...சினிமா ஆர்வம் துரத்த, சென்னைக்கு வந்து சேர்ந்தார். எந்த வேடமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் ‘மூன்று பெண்கள்’ தொடங்கி, ‘திருமணம்’, மாய மனிதன்’, ‘பக்த சபரி’ எனச் சிறியதும் சற்றுப் பெரியதுமான படங்களில் நடித்தார். நண்பர்கள் உதவியுடன் டைரக்டர் ஜோசப் தளியத் அறிமுகமானார்.