9.6.10

மூளைப் புயல் வாசகர்களின் முத்துக்கள்

I ) நாஞ்சில் பிரதாப் (பிரதாப் குமார்) http://vimarsagan1.blogspot.com எழுதியவை:
இந்த ஊக்கின் மாற்று பயன்கள்
அதாவது இந்த ஊக்கினை நேராக நிமிர்த்தினால் பல வகைகளில் உபயோகமாக இருக்கும்.
1. இந்த ஊக்கினை நேராக நிமர்த்தி, சாவி தொலைந்து போன சூட்கேசை திறக்கலாம்.
2. அலுவலகத்தில் சாப்பிட்டு வந்தபிறகு... இந்த ஊக்கினை நேராக நிமிர்த்தி பல் குத்தலாம்.
3. டேமேஜர் இருக்கும் நாற்காலியில் சொருகி வைக்கி விசுவாசத்தை காண்பிக்கலாம்.
4. கீபோர்டில் மாட்டிக்கொண்டிருக்கும் குண்டுசி, மற்றும் ஸ்டேப்லர் பின்களை இதை வைத்து எடுக்கலாம்
5. நேரம்போகவில்லையென்றால் சுவற்றிலோ, மேசையிலோ இதைவைத்து குத்தி குத்தி காலத்தால் அழியாத பல ஓவியங்களையும் உங்கள் பெயரையும் செதுக்கலாம்.
போதுமா???

II) சித்ரா எழுதியது: 
/////உங்களுக்கான கேள்வி, இதன் பெயரோ அல்லது இதன் வடிவமைக்கப்பட்ட பயனோ அல்ல. இந்த பிடிப்பு ஊக்கினை, வேறு என்னென்ன வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேற்று உபயோகங்களை மட்டும் எழுதவேண்டும். ////

...... ஒரு பிடிப்பு ஊக்கினை வைத்து,  இந்த மாதிரி, வாசகர்களை யோசிக்க வைக்கும் ஊக்க  பதிவு போடலாம்.  ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

III) கக்கு மாணிக்கம் எழுதியவை:


சரி, இனி பட்டியலிடலாமா?(இதுக்கு பட்டியலா வேணும்?)

1. டெலிபோன் கார்டு நம்பர் சொரண்டலாம்
2. சொன்ன மேரிக்கி காகிதங்கள் ஒன்னா சேத்து சொருவி வைக்கலாம்
3.நெறைய இருந்தா ஒன்னு உள்ள ஒன்ன கோத்து மாலையா பன்னி கழுத்தள போட்டு 
புதுசா ஒரு பாஷன் உண்டாகலாம்.(ஆபீஸ்ல இருந்து கொண்டாந்தது தானே )
4.காந்த துண்டோட வெச்சி அது மேல இதுகள போட்டு திரும்ப எடுத்து வெளாடலாம்.
5.ஒரு மொனைய விரிச்சு கம்பியா ஆக்கி stuck ஆனா computer  dvd/cd player சரி பண்ணலாம்.
6.கால்குலட்டர  re set பண்ணலாம்.
7.ஐயோ ..முக்கியமானது மறந்து போச்சே...ஆஹா ...காலையில சாப்ட இட்லி மொளகா பொடி 
கடலை பருப்பு /உளுத்தம்பருப்பு நம்ம வாயி ஓட்ட பல்லு குள்ள குந்திகிசின்னா அந்த சனியன 
நோண்டி வெளியில எடுக்க இதை விட வேற ஒரு ஆயுதமும் இன்னா தேதி வரைக்கும் இல்ல! 
8.நெறையா இருந்தா (ஆபீஸ்ல இருந்து "தள்ளிகினு" வந்ததுதான் ) சேத்து வெச்சி பழைய இரும்பு 
வாங்கறவன் கிட்ட போட்டு போரீச்சம்பழம் வாங்கி துன்னலாம்.
9.புதுசா ஒரு சோப்பு எடுத்து டேபிள்  மேல வச்சி அதுமேல இதுகள விரிச்சி குத்தி குத்தி வெச்சா வாசன அடிக்கும். 
modern flower vase ready.
10. வீட்ல மரச்சேர்ல ரகசியமா குத்தி வெச்சி, பிடிக்காதவங்க வந்தா உட்கார சொல்லி பழி வாங்கலாம்

அப்பா ......பத்து ஆயி பூடிச்சி போதும்.
அவ்வ்ளவுதா அடிக்க வராதீங்க, ஆளவுடுங்க .

கக்கு. மாணிக்கம்.

IV) பிரியமுடன் வசந்த் எழுதியது: 
எங்கள் பிளாக் நண்பர்களுக்கு அரும் பொருள் பிடிப்பு ஊக்கை ஒரு வால் ஹேங்கராக யூஸ் பண்ணலாம் பார்க்க படம்.....

ஏதோ நம்மளால முடிஞ்சது.....

--
priyamudan வசந்த்

V) சாய்ராம் கோபாலன் எழுதியது: 
அட கடவுளே.  நான் என்னவொரு எங்கள் ப்ளாக் படைப்பாற்றல் கேள்விக்கும் என் இல்லாத மூளையை கசக்குவதில்லை என்று இருந்தேனே !

அ)  ஒரு பக்கம் பிரித்த பிறகு நான் போஸ்டல் லெட்டரை ஓபன் செய்ய யூஸ் செய்திருக்கின்றேன்!
ஆ) காது நோண்டலாம் !! ஆனால, காது கேட்காமல் போனால் என் மிது கேஸ் போடாதீர்கள் !
இ) டை பறக்காமல் இருக்க டைபின் இல்லாதவர்கள் இது வெளியில் தெரியாமலேயே ஷிர்டுடன் இதை பயன் படுத்தலாம். (என்னுடைய மெடிக்கல் ரெப் காலங்களில் (1986-88) இரண்டே ஷர்ட், இரண்டே டை மற்றும் ஒரே ஷுவுடன் திருவல்லிக்கேணி மேன்ஷனில் பாத்ரூம் அளவே ரூமில் தங்கி இருந்தபோது இப்படி உபயோகித்து இருக்கின்றேன் !!)
ஈ) ஆடவர் பேண்டில் பணத்துக்கான தனி ரகசிய பாக்கெட்டில் துட்டை ஒன்று சேர சேர்த்து வைத்துக்கொள்ளலாம்.
உ) இளம் பெண்கள் பஸ்ஸில் வம்பு செய்யும் ஆணை அவருக்கே தெரியாமல் சரக்கென்று கிழிக்கலாம்  !!  (சாயி, இனிமே பஸ்ஸில் போகாதே !!)

அவ்வளவு தாங்க யோசிக்க முடிஞ்சுது.  காபி வாங்கி குடித்துவிட்டு வந்து எதாவது தோணுதான்னு பார்ப்போம் !

(Sai)
+ 1 732 771 5621
Blog: http://tamizhkirukkan.blogspot.com/

VI) திவ்யா எழுதியது: 
(இவர் ஜெம கிளிப் பயன்கள் எழுதவில்லை. ஜெம கிளிப் பற்றி சிறு குறிப்பு எழுதியுள்ளார்)
Norwegian, Johan Vaaler ------the inventor of the paper clip.
A paper clip image is a symbol for an attachment in an email(compose).
1st generation i Phones and the iPhone 3G require a paper clip to eject the SIM card and some Palm PDAs advise the use of a paper clip to reset the device.

During World War II, Norwegians were prohibited from wearing any buttons with the likeness or initials of their king on them. In protest they started wearing paperclips, because paperclips were a Norwegian invention whose original function was to bind together. This was a protest against the Nazi occupation .
VII) பெயர் சொல்ல விருப்பமில்லை எழுதியது: 
அன்புள்ள எங்கள் ப்ளாக்,
என் மனத்தில் தோன்றும் சில பயன்கள்:-
1 . இந்த பின்னை ஒரு பேப்பரில் வைத்து அதன் பக்கவாட்டில் எல்லாம் கோடுகளை இழுத்து Gem Clip படம் வரையலாம்.
2 .  இந்த பின்னை அப்படியே பிரித்தால் இரு முனை கொண்ட ஒரு குச்சி போல் இருக்கும். இரண்டு முனைகளையும் பல் குத்த பயன்படுத்தலாம்.
3 . நான் அனுப்பியுள்ள படத்தைப் பார்க்கவும். ஆங்கில எழுத்து "S " இப்படித் தான் இருக்கும் என்று குழந்தைகளுக்கு பாடம் நடத்தலாம்.
நன்றி!
பெயர் சொல்ல விருப்பமில்லை 
VIII) ஜெகநாதன் எழுதியது: 
அன்பு எங்கள்-பிளாக்,

மூளைப்புயல் படைப்பாற்றல் பயிற்சியில் வெளியிட்ட 'ஏடுகள் பிடிப்பு ஊக்கு' மாற்று பயன்பாடுகள் பகுதிக்கான என் பதில்:
சட்டை பட்டன் / ​சேலை​ஸேப்டி பின்
சாவி (சில பூட்டுகளுக்கு)
பக்கங்காட்டி (புக்மார்க்)
ஊசி
கழுத்துச் சங்கிலி (பல ஊக்குகளை இணைத்து..)
கொசுவர்த்திச் சுருள் தாங்கி (ஒரு முனையை மட்டும் விரித்து மேலாக நீட்டுவதன் மூலம்)
கீ செயின்
பல்குத்தி (toothpick)
ஒருமுறை அலுவலக மூளைப்புயல் பயிற்சி வகுப்பில், செங்கலின் மாற்றுப் பயன்பாடுகள் பற்றிக் கேட்கப்பட்டது.
49 பயன்பாடுகள் அனைவரும் குறிப்பிட்டபின், அரை சத ஆசையில் நான் சொன்னது:
செங்கலை மூளைப்புயல் பயிற்சிக்கு பயன்படுத்தலாம் (it can be used for brainstorming session)
கொஞ்ச​நேரம் என்னை உற்றுப்பார்த்தப் பயிற்சியாளர் அப்புறம் அதையும் சேர்த்துக் கொண்டார்.
உங்களுக்கு ​வசதி எப்படி என்று ​தெரியவில்​லை :))
இன்னொரு சமயம் ஒரு இலையின் படத்தைக் காண்பித்து இதைப் பார்த்தால் என்னென்னத்​தோன்றுகிறது என்றார்.
எனக்கு Adams underware என்று தோன்றியது. ஆனால் மூளைப்புயலில் இந்தமாதிரியான கன்னாபின்னா சிந்தனைகளும் (wild ideas) முக்கியமானவை என்று அறிகிறேன். உங்களின் இந்தப் பதிவு படைப்பாற்றலுக்கு சிறகு கட்டிவிடும் என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள்!
அன்பாக,
ஜெகன். 



IX) ஸ்ரீமாதவன் எழுதியது: 


  • இந்த பின்னை அப்படியே பிரித்து ஒரு முனையை, 'POWER OFF' நிலையில் உள்ள கம்ப்யூட்டர், லேப்டாப் DVD / CD டிரைவ் பக்கத்தில் உள்ள சிறிய துவாரதினுள்ளே செலுத்தி, ஓபன் செய்து, உள்ளே  மாட்டிகொண்டிருக்கும், DVD / CD யை  வெளியே  எடுக்கலாம்....



  • கிளிப்பினை அதே நிலையில் (எந்த முனையையும் பிரிக்காமல்) மிகுந்த கவனத்துடன், மெதுவாக,காதில் விட்டு அழுக்கை எடுக்கலாம்  (காதின் துவாரம் பெரியதாக இருந்தாலோ, அல்லது, பின் சின்னதாக இருந்தாலோ..)



  • ரொம்ப காலம், கழித்து, காகிதமே பயன்படாத நிலைமை வந்தால் (Paper less world due to e-technology), இந்த கிளிப்பினை, 'மியூசியத்தில்' வைக்கலாம்.   





    • *** இவைகள் யாவும் எங்களுக்கு, 'மூளைப் புயல்' பதிவு வெளியிடப்பட்ட இருபத்துநான்கு மணி நேரத்திற்குள் வந்து சேர்ந்த விவரங்கள். இன்னும் பயன்கள் எழுதுவோர் இந்தப் பதிவிற்கு பின்னூட்டமாக பதியலாம். *** 

      8.6.10

      மூளைப் புயல்

      தலைப்பைப் பார்த்து யாரும் பயப்படாதீர்கள்.
      படைப்பாற்றல் பயிற்சியில், இன்றைக்கு Brain storming technic குறித்து எழுதவேண்டும் என்று நினைத்தோம்.
      இந்தப் படத்தில் இருப்பது என்ன என்று பாருங்கள்.
      இதன் பெயர் 'அரும்பொருள் பிடிப்பு ஊக்கு' என்று செம்மொழியில் சொல்லலாம். 'ஏடுகள் பிடிப்பு ஊக்கு' என்றும் இயம்பலாம்.  இதன் வடிவமைக்கப்பட்ட பயன், காகிதங்களை சேர்த்து தற்காலிகமாக இணைத்து வைப்பதற்காக.

      உங்களுக்கான கேள்வி, இதன் பெயரோ அல்லது இதன் வடிவமைக்கப்பட்ட பயனோ அல்ல. இந்த பிடிப்பு ஊக்கினை, வேறு என்னென்ன வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேற்று உபயோகங்களை மட்டும் எழுதவேண்டும். 

      உங்கள் பயன் பட்டியலை engalblog@gmail.com ஜி மெயிலுக்கு அனுப்புங்கள். எங்கள் வாசகர்கள் எவ்வளவு சிறந்த சிந்தனையாளர்கள், படைப்பாற்றல் மிக்கவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதை உலகம் அறியவேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு.

      7.6.10

      முருங்கைக்காய் ஜாக்கிரதை

      அதோ டிரைவர் பக்கத்தில் இருக்கும் சீட்டில் உட்கார்ந்திருப்பது யாரு? நம்ம ராஜசேகர் போலிருக்கிறதே?அவர் மாதிரி இருக்கும் வேறு யாரோவாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. ஏன் என்றால், அதே கறுப்புப் பெட்டி. தண்ணீர் பாட்டில் வைக்க ஒரு துணிப் பை.  வித்தியாசம்? துணிப்பையிலிருந்து எட்டிப் பார்க்கும் மூன்று முருங்கைக் காய்கள்! அவர் தனிக்கட்டை + ஒன்டிக்கட்டை + கட்டை பிரம்மச்சாரி. அதுமட்டும் அல்ல, அவருக்கு வெந்நீர் தவிர வேறு ஒன்றுமே சமைக்கத் தெரியாது! அவர் ஏன் முருங்கைக்காய் வாங்கினார்?  வழக்கமாக நாங்கள் இறங்கி நடக்கும் அதே ஸ்டாப்.  ஆங், அவரேதான்.  வேக வேகமாக நானும் பேருந்தின் பின் வழியே இறங்கி ஓடிப் போய் அவருடன் சேர்ந்து நடந்தேன்.

      'எப்பொழுதிலிருந்து சமையல் கத்துகிட்டீங்க? நீங்க தான் நம்ம பேட்டை பிரம்மச்சாரிகள் சங்கத் தலைவர் ஆயிற்றே?' என்று கேட்டுக் கொண்டே அவருடன் காலை எட்டிப் போட்டேன். சொல்கிறேன் என்பது போல தலையை ஆட்டினாரே தவிர மனிதர் இன்னும் முருங்கைக்  காய் மர்மத்தை உடைப்பதாக இல்லை.  இதோ அவர் இருக்கும் வீடும் வந்து விட்டது.  என்ன இது! மூன்று காய்களையும் உருவி வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட எத்தனித்தவர் சற்றுத் தயங்கி விட்டு, "நீங்கள் முருங்கைக் காய் சாப்பிடுவீர்கள் தானே?" என்று கேட்டார். 

      கை தானாகவே முருங்கைக்காய்களை நோக்கி நீண்டாலும், "உங்களுக்கு உபயோகம் இல்லை என்றால் பின் ஏன் வாங்கினீர்கள்?  ஏதோ ஒரு படத்தில் கதாநாயகன் சோப் விற்க வந்த பெண் அழகாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக வீடு கொள்ளாத அளவு சோப் வாங்குவது போல் வருமே, அப்படி ஏதாவது அழகான .." என்று ஆரம்பித்த உடனேயே பையின் காது இரண்டையும் பிடித்துப் பிரித்துக் காட்டினார். உள்ளே தண்ணீர் பாட்டிலுடன் இருந்தவற்றைக் கண்டதும் எனக்கு மயக்கமே வந்தது.  நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்தன.   'கறுப்புப் பெட்டியில் வைக்க இடம் இல்லாததால் இதில் வைத்தீர்களோ?' என்றதும் சிரித்துக் கொண்டே பெட்டியையும் திறந்து காட்டினார். 

      ஒரு துண்டு, இரண்டு கோப்புகள், அவசரத்துக்கு சாப்பிட ஒரு பிஸ்கட் பாக்கெட், ஒரு சாக்கலேட் பார்.  நக வெட்டி போன்ற சமாச்சாரங்கள் மட்டுமே இருந்தன. மீதி இருந்த காலி இடத்தில் பையில் இருக்கும் பணத்தையும் வைத்து, இன்னும் ஒரு நானோ கார் வாங்கும் அளவுக்குப் பணம் வைக்க இடம் இருந்தது. 'என்னய்யா இது?' என்ற பாவனையுடன் நான் அவரைப் பார்த்தேன். அவர் சொன்னார்," நான் பாங்கிலிருந்து வருகிறேன். என்னை யாராவது குறி வைத்து என் பெட்டியை அல்லது பணபபையை அபகரித்துப் போகப் பார்க்கும் பட்சத்தில், முருங்கைக் காய்கள் நீட்டிக் கொண்டிருக்கும் பையை என்னிடமே விட்டு வைப்பது உறுதி " என்றார்.  நானும் நண்பரின் முன் ஜாக்கிரதையை எண்ணி வியந்து கொண்டே முருங்கைக் காய்களுடன் வீட்டுக்கு நடையைக் கட்டினேன். 

      4.6.10

      போட்டார் அய்யா ஒரு போடு !

      அன்பு எங்கள் ப்ளாக்,

      இது சாதரண எண் கணக்கில் நிறைய விடை சாத்தியக் கூறு இருப்பதால்....நான் பைனரி எண் கணக்கில் விடை சொல்கிறேன் .....
      செல்லுமென்றால் ` சரி``   என்று சொல்லுங்கள்.

                                                     S=E=N=M = Y=1
                                                     R=D= O =0

        அன்புடன்

        பத்மநாபன் @ aanandhavaasippu.blogspot.com 

      எங்கள் கமெண்டுகள்:
      1) என்னது பைனரியா? எங்களுக்கு டிக்சனரி தெரியும் - இப்போ வலைகளை ஓராண்டு காலமாக மேய்வதால் நெருப்பு நரி தெரியும். நீங்க சொல்கிற பைனரி சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன் எங்கேயோ படித்தது. இப்போ சுத்தமா மறந்து போச்.

      2) உங்க விடைக்கு, இதோ நாங்க சலாமியா பாஷையில அது சரியா தவறா என்று கூறியிருக்கிறோம்: :: %&*$#@(( ::

      2.6.10

      எண்ணிப் பார்த்து பதில் சொல்லுங்க.

      கணக்கு வீக், கணக்கு என்றால் ஓடிப் போய்விடுவேன் என்று பயமுறுத்துகின்ற வாசகர்களுக்கு இது சமர்ப்பணம்.
      இது ஒரு சிறிய கூட்டல் கணக்கு.
      எண்களுக்கு பதிலாக எழுத்துகள் உள்ளன. 
      ஒவ்வொரு எழுத்துக்கும் என்ன மதிப்பு என்று கண்டுபிடியுங்கள்.

                     S    E   N  D
                   M   O   R  E
              ---------------------
             M   O   N   E  Y
              ---------------------
      எட்டு எழுத்துகளின் மதிப்புகளைக் கண்டுபிடியுங்கள். What is the value of  D,E, M, N, O, R, S and Y. 
      பதில்கள் அனுப்பவேண்டிய முகவரி engalblog@gmail.com    
      சரியான பதில் அனுப்புபவர்களுக்கு 'எ பி எ எ மே' பட்டம் கொடுக்கப்படும். 
        ** சரியான விடை அனுப்பியவர்கள்: 
      # ஸ்ரீ மாதவன் (ஜூன் 3 - 11:04 AM) 
      # பெயர் சொல்ல விருப்பமில்லை (ஜூன் 3:: 1.52 PM) 
      # மஹாதேவன் (அநன்யா) (ஜூன் நான்கு :: 12.54 PM)
      # பத்மநாபன் (ஜூன் நான்கு)


      1.6.10

      பண விஷயம் இன்னும் கொஞ்சம்.

      சில நாட்களுக்கு முன்னால் ரிடிஃப் மணி செய்திகள் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, எங்கள் கவனத்தைக் கவர்ந்த ஒரு செய்தியின் தமிழாக்கம் இங்கே கொடுத்திருக்கிறோம்.

      (இந்த செய்தி, சீனாவில் நடக்கும் ஹோண்டா தயாரிப்பு நிறுவன வேலைநிறுத்தம் பற்றியது. இதில் எங்கள் கவனத்தைக் கவர்ந்தது அவர்கள் (ரிடிஃப் மணி) கொடுத்திருந்த  யு எஸ் டாலர் / சீன யுவான் ஒப்பீடு மதிப்புகள்தான்.) 

      "தொழிலாளர்கள், தங்கள் மாத வருவாயை, தற்போதைய 1000 யுவான் முதல்  ~ 1500 யுவான் வரை  ($147 ~ $194)  இருப்பதை,  2000 யுவான் முதல் ~ 2500 யுவான் வரையிலும் ($220 ~ $367)  உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்."

      இதன்படி பார்த்தால், கணக்கிட்டால், ஒரு யு எஸ் டாலருக்கு, எவ்வளவு சீன யுவான் என்று கணக்காகிறது?

      நாங்களும் கூகிளிட்டு, ஒரு யு எஸ் டாலருக்கு, சற்றேறக்குறைய 6.83 சீன யுவான் என்று கணக்கிட்டுப் பார்த்தோம். அதுவும் சரியாக வரவில்லை. எங்கள் சார்பாக நீங்க கொஞ்சம் குழம்பி தெளிவாக சீன நாணய மதிப்பைக் கூற இயலுமா?

      நேற்று வெளியிட்ட நோட்டுப் புதிருக்கு, பெரும்பாலானவர்கள் விடை அளித்திருக்கிறார்கள். முறையே அந்த ஐந்து கரன்சிகளும் - எகிப்து, கிரீஸ், ஓமன், சைனா, ரஷ்யா - என்று கூறியிருக்கிறீர்கள்.  இப்போ கீழே இருக்கின்ற சில கரன்சிகளைப் பாருங்கள். இவைகள், அந்த கரன்சிகள் காணப்பட்ட அதே மெயிலில் வந்தவை . எகிப்து, சைனா, (இரண்டு) ரஷ்யா கரன்சிகள் இங்கு உள்ளன. முந்தைய பதிவில் பார்த்த எகிப்து, சைனா, ரஷ்யா நோட்டுகளுக்கும், இவைகளுக்கும் என்ன வித்தியாசம்?
      EGYPT

      CHINA

      RUSSIA 1

      RUSSIA 2