நண்பர் ஒருவர், எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவருக்கு அனுப்பியிருந்த யூ -குழாய் குறும்படம் ஒன்று நெகிழ வைத்தது.
அதை இங்கே எங்கள் வாசகர்களுக்காக, வெளியிடுகின்றோம்.
இந்தப் படத்திற்கு வசனம் எதுவும் தேவை இல்லை. இசை இருக்கின்றது. வாசகர்கள் இந்தப் படத்தைப் பார்த்து, எந்த இடம் அவர்களை நெகிழ வைத்தது என்று கருத்துரைக்கலாம். கவிதை எழுதுபவர்கள் இந்தக் குறும்படத்தில், பன்னிரண்டு நிமிட நேர ஓட்டத்தில், முதல் அல்லது நடு அல்லது கடைசி நான்கு நிமிடக் காட்சிக்கு ஏற்ப கவிதை எழுதலாம். அந்தக் கவிதைக்கு இசை அமைக்க எங்களுக்குத் தெரிந்த ஒருவர் இருக்கின்றார். அவர் இசை அமைத்து, பாடி, பாடலைப் பதிவு செய்து, அதையும் எங்கள் ப்ளாக் ல வெளியிட முயற்சி செய்கின்றோம்!
Our sincere thanks to : NITHUNA NEVIL DINESH.