பொழுது போக ஒரு ரிலாக்ஸ் பதிவு..!
சில புகழ் பெற்ற வசனங்களைச் சொன்னால் படம் பெயர் தெரிந்து விடும்.... உதாரணமாக "மாமா.. காஞ்சிப் போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதலடையும்..." என்ற வசனத்தைச் சொன்னால் உடனே படம் பெயர் சொல்லி விட முடியும்... அது போல கீழே உள்ள வசனங்களை வைத்து என்ன படம் என்று கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்...
1) "மாயா...உனக்குள்ள இருக்கற அதே மிருகம்தான் எனக்குள்ளேயும் தூங்கிகிட்டு இருக்கு...அதைத் தட்டி எழுப்பிடாதே..."
"உனக்குள்ள இப்படி ஒரு கிராமத்தான் இருக்கறது தெரியாமப் போச்சு சக்தி..."
2) "கஷ்டப் படாம எதுவும் கிடைக்காது... கஷ்டப் படாம கிடைக்கற எதுவும் நிலைக்கவும் நிலைக்காது..."
3) "வாழ்க்கை ஒரு வட்டம்டா... இங்க ஜெயிக்கறவன் தோப்பான்..தோற்கறவன் ஜெயிப்பான்..."
4) "கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும் நாய் கடிக்காம விடாது"
5) "லதா...விஸ்கியைத்தானே குடிக் கக் கூடாதுன்னு சொன்னே, விஷத்தை இல்லையே?..."
6) "தம்பி....தம்பி....என் பொண்ணு உங்க படத்துல நடிக்கிறதுக்கு எவ்வளவு ஆயிரம் பணம் தருவீங்க... நான் கார் வாங்கணும், பங்களா வாங்கணும்...எஸ்டேட் வாங்கணும்..."
"யோவ் யோவ் யோவ்!...ஏமாந்தா எங்கப்பனையே வாங்கிடுவே போலிருக்கு...இது முதல் படம், கொடுக்கறதை வாங்கிக்கோ..இந்தா நூத்தி ஒரு ரூபாய் அட்வான்ஸ்.."
7) "வாழறத்துக்காக சாகற அளவு ரிஸ்க் எடுக்கத் தயார்.."
8) "சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும்.."
9) "பழமொழி சொன்னா அனுபவிக்கணும்...ஆராயக் கூடாது.."
10) "நான் ஒரு தடவை சொன்னா, ஐநூத்து ஒரு தடவை சொன்ன மாதிரி .... " (வசனம் சரிதான். நூறு இல்லை. .... )
(வாசகர்களே! நீங்களும் உங்களைக் கவர்ந்த வசனங்களையோ / குத்து வசனங்களையோ (Punch dialog) பின்னூட்டத்தில் பதியலாம்.)



