1000 வது வருடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1000 வது வருடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.7.14

கங்கை கொண்ட சோழபுரம்




அரியலூர் அருகே உள்ளே கங்கை கொண்ட சோழபுரம் 11 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலை நகரமாக இருந்துள்ளது. இதைத் தலைநகரமாக ஆக்கியது முதலாம் ராஜேந்திர சோழன்.




இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை இவை. இது பற்றிய தமிழ் இந்து கட்டுரை படிக்க படிக்க இங்கே க்ளிக்கி படித்து மகிழவும்.




இந்த வருடம் மார்ச் மாதத்தில் சென்று வந்தது.உடனடியாகப் பதிவு போடமுடியாமல் தள்ளிக் கொண்டே வந்தது. இப்போதும் அடுத்த வாரம் வெளியிடலாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் இந்நாளின் சிறப்பு கருதி இன்றே இந்தப் பதிவை வெளியிடுவது என்று தீர்மானித்து, அங்கு எடுத்த புகைப்படங்களுடன் பகிர்கிறேன்.





தஞ்சைப் பெரிய கோவிலும் கங்கை கொண்ட சோழபுரமும் அண்ணன் தம்பிகள்! அண்ணன் பெரிய கோவில் 20 வருடம் மூத்தது.






"கொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது" என்கிறது விக்கி!  விக்கி சுட்டியைக் க்ளிக்கி விவரங்களை அங்கு படிக்கவும்.




இயற்கைச் சீற்றங்களாலும் அந்நியப் படையெடுப்புக் கொள்ளையர்களாலும் சிதைக்கப்பட்டுள்ள கட்டடக் கலையின் உச்சமான இந்த சோழர்களின் மாபெரும் கலைப் படைப்பில் காலெடுத்து வைக்கும்போதே ஒரு அதிர்வு ஏற்படுவது உண்மை. 



ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் காலடி பட்ட தடங்களில் நடக்கும்போது உணர்வுகள் பொங்கி வருகின்றன.



தாராசுரத்திலிருந்து இங்கு வந்த நேரம் பிற்பகல் 12 மணியைத் தாண்டியிருக்க,  சன்னதி மூடியிருந்தது. எனவே உள்ளே செல்ல முடியவில்லை.



கிளம்ப மனமின்றி புறப்பட்டோம்.