செவ்வாய், 1 ஜூன், 2010

பண விஷயம் இன்னும் கொஞ்சம்.

சில நாட்களுக்கு முன்னால் ரிடிஃப் மணி செய்திகள் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, எங்கள் கவனத்தைக் கவர்ந்த ஒரு செய்தியின் தமிழாக்கம் இங்கே கொடுத்திருக்கிறோம்.

(இந்த செய்தி, சீனாவில் நடக்கும் ஹோண்டா தயாரிப்பு நிறுவன வேலைநிறுத்தம் பற்றியது. இதில் எங்கள் கவனத்தைக் கவர்ந்தது அவர்கள் (ரிடிஃப் மணி) கொடுத்திருந்த  யு எஸ் டாலர் / சீன யுவான் ஒப்பீடு மதிப்புகள்தான்.) 

"தொழிலாளர்கள், தங்கள் மாத வருவாயை, தற்போதைய 1000 யுவான் முதல்  ~ 1500 யுவான் வரை  ($147 ~ $194)  இருப்பதை,  2000 யுவான் முதல் ~ 2500 யுவான் வரையிலும் ($220 ~ $367)  உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்."

இதன்படி பார்த்தால், கணக்கிட்டால், ஒரு யு எஸ் டாலருக்கு, எவ்வளவு சீன யுவான் என்று கணக்காகிறது?

நாங்களும் கூகிளிட்டு, ஒரு யு எஸ் டாலருக்கு, சற்றேறக்குறைய 6.83 சீன யுவான் என்று கணக்கிட்டுப் பார்த்தோம். அதுவும் சரியாக வரவில்லை. எங்கள் சார்பாக நீங்க கொஞ்சம் குழம்பி தெளிவாக சீன நாணய மதிப்பைக் கூற இயலுமா?

நேற்று வெளியிட்ட நோட்டுப் புதிருக்கு, பெரும்பாலானவர்கள் விடை அளித்திருக்கிறார்கள். முறையே அந்த ஐந்து கரன்சிகளும் - எகிப்து, கிரீஸ், ஓமன், சைனா, ரஷ்யா - என்று கூறியிருக்கிறீர்கள்.  இப்போ கீழே இருக்கின்ற சில கரன்சிகளைப் பாருங்கள். இவைகள், அந்த கரன்சிகள் காணப்பட்ட அதே மெயிலில் வந்தவை . எகிப்து, சைனா, (இரண்டு) ரஷ்யா கரன்சிகள் இங்கு உள்ளன. முந்தைய பதிவில் பார்த்த எகிப்து, சைனா, ரஷ்யா நோட்டுகளுக்கும், இவைகளுக்கும் என்ன வித்தியாசம்?
EGYPT

CHINA

RUSSIA 1

RUSSIA 2

6 கருத்துகள்:

  1. இதெல்லாம் அந்தந்த நாட்டு ’அமெரிக்க டாலர்’ ஈக்வலண்ட் போல இருக்கே?

    பதிலளிநீக்கு
  2. பணத்தை வைத்தே இரண்டாவது பதிவு பயங்கரமான ஆள்தான் நீங்க !
    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. தற்போதைய 1000 யுவான் முதல் ~ 1500 யுவான் வரை ($147 ~ $194) இருப்பதை,

    1000 யுவான் = 146.4129 கிட்டத்தட்ட சரியாக உள்ளது

    1500 யுவான் 219.6193 கணக்கு உதைக்கிறது

    2000 யுவான் -292.8258கணக்கு உதைக்கிறது

    2500 யுவான் - 366.0322கிட்டத்தட்ட சரியாக உள்ளது

    பதிலளிநீக்கு
  4. சரியாப் போச்சு போங்க, கணக்கெல்லாம் சிலபஸில் உண்டா???

    பதிலளிநீக்கு
  5. எல்கே தாத்தா சொல்லி இருக்கிறது சரியாய் இருக்கும்போல் இருக்கே? கணக்கு 1,500 யுவானுக்கும், 2,000 யுவானுக்கும் சரியான உதையா இருக்கே???

    பதிலளிநீக்கு
  6. The cross currecny rates published in the blog has huge difference of 3$... usually there will be a diff of + r - .2 to .4 difference will be there for any cross currencies... as quoted by LK every one can understand the differenes... once again cross check that link which you translated and if possible publish that link... will explain more until my knowledge...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!