எதைக் கண்டு ஏங்குகிறாய்
மயிலே..?
வெளியிலிருக்கும்
வெப்பத்துக்கு
தாகத்துக்குக் கூட
நீரில்லை
சிறையாயிருந்தாலும்
உள்ளேயே வந்து விடுகிறேன்
என்று
ஒற்றைக் கால் தவமோ...?
=========================================
மானே...
உள்ளே என்ன செய்கிறாய்?
நீயும் வாயேன்.
மானாட, மயிலாட
என்று ஆடலாம்!
=========================================
வானிலை அறிக்கையைக்
கொஞ்சம்
சத்தமாக வையுங்கள்
ரமணன் சொல்கேட்டு
மழை வரும் நாள்
அறிந்து
ஆடுகிறேன்..
=========================================
இந்த மயில்
ஆட
வேண்டுமென்றால்
எங்கள் ப்ளாக்
ஆ'சிரி'யர்கள்
பாட வேண்டும்...
எங்கள் ப்ளாக் ஆ'சிரி'யர்கள்
பாடினால்,
எங்கள் ப்ளாக் வாசகர்கள்
ஓடிவிடுவார்களே!!
