்கள் உணவகத்தில் நேர்மையாக அங்கு நடந்து கொண்ட செயல் பாராட்டுக்குரியது. தங்கள் மகனின் திருமண அழைப்பிதழ் அனைவருக்கும் தந்து முடித்து விட்டீர்களா? அனைத்தும் நல்லபடியாக நடக்க என் அன்பான வாழ்த்துக்கள். திருமணம் சேலத்தில் வைத்து என நினைக்கிறேன்.

    தங்கள் சகோதரர் வாசு அவர்களைப்பற்றி படித்து தெரிந்து கொண்டேன். சிறப்பான ஆசிரியராக பணியாற்றும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் பகிர்ந்த செயல்கள் இரண்டும் நன்றாக உள்ளது. 86 வயதிலும் பணியாற்றும் பாஸிடிவ் செய்தி கவர்கிறது.

    தங்களின் பாசுர கவிதை அருமை. படித்து ரசித்தேன். காலையில் வர இயலவில்லை. எனவே தாமதம். மன்னிக்கவும்.

    அந்த எகிப்து மனைவியின் செயல் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்தக்கால திரைப்படமொன்றில் (மணாளனே மங்கையின் பாக்கியம்) ஜெமினியின் உடல் முழுவதும் சாபத்தினால், சிறிது சிறிதாக கல்லாக மாறுவதை கண்டு தெய்வங்களிடம் பக்தியுடன் பரிகாரம் கேட்டு கதறி அழும் அஞ்சலி தேவி நினைவுக்கு வந்தார். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை திரையில் கண்டு மனம் கசிந்து வேதனையடைந்த நாம் இப்போது நிஜத்தில் இப்படியான பெண்களையும் காண்கிறோம். எல்லாம் காலம் செய்யும் கோலமா?

    ஜோக்ஸ் அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தையும் படித்து கருத்து தெரிவித்திருக்கும் கமலா அக்காவுக்கு மெனி தேங்க்ஸ்!

      நீக்கு
    2. அவ்வளவுதானா.?

      நீக்கு
    3. மகனின் திருமண அழைப்பிதழ் தரும் படலம் நடந்து கொண்டிருக்கிறது.  ஜூன் 11 ஆம் தேதி சேலத்தில் திருமணம்.  13 ஆம் தேதி சென்னையில் வரவேற்பு.  அவசியம் வாருங்கள்.  உங்கள் அலைபேசி நம்பர் கிடைத்தால் பத்திரிகை அனுப்புவேன்.

      நீக்கு
    4. அப்படியா.? விபரம் அறிந்து கொண்டேன். திருமண நிகழ்வு எங்கு என ஒரு சந்தேகம் வந்ததால் எங்கு திருமணம் என உரிமையுடன் கேட்டேன். சேலம் என்றால் அருகில்தான். ஆனால் குழந்தைகளுக்கு பள்ளி திறந்து விடும். என் குழந்தைகளின் உதவியின்றி என்னால் தனியாக வர இயலாது ஆனால், இந்த சாக்கிலாவது வரவும், நம் நட்புகள் அனைவரையும் சந்திக்கவும் ஆசை. கண்டிப்பாக முயல்கிறேன். தங்கள் மகன் மருமகளுக்கு என்றும் என் மனம் நிறைந்த ஆசிகள்.

      நீக்கு
    5. __/\__

      விவரம் கேட்டதில் இப்படி ஒரு ஆபத்து வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்! இல்லையா?!

      நீக்கு
    6. ஹா ஹா ஹா. இதில் ஆபத்து என்ன உள்ளது? நான் கேட்டவுடன் என்னையும் மதித்து நீங்கள் உங்கள் மகனின் திருமணத்திற்கு அழைத்ததை கண்டு சந்தோஷமாக இருந்தது. உடனே எங்கள் மகளிடம் சொல்லி மகிழ்ந்தேன்.

      நீக்கு
    7. வணக்கம் பானுமதி சகோதரி.

      என் கருத்தைப் பார்த்ததும் உடனே பதில் சொன்ன தங்களுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    8. //கண்டிப்பாக முயல்கிறேன்// க.ஹ. மேடம்... வருடத்துக்கு இந்த மாதிரி மூன்று நாலு முறை தமிழகம் (அல்லது சென்னை, சேலம் போன்றவை) சென்றுவந்தால், நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல, நம் பெங்களூரின் அருமையைப் புரிந்துகொள்ளலாம். ஹாஹா.

      நீக்கு
  51. வணக்கம் சகோதரரே

    பதிவில் இன்னமும் நிறைய கருத்துக்கள் சொல்ல களைகளை பற்றிக் விட்டுப்போச்சு. சிறைச்சாலை பாடல்கள் கேட்ட நினைவு. இப்போதும் கேட்டு மகிழ்ந்தேன்.

    மூக்குப் பொடி போடுவர்களை பற்றிய அலசல் நன்றாக இருக்கிறது.( சிலர் எப்போதும் எதற்கும் பொடி வைத்துப் பேசுவார்கள் அவர்களை விட இவர்கள் எவ்வளவோ தேவலாம்.)

    நீங்கள் பகிர்ந்த படங்களை எப்போது பார்க்கப் போகிறோனோ தெரியவில்லை.

    இப்போது இங்கு நல்ல மழை பெய்கிறது. நேற்றும் அப்படியே..! ஆனாலும் வெப்பம் மிகுதியாக உள்ளது. சென்னயில் மழையா? அதனால் உடல் அலுப்பு, சதிகள் " பல்"வேறு வலிகள். ஜோக்ஸ் அனைத்தையும் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் அனைவரும் நல்லவர்கள்.  மழை பெய்கிறது.  நானிருக்குமிடத்தில் வெக்கை.

      நீக்கு
    2. ஆனால் இயற்கை நல்லவர்களை விட அதீதமான வெப்பத்தைத்தான் குளிர்விக்க ஆசை கொள்ளும். இங்கு ஒருமாதமாக வெய்யிலும் அதிகம்.

      நீக்கு
  52. கல்கியின் முன்னுரை ரசித்தேன். நல்ல பகிர்வு.

    வயதான பிறகு முயற்சி எடுத்து சிஏ முடித்த சிலரை எனக்குத் தெரியும்.

    ஆனால் சிஏ பரீட்சையில் பாஸ் பண்ணுவது என்பது லாட்டரி பரிசு போன்றது என்பது என் எண்ணம். லாஜிக் இல்லாத தேர்வு என்றால் அது சிஏ பரீட்சை ஒன்றுதான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!