பல வருடங்களுக்கு முன்னே - தாம்பரம் பீச் மின்வண்டியில், ஒருவர் - பல சிறிய கண்ணாடி குழாய் பாட்டில்களைக் கையில் வைத்துக்கொண்டு, அதேபோல நிறைய குழாய்களை கையில் உள்ள பையில் வைத்துக்கொண்டு, இவ்வாறு கூவியவண்ணம் வருவார்:
" நோட்டு தைக்கலாம், துணி தைக்கலாம், கிழிந்த துணிகள் தைக்கலாம், ஜாக்கெட் தைக்கலாம், பாவாடை தைக்கலாம், டிராயர் தைக்கலாம், சட்டை தைக்கலாம், கோணி தைக்கலாம், பேப்பர் தைக்கலாம், ஹெமிங் பண்ணலாம், பூ வேலை செய்யலாம், பூ கோர்க்கலாம், மாலை செய்யலாம், இருபத்தொரு விதமான ஊசிகள், ஐந்தே ரூபாய்."
எதையும் முதன் முறையாகப் பார்க்கும்பொழுது அல்லது கேட்கும்பொழுது - அது சல்லிசான விலையில் இருந்தால், வாங்கிவிடுவது என்னுடைய வழக்கம். அந்தக் கண்ணாடிக் குழாயை வாங்கிச் சென்று, வீட்டில் உள்ள பழைய 'சைபால்' டப்பாவில் போட்டு வைத்தேன். அதில் இருந்த ஊசிகளில் இரண்டை மட்டும் - இரண்டு சந்தர்ப்பங்களில் உபயோகித்திருப்பேன் என்று ஞாபகம்.
இப்போ ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இன்னும் சில வருடங்களில் - இதே மின்சார வண்டியில், அலைபேசிகள் - இவ்வாறு விற்கப்படலாம் - என்று தோன்றியதால்தான். அப்போ விற்பவர் என்ன கூறி விற்பார்?
" அவசரமா பேசலாம், ஆதரவா கேட்கலாம், இயல்பாகச் சிரிக்கலாம், ஈயையும், ஈ என்று சிரிப்பவரையும் படமெடுக்கலாம், உண்மை பேசலாம், ஊருக்குப் பேசலாம், எப் எம் கேட்கலாம், ஏதும் பார்க்கலாம், ஐங்கரனையும் (பின்னணிப் படமாக) சேமிக்கலாம், ஒரு நாள் முழுவதும் ஓயாம செய்தி அனுப்பலாம் / படிக்கலாம், ஔவையார் படம் கூடப் பார்க்கலாம்.... ஃபைவ் ஹண்ட்ரட் தான் ஒண்ணு!!"
"நெட் பார்க்கலாம், பங்கு வாங்கலாம், பார்த்து விற்கலாம், (எம் பி த்ரீ) பாட்டுக் கேட்கலாம், (எஸ் ஜே சூர்யா) போட்டுத் தாக்கலாம், ட்விட்டர் ட்விட்டலாம்.... வாங்குங்க சார் - அலைபேசி - ஐநூறு ரூபாய்க்கு ஒன்று!"
" ஏம்பா - ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு தருவியா?"
"நெட் பார்க்கலாம், பங்கு வாங்கலாம், பார்த்து விற்கலாம், (எம் பி த்ரீ) பாட்டுக் கேட்கலாம், (எஸ் ஜே சூர்யா) போட்டுத் தாக்கலாம், ட்விட்டர் ட்விட்டலாம்.... வாங்குங்க சார் - அலைபேசி - ஐநூறு ரூபாய்க்கு ஒன்று!"
" ஏம்பா - ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு தருவியா?"