திங்கள், 3 அக்டோபர், 2016

"திங்க"க்கிழமை 161003 :: உருளைக்கிழங்கு குடைமிளகாய் கறி.
உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துக் கொண்டு உப்பு, பெருங்காயம், காரப்பொடி சேர்த்துத்.... 
தனியாக ரோஸ்ட் போலச்  செய்து கொள்ளவும்.  
வெங்காயத்தைப் பொடியாக அல்லாமல் சற்றே பெரிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.  
குடைமிளகாயை நீளவாக்கில் அழகாக நறுக்கிக் கொண்டு, 
வெங்காயத்தை முதலில் வாணலியில் போட்டு லேஸாக வதக்கிக் கொண்டு, பின் குடைமிளகாயையும் அதில் சேர்த்து, உப்புச் சேர்த்து அரை வதக்கலாய்ப் புரட்டிக் கொள்ளவும்.

சற்றே மொறுமொறுவென்று இருக்கும் உருளைக்கிழங்கு ரோஸ்ட்டில் இதைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி விடவும்.  மொறுமொறுவென்ற உருளைக்கிழங்குடன், குடைமிளகாய் வெங்காயம் இணைந்து சுவைகூட்டும்.காத்திருக்கும் சுவைஞர்களுக்கு தட்டில் போட்டுச் சாப்பிட வைக்கவும்!வடைக் குழம்பு செய்திருந்தோம்.  அதற்குத் துணையாக இதைச் சாப்பிட்டோம்.


கவர்ச்சியாக நிறமாக,  இதில் இன்னும் ஒரு சுவையையும், நிறத்தையும் சேர்க்க, கறியில் பீட்ரூட்டைச் சேர்க்கலாம் என்கிற என் யோசனை நிராகரிக்கப்பட்டது என்பதை இங்கு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்!நேற்று இரண்டாம் முறை இதே காம்பினேஷனில் முயற்சித்தபோது கேரட்டைத் துருவிச் சேர்த்தோம்.  கேரட் அதிகமாய்ச் சுருண்டு நான் எதிர்பார்த்த நிறம் தரவில்லை!

 
46 கருத்துகள்:

 1. பார்த்தாலே உண்ணத் தூண்டுகிறது.சுவைகளில் உருளைக்கே முதலிடம்

  பதிலளிநீக்கு
 2. பார்த்தாலே உண்ணத் தூண்டுகிறது.சுவைகளில் உருளைக்கே முதலிடம்

  பதிலளிநீக்கு
 3. விதவிதமாக செய்து கலக்குறீங்க......குட்.... அப்படியே உங்க வீட்டு விலாசத்தையும் இங்கே சொல்லீட்டிங்கன்னா அங்கு ஆஜர் அவதற்கு வசதியாக இருக்குமே?

  பதிலளிநீக்கு
 4. வித்தியாசமான ஒரு சமையல் குறிப்பு...
  செய்து பார்த்திடலாம் அண்ணா...

  பதிலளிநீக்கு
 5. அசத்தல் கறி. விளக்கமாச் சொல்ல அப்புறம் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. செய்முறையும் விளக்கப் படங்களும் மிக அருமை. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. குடமிளகாய் வைத்து முயற்சி செய்கிறேன்! பஜ்ஜி மிளகாயை உபயோகித்து இதுபோல செய்தேன், நன்றாக இருப்பதாக என் கணவர் பாராட்டினார்!!
  வடைக்குழம்பு?

  பதிலளிநீக்கு
 8. Baby Potato - இதுல வெறும்ன ரோஸ்ட் செய்து சாப்பிட்டாலே மிகவும் அருமையாக இருக்கும். எனக்கு வெறும் மோர் சாதத்துக்குத் தொட்டுக்க 'நல்லா இருக்கும். மோர்க்குழம்பு, சாத்துமது சாதத்துக்கும் நல்ல காம்பினேஷன். இங்கல்லாம் ரொம்ப அபூர்வமாக வரும். சில சமயம் பேபி பொட்டட்டோ வாங்கி, அது கொஞ்சம் இனிப்பு இருப்பதாக அமைந்த கூத்தெல்லாம் நடந்திருக்கு.

  அதுல குடமிளகாய் சேர்த்திருக்கீங்க.. வெங்காயமும் சேர்த்திருக்கீங்க.. மாலைல கேரட்டையும் துருவிப் போட்டு முயற்சித்திருக்கீங்க... டிரெடிஷனலாப் போடற கடுகு, உ.பருப்பையும் காணோம். ஒருவேளை, Naan, சப்பாத்திகளுக்கு நல்லா இருக்குமா? இதுலவேற, வடை குழம்பு சாதத்துக்குத் தொட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நல்லா இருந்ததா?

  பதிலளிநீக்கு
 9. அநேகமா வாரம் ஒரு முறை சப்பாத்திக்கு சைட் டிஷாகச் செய்வது! அலுத்துப் போச்சு! :) ஆனால் வெங்காயம் சேர்ப்பதில்லை என்பதோடு உ.கியை முதலில் வறுத்துக்கொண்டு அப்புறமாக் குடைமிளகாயைச் சேர்ப்பது எல்லாம் இல்லை. எண்ணெயில் கடுகு, ஜீரகம், சோம்பு தாளித்துக் கொண்டு குடைமிளகாயப் போட்டு வதக்கிக் கொண்டு உ.கியைச் சேர்த்துக் கொஞ்சம் வதக்கிய பின்னர் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்ப்பேன். எப்போவானும் இறக்கும்போது கரம் மசாலா கால் ஸ்பூன்! கொத்துமல்லி நிறையத் தூவுவேன்.

  பதிலளிநீக்கு
 10. நன்றாக இருக்கிறது குடைமிளகாய் , உருளை கறி.

  பதிலளிநீக்கு
 11. அருமையான் உ.கிழங்கு படங்கள். எனக்கு உ.கிழங்கோடு எதுவும் வேண்டாம்.
  அதே மதி. காப்சிகம்,வெங்காயம் நல்ல காம்பினேஷன் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 12. விதவிதமாகக் கலர் கலவைகிடைக்கிறது. ருசியும் கூடுகிறது. சிவப்பு நிறகாப்ஸிகம் சேர்த்தால் இன்னும் அழகாக வரும். ரோஸ்ட்டான உருளைக்கிளங்கை கொஞ்ஜம் மிருதுவாக மாற்ற முயற்சி செய்து விடுகிறது. வாணலியிலிருந்து நேராக தட்டிற்கு வந்தால் எள்லாருக்கும் இருக்கா என்று கேட்டுக் கொண்டே போட்டுக்க வேண்டியதுதான். கீதா அவர்கள் மாதிரி நான் முலிலையே சேர்த்துதான் வதக்குவது வழக்கம். நீங்கள் கைதேர்ந்த சமையல் வல்லுனர் போலத் தெரிகிரது. ஸந்தோஷம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 13. எல்லாருக்கும், எள்லாருக்குமாக பதிவாகி விட்டது.வரவர அவஸரம் தப்பு விழுகிறது.அன்புடன்

  பதிலளிநீக்கு
 14. ஆஹா...நம்ம சுவை....இதே இதே சப்பாத்தி, naan, குல்ச்சா எல்லாத்துக்கும் செய்வதுண்டு...சூப்பர்..டிஷ்...குடையை அதிகம் வதக்காமல் செய்வது ஒரு சுவை....உங்கள் டிஷ் செம கலர்....கலக்குறீங்கப்பா....!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 15. ஸ்ரீராம் சின்ன உ கி அதான் குழந்தை உ கி...அதுல.rost டசூப்பரா இருக்குமே... நீங்க செய்யாததா....

  ஹை வடை குழம்பு ஸ்ஸ்ஸ்ஸ்பா. நாக்கில் நீர் வருது....

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஆஹா...நம்ம சுவை....இதே இதே சப்பாத்தி, naan, குல்ச்சா எல்லாத்துக்கும் செய்வதுண்டு...சூப்பர்..டிஷ்...குடையை அதிகம் வதக்காமல் செய்வது ஒரு சுவை....உங்கள் டிஷ் செம கலர்....கலக்குறீங்கப்பா....!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 17. பருப்புருண்டைக் குழம்பை வடைக்குழம்புனு சொல்றீங்களோ?

  பதிலளிநீக்கு
 18. உரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கே அத்தனை அழகாய் இருக்கிறது! வடை குழம்பு பற்றியும் எழுதியிருக்கலாமே?

  பதிலளிநீக்கு
 19. இந்த மாதிரி செய்வதுக்கு பெயர் டெவலட பொட்டடோஸ், உருளைக்கிழங்கை கொஞ்சம் சின்னதாக கட் செய்தால் மசாலாக்கள் சேர்ந்து இன்னும் சுவை கூட்டும், நிறம் கூட்ட தக்காளியை தாளித்து மிக்சியில் அரைத்து... நீங்க சொன்ன மெதட்டில் வெங்காயம், இஞ்சி, உள்ளி வதங்கிய பின் குடைமிளகாயும் வெந்ததும் தக்காளி பேஸ்ட் போட்டு அதன் பின் மசாலாக்களை கொட்டி கிழங்கை சேர்த்து கொஞ்சூண்டு சோயா சோஸ் சேர்த்தால்.... அப்படியே பைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் சுவை எகிறும், செய்து பாருங்கள்.

  * கிழங்கு மொறுமொறு என இருக்க எண்ணெயில்பொரிக்கணும்.

  * மசாலாக்களாய் தூள்சேர்ப்பதை விட அடித்த சிவப்பு காய்ந்த மிளகாய் கொஞ்சம் தூவினாலும் போதும்,
  *தக்காளிப்பழத்துக்கு பதில் கடையில் வாங்கும் பேஸ்டும் போடலாம். ஆனால் பழம் சுவையை கூட்டும்,

  தக்காளியில் இருக்கும் புளிப்பும் சோயா சாஸில் இருக்கும் உவர்ப்பும் கிழங்கில் சேரும். அதனால் உப்பை கவனமாய் சேர்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 20. இதை என்னவளிடம் படிக்கச் சொல்லப் போவதில்லை .....நீங்களும் இருக்கீங்களே ,இப்படிஎல்லாம் செய்யத் தெரியுதான்னு குத்தல் பேச்சு வரும் என்பதால் :)

  பதிலளிநீக்கு
 21. படங்கள் - எங்கள்
  நாவூற வைக்கின்றன...
  எனக்குப் பிடித்தமான
  உருளைக்கிழங்கு...

  பதிலளிநீக்கு
 22. நல்லதொரு குறிப்பு - ஆலு - அதாங்க உருளைக்கிழங்கு எல்லா காய்கறிகளுடனும் சேரும்! வடக்கில் ஆலு இல்லாத சப்ஜி ரொம்பவே குறைவு!

  பதிலளிநீக்கு
 23. வாங்க முரளி... சுவைகளில் உருளைக்கே முதலிடம் என்று சொல்லி இருக்கிறீர்கள். இவ்வளவு செய்திருந்தாலும் எனக்கு உருளைக்கிழங்கு அவ்வளவாய் பிடிக்காது! லேஸா டேஸ்ட் பார்ப்பேன். தட்ஸ் ஆல்! சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பிடிக்கும். என் பாஸ் அது நல்லா செய்வாங்க. அதுகூட, முதல்முறை செய்யும்போது 'கப்'பில் வைத்து ஃபோர்க் வைத்து சாப்பிடுவேன். அப்புறம் ஆறியதுமோ, மறுபடியும் சூடு செய்தோ சாப்பிடப் பிடிக்காது!

  பதிலளிநீக்கு
 24. வாங்க மதுரைத் தமிழன்... இந்தியா வரும்போது சொல்லுங்க.. இங்க நீங்க படிச்சதில் ஒன்றை செலெக்ட் செய்து மெயிலில் சொல்லிடுங்க. செய்து வச்சிடுவோம். உங்களுக்கில்லாமலா!

  பதிலளிநீக்கு
 25. மீள்வருகை! வாங்க நெல்லைத்தமிழன். எனக்கு சாதா உருளையே அவ்வளவா பிடிக்காது. சின்ன உருளை இன்னும் சுத்தம். மேலும் உருளைக்கிழங்கு சமைக்கும்போது ஸ்வீட் ஆக இருக்கக் கூடாது. மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு என்று கேட்டு வாங்க வேண்டுமாம். யாரோ சொன்னாங்க.

  அப்புறம் இது மாதிரி கறியமுதுல்லாம் நான் செய்யும்போது கடுகு உளுத்தம்பருப்பு என்று தாளிக்கும் வேலை எல்லாம் வைத்துக் கொள்வதில்லை!

  திவ்யமா இருந்ததா பசங்க சொன்னாங்க.. ஓடிப்போய் விட்டது!

  பதிலளிநீக்கு
 26. வாங்க கீதாக்கா.. நோ தாளித்தல் பிஸினஸ்! முன்னர் காலிஃப்ளவரில் சொன்னமாதிரி, ஒன்று மொத்தென்று இருந்தால், இன்னொன்று மொறுமொறுவென்று இருக்க வேண்டும்! அப்படி காண்ட்ராஸ்ட்டாக இருந்தால் சாப்பிட சுவாரஸ்யம்! ஆனாலும், இரண்டையும் இணைத்தபிறகு வேகமாக மொறுமொறுப்புப் போய்விடும் என்பதால் சாப்பிடும் நேரத்துக்கு சற்று முன்பாக செய்வோம்!

  பதிலளிநீக்கு
 27. வாங்க காமாட்சி அம்மா.. //நீங்கள் கைதேர்ந்த சமையல் வல்லுனர் போலத் தெரிகிரது. // அப்படி எல்லாம் இல்லைம்மா.. வித்தியாசமா முயற்சி செய்து பார்ப்பேன். ஆனாலும் உங்கள் வாயால் அப்படிச் செல்லும்போது மனசில் மழை!

  நன்றிம்மா.

  பதிலளிநீக்கு
 28. தப்பு எல்லாருக்கும் வரும் காமாட்சி அம்மா. பரவாயில்லை விடுங்க!

  பதிலளிநீக்கு
 29. வாங்க கீதா ரெங்கன். நன்றி பாராட்டுக்கு.

  பதிலளிநீக்கு
 30. மீள்வருகை! வாங்க கீதாக்கா... பருப்புருண்டைக் குழம்பும் செய்வதுண்டு. வடைக்குழம்பு முன்னர் திங்கறகிழமையிலேயே வந்திருக்கு! இது மசால் வாடையைக் கடையிலிருந்து வாங்கி, வெந்தயக் குழம்பு செய்து கொண்டு இறக்கும் நேரத்துக்கு சற்று முன்னால் ம.வயை அதில் போட்டு விடுவேன். பத்து நிமிஷத்தில் சாப்பிட உட்கார்ந்து விடவேண்டும். இல்லா விட்டால் குழம்பு மொத்தத்தையும் வடை இழுத்துக் கொண்டு விடும்!

  ஒருமுறை மவ கிடைக்காமல் உவ கிடைக்க, அதனால் வெந்தயக்குழம்பில் பூண்டு, இஞ்சி, வெங்காயம் அரைத்து விட்டு அப்புறம் உவ வைச் சேர்த்தேன்! அதையும் எழுதி இருக்கேன். பசங்க நான் எது சோதனை செய்தாலும் ரசிப்பார்கள்! இது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்!

  பதிலளிநீக்கு
 31. நன்றி மனோ சாமிநாதன் மேடம். வடைக் குழம்பு பற்றி மேலே கீதாக்காவுக்கு பதில் சொல்லியிருக்கேன் பாருங்க மேடம்!

  பதிலளிநீக்கு
 32. வாங்க நிஷா.. நன்றி. நீங்க எக்ஸ்பர்ட். அப்போ நாம கிட்டத்தட்ட 5 * ரேஞ்சுக்கு செய்யறோம்னு சொல்லுங்க!!!! தக்காளி அரைத்து விட்டால் கிரேவி மாதிரி ஆகிவிடாது? என் பையனுக்கு தக்காளி பிடிக்காது! உருளைக்கிழங்கு உரித்தபிறகு அப்படிப் பெரிதாகத் தெரிந்தாலும் அப்புறம் புரட்டும்போது சிறு துண்டுகளாகி விடும்.

  பதிலளிநீக்கு
 33. ஹா.... ஹா... ஹா... பகவான்ஜி! நான் மதுரை வரும்போது போட்டுக் கொடுத்துவிடப் போகிறேன்!


  பதிலளிநீக்கு
 34. வாங்க ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம். நன்றி.

  பதிலளிநீக்கு
 35. வாங்க வெங்கட். நன்றி. நீங்கள் முன்பு உங்கள் தளத்தில் கொடுத்திருந்த உருளைக்கிழங்கு சப்ஜி செய்முறை குறித்து வைத்திருக்கிறேன். செய்து பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 36. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!