உன் நண்பர்களைக் காட்டு, நீ யார் என்று சொல்கிறேன் என்று ஓர் அறிஞர் கூறியதாகப் படித்திருக்கின்றோம்.
நீ படிக்கும் புத்தகங்கள் என்ன, அவற்றைக் கூறு, நான் உன்னைப் பற்றிக் கூறுகின்றேன் என்று கூட யாரோ கூறியிருக்கிறார்கள்.
நண்பர்கள் இல்லை, புத்தகங்கள் படிப்பதில்லை என்றெல்லாம் கூறி நீங்கள் எங்களிடமிருந்து தப்பிக்க முடியாது.
அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், எப்படி உணர்கிறோம் ஆகியவற்றை வைத்துக் கொண்டே, நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நம்மை எந்த வகை மனிதராகப் பார்க்கிறார்கள் என்பதை துல்லியமாகச் சொல்லிவிடலாம்.
இங்கே, பத்துக் கேள்விகள் கேட்டு, அவற்றிற்கு தேர்ந்தெடுக்க, சில பதில்களையும் கொடுத்துள்ளோம். இவற்றுக்கு, இந்த இரண்டாயிரத்துப் பதினொன்றாம் ஆண்டில், இதுவரை உங்கள் அனுபவப்படி, உண்மையான பதில்களைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் முன்காலத்தில் எப்படி இருந்தீர்கள் - அல்லது எதிர்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பதை எல்லாம் உங்கள் பதிலில் கூற முற்படவேண்டாம். இப்பொழுது என்னவாக இருக்கின்றீர்கள் என்பதை மட்டும் வைத்து பதில்களைத் தேர்ந்தெடுங்கள். இது பல தனியார் துறை கம்பெனிகளுக்கு ஆட்களை வேலைக்கு எடுக்கும்பொழுது வேலைக்கு சேருகின்ற ஆள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ள சமீபகாலமாக மிகவும் பயன்படுத்தப்படும் படிவம் / கேள்விகள்.
முக்கியமான விஷயம்: இதில் சரியான விடை / தவறான விடை என்று எதுவும் கிடையாது. எவ்வளவுக்கெவ்வளவு உண்மையான பதில்களை தேர்ந்தெடுக்கின்றீர்களோ, அவ்வளவுக்களவு உங்களைப் பற்றி நீங்கள் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.
நேரம்: எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்! ஆனால், எங்கள் கணக்குப் படி, பத்துக் கேள்விகளுக்கும் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் போதும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
பரீட்சை ஹாலுக்குள் நுழையுமுன்.....,
ஒரு சிறிய வெள்ளைத் தாளை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் மேலிருந்து கீழாக, ஒன்று முதல் பத்து வரையிலும் எண்களை எழுதிக் கொள்ளுங்கள்.
இதோ கேள்விகளும் - பலதரப்பட்ட பதில்களும். உங்களின் தெரிவுகள் என்ன என்று, ஒவ்வொரு கேள்வி எண்ணுக்கும் எதிராக எழுதிக் கொள்ளுங்கள்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
1) நான், பெரும்பாலும், இந்த நேரத்தில், என்னுடைய எல்லா வேலைகளையும், சிறப்பாக, வேகமாக செய்து முடித்து விடுவேன்.
a) காலை நேரத்தில்.
b) மதிய நேரத்தில் / மாலை நேரத்தில்.
c) இரவு நேரத்தில் - ஊரோசை அடங்கியதும்.
-----------------------------
2) நான், நடந்து செல்லும்பொழுது ...
a) வேகமாக, கால்களை எட்டி வைத்து நடப்பேன்.
b) வேகமாக - ஆனால் கால்களை அருகருகே சுலப அடிகள் வைத்து, நடப்பேன்.
c) மெதுவாக, முகத்தை அண்ணார்ந்து பார்த்து, உலகை இரசித்தவாறு நடப்பேன்.
d) மெதுவாக, தலை குனிந்து நடப்பேன்.
e) நத்தை /ஆமை வேகத்தில் நடப்பேன்.
--------------------------------------
3) நான் மற்றவர்களுடன் பேசும் பொழுது ...
a) கைகளைக் கட்டிக் கொண்டு பேசுவேன்.
b) என்னுடைய கைகள் / விரல்கள் ஒன்றையொன்று இறுகப் பற்றியபடி இருக்கும்.
c) இரண்டு கைகளுமோ அல்லது ஏதேனும் ஒன்றோ - (என்) இடுப்பின் மீது அல்லது பைகளுக்குள் ...
d) யாரிடம் பேசிக்கொண்டு இருக்கின்றேனோ அவரைத் தொட்டு அல்லது கைகளால் தள்ளியவாறு ..
e) என் கைகள் என்னுடைய காதையோ அல்லது முகத்தின் மீது அல்லது தலை முடியைத் துழாவியபடி இருக்கும்.
-----------------------------------------------
4) ஓய்வாக உட்கார்ந்திருக்கும் பொழுது கால்களை ...
a)ஒழுங்காக ஒன்றாக பக்கத்திற்கு ஒன்றாக மடித்து வைத்து ஓய்வெடுப்பேன்.
b) கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டுக் கொண்டு - அல்லது கால்களை X வடிவில் வைத்துக் கொண்டு ...
c) கால்களை நேராக எவ்வளவு தூரம் நீட்ட முடியுமோ அவ்வளவு தூரம் நீட்டி வைத்துக்கொண்டு..
d) ஒரு கால் மடக்கி - என்னுடைய இருக்கைக்குக் கீழ்...
--------------------------------------------
5) ஒரு ஜோக் படிக்கும் பொழுது அல்லது சினிமா / தொலைக்காட்சியில் மனதுக்குப் பிடித்த காமெடி வரும்பொழுது ..
a) பெரிதாக வாய்விட்டுச் சிரிப்பேன்.
b) சிரிப்பேன், ஆனால் சத்தமில்லாமல்
c) கேலிப் புன்னகை மட்டும்
d) நாணிய வெட்கச் சிரிப்பு
---------------------------------------------------
6) ஒரு விருந்துக்கு / கொண்டாட்ட விழாவிற்குச் சென்றால் ...
a) மண்டபத்தில் நுழையும் பொழுதே எல்லோர் பார்வையும் கவனமும் என் மீது படும்படி சத்தமாக - பகட்டாக - பந்தாவாக நுழைவேன்
b) சத்தமில்லாமல் நுழைந்து, தெரிந்தவர்கள் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பேன்.
c) சத்தமில்லாமல் நுழைந்து அமைதியாக இருந்து, நான் வந்தது போனது யார்க்கும் தெரியாமல் திரும்பி விடுவேன்.
-------------------------------------------------
7) மும்முரமாக, முனைப்பாக ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். அப்போ யாரோ ஒருவர் வேலையைத் தொடர தடங்கலாக அமைகிறார்.
a) சரி நல்லது - வேலையை சிறிது நேர ஓய்வுக்குப் பின் (தடங்கல் அகன்ற பின்) தொடரலாம் என்று செயல் படுவேன்.
b) கன்னா பின்னாவென்று கோபப் படுவேன்.
c) சில சந்தர்ப்பங்களில் கோபம - சில சந்தர்ப்பங்களில் சந்தோஷ ஓய்வு - இப்படித்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது.
-------------------------------------------------------------
8) உங்களுக்கு மிகவும் பிடித்த நிறம் எது?
a) சிவப்பு அல்லது ஆரஞ்சு
b) கருப்பு
c) மஞ்சள் அல்லது இளம் நீலம்
d) பச்சை
e) அடர் நீலம் அல்லது ஊதா
f) வெள்ளை
g) பழுப்பு அல்லது சாம்பல்
---------------------------------------------------------------
9) இரவில், உறங்குவதற்காகப் படுக்கிறீர்கள். உறக்கம் உங்களை ஆட்கொள்ளும் முன்பாக,
a) மல்லாந்து நேராகப் படுத்திருப்பீர்கள்.
b) குப்புறப் படுத்து, வயிற்றின் மீது எல்லா பளுவும் இருக்கும்படி படுத்திருப்பீர்கள்
c) பக்கவாட்டில் படுத்து, சற்றே உடலை வளைத்து ..
d) தலைக்குக் கீழே ஒரு கை மடிந்திருக்கும்படி ...
e) தலையை நன்றாகப் போர்த்தியபடி ...
------------------------------------------------------------
10) அடிக்கடி உங்களுக்கு வருகின்ற கனவு:
a) திடீர் திடீர் என்று மரத்திலிருந்தோ அல்லது உயரத்திலிருந்தோ கீழே விழுகின்ற கனவு.
b) சண்டை இடுதல் / மூச்சுத் திணறுதல்
c) யாரையோ அல்லது ஏதாவதொன்றை தேடுதல்
d) இலகுவாகப் பறப்பது அல்லது காற்றில் மிதத்தல்
e) கனவுகள் எதுவும் காண்பதில்லை - எப்பவாவது வரும் - ஞாபகம் இல்லை.
f) நிறையக் கனவுகள் வரும். எல்லாமே பெரும்பாலும் இனிய இன்பமயமான கனவுகள்தான்.
a
|
b
|
c
|
d
|
e
|
f
|
g
|
|
1
|
|||||||
2
|
|||||||
3
|
|||||||
4
|
|||||||
5
|
|||||||
6
|
|||||||
7
|
|||||||
8
|
|||||||
9
|
|||||||
10
|
(நீங்கள் தேர்ந்தெடுத்த பதில்களை, சரியான வரிசையில் - கருத்துப் பிரிவில் பதிவு செய்யுங்கள். உதாரணம் : a c e d b a c f e f )
(விடைத் தாளுக்கு எப்படி மார்க் போட்டுக் கொள்வது என்று அடுத்த பதிவில் சொல்கிறோம்.)
1 b
பதிலளிநீக்கு2 c
3 a
4 b
5 a
6 b
7 c
எட்டு முதல் பத்து வரை..
கொடுத்திருக்கும் ஆப்ஷன்கள் போதுமானதாக இல்லை.
எனக்கு பிடித்த நிறம் 'பிங்க்' / கத்திரிபூ நிறம்.
9 & 10 --அது ஒவ்வொருநாளைக்கு ஒவ்வொரு விதமா இருக்கும்.
இப்ப சொல்லுங்க, நான் எப்படிப் பட்ட ஆளு.. ?
பதிலளிநீக்குகேள்வி கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் சொல்லாத...
பதிலளிநீக்குசில கேள்விக்கு எதிர் கேள்வி கேட்கும் ஆளுதான நானு ?
நம்மை கண்ணாடிமுன் நிறுத்தும் பகிர்வு.
பதிலளிநீக்கு1. c
பதிலளிநீக்கு2. c
3. a
4. d
5. b
6. b
7. c
8. e
9. d
10. e
அடுத்த பதிவு என்னிக்கு வரும்?
1. a
பதிலளிநீக்கு2. a
3. C
4. C
5. a
6. a
7. c
8. a
9. a
10 - e
அது சரி, புதுசா வேலைக்கு எடுப்பவர்களுக்கு இது ஒகே ? என்னை மாதிரி வேலை பறி போகும் நிலையில் உள்ளவர்களுக்கு !! நாளை காலை வேறு புதிய சி.இ.ஒ வுடன் தொலைபேசி கால் இருக்கு !
எதுக்கும் ரிஸ்க் எடுக்காமல் நாளை காலை பூஜை ரூம் போய் கடவுளை வேண்டிக்கொள்ளலாம் என்று பார்த்தால் - ஒரு காலத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்த விருத்தி சீதகம் போய் இப்போது வாரம், மாசம் என்று வரும் சாவால் சீதகம் !! என்னவோ போங்க, "சாயிராம் உன் வேலை ப்பானால்" என்று சொல்லாமல் இருந்தால் போதும் !
எதுக்கும் என் பதில் ரொம்பவே ஒப்பேராமல் இருந்தால் இருபத்தைந்து வருடம் உழைத்து ஒப்பெற்றிவிட்டேன் - இன்னும் பத்து வருடம் தான் வேலை செய்ய எண்ணம் - கடமை முடிந்தது என்று கைலாயம் போய்விடுவேன் ! எதாச்சும் பார்த்து செய்யுங்க !!
ஆர்வமா செலக்ட் பன்னிகிட்டே வந்தா கடைசியில அடுத்த பதிவுன்னு சொல்லிடிங்கலே சார்
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன், அடுத்த பதிவுக்கு
1) a
பதிலளிநீக்கு2) a
3) a
4) c
5) b
6) b
7) a
8) a
9) a
10) வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு மாதிரி, எந்த ஆப்ஷனிலும் பொருத்த முடியவில்லை.
எங்கள் மனோதத்துவ நிபுணர் கூறுவது: எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பது நல்லது. இல்லையேல் டோட்டல் ஸ்கோர் மிஸ்லீட் ஆகும். மாதவன், ஹெச் வி எல் - இருக்கின்ற பதில்களில் ஏதேனும் சற்றாவது சரி என்று தோன்றுவதை டிக் செய்தல் நல்லது. எல்லா கேள்விகளுக்கும் விடை டிக் செய்த மீனாக்ஷி அவர்களுக்கு 41 points, சாய் அவர்களுக்கு 50 points. பாயிண்டுகள் கணக்கிடுவது எப்படி என்பது அடுத்த பதிவில். அதுவரை டிக் செய்தவர்கள் அவர்கள் தெரிவு செய்தவைகளை இங்கே பதியவும். நன்றி. ஒருவர் பெறக் கூடிய அதிக பட்ச points 64. குறைந்த பட்ச points 15. பாயிண்டுகள் அதிகம் அல்லது குறைவாகப் பெறுவது எந்த ஏற்ற தாழ்வையும் குறிக்காது.
பதிலளிநீக்குசரி! கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்துக் கொண்ட பின் என்னோட பதில்கள்
பதிலளிநீக்கு1) a
2) a
3) a
4) c
5) b
6) b
7) a
8) a
9) a
10)e
HVL 47 points.
பதிலளிநீக்குமார்க் கம்மி தான் இருந்தாலும்,
பதிலளிநீக்கு//
பாயிண்டுகள் அதிகம் அல்லது குறைவாகப் பெறுவது எந்த ஏற்ற தாழ்வையும் குறிக்காது.
//- இதை வைத்து சமாதானப் படுத்திக் கொள்கிறேன்.
எங்கள் ஆசிரியர் குழுவில் 40 பாயிண்டுகளுக்குக் கீழே மூன்று பேர். இன்னும் இருவர் போட்டியில் இதுவரை கலந்துகொள்ளவில்லை. ஒரு திருமதி ஆசிரியர் இருபது பாயிண்டுகள். எனவே, யாரும் கவலைப் படாதீர்கள். எவ்வளவு பாயிண்டுகள் பெற்றவர்கள், மற்றவர்கள் கண்களில் (அல்லது மனதில்) எப்படித் தெரிகிறார்கள் என்பது(ம்)தான் இறுதியில் வேறொரு பதிவில் வெளியாகும்.
பதிலளிநீக்கு1) a
பதிலளிநீக்கு2) b
3) a
4) b
5) b
6) b
7) a
8) c
9) a
10 e
தமிழ் உதயம் 48 points.
பதிலளிநீக்கு8 d
பதிலளிநீக்கு9 a
10 e
my total points please..
என்னோட பேப்பர இன்னும் திருத்த வில்லையா ?
பதிலளிநீக்கு--------------------
கேள்விமேல கேள்வி கேட்டு
அஞ்சு ஆறு ஆப்ஷன் தந்த சீமானே..
ஹலோ.. கமான் சீமானே..
எங்கள் பிலாகே.. மார்க்கு வேணும்..
எங்கள் பிலாகே.. மார்க்கு வேணும்..
நன்றி : காதலிக்க நேரமில்லை - திரைப்படப் பாடல்
madhavan 52 points.
பதிலளிநீக்கு//Engal said...
பதிலளிநீக்குmadhavan 52 points. //
Me the first (so far) !
ஒருவேளை. மார்க்கு கம்மியா வாங்கினாத்தான் நல்லதோ ?
//Madhavan Srinivasagopalan said...
பதிலளிநீக்கு//Engal said... madhavan 52 points. //
Me the first (so far) !//
Ada paavi
ALL the options are not there.
பதிலளிநீக்குlike the talking posture or sitting posture;)
here goes
1 a
2 c
3 b
4 c
5 b
6 b
7 c
8 d
9 c
10 b
c
பதிலளிநீக்குa
b
c
b
b
c
e
b
e
பாக்கலாம் !
மூணுக்கும் பத்துக்கும் வேறே எதுவும் சாய்ஸ் இல்லையா?
பதிலளிநீக்குநான் எப்படியான ஆசாமி என்று தெரிந்து கொள்ள வெளி உதவி வேண்டி இருக்கிறது என்றால் என்ன பொருள்? என்னை என்னைக் காட்டிலும் இன்னொருவர் சரியாக அறிய முடியுமா? அல்லது நான் என்னை அறிந்திருந்தும் ஒப்புக் கொள்ள மறுக்கிறேனா? அப்படி மறுக்கும் நான் புதிர்ப் பக்கங்களால் விளக்கம் பெற இயலுமா?
பதிலளிநீக்குஅனானி, என்ன ஒரு ஒற்றுமை! பதிவை படித்தபோது நானும் இதையேதான் நினைத்தேன். நான் எப்படிப்பட்டவள் என்று என்னை விட யாருக்கு தெரியும்! அடுத்தவர் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஒரு ஆர்வத்தில்தான் இந்த புதிரில் கலந்து கொண்டேன். புதிரில் வரும் விடை மூலம் என்னை பற்றிய கணிப்பு ஓரளவு சரியாக இருந்தால் ஒரு 'சபாஷ்', தவறாக இருந்தால் கண்டு கொள்ள போவதில்லை. புதிர் சுவாரசியமாக இருக்கிறது, கலந்து கொள்வது சந்தோஷமாக இருக்கிறது.
பதிலளிநீக்கு'தான் எப்படிப்பட்டவர் என்பது தனக்குத் தான் தெரியும்' என்பது முற்றிலும் சரியல்ல. (ஓகே.. ஆட்டோ அனுப்பாமல் இருந்தால் சொல்கிறேன் - கண்மூடி முட்டாள்தனம் :)
பதிலளிநீக்குதான் இப்படிப்பட்டவர் என்று தன்னால் மட்டுமே சொல்லமுடியும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் மண்ணுக்குள் தலைபுதைக்கும் வான்கோழி போன்றவர்கள். தங்கள் சொல்லும் நடத்தையும் எத்தகைய பாதிப்புகளை தனக்கும் பிறருக்கும் ஏற்படுத்துகின்றன என்பதை அறியாதவர்கள். பேதைகள்.
வெளித்தோற்றத்துக்குக் கண்ணாடி தேவைப்படுவது போல் (கண்ணாடி இல்லாமல் தன் வெளித்தோற்றம் எப்படிப்பட்டது என்ற எவராலும் சொல்லமுடியுமா?) உள்தோற்றத்தை அறியவும் ஒரு கண்ணாடி தேவைப்படுகிறது. இது போன்ற சுய ஆய்வுகளும், நல்ல நட்பும், உளவியலும் இதற்குக் கண்ணாடிகள்.
கடவுளை நம்பிக் கண்மூடும் நாம் கண்ணாடிகளை நம்பிக் கண் திறப்போமா? மாட்டோம்.
ஆட்டோ அனுப்பதாக இருந்தால் இதோ முகவரி:
சிவப்பு கார்
இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம்
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை.
Valli Simhan 35 Points
பதிலளிநீக்குHema : 41 points.
Hema 43 points.
பதிலளிநீக்கு1) C
பதிலளிநீக்கு2) C
3)---- பேசவே மாட்டேன்.
4) D
5) B
6) C
7) A
8) B
9) A
10) E
லக்ஷ்மி, எங்கள் அடுத்த பதிவாகிய 'என்ன பதில், எவ்வளவு பாயிண்டுகள்' என்னும் பதிவைப் பார்த்து, உங்களுக்கு நீங்களே பாயிண்டு போட்டுக் கொண்டு, மொத்தப் பாயிண்டுகள் எவ்வளவு என்று அங்கே பதியுங்கள். நன்றி!
பதிலளிநீக்குhttp://engalblog.blogspot.com/2011/07/blog-post_14.html