செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

முப்பத்து ஒன்று முதல் நாற்பது வரை ...


                                
வாசகர்கள், எங்கள் ப்ளாக் வெளியிட்ட, முந்தைய பதிவுகள்,
              
ஆகிய இரண்டு பதிவுகளை படித்து, பாயிண்டுகளைக் கணக்கிட்டு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். 
                         
நீங்கள் பெற்ற பாயிண்டுகள், முப்பத்து ஒன்று முதல் நாற்பது வரையில் என்றால் - உங்கள் நண்பர்களால் நீங்கள் எப்படிப் பார்க்கப் படுகின்றீர்கள் என்பதை இங்கே பார்ப்போம். 
                    
நல்லறிவுடையவராகவும், முன் எச்சரிக்கை உடையவராகவும், கவனமாக செயல் படுபவராகவும் மேலும் நடைமுறைக்கு ஒத்து வருபவராகவும் உங்களை மற்றவர்கள் பார்க்கின்றார்கள். நீங்கள், சாமர்த்தியசாலியாகவும், எந்த செயலையும் சுலபமாக செய்யக்கூடிய செயல் திறனும், திறமையும் வாய்ந்தவராகவும், அதே நேரத்தில், தன்னடக்கம் மிக்கவராகவும் காணப் படுகின்றீர்கள். அவ்வளவு சுலபத்தில் அல்லது பழகத் தொடங்கிய உடனேயே யாருடனும் நட்பு கொள்ள மாட்டீர்கள். ஆனால் யாரையாவது நண்பராக ஏற்றுக் கொண்டுவிட்டால் அவரிடம் விசுவாசமான நட்பு உங்கள் ஆயுள் முழுவதும் உங்களிடம் நீடித்து இருக்கும். அதே போல உங்கள் நண்பரும் உங்களிடம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பற்றிக் கூறுவது: 'எந்த நண்பனையும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டான் (ள்). இவர் நண்பர்களிடம் வைத்துள்ள நம்பிக்கையை எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது. ஆனால், எந்த நண்பனாவது இவர்களின் நம்பிக்கைக்கு பங்கம் வரும் வகையில் நடந்துகொண்டு விட்டால், இவர் அந்த நண்பரை ஒதுக்கிவிடுவார்கள். அவர்கள் திரும்பவும் இவரின் நம்பிக்கையை பெறுவது என்பது, குதிரைக் கொம்புதான்!'   
                                    

8 கருத்துகள்:

  1. :)))
    I trust your values. And you shd trust mine.

    APPLAUSE to the Blog.
    and engalblog.Thank you for the appraisal. It is true to the last letter.

    பதிலளிநீக்கு
  2. சித்ரா, நீ எக்ஸாம் எழுதாம விட்டு விட்டு, இப்போ மார்க் ஷீட்க்கு வந்து நிற்கிற மாதிரி இருக்குது. இதான், பாதியில வந்து ஆஜர் போடக்கூடாது ..... ஹி,ஹி,ஹி,ஹி....

    பதிலளிநீக்கு
  3. எக்ஸாம் என்றால் பயம்... கொஸ்டின் என்றால் பயம்... மார்க் சீட் என்றால் இன்னும் பயம்....:))))

    பதிலளிநீக்கு
  4. //
    எந்த நண்பனாவது இவர்களின் நம்பிக்கைக்கு பங்கம் வரும் வகையில் நடந்துகொண்டு விட்டால், இவர் அந்த நண்பரை ஒதுக்கிவிடுவார்கள். //

    இது கண்டிப்பாய் எனக்கு பொருந்தாது! நெக்ஸ்ட் . . .

    என்னுடையது அடுத்த செட்.

    பதிலளிநீக்கு
  5. ம்...உண்மையான உறவு,நட்புன்னா என்னைப்போலவே வெளிப்படையா இருக்கணும்ன்னு நினைப்பேன்.
    ஏதாவது மனசுக்குப் பிடிக்கலனா ஒதுக்கமாட்டேன்.தள்ளி இருந்துவிடுவேன் !

    பதிலளிநீக்கு
  6. மனசுக்குப் பிடிக்கலனா ஒதுக்கமாட்டேன்.தள்ளி இருந்துவிடுவேன் -

    அந்தப் பக்கமே திரும்பமாட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. ஐயா

    அடுத்தது என்னுடையது ! பொறுமையே போய் விட்டது போங்கள்

    - சாய்

    யார் இந்த ஸ்லாபில் இருந்தார்கள் என்று போட்டால் - பழைய இடுகையை தேடி பார்க்க வேண்டியிருக்காது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!