வியாழன், 11 ஜூன், 2015

புதுமொழிகள்!



ஃபோனில்லா வீட்டில் ஒரு சார்ஜர் வாங்கி வா (இதன் ஒரிஜினல் தெரியும்தானே?!!)

 
 ஆள் பாதி ஆன்ட்ராய்ட் மீதி


ஃபேஸ்புக் இனிது ட்விட்டர் இனிது என்பார்
வாட்ஸப் வைரல் அறியாதார்.


ஆப்ஸ் இல்லா ஆன்ட்ராய்ட் குப்பையிலே...


துணிந்தபின் மனமே துணியைத் துவைத்து விடு.


ஃபோனைக் கண்டா சார்ஜரைக் காணோம், சார்ஜரைக் கண்டா கரண்டைக் காணோம்.


உலை வைக்கக் காசில்லா விட்டாலும் தலை(வர்) படம் பார்க்கத் தவறேல்/தவறாதே.

ஆடற மாட்டை அடிச்சு உதைக்கணும்.  பாடற மாட்டைப் புடிச்சுக் கட்டணும். வாயை அடைக்கணும்.


கந்தலானால் கசக்கி எறி.  கூழானால் போஸ்டர் ஒட்டு.


முற்பகல் போனால் பிற்பகலிலும் வராது. (கரண்ட்)


கற்க கசடற கற்பவை கற்றபின்
விற்க அதற்குத் தக.


எந்தையும் தாயும் அலைபேசி இல்லாமல் இருந்ததும் இந்நாடே...


திரைகடலோடியும் திரைப்படம் பாரு.


ஆண்டிராய்டின் அழகு ஆப்ஸில் தெரியும்..


அரசன் அன்று கொல்வான்.. ஆண்டிராய்ட் நின்று கொல்லும்.


அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்; ஆண்டிராய்ட் இல்லாதவன் நொந்து நூலாவான்.

21 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    வித்தியாசமான கலக்கல்... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    வித்தியாசமான கலக்கல்... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. காலத்தின் கோலத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள் :)).

    எந்தையும் தாயும்... அருமை.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... காலத்தின் கண்ணாடிகள்!

    பதிலளிநீக்கு
  5. இன்றைய யதார்த்ததை உணர்த்தும் புது மொழிகள் ! அண்ட்ராய்ட் ரொம்பவே அலைக்கழிக்குது இல்ல ?....

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு

  6. எதைச் சொல்ல எதை விட. எல்லாமே அருமையான புது மொழிகள் மிகவும் ரசித்தது எந்தையும் தாயும்.... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. ஆண்டியும் ஒரு நாள் அரசனாவான்.
    ஆண்ட்ராய்ட் இல்லாதவனோ ஆண்டியாவே இருப்பான்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு

  8. புதுமொழிகள் புதுமையானதே.... ஸூப்பர்...

    பதிலளிநீக்கு
  9. #ஃபோனைக் கண்டா சார்ஜரைக் காணோம், சார்ஜரைக் கண்டா கரண்டைக் காணோம்.#
    இப்படி நீங்க சொல்வீங்க என்றுதான் இப்போ, கரெண்டை சேமித்து வைச்சுக்கிற powerbank வந்திடுச்சு போலிருக்கு :)

    பதிலளிநீக்கு
  10. அட....கலக்கலா..... இருக்கே...!!!

    பதிலளிநீக்கு
  11. - நன்றி ரூபன்.

    - நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    - நன்றி ராமலக்ஷ்மி.

    - நன்றி கீதமஞ்சரி.

    - நன்றி DD.

    - நன்றி வெங்கட் நாகராஜ்.

    - நன்றி டி என் முரளிதரன்.

    - நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

    - நன்றி சாமான்யன் சாம்.

    - நன்றி ஜி எம் பி ஸார்.

    - நன்றி பழனி கந்தசாமி ஸார்.

    - நன்றி சுப்பு தாத்தா.

    - நன்றி புலவர் ஐயா.

    - நன்றி கில்லர்ஜி.

    - நன்றி பகவான்ஜி.

    - நன்றி சென்னை பித்தன் ஸார்.

    - நன்றி உமையாள் சகோ.

    பதிலளிநீக்கு
  12. புது மொழிகள் ரசிக்க வைத்தன! சிரிக்கவும் வைத்தன! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. புது மொழிகள் அனைத்துமே கலக்கல்ஸ்! அதிலும் அந்தத் திருக்குறள் உல்டாஸ் அருமை....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!