செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

வசனத்தைச் சொன்னா...(திரைப் புதிர்)


பொழுது போக ஒரு ரிலாக்ஸ் பதிவு..!

சில புகழ் பெற்ற வசனங்களைச் சொன்னால் படம் பெயர் தெரிந்து விடும்.... உதாரணமாக "மாமா.. காஞ்சிப் போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதலடையும்..." என்ற வசனத்தைச் சொன்னால் உடனே படம் பெயர் சொல்லி விட முடியும்... அது போல கீழே உள்ள வசனங்களை வைத்து என்ன படம் என்று கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்...

1) "மாயா...உனக்குள்ள இருக்கற அதே மிருகம்தான் எனக்குள்ளேயும் தூங்கிகிட்டு இருக்கு...அதைத் தட்டி எழுப்பிடாதே..."
"உனக்குள்ள இப்படி ஒரு கிராமத்தான் இருக்கறது தெரியாமப் போச்சு சக்தி..."

2) "கஷ்டப் படாம எதுவும் கிடைக்காது... கஷ்டப் படாம கிடைக்கற எதுவும் நிலைக்கவும் நிலைக்காது..."

3) "வாழ்க்கை ஒரு வட்டம்டா... இங்க ஜெயிக்கறவன் தோப்பான்..தோற்கறவன் ஜெயிப்பான்..."

4) "கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும் நாய் கடிக்காம விடாது"

5) "லதா...விஸ்கியைத்தானே குடிக்கக் கூடாதுன்னு சொன்னே, விஷத்தை இல்லையே?..."

6) "தம்பி....தம்பி....என் பொண்ணு உங்க படத்துல நடிக்கிறதுக்கு எவ்வளவு ஆயிரம் பணம் தருவீங்க... நான் கார் வாங்கணும், பங்களா வாங்கணும்...எஸ்டேட் வாங்கணும்..."
"யோவ் யோவ் யோவ்!...ஏமாந்தா எங்கப்பனையே வாங்கிடுவே போலிருக்கு...இது முதல் படம்,  கொடுக்கறதை வாங்கிக்கோ..இந்தா நூத்தி ஒரு ரூபாய் அட்வான்ஸ்.."

7) "வாழறத்துக்காக சாகற அளவு ரிஸ்க் எடுக்கத் தயார்.."

8) "சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும்.."

9) "பழமொழி சொன்னா அனுபவிக்கணும்...ஆராயக் கூடாது.."

10) "நான் ஒரு தடவை சொன்னா, ஐநூத்து ஒரு தடவை சொன்ன மாதிரி .... " (வசனம் சரிதான். நூறு இல்லை. .... )
  
(வாசகர்களே! நீங்களும் உங்களைக் கவர்ந்த  வசனங்களையோ / குத்து வசனங்களையோ (Punch dialog) பின்னூட்டத்தில் பதியலாம்.)  
   

30 கருத்துகள்:

 1. 1. தேவர்மகன்
  2. முத்து ??
  3. திருமலை
  4. ??
  5. வசந்த மாளிகை
  6. கா.நேரமில்லை
  7. ??
  8. சிவாஜி
  9. பம்மல் கே சம்பந்தம்
  10. ??

  பதிலளிநீக்கு
 2. விடைகள் :
  1 ) தேவர் மகன்
  3) சுறா
  5) வசந்த மாளிகை
  6 ) காதலிக்க நேரமில்லை
  9) பம்மல் கே சம்பந்தம்

  அது சரி.. இதெல்லாம் எந்தெந்த படமுன்னு தெரியுமா ?
  1) தங்கச்சிய நாய் கட்சிடிச்சிப்பா.
  2 ) சத்தியமா நீ ஏன் தத்தா இல்லை..
  3 ) excuse மீ -- எஸ் கிஸ் மீ..
  ௪) இதத்தான் நா அப்பவே சொன்னேன்..

  பதிலளிநீக்கு
 3. 1 தேவர் மகன்
  5 வசந்த மாளிகை
  6 காதலிக்க நேரமில்லை
  9 பம்மல் கே

  பதிலளிநீக்கு
 4. 1. தேவர்மகன்
  2. முத்து
  3. திருமலை
  4. --
  5. --
  6. --
  7. சிட்டிசன்
  8. சிவாஜி
  9. பம்மல் K சம்பந்தம்
  10. --

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. 1. தேவர் மகன்
  2. படையப்பா
  3. திருமலை
  5. வசந்த மாளிகை
  6. காதலிக்க நேரமில்லை
  @ Madhavan

  1. படிக்காதவன்
  2. வேலைக்காரன்
  3. குரு-சிஷ்யன் (ரஜினி & பிரபு)
  4. அருணாசலம்

  பதிலளிநீக்கு
 7. அது சரி.. இதெல்லாம் எந்தெந்த படமுன்னு தெரியுமா ?
  1) தங்கச்சிய நாய் கட்சிடிச்சிப்பா.
  2 ) சத்தியமா நீ ஏன் தத்தா இல்லை..
  3 ) excuse மீ -- எஸ் கிஸ் மீ..
  ௪) இதத்தான் நா அப்பவே சொன்னேன்..

  ===
  1.படிக்காதவன்

  2.வேலைக்காரன்

  3. குரு சிஷ்யன்

  4. அருணாச்சலம்

  1

  பதிலளிநீக்கு
 8. எல்லாம் பழையபடம் போலிருக்கு... எண்பத்தஞ்சுக்கு மேலே வந்த படம் எதுனா இருந்தா சொல்லுங்க முதல்வரே.

  4 நல்ல சிரிப்பு. வசனம் எப்படியோ, சத்தியமா நாய் கடிக்காதுங்க. ஒட்டகத்துல ஏறினவங்களுக்கு புரியும் நான் சொல்றது.

  பதிலளிநீக்கு
 9. 1) பூமகள் ஊர்வலம்
  2
  3 திருமலை...
  4
  6 காதலிக்க நேரமில்லை
  7 சிடிசன்
  8 சிவாஜி
  9 பம்மல் கே சம்மந்தம்

  பதிலளிநீக்கு
 10. வாசகர்களே! நீங்களும் உங்களைக் கவர்ந்த வசனங்களையோ / குத்து வசனங்களையோ (Punch dialog) பின்னூட்டத்தில் பதியலாம்.////


  ரெண்டு கை ரெண்டு காலு இல்லேன்னா கூட காளி பொழைச்சுக்குவான். அவன் ரெம்ப கெட்ட பையன் சார்.

  படம் முள்ளும் மலரும்.

  பதிலளிநீக்கு
 11. குரோம்பேட்டைக் குறும்பன்31 ஆகஸ்ட், 2010 அன்று பிற்பகல் 6:48

  // ரெண்டு கை ரெண்டு காலு இல்லேன்னா கூட காளி பொழைச்சுக்குவான். அவன் ரெம்ப கெட்ட பையன் சார். //

  தமிழ் உதயம் சார்!
  'ரெம்ப' ஒரு கால்தான் இல்லே !!

  பதிலளிநீக்கு
 12. ஆஹா... இந்த வசனம் சப்ஜெக்ட்ல நான் கொஞ்சம் வீக் சார்... கதையே ஞாபகம் இருக்காது சில சமயம்... இதுல வசனம் எங்க... ஹா ஹா ஹா... ஆனா நெறைய பேரு கரெக்ட்ஆ சொல்லி இருக்காங்க போல இருக்கே... ஹும்... கலக்கறாங்க...

  பதிலளிநீக்கு
 13. சுவாரசியமான பதிவு.

  'அளவுக்கு அதிகமா ஆசை படற ஆம்பளையும், அளவுக்கு மீறி கோவபடற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது'
  படம்: படையப்பா.

  'மடமடன்னு தண்ணி குடிச்சுட்டு, கடகடன்னு சிரிச்சுட்டா துக்கம் பறந்து போய்டும்.'
  படம்: தாமரை நெஞ்சம்.

  'இன்னிக்கு செத்தா, நாளைக்கு பாலு'
  படம்: புது புது அர்த்தங்கள்.

  பதிலளிநீக்கு
 14. 5 வசந்த மாளிகை
  6 காதலிக்க நேரமில்லை.. (ஒஹோ கம்பெனி..... :-)))))

  சூப்பர் பதிவு போங்க.. நிறைய வசனம் தெரிஞ்ச மாதிரி இருக்கு...
  படம் பேர் தான் டக்குனு ஞாபகம் வர மாட்டேங்குது..

  பதிலளிநீக்கு
 15. ஆத்தா ஆடு வளத்தா ...கோழி வளத்தா..நாய் மட்டும் வளக்கல.என்னை மட்டும் வளத்தா!
  (சரியானு தெரில.யாராச்சும் சரியா சொல்லுங்கப்பா)

  படம் - பதினாறு வயதினிலே.

  பதிலளிநீக்கு
 16. இதுவரை வந்த பதில்களில், யாருமே 4 & 10 பதில் சொல்ல முயற்சி செய்யவில்லை. மீதி எல்லாம் பெரும்பான்மையானவர்கள் சரியான பதில்கள் கூறியிருக்கின்றார்கள். கேள்விகளில் கேட்கப்படாத முதல் வசனம் (காஞ்சு போன பூமியெல்லாம் ....) யாரும் (தெரிந்திருந்தாலும்) சொல்லவில்லை.
  கேள்வி எண் நான்குக்கும், பத்துக்கும் க்ளூ தேவை என்றால், கேட்கவும்.

  பதிலளிநீக்கு
 17. காஞ்சுப் போன பூமியெல்லாம்...
  தங்க பதக்கம்.

  பதிலளிநீக்கு
 18. சரியாக சொன்னீர்கள் அம்பிகா அவர்களே!
  'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்று நினைத்து, சொல்லாமல் விடுவதைவிட, இப்படி சரியாக சொன்னதைப் பாராட்டுகின்றோம். வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 19. 1.Devar Magan
  2.Padayappa(to manivannan)
  3.Thirumalai
  4.
  5.Vasantha maligai
  6.Kadhalika Neramillai
  7.Citizen(vasunthara das)
  8.Sivaji
  9.Pammal.K.Sammandam
  10.Oru thadavai sonna(chinni jayanth movie)

  பதிலளிநீக்கு
 20. 'நா'ன்காம் எண் புதிர்:
  (எல்லாமே நா என்று வருகிறது!)
  'நா'ற்பது வருடங்களுக்கு முன் ரிலீசான படம்.
  படத்தின் நாயகன் பெயர் 'நா' என்று ஆரம்பிக்கும்.
  அந்தப் படத்தின் டைரக்டரின் வயது (அப்போது) 'நா'ற்பது.
  படத்தின் பெயர் மட்டும் 'ந' என்று ஆரம்பிக்கும்.
  பத்தாம் எண் புதிருக்கு தென்றல் கூறியதும் தவறு. இதற்கும் க்ளூ கேட்டால் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 21. பத்தாம் எண் புதிர்:
  கதாநாயகன்: இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், நல்ல பெயருடன் இருந்துகொண்டிருந்த நாட்களிலேயே, நடிப்புக்கு குட் பை சொன்னவர். படம் ரிலீசாகி ஒரு மாமாங்கத்திற்கு மேலாகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது ஆங்கிலப் படம் The good, the bad and the ugly ஞாபகம் ஒரு சிலருக்கு வந்திருக்கலாம். இந்த க்ளூ போதுமா?

  பதிலளிநீக்கு
 22. அனானி - கதாநாயகன் யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?
  நிஜ வாழ்க்கையில், இந்தக் கதா நாயகனின் அப்பா, 'எங்கே பிராமணன்' தொலைத் தொடரில், கதாநாயகனின் (அசோக் என்கிற அப்சர்) அப்பாவாக நடித்தவர். மேலும் பல தொலைத் தொடர்களில் நடித்துக் கொண்டு இருப்பவர்.
  இந்த (நான் ஒரு தடவை சொன்னா...) பஞ்ச டையலாக் சொல்லிவிட்டு அவர் நடந்துபோகும்போழுது, 'கோட்டி கோட்டி கோட்டி ...' என்று பின்னணியில், 'பாட்ஷா பாட்ஷா பாட்ஷா ..... பாணியில் கேட்கும்!

  பதிலளிநீக்கு
 23. பின்னோக்கி கூறிய சரியான பதில்கள்:
  1, 3, 5, 6, 8, 9.

  மாதவன் சுறா என்று மூன்றாவது கேள்விக்கு கூறியது ஆச்சரியமா இருக்கு. அவர் கேட்ட நான்குக்கும் பெ சொ வி பதில் கூறிவிட்டார்.

  செந்தில்மோகன் சிட்டிசன் சரியாக சொல்லிவிட்டார்.

  பெ சொ வி - படையப்பாவை சரியாக சொல்லி பாயிண்ட் பெறுகிறார்.

  ரமேஷ் ரொம்ப நல்லவன் - பூமகள் ஊர்வலம் என்று ஒரு படப் பெயரை ரொம்ப கான்ஃபிடென்டா (தப்பா) சொல்லியிருக்காரு.

  தமிழ் உதயம் நல்ல பஞ்ச் டயலாக் நினைவு கூர்ந்திருக்கிறார்.

  மீனாக்ஷி அவர்களும் அப்படியே (பஞ்ச் டயலாக்)

  ஹேமா அவர்கள் பதினாறு வயதினிலே சப்பாணியின் டயலாகை சொன்னது அந்தக் கால தமிழ் விவித பாரதி நாட்கள் நினைவுக்கு வந்தன.

  அம்பிகா அவர்கள் தங்கப் பதக்கம் சரியாக சொன்னார்.

  தென்றல் பத்துக்கு எட்டு சரியாக சொல்லிவிட்டார்.

  பெயர் சொல்ல விருப்பமில்லை நவக்ரகம் படப் பெயரை சரியாக சொன்னார்.

  அனானி (சரியான பதில் கூறியும் ஏன் முகமூடி?) புதையல் என்ற படப் பெயரை சரியாக சொல்லிவிட்டார். அர்விந்த் சாமி, சாக்ஷி(?), ஆமினி மற்றும் பலர் நடித்த புதையல் படம்.

  பங்கேற்ற வாசகர்கள் எல்லோருக்கும் பாராட்டுகள், எங்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. ஐடியா நல்லா இருக்கு. புதுப் படங்கள்ளே இந்த மெதேடாலஜி ஓரளவுக்குத்தான் ஒர்க் அவுட் ஆகும்.(காமெடி படங்கள் விதி விலக்கு)

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!