நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 29
இராமானுஜர் கோயில் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதும் அதில் பல சீர்திருத்தங்கள் செய்து ஒரு குறைவும் வராமல் நிர்வாஹங்களைத் திருத்தி வைத்தார்.
இன்றைக்கும் எந்த ஒரு வைணவக் கோயிலிலும், பெருமாளுக்கு கண்டருளப் பண்ணப்பட்ட பிறகு, திரையை விலக்கி தீபாராதனை ஆன பிறகு சாற்றுமுறை என்று ஒன்றை கூடியிருக்கும் வைணவப் பெரியோர்கள் சேவிப்பர். அதில் பல்வேறு பாசுரங்கள் இடம் பெறும். தென்னாச்சார்ய சம்ப்ரதாயத்திலும் வடகலை சம்ப்ரதாயத்திலும் சில வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டிலும் உள்ளவைகள், திருப்பாவையிலிருந்து ‘சிற்றஞ்சிறுகாலே’ மற்றும் ‘வங்கக் கடல் கடைந்த’ பாசுரங்களும். மற்றும் இராமானுஜரை நினைவு கூறும் ஸ்லோகமும். அந்த ஸ்லோகத்தைப் பார்த்துவிட்டு மேலே செல்வோம்.
"சர்வ தேச தசா காலேஷு அவ்யாஹத பராக்ரமா |
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா வர்ததாம் அபிவர்ததாம் ||"
பொருள்: எல்லா நாடுகளிலும் (வடநாடு, தொண்டைநாடு, நடுநாடு…..பாண்டிய நாடு.. என்பது போன்று), எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும், ஆச்சார்யர் இராமானுஜரின் புனித ஆணைகள், நெறிமுறைகள் மென்மேலும் வளரட்டும், தழைத்து ஓங்கட்டும்.
இராமானுஜருக்கு (இளையாழ்வாருக்கு) யார் யார் என்ன என்ன சொல்லித்தர வேண்டும் என்று முன்னமேயே ஆளவந்தார் நிச்சயத்திருந்தார். ஒரு நாள் இராமானுஜர், பெரிய நம்பி திருமாளிகைக்குச் சென்று (திருமாளிகை என்றவுடன் நீங்கள் அரண்மனை என்று கற்பனை செய்ய வேண்டாம். சாதாரண கல் தூண்களுடன் கூடிய மடம் அது. ஆச்சார்யர் அங்கு இருப்பதால் அதனை திருமாளிகை என்ற பெயரில் அழைப்பர். திருவாய்மொழி கற்றுக்கொள்ளவேண்டும் என்று தன் ஆசையைத் தெரிவிக்க, திருவாய்மொழியையும் (நம்மாழ்வார் அருளிச் செய்தது), பெரிய திருமொழியையும் (திருமங்கையாழ்வார் அருளிச் செய்தது) திருவரங்கப் பெருமாள் அரையரிடம் கேட்டுக்கொள்ளும் என்று சொன்னார். (பாசுரங்கள் மட்டுமல்ல, அவற்றின் உட்பொருள், அர்த்த விசேஷங்கள்).
விசிஷ்டாத்வைதம் என்பதையும் அத்வைதம் என்பதையும் நாம் முன்னரே கண்டிருக்கிறோம். அத்வைதம் என்பது ஒருமை உணர்வு. நீயும் நானும் வேறல்ல என்ற உணர்வு. இதுபற்றி பாரதியார் நடந்த நிகழ்வு ஒன்றை எழுதியிருக்கிறார். 1858ல் நடந்த சிப்பாய் கலகத்தில், ஆங்கிலேய படைவீரன் (சோல்ஜர்), ஒரு சன்னியாசியைக் குத்திக் கொன்றுவிட்டான். பதினைந்து வருடங்களாக மௌனவிரதம் மேற்கொண்டிருந்த அந்தச் சன்னியாசி, ஆங்கிலச் சிப்பாய் தன்னைக் குத்தியதும், நீயும்கூட அவனே என்று சொல்லி உயிர் துறந்தாராம். அதாவது நீயும் பிரம்மம் நானும் பிரம்மம் என்ற அர்த்தத்தில். பிரம்ஹன் என்பது வேறு, பிரம்மா என்பது வேறு. பிரம்ஹன் என்பது அந்தப் பரம்பொருள். (வைணவர்கள் நாராயணன் என்று அழைப்பர்)
அனைத்து உயிர்களும் ஒன்றே என்று கருதுவது அத்வைதம். பிறரை வஞ்சிப்பவர்கள் தம்மையே வஞ்சித்துக்கொள்வதாகத்தான் அர்த்தம். பிறருக்கு நல்லது செய்வோம், தமக்குத் தாமே நல்லது செய்துகொள்கிறார்கள். திவ்யப் பிரபந்தத்தை பரப்புரை செய்த ஆச்சார்யர்களுள் முக்கியமானவரான நஞ்சீயரிடம், தனக்கு வைணவத்வம் சித்தித்து விட்டதாக எப்போது புரிந்து கொள்வது என்று கேட்க, ஒருவன் தெருவில் காயமுற்று இரத்த வெள்ளத்தில் கிடக்கும்போது, நீயே இரத்த வெள்ளத்தில் மிதப்பதாக உணர்வாயே ஆனால், நீ ஸ்ரீவைணவன். காயமுற்றுக் கிடப்பது வேறொருவன் என்ற எண்ணம் ஏற்பட்டால் நீ ஸ்ரீவைஷ்ணவன் அல்ல என்று அர்த்தம், என்றார்.
அந்த நாராயணனை உயிராகக் கொண்ட இந்த உலகத்தில், எந்த உயிரைத்தான் அந்நியமாக நாம் கருத இயலும்? இறைவனிடம் அன்பு கொள்வது என்பது எல்லா உயிர்களிடம் அன்பு கொள்வது என்றே அர்த்தம். இந்த மாதிரி நம் மனது கருணை உடையதாக ஆகுமானால் பிறர் அடையும் இன்ப துன்பங்களை நம்முடையதாக எண்ணி வாழ்வது சாத்தியமே.
நம்மாழ்வார், திருவிருத்தம் என்ற பிரபந்தத்தில், 96ம் பாசுரமாக கீழே உள்ள பாசுரத்தை அருளிச் செய்துள்ளார்.
வணங்கும் துறைகள்* பலபல ஆக்கி,* மதிவிகற்பால்-
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,* அவையவைதோறு-
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்*
இணங்கு நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே.
பொருள்: உலக மக்கள் உன்னை வந்து அடைவதற்கு, அவரவருடைய பக்குவத்துக்கு ஏற்றபடி, பலவித வழிபாட்டு முறைகளை நீயே உருவாக்கினாய். மக்களுடைய அறிவு மாறுபாடுகளுக்கு ஏற்றபடி (அதாவது அவர்களின் புத்தி பேத த்தால்), ஒன்றுக்கொண்டு மாறுபட்ட பலவித மதங்களையும் நீயே படைத்தாய். அந்த அந்தச் சமயங்களில் சொல்லப்படும் பலவித தெய்வங்களையும் நீயே உண்டாக்கினார். உண்மையில் சொல்லப்போனால், அந்த எல்லாவித தெய்வங்களுக்குள்ளும் நீயே உள்ளுறைந்து பரவியிருக்கிறாய். உனக்குச் சம மானவர் எவரும் இலர். இத்தகைய பெருமையை உடைய உன் மீது நான் ஆசையை (பக்தியை) வளர்த்துக்கொள்வேன்.
விளக்கம்: துறைகள்-வழிபாட்டு முறைகள், அணங்கும்-தெய்வங்களும், மதி விகற்பு – புத்தி மாறுபாடுகள், நின் மூர்த்தி பரப்பி-உன் அம்சத்தையே உள்ளுறையாக நீ பரவச் செய்திருக்கிறாய். நின்னோரை-உன்னைப் போன்றவர்கள், இணங்கும்-சமமாகச் சொல்லத் தக்க
வைணவர்களிடம் இத்தகைய சமரசத் தன்மை இருக்கவேண்டும் என்கிறார் நம்மாழ்வார். (மறந்தும் புறம் தொழா மாந்தர்களான வைணவர்கள்). இந்த சமரசத் தன்மையை எப்படிச் சொல்கிறார்கள் என்றால், கற்புடைய ஒருத்தி, தன்னுடைய கணவனைத் தவிர பிற ஆடவர்களை சகோதரர்களாகக் கருதுவது போல என்று.
வைணவத்துவம், பிற உயிர்களைத் தன்னைப் போன்றே கருதும் தன்மை பற்றி எழுதும்போது, எனக்கு கம்பராமாயணம், அயோத்தியா காண்டத்தில் ஒரு பாடலை எழுதத் தோன்றுகிறது. அதற்கு முன்பாக கைகேயியின் குண நலனாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கம்பர் எழுதுகிறார்.
தாய் கையில் வளர்ந்திலன்; வளர்த்தது, தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள,
ஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால்,
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது?' என்பார்
பொருள்: இராமன் தாயான கௌசல்யாவிடம் வளர்ந்தவன் இல்லை. அவனை வளர்த்தது, முன் செய்த தவத்தினால் கேகயன் மன்னனுக்கு மகளாகப் பிறந்த கைகேயியிடம். இராமனிடம் அப்படிப்பட்ட பேரன்பு கொண்ட கைகேயி, தசரதனுக்குப் பின் அரசனாகும் வாய்ப்பு இராமனுக்குக் கிடைக்கும்போது, அவளுக்கு ஏற்படும் பெரிய உவகை பற்றி நம்மால் சொல்ல இயலுமா?
அப்படிப்பட்ட கைகேயி கூனியின் சொல் கேட்டு, இராமனிடம் நைச்சியமாக கடல் சூழ்ந்த இந்த உலகத்தை பரதன் ஆளட்டும், நீ சும்மா (just like that) பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் சென்று வந்துவிடு என்று அரசன் சொன்னான் என்று சொல்கிறாள். (ஏழிரண்டு ஆண்டில், புண்ணிய தீர்த்தங்களில் நீராடி.. அரச கட்டளை என்கிறாள்). அதற்கு இராமனின் பதிலில் நாம் வைணவத்துவத்தைப் பார்க்கிறோம். சாதாரண மனிதனுக்கு உடனே முகம் சுருங்கும். ஆனால் இராமன் முகம் இதனைக் கேட்தும், அப்போது அலர்ந்த செந்தாமரையினை வென்றது என்கிறார் கம்பர். அவ்வளவு மலர்ச்சியாம். இராமன் பதிலுக்கு உரைக்கிறான்,
மன்னவன் பணி அன்றாகின் நும்பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேல் கொண்டேன்;
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்
பொருள்: இது தந்தையின் அரச கட்டளை இல்லை என்றாலும், தாயாகிய உங்களின் கட்டளையாக இருந்தாலும் அதனை நான் மறுப்பேனா? என் இளையவன் பெறும் இந்த அரசாட்சிச் செல்வம், நானே பெற்றது போல் அல்லவா? இதற்கு மேல் என்ன உறுதி சொல்ல வேண்டியிருக்கிறது? உங்களின் கட்டளையை சிரமேற்கொள்கின்றேன். மின்னல் போல ஒளி வீசும் கானகத்திற்கு இன்றே போகின்றேன். உங்களிடம் விடை பெற்றுக்கொள்கிறேன் என்று பதில் கூறுகிறான் இராமன்.
வைணவத்துவத்தைப் பற்றி மேலும் பின்பு காண்போம். இப்போது இராமானுஜர் வரலாற்றிர்க்கு வருவோம்.
இராமானுஜர், திருவரங்கப் பெருமாள் அரையரிடம் எல்லாக் கைங்கர்யங்களும் செய்து திருவாய்மொழியைப் பண்ணிசையுடன் பாடுவதைக் கற்றுக்கொண்டு, விருப்பமுள்ள பலருக்கும் அதனைக் கற்றுக்கொடுத்து, அப்படி பண் இசையுடன் பாடுபவர்களைப் பெருக்கி, அவர்கள் வசிப்பதற்கு ‘செந்தமிழ் பாடுவார் வீதி’ என்று ஒரு வீதியை உண்டாக்கினார் (தற்போது உள்ள கீழை உத்தர வீதியே அந்தக் காலத்தில் செந்தமிழ் பாடுவார் வீதி என்று இருந்தது. இந்தத் திருவீதியின் அனைத்து வீடுகளும் அரையர்களுடைய குடியிருப்புகளாக விளங்கி வந்தன)
உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியை ஆண்டுவந்தவன் அகளங்கன் எனப்படும் அகளங்கச் சோழன். இவனுடைய காவல்காரர்களில் உறங்காவில்லி என்ற மல்லன் மிக முக்கியமானவன். இவன் அளங்கச் சோழனை இரவும் பகலும் பாதுகாத்து வந்தான். சிலம்பம், குஸ்தி போன்றவற்றில் நிகரற்ற பயிற்சி உடையவன். இவன் மல்யுத்த த்தில் சிறந்தவன் என்பதால் மல்லர்களின் அரசன் என்று உறங்காவில்லியைக் குறிப்பிடுவர். இவனுடைய மனைவியின் பெயர் பொன்னாச்சி. மிக அழகானவள். உறங்காவில்லிக்கு அவளுடைய அழகில் மிகப் பெருமை. அவளைப் பொன்னே போலத் தாங்கிவந்தான்.
திருவரங்கத்தில் நடந்த வசந்த விழாவிற்கு பொன்னாச்சி ஆசைப்பட்டதன் பேரில், உறங்காவில்லி அவளைக் கூட்டிவந்தான். எங்கே வெயில் பட்டு அவள் உடல் வாடிவிடப் போகிறதே என்று எண்ணி அவளுக்குக் குடை பிடித்துவந்தான். அவள் பாதங்கள் வெயிலின் சூட்டினால் சிவந்துவிடப் போகிறதே என்று எண்ணி, தன் தலைவன் அகளங்கச் சோழன் கொடுத்திருந்த பட்டாலான மேல் வஸ்திரத்தை அவளுக்கு நடை பாவாடையாக விரித்து, அதன் மீது அவளை நடக்கச் செய்துவந்தான். அவனைப் பார்த்த பலரும் இப்படி பைத்தியக்காரனாக இருக்கிறானே என்று எண்ணிமனதுக்குள் சிரித்துக்கொண்டார்கள், வெளியில் சிரிக்கப் பயந்துகொண்டு.
இராமானுஜரும் அவர் சீடர்களும் அப்போது வந்துகொண்டிருந்தனர். சீடர்கள் இராமானுஜரிடம் உறங்காவில்லி தன் மனைவிக்கு குடைபிடித்துக்கொண்டு போவதைக் காட்ட, அவரும் அவர்களை வரவழைக்கச் சொன்னார். அவர்கள் வந்த தும், நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்க, உறங்காவில்லி பணிவுடன், நான் திருவெள்ளறையைச் சேர்ந்தவன். உறையூரில் அகளங்கச் சோழனிடம் பணிபுரிகிறேன். இன்று திருவிழாவைப் பார்க்க திருவரங்கத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம். விழாவைப் பார்த்ததும் இரவு திருவெள்ளறை திரும்பிவிடுவோம் என்றனர்.
இவ்வளவு பகிரங்கமாக மனைவிக்குச் சேவை செய்கிறீரே… பிறர் கேலி செய்ய மாட்டார்களா என்று இராமானுஜர் கேட்க, அவர், தன் மனைவியைச் சுட்டிக் காட்டி, இவ்வளவு அழகான பெண், எங்கள் வேடுவர் குலத்தில் மட்டுமல்ல பிற குலத்திலும் கிடையாதே, அப்படியிருக்க நான் அவளுக்கு பணிவிடை செய்வதில் என்ன தவறு? என்று உறங்காவில்லி பதில் சொன்னான். இராமானுஜர் கூட இருந்தவர்கள் சிரிக்கவும், இராமானுஜர் அவர்களிடம், அவன் காதலால் செய்யும் கைங்கர்யங்கள் உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறது. அத்தகைய காதலை இறைவன் மீது கொண்டால் அது பக்தியாகிவிடுகிறது என்றா.
அவளுடைய கண்ணழகிற்கு ஈடு இணை இந்த உலகிலேயே இல்லையே என்றான். அதற்கு இராமானுஜர், இவளுடையதைவிட அழகான கண்களை நாம் காட்டினால் அதற்கு பணிவிடை செய்வீரா என்று கேட்க, அப்படி அழகான கண்கள் இருப்பதைக் காட்டினால் நிச்சயம் பணிவிடை செய்வேன் என்று உறங்காவில்லி கூறினார். இராமானுஜர் அவனை மாலையில் மடத்திற்கு வரும்படிச் சொன்னார்.
மாலையில் உறங்காவில்லியை இராமானுஜர் வசந்த விழாவிற்கு அழைத்துப்போய், நம்பெருமாளின் முகத்தைக் கூர்ந்து பார்க்கச் சொன்னார். உறங்காவில்லியின் இதயத்தைத் தொடுவதுபோல அந்த அழகை இராமானுஜர் வருணிக்கவும், உறங்காவில்லியை அந்த அழகு ஆட்கொண்டது. இறைவனின் கருணையால் உறங்காவில்லி அப்போதே இராமானுஜரின் காலில் வீழ்ந்து இராமானுஜரின் அடிமை ஆகிவிட்டான். தன் மனைவியையும் கூட்டிக்கொண்டு வந்து இருவரும் இராமானுஜரிடம் பஞ்ச சமஸ்காரங்களைப் பெற்றுக்கொண்டு வைணவர் ஆகிவிட்டார்கள். உறங்காவில்லி, பிள்ளை உறாங்காவில்லி தாசர் எனவும், அவருடைய மனைவி பொன்னாச்சி, ஹேமாம்பா எனவும் தாஸ்ய நாமம் பெற்றனர். வில்லிதாசர், தன்னுடைய மருமக்களான வண்டவில்லியையும் செண்டவில்லியையும் இராமானுஜரிடம் கூட்டிக்கொண்டு வந்து அவர்களையும் இராமானுஜர் மூலம் வைணவர்களாக்கினார். அவர்களும் வண்டலங்கார தாசர், செண்டலங்கார தாசர் என்ற பெயரைப் பெற்றனர்.
இந்த மூவரும் (உறங்காவில்லி தாசரும் அவருடைய மருமக்களும்) அரச வேலைகளைப் பார்த்துவிட்டு, மிகுதி நேரங்களில் இராமானுஜரிடம் கைங்கர்யங்கள் செய்துகொண்டிருந்தனர். அகளங்கனிடம் பெற்ற தங்கள் ஊதியத்தையும் இராமானுஜரிடமே வழங்கிவந்தனர்.
இவர்களிடம் ஏற்பட்ட மாறுதல்களைக் கண்ட அகளங்க சோழன், இதன் பின்னணியை அறிந்து, இனி இவர்களிடம் வேலை வாங்கக் கூடாது என்று தீர்மானித்து அவர்களுக்கு ஊதியம் மாத்திரம் வழங்கிவந்தான். வழக்கம்போல இராமானுஜரிடம் அந்த ஊதியத்தை அவர்கள் கொடுக்க, பணி செய்யாது வந்த பணத்தால் பிரயோசனம் இல்லை என்று அவர்களிடம் திரும்பக் கொடுத்துவிட்டார். அவர்களும் இதனை அகளங்க சோழனிடம் சொல்ல, இப்படி பணத்தின்மீதான ஆசையை இவர்களிடம் இல்லாமல் செய்துவிட்டாரே என்று ஆச்சர்யப்பட்டு, இராமானுஜரை வந்து பார்த்து வணங்கினான். அவனும் வைணவனாகி அகளங்கநாட்டாழ்வான் என்ற தாஸ்ய பெயர் பெற்றான்.
பிறகு இராமானுஜர், அகளங்கனை, கோவில் கைங்கர்யங்களை மேற்பார்வையிடும் அதிகாரியாக நியமித்தார்.
பிள்ளை உறங்காவில்லி தாசரின் வரலாறு அடுத்த வாரமும் தொடரும்.
தனுர்தாசர் பிள்ளை உறங்காவில்லி தாசரானது
இராமானுஜர் தாம் வடகாவிரியில் நீராடிவிட்டு வரும்போது, பிள்ளை உறங்காவில்லி தாசரின் தோள்களில் கைபோட்டுக்கொண்டு வந்தது.
அடுத்த வாரம் தொடர்வோம்...
======================================================================================
நான் படிச்ச கதை (J K C )
புதிதாய்ப் பிறந்தேன்…
கதையாசிரியர்: அமைதிச்சாரல்
வணக்கங்க.. எல்லாரும் நல்லாருக்கீங்களா??.. உங்களுக்கென்ன!! நல்லாத்தான் இருப்பீங்க. நான் இப்ப இருக்கிற நிலையில, யாரைப்பாத்தாலும் என்னைவிட சந்தோஷமா இருக்காங்கன்னே தோணுதுங்க.
இவ்வளவு நேரம் எம்பேரைச்சொல்லலைல்லே.. பேருக்கென்னங்க. உங்களுக்கு எந்தப்பேரு புடிச்சிருக்கோ அந்தப்பேருல கூப்பிட்டுக்கோங்க. ஆனா, தயவு செய்து எம்பிரச்சினைக்கு மட்டும் ஒரு முடிவு சொல்லிடுங்க..
தைப்பூசம்.. முருகனுக்கு உகந்த நாள். காவடியெடுத்தும், அலகு குத்தியும், இதெல்லாம் செய்யாம பிரார்த்தனை மட்டுமே செய்யும் பக்தர்களுக்கும், இது எதுவுமே செய்யாம சும்மா..’முருகா..’ அப்படீன்னு ஒரு தடவை மனசால் மட்டும் நினைச்சுக்கிறவங்களுக்கும், அருள் செய்யற கடவுளுக்கான திருநாள். ஆனா, அன்னிக்கு எல்லோருக்கும் அருள் பாலிச்சுட்டு, கடைசில என்னை மட்டும் மறந்துட்டாரே. அன்னிக்கி நான் கோயிலுக்கு போகாம இருந்திருக்க கூடாதா..இதெல்லாம் நடந்திருந்தா.. இன்னிக்கி இப்படி புலம்பிட்டிருக்க மாட்டேன்.
இப்படி உக்காருங்க.. வெவரமா சொல்லுறேன். அன்னிக்கி, அம்மா.. தங்கை, அப்புறம் மத்த சொந்தக்காரங்க, பக்கத்துவீட்டுக்காரங்கன்னு ஒரு கூட்டமா கோயிலுக்கு போயிருந்தோம். தேங்காபழமெல்லாம் உடைச்சு சாமி கும்பிட்டுட்டு, வேப்பமர நெழல்ல உக்காந்து கட்டுச்சோத்தை சாப்பிட்டுட்டு, அம்மாவும், மத்தவங்களும் அக்கடான்னு அங்கியே உக்காந்துட்டாங்க. எங்கூருக்கு சாயந்திரம்தான் வண்டி.. அதுவரைக்கும் என்ன செய்யறது??.. உண்ட களைப்புலயும், வேப்பமர நெழல் தந்த சொகுசுலயும், அங்கியே ஆளாளுக்கு கட்டைய சாச்சுட்டாங்க.
எவ்வளவு நேரம்தான் அங்கியே உக்காந்து, போறவர்ற ஆளுகள பாத்துட்டு இருக்கிறது.. சும்மா.. காலாற நடந்துட்டு வரலாமேன்னு எந்திரிச்சிப்போனேன். திருவிழான்னா, சந்தையும் கூடணும்கறது வழக்கம். வளையலு, பாத்திரங்கள், முட்டாயி, அப்புறம் திடீர் புடவைக்கடைகள்ன்னு ஒவ்வொண்ணா பாத்துட்டே நடந்தவன், ஒரு பொரிகடலை பாக்கெட்டை வாங்கி கொறிச்சிக்கிட்டே.. அப்படியே தெப்பக்குளத்துப்பக்கம் வந்தேன். திருவிழா நடக்கறதால குளம் நெறய தண்ணி திமுதிமுன்னு கெடக்குது.. செலபேரு துவைச்சுக்குளிச்சிட்டு இருக்காங்க. வெயிலா இருந்தாலும், தண்ணி நெறஞ்சு கெடக்கிறதால குளுந்து கெடக்குது. அப்படியே படிக்கட்டுல உக்காந்துக்கிட்டு, பொரிகடலையை ஒருவாய் தின்னுக்கிட்டும், ஒருகை.. மீன்களுக்கு போட்டுக்கிட்டும், வேடிக்கை பாத்துக்கிட்டிருந்தேன்.
அப்பதான், எனக்கு பக்கத்துல படிக்கட்டுல சுருட்டி வெச்சிருந்த துணிகளும், அதுக்கு மேல அலட்சியமா வெச்சிருந்த மணிபர்சும் கண்ணுல பட்டது. என்னது!!.. இப்படி பொறுப்பில்லாம வெச்சுட்டு போயிருக்காரேன்னு நெனச்சிக்கிட்டேன். அழகான மெரூன் கலர்ல, உப்பிப்போய் இருந்த பர்சை விட்டு கண்ணை எடுக்கமுடியலை. யாரும் பார்க்கலைன்னு நோட்டம் விட்டுட்டு, சட்ன்னு அதை எடுத்து என்னோட பாக்கெட்ல வெச்சுக்கிட்டு அங்கேருந்து வேகமா வந்துட்டேன்.
தேர்மூட்டுக்கு கிட்ட வரவும், எதிர்க்க அம்மாவும் மத்தவங்களும் வந்துக்கிட்டிருந்தாங்க.. ‘உன்னை எங்கேல்லாம் தேடுறது.. சொல்லாம கொள்ளாம எங்க போன??..’ன்னு அம்மா சத்தம்போட ஆரம்பிச்சாங்க. ‘ஷ்..சத்தம் போடாத.. இங்க பாரு’ன்னு பர்சை காமிச்சேன். ‘அடியாத்தே… எல்லாம் நூறு ரூவா தாளால்லே இருக்கு.. ஏதுடா இது?’ன்னாங்க அம்மா. ‘கீழ கெடந்துச்சு கண்டெடுத்தேன்’னு ஒரு பொய்யை சொல்லிட்டேன். எனக்கு புத்திசொல்றத விட்டுட்டு.. கொடுக்கிற தெய்வம் பர்சோட கொடுத்திருச்சுன்னு சந்தோஷப்படறாங்க அம்மா.
பகல்ல பக்கம் பார்த்து பேசுன்னு சொல்லுவாங்க. நான் பார்த்துப் பேசியிருக்கணும்.. ஆனா, பார்க்கலை.. அதனால, பக்கத்துல நின்னுட்டு பேசிட்டிருந்த ஆட்கள்ல ஒரு ஜோடி கண்கள் எங்களை பாத்திட்டுது. அதையும் நான் கவனிக்கல. ரூவா கெடைச்ச சந்தோஷத்துல, உண்டியல்ல காணிக்கையா பத்து ரூபா போட்டுட்டு, திருவிழாக்கடைக்கு போயி, தங்கச்சி ரொம்ப நாளா ஆசைப்பட்ட செருப்பை வாங்கிக்கொடுத்தேன். பாவம்.. எத்தனை நாள்தான் வெறுங்காலோட அது பள்ளிக்கொடத்துக்கு போவும்?.. கடைக்காரருக்கு ரூவாயை கொடுக்கவும், டக்குன்னு ஒரு கை இரும்பு மாதிரி எங்கையை பிடிச்சிக்கிடுச்சு. திரும்பி பாத்தேன்.. நடுங்கிட்டேன். நாலஞ்சுபேரு, ஒரு போலீசோட நிக்கிறாங்க.
‘இந்தப்பயலத்தான் நீ சொன்னியா..’ன்னு ஒரு ஆளு கேக்கவும், ‘ஆமா..’ங்குது ஒரு சின்னப்பொண்ணு. அட..!! இத நான் தேர்மூட்டுக்கு கிட்ட ஆளுககூட பாத்தேனே.
‘இது உங்க பர்சுதானான்னு பாருங்க..’
‘மெரூன் கலர்!!…என்னோடதுதான்..’ன்னு சொல்லிக்கிட்டே வெள்ளையும் சொள்ளையுமாட்டு ஒரு ஆளு முன்னால வந்தாரு. ‘ உங்க பர்சுதான்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம்??’ ன்னு போலீசு கேக்கவும், ‘உள்ளே ட்ரெயினுக்கான மந்த்லி பாஸும்,அடையாள அட்டையும் இருக்கும். அதுல என்னோட போட்டோவும் இருக்கும். பாத்துக்கிடுங்க..’ன்னு வெறைப்பா பதிலு வந்தது. சரி பாத்துட்டு, போலீசு என்னைத்திரும்பி பாத்தாரு. எனக்கா.. கண்ணீரு முட்டிக்கிட்டு விழ தயாரா இருக்குது. ‘நடலே.. ஸ்டேஷனுக்கு..’ ன்னு கையைப்பிடிச்சி இழுக்கவும், இதெல்லாம் பாத்து ஒண்ணும் புரியாம முழிச்சிட்டிருந்த அம்மா அலற ஆரம்பிச்சிட்டாங்க.
‘ஐயா.. எம்புள்ள திருடனில்லைய்யா.. கீழ கெடந்தததான் எடுத்தாந்தான்.. ஒரு சின்னப்புள்ள சொல்லைக்கேட்டு, எம்புள்ளய ஒண்ணும் செஞ்சிடாதீங்க’ ன்னு கெஞ்சுறாங்க.
‘எம்மா.. கீழ கெடந்தத கண்டெடுத்தாலும், உரியவங்ககிட்ட சேர்க்கணும்கற புத்தி இல்லையா உங்களுக்கு?.. கொளத்தங்கரையில துணிகளுக்கு மேல வெச்சிருந்துருக்காரு. குளிச்சிட்டு வந்தவரு பர்சை காணோம்ன்னு வழி நெடுக புலம்பிக்கிட்டே தேடியிருக்காரு. இவரு கூட வந்த ஆட்கள்கிட்ட சொல்லும்போதுதான், அவங்க கூட இருந்த இந்தப்பொண்ணுக்கு, தேர்மூட்டுக்கிட்ட உங்கமகன் உங்ககிட்ட காமிச்ச பர்சு, அவங்க சொல்ற அடையாளத்துல இருந்தது ஞாபகம் வந்திருக்கு. கீழ கெடந்துச்சுன்னு உங்க மகன் சொன்னதையும் அந்த பொண்ணு கவனிச்சிருக்கு. அதான், ஒரு சந்தேகத்துல வந்து பார்த்தா.., அவனே அம்புட்டுக்கிட்டான். துணிகளுக்கு மேல வெச்சிருந்தது கால்முளைச்சா வீதிக்கு வந்திருக்கும்?.. ரெண்டு தட்டு தட்டினாத்தான் இனிமே இப்படி செய்யமாட்டான்’ னு சொல்ல, அம்மா அழுதுக்கிட்டே கெஞ்ச.. அதுக்கு மேல அம்மாவ பாக்கமுடியாம கண்ணீரோட தலைய திருப்பிக்கிட்டேன்.
பர்சை பறிகொடுத்தவர் என்ன நெனச்சாரோ..’ பரவால்ல சார்.. சின்னப்பையந்தானே!! விட்டுடுங்க. நான் கேசை வாபஸ் வாங்கிக்கிறேன்’னு பெரிய மனசோட சொல்லவும் ஒரு சின்ன வாக்குவாதத்துக்கு அப்புறம் எல்லோரும் போயிட்டாங்க. அந்தப்பொண்ணு என்ன திரும்பி பாத்துக்கிட்டே போச்சு. அம்மாவுக்குத்தான் ஆறவேயில்லை.. எம்மேல வீண்பழி போட்டதுக்கு, வழி நெடுக அந்தப்புள்ளைய கரிச்சுக்கொட்டிட்டே வந்தாங்க. கொஞ்ச நாளைக்கு எனக்கு உறுத்திக்கிட்டே இருந்திச்சு.. அப்புறம் மெல்லமெல்ல மறந்தே போச்சு.
நான் மறந்தாலும், முருகன் மறக்கலை பாருங்க. இப்ப நான் பத்தாங்கிளாஸ் போகப்போறேன். நல்லா மேல்படிப்பெல்லாம் படிச்சு பாஸாகி, நல்ல வேலைக்குபோயி அப்பா,அம்மாவை ஒக்காரவெச்சு சாப்பாடு போடணும்ன்னு மனசுல ஒரு வெறி. வயக்காட்டு வேலை, கூலிவேலைன்னு அவங்களும் எவ்வளவுதான் கஷ்டப்படுவாங்க. மொதல் நாள் பள்ளிக்கோடத்துக்கு போனவனுக்கு, நாலாவது வரிசையில ஒக்காந்திருந்த அந்தப்பொண்ணை, எங்கியோ பார்த்தமாதிரி தோணிக்கிட்டே இருந்திச்சு. மறுபடி பார்க்க பயமா இருந்திச்சி.. இது கிராமம்..பொண்ணுங்க கிட்ட பேசறதெங்கே.. பார்த்தாலே தோலை உரிச்சுடுவாங்க.
பள்ளிக்கோடம் விட்டு வெளியே வந்தப்ப, அந்தப்பொண்ணே எங்கிட்ட வந்து, ‘ உன்னை எங்கியோ பார்த்திருக்கேனே..’ன்னு ஆரம்பிச்சு என் முகத்தை கூர்ந்து பார்த்தவ,..’அன்னிக்கி, நீதானே கோயில்ல அந்த பர்சை…’ன்னு இழுத்தா பாருங்க, எனக்கு ‘குப்’புன்னு வேர்த்துடுச்சு. பதில் சொல்லாம விறுவிறுன்னு ஓடியாந்துட்டேன். இவ எப்படி இங்கே வந்தா??.. ராத்திரி முழுக்க ஒரே சிந்தனை. விடிஞ்சு, பள்ளிக்கோடத்துக்கு போயி, ‘திருடன்’ன்னு ஒரு முத்திரையோட அந்தப்பொண்ணோட மொகத்துல முழிக்க வெக்கமாயிருக்கு. மத்த பசங்ககிட்ட சொல்லிட்டா??.. அவ்வளவுதான். இந்த ராத்திரி விடியாமலேயே இருந்துட்டா எவ்வளவு நல்லது..
படிக்கலைன்னா, நான் ஆசைப்பட்டமாதிரி எங்க வீட்டு வறுமையை விரட்டவும்முடியாது. கல்லோடயும், முள்ளோடயும் எங்க அப்பா கஷ்டப்படறத பார்க்கப்பார்க்க எனக்கு ரத்தக்கண்ணீரே வருது. இந்த பள்ளிக்கோடத்த விட்டு வேற ஊரு பள்ளிக்கொடம், இல்லைன்னா வேலைக்கின்னு எங்கியாச்சும் போயி சேரலாம்ன்னா, என்னைய ரொம்ப நம்பிக்கிட்டிருக்கற அப்பாட்ட என்னன்னு சாக்கு சொல்றது!!. அவரு மனசொடிஞ்சு போகமாட்டாரா??.. எனக்கு ஒண்ணுமே தோணமாட்டேங்குது.
மறுநாள் பள்ளிக்கொடத்துக்கு போக மனசில்லாம, வீட்ல சுருண்டு கெடந்தேன். யாரோ கூப்பிடுற சத்தம்… வெளியெ வந்து எட்டிப்பார்த்தா,… ‘ஆத்தீ!!.. அந்தப்பொண்ணு’. விருட்ன்னு வீட்டுக்குள்ள திரும்புன என்னை ஓடிவந்து வழிமறிச்சா..
“எதுக்கு என்னிய கண்டு பயப்படறே?.. நான் என்ன சிங்கமா?.. புலியா?..”ன்னு கேட்டா.
“அதுக்கும் மேல.. “ன்னு தலையக்குனிஞ்சுக்கிட்டு முணுமுணுத்தேன்.
“ஏதோ அறியாத வயசுல தெரியாம செஞ்ச தப்பை, இன்னும் ஞாபகம் வெச்சுக்கிட்டு ‘நீதானே அது’ன்னு என்னியப்பார்த்து கேட்டா அவமானத்துக்கு பயப்படமாட்டாங்களா”ன்னேன்.
“உன் கூட்டாளிகள் கிட்ட சொல்லிடுவேன்னு பயமா”ன்னு கேட்டா குறும்போட..
ஆமான்னு சொல்லவும் தயக்கமாருக்கு.. இல்லைன்னு சொல்லவும் மனசில்லை.. ரெண்டும் கலந்தமாதிரி தலையை ஆட்டிவெச்சேன்.
“பயப்படாத.. நேத்து என்னிய பார்த்ததுலேர்ந்து, இந்தப்பயம்தான் உன்னைய ஆட்டிவெச்சிருக்கும்ன்னு நல்லாவே புரியுது.. நேத்துமுழுக்க நீ பட்ட மனவேதனையையே உனக்கான தண்டனையா நெனைச்சிக்கோ. படிப்பையும் எதிர்காலத்தையும் நாசமாக்கிக்காம, எல்லாத்தையும் மறந்துட்டு இப்ப பள்ளிக்கொடம் பொறப்படு.. நான் யாருகிட்டயும் ஒருவார்த்தையும் சொல்லவே மாட்டேன்.. இது சத்தியம். போதுமா?..”
வெய்யக்காலத்துல குளுமையா எளநி குடிச்சமாதிரி, புதுசாப்பிறந்தமாதிரி.. மனசுல இருந்த பாரமெல்லாம் இறங்கி அப்பாடான்னு இருந்தது எனக்கு, அந்த பதிலைக்கேட்டதும் .. ஒடனே வீட்டுக்குள்ள ஓடினேன்.. பள்ளிக்கொடப்பையை எடுத்துட்டு வர்றதுக்கு..
– August 2011
ஆசிரியர் யார் என்று தெரிந்ததா. உங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் தான் சாந்தி மாரியப்பன்.
Introduction
தோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண -http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029
காலை வணக்கம்
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார்.. காலை வணக்கம்.
நீக்குகம்பனை நினைத்தாலே மனம் களி கொள்கிறது.
பதிலளிநீக்கு'தாய் கையில் வளர்ந்திலன்....'' என்ன அருமையான தமிழ் ஆளுமை!
கம்பனின் கவி நயம், இதிஹாசமான இராமாயணத்தை, தமிழ் மரபு மாறாமல் கொண்டுவந்தது, நயத்தகு தமிழ்.....அவரை கம்பநாட்டாழ்வார் என்றே வைணவம் கூறும்.
நீக்குதேரழுந்தூரில் கம்பர் மேடு பார்த்திருக்கிறீர்களா?
ம்ம்ம்ம் தேடிக் கொண்டு போனோம். ஒரே ஏமாற்றம்! :(
நீக்குஎனக்கும்தான் கீசா மேடம்
நீக்குதிருப்பாவையின் 30ஆம் பாசுரமான "வங்கக் கடல்" திருப்பாவைக்கு பலஸ்ருதி போல் அமைந்ததால் சாற்றுமுறையில் இடம் பெறுகிறது என்று கொள்ளலாமா? 22 ஆம் பாசுரமான "சிற்றஞ்சிறு காலே" சாற்றுமுறையில் இடம் பெறுவதற்கு ஏதேனும் விசேஷ காரணம் உண்டோ?
பதிலளிநீக்குவைணவ பிரபந்த பாசுரங்களில், நித்ய அனுசந்தானத்தில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை இடம் பெறும். ஒவ்வொன்றின் கடைசி இரண்டு பாசுரங்கள் இரண்டு தடவைகள் சேவிக்கப் பெறும். அதுபோல சாற்றுமுறையில், சிற்றஞ்சிறு, வங்கக். இரண்டும் கடைசி இரண்டு பாசுரங்கள். வாங்க சூர்யா சார்.
நீக்கும்ம்ம் எனக்குத் தெரிந்து "ஓங்கி உலகளந்த" திருப்பாவையைப் பாடாமல் இருக்க மாட்டாங்க. மற்றபடி இவற்றையும் கேட்டிருக்கேன்.
நீக்குஸ்மார்த்தர்கள் க்ருஹஸ்தர்களாக இருந்து பின் சன்யாசம் பெற்றாலும் பூணுல் அணியும் வழக்கம் இல்லையல்லவா? வைணவ சன்யாசிகள் பிராமண குலத்தவரானால் பூணுல் அணியும் வழக்கம் ராமானுஜரிடமிருந்துதான் தொடங்கியதா?
பதிலளிநீக்குஸ்மார்த்தர்கள் சந்நியாசி ஆனபிறகு, நித்யகர்ம அனுஷ்டானங்களை விட்டுவிடுகிறார்கள். வைணவ சந்நியாசிகள் அவற்றைத் தொடர்கின்றனர். இருவரும் பழைய ஆச்ரமத்தை விட்டு புதிய ஆச்ரம்ம் புகுகின்றனர். இது அதற்கும் முந்தைய காலம் தொட்டு..
நீக்குஸ்மார்த்தர்களில் கிருஹஸ்தர்கள் சந்நியாச ஆசிரமம் மேற்கொள்ளுவது அநேகமா அவங்க கடைசி காலத்தில் தான். சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அப்படித்தான் சந்நியாசம் மேற்கொண்டார். இன்னும் சிலரும் உண்டு.
நீக்குநிறையபேர்கள் உண்டே கீசா மேடம்... பரமாச்சார்யார் சகோதரர் சிவன் ஸ்வாமிகள். நம்ம திருச்சி வைகோ அவர்களின் உறவினர் ஸ்ரீகண்டன் (பரமாச்சார்யாரோடே இருந்தவர்) என்று பலர்.
நீக்குபெயர்கள் நினைவில் இல்லை. எங்க அப்பா குடும்பத்திலேயே சிலர் உண்டு.
நீக்குஎங்க அப்பா குடும்பமா? :))
நீக்குஅவர், அப்பாவின் உறவினர்களை, தூரத்து உறவினர்களைக் குறிப்பிடுகிறாராயிருக்கும் ஜீவி சார்
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய குரு விளக்கமும் பாசுரங்களும் பற்றி கூறியது நன்றாக உள்ளது. படங்களை பார்த்து குரு வணக்கம் சொல்லிக் கொண்டேன்.
/சர்வ தேச தசா காலேஷு அவ்யாஹத பராக்ரமா |
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா வர்ததாம் அபிவர்ததாம் ||"/
எல்லா வைணவ கோவில்களிலும், சாற்றுமுறை சேவிக்கும் பாசுரங்களையும், இராமனுஜரின் நினைவு கொள்ளும் ஸ்லோகத்தையும் அதன் பொருளும் அறிந்து கொண்டேன்.
இராமாயண விளக்கமும் சிறப்பு. கம்பரின் விளக்கமான பாடல்களையும் அறிந்து கொண்டேன். கைகேயின் பரிபூரணமான அன்பு சொல்வார் சொல் பேச்சு கேட்டு ஒரு நொடியில் சிதைந்ததும் இறைவனின் திருவுள்ளமே அல்லவா.?
உறங்காவல்லிதாசரின் வரலாறு அறிந்து கொண்டேன். இறைவனின் பேரழகிற்கு முன் வேறெந்த அழகும் சாஸ்வதமில்லையே ..! இதை உணர்ந்த அடுத்த நொடி அவர் (உறங்காவல்லி) இறைவனின் தாசராகிப் போனது சிறப்பு. அந்த பாக்கியம் அவருக்கு அமையப் பெற்றதும் இறைவனின் கருணை. அழகாக குரு குலத்தின் வரலாற்றினை சொல்லி வருகிறீர்கள். எல்லாம் அந்த பரந்தாமனின் ஆணை/ ஆசை. நாங்களும் தொடர்ந்து படித்து மகிழ உடன் வருகிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்க் நெடிய கருத்துக்கு மிக்க நன்றி.
நீக்குஅழகு சாஸ்வதமில்லை. மனிதருக்கு எதுவுமே சாஸ்வதமில்லை. மாகுரு தன ஜன யௌவன
உறங்காவில்லி தாசரின் கதை ஆனந்தவிகடன் அல்லது கல்கி அல்லது கலைமகள் தீபாவளி மலரில் படங்களுடன் கூடிய கதைச் சித்திரமாக வந்தது நன்றாக நினைவில் இருக்கு. தாசர் குனிந்து மனைவியின் ஒரு காது ஆபரணங்களைக் கழற்றியதும் மற்றொன்றைக் கழற்ற ஏதுவாகப் பொன்னாச்சித் திரும்பிப் படுப்பது. ஆகிய காட்சிகள் கோபுலுவின் கைவண்ணத்தில் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கு.
நீக்குநான் கலைமகளில் பார்த்ததில்லை கீசா மேடம்..உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி (பாடங்களைப் படிக்காமல் கதைப் புத்தகங்கள் வாராந்திரிகளைப் படித்ததனால் இருக்குமோ? ஹா ஹா ஹா)
நீக்குyessoo yessu. என் அப்பா பள்ளிக்கே வந்து எல்லா டீச்சர்களையும் தனித்தனியே பார்த்து வீட்டில் படிக்கிறதில்லை. கல்கி, குமுதம், ஆனந்த விகடன் தான் படிக்கிறாள்னு புகார் கொடுப்பார். அடிக்கச் சொல்லுவார். என்னிடமும் ஸ்கூலை விட்டு நிறுத்திடுவேன்னு பயமுறுத்துவார். உள்ளூர பயமா இருந்தாலும் வெளியே காட்டிக்க மாட்டேன். ராங்க் தானே வரணும்? மார்க் தானே வேணும். வாங்கிடுவேன். அம்புடுதேன். இரண்டாவது ராங்குக்குள்ளே இருப்பேன். மதிப்பெண்களும் குறைக்க முடியாது. ஆங்கிலம், தமிழில் எழுத்துப் பிழைகளே இருக்காது. அதோடு என் தாத்தா, மாமாக்கள் எல்லோரும் நான் படிப்பதை ஊக்குவிப்பார்கள். அப்பாவிடமும் சொல்லுவார்கள்.
நீக்குஎனக்கும் கதைப்புத்தகங்கள் படிப்பது, ஓவியங்கள் வரைவது ரொம்பவே பிடிக்கும். எங்க அப்பா, 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னடா பொம்பளைப் பத்திரிகை படிக்கற - குமுதத்தை என்று கோபமாச் சொல்லுவார். எப்போப் பாத்தாலும் வரையறதை விட்டுட்டு படிக்கற வழியைப் பார் என்பார்... அப்பாவைப் பற்றி எழுதும்போது, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு நினைவுக்கு வருகிறது.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. வாங்க துரை செல்வராஜு சார்.
நீக்குநலமே வளர்க
பதிலளிநீக்குவாழிய நலம்.
நீக்குநெல்லை அவர்களது தமிழ் வண்ணம் சிறப்பு..
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குநேற்று எனது தளத்தில் நெல்லை அவர்களுக்காக
பதிலளிநீக்குதிருப்பதிகம் வெளியிட்டிருந்தேன்...
நேற்றைக்கு மனைவியைக் கூட்டிக்கொண்டு வெளியில் சாப்பிடப் போயிருந்தேன். ஶ்ரீராமுக்கு அடுத்த வார சனிப் பதிவுகள் அனுப்பணும் என்பதால் மடிக்கணிணியில் உட்கார்ந்தவன் இரவு ஒன்பது வரை எழுதிக்கொண்டிருந்தேன். இரு நாட்களில் திருவரங்கம் பயணம். இன்று பார்க்கிறேன்.
நீக்குஆஹா! இந்தத் தரம் வந்திருக்கும் உறங்காவில்லி தாசர் கதையை நாங்க திருப்பாவை வகுப்பில் நாடகமாகப் போட்டிருக்கோம். மதுரையில் திருப்பாவை வகுப்பு தானப்பமுதலி அக்ரஹாரத்தில் இருந்த கண் மருத்துவமனை என அழைக்கப்படும் மங்கள நிவாசில் நடக்கும். வருஷா வருஷம், காஞ்சி மடத்திலிருந்து திருப்பாவை, திருவெம்பாவை புத்தகங்கள், பக்தி மணிமாலை புத்தகம், குழந்தைகளுக்கு வெள்ளிக்காசுகள் என்று ஸ்ரீபரமாசாரியாரின் கட்டளையின் பேரில் கொடுத்து அனுப்புவார்கள். ராஜம்மாள் சுந்தரராஜன் என்னும் பெண்மணி (நாங்கல்லாம் அத்தம்மா எனக் கூப்பிடுவோம்) இதை நடத்தி வந்தார். இவர் நம்ம வல்லி சிம்ஹனுக்குச் சொந்தம். இதைத் தவிரவும் ஆண்டாள் கல்யாணமும் நாட்டிய நாடகமாக நடக்கும். என்னுடம் படித்த சிநேகிதி வைஜயந்தி தான் ஆண்டாளாக வருவாள். உண்மையிலேயே ரொம்ப அழகான பெண். அவள் தம்பி கிருஷ்ணன் என் தம்பியின் வகுப்புச் சிநேகிதர். இருவரும் ஆறாம் வகுப்பில் இருந்து காலேஜ் வரை ஒண்ணாப் படிச்சவங்க. இதெல்லாம் இப்போ வெறும் நினைவுகள் தான். திருப்பாவை முப்பதும் தப்பாமல் செப்பிக் கொண்டிருந்த ஒரு பொற்காலம் அது.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம்... நீங்க நாடகமாகப் போட்டீங்களா? அட ! எனக்கும் 3ம் வகுப்பு படிக்கும்போது திருப்பாவை ஒப்பித்ததற்கு ஒரு சிறிய நோட்டு கிடைத்தது, பரமக்குடியில். இப்போ நீங்க திருப்பாவை முப்பதும் செப்புவது இல்லையோ?
நீக்குகூடச் சேர்ந்து தான் சொல்ல வேண்டி இருக்கு. மாமியாருக்குத் தமிழில் உள்ள பக்திப்பாடல்கள், ஸ்லோகங்கள் எதுவும் பிடிக்காது. துளசியைக் கல்யாணத்துக்கு முன்னால் தினமும் பூஜை பண்ணினேன். அப்புறமா ரகசிய பூஜை தான் ராஜஸ்தான், குஜராத், சிகந்திராபாதில் எல்லாம். திரும்ப சென்னை வந்ததும் பண்ண முடியலை. பின்னர் ஒரு கட்டத்தில் யாரோ சொல்லி மாமியாரே பண்ண ஆரம்பிச்சாங்க. அதுக்கு அப்புறமாத் தான் சொந்த வீட்டில் துளசி மாடமே கட்டித் துளசியை நட்டு தினமும் விளக்கேத்த ஆரம்பிச்சேன். :))))
நீக்குநம் வீட்டில் வழக்கமில்லாததை, புதிதாக வந்த மருமகள் செய்வதை யார்தான் ஒத்துக்கொள்வார்கள்? ஹா ஹா ஹா
நீக்குஇந்த வாரம் ஸ்ரீராமானுஜரின் வரலாற்றுச் சித்திரம் மிக அருமையாகச் சொல்லி இருக்கீங்க. படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. தாசரின் வரலாற்றுப் படங்கள் மேலே உள்ளவை 70 & 72 எண்களில் உள்ளவை மிகப்பழைய ஓவியங்கள்னு நினைக்கிறேன். கம்பராமாயணப்பாடல்களும், பாசுரங்கள் விளக்கமும் வைணவர்களின் சமரசத்தன்மைக்கான உதாரணமும் சிறப்பு.
பதிலளிநீக்குஇந்த ஓவியங்களை நான் ஸ்ரீபெரும்பூதூர் கோவிலில் பார்த்தேன். சிலவற்றைப் படங்களாக எடுத்துக்கொண்டேன். அங்கிருந்த தக்கார், போட்டோ எடுக்காதீங்க என்றார். நான் அவரிடம் பேசியபோது, சிலர் போட்டோக்களைப் பகிர்ந்து அதில் என்ன என்ன தவறுகள் இருக்கின்றன என்று பிரச்சனையை உண்டாக்கிவிடுகிறார்கள் என்றார். இவையெல்லாம் அந்தக் காலத்தில் வரையப்பட்டவை என்றும் சொன்னார்.
நீக்குவைணவர்களின் சமரசத் தன்மைக்கான இன்னொரு உதாரணமும் படித்தேன். திருவரங்க கருவறை விமானத்தில் ஒரு புறம் விநாயகரும் (தும்பிக்கை ஆழ்வார்) இன்னொரு புறம் துர்க்கையும் இருக்கிறதாம்
நீக்குசாரலின் இந்தக் கதையை முன்னரே படிச்சிருப்பேன் போல. அரைகுறையாக நினைவு. ஏனெனில் இதில் அவர் நாரோயில் தமிழில் பள்ளிக்கோடம்னு சொல்லி இருப்பார். இதைப் படிச்சதும் நான் என் புக்ககத்தில் :பள்டம்" என்று சொல்வதை நினைவு கூர்ந்து கருத்துச் சொன்னாப்போல் ஓர் எண்ணம். நாங்கல்லாம் அப்போவே ஸ்கூல்னு சொல்ல ஆரம்பிச்சுட்டோம். சாரலின் படங்களும், அவரின் கவிதைகளும் மிகவும் நன்றாக இருக்கும். அவ்வப்போது சமையல் குறிப்புக்களும் கொடுப்பார். இதெல்லாம் அவரின் வலைப்பக்கத்தில். இப்போல்லாம் யாருமே வலைப்பக்கத்தைப் பராமரிப்பது இல்லை. க்ருத்திகா ஸ்ரீதர் என்னும் பழைய வலைப்பக்கத் தோழி என்னிடம் இன்னுமா வலைப்பக்கம் வைச்சிருக்கீங்கனு ஆச்சரியமாக் கேட்டார். :))))
பதிலளிநீக்குஸ்ரீரங்கம் வரப்போகும் நெல்லையையும் அவர் மனைவியையும் வருக, வருகனு வரவேற்கிறேன். ஸ்ரீராமும் சொல்லிட்டு இருந்தார் வரப்போவதாக. துளசி கோபால் நேத்திக்கு வந்திருக்காங்க. ஆனால் வீட்டுக்கு வரப்போவதாகச் சொல்லியும் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. பார்ப்போம்.
பதிலளிநீக்குதுளசி கோபால் அவர்கள் பதிவுகள் ஒன்றும் போடவில்லையே... அதனால் உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்தேன். கோபால் சாரும் வந்தாரா? (வருவாரா?)
நீக்குYet to visit. They visited Venkat today afternoon. No news to me till now. May come, may not come.
நீக்குவைணவ கோவில்களில், சாற்றுமுறை, பாசுரமுறைகள் சொல்லும் முறை பற்றி அறிந்தோம்.
பதிலளிநீக்குவிரிவாக வரலாறுகள் தருகிறீர்கள். அறிந்து கொள்கிறோம். படங்களும் கண்டோம்.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குபிள்ளை உறங்காவில்லி தாசர் கதை சுவாரஸ்யம் கூட்டுகிறது. அந்தக் கடைசிப் படம் அழகோ அழகு.
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் சார். நன்றி. இணையத்தில் பொருத்தமான படத்தைத் தேடி எடுத்துப் பகிர்ந்தேன்.
நீக்குஉங்கள் பக்கங்களைப் படித்ததின் பின்னணியில் -
பதிலளிநீக்குராமானுஜரின் திருக்கோஷ்டியூர், உறங்காவில்லி தாசர் கதைகளை, இரு சின்னஞ்சிறுகதையாக்கி என் பெண்ணிற்குச் சொன்னேன், சற்றுமுன்.
ஆஹா... இராமானுஜர் வரலாற்றை முழுமையாக எழுதுகிறேன். அத்துடன் அவருடன் இருந்த ஆச்சார்யார்கள் அனைவரின் வரலாற்றுச் செய்திகளையும். தொடர்ந்து வாருங்கள்
நீக்கு*சின்னஞ்சிறு கதைகளாக்கி
பதிலளிநீக்குhttps://sivamgss.blogspot.com/2026/07/blog-post.html
பதிலளிநீக்குகு.கு. பத்தி இன்னிக்கு நான் எழுதின பதிவு (காலம்பரவே எழுதினது) இன்னும் இங்கே அப்டேட் ஆகலை. அதனால் சுட்டி கொடுத்திருக்கேன். முடிஞ்சவங்க போய்ப் பாருங்க. ஒண்ணும் புதுசா இருக்காது. ஏமாந்து போக வேண்டாம். :)))
இத்தனை நாட்கள் நாங்கள், நீங்கதான் வீட்டு வேலைகள்லாம் செய்யறீங்க, சாம்பசிவம் சார் காய்கறிகள் வாங்கித் தருவதோடு சரி என்று நினைத்திருந்தேன். படத்தைப் பார்த்தால், அவர்தான் காய்கறிகளை வெட்டிக்கொடுத்திருக்கார்... இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து வேறொரு பதிவில், அவர் சமைப்பதையும் பகிர்ந்துவிடுவீர்களோ?
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்
நீக்குபதிவு அருமை. பிள்ளை உறங்காவில்லி தாசரின் வரலாறு முன்பு படித்து இருக்கிறேன். நீங்கள் படங்களுடன் வரலாறு சொன்னது அருமை.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை.
‘சிற்றஞ்சிறுகாலே’ என் கணவர் தினம் பாடுவார்கள். இறைவனுக்கு காலையில் எழுந்து குளித்து பூ வைத்து வணங்கும் போது அவர்கள் பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
//அகளங்கநாட்டாழ்வான் என்ற தாஸ்ய பெயர் பெற்றான். //
இப்படி ஒவ்வொருவரும் காலம் வரும் போது குருவால் நல்வழி காட்டப்பட்டு இறைவனை அடைகிறார்கள்.
//உலக மக்கள் உன்னை வந்து அடைவதற்கு, அவரவருடைய பக்குவத்துக்கு ஏற்றபடி, பலவித வழிபாட்டு முறைகளை நீயே உருவாக்கினாய்.//
உண்மை.
நல்ல விளக்கவுரையுடன் பதிவு அருமை. நன்றி.
இறைபணி தொடர வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
மிக்க நன்றி கோமதி அரசு மேடம்... சில நேரங்களில் போரடிக்கிறதோ என்றும் தோன்றும். ரொம்ப நீளமாகவோ இல்லை புரியாத விதத்தில் எழுத்து இருக்கிறதோ என்றும் தோன்றும்
நீக்குபகிர்ந்த கதை மிக அருமை.
பதிலளிநீக்குசாந்தி மாரியப்பன் பன்முக வித்தகி, சகலகலாவல்லி.
நாகர் கோயிலை சேந்தவர் சாரல் காற்றாய் அவர் கதை கட்டுரைகள் இருக்கும் நன்றாக படம் எடுப்பார், எனக்கு பிடித்தவர் அவர் கதையை பகிர்ந்தமைக்கு நன்றி சார்.