செவ்வாய், 4 ஜூன், 2013

மனவரிகள் 6 2013
                                                                           

காலம் காலமாக
சொல்வதுதான்...

நேற்று நீ சொன்னதைத்தான்
இன்று நான் சொல்கிறேன்...
நீ காதல் என்கிறாய்
நான் கவிதை என்கிறேன்..

பொய்க்குதான் எத்தனை பெயர்கள்...

**********************************************************


                                                                         

காற்று
காதலைப் போலவே வீசுகிறது
ஊடல் கொண்ட
மதியங்களின் கோப தருணங்களில் வெப்பமாக,
இரவுகளின் இனிமையில் சுகமாக..

****************************************************************

                                                                            

காற்றில் கலந்த
காதலின் வாசம்
பூமியெங்கும்
நேசப் பிரவாகம்

********************************************************************

                                                                           

நிலவில்
நீரிருக்கிறதோ இல்லையோ
(குளத்து)
நீரில்
நிலவு இருக்கிறது!
  

10 கருத்துகள்:

 1. பொய்யையும் நிலவையும் மிகவும் ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 2. மன வரிகள் அருமை.

  நீரில் நிலவு அட்டகாசம்:)!

  பதிலளிநீக்கு
 3. காற்றின் வாசத்தில் காதலி
  காதில் சொன்ன பொய்யதால்
  ஊடல் மிகவாகவே நிலவும்
  ஊறும்கண் நீரினில் தோன்றியதோ?....

  அத்தனையும் அருமை!
  ஒவ்வொன்றையும் மிகவே ரசித்தேன் சகோ!
  வாழ்த்துக்கள்!...

  பதிலளிநீக்கு
 4. பொய்க்குதான் எத்தனை பெயர்கள்...//
  உண்மைதான்

  பதிலளிநீக்கு
 5. காதலுக்குப் பொய்யழகு.

  நீரில் தெரியும் நிலா பிரமாதம். எத்தனை அழகு. பிம்பமாக இருந்தாலும்
  அசையாத,ஒளிவீசும் கடவுள்.
  வாழ்த்துகள் ஸ்ரீராம்..

  பதிலளிநீக்கு
 6. எல்லாமே அருமையான கவிதைகள். முக்கியமாய்க் காற்று என்னைக் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
 7. (குளத்து)நீரில்
  இருக்கும் நிலவு அழகு ..!

  பதிலளிநீக்கு

 8. மற்ற கவிதைகளை விட நிலவு கவிதை அருமை! இயற்கையாக ரசிக்கும்படி இருக்கிறது.

  நிலவில் நீர் இருகிறதா, யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லா குளத்து நீரிலும் நிலவு இருப்பது நிஜம்!

  பதிலளிநீக்கு
 9. கவிதை முயற்சி......

  நன்றாகவே இருக்கிறது கவிதைகள். தொடருங்களேன்.....

  பதிலளிநீக்கு
 10. ///நிலவில்
  நீரிருக்கிறதோ இல்லையோ
  (குளத்து)
  நீரில்
  நிலவு இருக்கிறது! ///

  சூப்பர்ர்ர்.. இங்கு ஒரு கவிதை நினைவுக்கு வருது...

  ஆற்றில் தெரியும் நிலவின்
  விம்பம் பார்த்து
  தானும் வானத்தில்
  இருப்பதாய் மகிழ்கிறதாம்
  ஆற்றங்கரை மரத்து
  வெளவால்ல்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!