கவிதை முயற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை முயற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.6.13

மனவரிகள் 6 2013




                                                                           

காலம் காலமாக
சொல்வதுதான்...

நேற்று நீ சொன்னதைத்தான்
இன்று நான் சொல்கிறேன்...
நீ காதல் என்கிறாய்
நான் கவிதை என்கிறேன்..

பொய்க்குதான் எத்தனை பெயர்கள்...

**********************************************************


                                                                         

காற்று
காதலைப் போலவே வீசுகிறது
ஊடல் கொண்ட
மதியங்களின் கோப தருணங்களில் வெப்பமாக,
இரவுகளின் இனிமையில் சுகமாக..

****************************************************************

                                                                            

காற்றில் கலந்த
காதலின் வாசம்
பூமியெங்கும்
நேசப் பிரவாகம்

********************************************************************

                                                                           

நிலவில்
நீரிருக்கிறதோ இல்லையோ
(குளத்து)
நீரில்
நிலவு இருக்கிறது!
  

10.4.13

மனவரிகள்....


                                                                     
                                                                   



நதியில் ஓடும் நீராய்
காலம்
நீரோடு சென்று விட்டாலும்
சில
நினைவுகள் மட்டும்
நனைந்த மண்ணாய்
மனதில்
ஈரமாகவே எப்போதும்.

********************************************** 


ஒவ்வொரு
வளர்பிறையிலும்
வானம் பார்த்தபடி
காத்திருக்கிறேன்
நிலவு
வளர்ந்து
ஒருநாள்
வானத்தையே நிறைக்குமென...

***************************************************



இருப்பதில்
நாட்டமில்லாது
இல்லாததை நினைத்து
ஏதோ ஒன்றை
எப்போதும்
தேடிக் கொண்டேயிருக்கும்
மனம்.

**************************************************

 

பயணம் வீணாகாமல்
படுத்தபடி
வாசித்துக் கொண்டு வந்த
புத்தகம் விலக்கி
ஜன்னல் வழி
வானம் பார்க்கும்போதெல்லாம்
கண்ணில் பட்டது
என் கூடவே வந்த
ஏக்க நிலா....
விழுப்புரத்திலிருந்து
ஜன்னல் வழியே
என்னைப் பார்த்தபடியே
உடன் வந்தது
அந்த
ஏக்கத்தில் மெலிந்த
அரைநிலா.
.
விடாமல் விரட்டிய
நிலவை
தாம்பரத்தில் துறந்து
என் வழி நடந்தேன்.
நிமிர்ந்து பார்க்காவிடினும்
நிலா கூட வருவது
நீரில் தெரிகிறது..