12) பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?
நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.
எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரை யாவது மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்
ஏமாற்றிக்கொண்டு என்று...
ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.
அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.
டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்
அப்போதுதான் ஆரம்பிக்கிறது. அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து சிறிது நேரம் நிற்கும் போது பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார். சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார். தினமும் ஏதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.
அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர் பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக. ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார். ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.
போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.
இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.
இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். [முகநூல்]
13) படித்தது பத்தாம் வகுப்பு; பேசப்போவது ஐ.நா.,சபை இளைஞர் மாநாட்டில்!
""பத்து மார்க் குறைஞ்சதுக்கெல்லாம் இப்போ "சூசைடு' பண்ணிக்கிறாங்க பசங்க.
பத்தாம் வகுப்புல நான் எடுத்த மொத்த மார்க்கே 150தான்; ஒரு பாடத்துலயும்
"பாஸ்' ஆகலை; அதுவரைக்கும் எப்படி "பெயில்' ஆகாமப் படிச்சீங்கன்னு
கேக்குறீங்களா? டீச்சர்களுக்கு மத்த பசங்க "டீ' வாங்கிட்டு வந்தா, சூடே
இருக்காது; ஆனா, நான் வாங்குன நொடியில, "சிட்டா' பறந்து வந்து "ஹாட்டா' கொடுப்பேன். அதுக்காகவே, ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் என்னைய "பாஸ்' போட்டு விட்டாங்க.
எந்த வேலை செஞ்சாலும், அதை ஈடுபாட்டோட செய்றதுதான் என்னோட வழக்கம். அந்த
ஈடுபாடுதான், ஐ.நா.,சபை இளைஞர்கள் மாநாட்டுல, எனக்குப் பேசுற வாய்ப்பை
வாங்கிக் கொடுத்திருக்கு...'' என, யதார்த்தமாய் பேசுகிறார் நித்யானந்தன்
41. ஏதோ, பத்தாம் வகுப்பில் "பெயில்' ஆகி, அதன்பின் படித்து, பெரிய
பொறுப்புக்கு வந்ததால், ஐ.நா., சபை இளைஞர்கள் மாநாட்டில், அவரைப் பேச
அழைத்திருப்பார்கள் என்று, அவசரப்பட்டு யோசிக்க வேண்டாம். இப்போது
வரையிலும், அவரது அதிகபட்ச கல்வித் தகுதியே அதுதான். அப்புறம் எப்படி
சாத்தியமானது இந்த சாதனைப் பயணம்...?.
""படிப்புதான் வரலையே தவிர,
சின்ன வயசுல இருந்தே ஊருக்கு ஏதாவது செய்யணும்கிற ஆசை நிறையவே
இருந்துச்சு. எய்ட்ஸ் விழிப்புணர்வு பணியிலதான் என்னோட சமூகசேவை
ஆரம்பிச்சது. கோவை மாவட்டத்துல 440 கிராமங்கள்ல எய்ட்ஸ் விழிப்புணர்வு
பிரசாரம் பண்ணுனேன்.
அப்ப இருந்தே, நான் செய்யுற எல்லா
வேலையையும் "டாக்குமென்ட்' பண்ண ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு,
கலெக்டர் முருகானந்தம் பாராட்டுனாரு. அடுத்ததா மகளிர் சுய உதவிக்குழு,
இளைஞர் சுய உதவிக்குழு அமைக்கிற பொறுப்பு கிடைச்சது. மகளிர், இளைஞர்களுக்கு
தன்னம்பிக்கை கொடுக்கிற நிகழ்ச்சிகள் நிறைய நடத்துவேன். ஊர் ஊர்ன்னு
அலைஞ்சு, அடிக்கடி "லீவு' போட்டதுல, நான் வேலை பார்த்த கம்பெனியில என்னை 7
தடவை"சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க.
கடைசியா, "டிஸ்மிஸ்' ஆகுற நிலைமையிலதான், எங்க முதலாளி (எல்.எம்.டபிள்யு.,நிறுவனம்)
ஜெயவர்த்தனவேலு சாரைப் போய்ப் பார்த்து, "இந்த வேலையெல்லாம் நான்
செய்யுறேன்'னு சொன்னேன். அவர் அதெல்லாம் பார்த்துட்டு, "நீ நாட்டுக்கு வேலை
பாரு. உனக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன்'னு சொல்லி அனுப்பிட்டாரு.
அதுலயிருந்து முழு நேரமும் ஊர் வேலைதான்...'' என, தனது பணிக்கு சாட்சியம்
சொல்லும் "கனமான' ஆவணங்களைப் புரட்டிக் காண்பித்தபடியே, பேசுகிறார்
நித்யானந்தன்.
பெற்றோர், மனைவி, இரு குழந்தைகளுடன் கோவை
சிங்காநல்லூரில் வசிக்கும் இவருக்கு இன்று வரையிலும் வறுமைதான் அடையாளம்.
இதுவரை, தனது மனைவி கவிதாவின் நகையை 17 முறை அடகு வைத்திருப்பதையும்
ஆவணப்படுத்தியிருக்கிறார். இலக்குகளோ, எதிர்பார்ப்புகளோ வைக்காமல் இவர்
செய்த சமூகசேவை, எப்படியோ மத்திய அரசின் உளவுத்துறையை எட்டியிருக்கிறது.
அவர்கள் வந்து, இவரைப் பற்றியும், இவரது குடும்பத்தைப் பற்றியும்
விசாரித்துச் சென்றனர்.

அவரும் அதை மறந்து விட்ட நிலையில்,
கடந்த ஆண்டில் அமெரிக்காவிலிருந்து வந்தது அழைப்பு. வாஷிங்டன்னில்
கிளிண்டன், ஹிலாரி கிளிண்டன் உட்பட 196 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற
சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில், இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்; எய்ட்ஸ்
விழிப்புணர்வு தொடர்பான இவரது ஆய்வுக்கட்டுரையும் சமர்ப்பிக்கப்பட்டது.
ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், வரும் ஆக.,7, 8 மற்றும் 9 ஆகிய 3
நாட்கள், ஐ.நா.,சபை தலைமையகத்தில் நடக்கவுள்ள ஐ.நா.,சபையின் 12வது
இளைஞர்கள் மாநாட்டில், உரையாற்றுவதற்கான அழைப்பு, நித்யானந்தனுக்கு
வந்துள்ளது. 26 வயது வரையுள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த இளைஞர்கள்
மாநாட்டில், 41 வயதில் பங்கேற்கும் இளைஞர் இவர் மட்டுமே.
அங்கு
தனது 20 ஆண்டு கால சேவையை விளக்கவுள்ளார் நித்யா. இவருக்கான உரையைத்
தயாரிக்க உதவுகிறார், தலைமைச்செயலகத்தில் கல்வித்துறையில் பணியாற்றும்
பாலுசாமி. நித்யானந்தனின் இப்போதைய கவனமெல்லாம், மரங்களின் மீதுதான்.
"சிறுதுளி', "ராக்' அமைப்புகளின் உதவியுடன் அரசூரில் 10 ஏக்கர் பரப்பில்
மரப்பூங்காவை விதைத்துள்ள இவர், அடுத்ததாக மயிலம்பட்டி கிராமத்தில் 20
ஏக்கரில் சோலையை உருவாக்க, களம் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்கா சென்று வந்த பின், காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும்
அங்கேதான் இருப்பேன் என்று சொல்லும் நித்யானந்தனுக்கு காத்திருக்கின்றன
இன்னும் பல கவுரவங்கள்.
நீங்களும் அழைத்து ஒரு வாழ்த்து சொல்லுங்களேன்...95667 57074.
14) நீர்நிலைகள் தோறும் வளர்ந்து நிற்கும் ஆகாயத்தாமரையிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம்.
திருத்துறைப் பூண்டியை அடுத்த ஆதிரெங்கத்தில் உள்ள இயற்கை வேளாண்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆர். ஜெயராமன் , நம்
முன்னோர்கள் எருக்குழியில் இட்டு மக்க வைத்து உரமாகப் பயன்படுத்தினர் எனக்
கூறுகிறார்.
தற்போது இதை 4 அடி அகலம் , 15 அடி நீளத்தில் 6 அடி உயரத்துக்கு ( ஒரு அடி
உயரத்துக்கு ஒரு முறை ) ஆகாயத்தாமரை செடிகளைப் பரப்பி அதன் மீது மாட்டுச்
சாணம் அல்லது மக்கிய தொழு உரத்தைத் தூவவேண்டும். இவ்வாறு ஆறு அடுக்குகளாக
அடுக்கி வைத்து வாரம் ஒரு முறை ஒரு மாதத்துக்குத் தண்ணீர் தெளிக்க
வேண்டும். அப்போது 6 அடி உயர அடுக்கு 3 அடியாகக் குறைந்துவிடும்.
அப்போது இதில் ஒரு கிலோ மண்புழுவை இட்டு மேல்புறத்தில் மாட்டுச் சாணம்,
வெல்லம், புளித்த தயிர் ஆகியவை கொண்ட கலவையைத் தெளிக்க வேண்டும். இதைத்
தின்று இனப்பெருக்கும் செய்யும் மண்புழுக்கள் மக்கிய ஆகாயத்தாமரையைத்
தின்று வெளியேற்றும் கழிவு நல்ல தரமிக்க உரமாகும்.
இது விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயன்படும் என்பதால்
இங்கே பகிர்ந்தேன். ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
மையத்தில் இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்பு எண் 94433 20954.
15) மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் காலிபர் வழங்கும் முகாம்.
Camp provides artificial limbs and caliper.
விபத்தினால் கால்களை இழந்த மற்றும் போலியோவினால் நடக்க இயலாத குழந்தைகலுக்கு செயற்கை கால்கள் மற்றும் காலிபர் வழங்க 10/08/2013
சனிக்கிழமை அன்று சென்னையில் அண்ணாநகரில் உள்ள அகவாழ் அறக்கட்டளை சார்பில்
முகாம் நடைபெற உள்ளது. அன்று அளவேடுக்கப்படும் தகதியுள்ள 50 பேர்களுக்கு,
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் செயற்கை
கால்கள் மற்றும் காலிபர் வழங்ப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
ஏ.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட், AC -124, சாந்தி காலனி மெயின் ரோட், அண்ணாநகர் சென்னை- 600 040.
தொலைபேசி:- 044-26264661,
கைப்பேசி: 98400 66111, 99414 66478.
A.C.Agarwal Charitable Trust, AC - 124, Santhi Colony Main Road, Anna Nagar, Chennai - 600 040.
Phone:- 044-26264661,
Cell: 98400 66111, 99414 66478.
**********************************
பார்வையற்றோருக்கு இலவச கணினி பயிற்சி.
பார்வையற்ற
மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில்,
சென்னையில் ஓராண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில்
கம்ப்யூட்டர் திறன் வளர்ப்பு பயிற்சி,ஹிந்தி பேச்சு பயிற்சி வகுப்பு
நடத்தப்படும். பயிற்சி காலத்தில் தங்குமிடமும், மாதம் 200 ரூபாய்
ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.இந்த மாதம் ஆகஸ்ட் 15ந் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, கீழ்காணும் மொபைல் எண்களில் தொடர்புக் கொள்ளுங்கள்.
94445 49865
89257 67989
**
இதை வாசிக்கின்ற நண்பர்கள் அனைவரும், தங்கள் பக்கங்களில் மறுபதிவு
இடுவதுடன், உங்களுக்கு தெரிந்த, தமிழ்நாட்டை சேர்ந்த பார்வையற்ற
மாற்றுத்திறனாளிகள் இருப்பின் தகவல் தெரிவித்து பயனடைய செய்யும்படி
பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
[முகநூலில் சீனா ஸார் share செய்திருக்கும் தவப்புதல்வன் பத்ரிநாராயணன் பக்கத்திலிருந்து]