எழுத்தாளர்களின் எழுத்துகளை எப்படி படிக்க விரும்புவீர்கள்?
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
எழுத்தாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுத்தாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
24.6.21
14.1.15
புத்தகங்கள் - . தயவு செய்து உண்மையாக பதிலளியுங்கள்.
வாசகர்களுக்கு, நண்பர்களுக்கு சில கேள்விகள்: தயவு செய்து உண்மையாக பதிலளியுங்கள்.
1) நீங்கள் வாங்க விரும்புவது கதைகள் / கட்டுரைகள் / வரலாறு / அறிவியல் எது அதிகம்? அல்லது நீங்கள் அதிகம் நாடும் துறை எது?
2) கதைகள் என்றால் யார் படைப்பு?
3) கட்டுரைகள் என்றால் என்ன வகைக் கட்டுரைகள்? யார் எழுதியவைகளை வாங்க விருப்பம்?
4) வரலாறு என்றால் கட்டுரையா, கதைகளா? எந்த எழுத்தாளர்?
5) இன்னமும் பழைய, பிரபல எழுத்தாளர்கள் படைப்புகள்தான் அதிகம் வாங்குகிறீர்களா?
6) தற்போதைய எழுத்தாளர்களில் யாருக்காவது தனித்துவமான நடை என்று இருப்பதாக நினைக்கிறீர்களா?

7)
எதை வைத்து நீங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களைத் தெரிவு செய்கிறீர்கள்?
விமர்சனங்களா? நண்பர்களின் படைப்பு என்பதாலா? பிரபலமானவர்கள் எழுதியது
என்பதாலா?
8) நீண்ட நாட்களாய்த் தேடியும் கிடைக்காத
புத்தகம் என்று எதாவது உண்டா? இதை வாங்கக் கூடாது என்று எந்தப் புத்தகம்
பற்றியாவது எண்ணம் உண்டா?
9) மாதொரு பாகன் படைப்புக்கான எதிர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பெருமாள் முருகனின் எதிர்வினை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
10) புதிய எழுத்தாளர்களில் யார் யாருடைய படைப்புகளை வாசித்திருக்கிறீர்கள்? யார் நன்றாக எழுதுகிறார் என்று நினைக்கிறீர்கள்?
11) புத்தகத்தின் விலை உங்களைப் பாதிக்கும் தருணம் எது? விலை பற்றிக் கவலைப் படாமல் படைப்புக்காக நீங்கள் வாங்கிய புத்தகம்?
12) வாங்கியபின், அல்லது படித்தபின் வாங்கியிருக்க வேண்டாம் என்று நினைக்க வைத்த புத்தகம்?
13)
புத்தகங்கள் வாங்கித் தள்ளுவது
அ. உண்மையான ஆர்வம்
ஆ. எல்லோரும் வாங்கும்
ஒரு பரபரப்பான ஆர்வத்தில்
இ. சும்மா எல்லோரும் சொல்கிறார்களே என்று!
14)
வாங்கிய புத்தகங்களில் எல்லாவற்றையும் படித்து முடித்திருக்க
முடியாதுதான். ஆனால் வாங்கியது 100 சதவிகிதம் என்று வைத்துக் கொண்டால்
எத்தனை சதவிகிதம் இதுவரை படித்து முடித்திருக்கிறீர்கள்?
16) புத்தகக் கண்காட்சியில் நீங்கள் காணும் முக்கியக் குறை(கள்) என்ன?
17)
புத்தகக் கண்காட்சிக்காகக் காத்திருந்து புத்தகம் வாங்குகிறீர்களா?
அல்லது புத்தகம் தேவைப்படும்போது உடனே பதிப்பகத்துக்கோ, கடைகளுக்கோ, அல்லது
NHM வாயிலாகவோ உடனுக்குடன் வாங்கி விடுகிறீர்களா?
18) பு. க. காட்சிக்குச் செல்வதால் நிர்ப்பந்தத்துக்குப் புத்தகம் வாங்குகிறீர்களா?
19) சாகித்ய அகாடமி போன்ற விருது வாங்கிய புத்தகங்களை வாங்குகிறீர்களா?
28.10.11
தலைப்'பூ'(க்)கள்
சமீபத்தில் எங்கேயோ ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' தலைப்பு எவ்வளவு அழகு என்று சிலாகிக்கப் பட்டதைப் படித்தது ஞாபகம் வர, நான் படித்த, கேள்விப்பட்ட புத்தகங்களின் தலைப்பு எவை எவை மனதில் நிற்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன்.
கொஞ்சம் இலக்கிய டச் இருக்க வேண்டும். வித்தியாச வார்த்தைக் கோர்ப்பாக, ஏதோ ஒரு காரணத்தால் மனதில் பதியும் வண்ணம், புதிய சிந்தனைகளை, நம் அனுபவங்களைத் தூண்டும் வண்ணம் இருக்கும், தலைப்புகளை எண்ணிப் பார்க்கிறேன்!
மணியனின் 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'மோகம் முப்பது வருஷம்'.
ஜெயகாந்தனின் 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்'. ஆனால் இந்தத் தலைப்பின் அருமை கதையைப் படித்தால்தான் தெரியும். 'கருணையினால் அல்ல', 'யாருக்காக அழுதான்', 'யுக சந்தி', 'சுய தரிசனம்' தலைப்புகள் நம் மனதில் வேறு சிந்தனைகளைத் தோற்றுவிக்கும், அல்லது ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கும்!
ஒரு தலைப்பு இப்படி நம் மனதில் தோற்றுவிக்கும் சிந்தனைக்கும் அல்லது எதிர்பார்ப்பிற்கும் மாறாக அந்தப் படைப்பு இருந்தால் என்ன செய்வோம்? சில சமயம் பிடிக்காமலும், சில சமயம் அதனாலேயே பிடித்தும் போகலாம்!
யோசித்துப் பார்க்கும்போது தலைப்பு வைப்பதில் சுஜாதா ஜித்தர் என்று தெரிகிறது. இன்னும் நிறைய நிறைய தலைப்புகள் இவரிடமிருந்து எடுக்கலாம்.
பாலகுமாரனின் 'இரும்புக் குதிரைகள்', 'மெர்க்குரிப் பூக்கள்'. பாலகுமாரன் அப்புறம் நிறைய புகழ் பெற்ற பாடல்களின் முதல் வரிகளைத் தலைப்பாக்கினார். ஒரே புத்தகத்தில் பாலகுமாரன் ஒரு புறம் 'ஏதோ ஒரு நதியில்' என்ற தலைப்பிலும், மறுபக்கம் சுப்ரமணிய ராஜு 'எங்கோ ஒரு இரவில்' என்ற தலைப்பிலும் எழுதினார்கள்.
தலைப்பு முதலில் மனதில் தோன்றி அதற்கு எழுதுவது என்பதை விட, மனதில் தோன்றிய கருவை எழுத்து வடிவமாக்கி அப்புறம் தலைப்பிடுவது பொருத்தமாய் இருக்கலாம் என்பது என் எண்ணம். இந்தத் தலைப்பில் எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது ஒரு தலைப்பில் எழுதுவது பெரும்பாலும் சரி வராது என்று நினைக்கிறேன்.
நீல பத்மநாபனின் 'பள்ளிகொண்டபுரம்' தலைப்பு ஒரு அழகான உருவகம். நிறைய தலைப்புகள், படித்து முடித்த பின்தான் அர்த்தம் புரியும். அந்த வகையில் இந்தக் கதையை சேர்க்கலாம்.
லா.ச.ராவின் 'சிந்தா நதி' ஒரு அழகான தலைப்பு. படித்தாலும் பாதி (ஒரு கௌரவத்துக்கு பாதி என்று சொல்லிக் கொள்கிறேன்) புரியாத (எனக்கு...எனக்கு...) எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.
கல்கியின் 'பொங்குமாங்கடல்'.என்ன ஒரு வார்த்தைக்கோர்ப்பு.. என்ன தோன்றுகிறது?... பொங்கு மாக்கடல் குற்றாலத்தில் பேரருவி விழுந்து சிதறும் இடம். பொங்குமாங்கடல்.... சுனாமி? 'பொய்மான் கரடு' என்ற தலைப்பும் ஓர் இடத்தைக் குறிப்பதுதான். தஞ்சையில் இருந்த போது சென்ற சிவகங்கைப் பூங்காவின் விளையாட்டு ரயில் நிற்கும் ஒரு 'ஸ்டேஷனின்' பெயர் கூட 'பொய் மான் கரடுதான் ! மற்றும் கல்கியின் 'கள்வனின் காதலி'
நாபாவின் 'சாயங்கால மேகங்கள்', 'ஆன்மாவின் ராகங்கள்', 'பொன் விலங்கு', 'நிசப்த சங்கீதம்', 'சமுதாய வீதி' (இது தலைப்பினாலா, படித்த கதையினாலா என்று தெரியாது.. முத்துக்குமாரனை மறக்க முடியாது, மாதவியையும்!).
ராஜம் கிருஷ்ணனின் 'முள்ளும் மலரும்'. குழந்தைகள் இல்லாத ராஜம் கிருஷ்ணன் கணவரின் மறைவுக்குப் பின் தற்சமயம் சென்னை விஸ்ராந்தி ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் இருப்பதாக தகவல்.
இந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப்புனல்',
தி ஜானகிராமனின் 'மோகமுள்', 'பிடிகருணை'.
லக்ஷ்மியின் கதவு திறந்தால்', (ஒரு எதிர்பார்ப்பு, என்ன என்ற கேள்வி) 'மீண்டும் வசந்தம்'. (கதையினால் தலைப்பு கவர்ந்திருக்கலாம்... ஒரு நம்பிக்கை..)
அப்துல் ரகுமானின் 'இல்லையிலும் இருக்கிறான்', ('அட!')
மு. மேத்தாவின் 'கண்ணீர்ப்பூக்கள்' (படிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதில் வரும் ஒரு புதுக் கவிதையை மறந்தவர்களும் இருக்க மாட்டார்கள்!), 'வெளிச்சம் வெளியே இல்லை'. (நிம்மதியை வெளியே தேடாதே என்பார்கள்... உள்ளேயே இருக்கிறது என்பார்களே அதை மாற்றி...)
புஷ்பா தங்கதுரையின் 'நீ நான் நிலா" (பு. த அந்த கால கட்டத்தில் எழுதிக் கொண்டிருந்த பாணியிலிருந்து மாறி எழுதிய ஒரு காதல் கதை)
சி ஏ பாலன் (என்று நினைவு) எழுதிய 'தூக்குமர நிழலில்' பயமுறுத்தும் தலைப்பு.
========================================
யோசனை ஓட்டத்தில் என் எண்ணத்தை எனக்குத் தெரிந்த அளவில் இங்கு பகிர்ந்துள்ளேன். பரந்த வாசகானுபவம் உடைய வாசகர்கள் தங்கள் எண்ணத்தையும் மன ஓட்டத்தையும் சொல்லலாமே...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












