இதற்கு ஏன் மைசூர் போண்டா என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்கவில்லை என்றால், உ மா மி போண்டா என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை உளுந்து (Urad Gola) 500 g
மிளகு (Black pepper) : இரண்டு கரண்டிகள்.
தண்ணீர் : ஒன்றரை லிட்டர்.
பச்சரிசி மாவு : 200 g.
நல்லெண்ணெய் அல்லது சன் டிராப் ஆயில் : அரை கிலோ.
பொடி உப்பு : தேவைக்கேற்ப.
கறிவேப்பிலை : இரண்டு ஈர்க்குகள்.
பாத்திரம், வாணலி, அடுப்பு, காஸ், லைட்டர். etc




நயமான
வெள்ளை உளுந்து அரைக் கிலோ எடுத்துக் கொள்ளுங்கள்.
சுத்தமான
தண்ணீரில் அதைக் கழுவி,
தண்ணீரை வடித்து,
பிறகு முக்கால்
லிட்டர் தண்ணீரில் ஒரு மணி
நேரம் ஊற விடுங்கள்.
பிறகு
தண்ணீரை வடித்துவிட்டு,
மிக்சியில்
இட்டு, நைசாக
அரைத்துக்கொள்ளவும்.
உளுத்தம்
பேஸ்ட் ரெடியா? ஓ
கே .
சிறிய
கரண்டியால் இரண்டு கரண்டி
மிளகு எடுத்துக்கொண்டு,
அதை மிக்சியில்
போட்டு, விப்பர்
செய்து மிளகை உடைத்துக்
கொள்ளவும். (மிளகை
அரைக்கக் கூடாது)
இதை
உளுத்தம் பேஸ்டுடன் சேர்த்துக்
கலக்கிக்கொள்ளவும்.
அப்புறம்,
இருநூறு கிராம்
பச்சரிசி மாவு உளுந்து +
மிளகு கலவையுடன்
சேர்த்துக் கலக்கவும்.
தேவைக்கேற்ப
பொடி உப்பு சேத்து,
எல்லாவற்றையும்
கலக்கவும். போண்டா
மாவு தயார்.
கறிவேப்பிலை
இரண்டு ஈர்க்குகள் எடுத்து,
இலைகளை மட்டும்
எடுத்துக்கொண்டு அவற்றைக்
கழுவி, கிள்ளி,
மாவுக் கலவையில்
போடவும். கலக்கி
விடவும்.
அடுப்பில்
வாணலியை வைத்து, வாணலியில்
நல்லெண்ணெய் அல்லது சன் டிராப்
ஆயில் விட்டு, அடுப்பை
ஏற்றவும். எண்ணெய்
காய்ந்ததும், மாவுக்
கலவையை, எலுமிச்சம்பழ
அளவு உருண்டைகளாக உருட்டி,
ஒவ்வொன்றாக
எண்ணெயில் வேகவைக்க வேண்டும்.
உருண்டைகள்
பொன்னிறம் ஆனதும்,
எண்ணெயிலிருந்து
எடுத்து விடவும்.
மைசூர் போண்டா ரெடி.
செய்து
பாருங்கள், சாப்பிட்டுப்
பாருங்கள்.


