புதுமொழிகள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுமொழிகள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.6.15

புதுமொழிகள்!



ஃபோனில்லா வீட்டில் ஒரு சார்ஜர் வாங்கி வா (இதன் ஒரிஜினல் தெரியும்தானே?!!)

 
 ஆள் பாதி ஆன்ட்ராய்ட் மீதி


ஃபேஸ்புக் இனிது ட்விட்டர் இனிது என்பார்
வாட்ஸப் வைரல் அறியாதார்.


ஆப்ஸ் இல்லா ஆன்ட்ராய்ட் குப்பையிலே...


துணிந்தபின் மனமே துணியைத் துவைத்து விடு.


ஃபோனைக் கண்டா சார்ஜரைக் காணோம், சார்ஜரைக் கண்டா கரண்டைக் காணோம்.


உலை வைக்கக் காசில்லா விட்டாலும் தலை(வர்) படம் பார்க்கத் தவறேல்/தவறாதே.

ஆடற மாட்டை அடிச்சு உதைக்கணும்.  பாடற மாட்டைப் புடிச்சுக் கட்டணும். வாயை அடைக்கணும்.


கந்தலானால் கசக்கி எறி.  கூழானால் போஸ்டர் ஒட்டு.


முற்பகல் போனால் பிற்பகலிலும் வராது. (கரண்ட்)


கற்க கசடற கற்பவை கற்றபின்
விற்க அதற்குத் தக.


எந்தையும் தாயும் அலைபேசி இல்லாமல் இருந்ததும் இந்நாடே...


திரைகடலோடியும் திரைப்படம் பாரு.


ஆண்டிராய்டின் அழகு ஆப்ஸில் தெரியும்..


அரசன் அன்று கொல்வான்.. ஆண்டிராய்ட் நின்று கொல்லும்.


அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்; ஆண்டிராய்ட் இல்லாதவன் நொந்து நூலாவான்.