ஒரு அவசிய வேலையாக பண்ருட்டி செல்ல வேண்டி இருந்தது.
விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருந்த சாலை.
நண்பர் பணம் கொண்டுவர மறந்து விட்டதால், அவர் தேவை இல்லை என்று சொன்னாலும், நீண்ட பயணத்தில் இருக்கிறோமே, எமர்ஜென்சிக்குக் கையில் இருக்கட்டும் என்று முடிவு செய்து, ATM ல் பணம் எடுக்கலாம் என்று அங்கிருந்த KVB ATM சென்றேன்.
முதல் முறை போட்டேன். சத்தம் மட்டும் வந்தது. ரிஸல்ட் எதுவும் வரவில்லை. இரண்டாம் முறை போட்டு 10,000 என்று தொகையையும் குறிப்பிட்டேன். உருளை உருளும் சத்தமும் processing என்று செய்தியும் வந்தது.
பல நொடிகளுக்குப் பின் Sorry, unable to proceed என்ற செய்தியுடன் ஸ்லிப் கையில் வந்து விழுந்தது. என்னவென்று பார்த்தால் மெஷினில் பணம் இல்லையாம்.
வெறுப்புடன் கிளம்பினோம்.
ஒன்றரை மணிநேரம் பயணம் செய்தபின் என்னுடைய அலைபேசியில் பத்தாயிரம் கிரெடிட் செய்யப் பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. கொஞ்சம் கவலைப் பட்டாலும் சரி என்று விட்டு விட்டேன்.
தொடர்ந்த வேகமான பயணத்தின் இன்னொரு முக்கால் மணி நேரம் சென்றபின், என் அலைபேசிக்கு என் வங்கியிலிருந்து வந்த "உங்கள் கணக்கிலிருந்து 10,000 ரூபாய் கழிக்கப் பட்டது" என்ற குறுஞ்செய்தியைப் பார்த்ததும் திகில் வந்தது.
குறுஞ்செய்தி முன் பின்னாக மாறியிருக்கலாமா, என்ன ஆகி இருக்கும், மெஷினில் வங்கி அலுவலர்கள் வந்து பணம் வைத்ததும் நம்முடைய பணம் வெளியில் வந்து கொட்டி இருக்குமோ போன்ற சந்தேகங்கள் அரித்தன.
வங்கி வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால் Sorry, unable to proceed என்ற செய்தி வந்த சீட்டையும், வங்கியிலிருந்து பணம் கழிக்கப்பட்டதாக வந்த செய்தியையும் 'வாட்ஸப்' மூலம் சென்னையில் எனது வீட்டுக்கு அனுப்பி, என் அண்ணன் மகனிடம் விவரம் சொல்லி, வங்கிக்குச் சென்று பார்க்குமாறு கூறினேன்.
அவர்கள் நேரம் ஆகிவிட்டது என்று கூறுவார்கள் என்றும் சொல்லி இந்தச் செய்தியைக் காண்பிக்கச் சொன்னேன்.
வங்கியில் அதே போலச் சொன்னாலும் கவலையை உணர்ந்து கணினியில் பார்த்து, வயிற்றில் பாலை வார்த்தார்கள்.
என்ன குறுஞ்செய்திச் சேவையோ, என்ன பணம் வழங்கும் சேவையோ...
என்னவோ போங்க..
===================================================
சமீபத்தில் ராணுவத்தில் பெண்கள் சேர்ந்திருக்கும் நிலையில் முன்பு கரியப்பா இது பற்றி முன்பு சொன்ன ஒரு கருத்தைப் பார்ப்போமா?
"சேனையில்
சேர்ந்து உழைக்க நம் நாட்டில் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். அதற்குப்
பெண்கள் முன்வர வேண்டியதில்லை. ராணுவ மருத்துவத்துறையில் மட்டுமே
அவர்களுக்கு இடம் உண்டு. அவர்கள் சிறந்த மனைவிமாராகவும், தாய்மாராகவும்
விளங்கட்டும்"
அவரின் வேறு சில கருத்துகள் :
"ராணுவத்தில்
அரசியலைக் கலப்பது விஷத்தைக் கலப்பது போன்றது.. அதை விலக்கி
வையுங்கள்.ஆனால் இந்தியப் ப்ரஜைகள் என்ற முறையில் அரசியலை அறிந்து
கொள்ளுங்கள். அதுபோதும்"
"மாணவர்கள் அரசியலில்
ஈடுபடக் கூடாது. சில அரசியல் கட்சிகளின் கோஷங்களில் மயங்கி,அவர்களது
பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றே மாணவர்களுக்கு நான் சொல்வேன்"
============================= =======