உப்பு, பெருங்காயம், காரப்பொடி சேர்த்துத்....
தனியாக ரோஸ்ட் போலச் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக அல்லாமல் சற்றே பெரிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
குடைமிளகாயை நீளவாக்கில் அழகாக நறுக்கிக் கொண்டு,
வெங்காயத்தை முதலில் வாணலியில் போட்டு லேஸாக வதக்கிக் கொண்டு, பின் குடைமிளகாயையும் அதில் சேர்த்து, உப்புச் சேர்த்து அரை வதக்கலாய்ப் புரட்டிக் கொள்ளவும்.
காத்திருக்கும் சுவைஞர்களுக்கு தட்டில் போட்டுச் சாப்பிட வைக்கவும்!
வடைக் குழம்பு செய்திருந்தோம். அதற்குத் துணையாக இதைச் சாப்பிட்டோம்.
நேற்று இரண்டாம் முறை இதே காம்பினேஷனில் முயற்சித்தபோது கேரட்டைத் துருவிச் சேர்த்தோம். கேரட் அதிகமாய்ச் சுருண்டு நான் எதிர்பார்த்த நிறம் தரவில்லை!











