வாசகர்களுக்கு, நண்பர்களுக்கு சில கேள்விகள்: தயவு செய்து உண்மையாக பதிலளியுங்கள்.
1) நீங்கள் வாங்க விரும்புவது கதைகள் / கட்டுரைகள் / வரலாறு / அறிவியல் எது அதிகம்? அல்லது நீங்கள் அதிகம் நாடும் துறை எது?
2) கதைகள் என்றால் யார் படைப்பு?
3) கட்டுரைகள் என்றால் என்ன வகைக் கட்டுரைகள்? யார் எழுதியவைகளை வாங்க விருப்பம்?
4) வரலாறு என்றால் கட்டுரையா, கதைகளா? எந்த எழுத்தாளர்?
5) இன்னமும் பழைய, பிரபல எழுத்தாளர்கள் படைப்புகள்தான் அதிகம் வாங்குகிறீர்களா?
6) தற்போதைய எழுத்தாளர்களில் யாருக்காவது தனித்துவமான நடை என்று இருப்பதாக நினைக்கிறீர்களா?
7)
எதை வைத்து நீங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களைத் தெரிவு செய்கிறீர்கள்?
விமர்சனங்களா? நண்பர்களின் படைப்பு என்பதாலா? பிரபலமானவர்கள் எழுதியது
என்பதாலா?
8) நீண்ட நாட்களாய்த் தேடியும் கிடைக்காத
புத்தகம் என்று எதாவது உண்டா? இதை வாங்கக் கூடாது என்று எந்தப் புத்தகம்
பற்றியாவது எண்ணம் உண்டா?
9) மாதொரு பாகன் படைப்புக்கான எதிர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பெருமாள் முருகனின் எதிர்வினை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
10) புதிய எழுத்தாளர்களில் யார் யாருடைய படைப்புகளை வாசித்திருக்கிறீர்கள்? யார் நன்றாக எழுதுகிறார் என்று நினைக்கிறீர்கள்?
11) புத்தகத்தின் விலை உங்களைப் பாதிக்கும் தருணம் எது? விலை பற்றிக் கவலைப் படாமல் படைப்புக்காக நீங்கள் வாங்கிய புத்தகம்?
12) வாங்கியபின், அல்லது படித்தபின் வாங்கியிருக்க வேண்டாம் என்று நினைக்க வைத்த புத்தகம்?
13)
புத்தகங்கள் வாங்கித் தள்ளுவது
அ. உண்மையான ஆர்வம்
ஆ. எல்லோரும் வாங்கும்
ஒரு பரபரப்பான ஆர்வத்தில்
இ. சும்மா எல்லோரும் சொல்கிறார்களே என்று!
14)
வாங்கிய புத்தகங்களில் எல்லாவற்றையும் படித்து முடித்திருக்க
முடியாதுதான். ஆனால் வாங்கியது 100 சதவிகிதம் என்று வைத்துக் கொண்டால்
எத்தனை சதவிகிதம் இதுவரை படித்து முடித்திருக்கிறீர்கள்?
16) புத்தகக் கண்காட்சியில் நீங்கள் காணும் முக்கியக் குறை(கள்) என்ன?
17)
புத்தகக் கண்காட்சிக்காகக் காத்திருந்து புத்தகம் வாங்குகிறீர்களா?
அல்லது புத்தகம் தேவைப்படும்போது உடனே பதிப்பகத்துக்கோ, கடைகளுக்கோ, அல்லது
NHM வாயிலாகவோ உடனுக்குடன் வாங்கி விடுகிறீர்களா?
18) பு. க. காட்சிக்குச் செல்வதால் நிர்ப்பந்தத்துக்குப் புத்தகம் வாங்குகிறீர்களா?
19) சாகித்ய அகாடமி போன்ற விருது வாங்கிய புத்தகங்களை வாங்குகிறீர்களா?
1. தமிழ் கதைகள் ஆங்கிலம் கதை கட்டுரை. எந்த மொழியிலும் வரலாறு சற்று வராதலாறு.
பதிலளிநீக்கு5. ஆம்
7. பெரும்பாலும் பக்கம் புரட்டி பிடித்திருந்தால்..
8. கிருஷ்ணகுமார் எழுதிய திகில் புதினங்கள் தேடிக்கொண்டிருக்கிறேன்
11. இரண்டு பக்கங்கள் படிக்க தகுதியில்லை என்பது புரிந்தவுடன்
12. விஷ்ணுபுரம்
13. அ
14. 100% (சகிக்கவில்லை என்று ஒதுக்கியவை தவிர)
15. பெரும்பாலும் கொடுத்து விடுவேன்
பதிப்பகம் எதுவும் துவக்கப் போகிறீர்களா :)
பதிலளிநீக்குவாசகர்களை இப்படித் துன்புறுத்துவது இ.பி.கோ 000 பிரிவின்படி தூக்குத் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த விளையாட்டிற்கு வரலே...!
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
பதில் சொல்வது கடினம்! கேள்வி கேட்பது ரொம்பவே சுலபம்! :))))
பதிலளிநீக்குஉங்களுடைய கேள்விகளுக்கு நானும் யோசித்து பதில் சொல்றேன்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
தை பிறந்தாச்சு
பதிலளிநீக்குஉலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!
1. கதைகள், அதிலும் நாவல்கள் அப்புறம் சிறுகதைகள். கட்டுரைத் தொகுதிகள் இப்போதெல்லாம் இணையத்திலேயே பரவலாகக் கிடைக்கிறது. அல்லது இணையத்தில் எழுதியதையே புத்தகமாக தொகுக்கிறார்கள் என்பதால் கட்டுரைகள் வாங்குவதில் அவ்வளவு நாட்டம் இல்லை. மிக முக்கியமான கட்டுரைத் தொகுதிக்கு இது பொருந்தாது. சமஸின் யாருடைய எலிகள் நாம் வாங்கி இருக்கிறேன்.
பதிலளிநீக்கு2. கதைகள் என்றால் சுஜாதா, ஜெயமோகன், இம்முறை சாருவின் சிறுகதைத் தொகுதியும், புத்திய எக்சைலும் வாங்கி இருக்கிறேன். விகடனில் வெளியிட்டிருக்கும் அ.மி, பிரபஞ்சன், புதுமைப் பித்தன் சிறுகதைத் தொகுப்பு வாங்கியுள்ளேன்.
3. கோணல் பக்கங்கள் நன்றாக இருக்கும் என்று கேள்விபட்டுள்ளேன். இன்னும் கட்டுரைகள் குறித்து பரவலாகத் தெரியவில்லை.
4. வரலாறு யார் இப்போ கட்டுரை போல் எழுதுகிறார்கள். முகில் நன்றாக எழுதுகிறார். சொக்கன், பாரா, மருதன் கூட தொடர்ந்து வரலாறு எழுதி வருகிறார்கள். இவர்கள் எழுதியதையே அதிகம் படித்திருக்கிறேன்.
5. அப்படி இல்லை, லக்ஸ்மி சரவணா குமாரின் கானகன் படித்து விட்டேன், உப்பு னைகள் வாங்கி இருக்கிறேன். விமுவின் ரா.கா.சாலை படித்தாயிற்று. சென்னைக்கு அப்பால் படிக்க ஆவலாக உள்ளது. அபிலாஷின் கால்கள் விலை அதிகமாக இருக்கிறது, அதனால் வாங்கவில்லை.
6. இதற்கு என்னிடம் பதில் இல்லை. நான் இன்னும்நிறைய படிக்க வேண்டும்.
7. பெரும்பாலும் விமர்சனங்கள் தான். நண்பர்களின் படைப்பு என்றால் உற்ற நண்பர் என்றால் வாங்கிவிடுவேன். அப்புறம் புத்தகத்தின் மீது ஒரு ஈர்ப்பு தானாக வரும். அப்படி ஏற்பட்டாலும் வாங்கிவிடுவேன்.
8. ராஜநாராயணனின் கிருஷ்ணவேனியைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அச்சிலேயே இல்லையாம்.
9. படைப்புச் சுதந்திரம் இருக்க வேண்டும். ஒரே ஒருவர் மட்டுமே ஒரு சமுதாயத்தின் வரலாறை மாற்றி அமைத்து விட முடியடஹு. படைப்பாளிக்கான எதிர்வினையை படைப்புகளின் மூலமே கொடுக்க வேண்டும்.
10. கானகன் இன்னும் நன்றாக வந்திருக்கலாம். ஆனால் நன்றாக இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர் 24 வயதாகிறது. இரண்டு நாவல் எழுதிவிட்டார். அவருடைய இரண்டாவது நாவல் அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் வாங்கி இருக்கிறேன். இனி தான் படிக்க வேண்டும்.
11. புத்தகத்தின் விலை பயமாகத்தான் இருக்கிறது. விழ பற்றி கவலைப்படாமல் வாங்கியது காடு, ஆழிசூழ் உலகு, எக்ஸைல்
12. பதில் இல்லை
13. உண்மையான ஆர்வத்தை, ஆர்வம் என்று மாற்றிக் கொள்கிறேன். ஆர்வத்தை தேடல் என்று மாற்றிக் கொள்கிறேன்
14. 40%
15. நண்பர்களுக்குக் கொடுப்பதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. ஆனால் அவை என் கைக்கு வந்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.
16. எதுவும் இல்லை என்றே நினைக்கிறன்.
17. அனைத்துமே
18. இல்லை.
19. போனமுறை வாங்கினே. இம்முறை இல்லை.
20. எங்களுக்கு எங்களின் பொங்கல் வாழ்த்துக்கள் சார் :-)
1.கதைகள்,வரலாறு
பதிலளிநீக்கு2.இந்திரா சௌந்தர்ராஜன்,பாலகுமாரன்,சாண்டில்யன்
3. இல்லை
4. இரண்டும்
5. ஆமாம்
6. பாலகுமாரன்
7. எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் என்பதால்
8. இல்லை
9. அந்த நூலை படித்து தான் சொல்ல வேண்டும்
10. இன்னும் இல்லை
11. கவலையில்லை
12. ஒரு புத்தகம்- பெயர் ஞாபாகம் இல்லை
13. அ
14. 80%
15. பாதுக்காக்கிறேன்.
16. புத்தக கண்காட்சிக்கு சென்று ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது.
17. பதிப்பகத்தில் தான் வாங்குவேன்
18. இல்லை
தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
1.கதைகள் அதிலும் வரலாற்று கதைகள் மற்றும் கட்டுரைகள்
பதிலளிநீக்கு2.சுஜாதா மற்றும் சாண்டில்யன்
4. விமர்சனம் மற்றும் எழுத்தாளரின் எழுத்து நடை
8. ராஜேந்திர குமார் அழகாபுரி அழகப்பன் இவர்களின் புத்தகங்கள் தேடி வருகிறேன்
9.எழுத்துரிமையை மிரட்டி பறிப்பது போன்றதாகும்
13. புத்தகங்கள் வாங்குவது உணமையாக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
14.என்பது சதவிகிதம் படித்து முடித்திருக்கிறேன்
15. படித்து முடித்த பின் பாதுகாப்பாக வைத்து கொள்கிறேன்
16.சாப்பிடும் உணவுகளின் விலை
17.புத்தக கண்காட்சிக்கு காத்திருந்து புத்தகம் வாங்குகிறேன்
புத்தகக் கண்காட்சிக்கு இதுவரை போனதில்லை. இனிமேலும் போவது சந்தேகமே. புத்தகங்கள் படிப்பது என்பது சாப்பாடு மாதிரி ஆத்தியாவசியம் என்றாலும் அந்த அளவுக்குப் புத்தகங்கள் வாங்க முடிந்ததில்லை; வாங்கவும் முடியாது என்பதே உண்மை. :))))
பதிலளிநீக்கு1. கட்டுரைகள். எந்தத் துறையாயிருந்தாலும் சரி.
பதிலளிநீக்கு2. கதைகள் என்றால் எம்.வி. வெங்கட்ராம், ராகிர, துமிலன்
3. எந்த வகையாயிருந்தாலும் சரி.
நவீன எழுத்துப் பாணியில் யார் எழுதியது என்றாலும் வேண்டாம்.
4. கட்டுரைகள்
5. எழுத்தாளர்கள் என்றால் முந்தைய தலைமுறையினர் தாம்.அவர்களைத் தான் அதிகம் படிக்கிறேன். அந்த எழுத்துக்கள் தாம் மனம் தோய்ந்து படிக்க முடிகிறது. இன்றைய எழுத்துக்கள் தொடர்ந்து வாசிக்க முடியாமல் ஒரு விலகல் தன்மையை ஏற்படுத்துகிறது.
6. அதிகம் வாசித்த அனுபவமில்லை என்பதால் தெரியவில்லை
7. எழுத்தாளர்களை வைத்து. தனியாக பெரிய புத்தக அலமாரி உண்டு. நிறைய வாங்கிச் சேர்த்து வைத்திருக்கிறேன். இப்பொழுதெல்லாம் அதிகம் வாங்குவதில்லை. ஆனால் எப்படியாவது வாசித்து விடுவேன். நானூறு ரூபாய புத்தகம் என்றால் வாடகை நூல் நிலையங்களில் ஒரு வார அவகாசத்தில் வாங்கித் திருப்பித் தர ரூ.40 கேட்கிறார்கள். (10% படிப்புக்கூலி)
8. இல்லை.
10. இப்பொழுது எழுதுகிறவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வதில்லை. எழுத்தை ஆளும் சிரமம் இல்லாததினாலோ என்னவோ ரொம்ப ஜாக்கிரதையாக கதைசொல்லி என்று அழைக்கவே விரும்புகிறார்கள். இதையே ஆங்கிலத்தில் writer என்று போட்டுக் கொள்கிறார்கள். சுஜாதாவிலிருந்து ஆரம்பித்தது இந்தப் பழக்கம்.
11. எந்தப் புதிய புத்தகம் படிக்க வேண்டுமென்றாலும் லெண்டிங் லைப்ரரிகள் தாம் வரப்பிரசாதம்.
பழைய புத்தகங்களுக்கு அரசு பொது நூலகங்கள். பின்னதில் பதினைந்து நாட்களுக்கு 3 புத்தகங்கள் வாங்கி படித்துத் திருப்பித் தருகிறேன். பல வருடங்களாக இந்தப் பழக்கம்.
12. அப்படி எதுவும் இல்லை.
பதிலளிநீக்கு13. உண்மையான ஆர்வம்
14. என்னிடமிருக்கும் எல்லா புத்தகங்களையும் முழுதும் படித்து விட்டேன். எப்பொழுதும் என் உபயோகத்தில் இருப்பவை அவை.
பதிவுகள் எழுதும் பொழுது reference-க்கு அத்தியாவசியமானவை அவை.
15. என் காலம் வரை அவை எனக்கே என்று இருப்பவை. ஒரு துண்டுக் காகிதத்தைக்கூட இழக்க மனம் வராது. நண்பர்களுக்கு பரிசளிக்க வேண்டின், புதிதாக வாங்கிக் கொடுத்து விடுவேன்.
16. எந்நேரமும் புத்தகங்களோடையே தொடர்பும், உறவும் கொண்டோருக்கு புத்தக கண்காட்சி அநாவசியம்.
19. அப்படியெல்லாம் இல்லை.
1. கதைகள், சில சமயம் கட்டுரைகள், சில சமயங்களில் வரலாறுகள்.
பதிலளிநீக்கு2. மிகப்பெரிய பழைய எழுத்தாளர்கள் எழுதியவை என்னிடமே இருப்பதால் அவ்வப்போது மனதை வசீகரிக்கக்கூடிய எழுத்து என்று தோன்றும் கதைகள். சில சமயங்களில் ஆங்கில நாவல்கள்.
3. சுய முன்னேற்றக்கட்டுரைகள், பிரயாண கட்டுரைகள், மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த எழுத்தென்றாலும்.
4. சோழ, பல்லவ வரலாற்றுக் கட்டுரைகள், கதைகள் வாங்கப்பிடிக்கும்.
5. ஏதேனும் விட்டுப்போயிருந்தால் அவற்றைத்தான் முதலில் வாங்குவேன்.
6. அப்படி யாரும் மனதைக் கவரவில்லை.
7. பிரபலமானவர்கள் என்பது படிக்கத்தூண்டுகிறது.
8. அப்படி எதுவுமில்லை.
9. இதுவரை இவற்றைப்படிக்க நேர்ந்ததில்லை.
10. எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்.
11. எதிர்பார்த்தது மாதிரி இல்லாமல் அமையும்போது, ஏமாற்றத்தில் செலவு செய்த காசு வேஸ்ட் என்று தோன்றும்
1. கதைகள், வரலாறு, அறிவியல் புனைவுகள்.
பதிலளிநீக்கு2.சுஜாதா, சாண்டில்யன், கல்கி,பாலகுமாரன் போன்று சுவாரஸ்மாக எழுதப்படும் படைப்பாளிகளின் படைப்புக்கள்!
3. ஆனந்த விகடனில் சுகா எழுதிய கட்டுரை, வட்டியும் முதலும், என்.சொக்கன், போன்றவர்களுடையது.
4. கதை, கட்டுரை எதுவென்றாலும் ஓக்கே! சுவாரஸ்மாக இருக்க வேண்டும்.கதை என்றால் சாண்டில்யன், கல்கி கட்டுரை யாராக இருந்தாலும் பரவாயில்லை!
5. ஆம்
6. தற்போதைய எழுத்தாளர்களின் படைப்புக்கள் அதிகம் வாசிக்காமையால் இதைப்பற்றி கூற முடியவில்லை!
7.விமர்சனங்கள், நண்பர்கள் பரிந்துரை, பிரபலமான எழுத்தாளர்கள் என்ற வகையில்
8.அப்படி எதுவும் இல்லை! தீவிர இலக்கியம் பேசும் புத்தகங்கள் பக்கம் போக மாட்டேன்!
9. தேவையில்லாத எதிர்ப்பு என்றே தோன்றுகிறது. இதற்காக எழுதுவதை நிறுத்தியது சரியில்லை!
10.இதுவரை வா. மணிகண்டன் மட்டுமே படித்து இருக்கிறேன்! இதனால் மற்றவர்களை பற்றி சொல்ல வாய்ப்பு இல்லை!
11. உடையார் போன்ற நூல்களை வாங்க நினைத்தாலும் அதன் விலை அதிகமாகத் தோன்றுகிறது. புத்தகச்சந்தையில் நிறைய புத்தகங்கள் வாங்க நினைக்கையில் இப்படி ஒரே புத்தகம் பல புத்தகங்களை தின்றுவிடுவது வருத்தம். விலை பற்றி கவலைப்படாமல் படைப்புக்காக சுஜாதா நாவல்கள் வாங்கியிருக்கிறேன். என்ஸைக்ளோ பீடியா இயர் புக் போன்ற பொதுஅறிவு புத்தகங்களாயின் வாங்கிவிடுவேன்.
12.நிறைய இருக்கிறது! போன புத்தக சந்தையில் வாங்கிய நந்திபுரத்து நாயகி அதில் ஒன்று! அதற்கு கொடுத்த விலை அதிகம்.
13. உண்மையான ஆர்வம்! நிறைய தொடர்கதைகளை வெட்டி தொகுத்து வைத்திருந்தேன் ஒருகாலத்தில்!
14. வாங்கியதில் குறைந்த பட்சம் 70லிருந்து80 சதவீதம் படித்துவிடுவேன்! நாள் ஆனாலும்!
15.புத்தகங்களை இரவல் கொடுக்க எனக்கு மனசு இருக்காது. சில சமயம் பாதுகாக்க முடியாமல் யாருக்காவது கொடுத்துவிட்டு கொடுத்துவிட்டோமே என்று வருந்துவது உண்டு.
16. புத்தக ஸ்டால்களில் நாம் தேடும் புத்தகத்தை எடுத்துக்கொடுக்க நபர்கள் இல்லை! பிற ஸ்டால்களில் வாங்கிய புத்தகத்தை கையிலேயே சுமக்க வேண்டியுள்ளது பாதுகாப்பாய் வெளியே வைக்க முடிவது இல்லை!
17. முன்பெல்லாம் தேவைப்படும்போது வாங்குவேன்! இடையில் நூல்வாங்குவதை நிறுத்திவிட்டேன்! இப்போது அவ்வப்போது வாங்குகிறேன்! புத்தக கண்காட்சிக்கு காத்திருந்து சில புத்தகங்களை வாங்குகிறேன்!
18. அப்படி எதுவும் இல்லை!
19. அப்படி வாங்குவது இல்லை!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி!
1, கதை ..தமிழ் ஆங்கிலம் ..அப்புறம் சில கட்டுரைகளும்
பதிலளிநீக்கு2, தி .ஜானகிராமன் ,சுஜாதா ,பாலகுமாரன் ,இந்துமதி ,சிவசங்கரி ,வித்யா சுப்பிரமணியம் ,அனும்மா ,லக்ஷ்மிம்மா ,ப்ரியா கல்யாணராமன் ,சு .சமுத்திரம் ,வாஸந்தி ..ஜெயகாந்தன்
3, விழிப்புணர்வு ....சமஸ் எழுதிய // யாருடைய எலிகள் நாம் //
4, ஏதாவது டாக்குமென்ட்ரி பார்த்தா ..உடனே லைப்ரரி சென்று எடுத்து வருவேன் ..அப்படி படித்த புக்ஸ் ஹிட்லர் மற்றும் சர்ச்சிலின் வாழ்க்கை வரலாறு ,ANASTASIA ,ANNE FRANK
5, வாங்க இங்கே சந்தர்ப்பம் இல்லை எல்லாம் லைப்ரரிதான் ..
6, SKIP :)
7, விமர்சனம்
8, அரக்கு மாளிகை ,மெர்க்குரி பூக்கள் ,MEIN KAMPF.. இவற்றை தேடோ தேடுகிறேன்
9, உண்மையாய் நேர்மையாய் சொல்கிறேன் .. ..
அந்த புத்தகத்தில் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயம் எனக்கு பிடிக்க வில்லை .எதை ஆவணப்படுத்தனும் என்று ஒரு வரைமுறை இருக்கு ..செவி வழி கேட்டதெல்லாம் உண்மையாகுமா ?நம் மக்கள் எதையும் நம்ப கூடியவர்கள்தான்
30 ,40 வருடம் கழிந்து அடுத்த ஜெனரேஷன் இதை வாசித்து உண்மைன்னு நினைத்தா ?
எதிர்வினை ...பெருமாள் முருகன் 2010ல் எழுதிய புத்தகத்துக்கு இப்போ எதற்கு பப்ளிசிட்டி .?
என்னை பொறுத்தவரை நாம் யாரையும் எதற்கும் நிர்பந்திக்க முடியாது ..பிடிச்சவங்க வாங்கி படிக்கட்டும் விருப்பம் இல்லையா பெட்டெர் இக்னோர் ..
புக்ஸ் எரிச்சு சுற்றுசூழலை மாசு படுத்த வேணாம் .........
10, யாருமில்லை
12, அப்படி எதவுமில்லை
13,உண்மையான ஆர்வம்
14, அனைத்தும்
15, எல்லாம் LOFT இல் இருக்கு
17,கடைகளுக்கு மற்றும் amazon இல்
19..இல்லை
ஆஹா இக்கேள்விகளுக்கு பதில்களை தனி பதிவாக போட்டு விடலாம்போல் இருக்கிறதே?
பதிலளிநீக்கு1.கதைகள், கட்டுரைகள், வரலாறுகள். அறிவியல் கதைகள்....(எல்லாம் வாங்க முடிவதில்லை....எல்லாம் பாக்கெட்தான்...அப்புறம் வீட்டுல..யாரு பதில் சொல்லுறது...எங்கள் இருவருக்கும் இது பொருந்தும்.....)
பதிலளிநீக்குசுஜாதா மனதை மிகவும் கவர்ந்தவர். எஸ்.ராவும் பிடிக்கும். குறிப்பாக அவரது கட்டுரைகள்..லேனாவின் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும்....பழைய எழுத்தாளர்களில்...தேவன், கல்கி, அப்புசாமி கதைகள், சாவியின் வாஷிங்டனில் திருமணம், சங்கர்லால் கதைகள்...இப்படி... இன்னும் பலர் இருக்கின்றனர். இப்போது பல நூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. பெரும்பான்மையான எழுத்தாளர்களின் கட்டுரை, கதைகள் பிடித்தால் நிச்சயமாக வாசிப்பதுண்டு.
சமஸ் எழுதும் கட்டுரைகளில் இப்போது ஆர்வம். மிக நன்றாக எழுதுகின்றார்.
சில கேள்விகள் கேட்பது எளிது...பதில் கஷ்டம்....கொஞ்சம்...