புதன், 5 பிப்ரவரி, 2014

ராங் கால் - இப்படியும் சமாளிக்கலாம்!




ராங் கால் எல்லோருக்கும் வரும். எப்போது வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டாகக் கழுத்தறுக்க வரும்!

முக்கியமான வேலையாக இருப்போம். அது போல நேரங்களில் இந்த ராங் கால்களும், 'அநாதை ஆஸ்ரமத்திலிருந்து பேசறோம்', 'வோடஃபோனிலிருந்து பேசறோம்' என்றெல்லாம் கடுப்பேத்தும் கால்கள் வரும்.

"சார். நாங்க '............' இன்வெஸ்ட்மென்ட்லேருந்து பேசறோம்..."


அல்லது


 '...............' இன்சுரன்ஸ்லேருந்து பேசறோம். ஒரு பென்ஷன் ப்ளான்... எங்க கிட்ட ஒரு ப்ளான் இருக்கு... மாசம் பத்தாயிரம் ரூபாய் போட்டீங்கன்னா.... " என்று ஆரம்பித்து சில நொடிகள் பேசி விட்டு "ஒரு பத்து நிமிஷம் பேசலாமா ஸார்.." 

"வேண்டாம் மேடம்... நான் ஒரு முக்கியமான..."

"ரெண்டு நிமிஷம்தான் ஸார்.... உங்க வயசு என்ன?"

"பதினாறு" 

பொட்டென்று ஃபோன் வைக்கப் பட்டு விடும்!

சில சமயங்களில் ராங் கால் ரங்கசாமிகளை இழு இழு என்று இழுப்பதும் உண்டு. எவ்வளவு தரம் சொன்னாலும் திரும்பத் திரும்ப நம் நம்பருக்கே தொடர்பு கொள்(ல்)வார்கள்! 

"கோவிந்தன்?"

"இல்லீங்களே.." 

"எங்கே அவர்?"

"எங்க இருப்பார்னு தெரிலை"

"கொஞ்சம் கூப்பிடுங்களேன்... ஒரு மேட்டர் பேசணும்.."

"கோவிந்த்... கோவிந்த்... வர மாட்டேங்கறாருங்க.... இல்லைன்னு சொல்லச் சொல்றார்..."

இப்படியும் இழுப்பதுண்டு.
வெங்கட்டுக்கு வந்த ராங் கால் போல எனக்கும் சில வருடங்களுக்கு முன்னால் இரவுகளில் ஒரு கால் வரும். நாம் என்ன பேசினாலும் ஒரு பெண் குரல் 'உம்' கொட்டி விட்டு மெல்லச் சிரிக்கும் சப்தம் மட்டும் கேட்கும். அது லேண்ட் லைனில் வந்த தொந்தரவு. கொஞ்ச நாள் "யார்? யார்?"  என்று கேட்டு விட்டு அப்புறம் அந்த கால் வந்தாலே கட் செய்து விடுவது வழக்கம்! இன்று வரை அது யார் என்று தெரியாது!  


நேற்று நான் தூங்கியவுடன் ஒரு ராங் கால் வந்திருக்கிறது. பேசியவர் ஹிந்தியிலேயே 'போல்' 'போல்' என்று 'போலி'யிருக்கிறார்.

மனைவி 'புரியவில்லை புரியவில்லை' என்று தமிழில் கதறியும் மறுபடி மறுபடி வந்திருக்கிறது. 

அடுத்தமுறை பையன் கையில் வாங்கினான். 

அவனும் ஆங்கிலத்தில் சொல்லிப் பார்த்தான். தொடர்ந்து எதிர்முனை ஹிந்தியில் பாச மழை பொழியவே, இவன் துப்பாக்கி படத்தில் வந்த, விஜய் பேசும் ஹிந்தி வசனத்தை ( "ஸுனா... துமாரா மாலிக்னே .." என்று தொடங்கி "டர்ர்ர்ர்ர்  ரஹேன்னா" என்று முடியும்) அதே ராகத்தில் பேசியிருக்கிறான். எதிர்முறை மௌனமாகி ஃபோனைக் கட் செய்து விட்டதாம்! என்ன நினைத்துக் கொண்டார்களோ... யாரோ எவரோ...!


பையனுக்கு வருத்தம். "இன்னும் ஒரு வசனம் பாக்கிம்மா..."அந்த பயம் இருக்கணும்டா" சொல்றதுக்குள்ள வச்சுட்டாங்க" என்றானாம்.

அப்புறம் அந்த ஹிந்தி கால் வரவில்லை!

17 கருத்துகள்:

  1. பையனையே எடுக்கச் சொல்லுங்க. இங்க வர அனானிமஸ் கால் எதையும் எடுக்கமாட்டோம். எக்ஸ்டர்னல் என்றே காலர் ஐடியில் தெரியும்.

    பதிலளிநீக்கு
  2. எதிர்முனையின் "அந்த பயம் எனக்குப் பிடிச்சிருக்கு":)!

    பதிலளிநீக்கு
  3. எதிர்முனையின் "அந்த பயம் எனக்குப் பிடிச்சிருக்கு":)!

    பதிலளிநீக்கு
  4. சினிமா வசனம் நல்ல ஐடியா... இனி வரட்டும் ராங் கால் ... செத்தான் சேகர்...

    பதிலளிநீக்கு
  5. உங்கள் மகன் விஜய் ரசிகர் என்பது தெரிந்து விட்டது... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  6. துப்பாக்கி படத்தில் வந்த, விஜய் பேசும் ஹிந்தி வசனத்தை ( "ஸுனா... துமாரா மாலிக்னே .." என்று தொடங்கி "டர்ர்ர்ர்ர் ரஹேன்னா" என்று முடியும்) அதே ராகத்தில் பேசியிருக்கிறான்.
    //
    ஐடியா சூப்பர் .. வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  7. இந்தக்கால குழந்தைகள் புத்திசாலிகள்.

    பதிலளிநீக்கு
  8. செத்தான் சேகரா..?
    பாவங்க சேகர். என்ன செஞ்சாரு?

    பதிலளிநீக்கு
  9. ஜெயந்தி எஸ். அவர்களைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். எங்களுக்கு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வரும். நீங்க சொல்றாப்போல் நடு ராத்திரியில் மொபைலில் ஒரு கால் வரும். இன்டர்நேஷனல் கால்னு தெரியும். ஆனால் யார் பேசறாங்கனு புரியாது. நம்பர் மொபைலிலே இருக்கும் என்பதால் கூகிளிட்டுப் பார்த்தால் பலருக்கும் அந்த நம்பரிலெ இருந்து இதே போல் நட்டநடு ராத்திரியிலே கால் போவது புரிந்தது. அப்புறமா அதைப் புகார் கொடுத்து நிறுத்த வைச்சோம். :)))

    பதிலளிநீக்கு
  10. இன்னும் சில ராங்க் கால் இருக்கு. எழுதினாப் பதிவாயிடும். :))))

    பதிலளிநீக்கு
  11. நான் என்னத்த சொல்ல ?
    நானும் எப்படித்தான் இந்த call களை அவாயுட் பண்றது
    அப்படின்னு யோசிச்சு யோசிச்சு ஒரு தினுசா ஆயிட்டேன்.

    லாஸ்ட் தடவை, ஒரு முக்கியமான அலுவலகத்திலே இருக்கும்போது கால் .

    அது சரி.
    இரண்டு ஆப்ஷன்ஸ் இருக்கு.

    ஒன்னு லேன்ட் லைன் ரேசீவரை . வச்சுடலாம். எனக்குத் தெரிஞ்சு நிறையா பேர் இதைத் தான் செய்யறாங்க.

    நம்ம யாரு முக்கியம் அப்படின்னு நினைக்கிறோமோ அவங்களுக்கு மட்டும் ஒரு தனி செல் நம்பர் கொடுத்து, வைக்கலாம்.ரெகுலர் செல்லை ஆப் பண்ணி வெச்சுடலாம்.


    இல்லேன்னா, நான் ஒரு தரம் செஞ்சுட்ட மாதிரி,
    நீங்க நினைக்கிற ஆள் இங்கே இல்ல. அப்படின்னு சொல்லிட்டு
    ஆம் ஆத்மி கட்சியோட நம்பர் தரலாம்.

    இன்னொரு தரம் அவங்க பேச ஆரம்பிச்சுடனெ,
    சட்டி சுட்டதடா கை விட்டதடா, பாட்டு இல்லேன்னா,
    போனால் போகட்டும் போடா
    பாட்டு பாடலாம்

    This 1909 is hopeless.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  12. ஹஹஹா.. கடைசி பன்ச் சூப்பர் சார்!!

    பதிலளிநீக்கு
  13. சிரித்து மாளவில்லை! சுவாரஸ்யமான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. இதுக்காகவே உங்க வீட்டுக்கு நட்ட நடு ராத்திரியில போன் செஞ்சு மனோகரா வசனம் பேசனும் . . .

    பதிலளிநீக்கு

  15. வங்கிகளிலிருந்து அடிக்கடி கூப்பிடுவார்கள். என் மனைவி எடுத்து யார் என்றால் என்னிடம்தான் பேசவேண்டும் என்பார்கள். நான் எடுத்து அவர்கள் பேசும் முன்பே எனக்கு வயது 75 ஆகிறது என்றவுடன் கால் கட் ஆகும், !

    பதிலளிநீக்கு
  16. நல்ல பகிர்வு.

    செம ஐடியா - விஜய் வசனம்! :)

    பதிலளிநீக்கு
  17. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!