வாசகர்கள், எங்கள் ப்ளாக் வெளியிட்ட, முந்தைய பதிவுகள்
ஆகிய இரண்டு பதிவுகளை படித்து, பாயிண்டுகளைக் கணக்கிட்டு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்.
இப்போ படிப் படியாக - பெற்ற பாயிண்டுகளும், அவர்களை மற்றவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.
மறுபடியும் நாங்க சொல்வது என்னவென்றால் - இதில் உயர்வோ தாழ்வோ எதுவும் கிடையாது. இது, மற்றவர்கள் பார்வையில், நீங்கள் எப்படிப் பட்டவராகக் கானப்படுகிறீர்கள் என்ற ஒரு மதிப்பீடு. அவ்வளவுதான்.
நீங்கள் இருபத்தொரு புள்ளிகளுக்குக் கீழே பெற்றவராக இருந்தால் .....
மற்றவர்கள் உங்களை, வெட்கமுறுகிற, தயக்க இயல்புடையவராகவும், கூச்ச சுபாவம் உள்ளவராகவும் பார்க்கின்றார்கள். எளிதில் எந்த முடிவுக்கும் வர இயலாதவர் என்று உங்களை நினைப்பார்கள். நீங்க தனித்து செயல்படுவது மிகவும் கடினம் என்றும் உங்கள் தேவையறிந்து உங்களுக்கு உதவுவதற்கு யாரேனும் வேண்டும் என்று எதிர்பார்க்கும் குணம் உள்ளவராகவும் தோற்றமளிக்கின்றீர்கள். நான் எதிலும் பட்டுக் கொள்ளமாட்டேன், என்னை யாரும் எதற்கும் தொந்தரவு செய்யாதீர்கள் என்பது நீங்கள் மற்றவர்களுக்கு உணர்த்தும் செய்தி. இல்லாத பிரச்னைகளை பெரிதாக்கி எப்பொழுதும் கவலைப் படுபவராக காணப்படுகின்றீர்கள். சிலர் உங்களை ஒரு அறுவை மன்னனாகக் காணக் கூடும். ஆனால், உங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டும் நீங்கள் அப்படிப்பட்டவர் இல்லை என்பது தெரியும்.
ம்ம்ம்.. .
பதிலளிநீக்குஇது எனக்கில்லை!
சீக்கிரம் அடுத்ததை போடுங்க!
பல மனித இயல்புகளில் இது ஒன்று.
பதிலளிநீக்குஇது நானில்லை..
பதிலளிநீக்குபொதுவா ஒரு சாத்திரம் சொல்லிட்டீங்க !
பதிலளிநீக்குஎன்னமோ நடக்குது ...மர்மமா இருக்குது .... இந்த மாதிரி சர்வேக்களில் கலந்து கொள்ளும் பொறுமை இல்லாதவர்கள் எதில் சேர்த்தி ?
பதிலளிநீக்குபத்மநாபன் - பொறுத்தார் பூமி ஆள்வார் - பொறுக்காதவர் அவர்களையும் சேர்த்து ஆள்வர் !!
பதிலளிநீக்கு//பொறுக்காதவர் அவர்களையும் சேர்த்து ஆள்வர் !//இதற்கு புலவர் அப்பாதுரை இடக்கரடக்கல் எனும் இலக்கண குறிப்பு தருவார் ... நான் இதை வஞ்சனை இல்லா புகழ்ச்சி அணி யாக எடுத்துக் கொள்கிறேன் ...நன்றி ( இடக்கரடக்கல் .....ஸ்பெல்லிங் சரியோ என சம்சுயம் )
பதிலளிநீக்குவணக்கம் எனக்கு 51 புள்ளிகள் வந்துள்ளது, நான் எப்படி?
பதிலளிநீக்குRAMVI
பதிலளிநீக்குபொறுமை கடலினும் பெரிது!