சனி, 10 ஜனவரி, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.




1) "புகழ்பெற்ற சதுரங்க வீரர் என்று நான் புகழ் அடைய வேண்டுமே தவிர, பார்வையற்ற சதுரங்க வீரர் என்று அல்ல" என்று சொல்லும் முஹம்மத் சாலி ஒரே சமயத்தில் 10 திறமையான வீரர்களுடன் விளையாடி ஜெயிக்கக் கூடியவர்.
 


2) வாழ்க்கை சரியாக அமையாத வரிசையில் வரும் பெண். துணிச்சலும், கைத்தொழிலும் (தன்)நம்பிக்கையைத் தர, தாயையும் சேர்த்துக் காப்பாற்றும் அபிராமி.
 


3) குறைந்தபட்சம் 10,000 ரூபாய்த் தேவைப்படும் இறுதிக் காரியங்களை இலவசமாகவே, சேவையாகச் செய்து வரும் கோவை விலான்குரிச்சியைச் சேர்ந்த செல்வராஜ்.  
 


இதில் இன்னொரு விஷயம் அவர் ஒரு மாற்றுத் திறனாளி.

4) "கோமதி இங்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்த பின் கடந்த 10 ஆண்டுகளில் ஒருவர்கூட படிப்பைப் பாதியில் நிறுத்த வில்லை. இவரிடம் டியூஷன் படித்த மாண வர்கள் பொறியியல், செவிலியர், டிப்ளமோ, பட்டப் படிப்பு ஆகியவற்றைப் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 6 பேர் 400-க்கு அதிகமாகவும், 15 பேர் 300-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளதைப் பெருமையாகச் சொல்கிறார் கோமதி." இலவசமாக வகுப்பெடுக்கும் கோமதி.
 



5) இது ஒரு நல்ல செயல். ஆரம்பித்திருக்கும் இடமும், முறையும்  சிறப்பு. மகேந்திர பாபு.
 


6) கேரளாவின் குடும்பஸ்ரீ வெள்ளம் பாதித்த ஜம்மு காஷ்மீர் சகோதரிகளுக்குச் செய்திருக்கும் சேவை சொற்களால் விவரிக்க முடியாதது. 
 



7) தன் எடையைப்போல 80 மடங்கு எடையைத் தாங்கக் கூடிய பேப்பர் பாலத்தை வடிவமைத்துள்ள டெல்லி ஐ ஐ டி மாணவர்கள்.
 




8) பழனிராஜுக்கு ஒரு சல்யூட்!
 


9) வயது ஒரு பொருட்டும் அல்ல, தடையும் அல்ல. இன்றைய அவசியத்தேவையான மரங்களை நடும் முதியவர் கருப்பையா.




10) ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் பெண்களால் செய்ய முடியும் என்னும்போது இதில் மட்டும் முடியாதா என்ன என்று கேட்கிறார்கள் இந்த ராஜஸ்தான் தீயணைப்புத்துறை வீராங்கனைகள்.  சீதா பற்றியும் அக்னிப்ரவேசம் பற்றியும் சொல்லியிருக்கும் குறிப்புகள் சுவாரஸ்யம்.







11) வாளேந்திய வனிதை!


                                                                                 


14 கருத்துகள்:

  1. தெம்பேற்றிச் செல்லும் பாஸிட்டிவ் செய்திகள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சதுரங்க சாதனையாளரை போற்றுவோம். இந்த செய்திகள் எல்லாம் சொல்வது ஒன்றுதான் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதே
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. சதுரங்க சாதனையாளரை போற்றுவோம். இந்த செய்திகள் எல்லாம் சொல்வது ஒன்றுதான் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதே
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. செல்வராஜ் - அவரே செல்வம் தான்... என்னவொரு மனிதர்...!

    பழனிராஜ் அவர்கள் விரைவில் சிறப்புடைய வேண்டும் என்று வேண்டுகிறேன்...

    பல கருப்பையாக்கள் இன்றைக்கு தேவை...

    பதிலளிநீக்கு
  5. பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு. நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பாஸிட்டிவ் செய்திகள் சிறப்பித்திருக்கும் அனைவரையும் வாழ்த்துவோம் அண்ணா..

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான செய்திகள்! சிலது அறிந்தவை! பலது அறியாதவை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. உங்களுடைய இந்த பாசிடிவ் செய்திகள் முலம் தன்னம்பிக்கையுள்ள இத்தனை மனிதர்களைப் பற்றி தெரிந்து கொள்ளள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  9. அனைத்துமே அருமையான தகவல்கள் .தன்னம்பிக்கையின் சின்னம்செல்வராஜ் அவர்களது சேவை மகத்தானது

    பதிலளிநீக்கு
  10. கருப்பையா வெங்கட்ஜி பதிவில் அறிந்தத்து. பார்வையர்ற முஹம்மத் சாலி ஆஹா போட வைப்பவர்ம்
    அபிராமி தநம்ப்பிகை மிகுந்தவர்..

    செல்வராஜ் பர்றியும் அறிந்துள்ளோம்/.
    கோமதி தன்நம்பிக்கை
    பேப்ர் பாலத்தை டெல்லி ஐஐடி மாணவர்கள் ..ராஜஸ்தான் தீயணைப்புத்டுறை வீராங்கனைகள் ஆச்சரியப்படுத்துகின்றார்கள்...வாளேந்திய வீராங்கனைய்...ஜான்சிரானீ??!!அனைத்துமே நல்ல செய்திகள்

    பதிலளிநீக்கு

  11. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு

  12. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
  13. அக்னி பரிக்ஷையில் இறங்கும் பெண்கள், மாற்றுத் திறனாளி செல்வராஜ் போன்றவர்கள் நம்பிக்கையை ஊட்டும் மனிதர்கள். அபிராமி குறித்து ஏற்கெனவே படித்த நினைவு. மற்றத் தகவல்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. முஹம்மத் சாலி சிறந்த சதுரங்க வீரர் என்று புகழ்பெறட்டும்.

    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கு இல்லை ஒத்துக் கொள் என்பது போல் அபிராமி கற்றுக் கொண்ட தொழில் அவரையும் அவர் தாயையும் வாழ வைக்கும்.

    செல்வராஜ் அவர்களையும், அவருக்கு சேவை செய்ய உதவும் அவர் குடும்பத்தினர்களையும் பாராட்டவேண்டும்.
    கோமதிடீச்சரின் சேவைக்கு வணக்கங்கள்.

    மரமும் மனிதமும்’ என்ற ஒலி குறுந்தகடு மதுரைப் பள்ளிகளில் ஒலிக்க காரண்மாய் இருந்த தமிழாசிரியர் மகேந்திர பாபு அவர்களுக்கும்,அவர் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    அனைத்து பாஸிடிவ் செய்திகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!