விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.12.18

பாப்பூ....


கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு பூஜை நாளில் வீட்டுக்கு வந்த குழந்தை பற்றி எழுதியிருந்தேன்.  இதுவும் ஒரு குழந்தையைப் பார்த்துக் கொண்ட விஷயம்தான்.  ஆனால் சற்றே வித்தியாசம் உண்டு.

5.2.14

ராங் கால் - இப்படியும் சமாளிக்கலாம்!




ராங் கால் எல்லோருக்கும் வரும். எப்போது வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டாகக் கழுத்தறுக்க வரும்!

முக்கியமான வேலையாக இருப்போம். அது போல நேரங்களில் இந்த ராங் கால்களும், 'அநாதை ஆஸ்ரமத்திலிருந்து பேசறோம்', 'வோடஃபோனிலிருந்து பேசறோம்' என்றெல்லாம் கடுப்பேத்தும் கால்கள் வரும்.

"சார். நாங்க '............' இன்வெஸ்ட்மென்ட்லேருந்து பேசறோம்..."


அல்லது


 '...............' இன்சுரன்ஸ்லேருந்து பேசறோம். ஒரு பென்ஷன் ப்ளான்... எங்க கிட்ட ஒரு ப்ளான் இருக்கு... மாசம் பத்தாயிரம் ரூபாய் போட்டீங்கன்னா.... " என்று ஆரம்பித்து சில நொடிகள் பேசி விட்டு "ஒரு பத்து நிமிஷம் பேசலாமா ஸார்.." 

"வேண்டாம் மேடம்... நான் ஒரு முக்கியமான..."

"ரெண்டு நிமிஷம்தான் ஸார்.... உங்க வயசு என்ன?"

"பதினாறு" 

பொட்டென்று ஃபோன் வைக்கப் பட்டு விடும்!

சில சமயங்களில் ராங் கால் ரங்கசாமிகளை இழு இழு என்று இழுப்பதும் உண்டு. எவ்வளவு தரம் சொன்னாலும் திரும்பத் திரும்ப நம் நம்பருக்கே தொடர்பு கொள்(ல்)வார்கள்! 

"கோவிந்தன்?"

"இல்லீங்களே.." 

"எங்கே அவர்?"

"எங்க இருப்பார்னு தெரிலை"

"கொஞ்சம் கூப்பிடுங்களேன்... ஒரு மேட்டர் பேசணும்.."

"கோவிந்த்... கோவிந்த்... வர மாட்டேங்கறாருங்க.... இல்லைன்னு சொல்லச் சொல்றார்..."

இப்படியும் இழுப்பதுண்டு.
வெங்கட்டுக்கு வந்த ராங் கால் போல எனக்கும் சில வருடங்களுக்கு முன்னால் இரவுகளில் ஒரு கால் வரும். நாம் என்ன பேசினாலும் ஒரு பெண் குரல் 'உம்' கொட்டி விட்டு மெல்லச் சிரிக்கும் சப்தம் மட்டும் கேட்கும். அது லேண்ட் லைனில் வந்த தொந்தரவு. கொஞ்ச நாள் "யார்? யார்?"  என்று கேட்டு விட்டு அப்புறம் அந்த கால் வந்தாலே கட் செய்து விடுவது வழக்கம்! இன்று வரை அது யார் என்று தெரியாது!  


நேற்று நான் தூங்கியவுடன் ஒரு ராங் கால் வந்திருக்கிறது. பேசியவர் ஹிந்தியிலேயே 'போல்' 'போல்' என்று 'போலி'யிருக்கிறார்.

மனைவி 'புரியவில்லை புரியவில்லை' என்று தமிழில் கதறியும் மறுபடி மறுபடி வந்திருக்கிறது. 

அடுத்தமுறை பையன் கையில் வாங்கினான். 

அவனும் ஆங்கிலத்தில் சொல்லிப் பார்த்தான். தொடர்ந்து எதிர்முனை ஹிந்தியில் பாச மழை பொழியவே, இவன் துப்பாக்கி படத்தில் வந்த, விஜய் பேசும் ஹிந்தி வசனத்தை ( "ஸுனா... துமாரா மாலிக்னே .." என்று தொடங்கி "டர்ர்ர்ர்ர்  ரஹேன்னா" என்று முடியும்) அதே ராகத்தில் பேசியிருக்கிறான். எதிர்முறை மௌனமாகி ஃபோனைக் கட் செய்து விட்டதாம்! என்ன நினைத்துக் கொண்டார்களோ... யாரோ எவரோ...!


பையனுக்கு வருத்தம். "இன்னும் ஒரு வசனம் பாக்கிம்மா..."அந்த பயம் இருக்கணும்டா" சொல்றதுக்குள்ள வச்சுட்டாங்க" என்றானாம்.

அப்புறம் அந்த ஹிந்தி கால் வரவில்லை!