...சினிமா ஆர்வம் துரத்த, சென்னைக்கு வந்து சேர்ந்தார். எந்த வேடமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் ‘மூன்று பெண்கள்’ தொடங்கி, ‘திருமணம்’, மாய மனிதன்’, ‘பக்த சபரி’ எனச் சிறியதும் சற்றுப் பெரியதுமான படங்களில் நடித்தார். நண்பர்கள் உதவியுடன் டைரக்டர் ஜோசப் தளியத் அறிமுகமானார்.
அப்போது சி.எல். ஆனந்தன் கதாநாயகனாக நடிக்க, ‘விஜயபுரி வீரன்’ படத்தை இயக்கிவந்தார் தளியத். அந்தப் படத்தில் அசோகனுக்கு ஒரு முக்கிய வேடம் கிடைத்தது. அந்தப் படத்தின் உதவி இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தருடன் ஏற்பட்ட பழக்கம் நெருங்கிய நட்பாக விரிவடைந்தது. பின்னாளில் அவரை ஏவி.எம். நிறுவனத்துக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அசோகன்.
ஏவி.எம். நிறுவனத்தையும் எம்.ஜி.ஆரையும் பல மட்டங்களில் சந்தித்துப் பேசி சம்மதிக்கவைத்து, ‘அன்பே வா’ படம் உருவாகக் காரணமாக இருந்தவரும் அசோகன்தான்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அசோகனுக்கும் பிராமண வகுப்பைச் சேர்ந்த கோயமுத்தூர் சரஸ்வதிக்கும் தீவிரமான காதல். திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து, பெண் கேட்கப் போனால் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. “இனிமேல் சரஸ்வதியை சந்திக்கக் கூடாது. மீறினால் போலீஸில் புகார் செய்து விடுவோம்” என்று மிரட்டுகிறார்கள்.
அப்போதைக்கு ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ பட பூதம்போலக் கையைக் கட்டி நின்றவர், தகுந்த நேரம் பார்த்துக் காந்திருந்தார். நேரம் வந்தது. குடும்பத்தினர் கண்களில் எதையும் தூவாமல், தப்பித்துவந்தார் சரஸ்வதி. தயாராக இருந்த அசோகன் அவரைக் கடத்திக்கொண்டு சென்னைக்கு வந்துசேர்ந்தார்.
எம்.ஜி.ஆருக்குத் தகவல் தரப்பட்டது. அசோகனைப் பாராட்டிய அவர், உடனடியாகத் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர்., ஏவி.எம். சகோதரர்கள், ஏ.சி. திருலோகசந்தர் ஆகியோர் நுங்கம்பாக்கம் ஃபாத்திமா சர்ச்சில் கூடினார்கள். தேவாலயத்தின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன.
சரஸ்வதிக்கு மேரி ஞானம் என்று பெயர் சூட்டப்பட்டு, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த திருமணம் என்பதால் பெண் வீட்டார் போலீஸில் புகார்செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது. நெருங்கிய நண்பர் ஜெய்சங்கர் வெளியூர் படப்பிடிப்பிலிருந்து திரும்பிவந்து அசோகன் – மேரி ஞானம் தம்பதிக்குத் தனது வீட்டில் சிறப்பான விருந்து வைத்து மகிழ்ந்தார்.
'தி இந்து' விலிருந்து...(2014)
=========================================================================================================
சென்ற வாரம் விகடன் தளத்துக்கு மறுபடி மறுபடி சென்றதும் எனக்கு இரண்டுமுறை வந்திருக்கும் மெயில்... நம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
===========================================================================================================
இன்று உலக பெண்கள் தினம். 2013 இல் இந்நாளை ஒட்டி எனக்குள் "கிளர்ந்தெழுந்த சிந்தனைத்துளி"!!!!
==================================================================================================
தலைமுடி அனுபவம் ஒன்று பற்றி பின்னர் சொல்கிறேன் என்று அதிரா தளத்தில் சொல்லி இருந்தேன். பெரிய சஸ்பென்ஸ் வைத்தது போல் ஆகிவிட்டது அது! அப்போது அதை நீளமாக தட்டச்ச அலுப்புப் பட்டு ஒத்திப்போட்டேனே தவிர விஷயம் சாதாரண விஷயம். அதாவது எழுதும் எனக்கும், படிக்கும் உங்களுக்கும் அது சாதாரண விஷயம். சம்பந்தப்பட்டவருக்கு அது கொடுமையான அனுபவம்.
வேலூரில் வசிக்கிறார் எங்கள் உறவுக்காரப்பெண். இரவு ஷாப்பிங் சென்று திரும்ப வீட்டுக்கு அவர் தன் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஏதோ ஒரு பூச்சி முகத்தில் மோதியது போல இருந்ததாம். பின்னர் தலை முடிக்குள் தஞ்சமடைய முயன்ற அதை, சற்றே சிரமப்பட்டு கைகளால் தட்டி விட்டிருக்கிறார்.
சில நொடிகளில் கையில் லேஸான எரிச்சல் தோன்ற, "கணவரிடம் சொல்லியிருக்கிறார். 'சில வண்டுகள் அப்படித்தான். கையை எதிலும் படாமல் வைத்துக்கொள், வீட்டில் போய் கையைக் கழுவிக் கொள்ளலாம்' என்று சொல்லியிருக்கிறார் கணவர்.
அதே போல வீட்டில் போய் கைகழுவி, அப்படியே முகம் கழுவும்போது தலைமுடியில் பிசுபிசு என்று இருந்ததை பார்த்திருக்கிறார். "பூச்சி சும்மா போகாமல் எச்சில் துப்பி விட்டு விட்டுப் போயிருக்கிறது" என்று நகைச்சுவை பேசி அதையும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்.
படுத்து சுமார் பதினைந்து நிமிடங்களில் மீண்டும் தலையில் பிசுபிசுப்பும், அரிப்பும். கைவைத்துப் பார்த்தால் மறுபடியும் கொழகொழவென்று கையில் உணர்ந்திருக்கிறார். எழுந்து தலைமுடியை ஷாம்பூ எல்லாம் போட்டு அலசி, படுத்திருக்கிறார். மறுபடி படுத்து பதினைந்து நிமிடங்களில் மறுபடியும் அதே கதை.
'சரிதான், சரிப்படாது இனி' என்று கிளம்பி ஸி எம் ஸி ஹாஸ்ப்பிட்டல் சென்றிருக்கிறார்கள். உடனடியாக ஸ்கின் டிபார்ட்மெண்ட்டுக்கு ரெஃபர் செய்யப்பட்டு மருத்துவர் வந்து பார்த்து விட்டு, சில பரிசோதனைகளுக்குப் பின்னர் தலைமுடியின் அந்தப் பகுதியை மட்டும் வெட்டி க்ளீன் செய்து விட்டார்கள். கிளம்பி வண்டி நிறுத்தியிருந்த இடம் வந்திருப்பார்கள்.
மறுபடியும்....
திரும்ப ஓடினால் பக்கத்திலிருக்கும் தலைமுடியில் அதே பிசுபிசுப்பு.. "போய் ஒரு சலூனில் தலைமுடி எல்லாவற்றையும் எடுத்து விட்டு வாருங்கள்" என்று சொல்லி விட்டார்கள். இவர்கள் தயங்கினாலும் வேறு வழி இல்லை. திரும்பி வந்ததும் மேலே தடவ சில மருந்துகளும், சாப்பிட சில மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினார்கள்.
நல்லவேளை பிறகு ஒன்றும் ஆகவில்லை. ஏதோ விஷச் சிலந்தியின் வேலை என்றார்கள். வழக்கமாக முடி எடுத்தபின் வளரும் வேகத்தில் முடி வளரவில்லை என்றாலும் அந்தப் பிரச்னை அப்புறம் மறுபடி வரவில்லை.
இதைத்தான் சொல்லவந்தேன்.
=======================================================================================================
மனதில் நிற்கும் வரிகள்... திரு மு மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் புத்தகத்திலிருந்து...
=======================================================================================================
வாழ்க...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குமங்களகரமான மகளிர் தின நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதலைப்பு ஈர்க்குதே!!! வாசிக்கணும்....இன்று ஒரு கல்யாணம் ஸோ நோ கடமை காலை...ஹெ ஹெ ஹெ...காபி கடமை ஆத்தியாச்சு...
பதிலளிநீக்குநம்ம அக்கா, தங்கைகள், நண்பிகள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள். நினைவுபடுத்திய ஸ்ரீராம் பாஸிற்கு மிக்க நன்றி!!!
கீதா
நன்றி துரை அண்ணா வாழ்த்துகளுக்கு...
பதிலளிநீக்குகீதா
அடடே... வாழ்த்தை, பதிவில் சேர்க்க மறந்தேன்....! நம் மகளிர் வாசக நண்பர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். நன்றி துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் பானு அக்கா.
பதிலளிநீக்குமகளிர் தின நல்வாழ்த்துக்கள்💐💐
பதிலளிநீக்குஅசோகனின் கதை ஸ்வாரஸ்யமாக இருக்கிறது....
பதிலளிநீக்கு//கண்ணில் எதுவும் தூவாமல்// ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராமின் டச்!!!! ரசித்தேன்
கீதா
ஸ்ரீராம் விகடன் என்றில்லை ஏதேனும் நீங்கள் படம் தேடினால்....ஒரு வேளை அந்தப் படம் ஏதேனும் ஒரு பொருள் சம்பந்தப்பட்டது என்றால் உடனே நம் பெட்டிக்குள் அப்பொருள் ஆஃபர் என்று வந்து விடுகிறது. நாம் இணையத்தில் உலவுவதை யாரோ...ஸாரி யாரோ இல்லை நிறைய எங்கிருந்தோ நம் கண்ணுக்குத் தெரியாமல் வேவு பார்க்கப்படுதிறது...இணையத்தில்.எதுவும் ரகசியமில்லை....நோ பெர்சனல் ஸ்பேஸ் இன் நெட்...இதை யோசிக்கும் போது.புராணக் கதைகளில் வருவதுகூட சில சமயம் எனக்கு நினைவுக்கு வரும்...
பதிலளிநீக்குகீதா
//கண்ணில் எதுவும் தூவாமல்// ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராமின் டச்!!!! ரசித்தேன்//
பதிலளிநீக்குஇல்லை கீதா.. அது அந்தப் புத்தகத்தில் அப்படியே இருக்கிறது. என் கைவண்ணம் எதுவும் அதில் இல்லை.
// விகடன் என்றில்லை ஏதேனும் நீங்கள் படம் தேடினால்....ஒரு வேளை அந்தப் படம் ஏதேனும் ஒரு பொருள் சம்பந்தப்பட்டது என்றால்//
பதிலளிநீக்குஆம், ஆம், நன்றாகவே அறிவேன்.
நான் விகடனே படிக்கிறதில்லை. வாங்குவதும் இல்லை. ஆனால் எனக்கும் தினமும் இந்தச் சலுகையோட விகடன் வாங்கும்படி பிடுங்கி எடுக்கிறாங்க! அதுக்கு என்ன செய்யறது?
பதிலளிநீக்குதலைமுடி விஷயம் ரொம்ப சோகம். அசோகன் கதை தெரிஞ்சது! மு.மேத்தாவின் கவிதைகள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.
பதிலளிநீக்குவிஜயவாடாவுக்கு மாற்றல் வரும் முன் தற்கால மாற்றமாக சென்னையில் மனை வி மக்களை குடி யமர்த்தினேன் எங்கள் வீடுஅப்போது ட்ரஸ்ட் புரத்தில் இருந்தது அசோகனின் வீடும் அருகில் இருந்த நினைவு அது என்ன மனைவி கிருத்துவராக மாறுதல் இவர் ஏன் பிராமணனாக மாறி இருக்கக் கூடாது
பதிலளிநீக்குஅசோகன், சிலந்தி எனக் காலைக் கலவரங்கள். 2013-14-களில் அனுஷ்காவைத் தாண்டியும் சிந்தித்திருக்கிறீர்கள் என்பதை நான் சொல்லவில்லை; உங்கள் கவிதைகள்தான் காட்டுகின்றன!
பதிலளிநீக்குபெண்கள் தினத்தில், ஒரு அதிரடிக் கேள்வியை எழுப்பியிருக்கிறார் GMB-சார்; கவனிக்கவும்.
முகமது மேத்தா, மீரா போன்றவர்கள் சின்னவயசில் மனம்கவர்ந்த கவிஞர்கள்.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குபூச்சி - அப்பாடி பயங்கர அனுபவம் தான்.
அசோகன் பிறவிக் கலைஞன்.
பதிலளிநீக்குஜி எம் பி சார்... அசோகன் இயல்பாகவே பிராமண எதிர்ப்பு கொண்டிருந்தார். (துவேஷம்). காரணம் தெரியவில்லையாயினும், அவருக்கு பிராமணர்கள்தான் பெரிதும் உதவினார்கள் என்றும் படித்திருக்கிறேன் (சோ, எஸ்.எஸ்.வாசன் முதலியோர்). அவருக்கு இருந்த மன வருத்தங்களினால் (தான் முன்னேறவில்லையே என்பதா அல்லது வேறு கவலைகளா தெரியவில்லை) கடுமையான குடிக்கு அடிமையாகி இருந்தார். அவருக்கு எம்ஜியார் மேலும் வெறுப்பு. இருந்தபோதும், எம்ஜியார் அசோகனின் கடைசி காலத்தில் நிறைய உதவி புரிந்தார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஅனுஷ்காவின் கரு கரு முடிக்கும், சிலந்திப் பிரதாபத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
விகடன் வாசகர் எண்ணிக்கை (இணையதளம் உள்பட) குறைந்துவருகிறது என்றே நினைக்கிறேன்.
பெண்ணை மனுஷியாக நினைப்பதற்கு முதல் படி, அவர்கள் பிரதானமா ஏற்றுக்கொள்ளும் வேலைகளான, துவைத்தல், சமையல், வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளல், காய்கறி/மளிகை வாங்குவது போன்றவற்றை நாம் செய்வது என்று ஏற்றுக்கொண்டால் போதும். தானாகவே அவர்களை மதிக்கும் எண்ணம் வந்துவிடும்.
மங்கையர் மலர் தயாராகிக் கொண்டிருக்கின்றது...
பதிலளிநீக்குஇடையில் சில வேலைகள்... அப்புறமாக அப்புறமாக வருகின்றேன்1..
அசோகன் பற்றி அறியாச் செய்திகளை அறிந்தேன்
பதிலளிநீக்குஅகோகன் திருமண வரலாறு அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஅகோகன் படித்தவர், பாடத் தெரிந்தவர்.
மகளிதின கவிதை அருமை.
சிலந்தி பூச்சியின் விஷமம் பயங்கரம்.
மேத்தா அவர்கள் கவிதையும் நன்றாக இருக்கிறது.
மகளிதின வாழ்த்துக்களுக்கு நன்றி.
பெண்மைக்கான வரிகள் மிக அருமை...
பதிலளிநீக்குஅசோகன் அவர்களுக்குள் இப்படி ஒரு காதல் இருந்திருக்குதோ?:) அவரைப் பார்த்தால் காதல் வசப்படுபவர்போல இல்லை முகம்:).. இருப்பினும் அக்காலத்திலேயே என்ன தைரியம் இருந்திருக்கிறது இருவருக்கும்... சப்போர்ட் நிறைய இருந்தமையால இருக்கலாம். ஆனா வெட்டாமல் விட்டு விட்டார்களே..., இக்காலத்தில கொலை எல்லோ நடக்குதாம் .. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்பு:))
பதிலளிநீக்கு//சென்ற வாரம் விகடன் தளத்துக்கு மறுபடி மறுபடி சென்றதும் எனக்கு இரண்டுமுறை வந்திருக்கும் மெயில்... நம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!///
பதிலளிநீக்குநீங்க வர வர எங்கேயோ போயிட்டிருக்கிறீங்க ஸ்ரீராம்:).. அடுத்து ஸ்கொட்லாண்ட்யாட் வெப்சைட் ..... ட்றம்ப் அங்கிள் வெப் சைட்டுக்கெல்லாம் அடிக்கடி விசிட் பண்ணுங்கோ:))
//இன்று உலக பெண்கள் தினம். ///
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அனைத்துப் பெண்களுக்கும்.
///2013 இல் இந்நாளை ஒட்டி எனக்குள் "கிளர்ந்தெழுந்த சிந்தனைத்துளி"!!!!///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஐ ஒப்ஜக்ஷன் யுவ ஆனர்:). என் வன்மையான கண்டனங்கள்.. பெண்கள் தினத்தில் பெண்களின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது.. அதை விட்டுப்போட்டு..:) பெண்களைக் பெருமைப்படுத்துறேன் எனச் சொல்லி குறைவுபடுத்திப் போட்டார்ர்...:). எல்லோரும் வாங்கோ தேம்ஸ் கரையில் இன்று உண்ணாவிரதம் ஆரம்பம்.. சொட்டுத் தண்ணிகூடக் குடிக்க மாட்டேன்ன்:)).. இந்தக் கவிதையை விடக் குளிர் ஒன்றும் பெரிசில்லை இப்பவே ஆற்ரம் கரையில பாய் விரிக்கிறேன் எல்லோரும் வந்தமருங்கோ உண்ணா விரதம் ஆரம்பம்ம்ம்ம்ம்:))..
பெண்கள் கவிமாமணி ஆகிட்டினம்:).. கதாசிரியர் ஆகிட்டினம்:).. கவிப்பேரரசு ஆகிட்டினம்.. ஏன் ஞானியாக கூட வந்திட்டார்கள்:).. இப்படி இன்று பெண்கள் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள் வாழ்க பெண்கள்.. வளர்க பெண்கள் எனச் சொல்லுவதை விட்டுப்போட்டு:)... சில பெண்களுக்கு சில காட்டுமிராண்டிகள் ஊற்றிய அஸிட்டை இப்போ நினைவு படுத்தி எம் பெண்கள் தினக் கேக் கட் பண்ணும் மூட்டைக் கெடுத்திட்டாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர்ர்ர்ர்:))..
ஹையோ என்ன இது தனியே நிக்கிறேனோ ... வைரவா இம்முறை ரெண்டு வைரம் பதிச்ச வேல் கொன்ஃபோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) என்னை இன்று மட்டும் காப்பாத்திடுங்கோ.. இப்போ ஆபத்துக்கு என் செக்:) கூட இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
அடடா.. தலையில் பூச்சி பட்டதுக்கு இப்படியா... அது சிலந்திதான் என எப்படி முடிவு பண்ணினார்கள்?.. சம்போ போட்டுத் தோய்ந்தும் அது தலையில் ஒளிச்சிருந்திருக்கிறது போலும்... பகல் எனில் கொஞ்சம் கூர்மையாகத் தேடியிருந்தால் அகப்பட்டிருக்கும், இது பயந்தில அவசரப்பட்டு தலையை மொட்டை அடித்து விட்டார்கள் போலும்.. ஏதோ எல்லாம் நன்மைகே.. தலைபோக இருந்த இடத்தில் தலைப்பாகையோடு போனது என்பார்கள்...
பதிலளிநீக்கு///நேசிக்கத் தெரிஞ்ச இதயங்களுக்குத்தான் என் நெஞ்சம் புரிகிறது.. உனக்கெங்கே புரியப்போகிறது///
பதிலளிநீக்குஹா ஹா ஹா காசி ராமேஸ்வரம் போயி வந்தேன் பாழும் காதலினாலே திரும்பி வந்தேன்.. போகாது ஐயா போகாது.. எங்கு போனாலும்.... அனுக்..:)).. ஹையோ இந்த இடத்தில வசனம் மறந்திட்டனே கர்ர்ர்ர்ர்ர்ர்:))..
அனுக்காவைத்தனியே போடப் பயத்தில:) மேத்தா அங்கிளை துணைக்கு கூட்டி வந்திருக்கிறார்:)).. சப்போர்ட்டுக்கு:)).. அசோகன் அவர்கள் எம் ஜி ஆரை சப்போர்ட்டுக்கு அழைச்சதைப்போல:)) ஹா ஹா ஹா ஹையோ எனக்கிண்டைக்குச் சனி உச்சம் பெற்றிருக்குது போல:)).. நான் தேம்ஸ்க்கு ஓடிடுறேன்ன்:))..
மேத்தாவின் கவிதைப் புத்தகம் ஒன்று நானும் வாங்கி வைத்திருக்கிறேன்ன். “கனவுக் குதிரைகள்”..
பதிலளிநீக்கு///ஏகாந்தன் Aekaanthan ! said...
பதிலளிநீக்குபெண்கள் தினத்தில், ஒரு அதிரடிக் கேள்வியை எழுப்பியிருக்கிறார் GMB-சார்; கவனிக்கவும்.///
ஹா ஹா ஹா தான் பதிலேதும் குடுக்காமல் லேசா நெருப்பைக் கொழுத்திப் போட்டு விட்டு ஓடிப்போய் கிரிக்கெட் மச் பார்க்கிறார் ஏகாந்தன் அண்ணன்:)) கர்ர்ர்ர்:))
காதலுக்காக உயிரையே குடுக்கினமாம் மதம் மாற மாடினமோ?:).. இதுக்கெல்லாம் கேள்வி கேய்க்கிறீங்க:) ஸ்ரீராம் ஏன் ஹன்ஷிகா படம் போடாமல் அனுக்கா படம் போட்டிருக்கிறார்?:) என ஆருமே கிளவி:) ஹையோ இன்று முடிவில டங்கு ஸ்லிப் ஆகுதே..:) ஆருமே கேய்வி:) கேய்க்கமாட்டினமாம்:))... இதுக்கு ஆராவது பதில் ஜொள்ளுங்கோ:) அதுக்கும் பதில் கிடைக்கும்:)) ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))
////ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குஅடடே... வாழ்த்தை, பதிவில் சேர்க்க மறந்தேன்....! நம் மகளிர் வாசக நண்பர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். நன்றி துரை செல்வராஜூ ஸார்.///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநடிகர் அசோகன் பற்றிய தகவல்கள் அறிந்திராதது. சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் சரஸ்வதியை கடத்தி வந்து திருமணம் செய்து கொள்வதற்குள் எவ்வளவு டென்ஷனோ அவருக்கு.
பெண்மையை போற்றும் தங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன்.மகளிர் தின வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள். இக்கருத்துப்பதிவின் மூலம் இப்பதிவுக்கு வரும், வந்த அனைத்து சகோதரிகளுக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். நன்றி.
விகடன் பற்றிய செய்திக்கு நன்றி.
சிலந்தி பயங்கர அனுபவம். சம்பந்தபட்டவரை நினைத்தால் மனதிற்கு வருத்தமாக உள்ளது.
மு.மேத்தாவின் கவிதைகள் அழகு. மிகவும் பிடித்திருந்தது. அனுஷ்காவின் படமும் அதை விட அழகு. கதம்பம் நன்று.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
>>> நேசிக்கத் தெரிஞ்ச இதயங்களுக்குத்தான் என் நெஞ்சம் புரிகிறது.. உனக்கெங்கே புரியப் போகிறது?..<<<
பதிலளிநீக்குஇப்படித்தான் தன்னோட கவிதையையும் அனுக்கா(!) படத்தையும் போட்டிருக்கார்...
ஆனா - எனக்கென்னமோ அனுக்கா
இந்த மாதிரி சொல்றாப்போல தெரியுது!...
>>> நேசிக்கத் தெரிஞ்ச இதயத்துக்குத் தான் என் நெஞ்சம் புரிகிறது!..
உங்களுக்கு எங்கே புரியப்போகிறது?... <<<
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
தேம்ஸ் கரையிலயிருந்து சலங்கைச் சத்தம் கேக்குது.. நா ஓடிடுறேன்...டா ஜாமீய்!..
எனக்கு விகடன் போன் சந்தா கட்ட சொல்லி நான் ஏற்கனவே சகுந்தலாவைக் கட்டிகட்டேன் சொல்லிட்டேன்
பதிலளிநீக்குநடிகர் அசோகனை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியதும் குமுதம் பத்திரிகை தான். யாருக்காவது தெரியுமென்றால் சொல்லவும். பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குபெண்மை பற்றிய கவிதை உங்கள் சிந்தனைத் துளிகள் அருமை ஸ்ரீராம்....
பதிலளிநீக்குபாவம் அப்பெண். சிலந்தியினால் வரும் கொடுமை...ஒரு சிலருக்கு சிலந்தி உடலில் பட்டால் அந்த இடம் முழுவதும் ட்ரை ஆகி தோலில் சிலந்தி வலை போன்று டிசைன் ஏற்படும்...அது போன்று சிலருக்கு தண்ணீர் பாம்பு காலைச் சுற்றினால்....பாம்புத் தோல் போல் காலில் ட்ரை ஆகி வரும்..என்று கேட்டதுண்டு.
பாவம் சிலந்திக்குக் கூடு கட்ட வேறு இடம் கிடைக்கலை போலும்...சிலந்தி வலை கட்ட அதன் கம்முடன் இடம் தேடி அலைந்திருக்கும் அப்பெண் இடற்படவும் புகுந்துவிட்டது போலும்...நல்ல காலம் பெண்ணிற்கு அப்பிரச்சினை மீண்டும் வராமல் போனது மகிழ்ச்சி...எப்படி எல்லாம் பிரச்சனைகள்...
ஹப்பா என் தலைமுடி சேஃப்!! ஹா ஹா ஒரு வழியயா இனி என் தலை முடியை பிச்சுக்க வேண்டாம்...ஒரு வழியா புதிர் வந்துருச்சு....
கீதா
மேத்தாவின் வரிகள் அருமை...
பதிலளிநீக்குஅது சரி நெல்லை போன வாரம் ரொம்ப ஃபீல் பண்ணிட்டார்னு அவரைச் சமாதானபடுத்த இந்த வாரம் இப்படியான அனுஷ் படமோ!!!! ஹா ஹா ஹா ஹா இருந்தாலும் அனுஷ் நலலத்தான் இருக்காங்க
கீதா
வீட்டுல பாஸ் இருக்க, நீங்க பெண்கள் தினத்தை மறக்கலாமோ?!!!!!! பொவ் பொவ் பொவ்...... அவங்களாலதான் எனக்கே நினைவு வந்துச்சு...
பதிலளிநீக்குகீதா
ஸி.எம்.ஸி இல்ல சி.எம்.சி. சரி எதனால அப்படி தலைமுடி பிசுபிசுப்பு ஆகிடுச்சுன்னு கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியலியா?!
பதிலளிநீக்குஅசோகன் விஷயத்தில் ஒன்றே ஒன்று மட்டும் இடிக்கிறது...உண்மையான அன்பு என்றால் அதற்கு மதமோ, ஜாதியோ அவசியமில்லையே.
பதிலளிநீக்குஅவரவர் அவரவர் மதத்தை ஃபாலோ செய்யலாமே என்று தோன்றியது. இதற்குச் சிறந்த உதாரணம் நம் நண்பர் மதுரைத்தமிழன்...
கீதா
//இப்படித்தான் தன்னோட கவிதையையும் அனுக்கா(!) //
பதிலளிநீக்குதுரை அண்ணா அனுக்காவா!!! ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ!!!
கீதா
ஹா ஹா ஹா காசி ராமேஸ்வரம் போயி வந்தேன் பாழும் காதலினாலே திரும்பி வந்தேன்.. போகாது ஐயா போகாது.. எங்கு போனாலும்.... அனுக்..:)).. ஹையோ இந்த இடத்தில வசனம் மறந்திட்டனே கர்ர்ர்ர்ர்ர்ர்:))..//
பதிலளிநீக்குஅதிரா அனுஷ் படம் இல்லை என்றால் வியாழன் விடியாது நமக்கு!!! ஹா ஹா ஹா ஹா...அப்புறம் அது வேற ஒன்னுமில்லை போன வாரம் நெல்லையை ரொம்பவே மிரட்டிட்டார் ஸ்ரீராம் அப்படியான தமனா படத்தைப் போட்டு ஸோ அவரை சமாதானப்படுத்த இப்பையான அனுஷ் படம்...அதான் கதை....ஹா ஹா ஹா ஹா ஹா
கீதா
அதிரா ஸ்ரீராம் எழுதினது அந்தக் கவிதை சிந்தனைத் துளி 2013ல...அதை அப்படியே போட்டுட்டார்....பொயிங்காதீங்க!!! ஹா அஹ ஹா ஹா இருந்தாலும் பூஸார் சொல்லியாச்சு!! ஸோ அதுக்கு மறு வார்த்தை உண்டோ?!!! நான் வரேன் தேம்ஸுக்கு டிக்கெட் மட்டும் அனுப்பி வையுங்க!!! ஹா ஹா ஹா ஹா
பதிலளிநீக்கு//காதலுக்காக உயிரையே குடுக்கினமாம் // இது நீங்கள் கலாய்த்து எழுதியது புரிகிறது...
ஆனால் என் தனிப்பட்டக் கருத்து.. காதலுக்காக/உண்மையான அன்பென்றால் உயிரைக் கொடுப்பது என்பதை ஏனோ என்னால் ஏற்க முடியவில்லை. அதைவிட அப்படி உண்மையான காதல் என்றால் அந்த நினைவுடன் வாழ்வதுதானே பாஸிட்டிவ் இல்லையோ!! அப்படியான ஒரு சிந்தனையில் தான் அங்க சொல்லிருக்கற கேய்வி!!!!! னு தோணுது....
கீதா
நீங்க வர வர எங்கேயோ போயிட்டிருக்கிறீங்க ஸ்ரீராம்:).. அடுத்து ஸ்கொட்லாண்ட்யாட் வெப்சைட் ..... ட்றம்ப் அங்கிள் வெப் சைட்டுக்கெல்லாம் அடிக்கடி விசிட் பண்ணுங்கோ:))//
பதிலளிநீக்குஹை!! அதிரா அப்ப இந்த சைட்டுக்குப் போனா ட்ரம்ப் மாமாவும், ஸ்காட்லாந்து யார்டும் நம்மள சைட் சீயிங்க் டிக்கெட் இலவசம்னு அனுப்பறேன்னு சொல்லுவாங்களா??!!! ஸ்ரீராம் யு ஆர் வெரி லக்கி மேன்!!! ஹா ஹா ஹா
கீதா
இக்காலத்தில கொலை எல்லோ நடக்குதாம் .. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்பு:))//
பதிலளிநீக்குஹா ஹ அதிரா ஊர் வம்பு எல்லாம் இல்லை...இது உலகத்துக்கே தெரியும்...தகிரியமா சொல்லலாம்...
கீதா
மறைந்த நடிகர் அசோகன் சில பழைய படங்களில் பார்த்திருக்கிறேன் .ஹண்ட்ஸம்மா இருப்பர் அங்கிள் .
பதிலளிநீக்குஹாஹா :)விகடன் எனக்கும் அடிக்கடி வருது மெசேஜ் :)
2018 கு புதுசா எழுதியிருக்கணும் :)
விஷம் ப்ளஸ் விஷம சிலந்தி அநேகமா அவர் கூந்தலில் இருந்து கடிச்சி வச்சிருக்கும் .இருட்டு நேரங்களில் தலையை ஸ்கார்ப் போல் அணிந்து போக சொல்வாங்க இதுக்குதான் ..ஆனா படிச்சி முடிச்சதும் எனக்கே என்னமோ பண்ணுது .
பாவம் அவர் இத்தனை பாடுபடுத்திவிட்டதே ஒரு பூச்சி .
இப்போ கவிதையை மேத்தா அனுஷை பார்த்து சொல்றார் :) சரி அனுஷ் யாரை பார்க்கிறார் :)
சிலந்தி பயங்கரம். இப்படி எல்லாம் நடக்குமா. சாமி காப்பாத்து.
பதிலளிநீக்குஅசோகன் நடிப்பில் உயர்ந்தவர். கெட்ட பழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம்.
இந்த ஸ்ரீராம் அனுஷ்காவுக்காக மேத்தா ஜி யை இழுத்தாலும் கவிதை நன்றாகத்தான் இருக்கிறது.
மகளிர் அனைவருக்கும் இனிய எதிர்காலம் நிகழ் காலம் அமைய வாழ்த்துகள்.
அவர்களைப் போற்றும் ஆடவர்களுக்கும் வாழ்த்துகள்.
அசோகன் கதை மனம் மாறி வந்த பெண்போதாதா? மதம் மாறணுமா? அப்படிதான் அவர்கள் வழக்கம். சிலந்தி கடித்தால் அலர்ஜி உண்டாகி சீக்கிரம் போகாது.உடம்பு பூராவும் பரவிவிடும் என்பார்கள். இது புதிய இடம் பிடித்து எல்லோர் மனதிலும் உட்கார்ந்துவிட்டது.
பதிலளிநீக்குஉங்கள் கவிதைக்குப் பாராட்டுகள். வாழ்த்துகளுக்கு நன்றிகள். அன்புடன்
பெண்கள் தின கவிதை சூப்பர்! நிஜமாகவே நாங்கள் எதிர்பார்ப்பது அதுதான்.
பதிலளிநீக்குமு.மேத்தாவின் கவிதையும் அருமை. அது சரி அதற்கும் அனுஷ்காவிற்கும் என்ன சம்பந்தம்? நான் அனுஷ்காவை அனு ஹாசன் என்று நினைத்து விட்டேன். ஹி ஹி!
நடிகர் அசோகன் பற்றிய செய்திகளும் சிறப்பு. சினிமா உலகில் இருக்கும் மிக சொற்பமான நல்ல மனிதர்களுள் அசோகன் ஒருவர். அவருக்கு கெடுதல் செய்தவர்களையும் உடனே மறந்து விட்டு மீண்டும் அவர்களுக்கு உதவி செய்வார் என்று சோ அவரைப்பற்றி எழுதியிருக்கிறார்.
எம்.ஜி.ஆரை வைத்து நேற்று, இன்று, நாளை படம் எடுக்க ஆரம்பித்து எம்.ஜி.ஆர் அந்த படத்தை இழுத்தடித்ததால் பெரும் கடன் சுமைக்கும் அதனால் ஹார்ட் அட்டாக்கும் வந்தது. அப்போது அவருக்கு கை கொடுத்தது ஜெய் சங்கர்தான்.
பின்னாளில் அவர் ஏற்ற குணசித்திர, காமெடி வேடங்கள்தான் அவருக்கு புகழ் சேர்த்தன. ஏதோ ஒரு படத்தில் அவர் பேசிய,"நீங்க இதையும் சொல்லுவீங்கோ, இதுக்கு மேலயும் சொல்லுவீங்கோ, நீங்கோ"என்னும் டயலாக் அப்போது மிகவும் பிரபலம்.
நான் அதிகம் சொல்லிட்டேனோ?
///ஆனால் என் தனிப்பட்டக் கருத்து.. காதலுக்காக/உண்மையான அன்பென்றால் உயிரைக் கொடுப்பது என்பதை ஏனோ என்னால் ஏற்க முடியவில்லை. அதைவிட அப்படி உண்மையான காதல் என்றால் அந்த நினைவுடன் வாழ்வதுதானே பாஸிட்டிவ் இல்லையோ!! அப்படியான ஒரு சிந்தனையில் தான் அங்க சொல்லிருக்கற கேய்வி!!!!! னு தோணுது....
பதிலளிநீக்குகீதா///
அது ஜி எம் பி ஐயா வின் கேய்விக்கு:) பதில் ஜொன்னேன் கீதா:))...
அது என்னடான்னா...:)) வள்ளுவர் தாத்தா என்ன ஜொன்னார்ர்ர்ர்:)).. ஊடலில் தோற்பவர் வென்றார்:) என ஜொன்னாரெல்லோ அதுதான் அசோக் அங்கிளுக்கும்:)) சரா அன்ரிக்கும்:) நடந்திருக்கு:)).. அதாவது உயிரைக் கொடுப்பது என நான் சொன்னதன் அர்த்தம்... இருவர் மனமொத்தவர்களாக ஆகிட்டால்.. காதலர்களோ கணவன் மனைவியோ.... போட்டி போட்டு விட்டுக் குடுக்கோணும்:)..
அப்படிப் போட்டு போட்ட இடத்தில:) அசோக் அங்கிள் ஜொன்னார்ர்..
சரா பிளீஸ்ஸ் எனக்கு நீதான் வேணும்.. நான் உன் மதத்துக்கே வந்திடுறேன் என:)).
ஆனா சரா அன்ரி ஜொன்னா:).. அசோக் பிளீஸ்ஸ் உங்களுக்காக எதனையும் கொடுக்க மீ தயார் அதனால உங்கள் மதத்துக்கே நான் வந்திடுறேன் என:)))..
இந்தப் போராட்டத்தின் முடிவில்.. சரா அன்ரியின் குரல் மேலோங்கி:) அவ மதம் மாறினா:))... அப்போ இப்போ உண்மையில் வென்றது ஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?:) பெண் தானே?:)) இப்போ புரியுதோ இதுக்கு மீ ஏன் பொயிங்கேல்லை என:))
ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன்.. மச் ஐ ஒஃப் பண்ணிட்டு வந்து பதிலைப் படியுங்கோ.. கையோடு ஜி எம் பி ஐயாவையும் கூட்டி வாங்கோ:)).. ஹையோ நான் உண்ணாவிரத்தப் போராட்டத்தில மும்முரமா இருக்கிறேன் ச்ச்சோ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டிசுரேப்பு மீஈஈஈஈஈஈஈஈ:))
கீதா அக்கா... இந்த மெயில் பிடுங்கல் எல்லோருக்குமே வருவதுதான். நான் சும்மா ஒரு ஜாலிக்கு அப்படிச் சொல்லியிருக்கேன்!
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார்.. என் பையனின் நண்பனின் தங்கை ஒரு பையனைக் காதலித்தாள். அவன் அவர்கள் மதத்துக்கு மாறினால்தான் திருமணம் என்று சொல்லப்பட்டு, அவனும் மாறி விட்டான்.
பதிலளிநீக்குஏகாந்தன் ஸார்.. ஹோலிக்குப் பிறகு உங்களைக் காணோமேன்னு நினைத்தேன். இதைப் பகிர்ந்தாலும் அனுஷ் படத்துடன் பகிர்ந்த நேரம் அது!
பதிலளிநீக்குவாங்க வெங்கட்... இந்தக் கதை கேட்டு கொஞ்ச நாட்களுக்கு என் தலை குறுகுறுவென்று இருந்தது.
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி... எண்ணெய் பொறுத்தவரை அசோகன் கொஞ்சம் செயற்கையான நடிகர். அனாவசிய முகச் சுளிப்புகளுடன் நடிப்பவர்!
பதிலளிநீக்குவாங்க நெல்லை... அப்போது நடித்துக் கொண்டிருந்த நடிகர்கள் எம் ஜி ஆர் அணி, சிவாஜி அணி என்று அடையாளம் காணப்பட்டார்கள்! அதில் இவர் எம் ஜி ஆர் அணி! என்றாலும் உயர்ந்த மனிதன் உள்ளிட்ட படங்களில் சிவாஜியுடனும் நடித்திருந்தார். உ.ம.னில் சிவாஜி ஒரு காட்சியில் இப்படி நடிக்கலாம் என்று அசோகனுக்கு சிவாஜி சொல்லிக்கொடுத்தபோது ஏ வி எம் சரவணனிடம் அசோகன் 'இவர் என் நல்லதுக்குதான் சொல்கிறாரா? நம்பி நடிக்கலாமா?' என்று கேட்டதாகப் படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க துரை ஸார்... மலரைப் படித்து விட்டேன்!
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. அசோகன் பாடத்தெரிந்தவர் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. ஒரே ஒரு பாட்டு படி இருக்கிறார். "இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்... அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்..."
பதிலளிநீக்குநன்றி சகோ அனுபிரேம்.
பதிலளிநீக்குவாங்க அதிரா...
பதிலளிநீக்குஅவர் முகம் பார்த்தால் எனக்கும் அந்த ஆச்சர்யம் வரும்.
//நீங்க வர வர எங்கேயோ போயிட்டிருக்கிறீங்க ஸ்ரீராம்:).. //
ஹா... ஹா... ஹா..
அடடா.... ஞானி அதிராவை குரைப்பட வைத்து விட்டேனே... ஆனா இது இப்போ எழுதியது இல்லை.. பழசு!
//ஹையோ என்ன இது தனியே நிக்கிறேனோ ... //
ஹா.... ஹா... ஹா... தனியாத்தான் நிக்கறீங்க...
//அது சிலந்திதான் என எப்படி முடிவு பண்ணினார்கள்?//
சி எம் சி யில் டாக்டர்கள் சொன்னது.
//அது தலையில் ஒளிச்சிருந்திருக்கிறது போலும்...//
இல்லை, கையில் பிடித்து கீழே போட்டு விட்டார்.
//அனுக்காவைத்தனியே போடப் பயத்தில:) மேத்தா அங்கிளை துணைக்கு கூட்டி வந்திருக்கிறார்:)).. //
இல்லையே.. அப்போ மருத்துவக்குறிப்பு, ஜோக் போட்டால் கூட அனுஷ் படம்தான்!
கனவுக்கு குதிரைகள் புத்தகத்திலிருந்து நல்ல கவிதைகளை ஷேர் செய்யுங்கள்.
//லேசா நெருப்பைக் கொழுத்திப் போட்டு விட்டு ஓடிப்போய் கிரிக்கெட் மச் பார்க்கிறார் ஏகாந்தன் அண்ணன்:))//
ஹா... ஹா.. ஹா...
//அடடே... வாழ்த்தை, பதிவில் சேர்க்க மறந்தேன்....! //
ஹி ஹி ஹி...
வாங்க சகோ கமலா ஹரிஹரன்.. ரசித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குஜீவி ஸார்... நீங்கள் சொல்ல நினைக்கும் விவரம் நா(ங்கள்)ன் அறியாதது.
பதிலளிநீக்குசொல்லுங்களேன்...
வாங்க கீதா...
பதிலளிநீக்குகவி வரிகளை ரசித்தமைக்கு நன்றி.
சிலந்தி என்று சொன்னாலும் நிச்சயமாக உறுதி படுத்தப்படவில்லை. கைகளை நீட்டி வெப் விடச் சொல்லி உறவுகள் அவரைக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்! மேத்தா கவிதைகள் எனக்குப் பிடிக்கும். பாஸ் இருக்க மரங்களை... பதிவிலேயே சொல்லியிருப்பதை மறந்து மறுபடி இரண்டு தரம் சொல்லியிருக்கேன்... கர்ர்ர்ர் கவனிக்கவில்லையா!
வாங்க ராஜி.. டைப் செய்யும் பொது அப்படி வந்ததும் அப்படியே விட்டு விட்டேன். பிசுபிசுப்புக்குக் காரணம் சொல்ல முடியவில்லை அவர்களால்.
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்...
பதிலளிநீக்குஅசோகன் ஹேண்ட்ஸம் என்று சொல்வது ஆச்சர்யம். அப்படியும் அபிப்ராயம் இருக்கிறதா?!! கவிதை புதிதாக 2018 க்கு எழுதவில்லை. 2019க்கு எழுதிடுவோம்... இன்ஷா முருகா...!!!
//சரி அனுஷ் யாரை பார்க்கிறார் :) //
என்னை... சீசீ.. நம்மைப் பார்க்கிறார்!!!
:)))))
வாங்க வல்லிம்மா..
பதிலளிநீக்குஆடவர்களுக்கு இன்று வாழ்த்துச் சொன்னதற்கு நன்றி! கவிதைக்கு கவிதையின் படம்... ஹா... ஹா... ஹா..
வாங்க காமாட்சி அம்மா... மனம் மாறி வந்தது போதாதா? மதம் மாறணுமா? நல்லா கேட்டிருக்கீங்கம்மா.. அவருக்கு போதவில்லை! வாழ்த்துகளுக்கு நன்றிம்மா...
வாங்க பானு அக்கா...
பதிலளிநீக்குகவிதை பாராட்டுக்கு நன்றி. மு மேத்தா கவிதைக்கு அனுஷ் படம் ஏன் போடக்கூடாது? அசோகன் பற்றி சோ சொல்லியிருப்பது நான் படித்ததில்லை. நேற்று இன்று நாளை படத்தை எம் ஜி ஆர் தாமதிக்கவில்லை. அந்தப் படம் ஓடவில்லை! இரண்டு மிக அருமையான பாடல்கள் உண்டு அதில். நாளை ஒன்று பகிரலாமா...? நீங்கள் சொல்லி இருக்கும் டயலாக் அன்னை ஓர் ஆலயம் என்று நினைக்கிறேன்!
ஜி எம் பி சார்... அசோகன் இயல்பாகவே பிராமண எதிர்ப்பு கொண்டிருந்தார். (துவேஷம்). காரணம் தெரியவில்லையாயினும், அவருக்கு பிராமணர்கள்தான் பெரிதும் உதவினார்கள் என்றும் படித்திருக்கிறேன் (சோ, எஸ்.எஸ்.வாசன் முதலியோர்). அவருக்கு இருந்த மன வருத்தங்களினால் (தான் முன்னேறவில்லையே என்பதா அல்லது வேறு கவலைகளா தெரியவில்லை) கடுமையான குடிக்கு அடிமையாகி இருந்தார். அவருக்கு எம்ஜியார் மேலும் வெறுப்பு. இருந்தபோதும், எம்ஜியார் அசோகனின் கடைசி காலத்தில் நிறைய உதவி புரிந்தார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.//
பதிலளிநீக்குநெல்லை இது இன்ஃபோ ....ஓ இப்படி எல்லாம் கூட இருந்ததா....நிறைய வியபபன செய்திகள்!!
கீதா
//சொல்லுங்களேன்.. //
பதிலளிநீக்குபுதுமைகளுக்குப் பெயர் போன 'குமுதம்' திடீரென்று ஒரு நாள் அந்தப் புதுமையை அரங்கேற்றியது.
ஒரு தொடருக்கு சித்திரங்கள் போடுவதற்கு பதில் கதைக் காட்சிகளுக்கு ஏற்றவாறு நிஜ நபர்களின் தோற்றங்களை ஷூட் செய்து சித்திரங்கள் போல வெளியிட்டது. அப்படி புதுமை செய்த முதல் தொடரில் நாயகன் பாத்திரப்படைப்பில் அசோகன் தோன்றினார். தொடரின் பெயரின் நினைவில்லை.
பிற்காலத்தில் இதே மாதிரி படக்காட்சிக் கொண்ட தொடர்கள் பிற பத்திரிகைகளில் வந்தாலும் முதன் முதல் இந்தப் புதுமையைச் செய்தது 'குமுதம்' தான்.
//வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத் தான்
பதிலளிநீக்குராகம் பிடிக்கிறது.. //
இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் ஸ்ரீராம்?
கரங்களுக்கு ராகம் எப்படி பிடிக்கும்?
-- வார்த்தைகள் அமைப்பில் ஏதாவது பிழை நேரிட்டு விட்டதோ?
வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத் தான்
ராகம் படிகிறது..
-- என்று திருத்திப் பாருங்கள். பிரமாதமாகப் பொருந்தும்.
/ஹையோ என்ன இது தனியே நிக்கிறேனோ ... வைரவா இம்முறை ரெண்டு வைரம் பதிச்ச வேல் கொன்ஃபோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) என்னை இன்று மட்டும் காப்பாத்திடுங்கோ.. இப்போ ஆபத்துக்கு என் செக்:) கூட இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//
பதிலளிநீக்கும்க்கும் அவசரம் :) நான் காலைல பிசி லேட்டாதான் வருவேன் அதுக்குள்ள தனியா கம்பு சுற்றக்கூடாது :)
//அசோகன் ஹேண்ட்ஸம் என்று சொல்வது ஆச்சர்யம். அப்படியும் அபிப்ராயம் இருக்கிறதா?!! //
பதிலளிநீக்குஸ்ஸ்ஸ்ஸ் :) எங்க சித்தப்பா அளவுக்கு இல்லைனாலும் .. அசாஅகு (சேர்த்து எழுதிட்டேன் ) இவங்கள மாதிரி இல்லைனாலு ம் அவர் கோட் போட்டு ஒரு படத்தில் பியானோ வாசிச்சிட்டு பாடுவார் அதில் நல்லா இருந்ததால் அப்போ தோணினது
அதோட //உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!//னு சொல்றிங்க இல்ல அதனை எழுதினேன்
@ அதிரா:
பதிலளிநீக்கு//..நானும் வாங்கி வைத்திருக்கிறேன்ன். “கனவுக் குதிரைகள்”..
கனவுப் பூனைகள் என்றல்லவா அதற்குப் பெயர்? மிஸ்ப்ரிண்ட் ஆயிடுத்தோ?
க்ரிக்கெட்டை விடாது பார்த்துக்கொண்டுதான் எபி-யையும் குடைந்துகொண்டிருக்கிறேன்!
@ ஸ்ரீராம்:
பதிலளிநீக்கு//..ஒரே ஒரு பாட்டு பாடி இருக்கிறார். "இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்...
நல்ல கருத்தான பாட்டு. இதைப்பாடியது அசோகனா !
to day late aka varuven! :) konjam velai!
பதிலளிநீக்குhehehe innum varlai!
பதிலளிநீக்குlatooooooooooooooooo lateuuuuuuuuuuuuuuuu
பதிலளிநீக்குஅசோகன் குறித்த செய்திகள் ஏற்கனவே இந்துவில் வாசித்து இருக்கிறேன்! மேத்தாவின் கவிதை அழகு! சிலந்திக்கடியின் விஷம் அதிகம். அதன் சீழ் பட்ட இடங்களில் புண் பரவும். எங்கள் ஊர் பக்கம் செம்மண்ணில் முதுகில் சிலந்தி எழுதி அந்த சிரங்கு நோய் போக்குபவர்கள் இருந்தார்கள். வன்னிமரத்து இலையை அரைத்து மோரில் உப்பு இல்லாமல் சேர்த்து அருந்தியும் இலைச்சாறை புண் உள்ள இடங்களில் பூசியும் உப்பில்லா பத்தியம் இருந்தால் அந்த சிலந்திகடி சிரங்கு குணமாகும். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமகளிர் தினம் பற்றிய உங்கள் கருத்திற்கு சலாம்! தலைமுடி தகவல் பயமுறுத்துகிறது. அசோகன் பற்றிய செய்தியும் மேத்தா கவிதையும் - பகிர்விற்கு நன்றி. விகடன் மட்டும் இல்லை, அனைவரும் கவனிக்கிறார்கள்.. சுற்றிலும் கண்கள்!!
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஸ்ரீராம்!
திரு மூ.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' புத்தகம் தான்
பதிலளிநீக்குஎன்னைக் கவிஞன் ஆக்கியது! - அந்த
மூ.மேத்தாவால் கவிஞர்கள் பலர் உருவாகினர்!
நல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குசிலந்தி சம்பவம் பீதியைக் கிளப்புகிறது.