Tasty side dish. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tasty side dish. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.7.12

நாக்கு நாலு முழம்..... சால்னா.

         
சப்பாத்திக்கு ஒரே மாதிரி 'சைட் டிஷ்' செய்து கொண்டிருந்துவிட்டு ஒருநாள்,  ஒரு நண்பர் சொன்ன ரெசிப்பியின் படி இது மாதிரிச் செய்து சாப்பிட்டிருக்கிறோம். மைதா மாவில் வீட்டிலேயே லேசாக கோதுமை மாவு கலந்தோ கலக்காமலேயோ பரோட்டா செய்தும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டிருக்கிறோம். அதை இப்படிச் செய்தோம்.

          
இஞ்சியையும் பூண்டையும் போதுமான தேவையான அளவு எடுத்து மிக்சியில் அரைத்துக் கொளளவும். அல்லது ரெடிமேட் இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுத்து வாணலியில் இட்டு வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தை அதில் இட்டு,  பொன்னிறமாகும் வரை வதக்கி, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். வெந்தயப் பொடி (சற்று தூக்கலாய்), தனியாப் பொடி, காரப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். (தேவைப்பட்டால் பீன்ஸ், கேரட், உருளை என்று சேர்த்துக் கொள்ளலாம்). தேங்காய்த் துருவலையும் முந்திரிப் பருப்பையும் அரைத்து விட்டு  ஒரு கொதி வந்ததும், இறக்கிவிடலாம். இதை, சப்பாத்திக்கோ, பரோட்டாவுக்கோ தொட்டுக் கொள்ளலாம்.


       




அறியாத முகங்கள் என்று சிவசங்கரி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். திரு கருப்பையா மூப்பனாருடன் பழகிய அனுபவங்கள் பற்றிச் சொல்லி, அவர்கள் வீட்டுக்கே சென்று அவர் தினசரிப் பழக்க வழக்கங்களைப் பற்றி எழுதியுள்ள புத்தகம். 
சால்னா, 
மூப்பனார் அவர்களுக்குப் பிடித்த ஐட்டமாம். அதை எப்படிச் செய்வது என்று அவர்கள் குடும்ப உறுப்பினர் லதாவிடம் கேட்டு சிவசங்கரி எழுதியுள்ள குறிப்பு கீழே: 
     
"பயத்தம் பருப்பை வேக வைக்கணும். மிளகாய், மல்லியோடு தேங்காய் சேர்த்து சாந்தாக அரைத்துக் கொள்ளணும். பட்டை, ஏலம், கிராம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கி, வேக வைத்த பருப்பு, தேங்காய்ச் சாந்து, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் - சால்னா ரெடி!
      
கருப்பையா மூப்பனார் இந்தச் 'சால்னா'வைத் தொட்டுக் கொண்டு ஆப்பம் விரும்பிச் சாப்பிடுவாராம். 
               
ஆனால் சால்னா எனப்படும் இந்த டிஷ் பொதுவாக ரோட்டோரக் கடைகளில் அசைவம் கலந்து கிடைக்கும்!
          
அறியாத முகங்கள், 
சிவசங்கரி, 
சூர்யா பப்ளிகேஷன்ஸ், 

புத்தகம் விலை:: 
30 ரூபாய்.