இப்போதெல்லாம் கடைகளிலிருந்து மேகி, நார் சூப் ரெடிமேட் பாக்கெட் வாங்கிச் செய்கிறார்கள். உடனடி சூப்! நாங்களும் செய்திருக்கிறோம்.
ஆங்காங்கே தெருமுனையில் ஐஸ்க்ரீம் கடை போலக் குடை அமைத்து, அதில் இரண்டு மூன்று பாத்திரங்களை (அடுப்பின்மேல்?) வைத்து காளான் சூப், வாழைத்தண்டு சூப், வெஜிடபிள் சூப் என்றெல்லாம் விற்குமிடத்தில் வாங்கியும் குடித்திருக்கிறேன்.
கார்ன்ஃப்ளேக்ஸ் மேலே மிதக்கவிட்டுத் தருவார்கள்.ஆங்காங்கே தெருமுனையில் ஐஸ்க்ரீம் கடை போலக் குடை அமைத்து, அதில் இரண்டு மூன்று பாத்திரங்களை (அடுப்பின்மேல்?) வைத்து காளான் சூப், வாழைத்தண்டு சூப், வெஜிடபிள் சூப் என்றெல்லாம் விற்குமிடத்தில் வாங்கியும் குடித்திருக்கிறேன்.
இந்தமுறை ஒரு மாறுதலுக்கு வெங்காயம், பூண்டு, தக்காளியை மிக்ஸியில் அரைத்து விட்டேன். ஒரு பெரிய வெங்காயத்தை பூவாய் நறுக்கித் தூவி விட்டேன். ஆனால், இதை விட முதல் மாடல்தான் நன்றாயிருந்தது!



