7. அதைக் கொண்டு வந்து பாண்டியன் கையில் தந்த அவன் "भाई! आप कृपया मुझे बता सकते हैं जहां यह घर है? என்றான்.
அதை வாங்கிப் பார்த்த பாண்டியன் கொஞ்ச நேரம் அந்தக் காகிதத்தையே உற்றுப் பார்த்தான். பின்னர் சொன்னான்.
"இன்னா கர்மம் எளுதி இருக்குன்னு தெர்ல...எளுதப் படிக்கத் தெரிஞ்சாத்தானே... ஆனா அண்டர்லைன்லாம் பண்ணியிருக்கானுவோ..அதைப் பாத்தா..ரொம்ப ஸ்ட்ராங்காச் சொல்லியிருக்காங்கன்னு தெரியுது" என்று பேப்பரை அவனிடமே திருப்பிக் கொடுத்தான்.அப்பாடா.... முடிந்தது!
