அரியலூர் அருகே உள்ளே கங்கை கொண்ட
சோழபுரம் 11 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை
சோழர்களின் தலை நகரமாக இருந்துள்ளது. இதைத் தலைநகரமாக ஆக்கியது முதலாம்
ராஜேந்திர சோழன்.
இந்த வருடம் மார்ச் மாதத்தில் சென்று
வந்தது.உடனடியாகப் பதிவு போடமுடியாமல் தள்ளிக் கொண்டே வந்தது. இப்போதும்
அடுத்த வாரம் வெளியிடலாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் இந்நாளின்
சிறப்பு கருதி இன்றே இந்தப் பதிவை வெளியிடுவது என்று தீர்மானித்து, அங்கு
எடுத்த புகைப்படங்களுடன் பகிர்கிறேன்.
"கொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது" என்கிறது விக்கி! விக்கி சுட்டியைக் க்ளிக்கி விவரங்களை அங்கு படிக்கவும்.
























