ராங்
கால் எல்லோருக்கும் வரும். எப்போது வரும், எப்படி வரும் என்று சொல்ல
முடியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டாகக் கழுத்தறுக்க வரும்!
அல்லது
'...............' இன்சுரன்ஸ்லேருந்து பேசறோம். ஒரு பென்ஷன் ப்ளான்... எங்க கிட்ட ஒரு ப்ளான் இருக்கு... மாசம் பத்தாயிரம் ரூபாய் போட்டீங்கன்னா.... " என்று ஆரம்பித்து சில நொடிகள் பேசி விட்டு "ஒரு பத்து நிமிஷம் பேசலாமா ஸார்.."
வெங்கட்டுக்கு வந்த ராங் கால் போல எனக்கும் சில வருடங்களுக்கு முன்னால்
இரவுகளில் ஒரு கால் வரும். நாம் என்ன பேசினாலும் ஒரு பெண் குரல் 'உம்' கொட்டி
விட்டு மெல்லச் சிரிக்கும் சப்தம் மட்டும் கேட்கும். அது லேண்ட் லைனில்
வந்த தொந்தரவு. கொஞ்ச நாள் "யார்? யார்?" என்று கேட்டு விட்டு அப்புறம் அந்த
கால் வந்தாலே கட் செய்து விடுவது வழக்கம்! இன்று வரை அது யார் என்று
தெரியாது!
அவனும் ஆங்கிலத்தில் சொல்லிப் பார்த்தான். தொடர்ந்து எதிர்முனை ஹிந்தியில் பாச மழை பொழியவே, இவன் துப்பாக்கி படத்தில் வந்த, விஜய் பேசும் ஹிந்தி வசனத்தை ( "ஸுனா... துமாரா மாலிக்னே .." என்று தொடங்கி "டர்ர்ர்ர்ர் ரஹேன்னா" என்று முடியும்) அதே ராகத்தில் பேசியிருக்கிறான். எதிர்முறை மௌனமாகி ஃபோனைக் கட் செய்து விட்டதாம்! என்ன நினைத்துக் கொண்டார்களோ... யாரோ எவரோ...!