சனி, 27 டிசம்பர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்.



1) இந்த முதியவர்களுக்கு இது பொழுதுபோக்கு மட்டுமல்ல, சிறு வருமானமும் கூட.  விஸ்ராந்தி.
 



2) ரிக்ஷாக்களே வழக்கொழிந்துவரும் காலம் என்றுதான் தோன்றுகிறது. ஆயினும் அதை வைத்தும் பிழைப்பவர்கள் இருக்கிறார்களே... அவர்களுக்கு உதவ டாக்டர் ராஜ்வன்ஷி செய்திருக்கும் கண்டுபிடிப்புச் சேவை.
 


3) உண்மை செத்து விட்டது, இது கலிகாலம் என்று நினைக்கிறீர்களா? இங்கு பாருங்கள்!  ஒரு தெலுங்குத் திரைப்படக் காட்சியின் நாடகத்தன்மையுடன் இருந்தாலும் இப்படி நிஜமாக நடந்திருக்க முடிவதில் சந்தோஷம் ஏற்படுகிறது. உ.பி மாநில புலந்த்ஷஹர் மாவட்டச் நீதிபதி B. சந்திரலேகா என்ன போடு போடுகிறார் என்று வீடியோவில் பாருங்கள். பாஷைதான் புரியவில்லை.
 


4) விளையாட்டா(ல்)ய் ஒரு நல்லெண்ணப் பரவல். ஐசம் உல் ஹக் கொரேஷி  நம்மூர் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து பரப்பும் நல்லெண்ண அலைகள்.
 


5) நாட்டைக்க காக்கும் கை பாட்டு போல, காட்டைக் காக்கும் அன்னா குஜுர் . ஒடிஸா பாஸிட்டிவ்.
 



6)  "உனக்கு நடந்து போக கால் இல்லையேப்பா எப்படிப்பா? என்று கேட்டபோது சுத்தம் செய்ய இரண்டு கைகள் இருக்குங்களேய்யா என்று சொன்னதும...."  ஜெயராமன்.
 


7) தவறான திருமணம் என்னும் சிறையை விட்டு வெளியில் வந்தது மட்டுமல்ல சாதனை... மிசோரம் லால்தஞ்சமி.
 


8) மோதீஸ்வரும் நண்பர்களும்.
 


9) குப்பையில் இத்தனை விஷயங்களா... அட.. பாராட்டப்பட வேண்டிய, குருடம்பாளையம் பஞ்சாயத்தில், 14வது வார்டு கவுன்சிலராக இருக்கும் சாந்தாமணி.  

12 கருத்துகள்:

  1. ஜெயராமன் அவர்கள் - என்னவொரு தன்னம்பிக்கை...!

    பதிலளிநீக்கு
  2. விஸ்ராத்தியில் தங்கி இருக்கும் முதியவர்கள் செய்யும் மேட் மிக அழகாய் இருக்கிறது. என் அம்மா கலர் கலராக இருக்கும் பிளாஸ்டிக் பைகளை இது போல் பின்னி மேட் செய்வார்கள்.
    வீணாக இருக்கும் சணலில் செய்வார்கள்.
    வடமாநிலங்களில் இன்னும் ரிக்‌ஷா உண்டு. கையால் இழுத்து செல்லும் ரிகஷாக்கள் தான் வழக்கொழிந்து போய் இருக்கிறது. அனைத்து ரிக்‌ஷாக்களும் மிக அழகாய் இருக்கிறது. மாற்றுதிறனாளிக்கு செய்த ரிக்‌ஷாவுக்கு டாகடர் ராஜ்வன்ஷி அவர்களை பாராட்ட வேண்டும்.
    உ.பி மாநில நீதிபதி பி. சந்திரலேகா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    நல்லெண்ணத்தை பரப்பும் இரு இளைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.

    காட்டை காக்கும் அன்னாகுஜுர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    திரு ஜெயராமன் அவர்கள் செய்யும் உழவார பனிக்கு தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
    இறைவன் அருளால் விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் உழவார பணி செய்ய வேண்டும்.
    சாதனை படைக்கும் மிசோரம் லால்தஞ்சமி அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
    கடைசி செய்தி முன்பே படித்து விட்டேன். முகநூலில்.

    அனைத்து பாஸிடிவ் செய்திகளுக்கும் நன்றி.




    பதிலளிநீக்கு
  3. உண்மையில் ஆக்கபூர்வமான செய்திகள்தான்.நன்றி

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் பாராட்டிற்குரிய செய்திகள்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  5. தன்னம்பிக்கை மனிதர்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நண்பரே!
    பாஸிட்டிவ் செய்திகள் - ஒன்பதும் நவரத்தினமாய் ஜொலிக்குதப்பா!
    அனைவரும் போற்றப் பட வேண்டியவர்களே!
    வணங்குகிறேன்!
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  7. முதியவர்களின் பிரச்னையே எப்படிப் பொழுதைக் கழிப்பது என்பதுதான். அவர்களுக்கு இப்படி ஒரு வழிகாட்டும் விஸ்ராந்தி அமைப்பிற்குப் பாராட்டுக்கள்.

    அந்த ரிக்ஷாவைப் பார்த்தவுடன் எனக்கு இது போல வண்டி இருந்தால் வெளியில் போய்வர சௌகரியமாக இருக்குமே என்று தோன்றியது. வெகு விரைவில் என்னைப்போன்ற இல்லத்தரசிகளுக்கு ஒரு வண்டி வடிவமைக்கட்டும் திரு ராஜ்வம்சி.

    மொழி புரிந்தால் நீதிபதி சந்திரலேகாவின் பேச்சை இன்னும் நன்றாக அனுபவித்திருக்கலாம்.

    ஐசம் உல் ஹக் கொரேஷியும், நம்மூர் ரோஹன் போபண்ணாவும் இணைந்து பரப்பும் நல்லெண்ண செய்கைகளுக்குப் பாராட்டுக்கள்

    தன் இனத்தை சேர்ந்த 2,000 பழங்குடி மக்களுக்கு அவர்களது நிலங்களை மீட்டுத் தந்த அன்னா குஜூரின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன். செயற்கரிய செயல் செய்த வீரர் அவர்.

    என்ன ஒரு தன்னம்பிக்கை ஜெயராமன் அவர்களின் வார்த்தைகளில்! பாராட்டுக்கள்!

    லால்தஞ்சமியின் தைரியம் மிகவும் பாராட்டுக்குரியது. தன்னைப் போல இன்னொரு பெண் துன்பப்படக்கூடாது என்கிற இவரது எண்ணம் மிகவும் போற்றத்தக்கது.

    //சென்னை டி.ஏ.வி பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சிவ மாணிக்கம், அக்ஷயா மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மோதீஸ்வர், செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஆரோக் ஜோ ஆகியோர் ரஷ்யாவில் நடைபெற்ற 62 நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச ரோபோடிக் போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

    சர்வதேச ரோபோடிக் போட்டி கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் விருதுபெறுவது இதுதான் முதல் முறை.// பாராட்டுக்கள், மோதீஸ்வருக்கும் அவரது நண்பர்களுக்கு,

    குப்பையிலிருந்து இத்தனை வருமானமா என்று வியக்கும் அளவிற்கு சாந்தாமணி சாதனை படிக்கிறாரே!

    பதிலளிநீக்கு
  8. திரு.ஜெயராமன் அவர்களின் தன்னம்பிக்கையை என்ன சொல்லி பாராட்டுவது.

    பதிலளிநீக்கு
  9. நல்ல நம்பிக்கை செய்திகள்ஒவ்வொன்றாய் சென்று படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தையும் பார்த்தொம் விரிவாக எழுத முடியவில்லை....

    விஸ்ராந்தி சென்றதுண்டு (கீதா)

    அந்தக் கலெக்டர் பற்றியது நம் டெல்லித்தலைவர் வெங்கட்ஜி பதிவிலும் வந்திருந்ததல்லவா பார்த்தோம்....

    பதிலளிநீக்கு
  11. மத்தியானமாய்த் தான் எல்லாத்தையும் படிக்கணும். :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!