know yourself லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
know yourself லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.8.11

முப்பத்து ஒன்று முதல் நாற்பது வரை ...


                                
வாசகர்கள், எங்கள் ப்ளாக் வெளியிட்ட, முந்தைய பதிவுகள்,
              
ஆகிய இரண்டு பதிவுகளை படித்து, பாயிண்டுகளைக் கணக்கிட்டு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். 
                         
நீங்கள் பெற்ற பாயிண்டுகள், முப்பத்து ஒன்று முதல் நாற்பது வரையில் என்றால் - உங்கள் நண்பர்களால் நீங்கள் எப்படிப் பார்க்கப் படுகின்றீர்கள் என்பதை இங்கே பார்ப்போம். 
                    
நல்லறிவுடையவராகவும், முன் எச்சரிக்கை உடையவராகவும், கவனமாக செயல் படுபவராகவும் மேலும் நடைமுறைக்கு ஒத்து வருபவராகவும் உங்களை மற்றவர்கள் பார்க்கின்றார்கள். நீங்கள், சாமர்த்தியசாலியாகவும், எந்த செயலையும் சுலபமாக செய்யக்கூடிய செயல் திறனும், திறமையும் வாய்ந்தவராகவும், அதே நேரத்தில், தன்னடக்கம் மிக்கவராகவும் காணப் படுகின்றீர்கள். அவ்வளவு சுலபத்தில் அல்லது பழகத் தொடங்கிய உடனேயே யாருடனும் நட்பு கொள்ள மாட்டீர்கள். ஆனால் யாரையாவது நண்பராக ஏற்றுக் கொண்டுவிட்டால் அவரிடம் விசுவாசமான நட்பு உங்கள் ஆயுள் முழுவதும் உங்களிடம் நீடித்து இருக்கும். அதே போல உங்கள் நண்பரும் உங்களிடம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பற்றிக் கூறுவது: 'எந்த நண்பனையும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டான் (ள்). இவர் நண்பர்களிடம் வைத்துள்ள நம்பிக்கையை எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது. ஆனால், எந்த நண்பனாவது இவர்களின் நம்பிக்கைக்கு பங்கம் வரும் வகையில் நடந்துகொண்டு விட்டால், இவர் அந்த நண்பரை ஒதுக்கிவிடுவார்கள். அவர்கள் திரும்பவும் இவரின் நம்பிக்கையை பெறுவது என்பது, குதிரைக் கொம்புதான்!'   
                                    

21.7.11

இருபத்தொரு புள்ளிகளுக்குக் கீழே என்றால் ...


                             
வாசகர்கள், எங்கள் ப்ளாக் வெளியிட்ட, முந்தைய பதிவுகள் 
ஆகிய இரண்டு பதிவுகளை படித்து, பாயிண்டுகளைக் கணக்கிட்டு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். 

இப்போ படிப் படியாக - பெற்ற பாயிண்டுகளும், அவர்களை மற்றவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் பார்ப்போம். 

மறுபடியும் நாங்க சொல்வது என்னவென்றால் - இதில் உயர்வோ தாழ்வோ எதுவும் கிடையாது. இது, மற்றவர்கள் பார்வையில், நீங்கள் எப்படிப் பட்டவராகக் கானப்படுகிறீர்கள் என்ற ஒரு மதிப்பீடு. அவ்வளவுதான். 
                              
நீங்கள் இருபத்தொரு புள்ளிகளுக்குக் கீழே பெற்றவராக இருந்தால் .....

மற்றவர்கள் உங்களை, வெட்கமுறுகிற, தயக்க இயல்புடையவராகவும், கூச்ச சுபாவம் உள்ளவராகவும் பார்க்கின்றார்கள். எளிதில் எந்த முடிவுக்கும் வர இயலாதவர் என்று உங்களை நினைப்பார்கள். நீங்க தனித்து செயல்படுவது மிகவும் கடினம் என்றும் உங்கள் தேவையறிந்து உங்களுக்கு உதவுவதற்கு யாரேனும் வேண்டும் என்று எதிர்பார்க்கும் குணம் உள்ளவராகவும் தோற்றமளிக்கின்றீர்கள். நான் எதிலும் பட்டுக் கொள்ளமாட்டேன், என்னை யாரும் எதற்கும் தொந்தரவு செய்யாதீர்கள் என்பது நீங்கள் மற்றவர்களுக்கு உணர்த்தும் செய்தி. இல்லாத பிரச்னைகளை பெரிதாக்கி எப்பொழுதும் கவலைப் படுபவராக காணப்படுகின்றீர்கள். சிலர் உங்களை ஒரு அறுவை மன்னனாகக் காணக் கூடும். ஆனால், உங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டும் நீங்கள் அப்படிப்பட்டவர் இல்லை என்பது தெரியும்.